ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, October 26, 2004

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது.


Post a Comment

7 Comments:

Blogger ROSAVASANTH said...

(மொழியின் தீராத பக்கங்களில் கவிதையின் வாழ்வை எழுதிசென்ற பிரமீள்)

10/26/2004 5:38 PM  
Blogger Balaji-Paari said...

என்னை கவர்ந்த வரிகள். நன்றி ரோசாவசந்த்.

தலைப்பை ரசித்தேன்.
தலைப்பின் font சைஸ்-அ குறையுங்களேன். பார்க்க நன்றாக இருக்கும்.

11/12/2004 11:20 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி பாரி. எனக்கும் இத்தனை பெருசாய் தலைப்பு பிடிக்கவில்லைதான். Fஆண்ட் சைஸ் எப்படி குறைப்பது? templateஇல் ஏதோ செய்யவேண்டும் என்று தெரிகிறது. ஆனால் நான் கைவைத்து குண்டக்க மண்டக்க ஆகிவிட்டால்..?

11/13/2004 7:43 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

இதே கவிதையை என் நண்பர் ஸ்றீராம் அவர்கள் 1979-ல் பிரெஞ்சில் அழகாக மொழி பெயர்த்து ஒரு பிரெஞ்சுக் காரரிடம் காட்ட, அவர் இக்கருத்தை புகழ் பெற்ற ப்ரெவெர் என்ற பிரெஞ்சுக் கவிஞர் எழுதியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினார். பிரெஞ்சில் அக்கவிதை பின் வருமாறு:

"Isolée de l'ail, s'envole une plume
écrivant la vie d'un oiseau dans
les pages vides du ciel"

அன்புடன்,
டோண்டு

11/20/2004 12:38 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி டோண்டு, (கடந்தமுறை பெயரை தப்பாய் குறிபிட்டதற்கு மன்னிக்கவும்).

இது மிகவும் ஆச்சரியமளிக்கும் செய்தியாக இருக்கிறது. பிரமீளின் இந்த பிரபலமான கவிதை குறித்து இதுவரை இப்படி ஒரு செய்தியை நான் கேள்வி பட்டதில்லை. (ஸ்ரீராம் என்று நீங்கள் குறிப்பிடுபவர், `குட்டி இளவரசன்' உள்ளிட்ட பல பிரஞ்சு படைப்புகளை பொருத்தமான தமிழில் மொழிபெயர்த்த அதே ஸ்ரீராமா?).

அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரையமானது.

பிரமீளின் கவிதையில் காற்றின் தீராத(unfinished) பக்கம் என்று வருவது `ப்ரேவரின் கவிதை'யில் வானத்தின் வெற்று பக்கம் என்பதாக இருக்கிறது. பிரமீளின் கவிதை தரும் படிமத்தில் சிறகு கீழ்நோக்கி வீழ்வதாகவோ, காற்றின் போக்கில் செல்வதாகவோ எனது வாசிப்பு. ப்ரேவரின் சிறகு மேலே வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சாதாரண வித்தியாசம் மிக வேறுபட்ட interpretationsக்கு கொண்டு செல்ல கூடும்.

இதை ஸ்ரீராம் பல ஆண்டுகளுக்கு முன்னால்(பிரமீள் உயிருடனிருந்தபோது) வெளிபடுத்தியிருந்தால் பிரமீளுக்கு இருந்த இலக்கிய விரோதத்தில் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஏன் வெளிபடுத்தவில்லை என்று புரியவில்லை.

அன்புள்ள வசந்த்.

11/20/2004 4:35 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

"அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரையமானது.

மன்னிக்கவும் ரோசா அவர்களே, நீங்கள் மேலே எழுதியப் பின்னூட்டத்தை யதேச்சையாக இன்றுதான் (12-05௨005)பார்த்தேன். நான் வலைப்ப்பூவில் சேர்ந்த புதிதில் நான் பின்னூட்டமிட்ட இடங்களைத் திரும்ப கண்டுபிடிப்பதில் அவ்வளவு பயிற்சியில்லாததே காரணம். ஆகவே நான் கூறவந்ததை சரியாகக் கூறவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன்.

சிறீராம் (நீங்கள் சொன்ன அதே சிறீராம்தான்) பிரெஞ்சுக்காரரிடம் தன் மொழிபெயர்ப்பைக் காட்டியிருக்கிறார். பிரெஞ்சுக்காரர் ப்ரெவெரில் அதாரிட்டி. ஆகவே அவர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். பிறகு சிறீராம் அவரிடம் அது தமிழிலிருந்து தன்னால் மொழிபெயர்க்கபாட்டது என்பதைக் கூறியிருக்கிறார். சுதாரித்து கொண்ட பிரெஞ்சுக்காரர் கவிதையின் தரம் ப்ரெவரின் தரத்தில் உள்ளது என பாராட்டியிருக்கிறார். அதுதான் நடந்தது.

"pages vides" என்பதற்கு பதில் "pages iépuisables" என்று எழுதலாமா என்று நான் ஆலோசனை கூறியதற்கு சிறீராம் தான் எழுதியது சரியே என்பதை எனக்கு பொறுமையாக விளக்கினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/13/2005 1:18 AM  
Blogger ROSAVASANTH said...

விளக்கத்திற்கு நன்றி. இதை நீங்கள் விளக்கியது முக்கியமானது. அதாவது மேலே உள்ள பிரஞ்சு வடிவம் பிரமீள் எழுதியதன் மொழிபெயர்ப்பே அன்றி, பிரேவரின் கவிதை அல்ல என்று புரிந்துகொள்கிறேன். பிரமீள் மீதான அபிமானம் கூடுகிறது. நன்றி.

5/13/2005 1:54 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter