ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, January 27, 2006

தென்றலே நீ பேசு!

தமிழ்மண நிரல்களை சேர்த்த பின், முகப்பு பக்கமும், ஆர்கைவ் பக்கங்களும் வெற்று பக்கங்களாய் வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும், சும்மா ஒரு சோதனை இடுகைக்கு பின், ஒருவேளை எல்லாம் சரியாகி, குதிரை வழக்கம் போல் பறக்க தொடங்கிவிட கூடலாம் என்று நப்பாசையில் இந்த சோதனை பதிவு.(பிரச்சனை தொடர்ந்தால் அறிவுரைக்கும் நண்பர்களுக்கு முன்னமே நன்றி.)

இங்கே வந்த புண்ணியத்திற்கு இந்த அரிதான அற்புதமான பாடலை கேட்டு விட்டு செல்லலாம். சந்தேகமில்லாமல் இசை இளயராஜா. பல ஏற்ற இறக்கங்களூடன் சிக்கலான இசையை கொண்டது. இந்துஸ்தானி அடைப்படையில் இருந்தாலும் ராஜாவின் கைவண்ணத்தின் தனித்தன்மை, பாடலின் தொடக்க இசை முதலே இருப்பதை அறியலாம். சிலோன் தமிழ்சேவையில் கேட்டு, பல காலம் நினைவின் ஆழத்தில் மட்டும் இருந்து, இந்த MP3/இணைய யுகத்தில் நினைத்தபோது விருப்பமான தடவைகள் கேட்டு, இப்போது மிகவும் பழகிவிட்ட பாடல். பாடலை இங்கே கேட்டு சிலிர்ப்பவர்கள் நன்றி சொல்லவேண்டிய இடம், தூள்.

தென்றலே நீ பேசு
உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம்..ம்...ம்ம்...
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு
உன் கண்களால் நீ பேசு

வாய்மொழி ஏதுமின்றி வெண்ணிலா பேசாதோ
வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும்
வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட
கற்பனை ஊறும் நேரமே
உனக்காக நானும் ஏங்க

(தென்றலே..)

பூங்கரம் மீட்டுகின்ற பஞ்சணை வாராயோ
பஞ்சணை பாடல் வகை கொஞ்சமோ தொடங்கும் தொடரும்
நீயும் என் கூட வந்து மித்தமும் கேளாயோ
நெஞ்சமே காம தேவனால்
நெருப்பாய் மாறும் நேரம்

(தென்றலே..)

Post a Comment

---------------------------------------

Sunday, January 22, 2006

கலிங்கா நகர் படுகொலைகள்!

சென்ற பதிவின் பின்னூட்டத்தில், கலிங்கா நகர் படுகொலைகளுக்கான கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகோள் வைத்து, அதற்கான பெடிஷன் ஆன்லைனின் உரலையும் அளித்திருந்தேன். ஒருவருக்கு கூட, இரண்டு முறை மௌசால் சுட்டி, அந்த தளத்திற்கு சென்று ஒரு கையெழுத்திட்டு, தங்கள் குறைந்த பட்ச கண்டனத்தை பதிவு செய்யக்கூட தோன்றவில்லை என்பதை நினைக்க மிகவும் சோர்வாகத்தான் இருக்கிறது.

அரசின் அத்துமீறல்களை (ஆதாரிக்கா விட்டாலும்) சால்ஜாப்பு சொல்லி அதை நியாயப்படுத்தும் தேவை உள்ளவர்களை தவிர, மற்ற நண்பர்கள் தயவு செய்து இரண்டு க்ளிக்குகளில் ஒரு எட்டு சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன். இதனால் எந்த பயனும் அரசின் போக்கில் எந்த மாற்றமும் இருக்காது என்றாலும், சில எதிர்ப்புகளை பதிவு செய்யாமலிருப்பது அதை அனுமதிப்பதற்கு சமமானது என்பதால், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நம் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியமாகிறது. கையெழுத்திடவேண்டிய உரல்.

என் பின்னூட்டத்தை பார்த்து (முன் அறிமுகம் இல்லாத) நண்பர் ஒருவர் (அவரிடம் அனுமதி கேட்காததால் பெயர் வெளியிடவில்லை) அனுப்பிய தகவல் அறிக்கையை ஆங்கிலத்தில் கீழே தருகிறேன். நண்பர்கள் இதையும் முடிந்த அளவு மற்ற நண்பர்களுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன். நான் எழுதிய பதிவை, சில கூடுதல் தகவல்கள் கலந்து பிறகு இடுகிறேன். நன்றி.


Dear Friends,

This is a first impression report on the Kalinganagar killings. Governments are becoming increasingly intolerant of any _expression of dissent on the part of local communities. We need a concerted and sustained effort to question, and check this brutality on the most marginalised and deprived communities. Please let us know how we can take forward this issue.

Report:

She is my sister, and these are my nieces he says, as we stand by the dead of the Kalinganagar massacre. The trauma is still etched on his face. My companion takes out her camera and clicks several shots. The people standing by helpfully draw back the cloth from the faces of the dead. The first woman looks like she is sleeping, not, so the second woman. The bullet has shattered her nose and upper jaw. The cloth on her face is stained black. How long did she struggle for their life, I wonder. The other two dead are men. "We do not know how many bodies the police dragged into their jeep, and disposed off on the way they say, but, we know for sure 13 people are dead." Reports from the medical hospital, we visited indicate that two more people have died, one person on the way, and another person in the hospital.

We are on the road taking us into Kalinganagar industrial area, the people have barricaded the road, and let us pass on to this spot, only after verifying our bonafides. We cannot talk to the people manning the barricades. 'only the committee can speak to you, they tell us pointing further down the road. Can we go there we ask. Yes, since you are press it is alright they say. Ravi who is with us is an activist, and has been to the area several times, people recognise him, and so, our identity is not questioned, though we do not carry press cards. Several vehicles of various opposition parties pass us by as we go on. On the way, we pass several young men carrying sticks. Tell Naveen Patnaik, if he kills the police who shot our people we will give him one lakh they shout as we pass by. We eventually come on a large gathering of people. A lot of speech making is going on. Further on, on four beds, the dead have been layed out. How were the women killed I ask; they opened fire suddenly, and shot into the crowd they say, these women were in front. It does seem as if people had not really begun to organise into a march or rally. Hearing reports of work starting, they had begun to gather at the spot, with an intention of stopping the dozers.' There must have been six or seven hundred policemen, we were only about 200 they say'. Indeed, this is a fair approximation. Fourteen platoons, according to the police themselves, 27 according to the local reports, had been brought into the construction area on the morning of January second. They had been stationed in the nearby police headquarters in Duburi for about a week. They surrounded the worksite. The firing appears to have been quite indiscriminate. People have been shot on the abdomen, on the face. Even little children have bullet wounds they tell us.

It is difficult to get a coherent story, the trauma is still too fresh in people's minds. But, the purpose and intent is clear, we shall not leave till the Tata Company withdraws and the Government lets us live in peace in our villages they say. People in other villages, 600 families, have been driven out of their land we are told. They eke their living from stone crushing. Stone crusher units are everywhere. The hills have been carved up for quarrying. These are being taken for the construction work. Leaves of the few trees left standing on the roadside have turned grey.

The Visthapan Virodhi Manch is well organised. There is a group at the first barricade. They check ones bonafides, and then let them pass. We shall not let anybody from the Government come here they tell us. Further on, women and men listen to the speech making. Lunch is being cooked a half kilometer down the road, in a hut, with the help of Manch funds, and food is brought to the spot by volunteers. Young women and men move up and down with lathis, there is tension in the air, but, there is no sense of confusion and chaos. Volunteers have also accompanied the injured in Cuttack medical hospital, and they take turns to sit by the patients. Food has also been organised here. We did not have any problem of paying for the vehicle, that is being looked into by the Manch, we are told by the relatives of the sick in Cuttack medical hospital. If there is a law and order problem, it has been created by the government the previous day.

There are many young people carrying bows and arrows. We never used them, they tell us, we carry it for self defence. However, this carrying of traditional weapons only seems to be some kind of a moral booster. All of them agree that they cannot really defend themselves with these in case of a police attack, although they explain very proudly the ballistics of this ancient missile, with feathers twisted around the rear end. The actual site of the killings is completely deserted. The police have also gone, and the people along with the dead have moved onto the road. How long will they campaign on this spot, will the government which one must remember was elected by them, ever listen to them.

In Cuttack medical college, all the injured police, they are from the Gurkha Battallion, and some of the more critically injured patients are in the same ward. The police are in four beds, adjacent to each other, the injured people are scattered in different places, and we have to hunt around for them. The police are subdued, quiet, the villagers, are ready to talk, but, we can make little inroad, as TV cameras capture their attention. The injuries are quiet serious, and I wonder if some of them will be able to survive. One frail young man, has an oxygen mask, and is clearly in much discomfort. Medical care has been provided, the serious patients have been attended to at the earliest possible and there is a fair amount of after-care as interns, and nurses come in and enquire after them, and slips are provided for those injured who require blood. But, ones the media and public attention dies down, one wonders will this be sustained.

As we look on, TV cameras, followed by politicians of different hues come in, bend over various injured for photographs, and video clips, and move on. The injured and their relatives are left looking quite bewildered.

Kalinganagar Complex is a massive industrial park with an area of over 12000 acres set up by IDCO in Jajpur District where industries are being allocated land. IDCOL has already acquired the land in the area through the Land acquisition act. The land acquisition by IDCO has only provisions of providing compensation for patta land and 10 decimal of land for homesteads for the landless. However, the local tribal people have been mostly cultivating non-patta land due to faulty survey and settlements and non-regularization of land. Even though they are absolutely dependent on these lands for their livelihoods, they are neither being offered compensation or land in return for the land cultivated for them. Several other industrial units have come up there, including Neelachal Ispat Nigam, MESCO, Jindal, etc.

The threat of forced displacement without any alternative livelihoods and loss of ancestral lands have led to a strong resistance- as long back as in 1996, the local people has successfully stopped the establishment of a plant by Bhushan Steel at the same site. Another major protest was held on 15th May, 2005, where the tribals foiled the proposed Bhumi Poojan of Maharastra Seamless Steel limited.

There are several issues that need to be addressed here. The entire episode is being given various colours by different interest groups. Some say the protests are because of the poor compensation package given to earlier oustees, with the present demand being for improved compensation, on the basis that IDCO would sell the land acquired from the tribals communities at something like seven times the price; other news reports point fingers at Maoists as instigating the trouble. Some people proclaim that the very fact that women were in the forefront of the rally indicates that they have been used! Needless to say the loyalists, and the opportunists will make hay when they can. This whole affair is an effort to de-fame Naveen Patnaik claimed one more-loyal-than-the-king 'Human Rights Activist' on OTV. The Indian Express, in its 4th Jan Editorial states: 'This incident Tragic should not de-rail the process of industrialisation. Nor should the opposition ... call the Naveen Patnaik Government Trigger happy. Rather a solution should be sought through an all-party consensus for which the Chief Minister, must take the initiative.' In the hospital people tell us, we voted BJP, but, now, since last year, we have disassociated ourselves from all political parties, and all of us together formed the Visthapan Virodhi Manch.

On the ground, there is little evidence of instigation by outside agencies, or any doubt about what the people want. Everywhere, people were very very clear, specially the women that this was a fight for their land. On the highway, it was local people who spoke to us, pointed out their leaders, and described their experiences. These leaders were from the area, lived with the people, struggled and toiled with them, some tribals, others non-tribals. The organised and orderly conditions that prevailed when we went there, the determination, grim and firm on people's faces, in people's statements, indicated that they were the people in command. This was no instigation. This was a people fighting to live.

It is inevitable, that the government would be on the defensive now. But, I would also point out that now is the time for like minded groups to come together and really raise the issue of rights of local people: be they tribal, be they dalits, or any ethnic, caste, religious group, a community of local people have a right to decide what they want to do with their land and other natural resources. A government cannot just sell away these to industrialists without a proper process of consultation. And if the consultation results in people saying no, then the Government must honour this decision.

A consultation and consent cannot be manufactured with guns and police force;

A police force cannot be used for protecting and promoting the interests of the Private Sector;

Well, there is no point just a few people articulating this, then it becomes rhetoric. And I am glad there are so many suggestions for having an open letter on the Kalinganagar case. But, even as the Kalinganagar killings are a continuum from Kashipur in Dec. 2000, from Mandrangbaju, Gajapati, 1999, from Raighar, Nawarangpur, 2001, we also need to realise that there has to be strong move from civil society to bring such errant (and I have consciously used a mild word here) governments to book, and much much more: there has to be a counter move to ensure basic right to live and right to livelihood to the people of this country.

First, we need several people who will volunteer to come to Kalinganagar to report on the issues, not just on the killings.

Then, there has to be concerted, and sustained questioning of the rational and overdrive for industrialisation;

Legal support is required, and there is an acute need for good lawyers, who will volunteer help and sound legal advice to the people, who will also come forward to fight people's cases without monetary compensation!


Vidhya

_________________________________
Agragamee,
Kashipur - 765015,
Dt. Rayagada, Orissa.
ph: 06865285174; 06742557936;
06742551130

em: agragamee@satyam.net.in;
awsdc@sify.com

Post a Comment

---------------------------------------

Thursday, January 19, 2006

கேலிக்கூத்து!

கேலிக்கூத்தாகும் எதிர்ப்பு அரசியல்.


'சண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியை இழிவுபடுத்தி காட்சி அமைத்ததற்காக' இயக்குநர் லிங்குசாமி, வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணனைக் கண்டித்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு, (தீவிர சிந்தனை என்பது எத்தனை அபத்தமாய் உருமாற முடியும் என்பதை காண விரும்பி) போக நினைத்து, வழக்கம் போல என்னால் முடியவில்லை. அங்கே நடந்தவற்றை ரஜினி ராம்கியின் பதிவின் மூலம் இப்போதைக்கு கேள்விப்பட்டிருக்கிறேன். ராம்கியின் சார்புகள் குறித்து மிகதெளிவாகவே இருக்கும் நான், அதை மனதில் வைத்து அவருடைய பதிவில் கழித்தல் வகுத்தல் செய்து நடந்தவற்றை ஊகிக்க முடிகிறது. ராம்கியின் பதிவு இல்லாவிட்டாலும் கூட என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பது கடினமில்லை.

நான் அறிந்தவரையில் தமிழக இலக்கிய/அரசியல் தளத்தில் இதைவிட கேலிகூத்தான ஒரு நிகழ்வு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு படத்தில் 'குட்டி ரேவதி'யை தனிப்பட்டு தாக்குவதாக நினைக்ககூடிய வசனத்தை மட்டும் முன்வைத்து, அந்த வசனகர்த்தாவை திட்டுவதற்கு மட்டும், பொருள் நேரம் சக்தியை செலவு செய்து விமரிசையாக ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. அதில் தமிழகத்தின் தீவிர கலை/ இலக்கிய/அரசியல் சார்ந்த பலதரப்பட்ட இயக்கங்கள் கலந்துகொண்டு கோஷ்டிகானம் பாடியுள்ளது என்றும் அறிகிறேன்.

நாட்டில் நடந்துவரும் அக்கிரமங்களையும் பேராபத்துகளையும், ஒரு கலைஞனுக்கான கரிசனத்துக்குரிய, அரசியல் செயல்ப்பாட்டிற்கான, எதிர்புக்கான பிரச்சனைகளை பட்டியலிட்டு மாளாது. ஒரு உதாரணமாய், 15 நாட்கள் முன்பு ஒரிசாவில் கலிங்கா நகரில் 12 ஆதிவாசிகளை போலிஸ் சுட்டு கொன்றிருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வாய் இல்லாமல், ஆதிவாசிகள், தலித்துக்கள் மற்றும் அதிகாரமற்ற மக்கள் மீது பல ஆண்டுகளாய் தொடர்ச்சியாய் நாடு முழுவதும் நடந்துவரும் அரசுவெறி தாக்குதல்களில், இன்னொரு காட்சியாய் நிகழ்வேறியுள்ளது. இது போன்ற எது குறித்தும் பேசாமல், ஒரு திரைப்பட வசனத்தில் ஒரு பெண் கவிஞரின் பெயர் வருவதை மட்டும் கண்டித்து, பொருள்செலவு செய்து இத்தனை இயக்கங்கள் சேர்ந்து ஒரு கூட்டம் நடப்பதை போல அபத்த நாடகம் வேறு ஒன்று இருக்க முடியும் என்று தோன்றவில்லை. நாட்டிலுள்ள பிரச்சனைகளை முக்கியத்துவம் சார்ந்து வரிசைப்படுத்தி, அந்த வரிசையின் படிதான் நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பது அல்ல நான் சொல்ல வருவது. குட்டி ரேவதி என்ற பெயர் வரும் வசனம் இந்த அளவிற்கு ஒரு முக்கிய பிரச்சனையா?, அல்லது உண்மையிலேயே அது ஒரு பிரச்சனையா?, அதைவிட முக்கியமாக இதற்காக வரிந்து கட்டி போராட இவர்கள் வைத்திருக்கும் தர்க்கம் என்ன?, என்பதுதான் எனது கேள்விகள்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் எஸ்.ராம்கிருஷ்ணனின் வசனம் விஷமத்தனமானது, அது அவர் எழுதியதுதான் (அல்லது அவர் பொறுபேற்க வேண்டியது), அது குட்டி ரேவதியை குறிக்கவில்லை என்பதை ஏற்கமுடியாது என்றுதான் நானும் நினைக்கிறேன். என்றாலும் இதையெல்லாம் எப்படி ஒருவர் நிறைவான முறையில் நிறுவ முடியும்? இதற்காக (சட்ட அல்லது கருத்தரங்கம் நடத்தி திட்டுவது போன்ற) நடவடிக்கை எடுப்பதை போன்ற அபத்தம் வேறு என்ன இருக்கிறது? இதற்கு நடவடிக்கை எடுத்தால் இதே போன்ற, இதை முன்வைத்து எழும் மற்ற விவகாரங்களை நாம் எப்படி பார்பது? குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சமூகத்தில் இருக்கும் (முக்கியமாய் பிரபலமான) நபர்களை போலிசெய்து அவர்களை கிண்டல் செய்வது என்பது திரைப்படத்தில், கலைஞர்கள் எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து, எப்பாடுபட்டாவது, பாதுகாக்க வேண்டிய ஒரு உரிமை. இந்த உதாரணத்தில் அதை எதிர்த்து போராடினால் மற்ற சந்தர்ப்பத்தில் அதை எப்படி பாதுகாக்க முடியும? பொதுமனத்தில் இந்த உதாரணத்தை மற்றவற்றிலிருந்து விலக்கி, தனித்து இதை மட்டும் எதிர்க்கப் படவேண்டியதாய் காட்ட, என்ன வாதம் கையில் இருக்கிறது? நான் பார்த்தவரை அப்படி எந்த நியாயத்தையும் யாரும் முன்வைத்ததாக தெரியவில்லை.

குட்டிரேவதி பற்றி, தெரிந்தே திட்டமிட்டே எஸ்.ரா. எழுதியிருப்பதாக வைத்துகொண்டு, அப்படி வாய்ப்பு இருப்பதாகத்தான் நானும் நம்பிகொண்டு, 'அதனால் என்ன' என்ற கேள்வியை எழுப்புகிறேன். எஸ்ராவை விமர்சிக்கும் உரிமை நிச்சயமாய் பாதிக்க பட்டதாய் நினைத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இருக்கிறது. அப்படி இல்லை என்று மறுக்க மற்றவர்களுக்கும் உரிமை இருக்கிறது. நண்பர் நாராயணன் எழுதியது போன்ற ஒரு பதிவு இடலாம். பத்திரிகைகளில் கட்டுரை எழுதலாம். இன்னும் கொஞ்சம் மேலே போய் நிச்சயமாய் எஸ்.ரா. கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தில் சின்ன சலசலப்பை ஏற்படுத்தி எதிர்ப்பை தெரிவிக்கலாம். அதை தாண்டி இழுத்துகொண்டு போக இதில் என்ன எழவு அய்யா இருக்கிறது?

'உயிர்மை' கூட்டத்தில் எஸ்ராவை நிறுத்தி ஒரு குறியீடாய் கண்டனம் தெரிவித்ததில் பெரிய பிரச்சனையில்லை. 'அதற்கான இடம் இதுவல்ல' என்று சொல்வது ஏற்கக் கூடியது அல்ல. ஒருவேளை புஷ் இந்தியாவில் செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிக் கருத்தரங்கில் பேச வந்த இடத்தில் கூட, அவரது ஈராக் ஆக்ரமிப்பு குறித்து எதிர்த்து கருப்பு கொடி காட்டலாம். அப்படித்தான் சமூகத்தின் பல தளங்களில் எதிர்ப்பு பதிவு செய்யப்படுகிறது. தனி நபருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பும் வசதியும் எங்கே கிடைக்கிறது என்பதுதான் முக்கியமே ஒழிய, 'இது அதற்கான இடமா' என்ற கேள்வி நியாயமானது அல்ல. அந்த வகையில் எஸ்ராவிற்கு ஒரு கண்டன குரல் எழுப்பியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. எஸ்ராவும் 'புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்' என்று ஒப்புக்காக கூட சொல்லும் முதிர்ச்சி இல்லாமல், அதை இழுத்ததுடன், 'உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்' என்று பேட்டியில் பீலா விட்டார். மனுஷ்யபுத்திரன் தன் பங்கிற்கு 'ஒட்டுண்ணிகள்' என்றெல்லாம் திட்ட, பிரச்சனை அடுத்த கட்ட ஆபாசத்தை அடைந்திருக்கிறது. சரி தொடர்ந்து ஏதோ ரமேஷ், குட்டி ரேவதி என்று சிலர் பத்திரிகைகளில் அறிக்கை விட்டு திட்டிவிட்டு அடங்கி போகும் என்று பார்தால், ஏதோ கட்சி பலத்தை நிருபிக்கும் மனநிலைகொண்ட போட்டியே இருப்பக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அளவு பெரிது படுத்தி பெரும்புகையை கிளப்பும் அளவிற்கு இந்த பிரச்சனைக்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா? ஒரு பெரிய பட்டியலில் அடங்கும் தமிழின் எல்லா படைப்பாளிகளும் அறிவுஜீவிகளும் வேலை மெனக்கிட்டு இதை வைத்து கம்பு சுத்திகொண்டு இருக்கிறார்கள்.

'அதிகமா கோபப்படர பெண்ணும், அதிகமா ஆசைப்படர ஆணும் நிம்மதியா இருக்க முடியாது' என்று ரஜினி ஒட்டுமொத்த பெண்களை பற்றி சொல்லும் வசனம் பெண்களை தெளிவாக கேவலப்படுத்துகிறது. இது தவிர சினிமாவில் ஒட்டுமொத்த பெண்களை கேவலப்படுத்தும் வசனங்கள் பட்டியலிடும் வகையிலா இருக்கிறது? துக்ளக் 'கேள்வி பதிலில்' ஒவ்வொரு வாரமும் பெண்களை பற்றி சோ எழுதுவது எல்லாம் ஒட்டுமொத்தமாக பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறது. அதை எதிர்த்து கண்டன குரல் எழுப்புவதில் அர்த்தமுள்ளது. 'துப்பட்டாவை துக்கி எறியறா! அவள்ளாம் ஒரு பொம்பளை' என்று அண்ணன் தங்கையிடம், தங்கையின் தோழியை பற்றி பேசும் கதை சார்ந்த (யதார்த்தமாய் எந்த குடுமபத்திலும் ஒலிக்க கூடிய ஒரு) வசனத்தில் வரும் தனிப்பட்ட ஒரு நபரின் பெயர், எப்படி ஒட்டுமொத்த பெண்ணினத்தை கேவலப்படுத்த முடியும்? படம் பார்க்கும் அனைவருக்கும் அது ஒரு ஜாலியான சீன். மீரா ஜாஸ்மீனின் குறும்பையும், துடுக்குத்தனத்தையும் பார்வையாளர்கள் ரசிக்கும் படியாகவும், குறிப்பாய் கதையின் நாயகன் அதை ரசிப்பதாய், அதனால் மீரா ஜாஸ்மீன் பக்கம் கவரப்படுவதாய் அமையப்பெற்ற ஒரு காட்சி. நிச்சயமாய் மீரா ஜாஸ்மீனும் அந்த தோழியும் கேவலமானவர்களாய் அங்கே சித்திரிக்கப் படவில்லை. அதில் உள்நோக்கம் வசனகர்தாவிற்கு இருப்பதாக நினைத்தால் அதை ஊடகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சொல்லி விமர்சிப்பதை தவிர, இப்படி போராட்டத்தை கையில் எடுப்பது என்னவகை முதிர்ச்சி! மற்றபடி இதில் பெண்ணினத்தை கேவலப்படுத்த என்ன இருக்கிறது? ரோஸாவசந்த் என்ற பெயரில் இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. யாராவது ஒரு கதை எழுதி, ரோஸாவசந்த் என்ற பெயருடைய பாத்திரம் 'குடித்து விட்டு கலாட்டா செய்வதாக' (வலைப்பதிவில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது போல்) எழுதினால் அது என்னைத்தான் நிச்சயமாய் குறிக்கும். இதற்காக வலைப்பதிவர்களில் நான் ஒரு கோஷ்டி சேர்த்து, போராட்டத்தில் இறங்கி, அதற்கு தத்துவ விளக்கம் எல்லாம் கொடுத்து, 'வலைப்பதிவில் பெரியாரிஸ்டுகள் மீதான வன்முறை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த போனால் என்ன ஒரு கேனத்தனம்! (நான் அதை முற்றிலும் புறக்கணித்துவிட்டு போவது போல் யாரும் செய்ய வேண்டாம். மிஞ்சி போனால் எதிர்த்து பதில் எழுதிவைக்கலாம்.)

சிவகாசி படத்தில் வக்கீல்களை 'கேவலமாய் சித்தரிப்பதால்', விஜயின் கொடும்பாவி எரிப்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருபதாக எனக்கு தெரியவில்லை. தமிழ் சினிமாவில் போலிஸ், மந்திரிகள், முதலமைச்சராக கூட வரும் பாத்திரங்கள் கேவலமாக சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா மிக மிக மோசமாய், வெளிப்படையாய் தெரியும் வகையில் படம் முழுகவும் கிண்டலடிக்கப் பட்டிருக்கிறார். கவர்னர் வெடிகுண்டு வைப்பவனாக பயங்கரவாதியாய் சித்தரிக்க பட்டு, அந்த சினிமா சக்கை போடு போட்டிருக்கிறது. அது அந்த நேரத்திய அரசியலில் சென்னா ரெட்டியை குறிப்பதாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இது தவிர பார்பனர்கள் கிண்டலடிக்கப் பட்டுள்ளனர். கோவில் பூசாரிகள், சாமியார்கள், இன்னும் கடவுள்களே கூட கிண்டலடிக்கப் பட்டுள்ளனர். (நான் நேர்மறையாய் பார்க்க கூடிய சித்தரிப்புகளை இங்கே சொல்கிறேன். இது தவிர கறுப்பு நிறம், வேலைக்காரிகள், ஊனமுற்றவர்கள், தலித்துக்கள், பெண்கள் இவர்களின் சித்தரிப்புகள் வேறு விஷயம்.) இந்த சுதந்திரத்தில் குறிக்கிடும் வகையில், சினிமாவில் சிகெரெட் பிடிப்பதையும் தண்ணியடிப்பதையும் தடை செய்ய நமக்கென்று, அடித்தட்டு சமூகத்திலிருந்து சென்ற ஒரு மந்திரிகுமாரன் டெல்லியில் வசிக்கிறார். அதை பாசிசம் என்று (சரியாக) எதிர்ப்பதாக சொல்லும் அ. மார்க்ஸ் போன்றவர்கள் கூட இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். (என்ன பேசினாரோ?)

எஸ்ராவை தண்டிக்க வேண்டுமெனில், அதிகாரம் கையில் உள்ள ஜெயலலிதா போன்றவர்கள் தீப்பொறி ஆறுமுகத்தையும், வெற்றிகொண்டானையும் ( கருணாநிதியை கூட) தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஜெயலலிதா அளவிற்கு கலைஞரும் வண்ணை ஸ்டெல்லா போன்றவர்களால் மிக மோசமாய் வசைபாடப் பட்டுள்ளார். சட்டசபையிலேயே கலைஞரின் குடும்பம் பற்றி மிக கேவலமான வசனத்தை ஒரு அதிமுக எம்.எல்.ஏ முன்வைத்தார். ஆனால் ஜெயலலிதா தீப்பொறி மீது வழக்கு தொடுத்து தன் ஆட்சியில் கூட தண்டிக்காமல், அவரை தன் கட்சிப் பக்கம் இழுத்து கலைஞரை திட்டும்படி நிலமையை மற்றியமைத்திருக்கிறார். இவ்வாறு (தேர்தல்)அரசியலில் காப்பாற்றப்படும் 'ஜனநாயக உணர்வு' கூட அறிவு தளத்தில் இல்லாமல் போனது ஏன்?

நண்பர் ஒருவர் வேறு ஒரு செய்தியை சொன்னார். 'ஆதி' படத்தில் ராஜரத்தினம்(?) என்று ஒரு 'மாவட்ட செயலாளரை' பற்றி 'மாவாட்டும் செயலாளர்' என்று ஒரு வசனம் வருகிறதாம். உண்மையிலேயே காங்கிரசில் மாவட்ட செயலாளராக இருக்கும் ஒரு ராஜரத்தினம், அது தன்னைத்தான் குறிக்கிறது என்று வழக்கு தொடுத்துள்ளாராம். அதற்கு ஆதாரமாக காங்கிரசின் எதிர் கோஷ்டியில் உள்ள ஒருவர் படத்தின் ஆக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதையும், அவரால்தான் அந்த வசனம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையாய் இருக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இப்போது குட்டிரேவதிக்காக போராடும் இவர்கள் இந்த படத்திற்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த வகையில் குட்டி ரேவதி ராஜரத்தினத்திலிருந்து வேறுபடுகிறார் என்று விளக்க, பெண் கவிஞராய் அவர் இருப்பது மட்டும் எப்படி போதும் என்று புரியவில்லை. இன்னும் இதை எத்தனை உதாரணங்களுக்கு நீட்ட முடியும் என்பது விளக்கித் தெரிய வேண்டியது இல்லை.

இதில் ஒரு உச்சகட்ட காமெடி ஒன்று, அதையும் மேற்படி நண்பரே எனக்கு சொன்னார். ஜூனியர் விகடனில் "குட்டி ரேவதி என்ற பெயர் வேறு பலருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் வாய்ப்பிருப்பதை" வைத்து கேள்வி ஒன்றை கேட்க "நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள எல்லா குட்டி ரேவதிகளுக்காகவும் போராடுகிறோம்" என்று பதில் சொன்னார்களாம். இதை கேட்டு ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அடங்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. நகைப்பிற்கு உரிய விஷயமாய் தெரியாதவர்கள், 'நீலாம்பரிகளுக்காக ஏன் போராடவில்லை?' என்ற கேள்விகூட எழாதவர்களுக்கு சொல்ல எதுவுமில்லை.

சம்பந்தமே இல்லாமல் குஷ்பு விவகாரத்துடன் இது ஒப்பிடப்படுகிறது. எப்படி என்று புரியவில்லை. குஷ்பு ஒரு பத்திரிகையில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான தனது கருத்தை நிதானமான ஒரு தொனியில் எழுதியதற்கும், அதற்கு பின்னால் ஒரு 'நச்சுப்' பத்திரிகையின் உசுப்பேற்றலில் 'தமிழகத்தில் எத்தனை பேர்கள் திருமணத்திற்கு முன் உறவு கொள்ளாமல் இருக்கிறார்கள்?' என்று ஒரு கேள்வி கேட்டதற்காக, தமிழ்நாட்டின் மிக பெரிய பாசிசக் கூட்டம் தெருப்போராட்டம், பல இடங்களில் வழக்குகள், செருப்பு தக்காளி முட்டை கொடும்பாவி என்று தொடர்ந்ததும், குட்டி ரேவதி விவாகரமும் எப்படி ஒப்பிடக் கூடிய விஷயங்களாகும். விஷயத்தின் அடிப்படையும் வேறு வேறு. பலர் திரிப்பது போல் குஷ்பு பிரச்சனை கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. தமிழ் சமூகத்தின் கலாச்சார பாசிசம் பற்றியது. திரைப்படத்தில் ஒரு வசனத்தில் குறிப்பிடப்பட்டு அவதூறுக்கு உள்ளானதாக கருதப்படும் ஒரு தனிநபரின் பெயரும் இதுவும் எப்படி ஒப்பிடக்கூடிய விஷயங்களாக முடியும்? ஜல்லியடிப்பதற்கு கூட ஒரு அடிப்படை வேண்டாமா?

ஆனால் நகைச்சுவை உணர்வுக்கு மக்களிடம் பஞ்சமே இல்லை. தங்கரையும், பாமக/விடுதலை சிறுத்தைகளின் பாசிசத்திற்கு வக்காலத்து வாங்கிய (அல்லது அதை, தங்கள் அரசியல் சார்புகளால், பெரிதாய் கண்டுகொள்ளாத) சிலர், இங்கே குட்டி ரேவதிக்கு ஆதரவாய் எஸ்ராவை திட்ட கிளம்பியுள்ளதை படிக்க நல்ல கமெடியாய் இருந்தது. சமூகத்தின் நல்வாழ்விற்கு காமெடி மிகவும் தேவைதான் என்றாலும், இந்த காமெடியில் பலியிடப்படுவது அவர்கள் முன்வைக்கும் எதிர்ப்பு அரசியல் என்பதால், 'சிரித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுதானே!' என்று வாளாவிருக்க முடியவில்லை. தீவிரமாய் பேசி அதன் காரணமாகவே அபத்தமாகிப் போன நிகழ்வுகளை பற்றி, இத்தனை தீவிரமாய் நான் எழுதி, இன்னும் அபத்தமாக்கியதற்கு முக்கிய காரணமே இதுதான். இதில் கேலிகூத்தாகவும் வெறும் புஸ்வானமாகவும் மாறுவது (ரஜினி ராம்கி, முகமுடி போன்றவர்களால் கிணடலடிக்கப் பட்டும், கேவலப்படுத்தப்பட்டும் வரும்) நானும் தூக்கிப்பிடிக்கும் ஒரு எதிர்ப்பு அரசியல் என்பதனால்தான்.

எல்லாவித எதிர்ப்பு அரசியலையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதன் மூலமும், திசை திருப்புவதன் மூலமும், தொடர்பில்லாமல் நக்கலடிப்பது மூலமும் எதிர்கொள்வதே, அதன் வெகுத்தளத்தில் (பத்திரிகைகள், சினிமாவில்) இருக்கும் எதிரிகளுக்கான பிரதான வழிமுறையாய் இருக்கிறது. (அரசு போன்ற நிறுவனங்களின் வழிமுறை வேறு.) இது வன்முறையற்றதாக தோற்றமும் அளிக்கும். அதற்கு தீனி போடும் வேலையையும், அதை நியாயப்படுத்தும் ஆதரத்தை தரும் வேலையையுமே, குட்டி ரேவதியை முன்வைத்த விவகாரங்கள்செய்கின்றன.

ரஜினி ராம்கியும், தேசிகனும் மற்ற சாம்பார் வடை சமோசாக்கள் இந்த விவகாரத்தில் மட்டுமின்றி அடிப்படையிலேயே எல்லாவித எதிர் அரசியலுக்கும் எதிரானவர்கள். தான் தலைவனாக கொண்ட நடிகரின் படத்தில் இடம்பெற்று, தியேட்டரிலிருந்து நம்வீட்டின் நடுக்கூடம் வரை ஆக்கரமிக்கும் 'ஆபாசங்களுக்கு' எதையாவது சால்ஜாப்பு சொல்பவர் (அதை நான் பெரிய பிரச்சனை என்று சொல்லவரவில்லை), ஒரு தனிப்பட்ட அகவாசிப்புக்கான பெண்கவிஞர்களின் கவிதையை ஆபாசம் என்று சொல்வதன் அபத்தத்தை கூட உணராதவர். அவரின் பதிவின் மொழியிலேயே அவருடைய சார்பு தெளிவாய் படிப்பவருக்கு விளங்கிவிடும். தேசிகனின் அரசியலும் கிட்டதட்ட இதுதான். இது போன்ற விவகாரங்கள் இவர்களுக்கு மட்டும் தீனி போடவில்லை. ஜெயமோகன் வேதசகாயக்குமார் போன்றவர்களுக்கும் விலைமதிக்க முடியாத தர்க்க ஆயுதமாக போய்சேருகிறது. எந்த கட்டத்தில் எதிர்ப்பு அரசியல் கேலிகூத்து அல்லது தீவிர வெறுப்பு என்பதை அடைகிறதோ, அதையே அவர்கள் தங்களின் பெருங்கதையாடல் சார்ந்த அரசியலுக்கான ஆதாரமாக கொள்கின்றனர். உதாரணமாய் குருசு சாக்கரடீஸை முன்வைத்து, அ. மார்க்ஸ் பற்றி ஒருமுறை ஜெயமோகன் எழுதியதை சொல்லலாம். (அது குறித்து பிறகு எழுதும் நோக்கம் உண்டு.) 'காதல்' திரைப்படம் பற்றிய அ.ராமசாமியின் கேனத்தனமான விமர்சனத்தை முன்வைத்து, ஒட்டுமொத்த, கட்டுடைப்பு விமர்சனம் பற்றி சிலர் தீர்ப்பளிப்பதை இன்னொரு உதாரணமாய் சொல்லலாம். ஒரு உதாரணமாய் சுரேஷ் கண்ணன் தனது 'அந்நியன்' விமர்சனத்தில் எழுதியதை சொல்லலாம். அ.ராமசாமியை முன்வைத்து கட்டுடைப்பு விமர்சனம் (என்று அவர் புரிந்துகொண்ட ஒன்றை) மனோவக்கிரமாய் திரிப்பது மட்டுமில்லாமல், 'அந்நியன்' படத்தில் பார்பனியம் பற்றி பேசுபவர்களை திட்டுவதற்கும் அவருக்கு பயன்படுகிறது. எதிர்ப்பு அரசியலின் கூறுகள் வெறுப்பு மற்றும் அபத்த நிலையை அடையும்போது, அதன் எதிரிகளுக்கு சில நியாயமான எதிர்ப்புகளையும் வெட்டிச்சாய்க்கும் உவப்பான ஆயுதமாக கையில் போய் சேருகிறது.

இவ்வாறாக ஒரு எதிர்ப்பு அரசியல் antagonism என்ற தீவிர வெறுப்பு நிலையை அடைவதையே, இந்த கேலிக்கூத்திற்கெல்லாம் காரணமாக நான் பார்கிறேன். இந்த வெறுப்பு நிலையை அடைவதற்கு, திடீரென தோன்றும் எதிர்ப்பு பேரலையில் தன்னை முழுவதும் ஒப்படைத்து, அதன் வழியிலேயே எந்த பரிசீலனையும் இல்லாமல், அலைபோன போக்கில் போவது ஒரு காரணமாய் தோன்றுகிறது. தனது தேடலில் ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பு அரசியலை, பல பரிசீலனைகளுக்கு பின் அடைபவர்கள், அந்த சுழலில் மாட்டிகொண்டு, அதை மீறி சிந்திக்கவியலாமல், ஒரே வகை பார்வையில் தர்க்க சுயமைதுனம் செய்துகொண்டிருப்பது இந்த ஒப்படைத்தலின் பிண்ணணியாய் இருக்கிறது. தமிழ் சூழலில் ஒரு மிகப்பெரும் எதிர்ப்பு அரசியல் அலையை உண்டாக்கிய பெருமை அ.மார்க்ஸை சாரும். ஒரு கட்டத்தில் நின்று நிதானமாய், கடந்த 15 வருட நுண் மற்றும் பேரரசியலை பரிசீலித்து ஆராய்ந்தால், அவர் எழுத்துக்களின் பாதிப்பை எல்லாவற்றிலும் உணரமுடியும். ஆனால் அவரும் சரி, அவரை சார்ந்த பலரும் அந்த சுழலிலேயே மாட்டிகொண்டு, ஒரே வகை தர்க்கத்தை முன்வைத்து எதிராளிகளை எல்லாம் சாரம்சபடுத்திக் கொண்டிருப்பதை காணலாம். இதில் வினோதமானது என்னவெனில், பல ஒற்றை பார்வை சாராம்சப் படுத்துதலை எல்லாம், (அதற்கு எதிரான) பின்நவீனத்துவம் என்ற பெயரில் முன்வைப்பதுதான். இந்த அரசியலின் நோய்கூறான ஒரு பகுதியை பார்க்க வேண்டுமானால், அண்மையில் வெளிவந்த 'கவிதாசரண்' இதழில், அதன் ஆசிரியர் கவிதாசரண் ஞாநியை பார்பன வெறியராக காட்ட, வலிக்க வலிக்க ஒரு தர்க்க சுயமைதுனம் செய்து கொள்வதை சொல்லலாம்(படிப்பவருக்கு அது என்னவகை குமட்டலை தரும் என்று விளக்க வேண்டியதில்லை) . இந்த அரசியலின் ஒரு பூமராங் பண்பாக, அ.மார்க்ஸையே 'சாதிவெறியர்' என்று (அபாண்டமாக) குற்றம் சாட்டி வந்த ஒரு துண்டறிக்கையையும், புதிய கோடங்கியில் பெரியாரை முன்வைத்து வந்த சில கட்டுரைகளை சொல்லலாம். அது குறித்து பிறகு இன்னும் விரிவாக பேசலாம்.

குட்டி ரேவதி விவகாரத்தில், பெண் கவிஞர்கள் பற்றி தமிழ் சூழலில் எழுந்த, ஆண் திமிர் சார்ந்த எதிர்ப்பை, எதிர்கொள்ளும் அரசியலே இப்போது எஸ்ராவிற்கு புயலாய் மையம் கொண்டுள்ளது. நிச்சயமாக பெண்கவிஞர்களின் கவிதைகளை தமிழ் சமூகம் பல தளங்களில் எதிர் கொண்டவிதம் மிகவும் அராஜகமானது. வைரமுத்து, பழனிபாரதி, சிநேகிதன் தொடங்கி மாலனின் திசைகள் வரை அராஜகமான கருத்தாக்கங்களை பார்க்கலாம். (இப்போது மாலன் போன்றவர்கள் எஸ்ராவை பற்றி தார்மீகம் கலந்து எழுதியுள்ளது இன்னொரு நல்ல நகைச்சுவை. பெண்கவிஞர்களை பற்றி திசைகளில், 'உடல் தினவெடுத்து' கவிதை எழுதுவதாகவும், சொந்த வாழ்க்கையில் பாலியல் திருப்தி இல்லாமல் கவிதை எழுதுவதாகவும், எழுத அனுமதித்துவிட்டு (ஒரு உதாரணம் புதிய மாதவியின் கவிதை, திலகபாமா எழுதிய கட்டுரை) அதை வெளியிட்டவர் குட்டிரேவதியை பற்றி வரும் வசனத்திற்காக தார்மீக அவதாரம் எடுக்கும் காட்சி ரசிக்கக் கூடிய காமெடி. ஆனால் அதை சீரியஸாய் எடுத்துகொண்டு பலரும் பின்னூட்டமிட்ட காமெடிதான் ரசிக்கவில்லை.) இவ்வாறு ஒரு ஆண்திமிரை தொடர்ந்து எதிர்க்கும் ஒரு (நியாயமான) அரசியலே இன்று எஸ்ராவை கூட்டம் போட்டு திட்டும் உச்சகட்ட கேலிக்கூத்தாக, வெறுப்பு நிறைந்ததாக பரிணமித்திருக்கிறது. இந்த அபத்த நாடகத்தின் அவலம் என்னவெனில் 'பெண் கவிஞர்களை எரிக்க வேண்டும்' என்று சொன்ன சிநேகிதனுக்கும், பழனி பாரதிக்கு காட்டாத எதிர்ப்பை, இவ்வளவு தீவிரமாய் எஸ்ராவை எதிர்த்து முன்வைக்கிறார்கள்.

இதுவரை எஸ்ரா உள்நோக்கத்துடன் அந்த வசனத்தை எழுதியதாய் எடுத்துகொண்டே எழுதியிருக்கிறேன். அப்படி இல்லாமலிருக்க ஒரு மிகமிகச் சிறிய சாத்தியம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு புனைவில் பயன்படுத்தப் படும் பெயருக்கான பிண்ணணி, பலவிதமாய், நாம் நினைத்தே பர்க்கவியலாத கோணத்தில் இருக்கக் கூடியதை, போராடும் பல புனைவு எழுத்தாளர்கள் உணராதது பெரிய ஆச்சரியமில்லை. கும்பல் எதிர்ப்பில் சில உணர்வும் அறிவும் மழுங்கிப் போகக்கூடியதுதான். ஆனால் அது குறித்து எஸ்ராமகிருஷ்ணன்தான் வெளிப்படையான நேர்மையுடன் பேசியிருக்க வேண்டும். அதை அவர் செய்ததாக தோன்றவில்லை. அது எப்படியிருந்தாலும், எஸ்ரா இதற்கு முன் பெண்கவிஞர்கள் பற்றிய தீவிர வெறுப்புடன் அவர் பேசி/எழுதி எதையும் பார்த்தில்லை. மாறாக நல்லவிதமாய் (குறிப்பாய் குட்டிரேவதி மாலதி மைத்ரி பற்றி) சொல்லியதாகவே கேள்விபடுகிறேன். அவர் உள்நோக்கத்துடன் எழுதுவதற்கான காரணம் எதுவும் வெளிப்படையாய் தெரியவில்லை. அவரை எதிர்க்கும் யாரும் குற்றம் சாட்டி சொன்னதாகவும் தெரியவில்லை.

கடைசியாக தமிழகம் முழுவதும் பரவலாக பெயர் பிரபலமானதற்கு எஸ்ரா தொடங்கி, தன்னுடன் ஆர்பாட்டம் செய்த அனைவருடன், செய்தித்தீனி போட்ட பத்திரிகைகள் வரை, பலருக்கு நானாக இருந்தால் நன்றி சொல்லும் முதிர்ச்சியை காட்டியிருப்பேன்.

பிகு: இந்த பதிவை எழுதத் தூண்டிய நியோ அவர்களுக்கு என் நன்றி. அவருக்கு இந்த பதிவு பிடிக்குமா என்பது எனக்கு தெரியாது. கவிஞர் யுவன் சந்திரசேகர், ‘கூட்டத்தில பொம்பளைங்க வந்து கலாட்டா பண்றாங்க. ஆம்பிளைங்க பார்த்துக்கிட்டு என்ன பண்றீங்க? அவங்களை வெளியேற்றுங்க’ " என்று பேசிய சம்பவம் பற்றி என்னிடம் கேட்டிருந்தார். இந்த செய்தி ரமேஷின் கட்டுரையில் கிடைக்கிறது. ரமேஷ் சொல்வதை உண்மை எனக்கொண்டு பார்கும் போது, இது ஒரு ஆணாதிக்கத் திமிர்கொண்ட, அந்த மதிப்பீடுகள் சார்ந்த, ஒரு சிறு எதிர்ப்புக்கான சகிப்பு தன்மையற்ற ஒரு வாக்கியம். யுவன் சந்திரசேகர் மட்டுமின்றி தமிழின் பல எழுத்தாளர்களிடமிருந்து இப்படி ஒரு வாக்கியம் வந்திருந்தாலும் அதில் ஆச்சரியமில்லை. அந்த அளவு நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை கொண்டது தமிழ் சிறுபத்திரிகை உலகம். ஆனால் அதிலிருந்து மீண்டு, அவைகளை எதிர்த்து எழுதுவதாக சொல்லும் ரமேஷ், "தலை உருளும்' என்ற தனது வாக்கியத்தின் நிலப்பிரபுத்துவ/தந்தை வழி மதிப்பீடுகளை கட்டுடைத்து, சுயபரிசீலனை செய்யாததில் ஆச்சரியமில்லை. அது குறித்து ஏற்கனவே நண்பர் நாராயணன் எழுதியுள்ளதால் நான் பேசாமல் விடுகிறேன்.


Post a Comment

---------------------------------------

Monday, January 16, 2006

வஹாபிஸம் பற்றி ஹெச்.ஜி.ரசூல்.

"இஸ்லாம் குறித்த ஒரு வெளிப்படையான விவாதம் இன்று தேவைப்படுகிறது. இது இஸ்லாத்தினுள் இஸ்லாமியர்களல் நடத்த படுவது பொருத்தமாக இருக்கும். அதற்கு முன் விவாதிக்கும் உரிமை சகஜமானதாக ஆக்கபட வேண்டும்." என்பதாக சில ஆண்டுகள் முன்பு அனாதையின் பதிவில் எழுதியிருந்தேன். அதற்கு பிறகு இதுவரை தமிழ் இணையத்தில் இஸ்லாத்தை முன்வைத்து நடந்த விவாதங்களை பார்க்கும்போது, சிறிதளவாவது விமர்சனம் கலந்த விவாதம் இஸ்லாத்தினுள் நடக்க கூடிய சாத்தியம் குறித்த மிகுந்த நம்பிக்கையின்மையே தோன்றுகிறது. இந்நிலையில் திண்ணையில் 'வகாபிசம்' குறித்து ரசூல் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது. இஸ்லாத்தினுள்ளிருந்து எழும் உறுதியான தீர்க்கமான விமர்சனக் குரலாக அவரது கட்டுரை ஒலிக்கிறது. 'ஏன் ஒரு பெண்நபி இல்லை?' என்று கவிதை எழுதியதற்காக, இஸ்லாத்தின், மீது நம்பிக்கை கொண்ட ஒருவரான ரசூல், பல தலாக்களினால் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டார். 'ஒரு நம்பிக்கையாளன்' என்று ரசூலுக்கு சான்றிதழ் அளித்த நாகூர் ரூமியும், அவரது கவிதை தொகுப்பை நேர்மையற்று விமர்சித்து, 'அடக்கி வாசிக்கும்படி' அதாவது (மிரட்டல்களுக்கு) அடங்கி போகும்படி அறிவுரை கூறினார். வகாபிசம் குறித்து எந்த விமரசனமும் இஸ்லாத்தின் உள்ளிருந்து எழாத நிலையில் "இன்றைய வகாபிசத்தின் இக்குரல் மிகத்தளிவாக கோடி கோடியாக உற்பத்தியிலும், வணிகத்திலும் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளின் நலன்களையும், லாபத்தையும், மூலதனப்பெருக்கத்தையும், பாதுகாப்பதற்கான குரலாகவே இஸ்லாமிய தளத்தில் ஒலிக்கிறது. இஸ்லாம் முன்வைத்த ஏழை எளிய நலிந்த மக்கள் பிரிவினரின் நலன்களை பாதுகாத்தல் என்கிற அறவியல் சமத்துவகோட்பாட்டிற்கு வகாபிசம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது." என்று கூறுவது மிகவும் முக்கியமானது. ஒரு விமர்சனமற்ற ஆதரவை இஸ்லாத்துக்கு நல்கிவரும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் இதை ஒரப்பார்வையிலாவது கணக்கில் கொள்வது அவர் எழுத்திற்கு இன்னும் நம்பகத்தன்மையையும் தார்மீகத்தையும் தரக்கூடும்.

கிரிஸ்தவ அடைப்படைவாத தர்க்கத்தை தனது உந்துதலாகவும் அடிப்படை அனுமானமாகவும், சுதந்திரம் ஜனநாயகம் கருத்துரிமைக்கான பிரச்சாரம் என்பதை தன் முகமுடியாகவும் கொண்ட, புஷ் தலைமையிலான ஆக்ரமிப்பு ஏகாதிபத்தியத்தை, எந்த விதத்திலும் வகாபிசம் போன்றவற்றை மென்மையாய் அணுகுவதன் மூலம் எதிர்கொள்ள முடியாது என்பதை ரசூலின் கட்டுரை மீண்டும் நினைவூட்டுகிறது. குறிப்பாக 'with or against' என்ற புஷ் சூத்திரம் எந்தவிதத்திலும் உதவாது. இனி ரசூலின் கட்டுரை.


வகாபிசமும் நவீன முதலாளியமும்

ஹெச்.ஜி.ரசூல்


1. நவீன முதலாளித்துவத்தின் பண்பாட்டுக் குரலாக இஸ்லாத்தினுள் வகாபிசக்கோட்பாடு உருவாகி உள்ளதெனக் கூறலாம்.
நவீனத்துவம் உருவாகும்போது அது முன்வைக்கும் அறிவுவாதம், தனிநபர் மையவாதம், லாபக்கோட்பாட்டினை மையப்படுத்திய பொருளியல் சார்புநிலை என்பதான முக்கிய கருத்தாக்கங்கள் கவனத்திற்கு£¤யன. இவை சற்று தி£¤படைந்த நிலையில் இஸ்லாமிய தளத்திற்குள் செயல்வினை பு£¤கிறது. இஸ்லாத்தின் பிரதேச அடையாளங்களை குறிப்பாக மார்க்கச் சட்டப்பள்ளிகள் என்னும் மத்ஹபுகள், குரு-சீடர் மரபின் வழி இஸ்லாத்தை மறுநிர்மாணம் செய்ய முயன்ற தா¦காக்கள், சூபிகள், சமயஞானிகளின் உறைவிடங்களான தர்காக்கள் சார்ந்த மரபுவழிபண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வகாபிசத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகைப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும், சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமயமாதி£¤யாகவும் சொல்லலாம். இதற்கான தத்துவ அடிப்படையையும் தனக்குத்தானே வகாபிசம் வடிவமைத்துக் கொண்டு பன்மிய அடையாளங்களை மறுக்கும் அழிப்பின் தத்துவமாகவும் வெளிப்படுகிறது.

2. இஸ்லாமிய அடித்தள மக்கள் முன்வைக்கும் பாரம்பா¤ய மரபுகள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் மீதான தீவிரமான அறிவுவாத விமர்சனங்களை வகாபிசம் முன்வைக்கிறது. பகுத்தறிவின் விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லை வரை சென்று தர்க்கா¦தியாக நிலைநிறுத்த முயல்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய கூறான அறிவுவாதம் மேற்குலகில் மதவிலக்கக் கூறுகளை கொண்டதாக இயங்கியது. அரபு மற்றும் ஆசிய சூழலில் இது அடித்தள மக்கள் சார்ந்த இஸ்லாத்தின் விளிம்பு நிலை மரபுகளை விலக்க முனைந்தது. மைய நீரோட்ட ஏகத்துவத்தின் மீது மட்டும் தனது பகுத்தறிவு பார்வையை பயன்படுத்த தடைவிதித்தது. எனவேதான் அடித்தள மக்களின் சிறுமரபுகளின் மீது எதிர்ப்பும், பெருமரபு மீது பா¤பூரண நம்பிக்கையும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது. விஞ்ஞானங்களின் தாயாக திருக்குர்ஆன் வாழ்கிறது. இஸ்லாத்தைவிட அ றிவு சார்ந்த மா£க்கம் வேறில்லை" என்பதான பிரச்சாரங்களினூடே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பதே " அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொ£க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளுதலே ஆகும்" என்பதாகச் சொல்லி அறிவின் இடத்தை நம்பிக்கையால் நிரப்பியது.

3. தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகளை விமர்சிக்கும் அளவில் மைய இஸ்லாத்தில் நிகழ்த்தப்படும் சடங்கியல்கள் அணுகப்படுவதில்லை. உலகெங்கிலுமிருந்து வருடந்தோறும் நாற்பது லட்சம் முஸ்லிம்கள் சவுதிஅரேபிய மக்கமாநாகா¤ன் கஃபத்துல்லாவில் ஒன்றுகூடி புனிதக் கடமையை நிறைவேற்றுகின்றனர். அப்போது செய்யும் ஸபாமர்வாகுன்றுகளைச் சுற்றி வலம் வருதல், மினாவில் பெரிய ஷைத்தான், சின்ன ஷைத்தான் மீது கல்லடித்தல், ஆடு ஒட்டகம் பலியிடுதல், தலையை மொட்டையடித்தல் என்பதான நிகழ்வுகளின் மீதோ, இறைவாக்கின் உருவாக்கம், குறித்தோ, விவாதங்கள் இடம் பெறுவதில்லை. இறைவாக்கில் தென்படும் விசித்திரங்கள் சார்ந்த நிகழ்வுகளான மூசாவின் அசா பாம்பாக மாறுதல், பிர்அவுன் கூட்டம் துரத்துகையில் செங்கடலை பிளந்து நடந்து செல்லுதல், இபுராகிம் நபி தூக்கி வீசப்பட்ட நெருப்புக் குண்டம் குளிர் பொய்கையாக மாறுதல், அப்ரஹாவின் யானைப்படைகளை அபாபீல் பறவைகள் சிறுகளிமண் உருண்டைகளை வீசி எறிந்து பின்வாங்கச் செய்தல் உள்ளிட்ட பல நூறு விஷயங்களில் இத்தகையதான அறிவுநிலைப்பட்ட விவாதங்கள் பெரும்பாலும் விலக்கப்பட்டே வந்துள்ளன. பழங்குடி அரபு சமயங்களின் தோற்றம், செமிட்டிக் மதங்களான யூத, கிறிஸ்தவ மதத் தோற்றங்கள், திரு குர்-ஆனின் தோற்றுவாய் உள்ளிட்ட அனைத்து சம்பவங்களிலும் வரலாறு சார்ந்த சமூகவியல் பார்வையையோ, மானுடவியல் அணுகுமுறைகளையோ கவனத்தில் கொள்ளாமல் வெறும் ஆன்மீகத்தளத்தில் வைத்து மட்டும் அணுகுவதன் காரணமாக இஸ்லாத்தை பின்பற்றுவதில் மஸாயீல் சண்டைகளை முன்வைப்பதாகவும் வகாபிசம் உருவெடுத்தது.

சமகால சிக்கலான பிரச்சினைகளுக்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் முடிவு கிடைக்காதபோது, அனுபவம் சார்ந்து அறிவின் அடிப்படையில் முடிவுக்கு வரும் இஜ்திகாத் என்னும் பகுத்தறிவு சார் இஸ்லாமிய மரபையும் இஜ்மா என்னும் இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டுமுடிவையும் மறுத்தது. இந்நிலையில் வகாபிசம் முன்வைக்கும் பகுத்தறிவு வாத அணுகுமுறை முனை ஒடிந்த அளவுகோலாகவும், இரட்டை நாக்கு தன்மை கொண்டதாகவும் செயல்படுவதை பு£¤ந்து கொள்ள முடிகிறது.

4. இஸ்லாத்திற்குள் அந்நியசமயகலாச்சார ஊடுருவல்கள் நிகழ்ந்து மார்க்கம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிட்டது. எனவே இஸ்லாத்தை அதன் தோற்றக்கால வடிவத்தில் தூய்மைப்படுத்த வேண்டுமென்ற இலக்கோடு ஒரு பின்னோக்கிய பயணத்தை வகாபிசம் செய்ய முயன்றது. யூத, கிறிஸ்தவ சமய பின்புலக்கூறுகளையும், அம்மரபுகளில் பெரும்பாலானவற்றையும் எப்படி இஸ்லாம் சுவீகா¤த்துக் கொண்டது என்பதைப் பற்றி அடிப்படை அறிதல்களோ, அவதானிப்புகளோ எதுவுமின்றி புதியதொரு சமய அடிப்படைவாதத்தை நோக்கி இது நகர்ந்தது. இதுவே பிற சமய மக்கள் பெண்கள் உட்பட அனைவர்களும் பங்கேற்கும் தாராளவாத இஸ்லாம் (Liberal Islam) முன்வைக்கும் பண்பாட்டு நடவடிக்கைகளை சீர்திருத்தவாத முகமூடி அணிந்து எதிர்த்தது. ஓரளவு கல்வியறிவு பெற்ற நடுத்தர, உயர்மட்ட முஸ்லிம்களை மேல்நிலையாக்கம் செய்தது. பொருளாதாரத்தில் நலிந்த அடித்தட்டு உழைக்கும் மக்களின் தர்கா பண்பாட்டு நடவடிக்கைகளோடு இணக்கம் காண மறுப்பது என்பது புதிய முதலாளிய வர்க்க நலன்களை கொண்டதொரு குழுவின் மேல்நிலையாக்க அரசியலாக வெளிப்பட்டது. இது இறுக்கம் சார்ந்த பழமைவாத அடிப்படைவாத மனோநிலைகளை கட்டமைத்தது. இந்த அடிப்படைவாதம் என்ற சொல்லுக்கு விளக்கம் தர முனைகிற வகாபிச சிந்தனையாளர்களில் சிலர் மேலோட்டமாக சில சொல்ஜாலங்களை உற்பத்தி செய்வதைப் பார்£க்கலாம். "இஸ்லாமிய கொள்கை அடிப்படைகளில் உறுதியாக நிற்பதால் நாங்களும் அடிப்படைவாதிகள்தான்" என்பதாக இது சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் அடிப்படைவாதம் என்பது "தனது அடிப்படைகளை நிர்மாணிக்க பிறவற்றை அழிப்பது" என்ற அர்த்தமே கொண்டுள்ளது. மேலும் இஸ்லாத்தை வகாபிகளின் வழியில் பின்பற்றாத முஸ்லிம்கள், மாற்று சமய மக்கள் உட்பட அனைவருக்கும் மறுமையில் கிடைப்பது சொர்க்கமல்ல, பாழ்நரகம் தான் என தொடாந்து பிரச்சாரம் செய்கிறது. இவ்வாறாக பிறரை அவமதிப்பது ஒன்றையே பிரச்சாரமாக்கியிருக்கிற வகாபிச அடிப்படைவாதம். பலநேரங்களில் தீவிரவாதநிலையில் சலபிசம் தலிபானியம் குதுபிசம் உள்ளிட்ட வெவ்வேறு உருத்தோற்றமாகவும் கூட வடிவெடுக்கிறது.

5. புறத்தோற்றத்தில் வகாபிசம் பெண்ணு£¤மை சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பது போன்றதொரு பாவனை காட்டப்படுகிறது. இது உண்மையற்ற தோற்றமாகும். தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் ஜாயாரத் வழிபாடுகளை கடுமையாக கண்டனம் செய்யும் வகாபிசம் இது தொடர்பான வரலாற்று ஆதாரங்களை தூசி தட்டி எழுப்பி விவாதிக்க முன்வருகிறது. சூழல்சார்ந்த அர்த்தத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டு இஸ்லாமிய பெண்களின் சுதந்திரவெளியை திரும்பவும் தடை செய்கிறது.
திருமணத்தின் போது தந்தை வழி குடும்பத்தின் எந்தவித சொத்துக்கு உ£¤மையற்றவளாக, ஒன்றுமற்ற ஒரு வெற்று நுகர்வு பண்டம்போல் பெண் மாற்றப்படுகிறாள். பெண் பெறவேண்டிய சொத்து£¤மையின் மீது இது மறைமுகத்தாக்குதலைத் தொடுக்கிறது. குடும்ப அமைப்பில் மகன், மணமகன், தந்தை என அடிமைச் சமுதாய திருமண முறைகளில் ஒன்றாக பணம் கொடுத்து பெண்ணை விலைக்கு வாங்குவது போன்றதொரு (marriage by purchase) நிலை உருவாக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது. திருமணத்தின்போது கா¤சமணிமாலை அணிவித்தல், பூமாலை மாற்றுதல் உள்ளிட்ட மணமக்களின் திருமண நிகழ்வு சடங்குகளில் பெண்களின் அதிகாரப்பூர்வமான பங்கேற்பு முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்படுகிறது.

6. அரேபியச் சூழலில் இஸ்லாத்தின் தோற்றக்காலம் மேய்ச்சல், விவசாயம் மற்றும் வர்த்தக பின்னணியைச் சார்ந்தது என்பதால் தொழில்துறை முதலாளித்துவம் குறித்த புதுச்சூழலை இஸ்லாம் அப்போது சந்திக்கவில்லை. வணிக முதலாளித்துவ பண்ட விற்பனை நிலையைத் தாண்டி தொழில் முதலாளித்துவம் மிகக் குறைந்த விலையில் உழைப்பு சக்தியை விலைக்கு வாங்கி அதிகலாபம் பெறுகிற வகையில் மூலதன திரட்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒரு தொழிற்சாலை உற்பத்தி பி£¤வில் ஈடுபட்டிருக்கும் இஸ்லாமிய தொழிலாளி பள்ளிவாசலை தேடிச் சென்று ஐந்து வேளைத் தொழுகையையும் குறிப்பிட்ட நேரத்தில் ஈடுபட முனைந்தால் அது உற்பத்திக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. வணிகச் செயல்பாட்டில்கூட பாதகத்தை தருகிறது. எனவே இத்தொழுகையை ஒன்றோடு ஒன்று இணைத்து களாஅத் தொழுகையாக்கலாம். இன்னும் ஒருபடி மேலே சென்று, விட்டு விட்ட தொழுகைகளை களாச் செய்ய தேவையில்லை, ஒரே நேர கூட்டுத் தொழுகை வடிவத்தை மாற்றி தனித்தனி நபர்களாகவோ அல்லது சிறுசிறு ஜமாஅத்துகளாகவோ தேவைப்பட்ட நேரத்தில் தொழுது கொள்ளலாம். தொழுகையின் பின் இணைப்பான கூட்டு துஆ உள்ளிட்ட பிரார்த்தனைகளை நீக்கி தொழுகை நேரத்தை குறைத்துக் கொள்ளலாம். ரமலான் மாத நோன்பின்போது இரவில் தராவீஹ் தொழுகையை மரபு £¦தியாக 22 ரக்அத்துகளாக தொழுவதை விட்டுவிட்டு எட்டு ரக் அத்துகளாக சுருக்கிக் கொள்ளலாம் என்பதான தனிநபர் நலன் சார்ந்து வணக்க வழிபாடுகள் நெகிழ்த்தப்படுகின்றன. நேரடி உற்பத்தி சாராத சமயவழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குறைத்தும் நவீன முதலாளிய நலன்களை பாதுகாக்கும் விதத் திலான ஒரு அணுகுமுறையாகவும் வைக்கப்படுகிறது.

7. இஸ்லாத்தின் புராதன பொருளியல் கோட்பாட்டின் நோக்கம் என்பதே நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறை சார்ந்த மக்காநகர் குறைஷாகளுக்கும், வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையேயான பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும், பகைமையும் சா¤ப்படுத்தும் விதத்தில் செல்வத்தை சமபங்கீடு செய்தலை நோக்கிய பயணமே ஆகும்.
ஜகாத் என்பது ஏழ்மையின் பிடியில் சிக்கி பலவீனப்பட்டு கிடக்கும் ஏழை எளிய மக்களுக்கு வசதிபடைத்தோரை தாராள உள்ளத்துடன் உதவி செய்யத் தூண்டும் நடவடிக்கையாகும். மக்காவின் திருக்குர்ஆன் வசனங்கள் ஜகாத்தை ஒரு தர்மச் செயலாக அணுகுகிறது. மதினாவில் நபிகள் நாயகம் ஆட்சியமைப்பை ஏற்படுத்தியபின் அது கட்டாய கடமையாகிறது. அரசு நிர்வாக பிரதிநிதிகள் ஜகாத்தை வசூலிக்க நாடெங்கும் அனுப்பப்பட்டும் உள்ளனர். மதினாவில் இறங்கப்பெற்ற திருமறை வசனம் "ஜகாத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ, தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லையென திட்டவட்டமாக அறிவித்தது.

நலிந்தவர்களையும், வறுமைப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நோக்கமே ஜகாதின் பிரதான அம்சமாகும். இதற்கென வகுக்கப்பட்ட பொருளியல் திட்டமே வசதியுடையோர் தமது சொந்த நுகர்வின் அடிப்படைத் தேவைபோக தங்களது அசையும் சொத்து அசையா சொத்து அனைத்திற்கும் ஜகாத் வழங்கவேண்டும் என்பதாகும். விவசாய நிலங்களுக்கு ஜகாத் இரு வேறுவிதமான அளவீட்டில் கடமையாக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி நிகழ்ந்து அறுவடையானவுடன் கிடைக்கும் விவசாயப் பொருள்களுக்கு விவசாயியின் சொந்த உழைப்பை அடிப்படை அலகாக வைத்து இரண்டு வழிகளில் இந்த அளவீடு சொல்லப்படுகிறது. உழைப்பு சக்தியை செலவழித்து, அந்த விவசாயி நீர் இறைத்து அப்பயிரை விளைவித்திருந்தால் நூற்றுக்கு ஐந்து சதவிகிதமும் நீர் இறைக்காமல் சுயமாக விளைவித்திருந்தால் நூற்றுக்கு பத்து சதவிகிதமும் ஜகாத் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருடத்தில் அந்த விளைநிலத்தில் மூன்று போகம் விளைந்தால் மூன்று தடவையும் ஜகாத் கொடுக்கப்படவேண்டும். தற்போதைய சூழலில் இது நெல், வாழை, தென்னை, ரப்பர், கிராம்பு, தேயிலை, காப்பி உட்பட்ட அனைத்து வகை உணவுப் பயிர், பணப்பயிர், தோட்டப் பயிர்களுக்கான வேளாண்மை வருமானத்திற்கும் வழங்கப்படவேண்டும் என்பதே இதன் நீட்சியாகும்.
மேலும் வருமானத்தையும், முதலீட்டையும் அளவீடாகக் கொண்டு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், வணிகவியல் வளாகங்கள், நிலம், வாகனங்கள் மற்றும் நிதி முதலீடுகள் சார்ந்த அனைத்து சொத்துக்களுக்கும் ஆண்டுதோறும் நுறெ¢றுக்கு இரண்டரை சதவிகிதம் ஏழை வா¤யாக பகிர்ந்தளிக்கவேண்டும்.

இந்நிலையில் ஜகாத் குறித்த வகாபிசத்தின் தற்போதைய பார்வை என்பதே நவீன முதலாளிய நலன்கள் சார்ந்து மாறுபாடடைந்துள்ளது. ஒரு நபர் தனது செல்வங்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதுமானது. ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் ஜகாத் என்பதற்கான பொருள் கா¤த்தல் / சுத்தப்படுத்துதல் என்பதாகும். செல்வத்தை ஒருமுறை சுத்தப்படுத்தினால் சுத்தமாகிவிடும். திரும்ப திரும்ப சுத்தப்படுத்த வேண்டிய தேவையில்லை என்பதான விளக்கமாக இது மாற்றப்பட்டுள்ளது.

இன்றைய வகாபிசத்தின் இக்குரல் மிகத்தௌ¤வாக கோடி கோடியாக உற்பத்தியிலும், வணிகத்திலும் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளின் நலன்களையும், லாபத்தையும், மூலதனப்பெருக்கத்தையும், பாதுகாப்பதற்கான குரலாகவே இஸ்லாமிய தளத்தில் ஒலிக்கிறது. இஸ்லாம் முன்வைத்த ஏழை எளிய நலிந்த மக்கள் பி£¤வினா¤ன் நலன்களை பாதுகாத்தல் என்கிற அறவியல் சமத்துவகோட்பாட்டிற்கு வகாபிசம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது.

Post a Comment

---------------------------------------

Friday, January 06, 2006

மெய்களாலானது!

பொருளும் சொல்லும்
சொல் தரும் பொருளும்
அறிவும் மொழியும்
மொழியறிவும்
தகவலும் செய்தியும்
எல்லா பலகைகளும்
எல்லா எழுதுகோல்களும்
அமர்த்திக் கொண்டதென தெளிந்து,
விதையும் சாறும்
கையும்
சுயம்புவெனக் கருதி
எழுதியதையே
மீண்டும் மீண்டும் எழுதியெழுதி
திரும்ப திரும்ப வாசித்து தேடினேன்.
கண்ணும் பார்வையும்
என்ன வென்று
குத்திட்டு நின்றது
?.
தெரிவதையே பார்கிறேன்,
பார்த்து அடைவதே
அறிவு என
இன்று தெளிந்தாலும்,
அவள் அகழ்ந்தெடுக்க நேர்ந்தால்,
சூரிய ஒளி நிஜம் காட்டுமா?
இடைப்படும் நீர்தான் கலை சேர்குமா?

Post a Comment

---------------------------------------
Site Meter