ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, January 19, 2006

கேலிக்கூத்து!

கேலிக்கூத்தாகும் எதிர்ப்பு அரசியல்.


'சண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியை இழிவுபடுத்தி காட்சி அமைத்ததற்காக' இயக்குநர் லிங்குசாமி, வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணனைக் கண்டித்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு, (தீவிர சிந்தனை என்பது எத்தனை அபத்தமாய் உருமாற முடியும் என்பதை காண விரும்பி) போக நினைத்து, வழக்கம் போல என்னால் முடியவில்லை. அங்கே நடந்தவற்றை ரஜினி ராம்கியின் பதிவின் மூலம் இப்போதைக்கு கேள்விப்பட்டிருக்கிறேன். ராம்கியின் சார்புகள் குறித்து மிகதெளிவாகவே இருக்கும் நான், அதை மனதில் வைத்து அவருடைய பதிவில் கழித்தல் வகுத்தல் செய்து நடந்தவற்றை ஊகிக்க முடிகிறது. ராம்கியின் பதிவு இல்லாவிட்டாலும் கூட என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பது கடினமில்லை.

நான் அறிந்தவரையில் தமிழக இலக்கிய/அரசியல் தளத்தில் இதைவிட கேலிகூத்தான ஒரு நிகழ்வு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு படத்தில் 'குட்டி ரேவதி'யை தனிப்பட்டு தாக்குவதாக நினைக்ககூடிய வசனத்தை மட்டும் முன்வைத்து, அந்த வசனகர்த்தாவை திட்டுவதற்கு மட்டும், பொருள் நேரம் சக்தியை செலவு செய்து விமரிசையாக ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. அதில் தமிழகத்தின் தீவிர கலை/ இலக்கிய/அரசியல் சார்ந்த பலதரப்பட்ட இயக்கங்கள் கலந்துகொண்டு கோஷ்டிகானம் பாடியுள்ளது என்றும் அறிகிறேன்.

நாட்டில் நடந்துவரும் அக்கிரமங்களையும் பேராபத்துகளையும், ஒரு கலைஞனுக்கான கரிசனத்துக்குரிய, அரசியல் செயல்ப்பாட்டிற்கான, எதிர்புக்கான பிரச்சனைகளை பட்டியலிட்டு மாளாது. ஒரு உதாரணமாய், 15 நாட்கள் முன்பு ஒரிசாவில் கலிங்கா நகரில் 12 ஆதிவாசிகளை போலிஸ் சுட்டு கொன்றிருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வாய் இல்லாமல், ஆதிவாசிகள், தலித்துக்கள் மற்றும் அதிகாரமற்ற மக்கள் மீது பல ஆண்டுகளாய் தொடர்ச்சியாய் நாடு முழுவதும் நடந்துவரும் அரசுவெறி தாக்குதல்களில், இன்னொரு காட்சியாய் நிகழ்வேறியுள்ளது. இது போன்ற எது குறித்தும் பேசாமல், ஒரு திரைப்பட வசனத்தில் ஒரு பெண் கவிஞரின் பெயர் வருவதை மட்டும் கண்டித்து, பொருள்செலவு செய்து இத்தனை இயக்கங்கள் சேர்ந்து ஒரு கூட்டம் நடப்பதை போல அபத்த நாடகம் வேறு ஒன்று இருக்க முடியும் என்று தோன்றவில்லை. நாட்டிலுள்ள பிரச்சனைகளை முக்கியத்துவம் சார்ந்து வரிசைப்படுத்தி, அந்த வரிசையின் படிதான் நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பது அல்ல நான் சொல்ல வருவது. குட்டி ரேவதி என்ற பெயர் வரும் வசனம் இந்த அளவிற்கு ஒரு முக்கிய பிரச்சனையா?, அல்லது உண்மையிலேயே அது ஒரு பிரச்சனையா?, அதைவிட முக்கியமாக இதற்காக வரிந்து கட்டி போராட இவர்கள் வைத்திருக்கும் தர்க்கம் என்ன?, என்பதுதான் எனது கேள்விகள்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் எஸ்.ராம்கிருஷ்ணனின் வசனம் விஷமத்தனமானது, அது அவர் எழுதியதுதான் (அல்லது அவர் பொறுபேற்க வேண்டியது), அது குட்டி ரேவதியை குறிக்கவில்லை என்பதை ஏற்கமுடியாது என்றுதான் நானும் நினைக்கிறேன். என்றாலும் இதையெல்லாம் எப்படி ஒருவர் நிறைவான முறையில் நிறுவ முடியும்? இதற்காக (சட்ட அல்லது கருத்தரங்கம் நடத்தி திட்டுவது போன்ற) நடவடிக்கை எடுப்பதை போன்ற அபத்தம் வேறு என்ன இருக்கிறது? இதற்கு நடவடிக்கை எடுத்தால் இதே போன்ற, இதை முன்வைத்து எழும் மற்ற விவகாரங்களை நாம் எப்படி பார்பது? குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சமூகத்தில் இருக்கும் (முக்கியமாய் பிரபலமான) நபர்களை போலிசெய்து அவர்களை கிண்டல் செய்வது என்பது திரைப்படத்தில், கலைஞர்கள் எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து, எப்பாடுபட்டாவது, பாதுகாக்க வேண்டிய ஒரு உரிமை. இந்த உதாரணத்தில் அதை எதிர்த்து போராடினால் மற்ற சந்தர்ப்பத்தில் அதை எப்படி பாதுகாக்க முடியும? பொதுமனத்தில் இந்த உதாரணத்தை மற்றவற்றிலிருந்து விலக்கி, தனித்து இதை மட்டும் எதிர்க்கப் படவேண்டியதாய் காட்ட, என்ன வாதம் கையில் இருக்கிறது? நான் பார்த்தவரை அப்படி எந்த நியாயத்தையும் யாரும் முன்வைத்ததாக தெரியவில்லை.

குட்டிரேவதி பற்றி, தெரிந்தே திட்டமிட்டே எஸ்.ரா. எழுதியிருப்பதாக வைத்துகொண்டு, அப்படி வாய்ப்பு இருப்பதாகத்தான் நானும் நம்பிகொண்டு, 'அதனால் என்ன' என்ற கேள்வியை எழுப்புகிறேன். எஸ்ராவை விமர்சிக்கும் உரிமை நிச்சயமாய் பாதிக்க பட்டதாய் நினைத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இருக்கிறது. அப்படி இல்லை என்று மறுக்க மற்றவர்களுக்கும் உரிமை இருக்கிறது. நண்பர் நாராயணன் எழுதியது போன்ற ஒரு பதிவு இடலாம். பத்திரிகைகளில் கட்டுரை எழுதலாம். இன்னும் கொஞ்சம் மேலே போய் நிச்சயமாய் எஸ்.ரா. கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தில் சின்ன சலசலப்பை ஏற்படுத்தி எதிர்ப்பை தெரிவிக்கலாம். அதை தாண்டி இழுத்துகொண்டு போக இதில் என்ன எழவு அய்யா இருக்கிறது?

'உயிர்மை' கூட்டத்தில் எஸ்ராவை நிறுத்தி ஒரு குறியீடாய் கண்டனம் தெரிவித்ததில் பெரிய பிரச்சனையில்லை. 'அதற்கான இடம் இதுவல்ல' என்று சொல்வது ஏற்கக் கூடியது அல்ல. ஒருவேளை புஷ் இந்தியாவில் செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிக் கருத்தரங்கில் பேச வந்த இடத்தில் கூட, அவரது ஈராக் ஆக்ரமிப்பு குறித்து எதிர்த்து கருப்பு கொடி காட்டலாம். அப்படித்தான் சமூகத்தின் பல தளங்களில் எதிர்ப்பு பதிவு செய்யப்படுகிறது. தனி நபருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பும் வசதியும் எங்கே கிடைக்கிறது என்பதுதான் முக்கியமே ஒழிய, 'இது அதற்கான இடமா' என்ற கேள்வி நியாயமானது அல்ல. அந்த வகையில் எஸ்ராவிற்கு ஒரு கண்டன குரல் எழுப்பியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. எஸ்ராவும் 'புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்' என்று ஒப்புக்காக கூட சொல்லும் முதிர்ச்சி இல்லாமல், அதை இழுத்ததுடன், 'உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்' என்று பேட்டியில் பீலா விட்டார். மனுஷ்யபுத்திரன் தன் பங்கிற்கு 'ஒட்டுண்ணிகள்' என்றெல்லாம் திட்ட, பிரச்சனை அடுத்த கட்ட ஆபாசத்தை அடைந்திருக்கிறது. சரி தொடர்ந்து ஏதோ ரமேஷ், குட்டி ரேவதி என்று சிலர் பத்திரிகைகளில் அறிக்கை விட்டு திட்டிவிட்டு அடங்கி போகும் என்று பார்தால், ஏதோ கட்சி பலத்தை நிருபிக்கும் மனநிலைகொண்ட போட்டியே இருப்பக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அளவு பெரிது படுத்தி பெரும்புகையை கிளப்பும் அளவிற்கு இந்த பிரச்சனைக்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா? ஒரு பெரிய பட்டியலில் அடங்கும் தமிழின் எல்லா படைப்பாளிகளும் அறிவுஜீவிகளும் வேலை மெனக்கிட்டு இதை வைத்து கம்பு சுத்திகொண்டு இருக்கிறார்கள்.

'அதிகமா கோபப்படர பெண்ணும், அதிகமா ஆசைப்படர ஆணும் நிம்மதியா இருக்க முடியாது' என்று ரஜினி ஒட்டுமொத்த பெண்களை பற்றி சொல்லும் வசனம் பெண்களை தெளிவாக கேவலப்படுத்துகிறது. இது தவிர சினிமாவில் ஒட்டுமொத்த பெண்களை கேவலப்படுத்தும் வசனங்கள் பட்டியலிடும் வகையிலா இருக்கிறது? துக்ளக் 'கேள்வி பதிலில்' ஒவ்வொரு வாரமும் பெண்களை பற்றி சோ எழுதுவது எல்லாம் ஒட்டுமொத்தமாக பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறது. அதை எதிர்த்து கண்டன குரல் எழுப்புவதில் அர்த்தமுள்ளது. 'துப்பட்டாவை துக்கி எறியறா! அவள்ளாம் ஒரு பொம்பளை' என்று அண்ணன் தங்கையிடம், தங்கையின் தோழியை பற்றி பேசும் கதை சார்ந்த (யதார்த்தமாய் எந்த குடுமபத்திலும் ஒலிக்க கூடிய ஒரு) வசனத்தில் வரும் தனிப்பட்ட ஒரு நபரின் பெயர், எப்படி ஒட்டுமொத்த பெண்ணினத்தை கேவலப்படுத்த முடியும்? படம் பார்க்கும் அனைவருக்கும் அது ஒரு ஜாலியான சீன். மீரா ஜாஸ்மீனின் குறும்பையும், துடுக்குத்தனத்தையும் பார்வையாளர்கள் ரசிக்கும் படியாகவும், குறிப்பாய் கதையின் நாயகன் அதை ரசிப்பதாய், அதனால் மீரா ஜாஸ்மீன் பக்கம் கவரப்படுவதாய் அமையப்பெற்ற ஒரு காட்சி. நிச்சயமாய் மீரா ஜாஸ்மீனும் அந்த தோழியும் கேவலமானவர்களாய் அங்கே சித்திரிக்கப் படவில்லை. அதில் உள்நோக்கம் வசனகர்தாவிற்கு இருப்பதாக நினைத்தால் அதை ஊடகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சொல்லி விமர்சிப்பதை தவிர, இப்படி போராட்டத்தை கையில் எடுப்பது என்னவகை முதிர்ச்சி! மற்றபடி இதில் பெண்ணினத்தை கேவலப்படுத்த என்ன இருக்கிறது? ரோஸாவசந்த் என்ற பெயரில் இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. யாராவது ஒரு கதை எழுதி, ரோஸாவசந்த் என்ற பெயருடைய பாத்திரம் 'குடித்து விட்டு கலாட்டா செய்வதாக' (வலைப்பதிவில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது போல்) எழுதினால் அது என்னைத்தான் நிச்சயமாய் குறிக்கும். இதற்காக வலைப்பதிவர்களில் நான் ஒரு கோஷ்டி சேர்த்து, போராட்டத்தில் இறங்கி, அதற்கு தத்துவ விளக்கம் எல்லாம் கொடுத்து, 'வலைப்பதிவில் பெரியாரிஸ்டுகள் மீதான வன்முறை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த போனால் என்ன ஒரு கேனத்தனம்! (நான் அதை முற்றிலும் புறக்கணித்துவிட்டு போவது போல் யாரும் செய்ய வேண்டாம். மிஞ்சி போனால் எதிர்த்து பதில் எழுதிவைக்கலாம்.)

சிவகாசி படத்தில் வக்கீல்களை 'கேவலமாய் சித்தரிப்பதால்', விஜயின் கொடும்பாவி எரிப்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருபதாக எனக்கு தெரியவில்லை. தமிழ் சினிமாவில் போலிஸ், மந்திரிகள், முதலமைச்சராக கூட வரும் பாத்திரங்கள் கேவலமாக சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா மிக மிக மோசமாய், வெளிப்படையாய் தெரியும் வகையில் படம் முழுகவும் கிண்டலடிக்கப் பட்டிருக்கிறார். கவர்னர் வெடிகுண்டு வைப்பவனாக பயங்கரவாதியாய் சித்தரிக்க பட்டு, அந்த சினிமா சக்கை போடு போட்டிருக்கிறது. அது அந்த நேரத்திய அரசியலில் சென்னா ரெட்டியை குறிப்பதாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இது தவிர பார்பனர்கள் கிண்டலடிக்கப் பட்டுள்ளனர். கோவில் பூசாரிகள், சாமியார்கள், இன்னும் கடவுள்களே கூட கிண்டலடிக்கப் பட்டுள்ளனர். (நான் நேர்மறையாய் பார்க்க கூடிய சித்தரிப்புகளை இங்கே சொல்கிறேன். இது தவிர கறுப்பு நிறம், வேலைக்காரிகள், ஊனமுற்றவர்கள், தலித்துக்கள், பெண்கள் இவர்களின் சித்தரிப்புகள் வேறு விஷயம்.) இந்த சுதந்திரத்தில் குறிக்கிடும் வகையில், சினிமாவில் சிகெரெட் பிடிப்பதையும் தண்ணியடிப்பதையும் தடை செய்ய நமக்கென்று, அடித்தட்டு சமூகத்திலிருந்து சென்ற ஒரு மந்திரிகுமாரன் டெல்லியில் வசிக்கிறார். அதை பாசிசம் என்று (சரியாக) எதிர்ப்பதாக சொல்லும் அ. மார்க்ஸ் போன்றவர்கள் கூட இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். (என்ன பேசினாரோ?)

எஸ்ராவை தண்டிக்க வேண்டுமெனில், அதிகாரம் கையில் உள்ள ஜெயலலிதா போன்றவர்கள் தீப்பொறி ஆறுமுகத்தையும், வெற்றிகொண்டானையும் ( கருணாநிதியை கூட) தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஜெயலலிதா அளவிற்கு கலைஞரும் வண்ணை ஸ்டெல்லா போன்றவர்களால் மிக மோசமாய் வசைபாடப் பட்டுள்ளார். சட்டசபையிலேயே கலைஞரின் குடும்பம் பற்றி மிக கேவலமான வசனத்தை ஒரு அதிமுக எம்.எல்.ஏ முன்வைத்தார். ஆனால் ஜெயலலிதா தீப்பொறி மீது வழக்கு தொடுத்து தன் ஆட்சியில் கூட தண்டிக்காமல், அவரை தன் கட்சிப் பக்கம் இழுத்து கலைஞரை திட்டும்படி நிலமையை மற்றியமைத்திருக்கிறார். இவ்வாறு (தேர்தல்)அரசியலில் காப்பாற்றப்படும் 'ஜனநாயக உணர்வு' கூட அறிவு தளத்தில் இல்லாமல் போனது ஏன்?

நண்பர் ஒருவர் வேறு ஒரு செய்தியை சொன்னார். 'ஆதி' படத்தில் ராஜரத்தினம்(?) என்று ஒரு 'மாவட்ட செயலாளரை' பற்றி 'மாவாட்டும் செயலாளர்' என்று ஒரு வசனம் வருகிறதாம். உண்மையிலேயே காங்கிரசில் மாவட்ட செயலாளராக இருக்கும் ஒரு ராஜரத்தினம், அது தன்னைத்தான் குறிக்கிறது என்று வழக்கு தொடுத்துள்ளாராம். அதற்கு ஆதாரமாக காங்கிரசின் எதிர் கோஷ்டியில் உள்ள ஒருவர் படத்தின் ஆக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதையும், அவரால்தான் அந்த வசனம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையாய் இருக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இப்போது குட்டிரேவதிக்காக போராடும் இவர்கள் இந்த படத்திற்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த வகையில் குட்டி ரேவதி ராஜரத்தினத்திலிருந்து வேறுபடுகிறார் என்று விளக்க, பெண் கவிஞராய் அவர் இருப்பது மட்டும் எப்படி போதும் என்று புரியவில்லை. இன்னும் இதை எத்தனை உதாரணங்களுக்கு நீட்ட முடியும் என்பது விளக்கித் தெரிய வேண்டியது இல்லை.

இதில் ஒரு உச்சகட்ட காமெடி ஒன்று, அதையும் மேற்படி நண்பரே எனக்கு சொன்னார். ஜூனியர் விகடனில் "குட்டி ரேவதி என்ற பெயர் வேறு பலருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் வாய்ப்பிருப்பதை" வைத்து கேள்வி ஒன்றை கேட்க "நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள எல்லா குட்டி ரேவதிகளுக்காகவும் போராடுகிறோம்" என்று பதில் சொன்னார்களாம். இதை கேட்டு ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அடங்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. நகைப்பிற்கு உரிய விஷயமாய் தெரியாதவர்கள், 'நீலாம்பரிகளுக்காக ஏன் போராடவில்லை?' என்ற கேள்விகூட எழாதவர்களுக்கு சொல்ல எதுவுமில்லை.

சம்பந்தமே இல்லாமல் குஷ்பு விவகாரத்துடன் இது ஒப்பிடப்படுகிறது. எப்படி என்று புரியவில்லை. குஷ்பு ஒரு பத்திரிகையில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான தனது கருத்தை நிதானமான ஒரு தொனியில் எழுதியதற்கும், அதற்கு பின்னால் ஒரு 'நச்சுப்' பத்திரிகையின் உசுப்பேற்றலில் 'தமிழகத்தில் எத்தனை பேர்கள் திருமணத்திற்கு முன் உறவு கொள்ளாமல் இருக்கிறார்கள்?' என்று ஒரு கேள்வி கேட்டதற்காக, தமிழ்நாட்டின் மிக பெரிய பாசிசக் கூட்டம் தெருப்போராட்டம், பல இடங்களில் வழக்குகள், செருப்பு தக்காளி முட்டை கொடும்பாவி என்று தொடர்ந்ததும், குட்டி ரேவதி விவாகரமும் எப்படி ஒப்பிடக் கூடிய விஷயங்களாகும். விஷயத்தின் அடிப்படையும் வேறு வேறு. பலர் திரிப்பது போல் குஷ்பு பிரச்சனை கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. தமிழ் சமூகத்தின் கலாச்சார பாசிசம் பற்றியது. திரைப்படத்தில் ஒரு வசனத்தில் குறிப்பிடப்பட்டு அவதூறுக்கு உள்ளானதாக கருதப்படும் ஒரு தனிநபரின் பெயரும் இதுவும் எப்படி ஒப்பிடக்கூடிய விஷயங்களாக முடியும்? ஜல்லியடிப்பதற்கு கூட ஒரு அடிப்படை வேண்டாமா?

ஆனால் நகைச்சுவை உணர்வுக்கு மக்களிடம் பஞ்சமே இல்லை. தங்கரையும், பாமக/விடுதலை சிறுத்தைகளின் பாசிசத்திற்கு வக்காலத்து வாங்கிய (அல்லது அதை, தங்கள் அரசியல் சார்புகளால், பெரிதாய் கண்டுகொள்ளாத) சிலர், இங்கே குட்டி ரேவதிக்கு ஆதரவாய் எஸ்ராவை திட்ட கிளம்பியுள்ளதை படிக்க நல்ல கமெடியாய் இருந்தது. சமூகத்தின் நல்வாழ்விற்கு காமெடி மிகவும் தேவைதான் என்றாலும், இந்த காமெடியில் பலியிடப்படுவது அவர்கள் முன்வைக்கும் எதிர்ப்பு அரசியல் என்பதால், 'சிரித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுதானே!' என்று வாளாவிருக்க முடியவில்லை. தீவிரமாய் பேசி அதன் காரணமாகவே அபத்தமாகிப் போன நிகழ்வுகளை பற்றி, இத்தனை தீவிரமாய் நான் எழுதி, இன்னும் அபத்தமாக்கியதற்கு முக்கிய காரணமே இதுதான். இதில் கேலிகூத்தாகவும் வெறும் புஸ்வானமாகவும் மாறுவது (ரஜினி ராம்கி, முகமுடி போன்றவர்களால் கிணடலடிக்கப் பட்டும், கேவலப்படுத்தப்பட்டும் வரும்) நானும் தூக்கிப்பிடிக்கும் ஒரு எதிர்ப்பு அரசியல் என்பதனால்தான்.

எல்லாவித எதிர்ப்பு அரசியலையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதன் மூலமும், திசை திருப்புவதன் மூலமும், தொடர்பில்லாமல் நக்கலடிப்பது மூலமும் எதிர்கொள்வதே, அதன் வெகுத்தளத்தில் (பத்திரிகைகள், சினிமாவில்) இருக்கும் எதிரிகளுக்கான பிரதான வழிமுறையாய் இருக்கிறது. (அரசு போன்ற நிறுவனங்களின் வழிமுறை வேறு.) இது வன்முறையற்றதாக தோற்றமும் அளிக்கும். அதற்கு தீனி போடும் வேலையையும், அதை நியாயப்படுத்தும் ஆதரத்தை தரும் வேலையையுமே, குட்டி ரேவதியை முன்வைத்த விவகாரங்கள்செய்கின்றன.

ரஜினி ராம்கியும், தேசிகனும் மற்ற சாம்பார் வடை சமோசாக்கள் இந்த விவகாரத்தில் மட்டுமின்றி அடிப்படையிலேயே எல்லாவித எதிர் அரசியலுக்கும் எதிரானவர்கள். தான் தலைவனாக கொண்ட நடிகரின் படத்தில் இடம்பெற்று, தியேட்டரிலிருந்து நம்வீட்டின் நடுக்கூடம் வரை ஆக்கரமிக்கும் 'ஆபாசங்களுக்கு' எதையாவது சால்ஜாப்பு சொல்பவர் (அதை நான் பெரிய பிரச்சனை என்று சொல்லவரவில்லை), ஒரு தனிப்பட்ட அகவாசிப்புக்கான பெண்கவிஞர்களின் கவிதையை ஆபாசம் என்று சொல்வதன் அபத்தத்தை கூட உணராதவர். அவரின் பதிவின் மொழியிலேயே அவருடைய சார்பு தெளிவாய் படிப்பவருக்கு விளங்கிவிடும். தேசிகனின் அரசியலும் கிட்டதட்ட இதுதான். இது போன்ற விவகாரங்கள் இவர்களுக்கு மட்டும் தீனி போடவில்லை. ஜெயமோகன் வேதசகாயக்குமார் போன்றவர்களுக்கும் விலைமதிக்க முடியாத தர்க்க ஆயுதமாக போய்சேருகிறது. எந்த கட்டத்தில் எதிர்ப்பு அரசியல் கேலிகூத்து அல்லது தீவிர வெறுப்பு என்பதை அடைகிறதோ, அதையே அவர்கள் தங்களின் பெருங்கதையாடல் சார்ந்த அரசியலுக்கான ஆதாரமாக கொள்கின்றனர். உதாரணமாய் குருசு சாக்கரடீஸை முன்வைத்து, அ. மார்க்ஸ் பற்றி ஒருமுறை ஜெயமோகன் எழுதியதை சொல்லலாம். (அது குறித்து பிறகு எழுதும் நோக்கம் உண்டு.) 'காதல்' திரைப்படம் பற்றிய அ.ராமசாமியின் கேனத்தனமான விமர்சனத்தை முன்வைத்து, ஒட்டுமொத்த, கட்டுடைப்பு விமர்சனம் பற்றி சிலர் தீர்ப்பளிப்பதை இன்னொரு உதாரணமாய் சொல்லலாம். ஒரு உதாரணமாய் சுரேஷ் கண்ணன் தனது 'அந்நியன்' விமர்சனத்தில் எழுதியதை சொல்லலாம். அ.ராமசாமியை முன்வைத்து கட்டுடைப்பு விமர்சனம் (என்று அவர் புரிந்துகொண்ட ஒன்றை) மனோவக்கிரமாய் திரிப்பது மட்டுமில்லாமல், 'அந்நியன்' படத்தில் பார்பனியம் பற்றி பேசுபவர்களை திட்டுவதற்கும் அவருக்கு பயன்படுகிறது. எதிர்ப்பு அரசியலின் கூறுகள் வெறுப்பு மற்றும் அபத்த நிலையை அடையும்போது, அதன் எதிரிகளுக்கு சில நியாயமான எதிர்ப்புகளையும் வெட்டிச்சாய்க்கும் உவப்பான ஆயுதமாக கையில் போய் சேருகிறது.

இவ்வாறாக ஒரு எதிர்ப்பு அரசியல் antagonism என்ற தீவிர வெறுப்பு நிலையை அடைவதையே, இந்த கேலிக்கூத்திற்கெல்லாம் காரணமாக நான் பார்கிறேன். இந்த வெறுப்பு நிலையை அடைவதற்கு, திடீரென தோன்றும் எதிர்ப்பு பேரலையில் தன்னை முழுவதும் ஒப்படைத்து, அதன் வழியிலேயே எந்த பரிசீலனையும் இல்லாமல், அலைபோன போக்கில் போவது ஒரு காரணமாய் தோன்றுகிறது. தனது தேடலில் ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பு அரசியலை, பல பரிசீலனைகளுக்கு பின் அடைபவர்கள், அந்த சுழலில் மாட்டிகொண்டு, அதை மீறி சிந்திக்கவியலாமல், ஒரே வகை பார்வையில் தர்க்க சுயமைதுனம் செய்துகொண்டிருப்பது இந்த ஒப்படைத்தலின் பிண்ணணியாய் இருக்கிறது. தமிழ் சூழலில் ஒரு மிகப்பெரும் எதிர்ப்பு அரசியல் அலையை உண்டாக்கிய பெருமை அ.மார்க்ஸை சாரும். ஒரு கட்டத்தில் நின்று நிதானமாய், கடந்த 15 வருட நுண் மற்றும் பேரரசியலை பரிசீலித்து ஆராய்ந்தால், அவர் எழுத்துக்களின் பாதிப்பை எல்லாவற்றிலும் உணரமுடியும். ஆனால் அவரும் சரி, அவரை சார்ந்த பலரும் அந்த சுழலிலேயே மாட்டிகொண்டு, ஒரே வகை தர்க்கத்தை முன்வைத்து எதிராளிகளை எல்லாம் சாரம்சபடுத்திக் கொண்டிருப்பதை காணலாம். இதில் வினோதமானது என்னவெனில், பல ஒற்றை பார்வை சாராம்சப் படுத்துதலை எல்லாம், (அதற்கு எதிரான) பின்நவீனத்துவம் என்ற பெயரில் முன்வைப்பதுதான். இந்த அரசியலின் நோய்கூறான ஒரு பகுதியை பார்க்க வேண்டுமானால், அண்மையில் வெளிவந்த 'கவிதாசரண்' இதழில், அதன் ஆசிரியர் கவிதாசரண் ஞாநியை பார்பன வெறியராக காட்ட, வலிக்க வலிக்க ஒரு தர்க்க சுயமைதுனம் செய்து கொள்வதை சொல்லலாம்(படிப்பவருக்கு அது என்னவகை குமட்டலை தரும் என்று விளக்க வேண்டியதில்லை) . இந்த அரசியலின் ஒரு பூமராங் பண்பாக, அ.மார்க்ஸையே 'சாதிவெறியர்' என்று (அபாண்டமாக) குற்றம் சாட்டி வந்த ஒரு துண்டறிக்கையையும், புதிய கோடங்கியில் பெரியாரை முன்வைத்து வந்த சில கட்டுரைகளை சொல்லலாம். அது குறித்து பிறகு இன்னும் விரிவாக பேசலாம்.

குட்டி ரேவதி விவகாரத்தில், பெண் கவிஞர்கள் பற்றி தமிழ் சூழலில் எழுந்த, ஆண் திமிர் சார்ந்த எதிர்ப்பை, எதிர்கொள்ளும் அரசியலே இப்போது எஸ்ராவிற்கு புயலாய் மையம் கொண்டுள்ளது. நிச்சயமாக பெண்கவிஞர்களின் கவிதைகளை தமிழ் சமூகம் பல தளங்களில் எதிர் கொண்டவிதம் மிகவும் அராஜகமானது. வைரமுத்து, பழனிபாரதி, சிநேகிதன் தொடங்கி மாலனின் திசைகள் வரை அராஜகமான கருத்தாக்கங்களை பார்க்கலாம். (இப்போது மாலன் போன்றவர்கள் எஸ்ராவை பற்றி தார்மீகம் கலந்து எழுதியுள்ளது இன்னொரு நல்ல நகைச்சுவை. பெண்கவிஞர்களை பற்றி திசைகளில், 'உடல் தினவெடுத்து' கவிதை எழுதுவதாகவும், சொந்த வாழ்க்கையில் பாலியல் திருப்தி இல்லாமல் கவிதை எழுதுவதாகவும், எழுத அனுமதித்துவிட்டு (ஒரு உதாரணம் புதிய மாதவியின் கவிதை, திலகபாமா எழுதிய கட்டுரை) அதை வெளியிட்டவர் குட்டிரேவதியை பற்றி வரும் வசனத்திற்காக தார்மீக அவதாரம் எடுக்கும் காட்சி ரசிக்கக் கூடிய காமெடி. ஆனால் அதை சீரியஸாய் எடுத்துகொண்டு பலரும் பின்னூட்டமிட்ட காமெடிதான் ரசிக்கவில்லை.) இவ்வாறு ஒரு ஆண்திமிரை தொடர்ந்து எதிர்க்கும் ஒரு (நியாயமான) அரசியலே இன்று எஸ்ராவை கூட்டம் போட்டு திட்டும் உச்சகட்ட கேலிக்கூத்தாக, வெறுப்பு நிறைந்ததாக பரிணமித்திருக்கிறது. இந்த அபத்த நாடகத்தின் அவலம் என்னவெனில் 'பெண் கவிஞர்களை எரிக்க வேண்டும்' என்று சொன்ன சிநேகிதனுக்கும், பழனி பாரதிக்கு காட்டாத எதிர்ப்பை, இவ்வளவு தீவிரமாய் எஸ்ராவை எதிர்த்து முன்வைக்கிறார்கள்.

இதுவரை எஸ்ரா உள்நோக்கத்துடன் அந்த வசனத்தை எழுதியதாய் எடுத்துகொண்டே எழுதியிருக்கிறேன். அப்படி இல்லாமலிருக்க ஒரு மிகமிகச் சிறிய சாத்தியம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு புனைவில் பயன்படுத்தப் படும் பெயருக்கான பிண்ணணி, பலவிதமாய், நாம் நினைத்தே பர்க்கவியலாத கோணத்தில் இருக்கக் கூடியதை, போராடும் பல புனைவு எழுத்தாளர்கள் உணராதது பெரிய ஆச்சரியமில்லை. கும்பல் எதிர்ப்பில் சில உணர்வும் அறிவும் மழுங்கிப் போகக்கூடியதுதான். ஆனால் அது குறித்து எஸ்ராமகிருஷ்ணன்தான் வெளிப்படையான நேர்மையுடன் பேசியிருக்க வேண்டும். அதை அவர் செய்ததாக தோன்றவில்லை. அது எப்படியிருந்தாலும், எஸ்ரா இதற்கு முன் பெண்கவிஞர்கள் பற்றிய தீவிர வெறுப்புடன் அவர் பேசி/எழுதி எதையும் பார்த்தில்லை. மாறாக நல்லவிதமாய் (குறிப்பாய் குட்டிரேவதி மாலதி மைத்ரி பற்றி) சொல்லியதாகவே கேள்விபடுகிறேன். அவர் உள்நோக்கத்துடன் எழுதுவதற்கான காரணம் எதுவும் வெளிப்படையாய் தெரியவில்லை. அவரை எதிர்க்கும் யாரும் குற்றம் சாட்டி சொன்னதாகவும் தெரியவில்லை.

கடைசியாக தமிழகம் முழுவதும் பரவலாக பெயர் பிரபலமானதற்கு எஸ்ரா தொடங்கி, தன்னுடன் ஆர்பாட்டம் செய்த அனைவருடன், செய்தித்தீனி போட்ட பத்திரிகைகள் வரை, பலருக்கு நானாக இருந்தால் நன்றி சொல்லும் முதிர்ச்சியை காட்டியிருப்பேன்.

பிகு: இந்த பதிவை எழுதத் தூண்டிய நியோ அவர்களுக்கு என் நன்றி. அவருக்கு இந்த பதிவு பிடிக்குமா என்பது எனக்கு தெரியாது. கவிஞர் யுவன் சந்திரசேகர், ‘கூட்டத்தில பொம்பளைங்க வந்து கலாட்டா பண்றாங்க. ஆம்பிளைங்க பார்த்துக்கிட்டு என்ன பண்றீங்க? அவங்களை வெளியேற்றுங்க’ " என்று பேசிய சம்பவம் பற்றி என்னிடம் கேட்டிருந்தார். இந்த செய்தி ரமேஷின் கட்டுரையில் கிடைக்கிறது. ரமேஷ் சொல்வதை உண்மை எனக்கொண்டு பார்கும் போது, இது ஒரு ஆணாதிக்கத் திமிர்கொண்ட, அந்த மதிப்பீடுகள் சார்ந்த, ஒரு சிறு எதிர்ப்புக்கான சகிப்பு தன்மையற்ற ஒரு வாக்கியம். யுவன் சந்திரசேகர் மட்டுமின்றி தமிழின் பல எழுத்தாளர்களிடமிருந்து இப்படி ஒரு வாக்கியம் வந்திருந்தாலும் அதில் ஆச்சரியமில்லை. அந்த அளவு நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை கொண்டது தமிழ் சிறுபத்திரிகை உலகம். ஆனால் அதிலிருந்து மீண்டு, அவைகளை எதிர்த்து எழுதுவதாக சொல்லும் ரமேஷ், "தலை உருளும்' என்ற தனது வாக்கியத்தின் நிலப்பிரபுத்துவ/தந்தை வழி மதிப்பீடுகளை கட்டுடைத்து, சுயபரிசீலனை செய்யாததில் ஆச்சரியமில்லை. அது குறித்து ஏற்கனவே நண்பர் நாராயணன் எழுதியுள்ளதால் நான் பேசாமல் விடுகிறேன்.


Post a Comment

44 Comments:

Blogger Srikanth Meenakshi said...

Rosa,

Along with the article you wrote earlier on the Kushboo issue, this is a must -read for anybody who wishes to indulge in fair and honest social dialogue.

I disagree with your notes on எதிர்ப்பு அரசியல், though். You should expand on this specific notion at a future time for clarification. I also disagree with your characterization of some individuals as being establishmentarians - I think that was a bit presumptuous.

These apart, a very balanced article. My sincere appreciations.

Srikanth

1/19/2006 11:09 PM  
Blogger தெருத்தொண்டன் said...

பதிவுக்கு நன்றி.

1/19/2006 11:21 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

ரோசாஜி, இன்னும் யாராவது பாக்கியிருக்காங்களா :-) எல்லாத்தையும் கிழிச்சி தொங்கவிட்டாச்சு.

நல்ல அலசல். எஸ்.ரா எனக்கு தெரியாம நடந்துட்டுச்சு என்று சொன்னவர், மன்னிச்சிக்குங்க என்று சொல்லியிருந்தா கதை எப்பவோ முடிஞ்சிருக்கும். என்னமோ போங்க,
நடப்பதைப் பார்த்தா அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

1/19/2006 11:24 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நிறைவான பதிவு வசந்த்.

-மதி

1/19/2006 11:42 PM  
Blogger SnackDragon said...

"குட்டி ரேவதிக்காக" எதிர்ப்பு தெரிவிக்காமல் "துப்பட்டாவ தூக்கி எறிஞ்சா" என்ற வசனத்துக்கு
துப்பட்டாவ தூக்கி எறிஞ்சா என்ன ஆகிவிடப்போகிறது? என்று போராடியிருந்தால் பெண்ணியவாதிகளுக்கு பொருத்தமாக இருந்திருந்திக்க்கும். இங்கு அது முக்கியமில்லாமல் போவது கூட ஒரு சிறு நோக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கும் பத்திரிகை சூழலென்பதால்தான் என்று தோன்றுகிறது. ஆனால், எஸ்ரா பெண்கவிதாயினிகளுக்கு ஏதும் எதிர்த்து எழுதினாற்போல் இல்லாத பட்சத்தில் இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணமிருக்கவில்லையோவென்று தோன்றுகிறது. ஊடகத் தீனி தவிர வேறு காரணங்கள் தெரியவில்லை எனக்கு.

நாச்சார் மடத்துசாமிக்கு 'நினைவலைகள்' எழுதவில்லையா பிறகு?

1/19/2006 11:44 PM  
Blogger SnackDragon said...

/துணையெழுத்து, கதாவிலாசம் ஆகியவற்றில் பொங்கி வழிந்த மனித நேயம் எல்லாம் வாசகர்களுக்கு சொறிந்து கொடுப்பதற்காகத்தான் என்பது தற்போது வெளிப்பட்டு இருக்கிறது./
ரமேஷ் இப்படிச்சொல்வதையும் மேலே சொன்ன நகைச்சுவைப் பட்டியலில் சேர்த்திருக்கலாம்.

1/19/2006 11:54 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

ரோ.வ, தமிழ் மணத்தில் இந்த பதிவு வருகிறது. ஆனால் பின்னூட்டம் கணக்கில் வரவில்லை. காசிபட்டையும் காணவில்லை.
கொஞ்சம் பாருங்க.

1/20/2006 12:09 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்,
1. தங்கர் பச்சான் பிரச்சினையின் தொடர்ச்சி குஷ்பு பிரச்சினை. குஷ்பு பிரச்சினையின் தொடர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியொரு கருத்தை யாராவது கூட்டத்தில் முன்வைத்தார்களா?

2. இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது யார்? பாதிக்கப்பட்டதாகக் கருதும் குட்டி ரேவதி மட்டுமா அல்லது அவரது நெருங்கிய தோழிகள்/சக பெண் எழுத்தாளர்களுமா?அவர்கள் மட்டுமே ஒழுங்கு செய்து மற்றவர்கள் அழைப்பின் பேரில் அல்லது ஆர்வத்தின் பேரில் சென்றிருந்தால் நீங்கள் குறிப்பிடுவது போல இருக்கிற பிரச்சினகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இதை முன்னிலைப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள முடியாது (நீங்களும் போகவிரும்பி போகமுடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்). இதன் பின்னணியில் வேறு சில சுயநலவாதிகள் இருந்திருந்தால் மட்டுமே உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கும்.

3. ரஜனி ராம்கியின் பதிவை நானும் ஜாலியாகத் தான் படித்தேன். ஆனால் அங்கு வந்து எழுதிய இலக்கியவாதிகளின் பின்னூட்டங்களைத் தான் சகிக்க முடியவில்லை. இந்த பிரச்சினையின் எஸ்ரா vs. குட்டி ரேவதி என்ற அடிப்படையை கூட்டித் தள்ளிவிட்டு மற்றவர்களைப் போட்டுத் துவைத்திருப்பதை. ஆண் இலக்கியவாதிகளை விடுங்கள். தோழியர்.காம் இலக்கியவாதிகளிடமிருந்து குட்டி ரேவதிக்காக பரிந்தும், எஸ்ராவைக் கண்டித்தும் கூட ஒரு முணுமுணுப்பு கூடவரவில்லை.

4. நியோவுக்காக நான் பேசமுடியாது. அவருடைய பின்னூட்டங்களிலிருந்து நான் புரிந்துகொண்டது: வலைப்பதிவுகளில் அலசப்படும் இலக்கியம்/அரசியல்/சினிமாப் பிரபலங்களின் சர்ச்சைகளில் கருத்து தெரிவிப்பவர்கள் பிரச்சினைகளின் அடிப்படை விஷயத்தைவிட பிரச்சினையின் இரண்டுபக்கமும் நிற்பவர்களின் சமூக/அரசியல்/பிரபலப் பின்னணிகளை வைத்தே இருக்கின்றன என்கிற நுண்ணரசியல். இது அசோகமித்திரன், ஜெயகாந்தன், தங்கர்பச்சான், குஷ்பு, சுஹாசினி, சுஜாதா தற்போது எஸ்ரா என்று எல்லா பிரச்சினைகளையும் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு புலப்படாமல் போகாது.

(இந்த பதிவுக்கு வரும்/வரப்போகும் ஆதரவுப் பின்னூட்டங்களை பாருங்கள்.)

1/20/2006 12:10 AM  
Blogger aathirai said...

'அதிகமா கோபப்படர பெண்ணும், அதிகமா ஆசைப்படர ஆணும் நிம்மதியா இருக்க முடியாது' என்று ரஜினி ஒட்டுமொத்த பெண்களை பற்றி சொல்லும் வசனம் பெண்களை தெளிவாக கேவலப்படுத்துகிறது. இது தவிர சினிமாவில் ஒட்டுமொத்த பெண்களை கேவலப்படுத்தும் வசனங்கள் பட்டியலிடும் வகையிலா இருக்கிறது?

மாங்கா மாங்கா, ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்..னு
நிறைய எழுதி வெச்சிருக்காங்க. எண்ணற்ற eve teasing
காட்சிகள்...

டிவி சீரியல்கள் மகா மகா குப்பையை தினமும் படைத்து
தள்ளுகிறது.

இந்த பிரச்சினைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லைனு
சொல்லலாம்.

ரஜினியின் வசனமும் கருத்து சுதந்திரம்னு சொல்லலாம். எல்லொரும்
பெண்ணீய வாதிகளாக இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.
பெண்கள் எதிர்ப்பை வெச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்.
டப்பாவ தூக்கிக்கிட்டு ஓடமுடியாது.

1/20/2006 12:18 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சு.மு.:

//தோழியர்.காம் இலக்கியவாதிகளிடமிருந்து குட்டி ரேவதிக்காக பரிந்தும், எஸ்ராவைக் கண்டித்தும் கூட ஒரு முணுமுணுப்பு கூடவரவில்லை.//

தோழியர்.காம் இலக்கியவாதிகள் என்று முன்பு womankind.yarl.net எழுதிய, இப்போது தத்தம் பதிவுகளில் எழுதும் பதிவாளர்களைக் குறிப்பிடுகிறீர்களா? அல்லது புதிதாக இணையத்தில் பெண்களுக்கான ஒரேயொரு இதழ் என்ற விளம்பர வாசகத்துடன் வரும் தோழியர்.காம்'உடன் சம்பந்தப்பட்டவர்களைச் சொல்கிறீர்களா?

நீங்க யாரைச் சொல்றீங்க என்பதைப் பொருத்து எழுதுகிறேன்.

-மதி

1/20/2006 12:52 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

அவசரத்தில் எழுதிய முந்தைய பின்னூட்டத்தில் சிறு திருத்தம்:
1. தங்கர் பச்சான் பிரச்சினையின் தொடர்ச்சி குஷ்பு பிரச்சினை. குஷ்பு பிரச்சினையின் தொடர்ச்சி எச். ராமகிருஷ்ணன் - குட்டி ரேவதி பிரச்சினை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியொரு கருத்தை யாராவது கூட்டத்தில் முன்வைத்தார்களா?



மதி,
நான் தமிழ்மணம் மூலம் மட்டுமே பதிவுகளைப் படிப்பவன். ஆகவே நான் தோழியர்.காம் என்று குறிப்பிட்டது, அதில் இணைந்து அடிக்கடி எழுதுபவர்களையும், தனி வலைப்பதிவுகள் எழுதுபவர்களையும் மட்டுமே. இதில் இங்கு பின்னூட்டமிட்ட நீங்களும், உஷாவும், பொதுவாக இலக்கிய (குறிப்பாக பெண்கள்/பெண்ணியம் சார்ந்த) சர்ச்சைகளில் கருத்து தெரிவிக்கும் பொடிச்சியும் அடக்கம். இவர்களில் பலரும் ஏதாவது எழுதியிருந்து நான் தவற விட்டிருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன். யாராவது ஓரிருவர் மட்டும் எழுதியிருந்தாலும் கூட என் கருத்தில் மாற்றமில்லை.

1/20/2006 2:30 AM  
Blogger SnackDragon said...

ரோசா , இப்போதுதான் ரமேஷின் முழுக்கட்டுரையும், கீற்று கட்டுரையும் வாசித்தேன்.
இந்த ஜவ்வு விதயத்தில் ஒரு ஆரோக்கியமானதாக நான் பார்ப்பது, எழுத்தாளர்களிடையே எத்தனை பேர்தான் பெண்கவிஞர்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று பிரிவது. இது ஒரு உண்மை நிலவரத்தைச் சொல்லும். அவர்களை மட்டும் முன்னிட்டி பெண்ணிய செயல்பாடுகளை நடத்திக்கொண்டு வர ஏதுவாக இருக்கும். என்றாலும் எஸ்ரா வை கூண்டுகுள்ளே நிற்கவைத்து குற்றவாளி ஆக்குவது கொஞ்சம் அதிகமாக்த்தான் படுகிறது, அவர் செய்த செய்யாத குற்றத்தை முன்வைத்துப் பார்த்தால். பிரியட்டுமே .. நல்லதுதான்

1/20/2006 2:50 AM  
Blogger நியோ / neo said...

நண்பர் வசந்த் - முதலில் இந்தப் பதிவை எழுதியதற்காக என் நன்றி! :)

நான் எழுத விரும்பியதை, சுந்தரமூர்த்தியார் எழுதிவிட்டார்! நன்றி அய்யா!:)

>> 'துப்பட்டாவை துக்கி எறியறா! அவள்ளாம் ஒரு பொம்பளை' என்று அண்ணன் தங்கையிடம், தங்கையின் தோழியை பற்றி பேசும் கதை சார்ந்த (யதார்த்தமாய் எந்த குடுமபத்திலும் ஒலிக்க கூடிய ஒரு) வசனத்தில் வரும் தனிப்பட்ட ஒரு நபரின் பெயர், எப்படி ஒட்டுமொத்த பெண்ணினத்தை கேவலப்படுத்த முடியும்? >>

எஸ்.ராவுக்காக தாங்கள் இத்தனை பரிவு காட்டுவதும், தங்கருக்கு குறைந்த பட்சக் கருணை கூடக் காட்டாததும் கூட "நுண் அரசியலே" என்பது எனது கருத்து.

இதை 'தெருத்தொண்டனின்' பதிவிலும் சொல்லிவிட்டேன்.

ஆழ்ந்த சுயபரிசோதனை செய்து பார்த்தீர்களென்றால் உங்களுக்கும் கூட இது விளங்கக் கூடும்.

"பாப் மார்லியை குப்பைன்றான்யா" என்று சாரு நிவேதிதா இளையராஜாவின் மீது கோபப்பட்டதில் உள்ள "கருத்தியல்" நியாயமும் - அந்த மாதிரி சொன்னதைக் கடுமையாகக் கண்டித்த உங்கள் "அழகியல்" நியாயமும் போல - என்று விளக்கினால் உங்களுக்கு ஒருவேளை புரியக் கூடும்.

ஒரு நீதிமன்றத் தீர்ப்புக்காக மூன்று மாணவிகளை எரித்ததை விடவும், தேர்தல் அரசியலுக்காக 50 பேரை பலி கொண்டதைவிடவும் - 'அழுகிய முட்டை', 'தக்காளி' - இவைகளை வீசியது மாபெரும் 'பாசிச அரசியலாக்கப்படுகிற' கேலிக்கூத்து - தமிழ்நாட்டின் சிக்கலான அரசியற் சூழலைக் குறிப்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

1990-களின் துவக்கத்தில் இதே போன்ற கண்மூடித்தனமான, ஆராய்ந்து அவதானிக்காத உணர்ச்சிவசப்பட்ட 'எதிர்ப்பு அரசியலே' - இன்று தமிழகம் "ஒரு நிலப்பிரபுத்துவ வெறி கொண்ட கொள்ளைக்கார பண்பாட்டு விழுமியத்தை" ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது என்பதுவும் நினைவுகூரத்தக்கதே.

வாச்சாத்தி பெண்களுக்கும், முத்துலச்சுமிக்கும் பரிந்து வராத 'எதிர்ப்பு அரசியல்' இருந்தென்ன? செத்தென்ன?

நீங்கள் தூக்கிப்பிடிக்கிர அத்தனை விழுமியங்களுக்கும் எதிரான பாதையில் உங்கள் செயல்களின் ஆற்றோட்டம் இருந்துவிட்டால் அதற்கேதும் பலனில்லை.

பெரியார் - பிரிட்டாஷ் காலனி 'அடிவருடியான'தும், அண்ணா சி.ஐ.ஏ ஏஜெண்டானதும், இடதுசாரிகள் எழுபதுகளில் 'பாசிச வாதிகளாகனதும்' வெவ்வேறு காலகட்டங்களின் நுண் அரசியற் கூறுகளே எனப் புரிதல் இருந்தால் - எல்லா இயக்கங்களும், சிந்தனையாளர்களும் "Trade-off" செய்தே பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ஆற்றோட்டமான நடை - உங்கள் பலம்!

வலியுறுத்திச் சொல்கிற conviction - சில சமயங்களில் செருப்புக்கு காலை வெட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது!

நன்றி! :)

பி.கு:

பாமரன் எழுதிய 'ஒரு புளுக்கையின் கதை' என்கிற கட்டுரையில் இறுதியில் ஒரு கவிதையை quote செய்துள்ளார். அது இந்த விவாதத்தின் இருபுறமும் உள்ளவர்களுக்கும்
பொருந்துமோ
என்று இப்போது தோன்றுகிறது.

1/20/2006 2:57 AM  
Blogger நியோ / neo said...

வசந்த்,

>> ஆனால் அவரும் சரி, அவரை சார்ந்த பலரும் அந்த சுழலிலேயே மாட்டிகொண்டு, ஒரே வகை தர்க்கத்தை முன்வைத்து எதிராளிகளை எல்லாம் சாரம்சபடுத்திக் கொண்டிருப்பதை காணலாம். இதில் வினோதமானது என்னவெனில், பல ஒற்றை பார்வை சாராம்சப் படுத்துதலை எல்லாம், (அதற்கு எதிரான) பின்நவீனத்துவம் என்ற பெயரில் முன்வைப்பதுதான். >>

இந்த விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் இந்த விஷயத்தையே இன்னும் விரிவாக விளக்கி இன்னொரு பதிவாகப் போடலாம். என் போன்றவர்களுக்கும் sabbatical ஆக இருக்கட்டும்! :)

அ.மார்க்ஸ் பற்றி ரவி ஸ்ரினிவாஸ் சொன்னதும், அங்கே மனுஷ்யபுத்திரன் பற்றிய அ.மார்க்ஸ் கட்டுரையை தந்தேன். அதிலே அவரே இது பற்றிய (உங்கள் பார்வைக்கான) ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்!

1/20/2006 3:34 AM  
Blogger இளங்கோ-டிசே said...

வசந்த், நீண்ட பதிவாய் இருக்கிறது. நன்றி.
....
நீங்கள் எழுதியதில் பல புள்ளிகளில் நான் வேறுபடுகின்றேன் என்றாலும், அவசரமாய் வாசித்து சிலவற்றை அவசரமாய் எழுதுகின்றேன் (நேரங்கிடைத்தால் பிறகு ஆறுதலாக எழுதுகின்றேன்).
....
//ஆதிவாசிகளைக் கொன்றது....//
'கண்டனம் தெரிவிககாது, இதைப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்' என்று நீங்கள் எழுதுவது வியப்பாயிருக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட தெரிவுகள் இருக்குமில்லையா? இப்போது இந்தப்பதிவு எழுதும் உங்களையோ, பின்னூட்டம் இடும் என்னையோ பார்த்து ஒருவர், ஈழத்தில் கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன அவற்றைப் பேசாமல் ஏன் இவற்றைப் பேசுகின்றீர்கள் என்று கேள்வி கேட்டால் நமது பதில் எப்படி இருக்கும்? அதற்காய் ஆதிவாசிகளை பற்றி பேசக்கூடாது என்று கூறவரவில்லை, ஒன்றைப் பேசும்போது ஏன் மற்றதை பேசவில்லை என்ற கேள்வியோடு- முக்கியமாய் நீங்கள்- வருவது ஆசசரியமாய்தானிருக்கிறது ஆதிவாசிகளின் கொலைகளை முன்னரே அறிந்த நீங்கள், ஏன் அது குறித்து ஒரு பதிவு எழுதாமல் இதை எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று அவர்களின் சார்பில் இருந்தும் கேள்வி கேட்கப்பட்டால் .....?).

இரண்டாவது விடயம், நீங்கள், ஏன் இதுவரை -ரஜனி படத்தில் உட்பட- ஆபாசமான் உரையாடலுக்கு எதிராக குரல் கொடுக்காது ஏன் இப்பொது பொங்கி எழுகின்றார்கள் என்ற தொனியில் கேட்கின்றீர்கள். உங்களுக்கு நினைவிருக்குமோ தெரியாது, (அனாதை) ஆன்ந்தன் உங்களின் ஒரு பதிவில் ஏதோ ஒரு விவாதத்தில், 'இந்த விசயத்தை பேசுவது என்றால் ஆதியில் இருந்து பேச வேண்டும்' என்று அ.ஆ கூறியபோது (விவாதப் புள்ளி சரியாக நினைவினில்லை,பெரியாரோ அல்லது சாதி சம்பந்தமான விவாதம் என்று நினைக்கின்றேன்), நீங்கள் 'அப்படி எல்லா இடங்களிலும் செய்துகொண்டிருக்க முடியாது, உடனடியாக எதிர்வினை காட்டவேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளது' என்று அவருடன் ஒரு நீண்டவிவாதம் செய்த நீங்களா இப்படி மற்றத்திசையில் நின்று பேசுகின்றீர்கள் என்பது கூட ஆச்சரியம்தான்.

எல்லாறையும் அதன் ஆரம்ப ஆழங்களிலிருந்துதான் பேசப்போகின்றோம் என்றால், எந்த விவாதத்திற்குமான புள்ளிகளையும் ஆரம்பிக்க முடியாது. வேண்டும் என்றால் இன்றைய நிலையோடு விவாதத்தை ஆரம்பித்து அதன் ஆழங்களை நோக்கி நகரலாமே தவிர, எடுத்தவுடனேயே அடிவேரைத் தேடுதல் அவ்வளவு சாத்தியமிருக்காது)

முக்கியமாய் நான் குறிப்பிட விரும்புவது, இங்கே குட்டி ரேவதி என்பவரின் physical appearance கேள்விக்குட்படுததப்பட்டிருக்கின்றது. இது தனி நபர் ஒருவர், தன்னைப் பாதிக்கின்றது என்று குரல் எழுப்புவதாய் ஏன் நீங்கள் பார்க்கக்கூடாது? பெண் கவிஞர்கள் உட்பட பிறர், எதிர்ப்பை அதிகமய் காண்பிப்பது, தாங்கள் மதிக்கும் ஓரு சக இலக்கியவாதி இப்படிப் பெண்களை கொச்சைபடுத்தும்போது, தாங்கள் கேள்வி கேட்பதற்கான தார்மீக உரிமை அதிகம் இருக்கின்றதென்று நினைப்பதாயும் இருக்கலாம். (சினேகிதனின் 'பெண் கவிஞர்களை மவுண்ரோட்டில் எரிக்கும்' வசனத்துக்காய் பெண்ணியவாதிகள் நீதிமன்றம்வரை போனதாய்த்தான் கேள்விப்பட்டேன். எனவே அங்கே எதிர்ப்பைக் காட்டவில்லை என்று நீங்கள் குறிப்பிடுவது எவ்வளவு சரியெனத் தெரியவில்லை).

நீங்கள் குறிபிட்ட மாதிரி, எஸ்.ரா 'மன்னியுங்கள்' என்ற ஒரு வார்த்தையைப் பொதுவாய் கூறிவிட்டு நகர்ந்திருக்கலாம். அதைச் செய்யாமல் அவரும் மனுச புத்திரனும், அறிக்கைகளும் பேட்டிகளும் கொடுத்து கொண்டிருந்தால் இப்படிக் கூட்டம் போட்டு தங்கள் எதிர்ப்பை. குட்டி ரேவதி போன்றவர்கள் காட்டியதில் தவறில்லை என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
.....
(பிரேம்)-ரமேஷின் //என் மாலதியில் ...... மூன்று தலைகளாவது உருண்டிருக்கும்// என்பதில் ஆணாதிக்கத்தையும், நிலப் பிரபுத்துவத்தையும் எவரும் இலகுவில் அடையாளம் காணலாம். ஆனால் ஒருவர் ஆம்பிளைகள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்...// (யுவன் கூறியிருந்தால்) எப்படி எனினும் அந்த அதிகார ஆணாதிக்கக்குரலை மீறி தனது எதிர்ப்பை ரமேஷ் பதிவு செய்திருக்கின்றார் என்றளவில் அவரை மதிக்கின்றேன்.
....
மற்றும்படி, என்னை எஸ்.ராவின் படைப்புக்கள் பாதித்ததைப் போன்று ந்வீன கதை சொல்லி எவரும் அண்மைக்காலத்தில் பாதித்ததில்லை (யூமா வாசுகியையும் சேர்க்கலாம்). ஈழத்துப் பெண் கவிஞர்கள் பலர் தங்கள் கவிதைகளால் ஈர்த்ததைமாதிரி எந்த தமிழகப் பெண் கவிஞர்களும் அவ்வளவாய் ஈரத்ததுமில்லை. குறைவாய் வாசித்திருந்தாலும் குட்டி ரேவதி, மாலதி மைதிரியின் கவிதைகள் அதிகம் வசிகரித்ததுமில்லை(சல்மா கொஞ்சம் விதிவிலக்கு). எதைப் பேசப்போகின்றோம்/விமர்சிக்கப்போகின்றோம் என்றாலும் - வெளியே ஏலியனைப் போலத் தனித்திருந்து பார்க்க முடிவதில்லை என்றவகையில்-இந்த விடயத்தில் -விமர்சனங்கள் சில இருந்தாலும்- குட்டி ரேவதிக்கு எனது தார்மீக ஆதரவு உண்டு என்பதை ஒரு தேவையில்லாத குறிப்பாய் விட்டுச் செல்கின்றேன். நன்றி.

1/20/2006 5:34 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

[குறிப்பு: 'Roza' வசந்த் பதிவில் கேட்டபடியால் சுந்தரமூர்த்தியை இங்கே குறித்து எழுதியிருக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். பல விதயங்களுக்கும் பல தடவை எழுத நினைத்து ஒத்திப்போட்டவை இங்கே வந்திருக்கின்றன]

சண்டைக்கோழி படத்தின் சில காட்சிகளை டொராண்டோவில் பார்த்தேன். பேசிக்கொண்டே பார்த்த படம். முழுவதும் கூடப் பார்க்கவில்லை. இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கட்டம் வந்து 'குட்டி ரேவதி' என்ற வரி வந்தபோது என்னுடைய கவனம் படத்தில் திரும்பியது. காரணம்: பரிச்சயமான பெயர். எஸ்.ரா. வசனம் எழுதிய படம் என்ற நினைப்பு வரவேயில்லை. எதுக்கு 'குட்டி ரேவதி' என்ற பெயர்? கவிதை எழுதுபவர் இல்லையா? ஜாலியான காட்சியென்றாலும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கல்லுக் கடிபட்ட மாதிரி இருந்தது. அப்படி இருந்ததுதான் பிறகும் இந்தக் காட்சியைப்பற்றி யோசிக்க வைத்தது.

காட்சியென்னமோ சாதாரணமான காட்சிதான். கதாநாயகனுக்கு நாயகி மேல் கவனம் திரும்பி ஈர்ப்பு ஏற்படத் தொடங்கும் காட்சிகளில் ஒன்று. திரையரங்கில் மாணவிகள் கத்திக் கொண்டிருந்த காட்சியும் கொஞ்சம் மிகையென்றாலும் இதுவரை நடக்காத விதயம் என்று சொல்லிவிட முடியாது. இதைவிட தமிழ் நடிகர்கள் வீரவசனம் பேசும் காட்சிகளிலும் காதலைப் பறைசாற்றும் காட்சிகளிலும் பெண்களுக்கெதிராக நிறையப் பேசியிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டாரும் அவருடைய ஸ்டைலைப் பின்பற்றும் apesகளும் நிறையவே பிதற்றியிருக்கிறார்கள். இந்தக் காட்சி என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்குக் காரணம் பயன்படுத்திய பெயர். கவிதைகளை அதிகம் வாசிக்காத எனக்கே, இது தமிழகப் பெண் கவிஞர் ஒருவரின் பெயர் என்று பட்டது.

ஊருக்குத் திரும்பியபிறகு சில விதயங்களை வைத்து ஒரு pot pourri இடுகை இடும் எண்ணம் இருந்தது. அப்போது இதையும் போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே திரும்பினேன். நினைப்பதையெல்லாம் செயற்படுத்தி விடுகிறோமா என்ன? தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இடையில் பார்த்தால் பெண் கவிஞர்கள் என்று எகத்தாளமாக, அவர்களின் வெளிப்பாடுகளை ஆபாசம் என்று சொன்னவர்களும் சொல்பவர்களுக்கு மேடை போட்டுக் கொடுத்தவர்களும் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எழுதியதைவிட பின்னூட்டப்பகுதியில் வெளிப்பட்ட புளிச்சவாடை அதிகம்.

சென்னையிலும் இது பெரிய பிரச்சினையாகிக்கொண்டு, ஆக்கப்பட்டுக்கொண்டு இருந்தது.

இணையத்தில் 'ரஜனி' ராம்கியின் பதிவில் எழுதிய எள்ளல் நடையைக் கண்டித்து வந்த 'நேசமுடன்' வெங்கடேஷ் பின்னூட்டம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பெண் பதிவாளர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டிருந்தார்கள்.

ஏன் கொடுக்க வேண்டும்?

அதேன், இந்த மாதிரி விதயங்களுக்கு மட்டும் பெண் பதிவார்களோ, பெண் இலக்கிய/எளக்கிய வாதிகளோ ஏன் பெண்களோ குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு?

குட்டி ரேவதி அல்லது குஷ்பு என்று sensationalise செய்யப்படும் விதயங்களுக்கு மட்டும் ஏன் குரல் கொடுக்கவேண்டும். ஒரு பதிவாளராக, இலக்கிய/எளக்கிய வாதியாக மனிதப்பிறவியாக அவரவர்க்குத் தோன்றியபோது எந்த விதயத்துக்காவது குரல் கொடுக்கட்டுமே!

அப்படிக் குரல் கொடுக்கவேண்டும் என்று விரும்பினால், தெருத்தொண்டனின் பதிவில் ஒரு பெண்பதிவாளர் வேறொரு விதயத்தில் அவர் கண்டுணர்ந்து அனுபவித்ததை எழுதியிருந்ததைத் திரித்து எழுதி இருந்தாரே. அதை என்ன ஏது என்று அங்கே விவாதித்தவர்கள் யாரேனும் என்ன ஏதென்று கேட்டிருக்கலாம். படித்ததும் சுள் என்று கோபம் வந்தது. இத்தனைக்கும் அதை எழுதியவர் புனைபெயரில் எழுதுபவராயினும் சிற்சில சமயங்களில் யோசிக்கும்படி எழுதுபவர்/கேள்வி கேட்பவர். நியோ கேட்டிருந்ததை, ஒருவருமே என்ன ஏதென்று கேட்கவில்லை.

அதுமட்டுமில்லை. இப்போதெல்லாம் பெண்களை subtleஆகவும் வெளிப்படையாகவும் சீண்டும் பதிவுகள் வருகின்றன. கவனத்தை ஈர்க்கும் தலைப்புகளில்['அடுத்தவன் மனைவி' இப்படிப்போகும் தலைப்பை நேற்றுப் பார்த்தேன்.] இருந்து இடுகைக்கான subjectவரை [டோண்டு அவர்களின் பெண்விடுதலை] நிறைய பெண்களுக்கு எதிராக வருகின்றன.

இணையத்தில் இப்படியென்றால், சமூகத்தில் சுத்தம்!!!

இதைப்பற்றி சமீபத்தில் ஒரு நண்பர் கதைத்தார். இந்த எண்ணம்/வெளிப்பாடு ஏன் வருகிறது. என்ன செய்வது என்று..


-0-

சண்டைக்கோழி பற்றி: Roza வசந்த் நன்றாக எழுதியிருக்கிறார்.

எஸ்.ரா. எழுதினாரா இல்லையா என்று தெரியாது. தான் எழுதவில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படி அவர் எழுதவில்லை என்றாலும், படத்தை ஒரு தடவைகூட பார்த்திருக்க மாட்டாரா? படப்பிடிப்பு நடந்த அன்று, அவருக்குத் தெரிந்தவர்கள் ஒருவர்கூட சொல்லியிருக்க மாட்டார்களா? தமிழ் இலக்கியவாதிகள் வட்டம் மிகவும் குறுகியது. யாருக்காவது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு இப்படிச் செய்திருக்கலாம். சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுதான். எழுத்தை வைத்து வசனம் எழுதப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. physical appearance, behaviour கிண்டல் செய்யப்பட்டிருக்கிறது.

எனக்கு தமிழ் இலக்கியவாதிகள் என்ற வட்டத்தில் இருப்பவர்களுக்குள் நடக்கும் பிரச்சினைகள் தெரியாது. ஏதாவது ஈகோ-க்ளாஷ் ஆகி இப்படிப்பட்ட வசனம் வைக்கப்போயிற்றா என்று தெரியவில்லை. உயிர்மைக்கூட்டத்தில்தான் இந்தப் பிரச்சினை முதன்முதலில் பொதுப்பார்வைக்கு முன்னால் கிளப்பப்பட்டது என்று அறிகிறேன். அந்தக் கூட்டத்திலேயே, ஒரு வார்த்தை தான் எழுதவில்லை என்பதோடு மன்னிச்சிருங்க என்று சொல்வதில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. யாரோ ஒரு பெண் துப்பட்டாவை வீசினாராம் என்ற எள்ளலைப் படித்தபோது கோபம் வந்தது. அந்தப் பெண் அவருக்குத் தெரிந்த வகையில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். துப்பட்டாவை வீசுவது என்றமாதிரித்தானே படத்து வசனம் வந்தது என்று செய்திருக்கலாம். அதையெல்லாம் பெரிய விதயம் என்று எடுத்துவந்து, எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் போட்டுச் சாத்தலாம் என்று எழுதுபவர்கள் மத்தியில்...

ஒரு சின்னப்பிரச்சினையை வைத்துக்கொண்டு எல்லோரும் குளிர் காய்கிறார்கள். 'ரஜனி' ராம்கிக்கு, அவருக்கு முன்னமே இருந்த பெண் கவிஞர்கள் - கலாசார ஆபாசம் - அவருடைய தார்மீக கோபம் (?) என்பதால் எள்ளலோடு குளிர் காய்ந்தால். திசைகளில் மேடை அமைத்துக்கொடுத்த மாலனுக்கு நடுநிலமைவாதி அல்லது ஏதோ ஒன்று என்ற பெயரைக்காக்க ஒரு பதிவு. பின்னூட்ட எளக்கியவாதிகளுக்குத் தாங்கள் விரும்பிய பக்கம் விதயத்தைத் திசை திருப்பி குளிர்காயும் விருப்பம். இன்னும் சிலருக்கு பெண்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ற குறுகுறுப்பு.

நடக்கட்டும்..


-மதி

1/20/2006 7:02 AM  
Blogger நியோ / neo said...

மதி அவர்களே,

நீங்கள் எழுப்பிய கேள்விக்கு தெருத்தொண்டனின் வலையிலேயே பதில் சொல்லியிருக்கிறேன்.

1/20/2006 8:11 AM  
Blogger நியோ / neo said...

டீசே தமிழன் அவர்களே,

தங்கள் பின்னூட்டத்தில் சில முக்கிய பார்வைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி :)

1/20/2006 8:17 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

மதி,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. என்னுடைய முதல் குறிப்பு பொதுவானது. நீங்கள் கேள்வி கேட்டதும் உதாரணத்துடன் தெளிவுபடுத்துவதற்காக இங்கு கருத்து சொன்ன இரண்டு பெயர்களையும், வெளியிலிருந்து இன்னொரு பெயரையும் தேந்தெடுத்தேனே தவிர யாரையும் தனிமைப்படுத்தி விசாரணை நடத்தும் நோக்கமெல்லாம் இல்லை.

மற்றபடி இதே விவகாரத்தைப் பற்றி என்னுடைய விரிவான இன்னொரு பின்னூட்டம் இங்கே. http://theruththondan.blogspot.com/2006/01/blog-post_17.html

சென்னைக் கூட்டத்தையொட்டி எழுதப்பட்ட மூன்று பதிவுகளும், எழுதப்பட்ட பெரும்பாலான பின்னூட்டங்களும் கிட்டத்தட்ட ராமகிருஷ்ணனை பாதிக்கப்பட்டவராக்கி, அவரை கூட்டத்தில் பேசியவர்களின் தர்ம அடிகளிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளாகவே தெரிந்தன. மூல விஷயத்தைப் பற்றி பேசுவதைவிட கூட்டத்தில் பேசியவர்களின் யோக்கியதைகளைப் பற்றி பேசுவது தான் முக்கியமென்றால், அவர்கள் மீது தர்ம அடிபோட விழைபவர்களின் யோக்கியதைகளைப் பற்றியும், அதைப் பற்றி எழுதும் என் யோக்கியதையைப் பற்றியும் பேசி மாற்றி மாற்றி அடிகள் போட்டுக்கொள்ளவேன்டியது தான். ராமகிருஷ்ணன் பாட்டுக்கு எந்தவித குற்றவுணர்வுமின்றி இன்னொரு மாய யதார்த்தவாதக் கதையையோ, மசாலாப் படத்திற்கான வசனத்தையோ எழுதிக்கொண்டிருக்கலாம்.

எனக்கும் இந்த சர்ச்சையில் பெரிதாக ஆர்வமில்லை. எல்லோரும் ராமகிருஷ்ணன் பக்கம் நின்று கோஷ்டிகானம் (வார்த்தைக்கு நன்றி: வசந்த்) பாடிக்கொண்டிருப்பது போலத் தோன்றியதால் எழுதத்தோன்றியது. இதுவே இவ்விஷயம் பற்றி என் இறுதிக்குறிப்பு.

1/20/2006 9:04 AM  
Blogger Muthu said...

என்ன ஓய்..நீர் சீரியஸாய்த்தான் எழுதறீர்...எனக்குத்தான் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது..படிக்க முடியலை...அப்புறம் எங்க பின்னூட்டம்.....கலக்குங்க ஓய்..

1/20/2006 2:28 PM  
Blogger Muthu said...

சுருக்கமாக seriously

/தீவிர சிந்தனை என்பது எத்தனை அபத்தமாய் உருமாற முடியும்//
ரோசா என்றால் பேலன்ஸ்ஸாக எழுதுவார் என்று வருவார்கள் என்பதற்காக நீங்கள் இந்த எதிர்ப்பு கூட்டத்தை தாளித்து விமர்சித்திருக்கவேண்டாம்.டி.செ. தமிழனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.

எதிர்ப்பு தெரிவி்ப்பது என்பது கட்டுரை அளவிலா வீதி அளவிலா என்பதையெல்லாம் யார் முடிவு செய்வது?

எதிர்ப்பு அரசியல் கேவலப்படுத்தப்பட உங்கள் பதிவும் காரணமாகிவிடக்கூடாது.

1/20/2006 3:07 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

சுந்தர மூர்த்தி, உங்கள் பார்வைக்கு, http://nunippul.blogspot.com/2006/01/blog-post_17.html
ஒரு சின்ன தகவல் :-)
பாடம் ஒன்னு, ஒரு விலாபம்- மீரா ஜாஸ்மீனுக்கு தேசிய விருதுக் கிடைத்த மலையாளப்படம்.

1/20/2006 7:12 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.


ஸ்ரீகாந்த்,

ஒரு குறிப்பிட்ட மேலாதிக்கத்தை எதிர்ப்பதாக அமையும் எல்லாவகை அரசியலையும் எதிர்ப்பு அரசியல் என குறிக்கிறேன்.உதாரணமாய் பெரியாரின் இயக்கம், கம்யூனிஸ்ட் நக்சைலைட், பிராந்திய தேசிய இயக்கங்கள், பெண்ணிய இயக்கங்கள், தலித் இயக்கங்கள், ஆதிவாசிகளுக்கான இயக்கங்கள். பொதுவாய் எழுதும் வசதி கருதியே இவ்வாறு குறிக்கிறேன். நீங்கள் வேறுபடும் விஷயங்களை விளக்கினால் மேலே இது குறித்து பேசலாம். உங்கள் கருத்துக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி.

தெருத்தொண்டன், மதி, உஷா, கார்திக் உங்களுக்கும் கருத்துக்கு மிகவும் நன்றி.

சுமு, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. "தங்கர் பச்சான் பிரச்சினையின் தொடர்ச்சி குஷ்பு பிரச்சினை. குஷ்பு பிரச்சினையின் தொடர்ச்சி எச். ராமகிருஷ்ணன் - குட்டி ரேவதி பிரச்சினை " என்று யாரும் சொன்னதாக நான் சொன்னதாக தெரியவில்லை. நானும் அப்படி எதுவும் சொல்லவில்லை.

'சம்பந்தமே இல்லாமல் குஷ்பு விவகாரத்துடன் இது ஒப்பிடப்படு'வதை பற்றி மட்டுமே பேசியுள்ளேன். வலைப்பதிவில் பலர் இப்படி எழுதியுள்ளதை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். நீங்களும் அதை படித்திருப்பீர்கள்.

எனக்கு கோபம் எதுவும் இல்லை. ஒரு ஒன்றுமில்லாத பிரச்சனை, இத்தனை பெரியதாய் ஆக்கப்பட்டிருப்பதை பற்றிய எரிச்சல் மட்டுமெ. மற்ற என் வாதங்கள் தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். அதில் நேரடியாக எதையாவது மறுத்தால் பேசலாம்.
நீங்கள் குறிப்பிடும் நுண் அரசியல் உங்களுக்கும் நியோவிற்கும் கூட பொருந்தும் என்பதை எப்படி தவறவிடுகிறீர்கள். குட்டி ரேவதியின் பெயரை
பயன்படுத்தியதை 'ராமகிருஷ்ணணின் அயோக்கியத்தனம்' என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடும் நீங்கள், குஷ்பு மீதான தாக்குதலில் "இதற்காக விளக்குமாறு செருப்பு காட்ட தேவையில்லை' என்று மென்மையாக மட்டும் சொன்னதை எப்படி பார்பது? ஒருவேளை செருப்பு விளக்கமாறூ இல்லாமல் குறைவான எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது ஏற்புடையதா? அதை பற்றி பேசும் போது மட்டும் 'அலுப்பும் விரக்தியும் வருவதை'பற்றி மற்றவர்களும் இதே 'நுண் அரசியலை'த்தானே பேச முடியும்? (நான் அது பற்றி பேசவில்லை.)

ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பாராட்டி பின்னூட்டங்கள் (ஸ்ரீகாந்தின் பின்னூட்டத்தை பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்றால் அதை வெளிப்படையாக சொல்லவும்) வரவில்லை. மேலும் என் அரசியல் நிலைபாடு மிக தெளிவாக பதிவில் குறிக்கப்பட்டுள்ளது. நியோ போல உங்களுக்கும் அது புரியவில்லை, அல்லது அது குறிப்பிட்டவர்களுக்கு உவப்பாய் இருக்கும் என்று நினைத்தால் மேலே சொல்ல எதுவுமில்லை. கருத்துக்கு நன்றி.

ஆதிரை நன்றி.

நியோ,

முடிந்தால் மீண்டும் எனது 'வாயு' என்ற பதிவை படியுங்கள். அதில் தங்கருக்கு எல்லாவித சந்தேகத்தின் பலனை தந்தே அது எழுதப்பட்டுள்ளது. அந்த பதிவும் தங்கரை பற்றியது அல்ல. வலைப்பதிவில் வெளிப்பட்ட வக்கிரங்களை பற்றியது. தங்கரை பற்றி எழுதும் நோக்கமும் எனக்கு இருந்ததில்லை. ஆனாலும் இப்போது சொல்கிறேன். தங்கர் பேசியது அப்பட்டமான நிலப்பிரபுத்துவ மதீப்பீடுகளை கொண்ட, பெண்களை கேவலப்படுத்தும் ஒரு வசை. எஸ்ரா விஷயத்தை அப்படி பார்க்கமுடியாது என்பதுதான் என் கருத்து. உங்களின் நுண் அரசியலுக்காக வேறுவிதமாய் இதை என்னால் முடிவு செய்ய முடியாது.

'"பாப் மார்லியை குப்பைன்றான்யா" என்று சாரு நிவேதிதா இளையராஜாவின் மீது கோபப்பட்ட'தை பற்றியதல்ல நான் எழுதியது. அவ்வாறு *திரித்ததை* பற்றியது. மற்ற படி பெரியார் அண்ணா, சி ஐ ஏ என்றேல்லாம் நீங்கள் எழுதியுள்ளதிற்கும் இந்த பதிவிற்கும் என்ன தொடர்பு என்று என் சிற்றறிவிற்கு புலப்படவில்லை. புலப்பட்டால் பதில் எழுதுகிறேன்.ஆனால் வாச்சாத்தி பெண்களுக்கும், முத்துலச்சுமிக்கும் பரிந்து வரும் அரசியலைத்தான் எதிர்ப்பு அரசியல் என்று சொல்கிறேன். அப்படி இல்லை என்ற தொனி எங்கே வந்தது என்பது உங்கள் 'நுண்ணரசியலுக்கே' வெளிச்சம். பாமரனின் 'கட்டுடைத்தலைவி' என்ற படுகேவலமான கட்டுரையை படித்த பின்பு அவர் எழுதும் சொற்களை குப்பைகளாகத்தான் பார்கிறேன்.
மற்றபடி ரஜினி ராம்கி மற்றவ்ர்களின் சார்புகளையும், நோக்கங்களை பற்றி எழுதியிருக்கத்தானே செய்திருக்கிறேன். அதைவிட அதிகமாய் உங்கள் நுண்ணரசியல் கொண்டு என்ன சொல்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

உங்களின் இரண்டாவது பின்னுட்டம், நான் சரியாக புரிந்துகொண்டேனென்றால் நான் சொல்ல வந்ததைதான் பேசுகிறது. தன் கட்டுரை எடிட் செய்யப்பட்ட காரணத்திற்காக மட்டும், பார்பனர்களின் கோவணம் என்றெல்லாம் மார்க்ஸ் பேசுவதைத்தான் ஒரு சாராம்சபடுத்துதல் என்கிறேன். எனக்கு சாராம்சபடுத்துவது அல்ல முக்கிய பிரச்சனை. அதை பின்நவீனத்துவம் என்ற பெயரில் முன்வைப்பதுதான் பிரச்சனை. உங்கள் கருத்துக்கு நன்றி!

டீஜே,

என் பதிவை மீண்டும் வேண்டுமானால் படுத்து பாருங்கள்.
'நாட்டிலுள்ள பிரச்சனைகளை முக்கியத்துவம் சார்ந்து வரிசைப்படுத்தி, அந்த வரிசையின் படிதான் நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பது அல்ல நான் சொல்ல வருவது. குட்டி ரேவதி என்ற பெயர் வரும் வசனம் இந்த அளவிற்கு ஒரு முக்கிய பிரச்சனையா?, அல்லது உண்மையிலேயே அது ஒரு பிரச்சனையா?, அதைவிட முக்கியமாக இதற்காக வரிந்து கட்டி போராட இவர்கள் வைத்திருக்கும் தர்க்கம் என்ன?, என்பதுதான் எனது கேள்விகள்' என்றுதான் எழுதியுள்ளேன். எஸ்ராவை விமர்சிப்பது, அடையளமாய் ஒரு எதிர்ப்பு காட்டுவதை ஆமோதித்துதானே நானும் எழுதியுள்ளேன். அதற்கு மேல் இத்தனை இயக்கங்கள் கூடி பேச இதில் என்ன எழவு இருக்கிறது என்பதுதான் என் கேள்வி? சரி, மற்ற சினிமாவில் வரும் மற்ற சித்தரிப்புகளை பற்றி நாம் என்ன செய்யலாம். ஒரு அதிகாரம் கையில் உள்ள ஜெயலலிதாவே படையப்பாவை ஒன்றும் செய்யாதபோது, இதில் செய்ய என்ன இருக்கிறது? படத்தில் வருவதை உண்மையிலேயே குட்டி ரேவதியின் appearance பற்றித்தான் என்றால், எத்தனை படத்தை பற்றி நாம் ஆராயவேண்டும், போராட வேண்டும் எனப்துதான் என் கேள்வி. ஜெயலலிதா மற்றவர்களுக்கு ஒரு நியாயம், குட்டிரேவதிக்கு ஒரு நியாயம் என்று எப்படி இருக்க முடியும் என்பதுதான் என் கேள்வி. மற்றபடி எல்லாவற்ரையும் ஆரம்பத்திலிருந்து பேசவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. இப்போது குட்டி ரேவதிக்காக போராடினால் நாளை எது எதுக்கெல்லாம் போராட வேண்டி வருமோ என்பதுதான் என் கேள்வி. அ.ஆ.வுடம் நீங்கள் சொன்னதுபோல் பேசிய ஞாபகம் இல்லை. சந்தர்ப்பமும் பிடிபடவில்லை. எடுத்து காட்டினால் பேசலாம்.

'குட்டி ரேவதி என்பவரின் physical appearance கேள்விக்குட்படுததப்பட்டிருக்கின்றது. இது தனி நபர் ஒருவர், தன்னைப் பாதிக்கின்றது என்று குரல் எழுப்ப' நினைத்தால் அவர் எழுப்பிவிட்டு போகட்டும். உங்களுக்கும் எனக்கும் வலைப்பதில் பலருக்கும் இப்படி ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்கும். அது நம் சொந்த பிரச்சனை. அதை மீறி இதில் முக்கியத்துவமும் இல்லை என்பதுதான் என் ஒட்டுமொத்த வாதம். கருத்துக்கு நன்றி.

முத்து கருத்துக்கு நன்றி.

வழக்கம் போல பதிவில் சொல்லப்பட்டதுடன் தொடர்பில்லாததை பின்னூட்டங்கள் பேசுவதாக எனக்கு தோன்றுகின்றன. குட்டிரேவதி இதுவரை சினிமாவில் கிண்டலடிக்கப்பட்ட பல நபர்களை விட எந்த விதத்தில் முக்கியமானவர் என்பதை யாராவது விளக்கினால் ஒழிய, இந்த விஷயம் இவ்வளவு பெரிதாய் ஆனதற்கான நியாயம் எதையும் என்னால் பார்க்க முடியாது. கடைசியாக ரமேஷின் கட்டுரை, அதன் அராஜகதன்மை, அதன் எதிரொலியாகவே இருந்திருக்கக் கூடிய கருத்தரங்கம் என்ற அபத்த நிகழ்வு, இதை முன்வைத்தே இதை எழுத நேர்ந்தது. ரமேஷ் எல்லா எழுத்தாளர்களும் இது குறித்த ஒரு நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் ஸ்டாம்ப் ஒட்டப்படும் என்பதாக மிரட்டுகிறார். அப்படிபட்ட ஒரு பிரச்சனை இது இல்லை என்பதுதான் என் வாதம். நானும் ரவி ஸ்ரீனிவாசும் ஈகோவில் திட்டிகொண்டால், அதில் மற்றவர்கள் எல்லாம் ஒரு நிலைப்பாடு எடுத்துதான் ஆகவேண்டும் என்பது அராஜகம். அதை போலத்தான் இதுவும் என்பதுதான் என் கருத்து. 'அப்படி பார்க்கமுடியாது, ஏனெனில் குட்டி ரேவதி ஒரு பெண்கவிஞர், இங்கே வரும் வசனம் அப்படிப்பட்டது' என்று சிலர் சொல்வது போல் என்னால் பார்க்க முடியவில்லை. தமிழ் சூழலில், எங்கே ஆணாதிக்கப் பட்டம் கிடைத்துவிடுமோ என்று பயந்து பலர் தங்களுக்கு ஒரு நிலைப்பாட்டை வலிந்துகொண்டுவந்து, பலவற்றை தொடர்பு படுத்தி பேசும் போது, அது குறித்து கவலை பட தேவையே இல்லாத நான், இதன் மற்ற பிரச்சனைகளை பற்றி பேசியிருக்கிறேன். இதற்கு மேல் இதில் பேச எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எல்லோருக்கும் மீண்டும் நன்றி.

1/20/2006 7:24 PM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீகாந்தின் பதிவை இப்போதுதான் பார்தேன். அவருக்கு என் நன்றி.

டீஜேக்கு ஒரு விஷயம் எழுதும்போது சொல்ல மறந்துவிட்டது. ஆதிவாசிகள் மீதான கலிங்கா நகர் படுகொலை பற்றி ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன்.இன்னும் இடவில்லை. அதை எழுதுவதுதான் எனக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக முன்னுரிமை. ஆனால் இந்த பதிவை எழுத குறைவான நேரமே பிடித்ததால் எழுதி உள்ளிட்டுவிட்டேன். ஆதிவாசிகள் மீதான முந்தய தாக்குதல்கள் பற்றிய சில விவரங்களை சேர்த்து எழுத காத்திருப்பில் வைத்திருக்கிறேன். அதுவரை கலிங்கா நகர் படுகொலைகள் பற்றி தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய,

http://www.petitiononline.com/or010606/petition.html

முன்னூராவதாக என் கண்டனத்தை பதிவு செய்து 10நாட்கள் ஆன பிறகும் மேலும் 29 கையெழுத்துக்கள்தான் பதிவாகியுள்ளன. அக்கறையுடைய நண்பர்கள் பதிவு செய்யும்படி கேட்டுகொள்கிறேன். இதனால் என்ன பயன் என்றூ யோசிக்காமல், நம் எதிர்ப்பை பதிவு செய்யும் முகமாய் இதை செய்யும்படி கேட்டுகொள்Kஇறேன். நன்றி.

1/20/2006 8:42 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

'ராமகிருஷ்ணணின் அயோக்கியத்தனம்' என்று இருமுறை ஒரே இடத்தில் அடுத்தடுத்த நாட்களில் எழுதிய பின்னூட்டங்களில். அந்த அளவு consistency கூட இல்லாமல் எழுத முடியுமா? ராமகிருஷ்ணன் குறிப்பிட்ட வசனத்திற்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்காதவரை என் கருத்தில் மாற்றம் இருக்காது. அதற்காக இதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கமாட்டேன். என்னுடைய கருத்தை Knee jerk reaction ஆகக் காட்டவேண்டுமென்றால் மாலனின் பதிவிலேயே சுடச்சுட காட்டியிருக்கமுடியும். இப்போது
நான் ஏன் கருத்து சொல்ல முனைந்தேன் என்பதையும், இதையும் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமில்லை என்பதையும் மதிக்கு எழுதியுள்ள பதிலில் பார்த்துக்கொள்ளவும்.

தவிர,
குஷ்பு விவகாரத்தில் அவ்வப்போது அறிந்த விவரங்களின் அடிப்படையில் ஆரம்பகட்டத்தில் தங்கமணியின் பதிவில்
"குஷ்புவின் கருத்துக்களுக்காக அவரை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிக்கப்படவேண்டியவர் அல்ல" என்று 'மென்மை'யாகவும் கண்டித்தும், கடைசியாக உங்கள் பதிவில்
"முதல் முறையாக குஷ்பு சொன்னதை முழுமையாக வாசிக்கத் தந்ததற்கு நன்றி. உப்புக்கு பெறாத விஷயத்தை ஊதிப் பெருக்கியதற்காக பாமகவும், தலித் சிறுத்தைகளும் மன்னிப்பு கேட்பது நல்லது.

"ஊரைவிட்டு விரட்டவேண்டும்" என்ற கூச்சல் எழும்போதெல்லாம் எனக்கும் கொஞ்சம் கிலியாக இருக்கும். சகமனிதரின் மீது உடல்ரீதியான வன்முறையும், பொதுவில் வைத்து அவமானப்படுத்தும் உளரீதியான வன்முறையும் ஒன்றே".
என்று இன்னொரு முறையும் 'மென்மை'யாகவே கண்டித்தேன். பிறகு தனி அஞ்சலில் உங்களுடனும், வேறு நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை தேவையெனில் அனுப்பிவைக்கிறேன்.

ஆக பாமக/தசிக்களின் செயல்பாடுகள் நான் பெருமளவு ஒத்துப்போகக்கூடிய தங்கமணி போன்ற பிற நண்பர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எனக்கும் இருந்தது. அதன் வெளிப்பாடுகளே இந்த 'மென்மை'யான கண்டனங்கள்.

எனக்கு திராவிட, பாமக, தசி அரசியல் சார்புள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதில் எந்த கூச்சமும் இல்லை. இது உறுப்பினர் அட்டையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அவர்களை தாங்கிப்பிடிக்கும் வகையல்ல. ஆதரவு ஆட்கள்/கட்சி, காலம், பிரச்சினை ஆகியவற்றைப் பொறுத்து relative ஆனது. ஆக என் நுண்ணரசியலை யார் வேண்டுமானலும்--நீங்கள் கூட--கட்டுடைக்கலாம்.

பின் குறிப்பு: என் குறிப்பு ஸ்ரீகாந்தை மட்டுமே மனதில் வைத்து எழுதியதில்லை (அன்னப்பட்சியின் லாவகத்துடன் தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, விரும்பாததைக் கேள்விகேட்டும், உங்கள் பதிவைப் படிப்பதற்கு அழைப்பு விட தனிப்பதிவு போடும் அளவுக்கு ஏற்பட்ட குஷியைப் பார்த்தும் உங்களுக்கு அப்படித் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஸ்ரீகாந்த்: பூக்கடைக்கு எதற்கு விளம்பரம்? :-)). நான் எழுதுவதற்கு முன் ஸ்ரீகாந்த் முதல் கார்த்திக் வரை பலர் உங்களை பாராட்டிவிட்டார்கள். என் கருத்து பொதுவானது, இங்கும் ரஜனி ராம்கியின் பதிவில் கோஷ்டிகானம் பாடியவர்களையும் சேர்த்து.

உஷா,
சுட்டிக்கு நன்றி.

முத்து,
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

1/20/2006 9:10 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு, பதிலுக்கு நன்றி.

குஷ்பு மீதான தாக்குதலை நீங்கள் நியாயப்படுத்தினீர்கள் என்ற தொனிப்பட எதையும் சொல்லவரவில்லை. உங்கள் கண்டனம் மென்மையானது என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். தனிப்பட்டு எழுதிய மடல்களையும் முன்வைக்க முடியும், அதுவும் மென்மையானது என்பதுதான் என் கருத்து. அதாவது இதில் பாமக-விசி சம்பந்தப் படவில்லை எனில், உங்கள் கண்டனங்கள் இன்னும் ஆக்ரோஷமாய் இருக்கும் என்ற பொருளில் மென்மை என்கிறேன். ஆனால் அதை நான் இதற்கு முன் குறிப்பிட்டதும் இல்லை. நீங்கள் நியோ கூட சேர்ந்து ஏதோ ஒரு நுண்ணரசியல் பேசும்போது, அதே சாத்தியம் உங்கள் மீது பயன்படுத்தப் படும் வாய்புள்ளதை பற்றியே சொல்லியுள்ளேன்.

மற்றபடி 'பாராட்டி வரும் பின்னூட்டங்களை பாருங்கள்' என்று நீங்கள் சொன்னதில் என்ன பொடி வைத்திருந்தீர்கள் என்று நீங்கள்தான் சரியாய் விளக்க வேண்டும். அது பொதுவாய் சொன்னதில்லை என்பது தெளிவு. அரசியல் நிலைபாடுகளை வைத்து புரிந்துகொள்ள முயற்சிக்கலாமே ஒழிய, எனக்காக இதில் எதுவும் தோன்ற வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிட்டது எதுவும் வராத நிலையில், ஒரு வேளை ஸ்ரீகாந்தை சொல்கிறீர்களா என்று கேட்டேன். மற்றபடி உங்களுக்கு பதில் எழுதிய பின்புதான் அவருடைய ('குஷி'யான) தனிப்பதிவை பார்த்தேன்.

1/20/2006 9:29 PM  
Blogger ROSAVASANTH said...

http://thinnai.com/pl0120062.html

அன்னத்தை போல எதையும் பிரித்தெடுக்கும் தேவையே இல்லை. கிட்டதட்ட கோ.ராஜாராமின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். ராஜாராம் மீது வேறு விஷயங்களில் வேறு விமர்சனங்கள் கேள்விகள் உண்டு என்பது வேறு விஷயம்.

1/20/2006 10:31 PM  
Blogger Srikanth Meenakshi said...

அடக்கடவுளே! எனக்கு அன்னபட்சியின் லாவகமெல்லாம் கிடையாதய்யா! 'குஷியாக'த்தான் தனிப்பதிவு போட்டேன் (இனிமேல் போடவில்லை, நன்றி), காரணம் எனக்கு உவப்பான சங்கதிகள் இருப்பதால் அல்ல - உண்மையில் இந்த விவகாரத்தில் உவப்பான சங்கதிகள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. எனது 'குஷி'க்குக் காரணம், இத்தனை தெளிவாகவும், தர்க்க நேர்மையுடனும் ஒருவரால் எழுத முடிகிறதே என்ற சந்தோஷம் தான். சீர்தூக்கிய பார்வைகள் அருகியிருக்கும் இன்றைய சமூக உரையாடல் களத்தில் இத்தகைய எழுத்துக்களைப் படிப்பதில் ஏற்பட்ட உவகையைப் பகிர்ந்து கொள்ளவே அந்தத் தனிப்பதிவு.

1. இந்த விஷயம் குறித்து ராம்கி et al மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி எனக்கு ஆட்சேபணையில்லை. அதைத்தாண்டி அவர்களை எதிர்ப்பு அரசியலின் எதிரிகள் என்பது போல் சித்தரிப்பதற்கு, a case has not been made என்பதே என் கருத்து.

2. ரோசா முன் வைக்கும் எதிர்ப்பு அரசியலின் அடிப்படைகளை என்னால் உள்ளுணர்வு ரீதியாக ஏற்க முடியவில்லை. இது பற்றி நான் இன்னமும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அதற்கு உதவியாகவே அவரை இன்னமும் விளக்கி எழுதக் கேட்டுக் கொண்டேன்.

1/21/2006 12:37 AM  
Blogger SnackDragon said...

This comment has been removed by a blog administrator.

1/21/2006 12:42 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//'பாராட்டி வரும் பின்னூட்டங்களை பாருங்கள்' என்று நீங்கள் சொன்னதில் என்ன பொடி வைத்திருந்தீர்கள் என்று நீங்கள்தான் சரியாய் விளக்க வேண்டும். அது பொதுவாய் சொன்னதில்லை என்பது தெளிவு. //

இதில் பொடி வைத்தோ, யாரையும் சூசகமாகவும் குறிப்பிடவில்லை.

இது தெருத்தொண்டனின் பதிவில் எழுதியது:
"நீங்களும், ரஜனி ராம்கியும்,அவர் பதிவில் பின்னூட்டமிட்ட பிகேஎஸ், சன்னாசி, சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட இலக்கியம் பேசும் பலரும் சேர்ந்து ராமகிருஷ்ணனை பாதிக்கப்பட்டவராக்கி அவரை விமர்சித்தவர்களைப் போட்டு வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்".

அங்கு மூன்று பெயர்களையும், இங்கு மதிக்கு எழுதிய பதிலில் மூன்று பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும், என் கருத்து குழு அரசியலை/உளவியலைப் பற்றியதே தவிர தனிப்பட்டவர் எவரின் உளவியலையும் பற்றியதல்ல. நான் எதிர்பார்த்தது, ரஜனி ராம்கியின் பதிவில் பின்னூட்டமிட்டவர்கள் இங்கும் எழுதுவார்களென. என் 'பொடி' வைத்த குறிப்பு அதைத் தடுத்திருக்குமெனில் அதற்காக வருந்துகிறேன்.

1/21/2006 12:52 AM  
Blogger SnackDragon said...

This comment has been removed by a blog administrator.

1/21/2006 12:55 AM  
Blogger SnackDragon said...

சுமூ, உங்கள் பின்னூட்டத்துக்கான பின்னணி தெரிந்தது. என் பின்னூடடம் அவசியமில்லை என்று பட்டதால் நீக்கியுள்ளேன். வாசித்திருந்தால் மன்னிக்கவும்.

1/21/2006 1:05 AM  
Blogger SnackDragon said...

நீக்கிய பின்னூட்டத்திலிருந்து ஒன்று மட்டும் குறிப்பிடத் தோன்றியது.
குட்டிரேவதியையும்,எஸ்ராவையும் விட்டுவிட்டு உண்மையில் "துப்பட்டா" விஷயத்தை அறிவுஜீவிகளகிய நாம் பேசுவது அவசியம் என்று படுகிறது.

1/21/2006 1:16 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

ச்றிகாந்த்,
உங்கள் நினைத்து எழுதினேனா என்று வசந்த் கேட்டதின் பேரிலேயே அதை எழுதவேண்டி வந்தது. குத்தலாக எழுதப்பட்டதல்ல. எல்லோருமே பல சந்தர்ப்பங்களில் அன்னப்பட்சி வேலை செய்யவேண்டியே உள்ளது. நடைமுறையில், குறிப்பாக வலைப்பதிவுலகில், கிடைப்பதை கடைசித்துளி வரைப் பருகி ருசிக்கும் சாத்தியமில்லை. எனக்கு பயந்து உங்கள் கருத்துச் சுதந்திரத்தை கைவிடத் தேவையில்லை.

கார்த்திக்,
நீங்கள் எழுதுவதைப் புரிந்துகொள்ளவில்லயோ? (இந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டு எழுதிய பதிவு பாதியில் நிற்கிறது. இந்த பின்னூட்டப் போரில் சிக்கிகொண்டதால் முடிக்கவில்லை. இரவு இட முயற்சிக்கிறேன்).

1/21/2006 1:21 AM  
Blogger PKS said...

Sundaramoorthy -

I have written clearly in Ramki blog that I am commenting only on Prabanchan's "new" view about S.Ra's writings once this disupte started. I have also quoted how Prabanchan used to quote S.Ra translated stories in his USA visit earlier. For those who could read and understand Tamil, I mentioned clearly that I have my views on Kutti Revathy Vs. S. Ramakrishnan dispute but I am not getting into it. However, since you repeatedly mention my name as the one who supports S.Ra, I have to suspect whether you have any motives to do so. :-). I dont plan writing a separate post about this dispute if thats what you are inducing me to do.

I have commented in Ramki blog in lighter vein about Prabanchan staging a walk-out and became all of a sudden a kolkai veerar. First of all, when a leader like Nallakannu (whom I considers the best political leader of TN now), is sitting on stage if he is walking out, its an insult to a leader like Nallakannu. Secondly, it is hard for me to believe that Prabanchan knew about it only on the stage. He could have refused attending the function rather than coming to the function and doing this. That would have been a better way. Thirldy, I dont agree with disrupting the meetings. I differ with Roza's view of comparing it with hosting black flags to Bush. You cannot get inside Rastrapathi Bhavan (say, for example, Bush visits there) and do your protest. You are entitled to a protest outside Rastrapathi Bhavan. Infact police may stop you many miles before Rastrapathi Bhavan. Similarly, If Kutti Revathi & her friends wanted to raise their protest, they could have done it outside the Uyirmmai meeting hall. No one has any right to get into a meeting orgainzed by someone else and disrupt it for their reasons.

Again please note that, Kutti Revathi and her friends went inside the uyirmmai function and disrupted it. Newspaper reports say that they waited outside Book Fair hoping S. Ra will visit Ananda Vikatan stall so that they can protest. So, what is this bias? If its uyirmmai function, you can get inside it and disturb. When it comes to Book Fair or A.V (who are bigger shots), you would stay outside the entrance and protest?

As a disclaimer again to people like you, Kutti Revathi is one of the poets that I like for her writings. I have repeatedly recorded it in Maraththadi, my essay and comments. In fact, I have shared many of her poems from her thokupu in Maraththadi earlier. So, please dont start something like, PKS is against Kutty Revathy :-)

Even from your writing, I filter what I have to filter and take what you were trying to say only. Thats what I try to do in all writings. If Ramki has written with "full of ellal and satire", I know how to filter it..

Should I take that you have your own "Nun-Arasiyal" in mentioning my name again and again as a supporter of S.Ra on this issue, when I wrote clearly as disclaimer that I am only criticising Prabanchan for suddenly getting into evaluating S.Ra's writings using this episode.

Roza: Sorry for using your blog to post this reply to Sundaramoorthy.

Thanks and regards, PK Sivakumar

1/21/2006 1:26 AM  
Blogger SnackDragon said...

சுமூ குழப்பத்துக்கான காரணம் புரிந்தது. நான் ராம்கியின் பதிவையும்,தெருத்தொண்டன் பதிவையும், அதன் பின்னூட்டங்களியும் வாசிக்கவில்லை. இன்னமும் வாசிக்கவில்லை. எனவே நீங்கள் சொல்லவந்த விதயம் புரியாமல் போய்விட்டது. மீண்டும் மன்னிக்கவும்.

1/21/2006 1:40 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

PKS,
Thanks for the long explanation. With this I rest my case and get back to work :-)

1/21/2006 2:15 AM  
Blogger PKS said...

Sundaramoorthy, Thanks. Have a nice weekend. Regards, PK Sivakumar

1/21/2006 3:07 AM  
Blogger நியோ / neo said...

>> தங்கர் பேசியது அப்பட்டமான நிலப்பிரபுத்துவ மதீப்பீடுகளை கொண்ட, பெண்களை கேவலப்படுத்தும் ஒரு வசை. எஸ்ரா விஷயத்தை அப்படி பார்க்கமுடியாது என்பதுதான் என் கருத்து. உங்களின் நுண் அரசியலுக்காக வேறுவிதமாய் இதை என்னால் முடிவு செய்ய முடியாது. >>

இது உங்கள் தர்க்க சுயமைதுனம் கொண்ட 'பாசிசப் பார்வை'!

>> '"பாப் மார்லியை குப்பைன்றான்யா" என்று சாரு நிவேதிதா இளையராஜாவின் மீது கோபப்பட்ட'தை பற்றியதல்ல நான் எழுதியது. அவ்வாறு *திரித்ததை* பற்றியது. >>

கருத்தியல் தளங்களில் உங்களைத் தவிர வேறு யாருக்கும் கோபம் வந்துவிடக் கூடாது என்கிற உங்கள் Megalomaniac குணம்தான் இதிலே தெரிகிறது.


>> மற்ற படி பெரியார் அண்ணா, சி ஐ ஏ என்றேல்லாம் நீங்கள் எழுதியுள்ளதிற்கும் இந்த பதிவிற்கும் என்ன தொடர்பு என்று என் சிற்றறிவிற்கு புலப்படவில்லை. >>


'பாம்பையும் பாப்பானையும் கண்டா பாம்பை விட்டுப்புட்டு பாப்பானை அடி' என்கிற வாக்கியத்தை வைத்துக்கொண்டு பெரியாரை அன்றும் (இன்றும் கூட) விமர்சிக்கும்(கிற) அறிவாளிகள் நிறைய உண்டு. பெரியார் ஆங்கிலேய எதிர்ப்பு (தேசிய விடுதல அரசியலை விட) ஆரிய எதிர்ப்பு அரசியல் செய்ததை - 'ஆங்கிலேய அடிவருடி', genocidist intention உடையவர், வன்முறையாளர் (ஒரு அடையாள பிள்லையார் சிலை உடைப்பை வைத்துக் கொண்டு) என்றெல்லாம் "கோஷ்டி கானம்" பாடியவர்களும் உண்டு.

1930-40 களில் பலர் பெரியாரையும் 'கலாசார பாசிஸ்ட்' என்றுதான் சொல்லியிருப்பார்கள்

அண்ணாவின் திராவிட அரசியல் வெற்றிகள் - தேசியவாதிகளால் வெகு அபாயகரமாகப் பார்க்கப்பட்டு அவரை 'போப்பின் கைக்கூலி', ' சி.ஐ,ஏ' ஏஜெண்டு என்றெல்லாம் கூட (அவருடைய அமேரிக்கப் பயணம், போப் சந்திப்புகளின் போது) பேசவைத்தன. "பிரிவினையை கைவிட்ட போதும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன" என்று அண்ணா பேசியதால் அப்படியொரு பிம்பம் உண்டாக்கப்பட்டது; பல 'அறிவாளிகளால்' நம்பவும் பட்டிருக்கக் கூடும்.

இதுபோல இயக்கங்களின் அரசியலை எதிர்ப்போர் - பழி சுமத்த ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கப்படக் கூடும்.

முட்டை, தக்காளி அடித்த உடனே - அய்யய்யோ "பாசிசம்" என்று கூச்சல் போடுவது - அதீதம், முட்டாள்தனம்.

எனக்கு தங்கர் விவகாரத்தில் தவிர - குஷ்பூ நடத்தப்பட்ட விதத்தில் உடன்பாடு இல்லை; ஆனால் அதீதமாக "கலாசாரப் பாசிசம்" என்பது ஏற்புடையது அல்ல.

>> பாமரனின் 'கட்டுடைத்தலைவி' என்ற படுகேவலமான கட்டுரையை படித்த பின்பு அவர் எழுதும் சொற்களை குப்பைகளாகத்தான் பார்கிறேன். >>

இது நீங்கள் செய்யும் சாராம்சபடுத்துதல்!!!


>> உங்களின் இரண்டாவது பின்னுட்டம், நான் சரியாக புரிந்துகொண்டேனென்றால் நான் சொல்ல வந்ததைதான் பேசுகிறது. தன் கட்டுரை எடிட் செய்யப்பட்ட காரணத்திற்காக மட்டும், பார்பனர்களின் கோவணம் என்றெல்லாம் மார்க்ஸ் பேசுவதைத்தான் ஒரு சாராம்சபடுத்துதல் என்கிறேன். எனக்கு சாராம்சபடுத்துவது அல்ல முக்கிய பிரச்சனை. அதை பின்நவீனத்துவம் என்ற பெயரில் முன்வைப்பதுதான் பிரச்சனை. >>

நான் உங்கள் பார்வையில் நீங்கள் சொல்வதையே அங்கு தெரிவதாகச் சொன்னேன்.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டும் மார்க்ஸின் கட்டுரை நீக்கப்பட்டு, தொடர்ந்து பிரசுரிக்க மறுக்கப்பட்டு வந்ததால் - அவர் மனுஷ்யபுத்திரன் மீது அந்த முடிவுக்கு வந்திருக்கலாம். அதில் நீங்கள் 'வார்த்தை விளையாட்டு' செய்கிறீர்கள்.

நான் குறிப்பிட்டது "மனுஷ்யபுத்திரன் முசுலீம் என்பதாலேயே அவரைத் தான் நம்பியதாக" மார்க்ஸ் சொல்லும் இடம். நீங்கள் குறிப்பிடுவது சரியான காரணமாகப் படவில்லை.

>> ஆனால் வாச்சாத்தி பெண்களுக்கும், முத்துலச்சுமிக்கும் பரிந்து வரும் அரசியலைத்தான் எதிர்ப்பு அரசியல் என்று சொல்கிறேன்.

அப்படி இல்லை என்ற தொனி எங்கே வந்தது என்பது உங்கள் 'நுண்ணரசியலுக்கே' வெளிச்சம். >>

இதோ கடைசிப் பகுதியை பாருங்கள்:

நீங்கள் குறிப்பிட்ட 'வாயு' பதிவில் உள்லது இந்த பொன்வாசகங்கள் :

>> திமுக ஜெயலலிதாவிடம் இரண்டு முறை தோற்றதற்கு பின்னால் எத்தனையோ காரணக்களும் நான் எதிர்க்கும் அரசியலும் இருந்தாலும், அவை மேற்சொன்ன கற்பு மதிப்பீட்டை தாண்டியே நிகழ்ந்துள்ளது.

பாலியல் புரட்சி நடந்த அமேரிக்காவில் ஒரு பெண் (அதாவது மனித 'ஒழுக்கம்' உடைய பெண்) அதிபராகக்கூட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

தமிழகம் அங்கே நடக்க சாத்தியமே இல்லாத புரட்சியை நிகழ்த்தியதில் எனக்கு நிச்சயம் பெருமை உண்டு. >>

இப்படிக் கழுத்தை அறுத்துவிட்டு மாலை சூட்டுகிற கண்மூடித்தனமான 'பெண்ணிய அரசியலுக்கு' சப்பைக்கட்டு வேறு!

இவ்வளவுதான் உங்கள் "அறிவுசீவித்தனமான எதிர்ப்பு அரசியல்" என்றால் அது நாசமாய்ப் போகட்டும்.

நீங்கள் பலரை வசவு செய்யப் பயன்படுத்தியிருக்கும் 'நாய்', 'லூசு', 'கேணத்தனமான', 'knee jerk reaction', கூமுட்டைத்தனமான , மண்ணுள்ளித்தனமான - என்ற எல்லா சொற்களுக்கும் தகுதி உடையது உங்களின் இந்தப் பார்வை.

இதுதான் 15 வருடங்களாக நீங்களும் உங்கள் ஆதர்சங்களும் செய்து வந்த எதிர்ப்பு அரசியலின் லட்சணம்.

பத்மினிகள், தருமபுரி மாணவிகள், தொடர்ந்து கற்பழிக்கப்பட்ட வாச்சாத்திப் பெண்கள் , கணவனுக்காக கொடூரமாகத் துன்புறுத்தப்பட்ட முத்துலச்சுமிகள் - எல்லோரும் வந்து உங்கள் போன்ற 'எதிர்ப்பு அரசியல்' பூசாரிகளிடம் வந்து வேப்பிலை, விபூதி, குங்குமம் வாங்கிக் கொண்டு தங்கள் பெண்ணிய இருப்பினை பெருமைப்படுத்திக்கொள்ளட்டும்.

கூடுதலாக "ஒரு குறிப்பிட்ட நிலப்பிரபுத்துவ எச்சிக்கலைநாய்களின் குரூரமான பசிக்கு" கொடியங்குளத்திலிருந்து, மேலூர் வரை உணவு சமைத்து போட்டதற்கும் சேர்த்துப் பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.

* தர்க்க சுயமைதுனம் கொண்ட 'பாசிசப் பார்வை'

* Megalomania

* ஒற்றைச் சாராம்சப் படுத்துதல் - பிறகு அதை 'கட்டமைவு கொண்ட தர்க்கமாக'ப் பம்மாத்து செய்தல்


எல்லாம் உங்களிடம் இருப்பது தெரியாமல் நீங்கள் பிறர் மீது சீறிப்பாய்கிறீர்கள்.

அடக்க முடியாத 'துர்வாயு'வினை எங்கள் முகத்தில் அடிக்காதீர்கள்; கழிப்பறைக்குச் செல்லுங்கள்.

1/21/2006 3:36 AM  
Blogger இளங்கோ-டிசே said...

//அ.ஆ.வுடம் நீங்கள் சொன்னதுபோல் பேசிய ஞாபகம் இல்லை. சந்தர்ப்பமும் பிடிபடவில்லை. எடுத்து காட்டினால் பேசலாம். //

Here you go Vasanth....

http://rozavasanth.blogspot.com/2004/12/blog-post.html#comments

என்னா இது குறி அறுப்பு வேலை? கொட்டைய நசுக்கிட்டா போறாது? எல்லாம் சரிதான். சூர்ப்பனகை முலையை அறுத்த லக்ஷ்மணனின்
சூனாவை என்னா பன்றது? இல்ல அப்பா சந்தேகித்த அம்மா தலையை வெட்டுன பரசுராமன் சூனாவைத்தான் என்னா பன்றது? அங்கைருந்து
ஆரம்பிச்சால்ல சரியாயிருக்கும்.

ஆமா, மன்மதன்ன்னு கேள்விப்படற கதையைக் கேட்டா சிம்பு -> ஐஸ்வர்யா -> தனுஸ் கதை மாறில்லா இருக்கு? ம்ம்ம்....

அனாதை.

By Anathai, at 12/07/2004 11:39 AM
//some unwanted parts are deleted...DJ//

அநாதை ஆனந்தனின் கருத்துக்கு நன்றி. சிம்புவை கண்டிக்க புராணகாலத்திற்கு செல்ல தேவையுள்ள நீங்கள் இது குறித்த புள்ளிவிவரங்களை தேடி செல்லலாம். உங்களுக்கு அது ரொம்பவே தெவைப்படும். எனக்கு சிம்புவின் ஆண்குறியை வெட்டுவது மட்டுமே இங்கே முக்கியம்-திசைதிருப்புவது அல்ல!

If it is off the track of this debate...Just leave it....When I wrote my comment at the first place, it came into my mind...That's all. Thankx.

1/21/2006 4:23 AM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீகாந்த், சுமு, பிகேஎஸ், கார்திக், டீஜே, அமைதிவழி அனைவருக்கும் நன்றி. நியோ எழுதியதை முன்வைத்து நண்பர் சுமுதான் சில பரிசீலனைகளுக்கு வரவேண்டும் என்பது என் கருத்து -அது அவர் விருப்பம் சார்ந்ததாயினும்.

டீஜேக்கு மட்டும் என் பதில். அன்புள்ள டீஜே, சுத்தமாய் புரியவில்லை. நான் சொல்லாத பலவற்றை எப்படி உங்களால் வாசிக்க முடிந்தது என்று. 'மன்மதன்' திரைப்படம் பற்றி பேசும்போது, அதனுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனது obsession பற்றி அனாதை பேசுகிறார் என்ற பொருளில்தான் பேசியிருக்கிறேனே ஒழிய, தொடக்கத்திலிருந்து ஒரு விஷயத்தை பற்றி பேசவேண்டுமா இல்லையா என்பதை பற்றி நான் எந்த கருத்தும் சொல்லவில்லை. நன்றி.

1/22/2006 7:28 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//நியோ எழுதியதை முன்வைத்து நண்பர் சுமுதான் சில பரிசீலனைகளுக்கு வரவேண்டும்//

வசந்த்,
ஒருமுறை நான் நியோவின் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதாலும், அவர் என்னை -யார் சேர்த்தும், அய்யா என்றும் விளிப்பதால் மட்டுமே உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றினால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை (உங்களோடு பல தருணங்களில் ஒத்துபோயும், சில தருணங்களில் மாறுபட்டும் இருக்கிறேனென்று சொல்வதைத் தவிர). மற்றபடி சிலரை தனிமைப்படுத்தி விசாரிக்கும் அவர் அணுகுமுறை என்னுடைய அணுகுமுறைக்கு மாறுபட்டது என்பதை அடிக்கோடிட வேண்டும்.

1/22/2006 10:49 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு, உங்களை நியோவுடன் ஒப்பிட்டு நான் எதுவும் சொல்லவில்லை.என்ன சொல்ல வந்தேன் என்று இப்போது விளக்கவும், இது குறித்து மேலே பேசவும் விரும்பாததால் அப்படியே நிறுத்துகொள்கிறேன். ஏதேனும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

1/22/2006 11:37 PM  
Blogger நியோ / neo said...

நான் சொல்ல விழைந்தவை :

1. எஸ்.ரா செய்தது (அவரே செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும்) விஷமத்தனமான குற்றமே.

'சின்ன ரூபவதி' என்பது போல்தான் - விமர்சனம் செய்ய நினத்திருந்தாலும் வைத்திருக்க வேண்டிய 'போலி' - நேரடியாக 'குட்டி ரேவதி' என்பதல்ல - அதுவும் 'துப்பட்டா'வைக் கையில் தூக்குவது என்பது - குட்டி ரேவத்யின் பிரபலக் கவிதைத் தொகுப்பின் மீதான் விக்கிரம் மிகுந்த காழ்ப்பான பார்வை போலத்தான் தொனிக்கிறது. எனவே இதில் வன்மம் மிகுந்த உள்நோக்கம் உள்ளது என முடிவு செய்ய வேண்டியுள்ளது.

2. தங்கருக்கு் உடனடி கோபத்தின் விளைவே அந்த தகாத வார்த்தை பேச்சுக்குக் காரணம்; அதற்கு முன்பு - அவர் பழமைவாதி என்று நம்புகிறாற் போல நடத்தைகளில் ஈடுபட்டதில்லை. ஆனால், கொள்கையில் முதிர்ச்சியற்றதன்மையும், அதீத உணர்ச்சிவசப்படும் தன்மையும் கொண்டவர் என்கிற விமர்சனத்தில் உண்மை உள்ளது.

எஸ்.ரா. விவகாரத்தில் - ஒருவேளை "உள்குத்து" ( என சில ஆங்கிலப் பின்னூட்ட 'அனானி' மேதைகள் சொல்வது போல) இருந்திருந்தாலும் எஸ்.ரா - இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஒருவேளை அவரே செய்திருந்தால் - அது தங்கரை விட இன்னும் கடுமையாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயம்.

3. திருமா/ராமதாசின் ஆதரவாளர்கள் - குஷ்பூ-சுகாசினி விவகாரத்தில் நடந்து கொண்டது 'கலாச்சாரப் பாசிசம்' என்பது அதீதம்; ஏற்புடையதல்ல் என்பது எனது நிலைப்பாடு.

ரோ.வ.வுக்கு மீண்டும் என் நன்றிகள்; அவர் புரிந்து கொண்டதற்கு - இவ்விவகாரத்தில் அவருக்கும் எனக்கும் இருக்கும் வேறுபாடுகள் - அவர் மீதான கோபத்தினால் அல்ல எனப் புரிந்து கொண்டதற்கு.

மற்ற 'radio static' பின்னூட்டங்களுக்கு இங்கு பதில் சொல்ல மாட்டேன். அவர்கள் யார் என்பது தெரிந்திருந்தாலும்.

1/23/2006 12:50 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter