ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, October 19, 2005

குஷ்புவும் சில அறிஞர்களும்!

அறிஞர் ரவி ஸ்ரினிவாஸ் டென்ஷனில் இருப்பது புரிகிறது. ஆத்திரத்துடன் எழுதிய அவர் பதிவில் பின்னுட்டம் இடப்போனால், அதற்கான கதவு மூடப்பட்டிருப்பது தெரிந்தது. அவர் இப்படி அறிஞர்த்தனமாய் பின்னூட்டக்கதவை அடைப்பார் என்று தெரியாததனால், சில காரணங்களால் எழுதியதை சேமிக்கவும் முடியாமல் தவித்து, பின் என் பதிவில் பின்னூட்டிவிட்டு சென்றேன். தன்னை விம்ர்சித்து இரண்டு பதிவுகள் வந்துவுடனேயே இத்தனை ஆத்திரமும் டென்ஷனும் ஒரு அறிஞருக்கு வந்து செருகிறது. ஆனால் குஷ்பு என்ற பெண்ணை எதிர்த்து தமிழகத்து தெருக்களில் போராட்டமும், நாட்டைவிட்டு வெளியேறச்சொல்லி கோஷமும்,'தற்கொலை செய்துகொண்டதாய்' வதந்தியும் வந்tha பின்பு அந்த பெண் அழுதபடி மன்னிப்பு கேட்டதை அருந்ததியுடனும், பெரியாருடனும் ஒப்பிட்டு விமர்சித்தவர் நம் அறிஞர். இவர் மீது குஷ்பு மீது நடந்தது போன்ற தாக்குதல் நிகழ்தால் எப்படி எதிர்கொள்வார் என்பதை அவரவர் கற்பனைக்கே விடுகிறேன். இனி ரவியின் பதிவில் நான் எழுத நினைத்த பின்னூட்டம் தொடர்கிறது.

அடேங்கப்பா! தமிழ் சினிமாவின் எந்த கோர்ட் சீனும் கிட்ட வரமுடியாது போல தெரிகிறது. 'நான் நிரபராதி', 'நான் அவன் அல்ல' என்பது போல் எத்தனை வசனங்கள்! இதற்கு பதில் நான் கேட்ட கேள்விகளுக்கு ஓரிரு வரிகளில் ஏதேனும் உருப்படியாய் மொட்டையாய் எழுதியிருந்தால் கூட எத்தனை அறிவுபூர்வமாய் இருந்திருக்கும்!

என்றாலும் என்னை 'அற்பன்' என்று சொன்னதற்கு மிகவும் நன்றி. உங்கள் கருத்துக்களை திரித்து உங்களை ஆணாதிக்கவாதி என்று தொடங்கி ஏகப்பட்ட வார்த்தைகளால் அர்சித்திருக்க என்னால் முடியும் என்றாலும், சந்தேகத்தின் பலனை அளித்து 'நட்டு மட்டும் கழண்டு விட்டதாக' சொன்னதை வசை என்று சொன்னவர்களுக்கு, நான் முன்வைத்த விமர்சனத்திகாக அற்பன் என்று சொல்வது எப்படி தெரியும் என்று என்னால் ஊகிக்க முடியாவிட்டாலும், என் பக்கம் கொஞ்சம் நியாயம் சேர்ப்பதற்கு நன்றி.

ஆனாலும் தப்பா நினைச்சுக்காதீங்க ரவி, நீங்க ரொம்ப வளர வேண்டியிருக்கிறது. ஒருவர் சொன்னதை மறுக்க, உமது 'சாதனைகளை பட்டியல்' இடுவதோ, அன்று அதை செய்தேன், இதுவரை இப்படி கிழித்தேன் என்று சொல்வது அல்ல மறுப்பு. சும்மா காக்காய் எச்சம் விடுவது போல் வாக்கியங்களை சகட்டு மேனிக்கு தொடர்பில்லாமல் அடுக்குவது அல்ல. பதில் நேரடியாக விஷயம் குறித்து இருக்க வேண்டும். உதாரணமாய் நீங்கள் இங்கே புலம்புவது போல் என்னிடமோ, சிவக்குமாரிடமோ நீங்கள் கேள்வி எதுவும் கேட்கவில்லை. மேலும் அவர் சொல்வதும் நான் சொல்வதும் ஒன்று அல்ல. நீர்தான் அதை கூட்டணி என்று திரிக்கிறீர். நீங்கள் கேட்ட பத்து பைசா பெறாத கேள்விகள் மாலனிடமும், வாசுகி, சரஸ்வதியிடமும்தான் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் கூட அதற்கு நான் பதிஉல் சொல்லியுல்ளேன். நான் உங்கள் மீது வைத்த விமர்சனம் எளிமையானது. குஷ்பு மீதான தாக்குதலை நியாப்படுத்துகிரீர்கள். எப்படி என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். உங்கள் பதிவிலிருந்து மேற்கோள் காட்டியபின் உங்களுக்கு ஆதரவாய் வந்த பெயரிலியும் சுமுவும், கார்திக்கும் கூட பதில் சொல்ல முடியவில்லை. குஷ்பு மீதானா தாக்குதலுக்கு தங்கர் மீது நடந்த விசாரணைதான் காரணம் என்று சொல்லுவது, குஷ்பு மீதானா தாக்குதலை நியாயபடுத்துவது என்று அல்லாமல் வேறு என்ன?

உங்களுக்கு மிகவும் நெருங்கிய அன்புக்குரிய(அற்பமாய் கோபப்படுவதில் அர்த்தமில்லை. எல்லாவற்ரையும் தன் நிலையில் வைத்து பார்க்கும் போதுதான் சில நியாயங்கள் சிலருக்கு புரியக்கூடும், அதனால் சொல்கிறேன்) பெண் ஒருவரை, மேலதிகாரி வேலைக்கான சம்பளத்தை கேட்டதற்காக 'விபச்சாரி' என்று திட்டுகிறார். அதை இப்போது தங்கருக்கு நீங்கள் அளிக்கும் சலுகையை போல் அந்த அதிகாரியின் தனிப்பட்ட கருத்தாய் பார்ப்பீர்களா? இல்லை நடிகையை பற்றி மட்டும் அப்படி சொல்வது ஒரு தனிப்பட்ட கருத்து, அதை சொல்ல ஒருவருக்கு உரிமை உண்டு என்று நீங்கள் நினைத்தால் அதற்கான மார்க்சிய விளக்கத்தை தர இயலுமா? அந்த மேலதிகாரி மேல் விசாரணை அது இதென்று நீங்கள் ஆட்டம் ஆடிய பின், சில மாதம் கழித்து உங்களின் அன்புக்குரிய பெண் ஈபிடபிள்யூவில் பாலியல் குறித்து ஒரு கட்டுரை எழுத, அதை தனது அரசியல் பலம் கொண்டு பெரிதாக்கி, அவரை பற்றி தெரிவெங்கும் ஆபாச போஸ்டர் அடிக்க படுகிறது. செருப்பு விளக்கமார் சகிதம் ஊரை விட்டு ஒடிப்போ என்று தெருவில் தர்ணா நடக்கிறது. பத்திரிகைகளில் ஆபாசமாய் திட்டப் பட்டு, ஆதரிக்க ஆளேயில்லை என்று ஒரு நிலைவருகிறது. அம்மணியின் தொழிலும் பாதிக்க கூடும் என்று அஞ்சி மன்னிப்பு கேட்கிறார். அப்போதும் முதலில் நடந்த ச்ம்பவத்திற்கான எதிர்வினைதான் இது என்று கூசாமல் சொல்வீர்களா? மன்னிப்பு கேட்ட உறுதியின்மை குறித்து பேசுவீர்களா? இல்லை இந்த உதாரணம் குஷ்பு உதாரணத்திலிருந்து எப்படி வேறுபடுகிரது என்று விளக்க முடியுமா?நான் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமல் இப்படி தயா தக்கா என்று குதிக்கவும், குதித்துவிட்டு மனசட்சியே இல்லாமல் அறிவுவிவாதம் பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?

நான் உங்கள் கருத்துக்களை ஆரம்ப காலத்திலிருந்து விமர்சித்திருக்கிறேன். பலமுறை ஒரே அரசியல் தளத்தில் இருப்பதால் மௌனமாய் இருந்ததும், அதரவு அளித்ததும் உண்மை. ஆனாலும் பலமுறை உங்கள் பார்வைக்கும் ஜெயமோகனின் பார்வைக்கும் வித்தியாசம் இல்லாமல் இருப்பதையும் சொல்லியிருக்கிறேன். இப்போது எந்த தனிப்பட்ட விரொதமும் கிடையாது. ஒரு பெண்மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதால் வந்த கோபம் மட்டுமே உண்டு. எஸ்.வி. ராஜதுரை ஞாநி, ராஜன்குறை, அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் என்று அனைவரும் இதை கண்டித்து குஷ்புவிற்கு பரிந்தே பேசியுள்ளனர். நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்காததால் வந்த கோபத்தை தவிர எனக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.

இல்லை குஷ்பு மீதான தாக்குதலை கண்டித்துதான் அந்த பதிவை எழுதினீர்கள் என்றால் அதை கூசாமல் சொல்லி பாருங்கள்."அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும். " என்று சொல்வதும், குஷ்புவிற்கு தாலி சென்டிமெண்ட் படங்களில் நடித்ததால் பாலியல் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்றும், அவர் மன்னிப்பு கேட்டதை ஒரு தாக்குதல் நடக்கும்போது குற்ரம் சொல்வதும் நியாயப்படுத்துதல் இல்லை என்ம்றால எப்படி என்று சொல்லி மறுக்க முடியுமா? சும்மா மொட்டையாக 'நான் நியாயப்படுத்தவில்லை' என்றால் அது பதில் ஆகாது. நான் கேட்ட விஷய்ங்கள் இப்படியிருக்க அதை சிவக்குமார் எழுதியதுடன் சேர்த்து காக்க்காய் எச்ச்ங்களாய் போட்டு செல்வதில் என்ன அர்த்தம்?

நீங்கள்தான் சிவக்குமாருடன் பலமுறை குலாவினீர்கள் என்பதும், நான் தொடர்ந்து அவரை எதிர்த்து வருவதையும். இந்த விவகாரத்தில் கூட அவரை ஆதரிக்கவில்லை (அதே நேரம் காரணமில்லாமல் எதிர்க்கவும் முடியாது) மாறாக விம்ர்சனத்துடனேயே எழுதியிருக்கிறேன் என்பதும் மற்றவ்ருக்கு மட்டுமில்லாமல் உமக்கும் புரியும். அப்படியிருக்க நான் கூட்டணி வைத்ததாய் கூசாமால் திரிக்கிறீர்களே, எப்படி அய்யா அறிவார்ந்த விவாதம் சாத்தியமாகும்?

மற்ரவ்ர்களை மீண்டும் மீண்டும் வாய்கிழிய குஷ்பு எழுதியது குறித்து கருத்து சொல்ல கேட்பவர் இன்னமும் குஷ்பு மீது தனக்கு இருக்கும் கடுமையான விமர்ச்யனம் குறித்து வாயையே திறக்கவில்லை. ரவி பதிலளித்துள்ளது போல் திருமா ராமதசின் ஆதரவாளராக அவரை நான் சொல்லவில்லை. கார்திக், பெயரிலி, சுமு நினைத்திருப்பதை போல அவர் அதரவாளர் இல்லை என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். ரவி உண்மையிலேயே குஷ்பு சொன்னதற்கு எதிராக இருப்பதாலும், சினிமாவில் சிகெரெட் குடிப்பதை தடை செய்வதை ஆதரிப்பதாலுமே அவர் திருமா, ராமதாஸ் அதரவு நிலையை எடுக்கிறாரே ஒழிய, எனக்கு இருப்பது போன்ர ஒரு அபிமானம் கூட அவருக்கு கிடையாது என்றுதான் நான் சொன்னேன்.

நான் பதில் சொன்னால் அது மிக நேரடியாக எதிராளியின் ஒவ்வொரு தர்க்கத்தையும் எத்ர்கொண்டு, குறிப்பாய் சங்கடம் தரும் கேள்விகளை எதிர்கொண்டு இருக்கும். உங்கள் பதிவிற்கு பதிலளிக்கும் அளவிற்கு அதில் சத்து எதுவுமே இல்லாவிட்டாலும்,. வேறு காரணக்களுக்காக பதில் எழுதுவேன். இப்போது இவ்வளவுதான் முடியும்.

பின் குறிப்பு: நான் தமிழ்மணம் பதிவுகளை மிக வழமையாய் படிப்பதில்லை. சில பதிவுகள் நீக்கப்பட்டத்தை அறிகிறேன். அது எனக்கு ஒப்புதலில்லை என்பது மட்டுமில்லாமல் அதை நான் எதிர்கிறேன். இப்போது சொல்லப்பட்ட ஒரு காரணத்தை சொல்லியே நாளை என்னையும் தடை செய்ய முடியும் என்பது மட்டும் என் எதிர்பிற்கு காரணமில்லை. காசி கருத்துக்களை செவிமடுப்பாரா என்ரூ தெரியவில்லை. இந்த காரணத்தினால் மட்டும் தமிழ்மனத்திலிருந்து ஒரு எதிர்பாய் விலகும் முடிவை என்னால் எடுக்க முடியவில்லை. வழக்கம் போல் சீரான இணய வசதி வரும்போது என் கருத்துக்களையும், முடிவுகளையும் எழுதுவேன்.

Post a Comment

70 Comments:

Blogger Alex Pandian said...

http://www.tamilmurasu.in/2005/oct/18/3.pdf

10/19/2005 6:43 PM  
Blogger ROSAVASANTH said...

அலெக்ஸ் சுட்டிக்கு நன்றி. வாசந்தியை விட மோசமாக தம்ழ் ஆண்களை பற்றி கருத்து சொல்லவிருக்கிறேன். தமிழ்பெண்களின் கற்பை பற்றியும் குஷ்புவைவிட இன்னும் தீவிர்மாய் கேள்விக்கு உட்படுத்த இருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட செய்தியில் உள்ள ஆண்களுக்கு அதை தெரிவிக்கும் வழி இருந்தால் சொல்லவும். நன்றி.

10/19/2005 7:01 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I did not remove the facility to post comments. In fact one of my posts disappeared after few hours and I posted it again. There are some problems in blogger for which i am not responsible.

10/19/2005 7:23 PM  
Blogger ROSAVASANTH said...

Ravi, I am not sure what you did, and what you didn't do. There was no error message or 'not able to post your comment' message. It specifically said 'comments restricted only to team members'. I thought, unless you made the required changes in the settings, comments can not be restericted to 'team members'. May be I was wrong. If so, sorry about that.

10/19/2005 7:30 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

அறிஞர் ரவி ஸ்ரினிவாஸ் டென்ஷனில் இருப்பது புரிகிறது. ஆத்திரத்துடன் எழுதிய அவர் பதிவில் பின்னுட்டம் இடப்போனால், அதற்கான கதவு மூடப்பட்டிருப்பது தெரிந்தது. அவர் இப்படி அறிஞர்த்தனமாய் பின்னூட்டக்கதவை அடைப்பார் என்று தெரியாததனால், சில காரணங்களால் எழுதியதை சேமிக்கவும் முடியாமல் தவித்து, பின் என் பதிவில் பின்னூட்டிவிட்டு சென்றேன். தன்னை விம்ர்சித்து இரண்டு பதிவுகள் வந்துவுடனேயே இத்தனை ஆத்திரமும் டென்ஷனும் ஒரு அறிஞருக்கு வந்து செருகிறது

i just tested and was able to post a comment. I did not remove the
facility to post comments.I have
not done so in the past. You did
not even want to assume that it could be due to some problem in
blogger and had written as if i had
wantonly removed the facility. you
could have tested whether were you able to post in any other post
in my blog. I am not surprised by
what you have written.

தன்னை விம்ர்சித்து இரண்டு பதிவுகள் வந்துவுடனேயே இத்தனை ஆத்திரமும் டென்ஷனும் ஒரு அறிஞருக்கு வந்து செருகிறது
Rosa should check the facts before writing like this. People have
critiised me in the past in my
blog. Those comments are still there.Sundaramoorthy criticised my
post on the verdict of Supreme
Court. There are there and they
will be there. You should know
one thing - i am always for a healthy
debate.

10/19/2005 7:37 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

குஷ்புவின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி இல்லை, அவர் தாராளமாக கூறலாம். அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும். ஏதோ குஷ்பு முற்போக்கானவர்கள், அவரை எதிர்ப்பவர்கள் பிற்போக்கனாவர்கள் என்று இதை குறுக்க முடியாது. அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பிறர் சொற்களை தங்களுடைய அரசியல் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். திரைப்படத்துறையும் கற்பு, தாலி சென்டிமென்ட் உட்பட பலவற்றை வைத்து வணிகம் செய்யும் ஒன்றுதான். இன்றைக்கு பக்தி படத்தில் இறை அடியாராக நடிப்பதும், நாளைக்கு நாத்திகராகப் நடிப்பதும் நடிப்புத் தொழிலில் சகஜம். குஷ்பு என்ன நான் நடிக்கும் படங்களில் முற்போக்கான கருத்துக்களை மட்டுமே முன்னிறுத்தி நடிப்பேன் என்று லட்சியம் கொண்ட நடிகையா, இல்லையே. இப்போது ஏதோ சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். இவை விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள்தானெ. இப்படி இருக்கும் போது குஷ்புவை விமர்சன பூர்வமாக அணுகுவதே சரியானதாக இருக்க முடியும், இதே அணுகு முறையைத்தான் திருமாவளவன், ராமதாஸ் கூறும் கருத்துக்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும். திருமாவளவன், ராமதாஸ் - இவர்களைப் பிடிக்காதவர்களுக்கு குஷ்பு கூறியது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதை வைத்து சில முறை அவர்களை திட்டலாம்.அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதற்கு மேல்...

குஷ்பு கூறிய கருத்து சில நம்பிக்கைகளை, விழுமியங்களை கேள்விக்குள்ளாகுவது போல் தோன்றினாலும் பலருக்கு அதிர்ச்சி தருபவை என்பதைத் தவிர அவற்றில் வேறு என்ன இருக்கிறது. குஷ்பு தனக்குத் தோன்றியதைக் கூறியிருக்கிறார். எதிர்ப்பு எழுந்த உடன் மன்னிப்புக் கேட்டுகொண்டார். இவை என் கருத்துக்கள், நம்பிக்கைகள் இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கருத்து மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறவில்லையே. சமூகத்தின் எத்தனையோ நம்பிக்கைகளை கேள்விகுட்படுத்திய பெரியாரும், அம்பேதகரும் தம் கருத்தில் உறுதியாக நின்றவர்கள். நீதிமன்ற அவமதிப்பு வருமானால் அதைச் சந்திக்க்த் தயார் என்று கூறி அதில் உறுதியாக நின்றவர் அருந்ததி ராய். ஆனால் சிறு எதிர்ப்பு எழுந்த உடன் மன்னிப்புக் கேட்ட குஷ்பு வேறொரு சந்தர்ப்பத்தில் கற்பு நெறியே தமிழ்ப் பண்பாட்டின் ஆதாரம் என்று கூறினால் வியப்படைய ஒன்றுமில்லை. இப்போதும் கூட அவர் தாலி, வகிட்டில் குங்குமம் போன்றவற்றை நிராகரிப்பவர் அல்லவே. அப்ப்டி இருக்கும் போது பாலியல் உறவுகள் குறித்த சில வாக்கியங்களை மட்டுமே முன்னிறுத்தி அவரை ஒரு பெண்ணிய புரட்சிவாதியாக சித்தரிக்க முடியுமா என்ன.

இதில் நான் எதை நியாயப்படுத்தியிருக்கிறேன் என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். மிகத் தெளிவாக "அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பிறர் சொற்களை தங்களுடைய அரசியல் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் " என்றுதானே எழுதியிருக்கிறேன். குஷ்புவிற்கு விமர்சனமற்ற ஆதரவுத் தரத்தேவையில்லை என்பதைக் கூறியிருக்கிறேன்.
இவை விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள்தானெ. இப்படி இருக்கும் போது குஷ்புவை விமர்சன பூர்வமாக அணுகுவதே சரியானதாக இருக்க முடியும், இதே அணுகு முறையைத்தான் திருமாவளவன், ராமதாஸ் கூறும் கருத்துக்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும் - இவ்வாறு எழுதுவது எப்படி ராமதாஸ், திருமாவளவன் செயல்களை நான் ஆதரிப்பதாக அர்த்தமாகும்.

10/19/2005 7:54 PM  
Blogger ROSAVASANTH said...

Ravi,

It was not a problem of 'not able to post a comment'. As I said earlier it said 'comments restericted only to team members'. With my understanding this can happen only when you do the required changes in the settings, and block others comments. So I assumed like that. I have already accepted that my assumption can be wrong and said sorry. If you wish I can say another sorry. Eventhough I don't unederstand why I could not post my comments, I just take your word, accept what you say, and say sorry again. If you want to cry again that how I can allge you like that, and write some more rubish arguments, please go on.

What SM wrote is a difference of opinion. What I wrote is condeming you for justifying a fascist attack. You have the freedom to think if I condemn that is not healthy. But there is simple logical question(there are so many, this is just one among them). You think what Thankar says about actress is a personal opinion, and he has the right to express that. But why do you think what I wrote is is not a 'healthy opinion' atleast?

Finally pl remember my questions are simple. At present it doesn't involve periyar, torch light, ashish nandy etc. it invloves only your statements, which I claim to be justfying the attack on kushpu. Please just deny that with reasoning.

10/19/2005 8:00 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஒரு பெண்மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதால் வந்த கோபம் மட்டுமே உண்டு. எஸ்.வி. ராஜதுரை ஞாநி, ராஜன்குறை, அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் என்று அனைவரும் இதை கண்டித்து குஷ்புவிற்கு பரிந்தே பேசியுள்ளனர்

அந்தத் தாக்குதலை நான் நியாயப்படுத்தியதில்லை. அதே சமயம் குஷ்பு கூறியதை விமர்சன பூர்வமாக அணுக வேண்டும் என்றும், ராமதாஸ், திருமாவளவன் கூறியிருப்பதையும் அவ்வாறே அணுக
வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறேன். உங்கள் அகராதியில் நியாயப்படுத்தல் என்பதன் பொருள் வேறு போலும்.

ஒரு பெண்மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதால் வந்த கோபம் மட்டுமே உண்டு. எஸ்.வி. ராஜதுரை ஞாநி, ராஜன்குறை, அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் என்று அனைவரும் இதை கண்டித்து குஷ்புவிற்கு பரிந்தே பேசியுள்ளனர்


தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் நான் யார் யார் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை ஒரளவே அறிய முடியும். நீங்கள் குறிப்பிடுபவர்கள் குஷ்புவிற்கு பரிந்து பேசியிருப்பது அவர்கள் கருத்து.
எல்லா விஷயங்களில் எல்லோருடனும் கருத்து ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது தேவையில்லாதது.

10/19/2005 8:08 PM  
Blogger ROSAVASANTH said...

While I was writing the earlier comment Ravi has posted his next comment.

ayya Ravi, can you read and write Tamil. I have clearly said how you justify the attack. what is the use of writing again the same pallavi, 'NAn niraprAthi'. You say what Thangar's abuse is a personal opinion, say that if some has the right to oppose that then one has the same right to oppose kushpu. You simplify the attck on her, in the road, in posters , as rumour, everything as a 'chru ethiorppu'. After I point out all these things you sing the same pllavi, and talk about healthy debate. I can debate with a person with some defect in brain, but not with someone without brain.

10/19/2005 8:11 PM  
Blogger ROSAVASANTH said...

again ravi wrote while I was writing.

//தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் நான் யார் யார் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை ஒரளவே அறிய முடியும். நீங்கள் குறிப்பிடுபவர்கள் குஷ்புவிற்கு பரிந்து பேசியிருப்பது அவர்கள் கருத்து.
எல்லா விஷயங்களில் எல்லோருடனும் கருத்து ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது தேவையில்லாதது.//

aahaa, what a way of reading! I never said Ravi should agree completely with all the people I mentioned, and neither do I. I only said what disppointed me, and what made me angry. In any case I have clearly pointed out what is the main issue, and how Ravi justified the attack, and what is my criticism. There is no point talking about other things, and wasting time.

10/19/2005 8:18 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

10/19/2005 8:28 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Rosa You can go on repeating the same lie any no. of times, perhaps all your life. I dont care about it, nor am interested in having a debate with you on this.

10/19/2005 8:31 PM  
Blogger ROSAVASANTH said...

thanks ravi. You say I lie, but won't point out what is that. You say I repeat a lie, and won't point out where it is. I pose a very simple question, you will answer some different questions (which you raise youself) and answer that. Then you talk about healthy debate. Finally you will say you won't have a debate with me and continue to write so many comments, reply as a separate post in your blog.

I also inform you I never intend to have a debate with you. Neither I have anything against you pesonally also. All I am concerned is my tamil community attacking a women with fascist discourses. I condemned you on the way. Thats all! Remember you still haven't replied my allegation (with a valid reasoning). In any case ego may stop you from accepting few things. But if there is a slight change in your point of view, I don't need anything more than that.

10/19/2005 8:43 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும்

இதில் எங்கு குஷ்பு என்ற நபர் மீதான தாக்குதல் நியாயமானது என்று கூறப்பட்டுள்ளது. அவர் கூறியதை சிலர் எதிர்ப்பது என்பது அவர் மீதான தாக்குதல் என்பதாக எப்படி பொருள் கொள்ள முடியும்.

10/19/2005 8:49 PM  
Blogger PKS said...

ரோசா,

ரவிக்கு நீங்கள் எழுதியுள்ள இந்தப் பதிலில் ஓரே ஒரு சின்ன நெருடலைத் தவிர எனக்குப் பிரச்னை பெரிதாக இல்லை. ரவி போன்றவர்கள் முன்னால் எப்படி எழுதினார்கள், இப்போது எப்படிப் பேசுகிறார்கள் என்பதையெல்லாம் உங்களைப் போல Studious ஆக எடுத்துப் போட்டு அவரிடம் பேசுகிற சிரத்தையோ, ஆர்வமோ எனக்கு இல்லை. தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறவரிடம் இதையெல்லாம் எடுத்துப் போடுவதில் பிரயோசனமில்லை என்பது என் சோம்பேறித்தனத்துக்கு நான் சொல்லிக் கொள்கிற காரணம் என்றாலும், நீங்கள் இப்படி எடுத்துப் போட்டு விரிவாக எழுதுவது குறித்து எனக்குப் பிரச்னையுமில்லை. உங்களுக்கும் எனக்குமான கருத்து வேறுபாடுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஏதோ ஒரு பிரச்னையில் எல்லாரும் ஒத்த கருத்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையை அறியாமல், ஒத்த கருத்தை எழுதியவுடன் அதைக் கூட்டணி என்றும் சந்தர்ப்பவாதம் என்றும் திரிக்கிற சிந்திக்கத் தெரியாதவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கம்யூனிஸ்ட்டுகளை அப்படி எதிர்த்து எழுதிய பெரியார்தான், கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சொல்லப்போனால், அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்த அல்லது குரல் கொடுத்த ஒரே ஆள் பெரியார்தான். நல்லவேளை, பெரியார் காலத்தில் அதை நல்லபடியாகப் பார்க்கிற சிந்தனை மக்களுக்கு இருந்தது. இதெல்லாம் தெரிந்தால், பெரியாரைக் கூட சந்தர்ப்பவாதி என்று சிலர் இப்போது எழுதக் கூடும். :-) இவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. தனிமனித விருப்பு வெறுப்புகளில் சிக்குண்டுபோய், ஒருவரின் கருத்தை எதிர்ப்பது அந்த ஆளை வெறுப்பது என்ற அளவில் இவர்களிடம் திரிந்து போயிருக்கிறது. (என் விஷயத்தில் இதே மனோபாவம் உங்களிடமும் உண்டு. அதுபற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை.) பெரியாரிடமிருந்து கொள்கையை மட்டுமில்லை, தனிமனித மேன்மைகளைக் கூட இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்று விட்டுவிட வேண்டியதுதான்.

சரி, எனக்கு நெருடல் என்று சொன்னேனே, அதற்கு வருகிறேன். ரவி ஸ்ரீனிவாஸ் என்னுடன் கொஞ்சிக் குலாவ எல்லாம் இல்லை. இப்படி நீங்கள் எழுதியது சற்று அதிகம் என்றே நினைக்கிறேன். அவர்தான் உங்களையும் என்னையும் சேர்த்து உளறுகிறார் என்றால் நீங்களுமா? ரவிக்கு வலைப்பதிவில் எழுத்துருக்கள் தெரியாதபோது, நான் என்னால் இயன்ற சிறு உதவி செய்தேன். அவ்வளவுதான். உங்களுக்கு மேகிண்டாஷ் பற்றி ஸ்ரீகாந்த் மீனாட்சிக்குத் தெரியும் என்று சொன்னேனே. அதுபோல. இப்படிப்பட்ட உதவியை என்னாலியன்றால் எல்லாருக்கும் நான் செய்ய முயல்வேன்.

மற்றபடிக்கு - கருத்து வேறுபாடுகளை மீறி அனைவருடனும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த விதத்திலே, ரவி, நீங்கள் அல்லது இன்னும் வேறுயார் என்றாலும் எல்லாரும் எனக்கு ஒன்றுதான். மோசமாக எதிர்த்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளே நேரில் சந்திக்கும்போதும் பொதுவாழ்க்கையிலும் சகஜமாக பழகுகிறார்கள் என்னும்போது, கருத்து மோதல்கள் மட்டுமே உள்ள மற்றவர்கள் ஏன் அப்படிப் பழகக் கூடாது என்பது என் எண்ணம். எனவே, ரவி என்னுடன் கொஞ்சிக் குலவ எல்லாம் இல்லை. அவர் நட்புரீதியில் எழுதிய சில மடல்களுக்கு அதே ரீதியில் பதில் சொல்லியிருக்கிறேன். சுனாமி பற்றிய கூட்டுப்பதிவை ஆரம்பித்துவிட்டு, நீங்கள் எழுதியபோதும், உங்களுக்கும் அதே மாதிரி பதில் தந்தேனே.

ரவியின் பிரச்னை - யாரிடமும் கொஞ்சிக் குலவுவது அல்ல. அப்படிக் கொஞ்சிக் குலவினாலாவது, அடுத்தவன் நியாயத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும் புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். :-) அவர் பிரச்னை, தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும். மற்றவர்கள் எழுதுவது எல்லாம் முழுமையில்லை அல்லது தவறு என்று நினைத்துக் கொண்டிருப்பது. ஆனால், அதற்காக, அவர் என்னிடம் சமரசம் செய்து கொண்டார் என்று சொல்வது சரியில்லை. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு ரவி இனிய நண்பர். அவர்மீது சமரசம் செய்து கொண்டார், கொஞ்சிக் குலவினார் என்று சொல்வது எனக்கு உடன்பாடில்லை - அவர் அப்படி உளறினாலும். அப்புறம் அவருக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

ரவியை மட்டுமில்லை, உங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், அல்லது வேறு எவரைச் சந்திக்க நேர்ந்தாலும் கொள்கைகளைத் தள்ளிவைத்துவிட்டு, மனிதமும் நட்பும் பாராட்டுகிற மனிதனாக இருக்கவே நான் முயல்வேன். என்னை அறிந்தவர் இதை அறிவர்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

10/19/2005 8:56 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

A typical reply from PKS, what a hypocrite, what a sermonising
piece. When i republished what i wrote about periyar two years ago
i had made it clear that i had
taken a critical view of periyar's
ideas earlier also and thereby
proved what you wrote was a bluff.why there is no response from
you on that.

அவர் பிரச்னை, தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும். மற்றவர்கள் எழுதுவது எல்லாம் முழுமையில்லை அல்லது தவறு என்று நினைத்துக் கொண்டிருப்பது.

i do criticise others views and ideas and i am open for criticism. but everyone knows how you have responded to criticisms.

10/19/2005 9:46 PM  
Blogger PKS said...

Ravi, I guess you are too upset. I already told manytimes in my earlier conversations that if one does not reply, that does not mean one does not have answer :-) Somehow an "intellectual" like you, do not know this.

Anyway, I will let you to reply to Roza now. If you keep on saying that I have no answer, I may come back to you at a later time. Dont want to use Roza's blog for that purpose. Also, quoting your own words, I also dont enjoy picking holes in others arguments. However, If I have to reply, I may come back to you at a later time, through my blog.

Thanks and regards, PK Sivakumar

10/19/2005 9:54 PM  
Blogger Vaa.Manikandan said...

elee kalakureeha!
nadakkattum...nadakkattum

10/19/2005 10:28 PM  
Blogger ROSAVASANTH said...

வேறு வழியில்லாமல் வெளியே ஆஃபிஸை விட்டு வெளியே வந்து அடிகிறேன். சத்திய்மாய் இப்படி ஒரு அபத்தமான விவாதத்தில் என் வாழ்க்கையில் இறங்கியதில்லை. இன்னும் ஏன் பதில் சொல்லிகொண்டிருக்கிறேன் என்பதற்கு எனக்கு பதில் தெரியாவிட்டாலும், ஒரு விஷயத்தில் புகுந்துவிட்டால் கடைசி வரை பார்த்துவிடுவது என்ற என் குணமாக இதை எடுத்து ஆறுதல் அடைகிறேன்.

அறிஞர் ரவி கேட்கிறார். //அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும்

இதில் எங்கு குஷ்பு என்ற நபர் மீதான தாக்குதல் நியாயமானது என்று கூறப்பட்டுள்ளது//

ரவிக்கு நேரடியாய் சொன்னால் புரியாதோ என்றுதான் ஒரு உதாரணமும் தந்து இத்தனை முறை எழுதியிருக்கிறேன். தங்கர் சொன்னதும் குஷ்பு எழுதியதும் எப்படி அய்யா ஒன்றாக ஆகும்? உங்கள் அறிவுக்கு எட்டவில்லை எனில் சொல்கிறேன். ஒரு குறிப்பிட்ட நபரை -அது யாராயிருந்தாலும், நடிகையானலும் யார் வீட்டு பெண்ணாயிருந்தாலும்- அவரை 'விபச்சாரி' என்று சொல்வது ஒரு வசை. காலம் காலமாக ஆணாதிக்க சமுதாயம் ஏற்படுத்திய வார்த்தை. அதன் மதிப்பீடுகளை பயன்படுத்தி தன் ஆத்திரத்தை தீர்த்துகொள்ளும் ஒரு வசை. அதுவும் தன் ஷூட்டிங்கில் நேர்ந்த இடைஞ்சலுக்கும், கூலி கேட்டதற்கும் அதை சொன்னது ஒரு ஆண்டை மனோபாவம். இதை விளக்க ஃபூக்கோ தேவையில்லை. காமன் சென்ஸ் போதும். அந்த வசையால் பாதிக்கப் பட்டவர் குஷ்பு. அந்த வசை அவரையும் குறிக்கிறது. இதுவரை நடிகைகள் பற்றிய வசை எதற்கும் நியாயம் கேட்க முடியாதவர்கள் இந்த முறை நியாயம் கேட்டார்கள். அது அதிகப்படியா குறைவானதா எனப்து எதை வைத்து நிரணயிப்பது. ஒருவேளை உங்களை நோக்கி அந்த வசை(எதாவது ஒரு வடிவத்தில்) வரும்போது எப்படி உணர்வீர்கள் என்பதை வைத்து ஒருவேளை உணரமுயற்ச்சிக்கலாம்.

மாறாக குஷ்பு சொன்னது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பாலியல் குறித்த கருத்து. அதை சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்று ரவியும்(ஆனால் அது கிண்டல் என்று தெளிவாக தெரியும் ஒரு மொழியில்) சொல்கிரார். குஷ்பு சொன்னது போன்ர கருத்தை இதுவரை எத்தனையோ பேர்கள் சொல்லியிருக்கிறார்கள். பெரியாரும் சொல்லியிருக்கிரார்(உடனே காக்காய் எச்சம் போட தயராக வேண்டாம், குஷ்பு பெரியாரால் உந்தப்பட்டு சொன்னதாய் யாரும் சொல்லவில்லை. குஷ்புவிற்கும் பெரியாரிசத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. குஷ்பு கற்பு என்ற கருத்த்க்கத்தை நிராகரித்து சொல்லியிப்பது போல் பெரியாரும் சொல்லியிருக்கிறார். ஒருவேளை குஷ்பு தமிழ் பெண்களை கேவலப்படுத்தியதாக சிலருக்கு தோன்றினால் பெரியார் அதைவிட கேவலப்படுத்தியிருக்கிறார் என்று கொள்ல வேண்டும். . அவ்வளவுதான்). குச்புவின் கருத்து யாரை பற்றிய வசையும் அல்ல. 'எத்தனை பெண்கள் திருமணத்திற்கு முன்பு உறவு கொள்ளாமல் இருக்கிரார்கள்?' என்று கேட்பதும் யாரை பற்றிய வசையும் அல்ல . (பெரியார் 'தப்பா எடுத்துக்க கூடாது, ஒரு காலத்துல நம்ம பொம்பளைங்களுக்கு பாப்பான் கூட படுத்தா புண்ணியம்னு ஒரு நம்பிக்கை' என்று கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். மீண்டும் காக்காய் எச்சம் வேண்டாம்.)குஷ்பு கேட்டது நேரடியான கேள்வி. மிகவும் அவசியமாக பதில் கண்டுபிடிக்க வேண்டிய கேள்வி. பதில் மிக பெரிய அதிர்ச்சியாக இருக்ககூடிய ஒரு கேள்வி. அதற்கு பிறகு வருகிறேன். (குஷ்பு இப்படி கேட்டதன் மூலம் யாரையும் கேவலப்படுதவில்லை. ஆனால் அப்படி திருமனத்திற்கு முன் உறவு கொள்பவர்களை கேவலமாய் சொல்லி இதுவரை வந்த கருத்துக்கள்தான், அந்த பெண்களை தமிழின் ஒரு குறிப்பிட்டசதவிகித பெண்களை கேவலப்படுத்தும் கருத்து.). பதில் எப்படியிருந்தாலும் இதுவும் ஒரு கருத்து மட்டுமே. நான் சொன்னதை மறுத்து, ரவி ஒருவேளை தங்கர் சொன்னது தனிப்பட்ட கருத்து என்ற தன் கருத்திற்கும், அதுவும் குச்பு சொன்னது ஒன்று என்பதற்கு தன் விளக்கத்தை தந்தால் சுவாரசியமாக இருக்கும்.

தங்கர் மீது நடிகர் சங்கத்தில் நடந்தது ஒரு விசாரணை. அதிகாரம் கையில் இருந்த சிலர நடத்திய விசாரணை. சமூகத்தில், வறலாற்றில் முதன் முறையாக அதிகாரம் தங்கள் கையில் இருந்ததால் தங்கள் கோபத்தை (குஷ்பு மட்டுமில்லாது) நடிகைகள் காண்பிக்க நேர்ந்த ஒரு சந்தர்ப்பம்.

ஆனால் குஷ்புவை பற்றி கருத்து சொன்னவ்ர்களை பாருங்கள். ரவி படித்திருக்க கூடிய வலைப்பதிவிலேயே எத்தனை மோச்மான கருத்துஇக்கள் வந்தது! 'ஓடி வந்ததுகளுக்கு கற்பு பற்றி என்ன தெரியும்' என்று கேட்கும் போது (கேட்டவர்களில் ஒருவர் சினேகிதன்) குஷ்பு மட்டுமில்லாது அது வட இந்தியர்கள் உள்ளிட்ட்ட மற்ற சமுதாயத்தினர் பற்றியும் எத்த்கனை கேவலமான மதிப்பீட்டை முன்வைக்கிறது.
அதற்கு பிறகு ஓடிப்போகச் சொல்லி போஸ்டர்கள், விளக்குமாறு செருப்பு சகிதமாய் தெருவில் கோச்ஷம். இதல்லேஅம் எவ்வளவு பெரிய வன்முறை என்று சுந்தரமூர்த்தியும் ஒப்புகொள்கிறார். இது மட்டுமில்லாதௌ குஷ்பு நடிக்கும் படங்களை வாங்க வினியொகஸ்தர்கள் மறுப்பு. அதை பெருமையாய் நக்கீரன் செய்தி வெளியிடுகிறது. இவர்கள் குண்டர்கள். படம் ஓடவிடாமல் இவர்க்ளால் தடுக்க முடியும், அதற்கு பயந்து வினியோகஸ்தர்கள் வாங்க்காதது பெருமை. என்னே தமிழனின் பெருமை!. ஆக குஷ்பு மீது நடந்தது எதிர்ப்பு அல்ல. தாக்குதல். தங்கர் மீது நடந்த ஒரு விசாரணையும், அதில் நடிகைகள் தங்கள் குரலை ஒலித்ததும், 'ஓடிப்போ' என்று சொன்ன தாக்குதலும் ஒன்று என்று சொல்லிவிட்டு, இது எப்படி நியாயப்படுத்துகிறது என்று அப்பாவியாய் கேட்பவருக்கு, நட்டு கழண்டுவிட்டது என்று சொல்வதை விட குறைவாக என்ன சொல்லமுடியும். ஏதோ முதலில் ரவி பல விஷயங்களை கேள்விபடவில்லை என்றால் சரி. இப்போது நான் இத்தனை முறை விளக்கிய பின்னும் குஷ்பு மீதானா தாக்குதலை 'சிறு எதிர்ப்பு' என்று சொல்லும் ஆசாமியை மதிக்க முடியுமா? இதில் ஆரோக்கியமான விவாதம் பற்றிய ஒப்பாரி வேறு, வெட்கமாக இல்லை!

என்ன ஒரு அப்பாவித்தனமாய் கேட்கிறார். //இதில் எங்கு குஷ்பு என்ற நபர் மீதான தாக்குதல் நியாயமானது என்று கூறப்பட்டுள்ளது?அவர் கூறியதை சிலர் எதிர்ப்பது என்பது அவர் மீதான தாக்குதல் என்பதாக எப்படி பொருள் கொள்ள முடியும். // அதாவது குச்புவை யாராவது அடித்து ரத்தகாய படுத்தினால்தான் அதற்கு பேர் தாக்குதல், 'குஷ்புவை அடித்தது சரிதான்' என்று நேரடியான வார்த்தைகளில் ரவி சொல்லி அதை மேற்கோள் காட்டினால்தான் நியாயப்படுத்துவதாக அர்த்தம். ரவி நீர் படித்த, அல்லது படித்ததாய் பாவனை செயத விஷயமெல்லாம் இப்படியா பேதியில் போகவேண்டும்.

இதற்கு மேல் என்னால் இங்கே நேரத்தை வீணாக்க முடியாது. குற்றம் சொன்ன பாவத்திற்கு இத்தனை விளக்கம் தந்திருக்கிறேன். மேலே இருந்தால் தனிப்பதிவில் பார்க்கலாம்.

சிவக்குமார் எழுதியதற்கு பதில் சொல்ல விருப்பமும் அவசியமும் இருந்தாலும், இப்போது இடத்தை காலி செய்ய வேண்டும். ஏற்கனவே இன்று எழுத வேண்டிய ஒரு ஒரு முக்கியமான வேலையை இந்த எழவு பிடித்த விவாதத்தால் நாளை தள்ளி வைக்க வேண்டியதாகை விட்டது. அதனால் கருத்து சொன்னதற்கு நன்றி.
அவசியம் இருந்தால் சில நாட்களில் பதில் சொல்கிறேன்.

10/19/2005 10:30 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

My God why dont you realise that i wrote that on Sep 29th and i wrote அதென்னவோ தெரியவில்லை, நான் ஒரு பத்து நாள் இணையத்தில் அதிகம் மேயாமல் இருந்தால். தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்காமல் இருந்தால் அல்லது ஊர் சுற்றப் போய்விட்டால் முக்கியமானநிகழ்வுகள், சர்ச்சைகள் ஏற்பட்டு பரபரப்பு ஏற்படுகிறது. என்னால் உடனுக்குடன் பதிவுகளை, செய்திகளை முழுமையாகப் படிக்க முடியாத போது அவை குறித்து வலைப்பதிவதில்லை என்பதால் என் கருத்துக்களை வெறொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தலாம் என்று ஒத்திவைத்து விடுகிறேன்.அதற்குள் வேறு சில பரபரப்பான நிகழ்வுகள், சர்ச்சைகள் என்று இன்னொரு அலை எழுகிறது. இது தொடர்ந்து நடைபெறுவதால் என் ராசி அப்படி என்று எடுத்துக் கொள்கிறேன்.

you wrote on October 10th. my comment should be taken as my view which was posted with the limited
information i had on that date.
it should be obvious to any one
who has read my post.Kushboo's
statements came later in Vikatan.
Much has happened since Sep 29th
and between Sep 29th and October 10th. You are ignoring some simple
facts and jump to conclusions. If somebody writes something on a particular date with what one knows
on that date how can you extrapolate that to cover later
developments as well. Had I ever supported the threats to her or the demands that she should go back
or ever justified the actions by
PMK and DPI cadre against her your
accusation would be valid. You are
taking a sentence written on 29th
September and coming to illogical
conclusions.I had posted my views in other blogs and no where i had justified the threats, the cases against her etc.You compare what i had written on 29th with comments on your blog dated 10th October or after that date. What sort of comparison is this. At this rate one has to issue a statement daily that i condemn this or condemn that
as otherwise someone like will you
argue that since ravi has not condemned it it is clear that he
supports that. There are umpteen no. of issues where many have not written a word protesting but i have protested. Should i presume that they all support what i have
protested against. When Sujatha wrote nonsense on satre and existentialism i wrote to vikatan
a detailed rejoinder and put it the
blog as well. As far as i know
no writer has protested against what sujatha wrote. So should i presume that they are Sujatha's
supporters and agree with him.

I am too sick of all this. Enough is enough. GOOD BYE

10/19/2005 11:30 PM  
Blogger ஜெ. ராம்கி said...

தி.மு.க - அ.தி.முக குழாயடி சண்டையை விட கொஞ்சம் கூடுதலாகவே ஆகிவிட்டது குஷ்பு மேட்டர். தங்கர்பச்சான் விவகாரத்தையும் குஷ்பு விவகாரத்தையும் பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவின் தேவை இங்கே யாருக்கும் தேவையில்லை. பிரச்னையின் அடிப்படையில் இங்கே யாரும் வாதங்களை முன்வைப்பதில்லை, கோஷ்டி கானம்தான் காதை அடைக்கிறது. நண்பன் என்று ஒருவன் இருந்தால் எதிரி என்று இன்னொருவன் இருந்தாகவேண்டும் என்பதும் தமிழ் கலாச்சாரமோ? பெண் விடுதலை, பகுத்தறிவு, தலித்தியம், ஈழ விடுதலை இதையெல்லாம் இன்னுமா ஒரே தட்டில் வைத்துக்கொண்டு ஒத்து ஊதவேண்டும்?!

10/20/2005 2:50 AM  
Blogger ROSAVASANTH said...

மறுபடியும் ரவி உளரிக் கோட்டியிருக்கிறார், மேலும் ஒரு அப்பட்டமான திரிப்பை செய்கிறார். //ஏதோ முதலில் ரவி பல விஷயங்களை கேள்விபடவில்லை என்றால் சரி. இப்போது நான் இத்தனை முறை விளக்கிய பின்னும் குஷ்பு மீதானா தாக்குதலை 'சிறு எதிர்ப்பு' என்று சொல்லும் ஆசாமியை மதிக்க முடியுமா? // என்று நான் எழுதியிருக்கிறேன். முதலில் தன் கையில் உள்ள தகவல்களை வைத்து எழுதுபவர்,பின்னர் விஷயங்கள் வேறு விதமாய் இருப்பதை அறிந்தாலோ, அல்லது வேறு விஷயங்கள் நடந்தாலோ அதை சொல்லி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு எழுதுவதுதான் அறிவு நேர்மையாய் இருக்கும். ஆனால் ரவியோ கடைசிவரை தங்கர் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்ற நிலை பாட்டை எடுத்துவிட்டு, ஒரு எதிர்ப்பை தாக்குதல் என்று எப்படி சொல்லலாம் என்று மீண்டும் கேட்டு விட்டி இப்போது சம்பந்தமில்லாமல் புலம்புகிறார். நான் சொன்னதில் என்ன தவறு என்று கேட்டார். என்ன தவறு என்று என்று மாய்ந்து மாய்ந்து விளக்கினால் வேறு கூச்சல்கள் போடுகிறார். அடுத்தவரை ஒவ்வொன்றுக்கும் காக்காய் எச்சமாகவோ, ஆடு புளுக்கையாகவோ கேள்வி கேட்டு விட்டு போக தயங்கவில்லை. ஆனால் தன்னை பற்றி மட்டும் எல்லோரும் அவர் நல்லெண்னத்தை புரிந்துகொண்டு எழுத வேண்டும் என்று நினைக்கிறார். தான் சொன்ன எதற்கும் பொறுப்பேற்க சிறிய அளவில் கூட முயல்வதில்லை. இன்னமும் பல கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவே இல்லை. ஒரு உதாரணம் தங்கர் சொன்னதையும், குஷ்பு எழுதியதையும் எப்படி ஒரே தளத்தில் வைத்து பார்க்க முடியும் என்பது? இது நடந்த நிகழ்வுகளை மீறி பதிலளிக்க வேண்டியது.

இத்துடன் இங்கே பதிலளிப்பதை நிறுத்தி வைக்கிறேன். ரவி எழுத தொடங்கியபோது அவர் மீது மிகுந்த மரியாதையும் எதிர்பார்பும் வைத்திருந்தேன். பிறகு என் தனிப்பட்ட பார்வையில் ரவி ஒரு ஜோக்கராக மட்டும்தான் இருந்தார். இப்போது மிக அற்பமான ஒரு மனிதராக தெரிகிறார். அவர் என்னை அற்பன் என்று சொன்னதில் என்னுடய அற்பன் என்ற பிம்பம் அர்த்தமிளக்க கூடும் என்றாலும் வேறுவார்த்தை கையிலில்லை.

10/20/2005 3:49 PM  
Blogger ROSAVASANTH said...

ராம்கி பேஷ், பேஷ், உங்க ஸோலோ கானம் ரொம்ப நல்லாருக்கே, இப்படி 'குழயடி சண்டை' என்று இன்னும் சில ஸ்டீரியோ டைப் பொது பார்வை கோஷ்டி கானத்திற்கு கொஞ்ச்ம இடைவெளி விட்டு , கூடவே என் லிரிக்ஸை படித்து பொருட் பிழை பற்றி பேச முயன்றால் அர்த்தமுள்ளதாய் என்னால் பார்க்க முடியும். கருத்துக்கு நன்றி.

10/20/2005 3:53 PM  
Blogger ROSAVASANTH said...

test!

10/20/2005 6:08 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஒரு பொய்யினைத் திரும்ப திரும்பச் சொல்வதால், வார்த்தைகளை திரித்து பொருள் கூறுவதால் ரோசாவுடன் விவாதிப்பதில் அர்த்தமில்லை. சிவக்குமார் என் கேள்விகளுக்கு பதில் சொன்னால் நான் பதில் தரலாம். ஆனால் நான் எழுதாத கருத்துக்களை நான் எழுதியதாக பொய் பிரச்சாரம் செய்பவர்களுடன் விவாதத்தில் ஈடுபட வேண்டுமா என்ற கேள்வி இருக்கிறது.

10/20/2005 6:29 PM  
Blogger ROSAVASANTH said...

Ok, Ravi. I hope you keep your word, as I never called you for a debate. But I sincerely adivise you to start learning tamil and english, from alphabets, then start making sentenses etc. After doing this you can start reading the 100 pages you daily stare at. When you are healthy at reading, that is when you can read and interprete as everyone does, start reading my posts. If you have any difficulty please contact me. When you have really grown up, I will tell you the rigorous definition of words, sentenses, trues, lies etc. good bye!

10/20/2005 7:03 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

10/20/2005 8:39 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I need no such advise, that too from of all persons you.When you cannot even understand a sentence in Tamil properly it is amazing that you are trying to advise me.
More than anything else it is better that you atleast learn to speak and write truth, although i know that it is too much to expect that from you.

10/20/2005 8:41 PM  
Blogger ஜெ. ராம்கி said...

//தி.மு.க - அ.தி.முக குழாயடி சண்டையை விட கொஞ்சம் கூடுதலாகவே ஆகிவிட்டது குஷ்பு மேட்டர்.

RV,

குழாயடி means Khsuboo Matter. I didn't comment on RV Vs RAVI!

10/20/2005 8:56 PM  
Blogger ROSAVASANTH said...

As expected, very bad, you could not keep your word.

Anyway many thanks for the advice. I strongly believe(like Derida also says) truth can only be partially spoken. So it is definitely very difficult to speak the 'truth'(but you see lies are very easy to speak, and not speaking truth doesn't mean it is a lie). I will try my best to increse the 'amount truthness' in all I speak and write. Like VaLLuvar many people believes EpporuL yAr yAr vay kEtpinum, meypoRul kaNpathu aRivu. But in the turn of last century we(that is human beings) found it is not possible to know the mey poruL, in all the sense. So we can only continue listening eppoRuL Yar yAr vAy, and that is the only way to conceptualise truth, as truth it self may not exist. So I will definitely try your advice, still I amy not succede completely.

what is your next comment. I will definitely reply to that also, as it takes few minutes only.

10/20/2005 9:02 PM  
Blogger ROSAVASANTH said...

my previous reply is for Ravi.

Rajini, thanks for the comment(whatever you meant I requested to consider the points raised, rather than branding something> thanks!)

10/20/2005 9:04 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

What a wonderful analysis of truth.
Are you willing to apply this all times to all issues and stop taking absolute positions in issues
and controversies and stop painting people black and white.
Do you really understand what is the logical outcome of what you have written. Can you apply this to the writings of A.Marx and others in Tamil whom you are so fond of citing and supporting.

Rosa you can try such cheap tricks and games with words on others but not on me. A novice may be impressed by your analyis which may appear to be sophisticated but it is nothing but sophistry. If you dont know the meaning of sophistry please use a good dictionary. It is amusing that you are citing Derrida on one hand and writing as if meanings are fixed according to your interpretation of sentences and argue that your interpretation of a sentence and context is the only possible interpretation and hence the other person is wrong. But then how can i expect that someone like you will ever be aware of this irony or contradiction when you cannot even understand a sentence and the context.Even a robot may think better than you, i write this with due apologies to robots. Atleast they are not like the so called intellectuals and activists and
others who behave more like Pavolovian dogs than as thinking
human beings.

10/20/2005 10:08 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

10/20/2005 10:55 PM  
Blogger ROSAVASANTH said...

forgot to say one things. I ddin't cite derida. Actually I wanted to say my personal opinion only, but unfortunately derida has said it before. So I have to mention him. You cite for different reasons(without reading them). I cite just for acknowledgement. Anyway good bye!

So I hope now you how many alphabets are in tamil.

10/20/2005 11:03 PM  
Blogger ROSAVASANTH said...

Kajini, have you seen Kajini. If so it will be more reasonable to talk about that. I am just relaxing during my work, by writing replies to Ravi. No need to take it seriously. Anyway that also will stop with this comment. thanks!

10/20/2005 11:05 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

தமிழில் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் உள்ளன. முதலில் உயிரெழுத்துக்கள் எவையெனப் பார்ப்போம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.
அடுத்து மெய்யெழுத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர்மெய் உருவாகும். அவ்வாறு 216 உயிர்மெய்கள் உள்ளன. அத்தோடு குறைவான பாவனையிலுள்ள ஆய்த எழுத்து என்ற ஒன்றையும் வைத்துள்ளோம். எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழில் உள்ளன.

அடுத்த வகுப்பில் உயிர்மெய்களை எவ்வாறு எழுதுவது என்று பார்ப்போம்.

10/21/2005 12:07 AM  
Blogger தாணு said...

குஷ்பூவுடன் கூட்டு சேர்ந்த அறிஞர்கள் யாரென்று எட்டிப் பார்த்தேன், பெரிய தலைகள் ரெண்டு மோதிக் கொள்வது தெரிந்தது. விடு ஜூட்1

10/21/2005 12:08 AM  
Blogger ஜோ/Joe said...

இந்த பக்கத்துல நான் படிச்சதுலையே உருப்படியானது உங்க பின்னூட்டம் மட்டும் தான்.

10/21/2005 12:18 AM  
Blogger ஜெ. ராம்கி said...

ரோவ,

ஐயோ.. பிராண்டா? ஸ்டைலா ஒரு கருத்து சொல்ல விடமாட்டேங்கறீங்களே... சரி, சரி.. அப்புறமா வர்றேன்.. ரொம்ப ஹாட்டா இருக்கீங்க போலிருக்கு!

10/21/2005 1:30 AM  
Blogger ஜோ/Joe said...

வசந்தன்,
இந்த பக்கத்துல நான் படிச்சதுலையே உருப்படியானது உங்க பின்னூட்டம் மட்டும் தான்.

10/21/2005 3:13 AM  
Blogger ROSAVASANTH said...

மதிப்பிற்குரிய பாலன் அவர்களுக்கு,

நேற்று வீட்டிற்கு செல்லும் அவசரத்தில், சற்று தற்பெருமை இழையோட எழுதிவிட்டு சென்றது உண்மைதான். ஆனாலும் ஒரு ரோபோ அளவிற்கு கூட சிந்திக்க தெரியாவர் என்று அறிஞர் சொன்னதால், ஜாலியாக..(ஆமாம் உண்மையிலேயே ஜாலியாகத்தான் ரவியுடன் பேசிகொண்டிருந்தேன்.)... ஜாலியாக, உலகம் வேறு விதமாய் நினைத்துகொண்டிருக்கும் தகவலை அளித்தேன். எழுதியபின் மண்டையாய் பேசிவிட்டது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. வீட்டிற்கு சென்று விட்டதால் நீக்கவும் முடியவில்லை. இதற்கு முன் இது போல எழுதியதில்லை என்பதையும், என் தொழில் தொடர்பாக எதையுமே இங்கே எழுதாததையும் கவனிக்க வேண்டுகிறேன்.

நிற்க, என்னை பற்றிய தகவல்களை எல்லாம் உங்களை போன்ற முன்பின் தெரியாதவர்கள அலசி விரல் நுனியில் வைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. குண்டக்க மண்டக்க கருத்து சொல்லும் முன் இனி யோசிக்க வைக்கும். உங்களுக்கு உண்மையிலேயே மற்ற தகவல்களும் தேவை என்றால் அதை இணயம் மூலமாகவே அடையமுடியும். உங்கள் கேள்வியும் தகவலை அறிவதற்காக கேட்கப்படவில்லை, என்னை மடக்க மட்டுமே கேட்கப்பட்டுள்லது. அதை சொல்லி எதையும் (சீரியஸாய் பேசும் போது) நிறுவும் தேவை எனக்கு இல்லை. அதானால் உண்மையிலேயே அந்த தகவல்களும், அது குறித்த மற்ற விவரங்களும்(ஏன் இத்தனை வருடம் அலைந்தேன், ஏன் லேட், எத்தனை சொந்தம், எத்தனை பங்குதரார் etc) உங்களுக்கு தேவை என்றால் தனியஞ்சலில் அணுகவும். அதனால் 'எழுதுவீரா' என்ற உங்கள் கேள்விக்கு பதில் 'எழுத மாட்டேன்'.

அடுத்து நீங்கள் விவரம் புரியாமல் பல கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். நான் பிர ரிவியூட் ஜர்னலில்தான் அறிவு இருக்கிறது என்று ஒருபோதும் சொன்னதில்லை. அப்படி ஒரு கருத்தும் கிடையாது மட்டுமல்ல அப்படி பட்ட கருத்தை தீவிரமாய் எதிர்க்கிறேன். அப்படி தொனிக்க பேசியவர் ரவி ஸார். 'ஜெயமோகனின் கட்டுரைகள் எந்த பீர் ரிவீயூட் இதழ்களிலும் வர தகுதிய்ற்றது' என்று சொல்லியிருக்கிறார். (ஆனால் ரவியின் அந்த கருத்தை பார்பனியம் என்பதாக நீலகண்டன் திரித்ததை கடுமையாக எதிர்த்திருக்கிறேன். அதே நேரம் ரவியின் கருத்து அல்லது அதன் தொனி எனக்கு ஏற்புடையதல்ல). ஆகையால் உங்கள் கேள்விகள் அர்த்தமிழக்கின்றன. அதை கேட்கவேண்டிய இடம் வேறு. ஆனாலும் ஒரு சிறிய பதில், பல ரெஃப்ரீட் இதழ்களில் குப்பையான பல கல்சுரல் ஸ்டடீஸ் கட்டுரைகள் வந்திருப்பதாக கருதுகிறேன். அதானால் பீர் ரெவிய்யூ மீது பெரிய மரியாதை கிடையாது. ஆனாலும் கணிதத்திலோ, இயற்பியலிலொ அப்படி ஒரு குப்பையான கட்டுரை முக்கிய இதழில் வரும் சாத்தியம் மிக மிக குறைவு, சாத்தியமே இல்லை என்று சொல்லவேண்டும். அப்படி இருந்தும், (நான் பெயர் குறிப்பிடாத அந்த ஐந்து உட்பட) நான் அறிந்த கணித மேதைகள் அனைவரையுமே பெரியாரின் கால் தூசிற்கு சமமாக கூட நான் கருதவில்லை.

அடுத்து தெரிதா சொன்னத குறித்த உங்கள் கேள்வியும் அர்த்தமுள்ளதாய் தெரியவில்லை. தெரிதா குறித்து நான் எதுவுமே சொல்லவில்லையே. என் கருத்தைத்தான் ஜாலியாக சொல்லியிருக்கிறேன். ஆயினும் உங்களுக்கு பதில் 'முடியாது'. தெரிதா சொன்னது ஒரளவு(கணித பின்புலம் இல்லாத போது) இயற்பீயலுக்கு கூட பொருந்தலாம். இயற்பியல் கூட உண்மை என்பதன் அருகில் வரமுடியாது. ஆனால் கணித்த்திற்கு அது நிச்ச்யம் பொருந்தாது. இது குறித்து ஏற்கனவே(தெரிதா சொன்னது அல்ல, 'உண்மை' 'வாசிப்பு' பற்றி) அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ப்ரஃபஸர் Haரிசன் உளறி கொட்டியது குறித்து கிழித்து, நானெழுதிய ஒரு கட்டுரையை திண்ணை தடை செய்த விவரம் உங்களுக்கு தெரியும்தானே! (அ,நீ கூட வெட்கமில்லாமல் மூக்கு உடைந்து ரத்தம் சிந்திய பிறகும் என்னை கிழிமேதை என்று கிண்டலடித்து கொண்டிந்தாரே!) படித்து விட்டு வாருங்கள், என்னால் முடிந்தால் மேற்கொண்டு உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன்.

என்னை பற்றிய தகவல்களை பொதுவாய் நான் அளிப்பதில்லை. உங்களாலும் அதை செய்யமுடியுமெனில் மகிழ்வேன். இது வெறும் வேண்டுகோள் மட்டுமே. மற்றபடி ஒயிட் மெயில் குறித்து கவலையில்லை. உங்கள் பதிவிற்கு போனேன். Decontruction என்று போட்டிருக்கிறது. decontruction குறித்து எழுதப் போகிறீர்களா, அல்லது deconstructtion செய்ய போகிறீர்களா, எதுவாயினும் வாழ்த்துக்கள்!


கடைசியாக நான் சின்னதாய் பீற்றியதற்கு(அத்வும் ரவி என்னை முட்டாள் என்று சொன்னதற்கு பதிலாய் எதிர்வினையாய் சொன்னதற்கு) ஏன் எத்தனை கோபம், ரவி அதைவிட அதிகமாய் பலமுறை பீற்றிகொண்டபோது ஏன் கோபம் வரவில்லை என்று சொல்லுவீர்களா? பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சும்மா உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி.


வசந்தன் பாடம் நன்று. உரியவர்வர்களுக்கு பயன்படும் என்று நம்புகிறேன். ரஜினி, நான் கோபமாய் எதுவும் சொல்லவில்லையே. குழாயடி சண்டையானாலும் சொல்லப்பட்ம் விஷயம் குறித்து கவனிக்கலாமே பேசலாமே என்றுதானே சொல்கிறே4ன். அதில் சூடாய் என்ன இருக்கிறது. தாணு நன்றி. ஜோ, சொல்கிறீர்களே ஒழிய இங்கேயே ஏன் சுற்றி கொண்டிருக்கிறீர்கள்?

அனைவரின் கருத்துக்கும் நன்றி.

10/21/2005 4:40 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா,
உங்களை மாதிரி ஜாம்பவான்கள் (நீங்க சொல்லிக்கலின்னாலும் ,என் தகுதிக்கு நான் அப்படித்தான் நினைக்கிறேன்) ஒரு தனிப்பட்ட நபருக்கு ,அதுவும் உங்களைப்பற்றிய தனிப்பட்ட கருத்துக்களுக்கு இவ்வளவு பெரிய போர் நடத்த வேண்டுமா என்று தோன்றியது ..சில பின்னூட்டங்கள் சின்ன ப்சங்க சண்டை ரேஞ்சுக்கு இருந்தது அதிர்ச்சியாக இருந்தது .உங்க அனுபவத்துக்கும் திறமைக்கும் உங்க கிட்ட கத்துக்க என்னை மாதிரி கத்துக்குட்டிங்க உங்க பொதுப்படையான கருத்தோட்டங்களை எதிர்பார்த்து காத்திருக்க ,இங்கே நீங்கள் தேவையின்றி நீண்டு விட்ட மோதல்களில் இவ்வளவு சிரத்தை எடுப்பது சற்று ஏமாற்றத்தை கொடுத்தது ..இதற்கு மேல் சொல்ல எனக்கு வயதோ ,அனுபவமோ இல்லை ..இனிமேல் உங்கள் பதிவுகளில் பின்னூட்டமிடாமல் படித்து விட்டு போகிறேன் .நன்றி!

10/21/2005 6:22 PM  
Blogger ROSAVASANTH said...

joe, I was just kiding! Thanks for the comment. But whther you agree or not I am not a 'Jambavan', in anything. I think about few things, I make reactions, and interventions. I believe it has an effect. I write for that reasons. Beyond that I know all I write is junk. In any case thanks for your comments!

10/21/2005 6:34 PM  
Blogger PKS said...

As the URL below is related to Kushbu issue, I am giving it here.

http://pksivakumar.blogspot.com/2005/10/blog-post_21.html

Thanks and regards,PK Sivakumar

10/21/2005 10:25 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Roza,
I too feel the same way as Joe. This personal argument between you and Ravi seemed 'endless'.

I think your energy and time could be channelled for writing about many things (that you have read and close to your heart) that are really worth sharing with co-bloggers like us.

This is just a suggestion !

10/21/2005 11:40 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Sarah
Thanks for your comments.I had over reacted and some of my comments were unwarranted. I am sorry for that.I should have ignored the baseless and silly accusations and observations of rosavasanth instead of trying to counter them or convince him.
In the past i have avioided debating with him.I will continue to do so in future. Beyond this i dont want to say anything now.

10/22/2005 6:13 PM  
Blogger SnackDragon said...

இங்கே பாலன் என்ற பெயரில் (இதுவரை இவரை வேறே எங்கும் எழுதி பார்த்திராததால்) எழுதியவரை மட்டும் விவாதத்துக்கு சம்பந்தமில்லாமல், இருவரும் சூடானா விவாதத்தில் ஏசிக்கொண்டதை பயன்படுத்திக்கொண்டு சொந்த விசயங்களைக்கொண்டு சாடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இதற்கு ரோசா பதில் சொல்லியிருக்கதேவையில்லை. ப்தில் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும்.

மேலும், திருவாளர் பி கே சிவகுமாரிடம் விவாதிப்பது தேவையில்லை யென்று தவிர்க்கிறேன்.
இங்கு நடக்கும் முக்கிய விவாதத்துக்கு சம்பந்தமில்லாததாக இருக்கும் என்பதால். முடிந்தால், வாய்ப்பு கிடைத்தால் அவரிடமிருந்து இனி எப்படி சிந்திப்பது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று என் சிற்றறிவைக் கொண்டு பரமபிதாவை வேண்டிக்கொள்கிறேன்.

10/23/2005 12:50 PM  
Blogger ROSAVASANTH said...

நான் ரவிக்கு கடைசியாக எழுதிய பதில் மிக ஆபாசமானது(வேறு எதையும் ஆபாசமானதாய் என் எழுத்தில் நான் நினைக்கவில்லை) என்று நான் நினைப்பதால் அதை நீக்கியிருக்கிறேன். மற்றபடி பலரால் இதுவரை வாசிக்கப்பட்டுவிட்ட அந்த கருத்தில் மறைக்கவோ, ஒளிக்கவோ எதுவுமில்லை.

சாரா அவர்களுக்கு,

உங்கள் கருத்துக்கும் அக்கறைக்கும் மிகவும் நன்றி. கடைசியாக ரவிக்கு(வேலையினிடையே ஜாலியாக எழுதுவதாய் நினைத்துகொண்டு) எழுதிய சில பின்னூட்டங்கள் முற்றிலும் தேவையற்றது, ஆபாசமானது, என் வழக்கத்திற்கும் மாறானது என்று நினைக்கிறேன். அது தவிர்த்து ரவி மீதான எனது தாக்குதல் எதிலும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இப்போது பரிசீலித்து பார்கும் போதும் இதுவரையில் ரவி இந்த விவாகாரத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் மிக மோசமானது, எதிர்க்கப் படவேண்டியது என்றே நினைக்கிறேன். ரவி மிண்டும் சாதிப்பது போல், அடிப்படையற்ற குற்றசாட்டு எதையும் சொன்னதாகவும் எனக்கு தோன்றவில்லை. ஏதேனும் ஒரு காரணத்திற்காக அந்த எதிர்ப்பை வெளிக்காட்ட இயலவில்லையெனில், நான் வேறு வேலைகள் பார்க்க கிளம்பியிருப்பேன். இங்கே எழுதிகொண்டிருக்க மாட்டேன். ஆனால் அதில் ஈகோ, இன்னபிற சில்லறை உணர்ச்சிகளை கலக்காமல் இருந்திருக்கலாம். அதை செய்ய இயலாததில் நிச்சயம் அற்பமாய் உணர்கிறேன். அதற்காக என் பதிவை வாசிக்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

அதனால் நீங்கள் 'ஃபுல் ஸ்டாப்' வைக்க சொன்னதை ஏற்று இந்த அற்பச் சண்டையை தொடரமாட்டேன் என்று வாக்குறுதியளிக்கிறேன். ஆனால் கருத்து தளத்தில் ரவியின் கருத்துக்களுக்கான என் எதிர்ப்பில் எந்த விதத்திலும் மாற்ரமில்லை. அதே நேரம் அவர் மீது எந்த வித தனிப்பட்ட காழ்ப்பும் இல்லை என்று எனக்கு நானே உறுதிபடுத்திக் கொள்ள முயல்கிறேன். அவரை மிக எளிதாக 'பார்பனியம், ஆணாதிக்கம்' போன்ற வார்த்தைகளில் வீழத்தமுடியும், நான் அப்படி எதுவும் செய்ய முயலவில்லை என்பதை கவனிக்கவும்.ரவியின் சமீபத்திய பதிவுக்கு எனக்கு எதிர்ப்பு உண்டு. முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது வேறு, மொத்தமாய் இட ஒதுக்கீஇட்டை நவீன வர்ணாஸ்ரமம் என்று உளறுவது வேறு. ரவியின் மொத்த பதிவும் மாபெரும் உளரலாக இருந்த போதிலும் கூட, அதையும் கூட நான் பார்பனிய பாலிடிக்ஸாக பார்க்கவில்லை- டோண்டு கைகோர்க்கும் போதும். அதே போலவே குஷ்பு விவகாரத்திலும். இன்னமும் நான் எழுத நினைத்த பதிவை எழுதவில்லை. அதில் நிச்சயமாய் ரவி குறித்து மேலும் பேசத்தான் செய்வேன். (பதிலளிக்காமல் இருப்பது அவருக்கு வசதியாகவும் இருக்கும்.)

தனிப்பட்ட முறையிலும், இணையத்திலும் ஏகப்பட்ட இடங்களில் பதிலளிக்க வேண்டியுள்ளது. அதனால் உங்கள் அக்கறைக்கு நன்றி சொல்லி இங்கே நிறுத்திகொள்கிறேன். நன்றி! கார்திக் பாலா கருத்துக்கு நன்றி. ஏதேனும் சொல்ல இருந்தால் பிறகு.

10/23/2005 8:34 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது வேறு, மொத்தமாய் இட ஒதுக்கீஇட்டை நவீன வர்ணாஸ்ரமம் என்று உளறுவது வேறு. ரவியின் மொத்த பதிவும் மாபெரும் உளரலாக இருந்த போதிலும் கூட, அதையும் கூட நான் பார்பனிய பாலிடிக்ஸாக பார்க்கவில்லை- டோண்டு கைகோர்க்கும் போதும்.

For bloggers and readers of this blog: I have never opposed reservation per se.But my questions have been on the implementation and criteria.I have
opposed the reservation based on the percentage of caste or religion
in the population. I have argued that reservation upto 50% is acceptable and have argued that the reservation system needs a review and revamp so that the objectives are met in letter and
spirit. i have suggested that
studies and research should be done
on the effectiveness of the reservation and how it can be
improved. i know that my views are controversial and am open for any
meaningful debate on this. Regarding reservation for Muslims
my question is who will benefit
most from this. Anyone who has
read my blog posts will know
that i have written earlier also
on reservations issue and sundaramoorthy has expressed his
views on them and the differences in our views have been openly
acknowledged.Mr. Dondu may agree with some of my views but that is
up to him.i have challenged his
ideas and comments in his own
blog.

Please read my blog at
ravisrinivas.blogspot.com
to know my views.I request you to
judge for yourself how true and
accurate are the observations of rosa, cited above.

10/23/2005 10:56 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

this is what i have written

என்னுடைய கருத்து என்னவெனில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்பதற்குபதிலாக பொருளாதார ரீதியாக பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று கொண்டு வரலாம். அல்லதுபொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோரும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினால் பயனடையும் விதம் மாற்றம் கொண்டு வரலாம். மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற அளவில் இருக்க வேண்டும். இப்போதுள்ள இட ஒதுக்கீடு உண்மையிலேயே அதன் நோக்கங்களைநிறைவேற்ற உதவுகிறதா என்பதும் ஆராயப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தேவையானமாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

10/24/2005 12:21 AM  
Blogger ROSAVASANTH said...

ரோஸாவச்ந்துடன் எதுவும் பேசமாட்டேன், ரோஸா சொல்லும் எது குறித்தும் பதில் எழுத மாட்டேன் என்று சொல்லிவிட்டு ரவி இப்படி பதில் தருவதில் எனக்கு பெரிய பிரச்சனை எதுவும் கிடையாது. ஆனால் மீண்டும் ஒருமுறை அதை சொல்லாமலிருப்பது போரடிக்காமல் இருக்கும். நான் யாரை பற்றியும் எழுத மாட்டேன் என்று உறுதிமொழியோ, தீர்மானமோ எடுக்க இயலாது,

ரவி இட ஒதுக்கீடு குறித்து எழுதியதை 'திரிக்கும்' அளவிற்கு இன்னும் எதையுமே நான் விரிவாய் எழுதவில்லை. இருந்த மிக குறைவான நேரத்தில் எழுதிய ஒரு சின்ன குறிப்பு மட்டுமே. அதற்கு இத்தனை பதற்றம் ரவிக்கு தேவையில்லை. நான் ரவி இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது போன்ற தொனியுடன் எழுதியது தவறுதான். ஆனால் நான் சொல்ல விரும்பியது //I have
opposed the reservation based on the percentage of caste or religion
in the population.//என்கிறார். அதோடு நிற்காமல் வீரமணி சொன்னதை நவீன மனுவாதம் என்று சொல்வதைத்தான் உளறல் என்றேன். அதை தெளிவாய் சொல்லாதது என் தவறுதான் மன்னிக்கவும். இதைவிட மிக முட்டாள்தனமான உளறல் ஒன்று இருக்க முடியாது(வீரமணியை விமர்சிப்பது வேறு விஷயம், எனக்குm விமர்சனம் உண்டு.) இப்படி சொல்லி நீலகண்டனை போலவே மனுவாதம் என்பதை மிக சாதாரணமான ஒன்றாய் குறுக்குவது என்று இதில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ரவி சொல்வது எந்த அள்விற்கு உளறல் என்றால், ரவி பலமுறை சொன்னவற்றை (தமிழில் எழுத ப்போவதில்லை என்றதை, 'பீர் ரிவியூட் ஜர்னல் பற்றி பேசியதை) நவீன மனுவாத்ம் என்று அரவிந்தன் நீலகண்டன் திரித்திருப்பார். அந்த அளவிற்கு எந்தவித தகுதிக் குறைவும் இல்லாத உளரல் ரவியுனுடையது என்பது என் கருத்து. ஆனால் ரவி இப்படி சொல்வது நீலகண்டன் சொல்வதை விட, பல காரணகங்களால், ஆபத்தானது.

மீண்டும் ரவிக்கு நான் தமிழ் படிக்க கற்றுகொள்ள பரிந்துரைந்தால் அற்பத்தனமாக தெரியலாம். ஆனாலும் விஷயம் என்னவெனில் நான் டோண்டுவுடன் ரவி கை கோர்த்ததாக (அவர் என்னை Siவக்குமாருடன் சேர்த்து எழுதியது போல்) நான் எதுவும் சொல்லவில்லை. டோண்டு போய் கை கைகோர்க்க்தாலும் (அதவது ஆதரவாக டோண்டு எழுதினால் கூட)ரவி எழுதிய்டதை பார்பன பாலிடிக்ஸாக நான் *பார்க்கவில்லை* என்றுதான் எழுதியிருக்கிறேன். நான் தகவல் ரீதியாய் ஒரு பிழை செய்ததால் இந்த விளக்கம்.

10/24/2005 2:20 PM  
Blogger ROSAVASANTH said...

இந்த பாலன் என்பவர் யார் என்று இன்னமும் எனக்கு தெரியாது. அது குறித்த அக்கறையும் கிடையாது. அவர் என் எழுத்து குறித்து (மேலே எழுதியது போல் தத்து பித்தென்று உளறாமல்) உருப்படியாய் எதாவது சொன்னால் அதை நிச்சயம் கணக்கில் கொள்வேன். மற்றபடி என்னை பற்றிய தகவல்களை முன்வைபேன் என்பது போன்ற மிரட்டல்களுக்கு எந்த பாதிப்பும் என்னிடம் இருக்க வாய்ப்பு இல்லை. தாராளமாய் எதை பற்றி வேண்டுமானாலும் துப்பறிந்து எழுதட்டும். அதனாலென் பாணியில் மயிரிழையளவு மாற்றம் கூட இருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே பல புழுக்களின் மிரட்டகளை இங்கே சந்தித்திருப்பதையும் அவர்களின் வொயிட்மெயில்களுக்கு எந்த பலனும் இல்லாதிருப்பதுடன், என் உறுதி இன்னும் அதிகரிக்க மட்டுமே செய்திருப்பதையும் அவர் அறிவிருந்தால் அறியக்கூடும். அவர் சென்ற பின்னூட்டத்தில் நான் எழுதியதற்கு தொடர்பில்லாமல் கேட்டிருந்தாலும், ஒரு தெளிவிற்காய் பதில் எழுதினேன். மற்றபடி என்னை பற்றிய 'தகவல்களை' தந்து எந்த அற்ப உயிரினத்தாலும் எம்பராஸ் செய்துவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. (அப்படி நினைத்து என் ஜட்டிக்குள் கைவிட்டவ்ர்களுக்கு கூட எந்த பலனும் இதுவரை கிட்டியதில்லை. என் சகபயணியாய் என்னை பற்றி நல்ல தகவகவல்களை தரக்கூடிய தகுதியுள்ளவரால் நிச்சயமாய் முடியாது.) என் தளத்தில் எந்த பின்னூட்டமும் இட்டவரின் அனுமதியின்றி நீக்கப்படாது(ஒரே ஒருமுறை போலி பின்னூட்ட தொல்லைகளால் நீக்கியது தவிர). என் தளத்தில் பாலனின் பின்னூட்டத்தை நீக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. பாலனை கார்திக் கண்டிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று நான் நினைத்தாலும், கார்திக் எழுதியதன் காரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அந்த அளவில் அவரது அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி.

மற்றபடி மட்டையடி, ஜல்லியடி என்று என் எழுத்தை என் வார்த்தைகளிலேயே அவர் சொல்வது குறித்து எனக்கும் கூட ஒப்புதல் உண்டு. ஆனால் சந்திரமுகி குறித்த பதிவு அப்படி பட்டதல்ல. அது ஒரு முக்கிய்மான பதிவாய் நான் மட்டுமின்றி வேறு பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள்.

அற்ப புழுக்களின் மிரட்டல்களுக்கு என்றுமே என்னிடம் பலன் இருக்காது என்பதற்கு ஆதாரமாய் ஒரு விஷயம். மீண்டும் ரவியின் பதிவை படித்தேன். 'பொருளாதார அடிப்படையிலான' ஒதுக்கீடு என்ற ஸ்டீரியோ டைப் பார்வையை தவிர, முழுபதிவும் மாபெரும் உளரலாய் இருப்பதை மீண்டும் உறுதி செய்கிறேன். இட ஒதுக்கீடு என்ப்தை பற்றிய அவரது புரிதலே மிகவும் தட்டையானதாக ஒரு துக்ளக் வாசகன் தரத்தில்தான் இருக்கிறது. அந்த தகுதியுடன் அவர் பெரியாரை கொச்சை படுத்தவும் தயங்காததற்கு இன்னொரு உதாரணம் இந்த பதிவு.. ரவி 'படித்திருக்க கூடிய' கெயில் ஒம்வெத்தின் சில கட்டுரைகளிலேயே அவரின் சில கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. ஆனால் அவரது பதிவின் கடைசி பத்தியில் அவர் எழுதியுள்ள அறிவு பூர்வமான ஆய்ந்து தெளிந்த முடிவுகளுக்கு பின்னால் அவரால் அதை புரிந்துகொண்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை.

பாலன் (கருத்துரீதியாய் ஏதாவது சொன்னால் ஒழிய) இன்னொருமுறை என்னிடமிருந்து பதில் பெறும் தகுதி அவருக்கு இருக்காது.

10/25/2005 7:55 PM  
Blogger SnackDragon said...

ரோசா, விவாதம் சம்பந்தமாக, சென்ற சில வருடங்களில் நடந்த பெட்னா விழாக்களில் ஏதோ ஒன்றுக்கு அழைப்பேற்று வந்த சிவசங்கரி, இந்த "பொருளாதர அடிப்படையில் முன்னுரிமை" குறித்து சுருக்கென்று ஒரு பதில் தந்தார். நான் அதைத்தான் இந்த வாதத்துக்கு பரிந்துரைப்பேன்,குமுதத்தில் வெளியானது. அதைத்தவிர , இந்த வாதத்தில் கூட பல கேள்விகள் எழும். உதாரணமாக, இதுவரை "நாளைக்கு வெறும் 10 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்த ஒருவனுக்கு முன்னுரிமை தட்டையாக எல்லோருக்கும் போல் கிடைக்குமா அல்லது , அவனது பொருளாதாரத்தை முன்னிட்டு பல லட்சங்களை அதிகமாக அதிக தகுதி என்று கொடுக்கவேண்டுமா? " என்பது போல். அப்படி எனில், இது வரை இத்தனை லட்சங்கள் வைத்திருப்பர்களுக்கு உரிமைகள் குறைக்கபடவேண்டுமா? என்று பல பரிமாணங்களில் நீட்டிக்கொண்டே போகலாம். மேலும் பெரியார் கூட அப்படியெனில் கணக்குப் போட்டு, இந்த அளவு நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு பிறகு எல்லோரும் சமமாகிவிடலாம் என்று ஓரிடத்தில் சொல்லியிருப்பார் நக்கலாக.(அது அந்தக்கால அடிமையாய் இருந்த கறுப்பினத்தவர்களின் கருத்தை எதிர்கொள்ள யாரோ சொன்னது போல் என்று இருக்கும்)

ரவியின் பதிவை இன்னும் வாசிக்கவில்லை. அவரது பதிவு குறித்து எதுவும் சொல்ல இல்லை.

10/25/2005 11:12 PM  
Blogger SnackDragon said...

ரோசா சம்பந்தப் பட்ட சுட்டிகள்:
http://karthikraamas.net/pathivu/?p=2
http://thoughtsintamil.blogspot.com/2004/07/blog-post_29.html#comments

மேலும் அது சிவகாமி, சிவசங்கரி அல்ல..எழுத்துப்பிழை.

10/25/2005 11:25 PM  
Blogger ROSAVASANTH said...

karthik, thanks for the comment.

10/28/2005 6:29 PM  
Blogger ROSAVASANTH said...

சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நிகழ்பெற்ற இளயராஜாவின், 'அன்றும், இன்றும் என்றும்' இசை நிகழ்சி பற்றி எழுத நினைத்தை எழுத முடியவில்லை. நிகழ்சி ஜெயா டீவியில் தீபாவளி அன்று ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. 'ரசிகர்கள்' தவற விட வேண்டாம் என்று சொல்ல இந்த குறிப்பு, குறிப்பாய் 'ஓளங்கள்' என்ற மலையாள திரைப்படத்தின் (தமிழில் ஆட்டோராஜா படத்தில் 'சங்கத்தில் பாடாத நடையுடன்..') பாடலை 'தொம்.. தொம்.. தொம்.. தொம்தொம்த தன..னன..' என்ற தாளத்தை மட்டும் வைத்து இளயராஜா பாடுவதும், 'ஸரிக' என்ற மூன்று ஸ்வரத்தில் மட்டும் அமைந்த பாடல் மற்றும் ' வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்' பாடலை சிம்பொனித்தனம் கலந்து அமையும் கடைசி சில பாடல்களை தவறவிட வேண்டாம் என்பது என் பரிந்துரை.

எனக்கு அன்று 'நான் தேடும் செவ்வந்தி பூ' மற்றும் ராஜாவின் தாலாட்டு பாடல். அரிசி குத்தும் பாடல் பற்றிய விவரணைகளில் தொடங்கி .செந்தூரபூவே'யின் தொடக்க இசையாய் பரிணமித்த துண்டு ஒன்று போது ஜென்மத்திற்கு! முடிந்தால் அன்றய என் அனுபவம் குறித்து பிறகு.

10/28/2005 6:30 PM  
Blogger Koothu said...

>>ஆத்மார்த்தமான ரசிகரின் அனுபவப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நானும்! இந்த கழ்ச்சியைப்பற்றி இது வரை யாரும் எழுதாததே எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. சீக்கிரம் வாய்யா சீக்கிரம் வாய்யா !!

11/07/2005 3:24 AM  
Blogger ROSAVASANTH said...

ஜெய்ஸ்ரீ , கூத்து,

கருத்துக்கு மற்றும் எழுத கேட்டதற்கு நன்றி. இந்த வாரம் எதுவும் முடியாது. ஒரு பக்கம் தலை தின்னும்(கன்னட வழக்கு) வேலை, இன்னொரு பக்கம் சரியான இணய வசதியின்மை. அடுத்த வாரம் முயற்சிக்கிறேன். நிகழ்ச்சியை நீங்களும் ரசித்தது குறித்து மகிழ்ச்சி. மின்சாரத் தடையால் (நேற்று) என்னால் இரண்டாம் பாகம் முழுவதும் பார்க்க முடியவில்லை. இன்னும் இருக்கிறதா அல்லது முடிந்துவிட்டதா? நன்றி!

// இந்த கழ்ச்சியைப்பற்றி இது வரை யாரும் எழுதாததே எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.//

எனக்கும். அப்படி எதிர்பார்த்தே நான் எழுதுவது குறித்து அலட்டிகொள்ளவில்லை. யாரும் எழுதாததால் ... வருகிறேன்.

11/07/2005 6:41 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//இன்னும் இருக்கிறதா அல்லது முடிந்துவிட்டதா? நன்றி!
//
part III will be telecast in Jaya TV coming sunday at 4 PM

11/07/2005 8:04 PM  
Blogger ROSAVASANTH said...

Dear Bala, Thanks for the info.

11/07/2005 8:19 PM  
Blogger ROSAVASANTH said...

http://rajniramki.blogspot.com/2005/11/5.html#comments

எனக்கு ஒரு சந்தேகம். இவர்களின் (அதாவது 'கற்பை' தூக்கி பிடித்து ஆட்டமாடுபவர்களின்) வரையரை படியே இந்த பெண்களுக்கு 'கற்பு' இருக்கிறதோ? இருந்தால் எப்படி நடுரோட்டில் இந்த ஆட்டம் ஆடமுடியும்? நடு ரோட்டில் ஆடினாலும், 'கற்பு' இல்லாவிட்டாலும் எனக்கு பிரச்ச்னை இல்லை. ஆனால் 'கற்புக்காக' புனிதப் போர் தொடுக்கும் இவர்களுக்கு 'கற்பு' இல்லாமல் போனால் அது மாபெரும் பிரச்ச்க்னை அல்லவா? சன் டீவி , தமிழ்முரசு பார்த்து இப்படி ஒரு கேள்வி ரொம்ப துன்புறுத்துகிறது. ஆனாலும் இப்படி தம்ழச்சி கற்பை ரோட்டிற்கு கொண்டு வந்து, குஷ்புவிற்கு ஆதரவாய் செயல்பட்டதற்காய் இவர்களை பாராட்டலாம்.

11/17/2005 7:40 PM  
Anonymous Anonymous said...

குஷ்பு சொல்லித்தான் இந்தக்கால பெண்களைப்பத்தி தெரியணுமா ? :-)

பொதுவா நகரங்களில 40 சதவிகிதம் காலேஜ் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாலயே தங்கள காமத்தை தணித்துக்குதாங்கன்னு புள்ளிவிபரமே இருக்குதுங்களே.

என்யா கற்பு பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கும் உண்டான்னு கேள்வி கேட்குதாங்க பொம்பள்ளைங்க..

இது காலத்தின் கொலமுங்க. சுத்த தமிழ்ல சொன்னாலும், சாதாரணமா சொன்னாலும் .. காலம் மாறிப்போச்சு

சேழர்காலத்தில இருந்த மாதிரியா இன்னிக்கும் நம்ம பெண்கள் இருக்காங்க ? தமிழ் பெண்கள் கண்ணகிமதிரி இரூந்தா நம்ம ஊர்ல தண்ணியேன் இல்லாம போவுது ? பெய்யென பெய்யணுமே ??

சட்டத்தில தங்களுக்கு இருக்கும் எல்லா சலுகையும் use பண்ணிக்கிட்டு, இன்னும் 33%ம் கேட்டுக்கிட்டு, .... பொய்யா டவுரிக்கேஸ் போடும் பெண்களை பத்தி நீங்களும் தெரிஞ்சுக்க கழேயுள்ள வரிகளை படிங்க

நண்பன்

விநாயகம்

Reading your post, and contemplating on the many issues there, I feel your readers should know the dark side of Indian Marriages, especially the misuse of laws by Indian wives these days. The resultant injustice to Indian men and families is enormous

Do you know that 1000s of innocent Indian men are being victimized by the misuse of anti dowry law - a particular Section 498A of Indian Penal code ?.

Newly wed wives unable to adjust with their husbands, some who are unable to live in a new environment, some others caught in adulterous conduct and even greedy Indian wives are known to file FALSE dowry cases against their husbands and In - Laws. They falsely accuse their husbands' of treating them with cruelty AND demanding dowry during marriage.

Since dowry is legally prohibited and severely punishable in India, many of these newly married men stand the gruesome prospect of being arrested and thrown into and Indian prison ... for years !!

The intention of these Indian wives of course is to settle scores or extract money from their in laws.

Once a dowry case is filed the Indian police are forced to arrest the husband and in some cases, even their un suspecting parents & sisters are arrested and jailed. Unable to bear the insult some have committed suicide.

As most of the male victims would be innocent and would not have EVEN stepped into a police station, let alone be arrested, they are forced to NEGOTIATE AND PAY these women

Section 498A of the Indian Penal Code is badly lacking the "..due process of law .." i.e. Under any normal legal process, an accused is considered innocent unless proven guilty. However under Sec. 498A - I.P.C., the accused is immediately assumed to be guilty and has to loose liberty immediately....

There are 1000s of victims all over India

It is reported that ".......In Andhra Pradesh (one of the Indian States), for example, a third of all the pending cases related to “atrocities on women” as on June 30 2005 are those under sections 498 and 498(A). In the first six months this year, 3801 new cases under just these two sections were instituted..........."

http://www.indianexpress.com/full_story.php?content_id=79802

This is a smear on the image of India

Some of the courts are aware of this. Recently the Chennai High Court has stopped police from arresting people on dowry cases

See for e.g.
http://tinyurl.com/8mtqp
or
http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B1CDE2C71-E13B-435F-AC79-95CBEEAF2B26%7D&CATEGORYNAME=Chennai

2.4. As per the above judgment, the POLICE HAVE to refer Dowry complaints to Dowry Prohibition officers AND NOT ACT ON DOWRY COMPLAINTS i.e POLICE *CANNOT ARREST YOU*


If any reader here is about to get married or if you are facing a difficult relationship with your wife, please be aware. Take necessary precautions !!

Best regards


Vinayak


--

http://batteredmale.blogspot.com/
http://blog.360.yahoo.com/blog-Y2MTaSA0RLDVTunp3KQgKh0-
http://my2cents.rediffblogs.com/
http://spaces.msn.com/members/Vinayak123/

http://groups.google.com/group/DLMI?lnk=li
http://groups.google.com/group/DivorceCases?lnk=li
http://groups.google.com/group/DivorceFAQ?lnk=li

11/17/2005 8:59 PM  
Blogger ROSAVASANTH said...

விநாயக், பொழுது நன்றி.

நான் இப்போதைக்கு எதையும் சொல்லவில்லை. ரொம்ப ரொம்ப நொந்து போயிருக்கிறேன். தமிழரல்லாத நண்பர்களிடையே கூனி குறுகி போயிருகிறேன். நடந்து கொண்டிருக்கும் மாபெரும் அயோக்கியத்தனத்தை வேடிக்கை பார்த்துகொண்டு சும்மாயிருக்கும் அவல நிலையில்தான் இருக்கிறேன். சிறிது காலம் கடந்து என் கருத்துக்களை எழுதுகிறேன்.

11/18/2005 3:25 PM  
Blogger ஜெ. ராம்கி said...

RV,

I too feel the same.

http://mugamoodi.blogspot.com/2005/11/blog-post_17.html

I have one friend who is looking for widow from poor family. He is well settled guy, earning Rs.15000/- per month, own a good flat in Adambakkam.

Helping a particular community people or giving note book to school children will not be a real social work.

Karpu, kannipen.. useless...

I'm really proud of my friend.

11/18/2005 3:49 PM  
Blogger ROSAVASANTH said...

அருள், என் மரமண்டைக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. அது எப்படியாயினும் ஒரு வெளிப்படையான பாசிசத்தை, ஒரு பதிவுக்காகவேணும் கண்டித்து ஒரு வார்த்தை கூட நீங்கள் எழுதாதது வருத்தமாக உள்ளது. இரண்டு நாள் முந்தய செய்தியில் திருமா புதிதாய் தமிழ் பண்பாட்டுக்கான இயக்கத்தை துவங்கி வைத்து, 'குஷ்பு சுகாசினி மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரும் கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது' என்றும், 'தமிழ்நாடாய் இருக்க துடப்பத்தையும், செருப்பையும் காட்டினார்கள், ஈழத்தில் துப்பாக்கியால் பதில் சொல்லியிருப்பார்கள்' என்றும் பேசியிருகிறார். இதை விட பச்சையான பாசிசம் வேறு எது என்று எனக்கு புரியவில்லை. இந்த சமயத்தில் வேறு எதையோ அறிவுஜீவித்தனமாய் பேசுவதை போன்ற எரிச்சல் வேறு எதுவும் இல்லை.

http://www.livejournal.com/users/arulselvan/7789.html?view=11373#t11373

11/27/2005 8:38 PM  
Blogger ROSAVASANTH said...

என்னை பற்றி எழுதப்படும் எந்த வசையும் இங்கே நீக்கப்படாது. தான் எப்படி பிறந்தோம் என்று ஒழுங்காய் தெரியாத (என்னை பொறுத்தவரை இழிவு அதனால் அல்ல) நாயினும் இழிந்த பிறவி, பெண்களை பற்றி கேவலமாய் எழுதிய பின்னூட்டம் நீக்கப்பட்டுள்ளது. பன்றிக்கு மலம் உணவு, அதை அங்கீகரிக்கும் எல்லா மனப்பக்குவமும் எனக்கு உண்டு. அதை மற்றவர் வாயில் திணிப்பதை என் அதிகாரம் செல்லுபடியாகும் இடத்தில் அனுமதிக்க முடியாது.

11/28/2005 4:11 PM  
Blogger ROSAVASANTH said...

http://kuzhali.blogspot.com/2005/11/blog-post_28.html#comments

குழலியின் பல பதிவுகளை எதிர்த்தாலும் இந்த பதிவை முக்கியமானதாய் பார்கிறேன். குறைந்த பட்சம் தமிழ்வலைப்பதிவுகளில், பீகார் ஏதோ கற்காலத்தில் இருப்பது போலவும், அதற்கு ஒரே காரணம் லாலு மட்டுமே எனபது போலவும், இந்த தேர்தல் முடிவு மூலம் அவை அனைத்திற்கும் முடிவு வந்துவிட்டது போலவும் ஒரு ஸிக் ஜோக்கை மட்டும் அடித்து கொண்டிருக்கிறார்கள்.

உன்மையிலேயே பீகார்தான் இந்தியாவிலேயே மோசமான மானிலமா? யோசித்து பார்த்தால் மருந்துக்கு கூட எந்த இடதுசாரிவகை (அதாவது திராவிட இயக்கம் கூட உள்ளிட்ட) அரசியலும், அது சார்ந்த விழிப்புணர்வும் இல்லாத ஒரு மாநிலமாக குஜராத் மட்டுமே தெரிகிறது. நிலகிழாரிய நடைமுறை, மற்றும் மதிப்பீடுகள் ஆகட்டும், சாதிவெறி இந்துத்வ அரசியல் எல்லாவற்றிலும் குஜராத்தே முன் நிற்கிறது. இவற்றுக்கான எதிர்வினை என்று எதுவுமே அந்த சமூகத்தில் பதிவாகவில்லை. பிகாரில் இவற்றுக்கெல்லாம் பலவகைகளில் எதிர்வினை நிகழ்ந்திருக்கிறது. தலித்களிடமிருந்து எதிர் தாக்குதல் வர தொடங்கியதும், முன்பு போல ஆட்டாம் போடவும் முடியவில்லை. ஏதோ பிகாரில் எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று சொல்வது அல்ல என் நோக்கம். பிகார் குறித்த பிரசாரத்தின் அடைப்படை வேறு என்பதுதான்.

லல்லுவை கூட, பிரசாரம் என்னவாக இருந்தாலும், ரன்பீர் சேனாவின் எதிரியாகவோ தலித்/நக்சல் ஆதரவாளராகவோ பார்க்க முடியாது. லல்லுவின் ஆட்சியிலேயே நக்ஸல் மீது எத்தனையோ என்கவுண்டர்கள் நடந்தாலும், ரனபீர் சேனா மீது எதுவும் நடந்து கேள்விப் படவில்லை. ஆனால் லல்லு வேறு வழையில்லாமல் அப்படி நடந்துகொண்டாலும், அடிப்படையில் அவர் கட்சி சேனா அதரவு கொண்டது அல்ல. மாறாக பாஜகவில் பலர் சேனாவுடன் நெருக்கம் கொண்டவர்கள். இந்த வெற்றி ரனபீர் சேனாவிற்கு உற்சாகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது தவிர மேலோட்டப் பார்வையிலேயே, ராஷ்ட்ரிய ஜனதாதள்ளை விட, நிதிஷ் கூட்டணியில் கிரிமினல் பிண்ணணி கொண்ட பலர் போட்டியிட்டு வென்று சட்டசபையினுள்ளும் நுழைந்தாகி விட்டது. இதில் என்ன மாற்றம் வரபோக்கிறது என்று புரியவில்லை. கொஞ்ச நாள் அப்படி ஒரு மாயை மட்டும் தெரியக்கூடும்.

ஆனால் இவை எப்படியிருந்தாலும், இந்த முறையும் லல்லுவே ஜெயிப்பது நல்லதுக்கு அல்ல என்ற காரணத்தால் மட்டும் இந்த முடிவுகள் வரவேற்க கூடியதாய் தெரிகிறது.

11/28/2005 5:01 PM  
Blogger ROSAVASANTH said...

http://www.livejournal.com/users/arulselvan/8103.html?view=13991#t13991

அருளின் பல கருத்துக்களை, அதன் அடிப்படையை நான் ஏற்கிறேன். ஆனால் அவை இந்த விஷயத்தில் சரியாய் பொருந்திவரவில்லை என்பதுதான் உண்மை.

நான் புரிந்து கொண்டவரை (இந்தியா டுடே பேட்டியை விடுவோம், எல்லோரும் (இதை மட்டும்) ஆட்சேபிப்பதாக சொல்லும்) 'தமிழ்நாட்டில் யாருக்கும் கற்பு இல்லை' என்றோ, 'கற்பை கொண்டாடுபவர்கள் காட்டுமிராண்டிகள்' என்றோ (பெரியார் சொன்ன கடுமையில் கூட) குஷ்பு எதுவும் சொல்லவில்லை. தன் கருத்துக்கு ஆதாரமாக, பத்திரிகை ஒன்று கேள்விகள் கேட்டு provoke செய்த ஒரு சந்தர்ப்பத்தில், 'தமிழ் நாட்டில் திருமணத்திற்கு முன்பு உறவு கொள்ளாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவேண்டும்?' என்பதாக பதில் கேள்வி கேட்டதாக மட்டுமே அறிகிறேன். இது எப்படி அருள் சொல்வது போன்ற வன்முறற ஆகும் என்று எனக்கு புரியவில்லை. மிக தெளிவாக வேறு காரணக்களுக்காக பழிவாங்கும் நோக்கில் இது பெரிது படுத்தப்பட்டு, அவர் மீது பலவகைகளில் தாக்குதல் நடத்தப்பட்டதை அருள் இப்படி ஏதோ பாசிச கூறுகள் கொண்டதாக சொல்வதும், வன்முறை என்று விளக்கம் தருவதும் நியாயமாய் படவில்லை.

குஷ்பு நடுத்தர, அடித்தட்டு அல்லது தன்னால் அடையாளம் காணமுடியாத பெண்களை நோக்கி, அவர்களின் கற்பு மதிப்பீடு பற்றி சொல்லியிருந்தால் அது வன்முறை. தன் கருத்துக்கு அதரவாக வேறு எவ்வாறு அவர் பேசமுடியும? ஒருவேளை குஷ்பு சொன்னது தவறூ எனில் சாருநிவேதிதா தொடங்கி பல எழுத்தாளர்களை என்ன செய்யலாம்? 'இரண்டாம் ஆட்டம்' நடத்தியதற்காக அவர் மீது தாக்குதல் தொடுத்தும் சரிதானா? இதையே மாற்றி வேறு விதமாகவும் சொல்லலாமே. தீபா மேத்தா ஓரினப் பாலியல் குறித்து என்னவும் கருத்து வைத்துகொள்ளட்டும், அதை படமாய் எடுத்து, ஒரு ஒழுக்க நெறியை பேணிவரும் சமூகத்திஉல் அதிர்ச்சியை உண்டாக்குவது வன்முறை என்றும் சொல்லலாமே. சிவசேனா செய்ததில் என்ன தவறு?

அருள் சொன்னது விவாதத்திற்கு உரியது என்று நானும் நினைகிறேன். ஆனால் 'நாட்டை விட்டு ஒடிப்போ' என்று சொல்லி வாரியல், செருப்பு வீசுவதும்,குஷ்பு சொன்னதும் ஒரே விஷயம், இரண்டும் (// நடிகைகள் சொன்னதும், அரசில்வாதிகள் செய்வதும் இரண்டும் பாசிசக்கூறுகள் கொண்டவை//) ஒன்றுதான் என்று சொல்வது ஒப்புகொள்ள கூடியதாய் தெரியவில்லை.

அருள் சொல்வது போல் தமிழ் அடையாளத்திற்கான ஒரு crisis இருப்பதையும், அதை நாசூக்குதன்மை எதிர்கொள்வதில் ஒரு அதிகாரம் மற்றும் அடக்குமுறை இருப்பதையும் ஏற்கிறேன். ஆனால் நடந்த சம்பவங்களை அதற்கான எதிர்வினையாய் எப்படி பார்க்க முடியும் என்று புரியவில்லை. விரிவான கருத்துக்களும், அதை விவாதிக்கவும் பரிசீலனை செய்யும் தேவையும் இருப்பதாகவே நினைக்கிறேன். அதற்கான முயற்சியை தொடங்க முடியுமா என்று தெரியவில்லை.

11/28/2005 6:04 PM  
Blogger ROSAVASANTH said...

http://www.livejournal.com/users/arulselvan/8103.html?view=13991#t13991

தமிழ்முரசில் குஷ்பு பேசியதை நான் நேரடியாக படிக்கவில்லை. பல இடங்களில் அது மேற்கோள் கட்டப்பட்டதை முன்வைத்தே மேலே சொன்னதை எழுதியுள்ளேன். ஒருவேளை நான் புரிந்துகொண்டதில் தவறு இருந்தால் கருத்தை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாய் படித்தவர்/ படிக்காதவர் என்பதை முன்வைத்து குஷ்பு சொன்னதை எதிர்க்க முடியும். ஆனால் அதையும் பாசிசக்கூறு என்பதாக பார்க்க முடியவில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதை ஒரு எலீட் வன்முறை என்று கூறமுடியும். இங்கே அப்படி சொல்லும் வகையில் நிலமை இல்லை.

11/28/2005 6:28 PM  
Blogger ROSAVASANTH said...

http://tamilkudumbam.blogspot.com/2005/11/blog-post_27.html

//பெரியார் ஒழுக்க கேட்டிற்கு சாமரம் வீசியவர் என்று நிறுவ படாத பாடு பட்டனர்.//

முத்துகுமரன் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' ஒழுங்காய் படித்திருபாரா என்று தெரியவில்லை. ஒரு உதாரணமாக அதில் தெளிவாகவே பலதாரதிருமணம் தொடங்கி பலவற்றை நேரடியாகவே ஆதரித்திருப்பார். ஆனால் நேர்மையாக ஆணுக்கு சொல்லப்படும் அனைத்தும் பெண்களுக்கும் பொருந்தும் என்றும் சொல்லியிருப்பார். இங்கே 'ஒழுக்கக்கேடு' என்பதாக 'தமிழ் பாதுகாவலர்களால்' எதெல்லாம் சொல்லப்படுகிறதோ அதற்கெல்லாம் அதற்கு அதரவாக பெரியார் சொன்னதை எடுத்துகாட்ட முடியும். தமிழ் தேசியவாதிகள் சொல்வது போல் ஏதோ ஒரு வாக்கியதை வைத்து ஜல்லியடிக்கும் விஷயம் அல்ல.

11/28/2005 8:37 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter