ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Thursday, September 08, 2005மரியா.சற்று முன் மார்க்வெஸின் 'மரியா' என்ற அற்புதமான சிறுகதையை திண்ணையில் படித்தேன். நான் தவறவிட்டிருந்த மார்க்வெஸின் பல மாணிக்கங்களில் ஒன்று. இனி ஒரு முழு நாளாவது வேறு எதையும் படிக்க முடியும் என்று தோன்றவில்லை. அந்த அனுபவம் நண்பர்களுக்கும் நேர இங்கே பரிந்துரைக்கிறேன். இதுவும் பாலியல் தொழிலாளியினுடைய கதைதான். ஆனால் தமிழுலகத்தில் ஒரு நாளும் சாத்தியமாகாத யதார்தத்தை கொண்டது. ராஜாராமின் மொழிபெயர்ப்பு வாசிப்பில் எந்த நெருடலும் ஏற்படுத்தாத வகையில் நேர்த்தியானது. கதை சாவை பற்றியது மட்டுமல்ல என்பது என் அபிப்ராயம். |
12 Comments:
்
நன்றி, வசந்த். அருமையான கதை. மரியாவிற்கும் நோவாவிற்குமான உறவை, 'உம்பர்டோ குய்' படத்தில் கிழவருக்கும் அவரது நாயிற்குமான உறவோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.
கதையின் முடிவு பிரமிக்க வைக்கிறது.
சுட்டியதற்கு நன்றி வசந்த். முன்பொருமுறையும் தமிழிலே இக்கதையைப் படித்ததுண்டு. உறுத்தாத, நல்லதொரு மொழிபெயர்ப்பு. தனிமை என்பது முடிவற்ற மரணம் என்ற இதே ரீதியில் பல அற்புதமான மார்க்வெஸ் கதைகள் உள்ளன. தனிமையை மிக ஆழமாகக் கூறும், நினைவிலிருக்கும் பெரும்பாலான மார்க்வெஸ்ஸின் கதைகள் மனதைப் பிசைவதாகவே இருக்கின்றன
அட.... இந்த ஆள் இத்தனை நன்றாக எழுதுவாரா? முன்னாடியே தெரியாமப் போச்சே....
நன்றி ஸ்ரீகாந்த்.
மாண்ட்ரீஸர் மார்க்வெஸ் என்பதனால் உங்கள் பின்னூட்டத்தை நிச்சயமாய் எதிர்பார்தேன். நன்றி.
//அட.... இந்த ஆள் இத்தனை நன்றாக எழுதுவாரா? முன்னாடியே தெரியாமப் போச்சே.... //
இகாரசு, இது ரொம்ப ஓவரா இல்ல? எந்த உலகத்தில் அய்யா இருக்கிறீர்? சரி, அடுத்த முறை சந்திக்கும் போது கல்குதிரை தொகுப்பு, இன்னும் பல என்னிடம் உள்ள மார்க்வெஸ் சரக்கை வைத்து தாக்குகிறேன்.
ப்ரகாஷ் அளவு இல்லையென்றாலும் இது வரை படித்ததில்லை. சுட்டிக்கு நன்றி. புரிந்த வரை பிடித்தது.
ரம்யா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
இகாரசுக்கும் மற்றவர்களுக்கும் இன்னொரு கதை.
வெளிச்சமே வெள்ளம் போல
இதை இன்னும் (தமிழில்) படிக்கவில்லை, ஆனால் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். கோ. ராஜாராம் தலைப்பை இப்படி மொழிபெயர்ததே எனக்கு ஒப்புதலில்லை. 'வெளிச்சம் தண்ணீரை போல' என்பதுதான் சரி என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த மார்வெஸின் கதை வெளிச்சம், தன்ணீர் , மின்சாரம் தொடர்பான முதாலாளித்துவ அரசியலுடன், மண்மைந்தர்களின் வளங்களுடன் தொடர்பு படுத்தி பல வாசிப்பை தரக்கூடியது. அதை 'வெள்ளம் போல' என்று சொல்வது அந்த வாசிப்புகளை இல்லாமலாக்குகிறது. எனினும் படித்து பார்க்கலாம்.
ரோசா இந்தக் கதை ரவிக்குமார் தொகுத்த காலச்சுவௌ வெளியிட்ட 'வெளிச்சமும் தண்ணீர் மாதிரித்தான்' என்ற மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளதென்று நினைக்கிறேன்
ஈழநாதன், அந்த தொகுப்பை நான் படிக்கவில்லை, ஆனால் ரவிக்குமார் மொழிபெயர்ப்பை பார்த்த மாதிரி ஒரு நினைவு நிழலாடுகிறது. பொதுவாய் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பு குறித்து எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. இன்னொரு அற்புதமான கதை!
இதே கதை 'நீரைப் போன்றது ஒளி' என்ற தலைப்பில் 'கல்குதிரை' பத்திரிகையிலும் (என்று நினைக்கிறேன்?), நான் இங்கே வந்தபின்பு எங்கள் கல்லூரி மாணவர் பத்திரிகையில் வேறொரு பெயரிலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
//இதே கதை 'நீரைப் போன்றது ஒளி' என்ற தலைப்பில் 'கல்குதிரை' பத்திரிகையிலும் ..//
ஆமாம், நாகாஸ் மொழிபெயர்ப்பில் என்று நினைக்கிறேன்.
மரியா என்ற பெயரில் ஹிந்தி சிறுகதைகள் என்ற நூலிலொரு கதை படித்த நினைவு.. அதில் மரியா ஒரு புரட்சிக்காரி..அதிக பாதுகாப்புடன் இருக்கும் எதிரியை அழிக்கப் பணிக்கப்பட்டவள். ஒரு பாலியல் தொழிலாளியாக அந்த வீட்டினுள் நுழைந்து எதிரியை அழிப்பாள்..
அவளது நினைவில் நண்பர் ஒருவர் மரியா என்ற புனைபெயர் கூட வைத்திருந்தார்.
இது வேறு மரியா. இருந்தும் கதை நன்றாக இருந்தது.
நான் அந்த கதையை படித்ததில்லை. தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment
<< Home