Tuesday, June 28, 2005
Icons and Iconoclasts!
"பிம்பங்களும், பிம்ப அழிப்பாளர்களும்" என்று குண்ட்ஸாய் யோசித்து தலைப்பிட இருந்தேன். ஆனால் எனக்கு சமதானமாகாமல் ஆங்கிலத்திலேயே இட்டிருக்கிறேன். icon என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இந்த இடத்தில் பொருந்துமாறு ஒரு தமிழ் சொல் எனக்கு தெரியவில்லை. இராம.கி ஐயா இதை பார்த்தால் பொருத்தமான சொல்லை தரக்கூடும். இல்லையெனில் நான் பிறகு கேட்டு எழுதுகிறேன். நண்பர்களும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
(புத்தரின் புகைப்படம் ஜப்பானில் நாரா என்ற இடத்தில் உள்ள கோவிலில் எடுக்கப்பட்டது.)
Post a Comment
---------------------------------------
27 Comments:
நல்ல படம் போடறீங்க!
ரோசா, மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்-பௌத்தம்,
அதையே வாழ்வோட்டத்தில்-செயலில் காட்டியவர்,பெரியார்.பொருத்தமான படங்கள்!
நச் நச்சுன்னு தொடர்போட படம் போடுறீங்கண்ணே. மிக நன்று.
ஆன ரோசவசந்த் பதிவுல பின்னூட்டம் குறைய இருக்கிறத பார்த்தா தான் மனசு வருத்தமா இருக்கு. :-)
தங்கமணி ஸ்ரீரங்கன் நன்றி. ஒரு காலத்திய iconoclastsஇன்னொரு காலத்திய icoஆக இருக்கிறதே. தன்னையும் ஒரு iconஆக இருப்பதை கட்டுடைத்தவர்கள் அதையே கட்டமைக்கவும் செய்தார்கள் இல்லையா? அவர்களை மீறியும் அது நடந்ததே!
அல்வா,
போன பதிவுலே 20 பின்னூட்டம் . இது குறைவா? மேலும் பின்னூட்ட எண்ணிக்கை ஒரு புக் கிரிக்கெட் விளையாட்டு என்று ஏற்கனவே சொன்னதுதான்.
stamp - முத்திரை
icon - இலச்சனை?
'இலச்சனை'இந்த இடத்தில் பொருந்துவதாக தெரியவில்லையே. உங்களுக்கு தெரிகிறதா? புத்தர் ஒரு இலச்சனை, பெரியார் ஒரு இலச்சனைஉடைப்பாளர் என்று சொல்ல முடியுமா?
ரோசா அண்ணாச்சி,
சர்ச்சை பதிவுக்கும் இந்த மாதிரி கூல் பதிவுக்கும் வித்தியாசம் நீங்களே கண்டிருப்பீர்கள். ரோசாவின் சர்ச்சை பதிவு என்றால் பாலப்பழ தேனீக்கள் தான் உங்க பதிவுல. பின்னூட்டம் அரைசதம் போட்டு விட்டு தான் ஓயும். அந்த ஒப்பீட்டுல தான் சொன்னேன்.
ஏன்னா நான் கவனிக்க ஆரம்பிச்சதிலிருந்து பார்த்தா ஒரே அடிதடி/கண்டன பதிவுகளை தான் அதிகம் கண்டிருக்கிறேன். நல்ல பதிவு போட்டாலும், திரும்ப திரும்ப பின்னூட்டங்களை எங்கேயாவது இழுப்பதை கண்டிருக்கிறேன்.
ஆனால் இந்த மாதிரி பேலன்ஸ்டு பதிவும் நல்ல தான் இருக்கு.
புத்த விகார புகைப்படம் நன்றாகத்தான் இருக்கிறது. (கவனிக்க, இதில் உள்குத்து எதுவுமில்லை)
அல்வா, மீண்டும் கருத்துக்கு நன்றி.
ரஜினி, புத்தவிகாரம் நல்லா இருக்குன்னு சொன்னா பெரியார் படம் நல்லா இல்லைன்னு சொன்னதா நான் எடுக்க மாட்டேன். அப்படி உள்குத்து இருப்பதாக உங்களை நான் எதெற்கெடுத்தாலும் பார்ப்பதில்லை. திருமா விவகாரம் வேற. கொஞ்சம் திருமா பற்றி பாசிட்டிவா(சீமாச்சு சொன்னாரே, அதே பாசிடிவ்தான்) நாலு வார்த்த எழுதாட்டாலும், பாசிடிவா பார்க்க பழகுங்க. அப்பறம் மனதில் படும் விமர்சனத்தை வைச்சா நான் ஏன் உள்குத்து/குசும்பு பற்றி யோசிக்க போறேன்.
புத்தர் படம் இன்னும் நிறய வரும். கருத்துக்கு நன்றி.
நல்ல பொருத்தமான படங்கள்.
//திருமா பற்றி பாசிட்டிவா நாலு வார்த்த எழுதாட்டாலும்//
எழுதிட்டா போச்சு. ஏன் குறை வைக்கணும்? கூடிய சீக்கிரம்... exclusive!
நல்லது ரஜினி! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாங்க.
பத்மா, முதன்முறையாய் என் பதிவில் பின்னூட்டம் இட்டதற்கும் கருத்துக்கும் நன்றி.
ரோசாவசந்த், இரண்டு மிகப்பெரும் மனித ஆளுமைகளின் படங்களுக்கு நன்றி. திருவுருக்களை வெறுத்த இருவரையும் இன்று பீடங்களில் ஏற்றிவிட்டாலும், அவர்களின் அவசியம் இனியும் இருப்பதால், மீண்டும் மனித உருவில் அவர்களைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. புதரின் படத்தைப் பார்க்கும்போது சென்றமுறை ஈழத்துக்குச் சென்றபோது ஒரு சிங்களக்கிராமத்தில் மிகப்பெரும் புத்தர் சிலைகளிலிருந்து...பல்வேறு நிலைகளில் புத்தரைப் பார்த்தது படமெடுத்தது நினைவுக்கு வந்தது (அது புத்தர் சிலைகளுக்கு பெயர்போன கிராமம். பெயர் நினைவில் இல்லை, தற்சமயம்)
/பல்வேறு நிலைகளில் புத்தரைப் பார்த்தது படமெடுத்தது நினைவுக்கு வந்தது /
அவுக்கண?
ஈழத்தில்? ;-)
ராம்கி,
//புத்த விகார புகைப்படம் நன்றாகத்தான் இருக்கிறது. (கவனிக்க, இதில் உள்குத்து எதுவுமில்லை)
//
பெரியார் படம் நல்லா இல்லைன்றது (அல்லது எடுத்துக்கறது!) ஒரு உள்குத்து, ரோசா சொன்ன மாதிரி !!! என் மனசுல பட்டது இன்னொன்று ! அதாவது "புத்தரின் விகாரமான புகைப்படம்" என்று !
பௌத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், சீரியஸாக எடுத்துக் கொண்டு, தயவு செய்து பாயாதீர்கள் :)
ரோசா,
இன்னும் என்னல்லாம் படம் காட்டப் போறீங்களோ ;-) அப்றம், ஒங்க ஊர்ல, மெட்டி ஒலின்னு ஒண்ணு தெரிஞ்சுதா ????? ஒரு தகவலுக்கு கேட்கிறேன்.
எ.அ. பாலா
you too Rosa? (*_*)
Icon - 'பிரதிமை' என்று நினைக்கிறேன்.
நான் icon - திருவுரு என்று நினைத்துக்கொண்டிருந்தேன் :-(.
...
பெயரிலி அவுக்கணவா என்று சந்தேகமாய் இருக்கிறது. ஏதோ 'த' வில் தொடங்கும் இடம். குகை மாதிரிக் குடைந்து உள்ளே பெருமளவில் புத்தர் சிலைகள் இருந்தன. அதுகூட யாரோ ஒரு சிங்களமன்னன் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிலிருந்து புத்தர் சிலைகளைக் காப்பாற்ற அங்கே ஒளித்துவைத்ததாய் சொன்னது நினைவு.
ரோசாவசந்த்
நான் உங்கள் பதிவுகளை பல நாட்களாய் படித்துக்கொண்டிருக்கிறேன். பதிவின் கருத்தை விட்டு மாறும் பின்னூட்டங்கள் என்னும் சுழலில் சிக்காமல் வந்து விடுவேன். ஆணித்தரமாகவும் தெளிவாகவும் எழுதுகிறீர்கள்.
கணேசன், டீஜே, பெயரிலி நன்றி.
பாலா, மெட்டிஒலி தெரியவில்லை, தெரிவதில்லை. நான் 'சித்தி'காலத்தவன். தமிழ் படிக்க, பார்க்க கேட்க இணையம் மட்டுமே கதி. நன்றி!
கறுப்பி வீ த்ரீ! (தேங்ஸ்!)
மாண்ட்ரீ, பேசி எல்லாரும் முடிவுக்கு வாங்க. எனக்கும் பிரதிமையைவிட திருவுரு பொருந்துவதாக தெரிகிறது.
தேன் துளி, மிகவும் நன்றி.
/ஏதோ 'த' வில் தொடங்கும் இடம்/
தம்புல்ல / தம்புள்ளை; திருக்கோணமலையிலிருந்து போகும்போது, ஹபரணவுக்கு அடுத்ததாக மாத்தளைக்கு முன்னால், கொழும்பு-கண்டி ஆகியவற்றுக்கான பாதைகள் பிரியுமிடம். சிகிரியா அருகிலே இருக்கின்றது. தோழர் கருணா, மட்டக்கிளப்பிலிருந்து ஓடும்போது, இரவுச்சாப்பாடு உண்ட இடமாகும் ;-)
ரோசா பிரதிமை பொம்மை,சிலை என்றும் பொருள்படும்.பிரதிமை என்ற சொல்லின் பொருளே தன்னைப்போல இன்னும் பல உருவாகக் காரணமாக இருத்தல் என்று படித்திருக்கிறேன்,
அ.மார்க்ஸ் சே பற்றிக் குறிப்பிடும்போது திரு உரு என்று குறிப்பிடுகிறார் திரு உரு என்று வழங்கும்போது சொல்லின் மூலம் ஒரு புனிதத் தன்மை ஏற்றப்படுகின்றது.மார்க்சின் கட்டுரையில் சே வணக்கத்துக்குரியவராக மாற்றப்படுவதைக் கண்டித்து திரு உரு எனக் குறிப்பிட்டிருப்பார்.இந்தக் கட்டுரையில் நீங்கள் சொல்ல வந்ததற்கு எது பொருத்தமாக இருக்குமென்று கூறுவது கடினமாக உள்ளது.இராம.கி அய்யாதான் சொல்லவேண்டும்.
தலதா மாளிகை போயிருந்த போது பல்வேறு நிலைகளில் பல்வேறு பரிமாணங்களில் புத்தர் சிலைகளைப் பார்த்தேன் சிலைகள் என்பதையும் மீறி ஒருவரை ஆட்கொள்ளும் விதமான வடிமைப்பு புத்தர் சிலைகளில் இருக்கிறது
திருவுருப்படுத்துதல் பொருத்தமான பதம்.
ஈழநாதன் said...
//அ.மார்க்ஸ் சே பற்றிக் குறிப்பிடும்போது திரு உரு என்று குறிப்பிடுகிறார்//
-/peyarili. said...
//திருவுருப்படுத்துதல் பொருத்தமான பதம்.//
நேற்றே சொல்லவேண்டுமென்று நினைத்தேன். அதில் 'திருவுரு' ஒன்று. சே குறித்த கட்டுரையில் அ.மா. பயன்படுத்தித் தான் முதலில் பார்த்தேன்.
இன்னொன்றை நான் சொன்னால் கொஞ்சம் சுயவிளம்பரமாக இருக்கும்: 'மூர்த்தி'. :-)
'திருவுருப்படுத்துதல்' என்பது மாதிரியே 'மூர்த்திகரப்படுத்துதல்' (deification அல்லது personification என்ற பொருளில்) என்று பிரமிள் எழுதியிருக்கிறார் ('தமிழின் நவீனத்துவம்' என்ற கட்டுரைத் தொகுப்பில் என்று நினைக்கிறேன்).
'திருவுரு', 'திருவுருப்படுத்துதல்' தூயத் தமிழாக இருப்பதால் அதையே பயன்படுத்திக்கொள்ளலாம். icon க்கு 'திருவுரு' என்றால் iconoclast க்கு 'திருவறு', 'திருவுடை' என்று சொல்லலாமா?
புத்தரின் திருவுருவை அரசியலாக்கும் இனவாதத்திற்கும் அவருடைய சிலையை உடைக்கும் தாலிபான்களுக்கும் என்ன வித்தியாசம்? இதில் நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்? பெரியாருக்கும் அதே நேர்கிறது.
//தம்புல்ல / தம்புள்ளை; திருக்கோணமலையிலிருந்து போகும்போது, ஹபரணவுக்கு அடுத்ததாக மாத்தளைக்கு முன்னால், கொழும்பு-கண்டி ஆகியவற்றுக்கான பாதைகள் பிரியுமிடம். சிகிரியா அருகிலே இருக்கின்றது.//
பெயரிலி அதுவே தான். முந்தி பேராதனையில் படிக்கும்போது இந்த இடத்துகு அடிக்கடி போயிருக்கின்றியள் போல. நான் Lovers Parkஐப் பற்றி ஒன்றும் கேட்கமாட்டேன் :-).
ஈழநாதன் மிகவும் நன்றி. டீஜே முதன் முதலில் 'திருவுரு' என்ற வார்த்தையை எழுதியதுமே எனக்கு பொருத்தமானதாய் தோன்றியது. நான் அ.மார்க்ஸ் மட்டுமில்லாது தமிழில் புத்தகம் படித்தே வெகுகாலமாகிறது.
சுமு, திருவறு, திருவுடையை இன்னும் சற்று செப்பனிட்டால் வேறு இன்னும் பொருத்தமாய் கிடைக்க கூடும் என்று தோன்றுகிறது-எனக்கு உடனடியாய் எதுவும் தோன்றவில்லையெனினும்.
அனைவருக்கும் நன்றி.
Post a Comment
<< Home