ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 01, 2005

நான் பார்பனியத்தின் எதிரி!

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை குறித்து ரொம்ப நாட்களாவே எழுத ஆசை. இப்போது டோண்டு 'நான் இஸ்ரேல் ஆதாரவாளன்' என்று தலைப்பு வைத்து எழுதிவருவதற்கு பதிலாகவே இப்படி ஒரு தலைப்பு (இந்த பதிவிற்கு மட்டும்) தந்திருக்கிறேன். மற்ற படி இங்கே எழுத போவதற்கும் பார்பனியத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதாவது டோண்டுவின் இஸ்ரேல் ஆதரவையும், அதில் கொள்ளும் வெளிப்படையான பெருமையையும் ஒரு பார்பனிய பண்பாக பார்கிறேன். ஹிட்லரை ஒரு ஆதர்ச மனிதராய் பார்த்த ஒரு சிந்தனையின் தொடர்ச்சியாகவே இதை பார்க்கிறேன். இதை ரொம்ப விளக்க கேட்டு முரண்டு பண்ணாதிர்கள். அதுவும் டோண்டு எழுதும் மட்டையடிகளையும், ஸ்வீப்பிங் கருத்துக்களையும், எந்த ஆதாரமும் தராமல் ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்ததாக சொல்லி முன்வைக்கும் பல செய்திகளையும் அப்படியே எடுத்துகொள்ளும் யாரும் என்னிடம் ஆதாரம், விளக்கம் கேட்டு வம்பு பண்ணாதீர்கள். மற்றவர்கள் புரிந்தால் புரிந்துகொண்டு, புரியாவிட்டால் பின்னூட்டத்தில் ஒரு தட்டி தட்டிவிட்டு போங்கள். 'நிலமெல்லாம் ரத்தம்' என்று பாரா எழுதிவருகிறார். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பிரச்சனையின் வேர்களில் தொடங்கி எழுதிவருகிறார். அதைபோல அல்லாமல் சில மட்டையடிகளை தருவதே என் நோக்கம். நிச்சயமாய் டோண்டு சொல்வதைவிட நம்பகதன்மையுடன் இருக்கும் என்று மட்டும் சொல்லிகொள்கிறேன் -அதில் எந்த பெருமையும் இல்லை எனினும். தொடங்கிவிட்டால், தொடர்ந்து எழுத ஒரு கட்டாயம் இருக்கும் என்று நினைத்து இப்போது தொடங்கிவிட்டேன். எனக்கிருக்கும் நேரம், ஆர்வம், சக்தி இதை பொறுத்து இதை தொடர்வேன். நேரநெருக்கடி காரணமாய் பின்னூட்டங்களில் பதில் சொல்லி விவாதிக்கும் நோக்கம் இல்லை. அவைகள் கணக்கில் எடுத்துகொள்ளப் பட்டு பின்னர் அது குறித்தும் எழுதப்படும். ஆர்வமுள்ளவர்கள் கிரிஸ்டோபரின் பதிவில் வரும் 'நிலமெல்லாம் ரத்தம்' தொடரையும் படிக்கவும்.

பேசப்போகும் பிரச்சனை உலகின் மிக சிக்கலான இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் anti-semitism என்ற யூத வெறுப்பு கருத்தியல் ஒர் தொற்றுவியாதியை போல ஐரோப்பாவை, குறிப்பாய் ரஷ்யாவை தழுவியிருந்த காலம். சரித்திரம் மீண்டும் மீண்டும், அவல நாடகமாய், ஒரே காட்சியை நிகழ்வேற்றுவது போல் ஐரோப்பாவின் பல இடங்களிலும் இந்த ஜுரம் மீண்டும் பரவலாயிற்று. கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் இதன் பாதிப்பை அனுபவித்து வந்த யூதர்களுக்கு, இந்நிலையிலிருந்து விடுதலை அடையும் ஒரே வழியாக, தங்களுக்கேயான ஒரு தனி நாட்டை உருவாக்குவது மட்டுமே பாதுகாப்பை தர முடியும் என்ற முடிவுக்கு வந்து ஜியோனிஸத்தை சில யூதர்கள் வழிமொழிந்தார்கள். உண்மையில் இந்த ஜியோனிஸத்தை எல்லா யூதர்களும் அப்போது ஏற்றுகொண்டார்கள் என்று சொல்லமுடியாது. பல யூதர்கள் யூதவெறுப்பு கருத்தியலையும், அது வெளிப்படும் அரசியலையும் நேரடியாய் எதிர்த்து போரடவே விரும்பினார்கள். பல பழைமைவாத யூதர்கள் யூத அரசு, மனிதர்களால் அல்லாமல் கடவுளால் மட்டுமே நிறுவமுடியும் என்று தீவிரமாய் நம்பிவந்தார்கள். ஆனால் ஜீயோனிசத்தை ஏற்றுகொண்டவர்கள் நாட்டிற்கான இடம் தேடுவதில் ஈடுபட்டனர். முதலில் அப்படி இப்படி பார்த்துவிட்டு பின்னர் தங்கள் பார்வையை பாலஸ்தீன மண்ணின் மீது செலுத்தினர். இதற்கு அவர்கள் காலகாலமாய் பின்பற்றிவரும் பாலஸ்தீனத்திலிருந்து வந்ததான நம்பிக்கைகளும், பல விவிலிய காரணங்களும் உண்டு. அப்போது பாலஸ்தீனை பற்றி அவர்கள் முன்வைத்த கோஷம் " நிலமில்லாத மக்களுக்காக, மக்கள் இல்லாத இல்லாத நிலம்' (a land without people for a people without land). ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பாலஸ்தீனம் மக்கள் இல்லாத வெற்று நிலமாக இல்லை.

இஸ்ரேல் மற்றும் பல வகையான இஸ்ரேல் ஆதரவாளர்கள் பரப்பி வரும் பல புளுகு கதைகளில் ஒன்று, 'பெரும்பாலான பாலஸ்தீனர்கள் 1917க்கு பிறகு அங்கே நுழைந்தவர்கள்' என்பது. இது குறித்து வந்த புத்தகங்களும், பிரச்சாரங்களும் பொய் என்று நிறுவப்பட்டுள்ளன. டோண்டு எடுத்து போட்ட மாதிரி ஜியோனிஸ அழைப்பை செவிமடுத்து யூதர்கள் " ...எல்லா விதமாகவும் வந்தனர். சிலர் நடந்து வந்தனர். சிலர் கப்பல்களில் வந்தனர். சிலர் விமானங்களில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 64 நாடுகளிலிருந்து வந்தனர்". ஆமாம், அந்த பெரும் வருகைக்கு முன் அங்கே வெற்றிடம் இல்லை. அங்கே இஸ்லாமியர்களை பெருமளவிலும், சிறுபான்மையினராக யூதர்களையும், கிருஸ்துவர்களையும் கொண்ட மக்கள் கூட்டம் அங்கே வாழ்ந்து வந்தது. ஜியோனிஸ யூதர்கள் வரத்தொடங்கிய போது ஒரு தெளிவான பாலஸ்தீன அடையாளத்தை வரித்து கொண்டு அங்கே இஸ்லாமிய, கிரிஸ்த்தவ சமூகம் வாழ்ந்துகொண்டிருந்தது.

பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மையாக்கும் (அதாவது பெரும் யூத அழிப்பை மேற்கொண்ட ஹிட்லர் கொண்டிருந்த) அணுகுமுறையுடன் ஜியோனிஸ்டுகளும், அவர்களை தீவிரமாய் ஆதரிப்பவர்களும் சொல்வது என்னவெனில் "தங்களின் பிதுரார்ஜித நிலத்தில் உரிமை கோரும் விதமாய் யூதர்கள் 19ஆம் நூற்றாண்டில் பாலஸ்தீன மண்ணுக்கு வந்தார்கள். நேர்மையான முறையில் நிலங்களை வாங்கி, ஒரு யூத சமூகத்தை ஸ்தாபிக்க விரும்பினார்கள். அதற்கு யூதவெறுப்பியலை(anti-semitism) கொண்டிருந்த அரேபியர்களிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதை எதிர்ப்பை சமாளிக்க வேண்டியும், தங்களை காத்துகொள்ளவும் *நிர்பந்திக்கப் பட்டு* எதாவது ஒரு வகையில் போராட நேர்ந்து அதுவே இன்று வரை வறாலாறாக இன்றுவரை தொடர்ந்து வருகிறது" என்பதுதான். அவிழ்த்துவிடப் பட்ட எத்தனையோ ஜியோனிஸ புளுகுகளை போல ஒரு அப்பட்டமான புளுகுதான் இது.

ஆவணங்களும், வறல்லாற்றாய்வுகளும் சொல்லும் கதை வேறு வகையானது. ஜியோனிஸ்டுகள் நோக்கமே ஒரு யூத நாட்டை, யூதர்களுக்கு மாத்திரமான ஒரு நாட்டை நிறுவுவது மட்டுமே. அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அங்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த மண்ணில் வாழ்ந்து வரும் அரபு இன மக்களின் நிலங்களை தங்கள் வசமாக்கி அவர்களை ஆண்டியாக்குவதாகத்தான் இருந்தது. இந்த காரியத்தில் பொதுவாகவே வல்லவர்களான யூதர்கள், அதில் பெற்று வந்த வெற்றி அரேபியர்களை பயத்தில் ஆழ்த்தியது. உலகின் பரவியிருந்த யூதர்களிடம் இருந்து உருவான 'யூத தேசிய நிதி'யில், யூதர்கள் பெயரில் வாங்கப்பட்ட நிலங்களை அரேபியர்களுக்கு விற்பதில்லை, ஒத்திக்கு கூட விடப்படுவதில்லை என்ற நியதியும் (இன்றுவரை) தொடர்கிறது.

ஜியோனிஸ்டுகளின் நோக்கங்களை புரிந்துகொண்ட அரேபியர்கள் அதற்கு மேலும் தொடர்ந்த யூத குடியேற்றத்தை எதிர்ப்பதிலும், நிலத்தை யூதர்களுக்கு விற்பதை தடுப்பதிலும் ஈடுபட தொடங்கினர். அரேபியர்களின் உயிர்வாழ்தலுக்கும், இருத்தலுக்கே ஆபத்தாகவும், சவாலாகவும் யூத குடியேற்றம் விளங்கியதாலேயே இதை செய்ய நேர்ந்தது. இந்த எதிர்ப்பின் காரணமாய் ஜியோனிஸ்டுகள் பிரிடீஷ் அரசின் (ராணுவ) ஆதரவு இல்லாமல் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்ற நிலை வந்தது. இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் கிட்டதட்ட 1200 ஆண்டுகளாக ஏழாம் நூற்றாண்டிலிருந்து, பாலஸ்தீன மண்ணின் பெரும்பான்மை மக்களாக அரேபிய இனத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான்.

சுருங்க சொல்லவேண்டுமெனில் ஐரோப்பாவிலும் உலகமெங்கும் தங்கள் உயிர்வாழ்தலுக்கும், இருப்புக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலின் காரணமாக பாலஸ்தீனத்தைல் தங்களுக்கேன நாடு ஒன்றை ஸ்தாபிக்க சென்ற யூதர்களின் கொள்கை எல்லா காலனி ஆதிக்கத்தை போல, அவர்களை ஓட ஓட விரட்டிய ஐரோப்பிய யூதவெறுப்பியலை போல, அங்கே ஏற்கனவே இருந்த மண்ணின் மைந்தர்களின் உரிமையையும், இருப்பையும் துச்சமாகவே நினைத்தது. அதற்கு அவர்கள் கூறிய நியாயம் ஐரோப்பாவில் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப் பட்ட இன அழிப்பு. மீண்டும் மீண்டும் இஸ்ரேல் ஆதரவாலர்கள் இந்த நியாயத்தையே முன்வைக்கின்றனர். டோண்டு சொல்வதை கூட பார்க்கலாம்.

"இஸ்ரேலை உலகப் படத்திலிருந்தே ஒழிப்பதுதான் என்றுக் கூறும் கூட்டத்தை அடக்குவது இஸ்ரேலின் கடமை. அதை அவர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் அதைத் தீவிரமாகத்தான் கையாள வேண்டும், கையாளுகிறார்கள். 1933-ல் பதவிக்கு வந்தப் பைத்தியக்காரன் உளறியதை சீரியசாக எடுத்துக் கொள்ளாததால் 60 லட்சம் பேரைப் பறி கொடுத்த இனம் யூத இனம். மக்கள்தொகையின் விகிதப்படிப் பார்த்தால் இது இந்தியாவில் 70 கோடியினர் இறப்பதற்குச் சமம்.

2000 வருட அடக்குமுறையின் போது யூதர்கள் எல்லாவித சமாதான முயற்சிகளையும் செய்துப் பார்த்து விட்டார்கள். அவர்கள் என்ன செய்தாலும் உதைக்கப்பட்டார்கள். உச்சக் கட்டமாக ஹிட்லர் யூதர்களை - பலர் வேறு மத்ங்களுக்கு சிலத் தலைமுறைகள் முன்னமே மாறியவர்கள் - சகட்டு மேனிக்குக் கொன்றான். உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆகவே இப்போது அவர்கள் மற்றவர்கள் தங்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. நல்லப் பெயர் வாங்கும் முயற்சியை விட்டு விட்டனர். உலகத்தாருக்கு இது புதிது. ஆகவே குதிக்கிறார்கள். "

இதற்கும் பேசப்படும் பாலஸ்தீன பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? இதைத்தான் இத்தனை ஆண்டுகளாய் ஜியோனிஸ்டுகள் பேசி வருகிறார்கள். ஜெர்மனியில் அவர்கள் வாங்கிய அடிக்கு பாலஸ்தீன மக்கள் என்ன செய்ய முடியும் என்பதுதானே எந்த முட்டாளுக்கும் தோன்றும் நியாயமான கேள்வியாய் இருக்கும். இந்த இடத்தில்தான் உலகின் புத்திசாலிகளான ஜியோனிஸ்டுகள், டோண்டுத்தனமான பதிலை மீண்டும் மீண்டும் சொல்லுவார்கள்.


இங்கே கவனிக்க வேண்டியது. அரேபியர்களின் ஜியோனிஸத்திற்கான எதிர்ப்பு ஐரோப்பா கொண்டிருந்த யூத வெறுப்பு கருத்தியலை போன்ற anti-semitic கருத்தாக்கம் அல்ல. தங்கள் உடமைகளும், உரிமைகளும், இருப்பும், நிலமும் பறிபோய்விடுமோ என்ற நியாயமான பயத்தில் வந்த பயம்.

ஆமாம், 'நிலமில்லாத மக்களுக்கான, மக்களில்லாத நிலம்' என்ற புளுகு கோஷத்தில் பேசப்பட்ட நிலம் 700,000 பாலஸ்தீன மக்களின் தாயகம். இங்கேதான் இந்த பிரச்சனையின் வேர்கள் நீளுகின்றன.

(சாவகாசமாய் எப்போது முடியுமோ அப்போது தொடரும்)

Post a Comment

45 Comments:

Blogger ROSAVASANTH said...

//உலகத்திடம் நல்ல பேர் வாங்குவது யாருக்கும் முக்கியமல்ல. அது முட்டாள்தனமானதும் கூட. அவரவர்க்கு அவரவர் வாழ்வுதான் முக்கியம். தன் இருப்பை நிலைநாட்ட ஓர் இனம் சாத்தியப்படும் எந்த வழியையும் உபயோகிப்பது தான் புத்திசாலித்தனம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

இதை எழுதியவர் வன்னியன். ஈழத்தமிழர். தங்கள் மீதான இன அழிப்பு குறித்து கூப்பாடு போடும் ஈழதமிழர்களுக்கு, இன்னொரு மக்கள் மீதான இன அழிப்பு குறித்து இப்படித்தான் பேச முடிகிறது. உலகத்தின் பிரச்சனையே இதுதான். ஐரோப்பாவில் அடிவாங்கிய யூதர்களுக்கு பாலஸ்தீனர்களின் உரிமைகள் ஒரு பொருட்டு அல்ல. ஒரு ஈழதமிழரும் 'நான் இஸ்ரேல் ஆதரவாளன்' என்று சொல்லும் பதிவில் இப்படி பின்னூட்டமிட முடிகிறது. ஒருவேளை 'நாங்கள் யூதர்கள் மாதிரியாக்கும்' என்று (நான் கூட முஸ்லீம்களை விரட்டிய போது அப்படி நினைத்தேன்) யாரோ சொன்னமாதிரிஉ இவரும் நினைக்கிறார் போலும்.

4/01/2005 8:14 PM  
Blogger வன்னியன் said...

ரோசாவசந்!
நான் ஏன் சொன்னேன் என்பதை அதற்கு டோண்டு கொடுத்திருக்கும் பதிலைக்கொண்டு புரிந்து கொள்ளுங்கள். அவர் சொல்லும் அத்தனை காரணிகளும் ஈழத்தமிழருக்குப் பொருத்தமாயிருக்கும்போது அதே டோண்டு ஏன் நேர்மாறான நிலைப்பாட்டையும் கருத்தையும் கொண்டுள்ளார், வெளிப்படுத்துகிறார் என்பதை அவர் மூலமே அறியும் முயற்சி தான்.
'ம்' நாவல் பற்றிய உங்கள் பதிவிலேயே கட்டாய ஆட்சேர்ப்பு பற்றியும் மற்றவர்களைத் தேவையில்லாமல் சாகக்கொடுக்கும் தலைமை பற்றியும் அவரது கருத்துக்களைப் பார்க்கவும். இதே டோண்டு அப்படியே பிளேட்டைத்திருப்பி யூதர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் ஆதரிப்பாராம். அதுமட்டுமல்ல இதையே மற்றவர்களுக்கும் வழிமொழிகிறார்.
எனது கருத்துப் பற்றிய உங்கள் கணிப்புத் தவறானது என்பதைத் தெளிவுபடுத்தவே இப்பதிவு. நான் எழுதியதில் ஓரளவாவது நையாண்டித்தனம் உள்ளதென்றும் அதுவே என்னை இப்படியான புரிதலிலிருந்து விடுவிக்குமென்றும் நம்பியது பிழைபோலுள்ளது. எனினும், இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?என்று டோண்டுவைக் கேட்டதில் கூட என் நோக்கம் புரியவில்லையா?

விடுதலைப்புலிகளின் பரப்புரைக்குள்ளால் வளர்ந்தவன் நான். (இதைச் சொல்வதில் எனக்கு எந்தக் கிலேசமுமில்லை.) பாலஸ்தீன விடுதலைப்போராட்டம் பற்றிய விடுதலைப்புலிகளின் நிலை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வெளிப்படையாகவே அவர்கள் ஆதரவு தரத் தயங்கியதில்லை. யாசீர் அரபாத்தின் மறைவுக்குக் கூட பகிரங்க அறிக்கை வெளியிட்டவர்கள். மேலும் இஸ்ரேலின் நயவஞ்சக அணுகுமுறையால் நேரடியாக மறைமுகமாக (மொசாட் உட்பட)அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாம்; பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் நாம். எனவே இஸ்ரேலை ஆதரித்துப் பேச எந்த முகாந்திரமுமில்லை என்பதோடு பலஸ்தீனியரை ஆதிரிக்க எந்தத் தயக்கமுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்ன செய்ய? டோண்டு சரியாக விளங்கி எனக்கான பதிலைத் தந்து விட்டார். நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டதுதான் மிச்சம்.

4/01/2005 9:05 PM  
Blogger dondu(#4800161) said...

அடப்பாவமே. வன்னியன் என்னை மடக்குவதாக நினைத்துக் கொண்டு அப்பின்னூட்டத்தை இட்டிருக்கிறார். நான் வெறுமனே ஆமாம் போடுவேன், அதை வைத்துக் கொண்டு என் புலிகள் எதிர்ப்பைக் கொஞ்சம் சதாய்க்கலாம் என்பதுதான் அவர் எண்ணம். அதை உணர்ந்துக் கொண்டு நான் தேவையானப் பின்னூட்டம் இட்டேன்.
நீங்கள் அவருக்கு அநீதி இழைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/01/2005 9:06 PM  
Blogger ROSAVASANTH said...

வன்னியன், மன்னிக்கவும். பதிவை அவசரமாய் எழுதிவிட்டு, வீட்டுக்கு ஓடுவதில் சரியாய் புரிந்துகொள்ளவில்லை. தவறாய் எழுதியதற்கு மன்னிக்கவும். நாளை விரிவாய் எழுதுகிறேன். நன்றி!

4/01/2005 9:25 PM  
Blogger ROSAVASANTH said...

வன்னியன், இப்போது நிதான்பமாக மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். சிந்தனைக்கோ, பரிசீலனைக்கோ இடமில்லாத அவசரம். மீண்டும் எனது கடமையாக நினைத்தே இந்த பதிவை எழுதினேன். ஏப்ரல் முட்டாளாக ஆனதாக நினைத்துகொள்ளவும்!

மற்ற படி டோண்டு சொன்ன பதிலை கவனித்தீர்களா? நீங்கள் சொன்ன 'புத்திசாலித்தனத்தை' அவர் ஆமோதிக்கத்தான் செய்கிறார். அதை உணமியிலேயே புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும் என்பதுதான் அவர்ப் அறிவுரை!

4/01/2005 9:42 PM  
Blogger வன்னியன் said...

நன்றி வசந்த்.

4/01/2005 9:45 PM  
Blogger Muse (# 5279076) said...

Rosavasanth,

1. In his post Dondu sir has not said that the jews came to Israel only at the end of second world war, but they came in huge numbers at the end of the war with the intention to proclaim Israel as their own country.

2. Every race had their own land before they moved out (for various reasons) to other places. Which one was the land of the jews before they have occupied Israel? I think that they are not aliens (or are they?).

3. You said:

"ஆனால் ஜீயோனிசத்தை ஏற்றுகொண்டவர்கள் நாட்டிற்கான இடம் தேடுவதில் ஈடுபட்டனர். முதலில் அப்படி இப்படி பார்த்துவிட்டு பின்னர் தங்கள் பார்வையை பாலஸ்தீன மண்ணின் மீது செலுத்தினர்."

The books I read inform me that Jews have the belief that one day they will return to their ancestral (promised) land (including the holy books of Jews and christians). Is their holy book written at/after second world war? Please enlighten me. I have been carrying this incorrect belief that the testament of the jews and the beliefs it spread are as old as egyptian pyramids.

Do you know which is the country that has a large number of Jews? It is not Israel, it is USA. That is the main reason why USA supports Israel more than any other country. Then why did they wanted Israel? My understanding is that it is because it is their promised land (as per their religious belief).

4. I have heard another story that the actual promised land that God promised to Abraham is not Israel, but Kashmir; Abraham mistook Israel as their promised land. History is always "his" "story." I would like to know your story.

5. In the article you missed an important event (may be you wanted to write about it later). Palestine was under the rule of British and when they gave freedom to it they separated it into two parts: one as Israel and another as Palestine. It is similar to India and Pakistan. Your narration makes the impact that actually Jews came and occupied the land ruled by Palestine.

The official fight of the Palestine is over some of the occupied land (such as gaza strip) and not for entire Israel (may be I am wrong). But the intention of the whole Islamic world is to throw the Jews into sea.

With all the anti-semitic feelings in almost all the christian world, anti-jewish feeling in many parts of the europe, religious antagonism of the Islam world, they understood that only with a country of their own they can get political power; only with political power they can survive. They implemented what they understood.

6. The real irony of life is things that are similar in many ways stand against each other!

Though the Tamil people in Ealem and Israelies have almost similar problems, they are against each other because of the power bases behind each of them are mutual enemies.

I hope both of your postings (yours and Dondu sir's) will be more useful as they represent each of the sides.

4/01/2005 10:45 PM  
Blogger Muse (# 5279076) said...

This comment has been removed by a blog administrator.

4/01/2005 10:50 PM  
Blogger dondu(#4800161) said...

இப்போதிருக்கும் தலைமைக்கு அந்த புத்திசாலித்தனம் அறவேயில்லை என்பதையும் எழுதினேன். எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவை ஒரேயடியில் இழந்தது மற்றும் தன் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொண்டு ஊரார் பிள்ளைகளுக்கு பெல்ட் பாம் கட்டுவது ஆகியவையே இத்தலைமையின் சாதனை என்பதை யாரும் புரிந்துக் கொள்ள முடியும்.
ஒரு யூதப் போராளி இவ்வாறு செய்யவே மாட்டான். அராஃபாட் செய்தார் அல்லது அதைச் செய்தவரை ஆதரித்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

4/01/2005 11:01 PM  
Blogger dondu(#4800161) said...

The ninth comment has been hanging for a long time. Let me try and see whether the tenth comment takes it into the blog.
Regards,
Dondu Raghavan

4/01/2005 11:47 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ரோசா பார்ப்பனியத்தின் எதிரி என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாவிட்டாலும் அதன் தொடர்ச்சியில் பார்ப்பனியக் குறியீடுகளை நிலைநிறுத்தப் பாடுபடும் டோண்டு போன்றவர்களுக்கு பதிலடியாக நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்தப் பதிவை வரவேற்கிறேன்.ஈழத்தில் இருந்து அனுபவித்த எவனும் இஸ்ரேலுக்குச் சாதகமாகக் கதைக்கமாட்டான்.

டோண்டு ஐயா பிரபாகரணைப் பற்றி நீங்கள் கூறியதற்கு ஏற்கனவே இதே பதிவில் பதில் சொல்லியிருக்கிறேன்.உலகத்தில் எந்தவொரு தலைவரும் செய்யாததை அவர் செய்யவில்லை.சில சில விடயங்களில் தவறான முடிவுகள் எடுத்தது உண்மை.அதையிட்டு நான் விசனமும் அடைந்திருக்கிறேன் அதையும் இங்கே குறிப்பிட்டுக்கொள்கிறேன்.ஆனால் அவர் பிள்ளைகளை வெளியில் அனுப்பிப் படிக்க வைத்தார் என்பதில் கவலைப்பட எதுவுமில்லை.வீட்டுக்கொருவர் போராட வரவேண்டும் என்றே கேட்டார்கள்.பிரபாகரன் வீட்டிலிருந்து அவர் வந்திருக்கிறார்.பிள்ளைகளும் போராட வரவேண்டும் என்பது எவ்வகையில் நியாயம்.அவரது இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் அதையே செய்திருப்பீர்கள்.
பிரபாகரன் விரும்பியிருந்தால் றோ தருவதாகச் சொன்ன பலமில்லியன் டொலர்களை வாங்கிக்கொண்டு தலைமறைவாகியிருக்கலாம்.செய்யவில்லை அவர் அரபாத்திடமிருந்து பாடம் கற்றவர் இஸ்ரேலிடமிருந்து அல்ல.

4/02/2005 12:53 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

டோண்டு தேவை இல்லாமால் ஈழ தலைமையை இழுக்கிறார். இது தேவை இல்லாத குற்றசாட்டு. ஈழ மக்கள் படும் துயரம், தன் மண்ணை காப்பாற்ற தன் உயிரை துச்சம் என் மதித்து தன்னையே விலை கொடுக்கும் குணம், உலக நாடுகளில் பரவலாக பரந்து கிடந்தாலும் தன் மண்ணை, மக்களை எப்பொழுதும் நினைக்கும் குணம், தன்னுடைய வருவாயில் பெரும் பங்கை தன் இன மக்களுக்கு செலவு செய்யும் தாராள குணம், எல்லாவற்றிக்கும் மேலாக தன் மக்களின் மீது இனமான பற்று, மொழி மீது தீராத காதல் இவை எல்லாம் சோவின் ஆதரவாளர் ஆன டோண்டுவிற்கு புரிய வாய்ப்பில்லை!!! என் சிறிய அறிவிற்கு எட்டியவரை ஈழ தமிழனின் போரட்டத்தை உணராதவர், இஸ்ரேல் யூதர்களை ஆதிரிப்பவர் "பார்ப்பனியத்தை உள்வாங்கியவர்கள்" இவர்களிடன் நாம் பேசி பலன் இல்லை.
நன்றி. வணக்கம். மயிலாடுதுறை சிவா...

4/02/2005 1:17 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

This comment has been removed by a blog administrator.

4/02/2005 1:18 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

This comment has been removed by a blog administrator.

4/02/2005 1:18 AM  
Blogger dondu(#4800161) said...

"டோண்டு தேவை இல்லாமால் ஈழ தலைமையை இழுக்கிறார். " நான் இழுக்கவில்லை. இழுத்தவர் வன்னியன் அவர்கள். அதற்கானப் பதிலைப் பெற்றுச் சென்றார். அதைப் புரிந்துக் கொள்ளாது ரோஸா அவர்கள் மற்றொருப் பின்னூட்டமிட மறுபடி எடுத்துக் கூற வேண்டியதாயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்

4/02/2005 1:29 AM  
Blogger Thangamani said...

பார்ப்பனியத்துக்கும், யூத நம்பிக்கைக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இருநம்பிக்கையாளர்களும் தங்களை 'தேர்ந்தெடுக்கப்பட்ட சிலராக' (Chosen few) கருதிக்கொண்டு அதற்கேற்ப கருத்தியல்களை உருவாக்கி அதை நம்பி, மற்றவர்களையும் நம்பச் சொல்லி சுரண்டியவர்கள். இருவரும் சுரண்டலுக்கு பெயர் போனவர்கள் (பேராசைக்காரனடா பார்ப்பான்.. என்பான் பாரதி) இன்றளவும் அமெரிக்காவின் சுரண்டல் கொள்கைகளுக்கு வடிவமைப்பவர்கள் அவர்கள்தான்.
விடுதலைப்போராட்டம் என்பதை இருநம்பிக்கையாளர்களும் அறியாதவர்கள். ஒன்று அதை கேலி பேசி தங்களைக் காத்துக்கொள்வார்கள் அல்லது வலுவானவன் பக்கம் சேர்ந்துகொண்டு சகல சதிகளையும் பயன்படுத்தி அடக்குமுறையை சாதிப்பார்கள். இதையும் இரு நம்பிக்கையாளர்களிடமும் காணலாம். கிறிஸ்த்துவர்களால்தான் யூதர்கள் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர். அதே யூதர்கள் கிருஸ்த்துவ அடிப்படைவாத நாடான அமெரிக்காவின் அடிவருடியே இப்போது பாலஸ்தீனர்களை ஒழிக்கின்றனர். இதையே பாரதி பேராசைக்காரனடா பார்ப்பான் - ஆனால் பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான், யாரானாலும் கொடுமை (சேர்ப்பான்) என்று லோக்கல் எடுத்துக்காட்டு கொடுக்கிறார்.

ஈழப்போராட்டம் அவர்களை மிகவும் எரிச்சலடையச் செய்வது மிக இயல்பானது. JKLF-யை செய்தது மாதிரி இங்கேயும் குழுக்களை உருவாக்கி உள் மோதல்களை நிகழ்த்தி, போராட்டத்தை பலவினப்படுத்தி தங்கள் எஜமானர்களிடம் காசும், பதவியும் பார்க்கலாம் என்றால் அது ஈழத்தில் நடக்கமாட்டேன் என்கிறது. மாத்தையா, கருணா என்று எவ்வளவோ தலையால் தண்ணி குடித்துத்தான் பார்க்கிறார்கள். கருணாவின் கட்டிலருகேயே போய் இந்து கிடந்துபார்த்தது.

என்ன செய்வது? வயிற்றெரிச்சல் வராமல் என்ன செய்யும்? இந்திரா கொல்லப்பட்ட போது 20000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆலமரம் சாய்ந்தால் இப்படித்தான் அடியில் உள்ள சிறுசெடிகளும், உயிர்களும் அழியவேண்டியதுதான் என்று அதற்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு, மூளையும், இதயமும் படைத்த இராசீவுக்கு இவர்கள் போட்டுக்கொடுத்துத்தான் இந்திரா சென்ற திசைக்கு நேர் எதிர்திசையில் அழைத்துச் சென்று எல்லா விளைவுகளுக்கும் காரணமாக நின்றார்கள்.

ஹிட்லர் ஜெயிக்கவில்லையே என்று இப்போது நான் வருத்தப்படுகிறேன்.

4/02/2005 4:58 AM  
Blogger kirukan said...

சென்ற வருடம் நான் படித்த ஒரு கருத்துக்கணிப்பை பற்றி கூற விரும்புகிறேன். B.B.C நடத்தியது என நினைக்கிறேன்.

அதில 50% அதிகமான மக்கள் கூறியது இது தான்.இஸ்ரேல் என்ற நாடு உருவானதது தான் இன்றைய அனைத்து பயங்கரவாத பிரச்சனைகளுக்கும் ஒரே காரணம்.

4/02/2005 5:02 AM  
Blogger ROSAVASANTH said...

பெயரிலி..

http://wandererwaves.blogspot.com/2005/04/11.html

நான் எழுதியது.

அடப்பாவி, பெரிய ஆளைய்யா நீர்! அவசர குறிப்பு என்று சொல்லிவிட்டு இத்தனை விரிவாய் எழுத முடியுமா? நானும் அவசர குறிப்புதான் எழுதப்போனேன். மட்டையடிகள்தான் வருகின்றன.

தங்கமணியின் பின்னூட்டம் குறித்து உங்கள் கருத்துதான் எனக்கும். ஆனால் அது சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வந்துள்ளதாக நினைக்கிறேன். சில சமயங்களில் ஜியோனிஸ புளுகுகளை, அவர்கள் போடும் ஆட்டங்களை பார்க்கும்போது இப்படி ஒரு கோபம் எனக்கும் வருவதுண்டு. அப்படி ஒன்றின் வெளிப்பாடாகத்தான் தங்கமணி எழுதியதை பார்கிறேன். (வேறு சில நல்ல நண்பர்களுக்கும் இப்படி ஒரு கோபம் வந்து, இதே வாக்கியத்தை உதிர்த்து கேட்டிருக்கிறேன்.)

நல்ல பதிவு. தொடர்ந்து டோண்டு சாதனை படைத்து வருகிறார். சோ பற்றி எழுதினார். தங்கமணியின் சோ குறித்த நல்ல பதிவு வந்தது. பெரியார் குறித்து எழுதினார். சுந்தரமூர்த்தி பெரியார் பேச்சுகளை நேரடியாய் எடுத்து போட்டு பயனுள்ள வேலைகள் நடக்கிறது. இப்போது உங்களின் நல்ல பதிவு. அதற்காக இதை 'நாரதர் கலகமாக' பார்க்கும் மயக்கம் எனக்கு வராது. அதுவும் டோண்டு ஒவ்வொருமுறையும் வெளிப்பட்டு போகும்போது!

4/02/2005 7:23 AM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.

தங்கமணி, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. ஒரு பக்கம் யூதர்களின் செயல்பாட்டை புரிந்துகொள்வதிலும், அணுகுவதிலும்தான் இந்த உலகின் சிக்கலை அவிழ்பதற்கான ஒரு சாவி கிடைக்ககூடுமென்று தோன்றுகிறது. பல யூத குணங்கள் அவர்கள் மட்டுமே பேணி வரும் தனித்தன்மையானதாயினும், மற்ற சமூகம் எதுவும் யூதர்களிடமிருந்து பெரிதாய் வேறு படும் என்று தோன்றவில்லை. எல்லா சமூகத்திற்கும் தனது இருப்பு கேள்விக்குள்ளாகும்போது, மற்ற சமூகத்தின் உரிமைகள் ஒரு பொருட்டாவது இல்லை. யூதர்கள் அதன் எக்ஸ்ட்ரீம் உதாரணம் என்று மட்டுமே தோன்றுகிறது.

மற்றபடி பல பார்பனிய குணக்களுக்கும் யூத பழமைவாதத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து நீங்கள் கூறியது உண்மை. நான் அதை சில யூதர்களிடம் நேரடியாகவே அவதானித்திருக்கிறேன்.

மீதி சிறிது நேரத்தில்!

4/02/2005 7:30 AM  
Blogger ROSAVASANTH said...

சில குறிப்புகள்

1. இந்த பதிவை எழுதிய போது நான் உணர்ச்சி வசப்படவில்லை. ஆனால் டோண்டுவின் பதிவின் தலைப்பை பார்த்ததும் கோபம் வந்தது எனபதில் சந்தேகமே இல்லை. இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எனது சிந்தனைகளுக்கு ஒரு ஆதர்சமான பெரியாரை பற்றி டோண்டு தொடர்ந்து எழுதிய எதுவும் என்னை கோபம் கொள்ள வைக்கவில்லை. எல்லாவற்ரையும் ஜாலியாக எடுத்துக் கொண்டேன். ஏனெனில் அந்த விஷயத்தில் டோண்டு தனது அடையாளம் சார்ந்து வேறு எதையும் சிந்திக்க முடியாது. எதை கொண்டுபோய் பெரியார் தலையில் போடலாம் என்றுதான் அவரால் யோசிக்க முடியும். அதனால் அவர் எழுதியதை எல்லாம் நகைச்சுவையாய் எடுத்துகொண்டேன்.

இஸ்ரேல் குறித்து அவர் என்ன எழுதுவார் என்று யூகிக்க பெரிய மூளையெல்லாம் தேவையில்லை என்றாலும், 'இஸ்ரேல் ஆதரவாளன்' என்று தலைப்பு கொடுத்தது மிகுந்த கோபத்தை கிளப்பியது. வாழ்க்கையில் வன்முறையின் சின்ன பாதிப்பை கூட அடையாத தயிர்வடை வாழ்க்கையை கொண்ட ஒருவர், வன்முறையாலேயே எல்லாவிதத்திலும் நிர்ணயிக்கபடும் மற்ற வறலாறு குறித்து பேசும் தொனிதான் மிகவும் எரிச்சலூட்டுகிறது. ஈழப்பிரச்சைனையிலும் இதே அணுகுமுறைதான் இவரிடம் வெளிப்படுகிறது. இதுதான் தயிர்வடைகளின் வன்முறை.

2. 'பார்பனியம்' என்ற வார்த்தையே இந்த பிரச்சனை குறித்து பேசும் போது தேவையற்ற ஒன்று என்றுதான் நினைக்கிறேன். ஆனால் டோண்டு சொல்லும் விஷயங்கள் சரியா தப்பா என்பதோடு மட்டும் என் கேள்வி நின்றுவிடுவதில்லை. எதற்காக ஒரு யூதரல்லாத ஒருவருக்கு, யூதரைவிட இன்னும் தீவிரத்துடன் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கவேண்டிய அவசியம் வருகிறது என்று யோசிக்க வேண்டும். இப்படி யோசிக்கும் போதுதான், இது பார்பனிய பண்பாக தெரிகிறது. அது வெளிப்படையாக வெளிப்படுவது மட்டுமே, பழைமைவாத பார்பனிய பண்பாக (அதாவது அவ்வளவு ஆபத்தில்லாததாக) பார்கிறேன்.

3. வன்னியன் எழுதியதை அவசரமாய் புரிந்து கொண்டு எழுதியதற்கு மீண்டும் மன்னிப்புகள். டோண்டுவின் பதிவில் பின்னூட்டமிடும்போதும் சரி, அங்கே படிக்கும் போது சரி, ஒரு நிலைகொள்ளாத நிதானமின்மையுடனேயே செய்ய முடிந்தது. அதுவும் ஒரு காரணம்!

4. Muse சொன்ன படி இஸ்ரேல்/பாலஸ்தீன் பிரிவினைக்கு பிரிடீஷ் காரணம். அடுத்த பதிவில் வரும். அதைத்தான் "இந்த எதிர்ப்பின் காரணமாய் ஜியோனிஸ்டுகள் பிரிடீஷ் அரசின் (ராணுவ) ஆதரவு இல்லாமல் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்ற நிலை வந்தது. " என்று குறித்திருக்கிறேன். நிலமையை பொருத்து இந்த பதிவுகள் தொடரும். என்னைவிட இது குறித்து நன்றாய் அறிந்தவர்கள் பலர் இருக்கலாம்-இப்போது பெயரிலி எழுதியது போல. அவர்கள் இன்னும் விரிவாய் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். நான் எழுதுவது பொதுவாக இன்றுவரை செய்யப்பட்டுள்ள பிரச்சாரத்திற்கு எதிர்வினையான சிலவற்றை சொல்வது மட்டுமே.

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

4/02/2005 8:06 AM  
Blogger Thangamani said...

நன்றிகள் ரோசாவசந்த்!

4/02/2005 9:10 AM  
Blogger டிசே தமிழன் said...

ரோசாவசந்த், நல்ல பதிவு.
டோண்டுவினது பதிவை வாசித்துவிட்டு இரத்தக்கொதிப்பில் இருந்த எனக்கு உங்களது இந்தப் பதிவு கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்தது. மிகவும் நன்றி.

4/02/2005 2:24 PM  
Blogger Moorthi said...

காலைமுதல் நான் டோண்டு அய்யா வலையிலும் உங்கள் வலையிலும் இட்ட பின்னூட்டங்கள் காணப்படவில்லை. ப்ளாக்கர் சொதப்புது.

பெரிய பின்னூடம் அது! மறுபடியும் கைவலிக்க என்னால் இடமுடியாது என்பதால் ஒரு சில வரிகள்...

பாலஸ்தீனப் பிரச்னையை அமெரிக்காவும் இங்கிலாந்தும் நினைத்திருந்தால் எப்போதோ தீர்த்து இருக்கலாம்!

4/02/2005 4:00 PM  
Blogger Narain said...

வரலாற்று விஷயங்களில் நான் கொஞ்சம் வீக். அதனால், மற்றவர்கள் மாதிரி என்னால் மேற்கோள் காட்ட இயலாது. ஆனால், பிரபாகரனின் தலைமை பற்றி திரு. ராகவன் வீசியிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வசந்த் அருமையாக ஒரு வார்த்தை சொன்னார்
//வாழ்க்கையில் வன்முறையின் சின்ன பாதிப்பை கூட அடையாத தயிர்வடை வாழ்க்கையை கொண்ட ஒருவர், வன்முறையாலேயே எல்லாவிதத்திலும் நிர்ணயிக்கபடும் மற்ற வறலாறு குறித்து பேசும் தொனிதான் மிகவும் எரிச்சலூட்டுகிறது.//
இங்கே அது தான். எதிர்திசையில் பேசுவது அதனை மல்லுக்கட்டுவது என்பது ஒரு விதமான திறமையே. அவரின் திறமையை வாழ்த்துகிறேன். ஆனால், திறமையாய் இருப்பதை விட மனிதனாய் இருப்பது மிக அவசியம்.

உலகம் முட்டாள்களால் நிரம்பியிருந்தால் பிரச்சனைகள் பெரிதாக இல்லை. ஆனால், குயுக்தியுடன் சிந்திக்கும் நிறைய புத்திசாலிகளால் தான் இவ்வளவு பிரச்சனைகளும். ராகவனின் பதிவையும், உங்களின் பதிவையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். தொடரட்டும் திரிபுகளின் உடையவிழ்ப்புகள்

4/02/2005 4:51 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி டீஜே, மூர்த்தி, நாராயணன்.

இன்னும் 6 மாதங்கள் குடும்ப சூழலிலும், வேலையிலும் மிகவும் நெருக்கடியான மாதங்கள். என்னால் முடிந்த வரையில் இதை தொடர்வேன். அதற்கு என்னை கட்டாயபடுத்தும் வகையிலேயே இங்கே தொடங்கியிருக்கிறேன்.

4/02/2005 9:02 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

எழுதினால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம்

4/02/2005 10:37 PM  
Blogger Wordsworthpoet said...

வல்லவன் வாழ்வான்; வல்லவன் மட்டுமே வாழ்வான்.

பார்ப்பனரை அழிக்க முடியாது; முடியவே முடியாது.

இஸ்ரவேல் எல்லாவற்றையும் அடக்கி ஆளும்; அடிமைப் பட்டு போகாது.

4/02/2005 10:51 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

வசந்த்,

டோண்டு இராகவன் ஓய்வு பெற்ற வாழ்க்கையில் பற்ற வைத்துப் போட்டு உங்களைப் போன்றவர்களின் நேரத்தில் (பிழைப்பில்!) மண்ணையள்ளி போடுகிறார் என்று நினைக்கிறேன். இஸ்ரேல் பற்றிய அவருடைய தொடர் அந்த நோக்கில் எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது. பெரியாரைப் பற்றி அவர் எழுதியதற்கு வந்த மறு மொழிகளுக்கு உருப்படியான பதிலைச் சொல்லாமல் இப்பொழுது இஸ்ரேல் பக்கம் தாவியிருக்கிறார். அவரிடம் வாதம் பண்ணுவதெல்லாம் வீண்தான்.

இருந்தாலும் வந்து போகிறவர்களுடைய கருத்துக்களில் அவை நஞ்சைக் கலக்கும் என்பதனால் எதிர்த்து எழுத வேண்டும் என்பதும் மிகத்தேவையான ஒன்று. உங்கள் போர்க்குணத்தை பாராட்டுகிறேன். இருந்தாலும் உங்களையும் மற்றவர்களையும் எச்சரிக்கிறேன், உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். ஓய்வு நேரத்தில் மட்டும் எழுதுங்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

4/03/2005 7:58 AM  
Blogger ROSAVASANTH said...

கருத்துக்கும் அக்கறைக்கும் மிகவும் நன்றி சங்கரபாண்டி. உண்மையில் நீங்கள் பரிந்துரைத்த தீர்மானத்தில்தான் நானும் இருக்கிறேன். இங்கே எழுதுவது பெரிய பிரச்சனையில்லை. ஆனால் ஒரு விவாதத்தில் ஈடுபடுவது, அதை பின் தொடர்வது, பதிலளிப்பது இவை எல்லாம் மிகுந்த நேரத்தை எடுத்துகொள்வதாய் இருக்கிறது.

அதனால் எனக்கு அதிகரித்திருக்கும் நெருக்கடிகளை மனதில் கொண்டு இனி பின்னூட்டம் எங்கும் இடுவதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன். ஒரு வேளை எது குறித்தேனும் கருத்து தெரிவிக்கும் கட்டாயம் நேர்ந்தால் அது நிதானமான பொழுதில் இங்கே பதிய முடிவெடுத்திருக்கிறேன். குறைந்த படசம் அடுத்த இரண்டு மாதத்திற்கு இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை பெருமளவு குறைத்து கொள்வதாய் இருக்கிறேன்.

என் மற்றும் பெயரிலியின் பதிவை படித்து ரத்த அழுத்தம் குறைந்ததாக டீஜே சொன்னார். கிட்டதட்ட அது போல ஒரு நிதானத்தை, சமனை எனக்குள் ஏற்படுத்திகொள்ளும் சுய அக்கறையிலேயே இதை எழுத தொடங்கினேன். இஸ்ரேல்/பாலஸ்தீன பிரச்சனை குறித்து சில அடிப்படை விஷயங்களை மட்டும் முதலில் எழுதலாம் என்று இருக்கிறேன். குறிப்ப்பிட்ட இடைவெளியில் வளமையாய் செய்ய முடியாது. இஷ்டத்திற்கு எழுத முடிவு செய்துள்ளேன்.

அசோகமித்திரனின் அவுட்லுக் கட்டுரை படித்து அது குறித்து எழுத தூண்டினாலும் இப்போது முடியாது. என்னை பொறுத்த வரை சந்தேகமில்லாமல் அசோகமித்திரனின் எழுத்துக்கள் வாழ்வு குறித்து சில முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. இந்த வகையில் முக்கியமான எழுத்தாளரான, எத்தனையோ விஷயங்களை படித்த புலமை பெற்ற ஒருவரும் எப்படி அபத்தமாய், குறைந்த பட்ச சுய விமர்சனம் இல்லாமல், தன் அடையாளத்தை முழுமையாய் சார்ந்து மட்டுமே எழுத முடியும் என்பதற்கான உதாரணம் அவுட்லுக் கட்டுரை. நாம் எப்படிபட்ட கேவலமான சூழலில் இயங்குகிறோம் எனபதற்கான முக்கிய உதாரணமாய் இது படுகிறது.

இந்த சூழல் சிலவற்றை எழுதுவதும், சிலவற்றை எழுதாமல் இருப்பதும் பெரும் சவாலாய் இருக்கிறது. இதற்கிடையில் எந்த விதத்த்லும் இழக்க இயலாத குட்டி பூர்ஷ்வா வாழ்க்கை. பார்கலாம்!

4/03/2005 9:29 PM  
Blogger dondu(#4800161) said...

"பெரியாரைப் பற்றி அவர் எழுதியதற்கு வந்த மறு மொழிகளுக்கு உருப்படியான பதிலைச் சொல்லாமல் இப்பொழுது இஸ்ரேல் பக்கம் தாவியிருக்கிறார். அவரிடம் வாதம் பண்ணுவதெல்லாம் வீண்தான்."
பெரியார் 1965-ல் ஹிந்தி ஆதரவுக் கட்டுரைகளை விடுதலையில் வெளியிட்டது பற்றி நான் குறிப்பிட்டதை சௌகரியமாக இக்னோர் செய்தார்கள். நான் ஒவ்வொருவருடையப் பின்னூட்டத்துக்கும் பதில் கொடுத்துதானே வந்திருக்கிறேன்?
சரியாகப் பதில் கொடுக்காமல் பார்ப்பனிய சதி என்றெல்லாம் பேசுபவர்களுடன் என்னதான் பேசுவது?
என்னுடையப் பார்ப்பன அடையாளங்களைப் பற்றி நான் எழுதியக் கடைசிப் பதிவிலும் அதை பற்றிப் பேசாமல் இஸ்ரேல் பதிவுக்கானப் பின்னூட்டங்களே வந்துள்ளன. ஒரு வேளை ப்ளாக்கர் சொதப்பலால் இஸ்ரேலைப் பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லைப் போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

4/03/2005 10:23 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy) said...

//என் மற்றும் பெயரிலியின் பதிவை படித்து ரத்த அழுத்தம் குறைந்ததாக டீஜே சொன்னார். //

இப்போதெல்லாம் சிலரின் பதிவுகளைப்படிக்கையில் சிரிப்புதான் வருகிறது. ரத்த அழுத்தம் வரும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்பது என் கருத்து. அதுவும் அபத்தக் களஞ்சியப் பதிவுகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வீணாக டென்ஷன் ஆக வேண்டியதில்லை[இது எனக்கு நானே சொல்லிக்கொண்டு செயல்படுத்தியது]

ஆனால், இம்மாதிரியான பதிவுகள் தேவை. அதே நேரத்தில் கொஞ்சம் நிதானமாக ஸ்டேட்மெண்ட் விடாமல் எழுதுவது மிகவும் நல்லது. சுந்தரமூர்த்தியின் கடைசிப் பதிவைப்போலவோ பெயரிலியின் கடைசிப்பதிவைப்போலவோ அருள் கந்தசுவாமியின் கார்ட்டூன் போலவோ நச்சென்று இருத்தல் நல்லது.

நீங்களும் தேவையில்லாத பின்னூட்டங்களைக் குறைத்துக்கொள்வதாகச் சொன்னது நல்ல விஷயம். தொடர்ந்து எழுதுங்கள்.
-மதி

4/03/2005 11:00 PM  
Blogger KARTHIKRAMAS said...

//இந்த வகையில் முக்கியமான எழுத்தாளரான, எத்தனையோ விஷயங்களை படித்த புலமை பெற்ற ஒருவரும் எப்படி அபத்தமாய், குறைந்த பட்ச சுய விமர்சனம் இல்லாமல், தன் அடையாளத்தை முழுமையாய் சார்ந்து மட்டுமே எழுத முடியும் என்பதற்கான உதாரணம் அவுட்லுக் கட்டுரை.// இந்த இடத்தில்தான் , எழுத்தாளர்களை இரண்டாம் பட்சமாய் பார்க்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்படுவதுண்டு. இது அவர்களது போலித்தனத்தை காண்பிப்பதாய் நிச்சயம் பார்க்கமுடியும். இப்படித்தான் சுரா பற்றிய சமீபத்தைய விமர்ச்சனத்தை வைத்தேன். உண்மையில் மன் உளைச்சலில் மட்டும்தான் இஅர்கள் உண்மையாய் எழுதுகிறர்கள் எனச் சொல்லலாம். இந்தப்பட்டியலில் வராத எழுத்தர்கள் சிலர் என் சொல்லலாம்

நீங்கள்ள் கேட்ட ஏழாவது உலக ஜெயமோகனை எப்படி பார்ப்பது என்ற கேள்விக்கு இது போல் ஒரு தருணம் வரும் வரை பொறுக்கலாம். ;-)

4/04/2005 3:11 AM  
Blogger VAIKKAMPEN said...

ஓத்தா ஒங்குமாலே! ஏண்டா தாயாளிங்களா இப்படி சாவு அடிக்கறீங்க! பாப்பானுக்கு புத்தி இல்லாம பெனாத்தறான். பறையன் பழைய பாப்பானா மாறறான். எடையில வன்னியனும் வீணாப்போறான். எலங்க இண்டியான்னு மாச்சு கோச்சு நீச்சு வேறே! வாழுமாடா தமிழு ஒங்கோத்தா ஒங்கோமாலே! சோலியப்பாருங்கலே பாருங்கலே, குடும்பத்த பாருங்கலே! ஒங்கோத்தா ஒங்கோமாலே!

4/04/2005 6:21 AM  
Blogger ROSAVASANTH said...

மதி முதன் முதலாய் என் தளத்தில் வந்து கருத்து எழுதி பெருமை படுத்தியதற்கு நன்றி! இனி ரத்த கொதிப்பெல்லாம் வர வாய்பிருப்பதாக தெரியவில்லை. அமி எழுதியது, அதற்கு இது வரை வந்த எதிர்வினைகள் இத்தனையும் பார்த்து கொண்டு ('நான் பார்பனியத்தின் எதிரி' என்று பெரிய ..யாய் தலைப்பு வைத்த அதே ஆசாமி) இன்னும் சும்மா இருப்பதிலேயே தெரிந்துகொள்ளலாம். எனக்கு என் வேலைதான் முக்கியம் என்ற பக்குவத்தை அடைந்தது போல நினைக்கிறேன்.

கார்திக், ரொம்ப நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி!

அசோகமித்திரனின் வெளிப்படுத்துதலுக்கு வந்த எதிர்வினைகளில் அனாதையின் அதிரடி பதிவு மற்றும் தங்கமணியின் பதிவு (இரண்டின் தொனியும் கூட எனக்கு ஒப்புதலில்லை எனினும்) தவிர, மற்றவை மிகுந்த எரிச்சலை தருகிறது. இது குறித்த சின்ன பதிவு அடுத்து வெளிவரும். உங்கள் கருத்துக்கு நன்றி.

4/04/2005 12:44 PM  
Blogger Muse (# 5279076) said...

"இதையே பாரதி பேராசைக்காரனடா பார்ப்பான் - ஆனால் பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான், யாரானாலும் கொடுமை (சேர்ப்பான்)"

Mahakavi Bharathiar and other brahmins of that period has the courage to make the self-criticism. This is the only community that has the courage to make self-criticism. I do not see any other people, criticising their own community, including and especially those who blame the brahmin community. Rather they are very proud being born in the community. That is the reason only it is brahmins who defend themselves when they are critisized (atleast in the blogs).

If people of other communities could have come up pointing out the positive side of the brahmin community it would have put a honest front, when they throw sleeze against that community.

In war, the psychology is very important. The soldiers were told repeatedly that the opponent is not a human being, but something worse than animal. We can see this kind of brain-washing at the madrasas and at the meetings of hindu, christian fanatics.

In the same manner, brahmins have been projected as some kind of disease of the society. It is because those who are against them
have a self-declared war against them.

In such politically motivated wars it is futile to expect sanity.

4/04/2005 1:09 PM  
Blogger Thangamani said...

ஆனந்த் கணேஷ்:

//Mahakavi Bharathiar and other brahmins of that period has the courage to make the self-criticism. This is the only community that has the courage to make self-criticism. /

நான் இதை ஒருபோது இப்படி நினைத்ததில்லை. பாரதியை பிராமண சாதியைச் சேர்ந்தவராக எண்ணி நான் இதைப்பார்ப்பதில்லை. இது சமூக சீரழிவின் ஊற்றுக்கண்ணை சாடும் பாட்டு.எனவே இதை ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவர் தம் சாதியை விமர்சிப்பது என்றில்லாமல், சாதியை முற்றிலும் துறந்த ஒருவர் சமூக சீரழிவுக்குக் காரணமான ஒன்றை விமர்சிப்பதாகக் கொள்ளுத்லே பொருத்தமானது; அவர் காலத்திலேயே அவர் சாதிப்பிரஷ்ட்டம் செய்யப்பட்டவ்ர் என்பதை நினவில் கொள்வது நன்று.

இது பாரதிக்கு மட்டும் பொருந்தும்.
நன்றி!

4/04/2005 4:23 PM  
Blogger சுதர்சன் said...

// நான் ஒவ்வொருவருடையப் பின்னூட்டத்துக்கும் பதில் கொடுத்துதானே வந்திருக்கிறேன்?//
முழுப் பொய்.
http://dondu.blogspot.com/2005/03/blog-post_30.html. 'பெரியார் எல்லாப் பெண்களையும் விபச்சாரி என்று சொன்னார்', அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என் ஆதிரையிடம் கேட்டு விட்டு, நானும் ஆதிரையும் அளித்த பதிலுக்கு சம்பந்தமக ஒன்றுமெ சொல்லாமல் ஒவ்வொரு வலைப்பதிவிலும் போஇ 'இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்' என்று கெட்டு வருகிறார் மேன்மைமிகு டோண்டு அவர்கள். என்ன நினைக்கிறோம் என்று தெளிவாக சொல்லிவிட்டால் பதிலொன்றும் சொல்லாமல் வேரு பதிவுகளில் பொஇ 'னான் சொல்வதைக் கேட்காமல் பெரியார் காலில் விழுந்து கிடக்கிறார்கள்' என்று புலம்புகிறார். இஸ்ரேலைப் பற்றி எழுதினாலும் 'இஞ்சி மொரப்பா'வை பற்றி எழுதினாலும் கூட, அவருக்கு ஒரு ராமசாமி (பெரியார்) மேல் சேறிறைக்க வேண்டும், இன்னொரு ராமசாமி (சோ) புகழ் பாட வேண்டும்.

//தமிழ் மக்களை தான் எவ்வளவுக் கீழாக மதிக்கிறார் என்பதை வெளிப்படையாகவே பல முறை கூறியவர் காலிலேயே விழுந்துக் கிடப்பது ஆகியவை ஜாம் ஜாம் என்று நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன.//
இதுதான் கொடுமையின் உச்சம். அவர் சொல்வதை எல்லம் நாம் நம்பாததைப் பற்றி அவர் கவலைப்படாமல் கவலைப்படுகிறார்.

4/04/2005 5:36 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி, கருத்துக்கு நன்றி.

பிற பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில்லை என்ற முடிவில் இருப்பதால் உங்கள் பதிவில் நான் எழுதவில்லை. கொள்கையை மாற்றிகொள்ளாமல் இங்கே சொல்கிறேன். உங்க பதிவு எனக்கு பிடிக்கவில்லை. என்ன சொல்ல வரீங்கன்னும் தெரியல! அமி வெளிப்படுத்தியது வெறும் சாதிய பெருமை மட்டுமல்ல. பார்பனரல்லாத 97% மக்கள் கூட்டம், இத்தனை நூற்றாண்டுகளாய் விசுவாசமாய் இருந்த கூட்டம் பற்றிய ரேசிஸ்ட் அவதூறு! அருள் சொன்ன ஒரு விஷயம் மட்டுமில்லை. 'நாங்கள் யூதர்கள் போல' என்று சொல்லும்போது, அவர் திராவிட இயக்கத்தை நோக்கி மட்டும் கையை நீட்டவில்லை. மொத்த பாரபனரல்லாத மக்கள் கூட்டத்தை நோக்கி, தங்கள் மீது விசாரணை தாக்குதல் நடத்தியதாக சொல்லுகிறார். அதுவும் தங்களுக்கு விசுவாசமாய் இருந்த ஒரு கூட்டத்தை மிக மோசமான பொய் குற்றச்சாட்டால் அவதூறு செய்கிறார். அதற்கு எதையோ விஸ்ராந்தியா நீங்கள் எழுதியது எனக்கு மிகுந்த எரிச்சலை தந்தது. முதன் முறையாய் எரிச்சலை காண்பிக்க உங்கள் பதிவில் ஒரு (-) குத்து குத்தினேன். மன்னிக்கவும்!


எனக்கு தெரிந்து அனாதை மட்டுமே உருப்படியாயான நேர்மையான எதிர்வினை செய்திருப்பதாய் *எனக்கு* படுகிறது. அதிலும் சிலர் அசோகமித்திரன் சொல்லாததை ஆனந்த் எழுதியிருக்க கூடும் என்று சொன்னதெல்லாம் அட்ரோஷியஸ்! என்ன காரணத்தால் அப்படி சந்தேகபடுகிறார்கள் என்று ஒரு சின்ன ஆதாரம் கூட கிடையாது. இவர்கள் எதையோ முட்டாள்தனமாய் நம்பியதும். அதற்கு மாறாக அமி தன்னை வெளிப்படுத்தியது மட்டுமே காரணம். நன்றாய் கவனித்தால் ஒரு குறிப்பிட்ட வகை கருத்துக்களை முன்வைக்கும் சிலர் குறித்த இவர்களின் மோசமான பார்வை வெளிவரும். மிக தெளிவாய் "This is the *full text*; an abridged version appeared in the print magazine" என்று போட்டிருக்கிறது. அதற்கு பிறகும் ஆனந்த் அதை சுருக்கும் போது திரித்திருப்பார் என்றெல்லாம் பேசுவது இவர்கள் ஆனந்த போன்றவர்களை எத்தனை கேவலாமாய் பார்கிறார்கள் என்பதுதான் தெரிகிறது. அசோகமித்திரனை விட இந்த எதிர்வினைகளின் உளவியல் இன்னும் சுவாரசியமாய் இருக்கிறது.

இது குறித்து ஒரு வாரம் அல்லது ஒரு மாத இடைவெளியில் ஒரு பதிவு எழுதுவேன்.

4/04/2005 5:38 PM  
Blogger ROSAVASANTH said...

சுதர்சன், நான் எழுதும் போது நீங்களும் எழுதியிருக்கிறீர்கள். கருத்துக்கு நன்றி!

4/04/2005 5:39 PM  
Blogger Muse (# 5279076) said...

"எனவே இதை ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவர் தம் சாதியை விமர்சிப்பது என்றில்லாமல், சாதியை முற்றிலும் துறந்த ஒருவர் சமூக சீரழிவுக்குக் காரணமான ஒன்றை விமர்சிப்பதாகக் கொள்ளுத்லே பொருத்தமானது; அவர் காலத்திலேயே அவர் சாதிப்பிரஷ்ட்டம் செய்யப்பட்டவ்ர் என்பதை நினவில் கொள்வது நன்று."

Thangamani,

In my comment I said that along with the Mahakavi there are others of the same caste who critisized their caste. However, as we are talking about Mahakavi, let us discuss him.

True. Cannot question that Mahakavi has gone beyond the evil practices of the caste in which he was born. As a vivid reader of the Mahakavi you are better positioned to clarify my doubts. I have the following doubts:

1. Why Mahakavi was critical on that community?

1.a. Is it because it is the only community that needs a good thrashing as other communities are enlightened?

Many of the people were fearing the British, including the Ettaiyapuram Jamindhar. Whatever the Mahakavi said about the brahmins of that time hold value for anybody else who seeked favour from the British at the time.

1.b. Has he critisized any other community in the same manner? To my knowledge "no." In my opinion, he critisized that community because he felt that he has the "right" to critisize the community. And he left it to others to show a honest opinion of their own community.

You should be knowing that he baptised a dalit as Brahmin. It is because he held to the view of Swami Vivekananda who said everyone should raise to the level of brahmin. (their meaning of brahmin is brahminhood, not priest class mentality, which both objected).

2. Has anybody else from any other community has critisized their own community with this much fervour and "anguish"?

3. In that period, there are many other leaders from other communities who have been outcasted from their respective community for their stand on inter-caste marriage.

(To the modern brahmin community Bharathiar is not an outcaste. That does not mean that all of them have rightly understood him or practising him. This applies to any other community with their outcasted leaders.)

My point is that in that particular caste there were many leaders who were critical about the practices of that caste and condemned it. Wheras other so called leaders have critisized the brahmins as if it is the only community that is mischevious, and these guys have not condemned the community in which they were born.

There were such idiotic attempts to paint Mahakavi also as castist simply because he was born in the community, which thanks to his closer associates, dispelled in their begining.

My concern is that Mahakavi's criticism should not be taken as a license to bad mouth that community. That is not his objective.

4/04/2005 6:24 PM  
Blogger அருள் செல்வன் கந்தசுவாமி said...

--------------------------
>>>>
அதற்கு பிறகும் ஆனந்த் அதை சுருக்கும் போது திரித்திருப்பார் என்றெல்லாம் பேசுவது இவர்கள் ஆனந்த போன்றவர்களை எத்தனை கேவலாமாய் பார்கிறார்கள் என்பதுதான் தெரிகிறது. அசோகமித்திரனை விட இந்த எதிர்வினைகளின் உளவியல் இன்னும் சுவாரசியமாய் இருக்கிறது.
----------------------------------------------------------

ரோசா,
நீங்கள் வெளிப்படையாகவே என் பேர் போட்டு எழுதலாம். கோபிக்கமாட்டேன் சரியா.
கேட்டால் நானே சொல்லிட்டுப் போறேன். பிரபலங்களைப் பேட்டிகண்டு record செய்யப்பட்டதை transcribe செய்யும்போது பலவற்றை வெட்டியோ, சுருக்கியோ விடுவது பலரும் செய்வதுதான். சொல்லும் எல்லாவற்றையும் போட்டுவிடமுடியாது. சொன்னதும் இலக்கணச்சுத்தமாக இருக்காது. இதையெல்லாம் சரிசெய்துதான் எல்லாப்பேட்டிகளையும் பிரசுரம் செய்யவேண்டும். இதில் பலமுறை சொன்ன கருத்து மாறியோ, சொல்லாத வார்த்தைகள் பயன்படுத்தியோ வரலாம். அதற்கான முன்னெச்சரிகையோடுதான் பிரசுரம் செய்யப்பட்ட எதையுமே நாம் விமரிசனம் செய்யமுடியும். Benefit of doubt இதில் எப்போதுமே பேட்டி காணப்பட்டவர்க்குதான். இதில் ஆனந்த்தின் நேர்மையை நான் சந்தேகப்படவேண்டியது இல்லை. அவருடைய தொழில் திறமையை நிச்சயமாக சந்தேகப்படலாம் - அவரைப்பற்றி எனக்குத் தெரியாத நிலையில். எப்படியும் இன்னும் ஒருவாரத்தில் எதிர்வினைகள் மூலம் உண்மை வெளிவரும் இல்லையா. அமி சொன்ன பல- ஏன் எல்லாகருத்துகளுமே பழைய கேட்டுச் சலித்த பிராமணீயவாதம்தான். இதற்கு அமி என்பதால் ஸ்பெஷலாக எதிர்ப்புக் காட்டவேண்டாம் என நினைத்தேன். ஆனால் nonbrahmins எல்லாம் குடித்து கறிசாப்பிட்டு பணத்தை வீசுவார்கள், நாங்கள் பாதுகாத்து முன்னேறினோம் என்பதை தாங்க வேண்டியதில்லை.

அருள்
--------------------

4/04/2005 6:40 PM  
Blogger சுதர்சன் said...

தட தடவென தட்டச்சு செய்து எழுத்துப் பிழைகளை சரிபார்க்காமல் மேலே நானிட்ட மறுமொழிக்காக வருந்துகிறேன், மன்னியுங்கள்.

வசந்த், நீங்களும் இதைப் பற்றி எழுத நினைத்தீர்களா?

4/04/2005 7:06 PM  
Blogger ROSAVASANTH said...

அருள், நான் உங்களை மட்டும் சொல்லவில்லை. நீங்கள் அப்படி ஒரு சந்தேகத்தை முதலில் வைத்தீர்கள். அதற்கு பிறகு உங்களை தொடர்ந்து எல்லோரும் அதை ஒரு சம்பிரதாயமாக சொல்லியிருக்கிறார்கள். பிரகாஷ் நேரடியாகவே பேட்டி கண்டவரின் 'கைவரிசையோ' என்று சந்தேகத்தை கிளப்புகிறார்.

அசோகமித்திரன் அப்படி எதிர்பார்க்காத எந்த கருத்தை சொன்னார் என்று புரியவில்லை. அவருடைய கதைகளின்/கட்டுரைகளின் படி அவருக்கு இருக்ககூடியதாய் இயல்பாய் நினைக்கவேண்டிய கருத்தையே இன்னும் ஒரு எக்ஸ்ட்ரீம் தளத்தில், வெளிப்படையாய் சொல்லியிருக்கிறார். இதில் அவர் சொல்லாததை எழுதியிருப்பாரோ என்று சந்தேகப்படுவது ஓவராய் படுகிறது. அப்படி சந்தேகபடுவதற்கான ஆதாரமோ அடிப்படையோ இருப்பதாகவும் தெரியவில்லை.

உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஆனந்த் அவுட்லுக்கில் தொடர்ந்து தலித் ஆதரவு கட்டுரைகளையும், இன்னும் பொதுவான எதிர்ப்பு தளத்தில் செய்ல்பட்டு வருகிறார். இப்படிபட்டவர்கள் மீதான ஒரு பொது அபிப்ராயத்தில் இப்படி சந்தேகங்கள் வருகின்றனவோ என்று தோன்றுகிறது. (இப்படி நினைக்க காரணங்கள் உண்டு.) அதையே சொன்னேன். இதை எல்லோரும் வலிந்து செய்வதாக கூட எனக்கு தோன்றவில்லை. இப்படி ஒரு உளவியல் இருப்பதாக மட்டும் சொல்ல விரும்பினேன். மற்ரபடி உங்களை மட்டும் குறிப்பிடவில்லை.

//ஆனால் nonbrahmins எல்லாம் குடித்து கறிசாப்பிட்டு பணத்தை வீசுவார்கள், நாங்கள் பாதுகாத்து முன்னேறினோம் என்பதை தாங்க வேண்டியதில்லை. //

ஆமாம், இது நேரடியான ஒரு ரேசிஸ்ட் வாக்கியம். ஆனால் அசோகமித்திரன் சொன்ன எல்லாமே இந்த வகையை சேர்ந்ததே. அவர் தனது வாக்குமூலத்தில் திராவிட இயக்கத்தை சுட்டவில்லை. 'யூதர்கள் போல' என்று சொல்லும்போது, எல்லா பார்பனர்ல்லாதவர்களையுமே நோக்கி தன் விரலை நீட்டுவதை பார்க்க வேண்டும். அட, ஜெயகாந்தன் மாதிரி சிலர் இருந்ததையோ, இன்னும் எத்தனையோ 'பிராமன துவேஷத்திற்கு' ஆளாகத்தவர்களையும், அதற்கு எதிரானவர்களையும் கூட அவர் குறிப்பிடவில்லை. மொத்தமாய் ஒரு இனத்தை சுட்டி, தாங்கள் யூதர்கள் போல நடத்தபட்டதாக சொல்கிறார்.

4/04/2005 8:02 PM  
Blogger ROSAVASANTH said...

//வசந்த், நீங்களும் இதைப் பற்றி எழுத நினைத்தீர்களா? //

சுதர்சன் எதை கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. டோண்டுவிற்கான உங்கள் பதிலை செல்கிறீர்கள் எனில்..இல்லை, டோண்டுவிற்கு எதையுமே எழுதுவதாய் இல்லை. நன்றி!

4/04/2005 8:08 PM  
Blogger manidhan said...

hi rosavasanth,

i do not understand why all of you are taking the exceptions alone and making a general view of branmins...the topic you have selected is really good and like in all concepts and persons, we have both plus as well as minus in eazham, brahmaneeyam, 'thalaivar' Prabakaran, etc. People like Dondu mama may have views like that, but can you people please stop critising a particular community and write more on concepts. I find this in all the forms of media.... I do not know why.....Even I may be wrong also...but please understand that I am very young and ready to accept whatever is correct. I am in the process of developing 'Manidham' in and around me. Is is absolutely unnecessary to be a nonbrahmin to understand the effects of violence and its effcts, we can also understand with others experience. I think people like me can get more correct views if we can concentrate only on concepts. (My english may not be perfect, but I do not know how to post a comment in tamil. I think i can express myself in a better way if can i put my comments in tamil. can anyone please help me?(I am very new to blogs))

4/07/2005 1:54 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter