ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, February 24, 2005

எதிர்கொள்ளல்!

சென்ற பதிவு அவசரமாய் எழுதப்பட்டதாலும், எதிர்வினைகளுக்கு மறுமொழிய இயலாததாலும், பின்னூட்டங்கள் சிலவற்றை எதிர்கொள்கிறேன். எதிர்கொள்ள தக்கவைகளாக நான் கருதுவதை மட்டுமே இங்கே தந்து அதற்கான என் மறுமொழிகளை கீழே தருகிறேன்.

எவ்வளவு அசட்டுத்தனமாய் எதிர்வினைகள் அளிக்க முடியும் என்பதற்கு உதாரணங்களாக முதலில் சிலவற்றை தருகிறேன். பேசும் விஷயம், பயன்படுத்தப்படும் தர்கம் இதற்கு சற்றும் தொடர்பு இல்லாமல் எப்படி எதிர்வினைகள் அளிக்க முடியும் என்பதற்கான உதாரணமாக மட்டுமல்லாமல், அதை அவர்கள் புத்திசாலித்தனம் என்று நினைத்து எழுதியதாலும், உண்மையிலேயே கூட அவ்வாறு சிலர் நம்பகூடும் என்பதாலும் அதை முதலில் தருகிறேன்.

S. K. : "அபத்தம்" என்ற சொல் உங்களுக்கு ரொம்பப் பிடித்தம் போலிருக்கிறது. அடிக்கடி கையாண்டிருக்கிறீர்கள்.
அதென்ன "எழவு"! ஒருவேளை அது அவ்வளவு அமங்கலச் சொல்லல்ல என்று நிரூபிக்க இருக்கலாம்!!

Shankar: தேசிகன் எழுதியதற்கும் இங்குள்ள பின்னூட்டங்களுக்கும் எதுவும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ரோஸாவசந்த்,
உங்கள் கடைசி வரியை மிகவும் ரசித்தேன்.
".. குடும்ப சூழலில் என்னால் விரிவாய் இது குறித்து எழுத முடியவில்லை".
இந்த வாரம் படித்த நல்ல நகைச்சுவையாக இதை கருதுகிறேன். - ஷங்கர்

சோ ரசிகன்: Desikann. Ippo tamilnadu konjam munneritu irukku. Periyar vandhaa avlo dhaan. Hindi edhirpu, brahmin edhirpu, hindi board kku thaar poosi azhikaradhu, pillayar kku seruppu maalai podaradhu idhu ellam start aagidum. Avlo dhaan. Kurangilirindhu vandha manidhanai marubadiyum kurangu aaki viduvaargal namadhu dravidar kazhaga pagutharivu vyadhigal

Lazy Geek: (ரவியின் பின்னூட்டத்தை முன்வைத்து சொன்னது) In the last years, we've seen enough ways and means which bloggers/people employ to grab attention to their blogs. This one could be skipped as yet-another-one.

Anonymous: //In the last years, we've seen enough ways and means which bloggers/people employ to grab attention to their blogs. This one could be skipped as yet-another-one. //

Hear! Hear!!

இதை தொடர்ந்து நாராயணணும், மணிகண்டனும் 'சோ ரசிகனுக்கு' எதிர்வினை வைத்ததும் எனக்கு ஒப்புதலில்லை. ஏதோ ஒரு அரை லூஸு 'அவ்ளோதான்.. இவ்ளோதான்..!' என்று ஒளரி கொட்டியதற்கு இவ்வளவு ஸீரியஸாய் எதிர்வினை வைத்தது சுத்தமாய் பிடிக்கவில்லை. சோவின் ரசிகன் எவ்வளவு முட்டாள்தனமாய் வெளிப்படக் கூடும் என்பதை சுட்டி காட்டினால் போதுமானது என்று நினைக்கிறேன்.

இனி எதிர்கொள்ள தக்கவைகளாக தென்படும் சிலவற்றை பார்கும் முன் தேசிகன் இதை எப்படி எதிர்கொண்டார் என்று பார்க்கவேண்டும். மௌனம்! தனது பதிவின் தலைப்பிற்கு கூட விளக்கம் தராமல் மௌனமாய் நகர்ந்து விட்டார். அல்லது அடுத்த பதிவில் தான் வரைந்த பெரியார் படத்தையும், தனது அப்பாவிற்கு "பிரபந்தத்தில் எவ்வளவு ஈடுபாடோ அதே போல் பெரியாரிடத்திலும் ஈடுபாடு உண்டு." என்றும், பெரியார் கருத்து மீது தனக்கு மரியாதை உண்டு என்று பொதுவாய் சொல்லி தாவிவிட்டார். இனி மற்றவை.

அனாமதேயம்: அய்யோ, ரோஸாவசந்த், கடைசில என்ன சொல்ல வரீங்க?

ரோஸாவசந்த்: இவர் என்ன கேட்க வருகிறார் என்பது சரியாய் தெரியவில்லை. ஆனால் கடந்த பதிவில் நான் எதையும் சொல்ல வரவில்லை, தெளிவாய் சொல்லியிருப்பதாகவே நினைக்கிறேன்.

1. என் எதிர்வினை தேசிகனின் பதிவை முன்வைத்து மட்டும் எழுதப் படவில்லை. ராகாகியில் இது குறித்து முன்வைக்கப் பட்ட அபத்தங்கள், மற்றும் இணையத்தில் பல சந்தர்பங்களில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒருவகை திரிபு தர்கத்தை பற்றியே நான் சுட்டி காட்ட விரும்பினேன்.

அ. ராமசாமியின் (அந்த ஓரிரு) விமர்சன வரிகள் மிகவும் அபத்தமானவை. ஆனால் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மற்றவர்கள் பேச விரும்புவதும், 'நிறுவ' விரும்புவதுமாக உள்ளவைகளின் பின்னே இருப்பது நேர்மையற்ற ஒரு அரசியல். பெரியாரை பற்றி பேச வேண்டுமானால் அதற்கு அவர் ஐம்பது ஆண்டுகளாய் முன்னிறுத்திய விஷயங்கள், அவரை பற்றி முன்வைக்கப் பட்டுள்ள வாசிப்புகள் இவற்றை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பெரியாரிஸ்ட் என்று சொல்லி கொள்ளும் சிலரின் அபத்தமான கட்டுரைகளை முன்வைத்து பேசமுடியாது. உதாரணமாய் ஞாநி அபத்தமான வாதங்கள் நிறைந்து ஒரு கட்டுரை எழுதினால் அதற்கு ஞாநி மட்டுமே பொறுப்பாக முடியும். ஆனால் இங்கே அதை முன்வைத்து பெரியார் விமர்சிக்க படுகிறார்(உதாரணமாய் திண்ணையில்). இந்த திரிபு தர்கத்தை பற்றியே பேசியிருக்கிறேன்.

இது போலவே ஹிந்தி திணிப்பு அல்லது அதற்கான எதிர்ப்பு/ஆதரவு பற்றி பேசவேண்டுமானால், கருணாநிதி பேரனின் ஹிந்தி அறிவு குறித்த தகவலை முன்வைத்து அதை பேச முடியாது. அது கருணாநிதியின் போலித்தனத்தை மட்டுமே விளக்கும். ஹிந்தி திணிப்பின் சாதக/ பாதகங்களை பேச இதனால் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பு, தமிழகத்தில் ஏற்படாத பாதிப்பு போன்றவற்றை வைத்து மட்டுமே பேசமுடியும். கருவறையில் பார்பனரல்லாதார் நுழைவதை, வீரமணி நேர்மை குறித்த தகவலை வைத்து கொண்டு விவாதிக்க முடியாது. ஒரு பேச்சுக்கு வீரமணி செய்வதெல்லாம் அயோக்கியத்தனம் என்று வைத்துகொண்டால் கூட, கருவறையில் நுழைவதற்கும், 'அனைவரும் அர்சகராகலாமா' என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. விவாதத்தை திசை திருப்ப மட்டுமே அது உதவும். நானும் கூட சோ ரசிகன் என்று பெயர் வைத்திருக்கும் ஒருவரின் முட்டாள்தனமான பின்னூட்டத்தையோ, 30 ஆண்டு கால சோ ரசிகரான டோண்டுவின் பதிவுகளை வைத்தோ சோவின் அரசியல் குறித்து தீர்பளிக்க முடியாது.

அ. ராமசாமியின் மிகைவாசிப்பை நாம் புறக்கணிக்கலாம். இதனால் (இன்னும் இங்கே பலராலும் படிக்காமலே பேசப்படும்) அந்த கட்டுரையையே அபத்தம் என்று கூட சொல்லமுடியாது. ஆனால் இங்கே அறிவுரீதியாய் எழுதுவதையும், விமர்சனம் என்பதை பற்றியும் இன்னும் பெரியாரை பற்றியெல்லாம் இதை முன்வைத்து வாதங்கள் போகிறது. இந்த வகை திரித்தல்வாதம் தொடர்ந்து பல இடங்களில் பயன்படுத்தப் படுவதை காணலாம்.

2. ஒரு திரைப்படத்தை அதில் பயன் படுத்தப் படும் காமிரா கோணங்கள், பிண்ணணியில் வரும் காட்சிகளை வைத்து நிச்சயமாய் விமர்சிக்க முடியும். அவை ஏன் முக்கியமானவை என்று விளக்கமுடியும். அத்தகைய பல விமர்சனங்கள் வெளி வந்திருக்கின்றன. அப்படி பேசுவதாக நினைத்து அ. ராமசாமி ஏதோ ஒளரியிருக்கிறார். அந்த ஒரே காரணத்திற்காக அப்படி விமர்சிக்கவே முடியாது என்று சொல்வது அபத்தம். அதற்கு ஒரு உதாரணமாய் ஞாநி பாபா படத்தில் வரும் ஒரு காட்சியை விமர்சித்துள்ளதை சென்ற பதிவில் சுட்டி காட்டியிருக்கிறேன். 'இருவர்' படம் குறித்து வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் விமர்சனத்தை இன்னோரு உதாரணமாய் குறிப்பிடலாம். இன்னும் பல பல உதாரணங்கள் உண்டு.

இங்கே இவர்கள் அ. ராவின் வரிகளை வைத்து கொண்டு, இது போன்ற மற்ற விமர்சனங்களை மறுக்க முயல்வதையே திரித்தல் என்பதாக எழுதியிருந்தேன்.

3. அடுத்து அறிவுரீதியான எல்லா விமர்சனங்களையும் இந்த ஒரு வரியை வைத்து கொண்டு நிராகரிப்பதை பார்கலாம். ஆனால் மிக முக்கியமான திரை விமர்சனங்கள் அறிவுத் துறையினரால் எழுதப் பட்டுள்ளது. ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இதை அ. ராமசாமியின் ஒரு அபத்தமான வரியை நிராகரிக்க முன்வைப்பது அறிவு பூர்வமான வாதமல்ல.

4. நடைமுறையிலும் பிண்ணணி காட்சிகள், பிண்ணணியில் வரும் சிலைகள், தலைவர்களின் படங்கள், குறியீடுகள் இவைகள் தியேட்டரில் பார்க்கும் பார்வையாளராலும் கணக்கில் கொண்டு பார்க்க படுகின்றன. எந்த ஒரு குறிபிட்ட காட்சிக்கு பின்னும் ஒரு முன்திட்டமிடல் நிச்சயம் இருக்கிறது. இதன் பிரதிபலிப்பாய் பார்வையாளனின் வாசிப்பிலும் பாதிப்பு இருக்கிறது. ஒரு குறிபிட்ட காட்சியில் முத்துராம லிங்க தேவரின் சிலையை காட்டுவதை(சில விமரசகர்களால் மட்டுமல்ல) பார்வையாளர்களாலும் கதையோடு பொருத்தி பலவிதமாய் உள்வாங்க படும். அதே காட்சியில் தேவருக்கு பதிலாக அம்பேத்கார் சிலை வந்தால் வாசிப்பே மாறக்கூடும். பாப் கார்ன் தின்று விட்டு தனக்கு சாத்தியமில்லாததாக தேசிகன் சொல்ல கூடிய வாசிப்புகள், தியேட்டரில் பலருக்கு சாத்தியமாகலாம். நேற்று, இன்று, நாளை படத்தில் இரண்டு விநாடிகள் காட்டப்படும் திண்டுக்கல் இடை தேர்தல் போஸ்டர் பார்வையாளர்களால் வாசிப்புக்கு உட்படுத்த படுகிறது. சின்ன உதாரணமாய் இதை சொல்கிறேன். இப்படி ஒரு அரசியல் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் முன்வைக்க படுகிறது, உள்வாங்க படுகிறது. அ. ராமசாமி மிகையாக ஒரு விஷயத்தை சொன்னதாலேயே அத்தகைய வாசிப்புகள் சாத்தியமில்லை என்பதாகாது.

கடைசில எதையும் நான் சொல்லவரவில்லை. இவைகளே நான் சொல்லியது. இதை உள்வாங்கி இது குறித்து கேள்வி எழுப்பினாலோ, மேலே பேச நினைத்தாலோ பேச முடியும்.

டோண்டு ராகவன்: மு.ராமசாமி மற்றும் அ.ராமசாமி இருவரும் ஈ.வெ.ராமசாமியைப் பற்றி எழுதியிருப்பது தனக்குப் புரியவில்லை என்று தேசிகன் தன் பதிவில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதில் குழப்பம் என்ன வந்தது?

ரோஸாவசந்த்: குழப்பம் வந்ததாக நான் எப்போது சொன்னேன்? மேலும் அவர்கள் ஈவே ராமசாமியை பற்றி எழுதினார்களா? நான் எழுதியதற்கு, அல்லது பேசப்படும் விஷயத்திற்கும் டோண்டு குறிப்பிடும் இந்த 'குழப்பதிற்கும்' என்ன தொடர்பு?

டோண்டு: மேலும் பொதுவாக அறிவுஜீவிகள் எப்போதும் புரியாமல் எழுதுவதைப் போன்றத் தோற்றமும் வருகிறது.

ரோஸாவசந்த்: 'பொதுவாக' அறிவிஜீவிகள் எழுதுவது உங்களுக்கு புரிவதில்லை. உங்களுக்கு புரியும் விஷயங்கள் வேறு சிலருக்கு புரியாமல் போகலாம்.

ஆமாம், சோ மாதிரி 'உங்களுக்கு புரியும்படி' எல்லோராலும் எழுத முடியுமா?

டோண்டு: மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி என்பது மேலே கூறியக் கருத்தைத்தான் முன்னிறுத்துவதாக நாஞ் புரிந்துக் கொள்கிறேன்.

ரோஸாவசந்த்: நல்ல புரிதல்! உங்களுக்கு இப்படி சொன்னாலே போதுமே! அதை நிறுவிய திருப்தி கிடைத்திருக்குமே! அது சரி, இதை புரிந்து கொண்டீர்கள், நான் வைத்த தலைப்பை புரிந்து கொண்டீர்களோ?

ஜெ. ரஜினி ராம்கி: 'பாபா'வுக்கு பலபேர் விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் நடத்தினார்கள். உருப்படியான விமர்சனம் என்று சொன்னால் அது கல்கி மற்றும் தினமணிகதிரில் வந்தவைதான். பாபா பத்தி நான் எது சொன்னாலும் எடுபடாது என்பதால் ஜூட்!

ரோஸாவசந்த்: குறிப்பிட்ட ஆசாமி பேசுகிற ஒரே காரணத்திற்காக, முத்திரை குத்தி ஒரு விஷயத்தை புறம் தள்ளும் அணுகுமுறைக்கு நானும் ஆளாகியிருப்பதாலும், என் கருத்துக்கள் பலமுறை அவ்வாறே எதிர்கொள்ள பட்டிருப்பதாலும் நான் அதை ஒரு போதும் உங்களுக்கு செய்யமாட்டேன். பாபா படம் பற்றி நீங்கள் பேசுகிற ஒரே காரணத்திற்காக அது எடுபடாமல் போகாது. நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் மறுக்கலாம், முரண்படலாம், எடுபடாமலும் போகலாம். அப்படி செய்வதற்கான காரணத்தை தெளிவாய் முன்வைக்க முடியும். நிச்சயம் 'ரஜினி ராம்கி ஒரு ரஜினி ரசிகர்' என்ற ஒற்றை வரி அந்த காரணமாய் இருக்காது.

ரஜினி ராம்கி: மட்டமான மசாலா படத்துக்கு கூட ஞாநி இப்படியெல்லாம் மெனக்கெட வேண்டுமா என்பதுதான் என்னுடைய கேள்வி. லேட்டஸ்ட் படத்துக்கு மட்டுமல்ல 'ஊமை விழி'களுக்கு கூட ஒரு காமெடி விமர்சனம் எழுதியிருக்கிறார். 'பாய்ஸ்'க்கு இவர் எழுதிய விமர்சனத்தை படித்ததும் ஷங்கர் மீது எனக்கொரு அனுதாபமே வந்துவிட்டது. 'தென்றலை' ஏனோ தீண்டவேயில்லை! ஞாநி சினிமா விமர்சனம் பண்ணாமல் இருந்தால் சினிமாக்காரர்களை விட அதிகமாக சந்தோஷப்படும் ஆள் நானாகத்தான் இருப்பேன்!

ரோஸாவசந்த்: 'மசாலா சினிமா' குறித்த ஞாநியின் கருத்துகளுடன் நான் உடன்பட்டதில்லை. ஆனால் 'மசாலா' குறித்த விமர்சனம் தேவையில்லை என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்த இலக்கியம், கலை, கலைப்படங்கள் இதை எல்லாம் விட மிக பரந்த அளவில் பாதிப்பை 'மசாலா' உண்டாக்குகிறது. மிக பெரும் திரளான மக்களால் பார்க்கபடுகிறது. இதை பற்றி பேசாமல் வேறு எதை பற்றி பேசுவது முக்கியமானது என்று புரியவில்லை.

ஆனால் 'மசாலா'வை மட்டமானது எனும்போது நீங்கள் ஞாநியுடன் உடன்படுகிறீர்கள். நான் இங்கே கடுமையாய் வேறுபடுகிறேன். சென்ற வருடம் வெளிவந்த திரைப்படங்களில் (நான் பார்த்ததில்) சிறந்த படமாய் 'கில்லி'யும், மட்டமான படமாய் 'விஸ்வதுளசி'யும் என் பார்வைக்கு படுகிறது. நீங்கள் இதை நேரெதிராய் பார்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ஞாநி செய்யும் விமர்சனத்தில்தான் முரண்பாடே ஒழிய, விமர்சிப்பதிலேயே அல்ல. ஞாநி தொடர்ந்து 'மசாலா' படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அது குறித்த விமர்சிப்பது மிகவும் தேவையானதே. அந்த எல்லா விமர்சனங்களிலும் இதுவரை ஞாநி பேணி வந்த தனி நபர் நேர்மையும், சமூக அக்கறையும் வெளிப்படுவதை யாரும் மறுக்க முடியாது.


ரஜினி: 'காதல்' பற்றிய அ.ராமசாமி விமர்சனத்தின் ஒரு பகுதியை நான் ராகாகியில் இட்டதும் அதற்கு திருமலை தந்த எதிர்வினையையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். முழுமையான விமர்சனம் தீம்தரிகிடவில் வந்திருக்கிறது. தேசிகன் தவறாக குறிப்பிட்டு விட்டார் என்று நினைக்கிறேன். குமுதம், விகடனில் வரும் சிரிப்பு வராத ஜோக்குகளை படிப்பவர்கள் அவசியம் படிக்கவேண்டிய விமர்சனம்.

ரோஸாவசந்த்: என் பையனுக்கு வயது மூன்று மாதம். முகத்தை கோணலாக்கி காட்டினாலோ, குதித்து குண்டக்க மண்டக்க நான் எது செய்தாலும் அவனுக்கு சிரிப்பாய் இருக்கிறது. அடுத்த சில வருடங்களில் இதே செய்கைகளை வேறு மாதிரி செய்தால் சிரிக்க கூடும். ஆனால் இருபது வருடம் கழித்து இதே செய்கைகளுக்கு சிரிக்க கூடுமெனில் ஏதோ பிரச்சனை என்றுதான் பொதுவாய் எல்லோரும் நினைப்பார்கள். யோசித்து பார்த்தால் அதை பிரச்சனை என்பதைவிட, பெரிய இழப்பாகவே பர்க்க முடியும்.

சுமார் 15 வருடங்கள் முன்பு தவறாமல் துக்ளக் படித்த காலங்களில், துக்ளக் சத்யாவின் அசட்டு 'நையாண்டிகள்' (வேறு வார்த்தை கிடைக்காமல் வழியின்றி இதை நையாண்டி என சொல்லவேண்டியுள்ளது) சிரித்து மகிழாத ஒரு இதழ் இருக்க முடியாது. இன்று அந்த அசட்டு நகைச்சுவைகள் மிகவும் எரிச்சலை தரக் கூடியவையாய் மட்டுமே இருக்கிறது. சத்யாவின் அரசியல் புரியவில்லையெனில் இதையும் ஒரு இழப்பாகவே கருதியிருக்க கூடும்.

அந்த துக்ளக்தனமான ஒரு அசட்டு நையாண்டியின் மேலோட்டமான ஒரு வடிவம்தான் நீங்கள் குறிப்பிடும் திருமலையின் 'விமர்சனம்'. இன்னும் இதையெல்லாம் பலரால் ரசிக்க முடிகிறது என்பதை பார்க்க ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. சில நாட்கள் முன்பு (மீனாக்ஸ் என்று நினைக்கிறேன்) சத்யாவின் துக்ளக் அசட்டு ஜோக்குகளை போட்டு,'ஹாட்ஸ் ஆஃப்' சொல்லி ஸல்யூட் கூட அடித்திருந்தார். எனக்கு அதை படித்தால் குமட்டல்தான் வருகிறது. அதைவிட எப்படி இத்தனை வருஷமாய் இந்த அசட்டுத்தனக்களுக்கு சிரிக்கும் தரத்தில் மக்கள் இருக்க முடிகிறது என்ற ஆச்சரியமும் வருகிறது. 'ஒரு குழந்தையாய் கோமாளித்தனங்களுக்கு சிரிக்க முடியவில்லையே' என வருத்த படுவதை போல இதையும் பார்க்க முடியவில்லை.

நையாண்டி என்பது ஒரு அறிவுபூர்வமான தளத்தில், நாம் பயன்படுத்தும் தர்கத்தை மீறி வரவேண்டும். இங்கே அடிப்படை தர்கமே ஆட்டம் காணுகிறது. தர்கத்தை மீறுவது, உடைத்து போடுவது என்பது வேறு. தர்க்கத்தையே சொதப்புவது என்பது வேறு. திருமலையின் எழுத்துகளில் என்ன அறிவு பூர்வமான தர்கம் வெளிபடுகிறது என்று அதை சிலகித்தவர்கள்தான் சொல்லவேண்டும்.

ஜேஜே சில குறிப்புகள் குறித்து நீங்கள் எழுதியதை படித்தேன். "‘இன்னும் இருபது வருடங்கள் கழித்து (அப்போது 1978!) அதாவது 90களில் தலைகீழ்மாற்றங்கள் வரும். அப்போது எந்த தவளையும் கிணற்றுக்குள் இருக்கமுடியாது" என்ற வரிகள் இணையத்தை பற்றிதான் சுரா என்ற தீர்கதரிசி சொல்வதாக உங்களுக்கு தெரிகிறது. (//படிக்கப் படிக்க பரவசத்தை ஏற்படுத்திய வரிகள். பாரதி பரம்பரையில் வந்தவர்களில் தொலைநோக்கு பார்வை ஒரு சிலருக்குத்தான் உண்டு. அந்த வகையில் 90களுக்கு பின்னர் இணையம், தமிழை ஏற்றத்தில் வைக்கும் என்பதை எப்படித்தான் எழுதிவைத்தாரோ? //) இது ஒரு மிகை வாசிப்பு. நாவலில் பாலு என்ற பாத்திரம் 17 மொழிகளிலிருந்து, கலை செல்வங்களை தமிழுக்கும் அந்த மொழிகளுக்குமான பரிமாற்றங்களை பற்றி பேசும்போது இந்த வரி வருகிறது. பேசப்படும் விஷயமும், கிணற்று தவளை என்ற உவமையும் மற்ற மொழியின் கலை செல்வங்களை முன்வைத்து எழுதப்பட்டது. தமிழின் ஏற்றத்தை பற்றியது அல்ல. ஆனால் உங்களுக்கு இணயத்தை பற்றி எழுதப்பட்ட தீர்க்கதரிசனமாக தெரிகிறது.

உங்கள் வாசிப்பை குறை கூறுவதல்ல என் நோக்கம். உங்களால் எப்படியோ அப்படி 'வாசிக்க' முடிந்திருக்கிறது. எனக்கு அது ஒரு அபத்தமான மிகை வாசிப்பாக தெரிகிறது. அதே போலத்தான் அ.ராமசாமி தனது வாசிப்பாக முன்வைத்த விமர்சனம் ஒரு மிகை வாசிப்பு மட்டுமே! நமக்கு அது அபத்தமாக தெரியலாம். அவ்வளவுதான்.


பாலா: மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமிஇந்த தலைப்புக்கு என் மனதில் பட்ட interpretations-ஐ கூறுகிறேன்!

1. சிலை வரும் காட்சியை ஒருவர் பாஸிடிவாக பார்க்கிறார். மற்றவர் நெகடிவாகப் பார்க்கிறார்! இதிலிருந்து, ஈ.வெ.ரா வும், நல்ல விஷயங்களும் செய்திருக்கிறார், தவறுகளும் செய்திருக்கிறார் என்று கொள்ளலாம். அவரது, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, தலித் மேம்பாட்டுக்கான உழைப்பு போன்றவைகள் பாஸிடிவ் வகை! பிற மத மூடநம்பிக்கைகளையும், கடவுளர்களையும் கண்டு கொள்ளாத ஓரவஞ்சனையான அதி தீவிர இந்துக் கடவுளர் எதிர்ப்பு (வீரமணி செய்வதும் இது தான்!), தமிழ் மொழியை காட்டுமிராண்டிகளின் பாஷை என்று சாடியது போன்றவைகள் நெகடிவ் வகை என்பேன்!

2. இரண்டு முரண்பட்ட விமர்சனம் தந்த ஆசாமிகளை கூட்டினால் ஈ.வெ.ரா வருவதால், ஈ.வெ.ரா விடமும் முரண்பாடுகள் இருந்தன என்றும் கொள்ளலாம்!

பொதுவாக, இலக்கியவாதிகளின் திரை விமர்சனம் கூட தலைக்கு மேலே ஓடும் வகையில் (over the head) உள்ளன என்ற தேசிகனின் கூற்று ஓரளவு சரியானதே எனத் தோன்றுகிறது! எனவே, இலக்கியப் பத்திரிகைகளில் வரும் திரை விமர்சனங்களை படித்தல் ஆகாது :-) அப்படியே படித்தாலும், அவை பற்றி விமர்சனம் செய்தல், வம்பை விலைக்கு வாங்குவதற்கான சிறந்த வழி :-(

ரோஸாவசந்த்: பாலா, இது கொஞ்சம் ஓவராக இல்லை? தேசிகன் ஏதோ அந்த நேரத்தில் தோன்றிய அச்சு பிச்சு தலைப்பை வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறதே அன்றி இப்படி ஒரு அர்த்தம் அதற்கு கற்பிக்க சாத்தியமிருப்பதாக தெரியவில்லை.

பாலாவுக்கு பெரியாரிடம் பாசிட்டிவாகவும், நெகடிவாகவும் சில விஷயங்கள் தோன்றுகின்றன. இருக்கட்டும்! அதே போல அ.ரா நெகடிவாகவும், மு.ரா பாசிட்டிவாகவும் தோன்றுகிறது. சரி! அதனால் பெரியாரின் +/-உம் இந்த +/-ஐயும் ஒன்றாய் போட்டு, இந்த +/-ஐ கூடினால் பெரியார் வருகிறாரா? இதை போன்ற ஒரு வாதம்தான் பெரியார் சிலையையும் காட்சிகளையும் சில காமிரா கோணங்களையும் வைத்து அ.ராமசாமிக்கு தோன்றியிருக்கிறது. அது எப்படி அபத்தமோ அதைபோல பாலா எழுதியுள்ளதும் அபத்தம். இப்போது நான் பாலாவும் தேசிகனும் எழுதியதை முன்வைத்து சுஜாதாவை திட்டினால் எப்படி இருக்கும்?

கடைசியாய் பாலா பெரியாரை முன்வைத்து எழுதியுள்ளதற்கு பதில் தருவது போன்ற அலுப்பூட்டும் வெட்டியான வேறு ஒரு வேலை இருக்க முடியாது. தங்கமணி அந்த வேலையை செய்ததுடன் "பெரியாரிடமே நேரடியாகச் சென்று, எந்தச் சூழலில், எந்தப் பிண்ணனியில் அவர் இதைப் பேசியிருக்கிறார் என்று பாருங்கள்" என்கிறார். தங்கமணி சொல்ல வருவது என்னவென்று சிறுகுழந்தைக்கும் புரியும். பெரியார் பேசியதாக('காட்டுமிராண்டி பாசை' போல) சொல்லபடும் ஒரு விஷயம் குறித்து பேச, பெரியார் அது குறித்து எழுதியது பேசியதை அதன் சந்தர்ப்ப சூழலை முன்வைத்து விவாதிக்க வேண்டும் என்ற அர்தத்தில் "பெரியாரிடமே நேரடியாகச் சென்று" என்கிறார். அதற்கு பாலா "நான் மாட்டேன்! இன்னும் சிறிது காலம் இவ்வுலகில் வாழ்ந்த பின் பெரியாரை சென்று சந்திக்கிறேன் :-0" என்று அசட்டுதனமாய் பதிலளிக்கிறார்.

பெரியார் சிந்தனைகளாக தொகுக்கப் பட்ட விஷயங்கள், தினமும் ஒன்றாய் வாரம் முழுவதும் தலையணையாய் பயன்படுத்தும் அளவிற்கு புத்தகங்களாய் வந்துள்ளன. பாலா பெரியார் எழுதிய ஒரு கட்டுரையாவது நேரடியாய் படித்திருப்பாரா என்பது சந்தேகமாய் உள்ளது. குறைந்த பட்சமாய் ஏதேனும் படித்த பின்பு இது குறித்து விவாதிப்பதில் அர்த்தம் உள்ளது. பெரியார் குறித்து பதிலளிக்க, விவாதிக்க (ரவிகுமார் தொடங்கி ஜேமோ வரை) எத்தனையோ தீவிரமான விஷயங்கள் உள்ளன. இதை போன்ற மேலோட்டமான (ஏற்கனவே பலமுறை பெரியாராலேயே பதிலளிக்கப் பட்டுள்ள) கேள்விகளை எதிர்கொள்வது போல அலுப்பானது எதுவுமில்லை.

பாலா சொல்வது போல் அவர் மற்ற மதங்களை எதிர்க்கவில்லை என்பது உண்மையில்லை. கிருஸ்தவம் குறித்து அதிகமாய் பேசியுள்ளார். இஸ்லாம் குறித்து நேர்மறையாய் பேசியிருந்தாலும், இஸ்லாமியர்களிடையே பேசும்போதே அவர்களுக்கு உவப்பில்லாத கருத்துகளை பல முறை சொல்லியிருக்கிறார். பர்தாவின் கொடுமை பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார். பாலா பெரியாரை ஓரளவு படித்துவிட்டு இன்னும் சற்று தீவிரமான கேள்விகளை எழுப்ப வேண்டும். காட்டுமிராண்டி பாஷை குறித்து அரவிந்தன் நீலகண்டனுக்கு பதிலாய் முன்பு எழுதியதை (எளிதான காரியமாய் இருப்பதால்)இங்கே வெட்டி ஒட்டுகிறேன்.

"மறக்காமல் RSSபுத்தி இந்த 'காட்டுமிராண்டி பாஷை' விஷயத்தில் வந்து நிற்கும். தமிழ் குறித்து பெரியார் உயர்வாய் சொன்ன விஷயத்தை எல்லாம் விட்டு விட்டு, இந்த விசயம் மட்டும் மறக்காமல் ஞாபகம் வரும். உலகில் எங்கும் இல்லாத அற்புதமாய், சங்ககாலம் என்பது ஒரு பொற்காலமாகவும், உலகில் உள்ள மொழிக்கெல்லாம் தமிழ்தான் தாய் போலவும், தமிழ் உணர்வு என்பது இங்கே தறிகெட்டு போன ஒரு கட்டத்தில், பெரியார் இதை சொன்னார். மொழிக்கு தரப்பட்ட உன்னத குணங்களை மறுத்து, மொழி நவீனமடைவதன் அவசியத்தை உணர்த்தும் விதமாய், "தமிழ் ஒரு காட்டுமிராண்டிகாலத்து மொழி" (primitive language) என்ற அர்தத்தில் சொன்னார். இது என்ன தமிழ் மீதுள்ள வெறுப்பாலோ, தமிழை அழிக்கும் சதிதிட்டத்தாலோ, வேறு மொழிகொண்டு அதை மேலாதிக்கம் செய்யும் நோக்கிலோ சொல்லபட்டதா? தமிழ் நவீனபடுத்த படவேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் வண்ணம் சொல்லபட்டது. உன்னதம் என்று ஒன்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருக்கமுடியாது என்ற அறிவின் அடிப்படையில் சொல்லபட்டது. இதை RSSகாரர் நேர்மையாய் அணுகுவார் என்று எதிர்பார்க்கமுடியுமா? ஆனால் ஆயிரம் வருடங்கள் முன்னால் பேசப்பட்ட ஒரு மொழியில், இன்றய செயற்கை அறிவிற்கான சமாச்சாரங்கள் எல்லாம் இருக்கிறது, இன்றய அறிவியல் சமாச்சாரங்கள் எல்லாம் அன்றே சொல்லபட்டதாய் நினைக்கும் மனத்திற்கு பெரியார் சொன்னது பகுத்தறிவற்ற விஷயமாக தெரியாமல் வேறு எப்படி தெரிய கூடும்!


ஆனாலும் பெரியார் தமிழ் குறித்து சொன்னதும், இன்னும் பொதுவாய் மொழி குறித்தும், ஆங்கிலம் குறித்து சொன்னதும் எனக்கும் கூட முழு ஒப்புதலில்லை என்பது வேறுவிஷயம். எந்த தத்துவத்திற்க்கும், இயக்கத்திற்கும், அதன் கொள்கைகளுக்கும் எனது உடல்-ஆவி-மூளையை நான் அடகு வைக்காத காரணத்தால், பெரியார் சொன்ன எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பெரியாரியத்தின் அடிப்படையில்தான் பூமி சுற்றவேண்டும் என்றோ, மூச்சுவிட வேண்டுமென்றொ நான் நினைப்பதில்லை. இது ஏதோ, பதரை அகற்றி வேண்டியதை கொள்ளும், பழையபாணி வேலையும் இல்லை. பெரியார் சொன்னதை சூழலுக்கு ஏற்ப வாசித்து, தேவையானால் அதற்கு ஒரு மீள் உருவாக்கம் கொடுக்க முனையலாம். இன்னும் தேவையானால் அவர் சொன்னவற்றை குழி தோண்டி புதைக்க புறப்படவேண்டியிருக்கலாம். ரவிகுமார் பெரியார் மீது அண்மைகாலத்தில் வைத்த விமர்சனத்தில் கூட(அதிலுள்ள சில தனி நபர் அரசியல் காரணமாய், சில விமர்சனங்கள் இருந்தாலும், அத்தகைய விஷயங்களை வகுத்துவிட்டு) எனக்கு பல விஷயங்கள் ஒப்புதலுள்ளன. இது குறித்து ரவி ஸ்ரீனிவாஸிற்கு எழுத நினைத்த பதில், அரைகுறையாய் என் கணணியிலேயே தங்கிவிட்டது. "

இந்த பதிவை முடிக்கும் முன் ஒரு விஷயம். சுஜாதா குறித்து ரவி முன்வைத்துள்ள கருத்துக்கள் எனக்கு ஒப்புதலில்லாதவை. ரவி இந்த முறை கொஞ்சம் ஸ்வீப்பிங்காக சொல்லியிருப்பினும், அவர் இதற்கு முன்பே பலமுறை சொன்னதுதான். எனக்கும் சுஜாதா மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களுடன் ரவி வேறுபடக் கூடும். அதேபோல ரவியின் 'விமர்சனங்கள்' எனக்கு ஒப்புதலில்லை.

சுஜாதாவின் எழுத்து ஒரு தீவிரமான வாசிக்கும் பழக்கத்திற்கு எத்தனையோ பேரை இட்டு சென்றிருக்கின்றது, செல்கின்றது என்பதுதான் எனது கருத்து. முப்பது ஆண்டுகளாக மிகுந்த விஷய ஞானத்துடன் பல ஜனரஞ்சக பத்திரிகைகளில் அவர் எழுத்தின் மூலம் ஆற்றிய பணி மகத்தானது. வேறு யாரையும் அவருடன் ஒப்பிட முடியும் என்று தோன்றவில்லை.

இது என் பதிவாகையால் என் அனுபவததை முன்வைக்கிறேன். தனிப்பட்ட முறையில் என் இலக்கிய வாசிப்பும் சிந்தனையும் சுஜாதாவின் மூலமே தொடங்கியது. இன்று எந்த விதத்திலும் சுஜாதாவை வாசித்து பெறகூடியதாய் எனக்கு பெரிதாய் எதுவுமில்லை. ஆனால் தமிழ்வாணன் வாசகனாய் இருந்து சுஜாதா ரசிகனாய் பரிணமித்த போதே வாசிப்பின் தீவிரம் என்னை தொற்றிகொண்டது. ஒரு ஜனரஞ்சக தளத்தில் அவர் சாத்தியப் படுத்தியுள்ள இலக்கிய உலகத்தை நன்கு துய்த்தவன் என்ற முறையில் அது எனக்கு முக்கியமானது. அதை எந்த ஆரம்ப கட்ட வாசகனுக்கும் பரிந்துரைக்க முடியும். என்னை தவிர தனிப்பட்ட முறையிலும் இது போல பல உதாரணங்களை எனக்கு தெரியும். அந்த வகையில் சுஜாதாவின் எழுத்துப் பணி மிக முக்கியமானது என்றே எனக்கு தோன்றுகிறது.

ஒருவகையில் என் அரசியல் சிந்தனை சோ மூலமும், இலக்கிய சிந்தனை சுஜாதா மூலமுமே தொடங்கியது. இதில் சோவால் ஈர்க்கப்பட்டதை மிகவும் துரதிர்ஷ்டமாகவும், ஒரு நீண்டகாலத்திற்கு இருந்த அந்த பாதிப்பு குறித்து மிகுந்த வெட்கமும் எனக்கு உண்டு. இன்று அதற்கு நேரெதிராய் சிந்திப்பதாய் நினைத்து கொண்டிருக்கும் போதும், 'சோ'த்தனமாக ஏதேனும் தர்கம் வந்துவிடுமோ என்பதில் மிகவும் சுய நினைவுடன் இருக்கிறேன். மாறாக ஒரு சுஜாதா ரசிகனாய் இலக்கிய வாசிப்பை தொடங்கியதில் எந்த வெட்கமும் இல்லை. இன்றும் எழுத்து நடையில் அந்த வாசிப்பின் பாதிப்பு இருப்பதை உணர்கிறேன். சுயநினைவுடன் அதை தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதை எல்லாம் சோவிற்கும், சுஜாதாவிற்கும் அரசியல் சிந்தனையில் பெரிய வித்தியாசம் கிடையாது என்ற உண்மையை நன்கு அறிந்து வைத்திருப்பதாய் நினைத்து கொண்டிருக்கும் சுய நினைவுடனேயே சொல்கிறேன்.

இந்த அளவிற்கு வழவழ கொழகொழவென வேறு பதிவு எழுதியதாய் தெரியவில்லை. அதனால் நிறுத்தி கொள்கிறேன்.

Post a Comment

22 Comments:

Blogger ROSAVASANTH said...

ஜெய்ஸ்ரீ, கருத்துக்கு நன்றி! என் 'காதல்' திரைப்பட விமர்சனம் குறித்த உங்கள் எதிர்வினையை நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்!

3/01/2005 4:03 PM  
Blogger ஜெ. ராம்கி said...

மிக்க நன்றி. என்னை புரிந்து கொண்டதற்கு மட்டுமல்ல யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு விமர்சனங்களை முன்வைப்பதற்காக.

ஞானியிடம் இருக்கும் தனிநபர் நேர்மை, சமூக அக்கறை மட்டுமல்ல சோவிடமிருக்கும் விதண்டாவாதம், முயலுக்கு மூணு கால் ரக விவாதங்கள் இல்லாமலிருப்பதும் என்னை கவர்ந்திருப்பதால்தான் அவரது எழுத்தை தொடர்ந்து படிக்கக்கூடியவனாக இருக்கிறேன். ஆனால், அவருடைய தனிநபர் தாக்குதலில்தான் எனக்கு உடன்பாடில்லை. யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்கள் என்றொரு லிஸ்ட் தயார் செய்து கொண்டு அதற்கேற்ப காரணங்களை கண்டுபிடித்து தாக்குவது போலிருக்கிறது. குறையாக எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பது. உதாரணத்திற்கு கமல் மீதான ஞாநியின் விமர்சனங்கள்.

3/01/2005 4:47 PM  
Blogger Thangamani said...

ரோசா, இது போன்ற எதிர்கொள்ளல் இந்த பதிவுகளில் இல்லாத காரணத்தால் எதையாவது கொஞ்சம் நையாண்டி, எள்ளல் கலந்த தொனியில் சொல்லிவிட்டால் போதும்.

ஓவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது. அது சுயபரிசீலனை, ஏற்கனவே நாம் அறிந்தவைகளில் இருந்தான விடுதலை, அவ்விடுதலையை முன்னெடுக்கத்தூண்டும் நம் நம்பிக்கைகளின் பற்றாத்தன்மையைக் கண்டுகொள்ளும் நேர்மை, நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு வந்து தனியனாய் இருப்பதற்கான தைரியம், நம்பிக்கைகளை பழமை, புனிதம் என்றெல்லாம் நியாயப்படுத்தி பாதுகாத்து அதில் தன்னைப் பதுக்கிக்கொள்ளும் கோழைத்தனம் இப்படி பல விசயங்கள் இருக்கின்றன. இல்லையா?

சத்யாவின் நையாண்டியோ, பாலாவின் பதில்போன்ற விசயங்களோ நிச்சயம் உண்மையைக் கண்டுகொள்வதற்கான முயற்சிகளோ, நேர்மையான எதிர்கொள்ளலோ அல்ல. ஆனால் இவை காலங்காலமாக நிருபிக்கப்பட்ட போலிவழிமுறைகள். இவை தர்க்கத்தால் தோல்வியோ, நம்பிக்கைகள் உடையும் அபாயமோ ஏற்படும் தருணத்தில், தன்னை காப்பாற்றிக்கொள்ள நம்பிகையின்பாற்பட்ட மனம் எடுக்கும் தந்திரோபாயங்கள். அவை இதே போன்ற சிக்கலில் இருக்கும் வாசகனை, பார்வையாள்னையும் கவருகிறது. ஒரு நையாண்டி, கேலி, இடுப்புக்கீழேயான தாக்குதல் போதும். கூட்டம் சிரிக்க, தப்பிவிடலாம். பின்னால் யாராவது இப்படிச் செய்வது நேர்மையா என்றால் அது நகைச்சுவையாகச் சொன்னது என்று தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம். நான் இது குறித்து பொதுவாக எதுவும் சொல்லுவதில்லை; இதெல்லாம் ஒவ்வொருவரின் தேவையைப் பொருத்தது. தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும்போது மூச்சுக்காக தவிக்கும் ஒருவரின் தேவையையும், தூக்கத்தில் ஒருவருக்கு இருக்கும் மூச்சுக்கான தேவையையும் போல வெவ்வேறானது. அதுவே அவர்களது பார்வையை, அதன் அடிப்படையில் இருக்கும் நேர்மையை காட்டிக்கொடுக்கிறது. நான் அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளக்கிடைத்த அந்த கணத்துக்கும் அவர்களுக்கும் நன்றி கூறி நகருகிறேன். இதை அவர்களை மட்டப்படுத்தியோ, அல்லது என்னை உயர்த்தியோ ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குவதற்கு நான் என்னை அனுமதிப்பதில்லை. நமது வழிகள் வெவ்வெறு அவ்வளவுதான்.

சோ, சுஜாதா ஒப்பீடு நன்றாக இருந்தது. அவர் இலக்கியத்தை, வாசிப்பனுபவத்தை மக்கள் மயப்படுத்தி இருக்கும் அளவுக்கு இன்னொருவர் செய்யவில்லை. இது அவர் புறநானுறு பாடல்களில் அவர் செய்திருக்கும் தவறுகள்; கவிதையை அவர் அனுகும் விதம் இவற்றின் மீதான விமர்சனத்தை குறைக்காது; ஆனால் கவிதையை, புறநானுறை பத்திரிக்கைகளுக்கு கொண்டுவந்ததை குறிக்கும்.

நன்றி, இப்படி ஒரு எதிர்கொள்ளலை எதிர்கொள்ளச் செய்தமைக்கு.

உங்கள் மகனுடனான இனியபொழுதுகளுக்கு வாழ்த்துகள்!

3/01/2005 4:48 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

மற்றவர் எதிர்வினைகளுக்கு குதி குதியென்று குதிக்கும் அதே நேர்மையுடன் நன்றாக உள்ள பதிவையே வழ வழா கொழ கொழா என்று உங்களுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறீர்கள்.இதனாலேயே உங்களை எதிர்கொள்வதில் அவதானம் தேவை என்று எனக்குப் படுகிறது(சொந்த அனுபவம் தான்)

3/01/2005 5:10 PM  
Blogger -/பெயரிலி. said...

/இதை எல்லாம் சோவிற்கும், சுஜாதாவிற்கும் அரசியல் சிந்தனையில் பெரிய வித்தியாசம் கிடையாது என்ற உண்மையை நன்கு அறிந்து வைத்திருப்பதாய் நினைத்து கொண்டிருக்கும் சுய நினைவுடனேயே சொல்கிறேன்./

3/01/2005 8:26 PM  
Blogger ROSAVASANTH said...

ரஜினி, தங்கமணி, ஈழநாதன், கருத்துகளுக்கு நன்றி!

//இதெல்லாம் ஒவ்வொருவரின் தேவையைப் பொருத்தது. தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும்போது மூச்சுக்காக தவிக்கும் ஒருவரின் தேவையையும், தூக்கத்தில் ஒருவருக்கு இருக்கும் மூச்சுக்கான தேவையையும் போல வெவ்வேறானது. //

தங்கமணி, நீங்கள் சோ குறித்து எழுதியது போன்ற பதிவுகளை கட்டாயம் எழுத வேண்டும். ஆனால் அவ்யப்போதாவது சீரியஸாய் சில இலக்கிய வடிவங்களை முயற்சிக்க வேண்டும் என்பது என் ஆசை. தெளிவாக உங்கள் மொழி வெளிப்பாட்டில் அண்மைகாலமாய் சில மாற்றங்களை பார்கிறேன். கவனத்தில் கொள்ளவும்.

ஈழநாதன், வழ வழ என்றது, சொன்னதை மீண்டும் சொன்னதையும், மையப்படுத்தாமல் பல விடயங்களை சேர்த்து கிச்சடியாக்கியதையே குறிப்பிட்டேன்.

நன்றி பெயரிலி!

3/01/2005 9:03 PM  
Blogger ROSAVASANTH said...

என் பின்னூட்டம் பலமுறை வந்துவிட்டதால், அவைகள் தடமின்றி நீக்கப்பட்டுள்ளன.

3/01/2005 9:36 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

"நல்ல புரிதல்! உங்களுக்கு இப்படி சொன்னாலே போதுமே! அதை நிறுவிய திருப்தி கிடைத்திருக்குமே! அது சரி, இதை புரிந்து கொண்டீர்கள், நான் வைத்த தலைப்பை புரிந்து கொண்டீர்களோ?"
இதில் என்னப் புரிய வேண்டியிருக்கிறது? இது ஒரு எரிச்சல் கலந்த சோ ஃபிக்ஸேஷன் அவ்வளவுதான். நான்தான் பார்க்கிறேனே. சம்பந்தமின்றி அவர் பெயரை இழுப்பதே இங்கு இருக்கும் பலருக்கு வாடிக்கையாயிற்று. அதுவும் உங்களைப் பொருத்தவரை முன்பு ஒரு காலத்தில் அவர் எழுத்துக்களை விரும்பிப் படித்ததையே அவமானமாக நினைத்து இப்போது அதற்கு ஈடு செய்வது போல மெனக்கெடுகிறீர்கள்.
இப்போதும் நான் மறுபடிக் கூறுகிறேன். அவர் எழுத்துக்கள் நாகரிகமானவை. யாரையும் தனிப்பட்ட முறையில் அவர் தன்னுடைய 35 வருடப் பத்திரிகை வாழ்க்கையில் தாக்கியதில்லை. அதற்கும் ஏதாவது உள்நோக்கம் கூறுவதுதான் இங்கிருக்கும் பலருக்கு வாடிக்கையாயிற்று. இம்மாதிரி எழுதியோ, கவர்ச்சிப் படங்கள் போட்டோ அவர் பத்திரிகையை வளர்க்கவில்லை என்பதே சகப் பத்திரிகையாளர்களை உறுத்துகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/01/2005 10:30 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Dear Rozavasant,

ஒவ்வொருவருக்கும் நன்றாக பதில் அளித்திருக்கிறீர்கள். மிகப் பெரிய பதிவும் கூட! ஹிந்தி திணிப்பு/வீரமணி நேர்மை/சோவின் அரசியல் பற்றிய தர்க்கம் அருமை.

As Jsri said
//
படிக்க ஆரம்பிச்சா ஒரு வேகத்துல படிச்சு முடிக்காம நிறுத்தமுடியலை. (Lol.) படிக்கும்போது இடையில் எந்த மாற்றுக்கருத்தும் வாசிப்பை நிறுத்துவதில்லை. :)
//
one cannot stop reading even if he/she has differing views! Coming to your ATTACK on me,

//
அதே போல அ.ரா நெகடிவாகவும், மு.ரா பாசிட்டிவாகவும் தோன்றுகிறது. சரி! அதனால் பெரியாரின் +/-உம் இந்த +/-ஐயும் ஒன்றாய் போட்டு, இந்த +/-ஐ கூடினால் பெரியார் வருகிறாரா? இதை போன்ற ஒரு வாதம்தான் பெரியார் சிலையையும் காட்சிகளையும் சில காமிரா கோணங்களையும் வைத்து அ.ராமசாமிக்கு தோன்றியிருக்கிறது. அது எப்படி அபத்தமோ அதைபோல பாலா எழுதியுள்ளதும் அபத்தம்
//
இதில் என்ன அபத்தம் இருக்கிறது? நான் கூற வந்தது, அந்த தலைப்புக்கான ஒரு புரிதல் மட்டுமே. ஒரு பெரியார் சிலையை காண்பிப்பதை வைத்தே இருவர் இவ்வளவு தீவிரமாக வித்தியாசப்படும்போது, எனது நோக்கில் பெரியாரின் செயல்களில் வித்தியாசங்கள் (+ and -) தெரிந்தன. அவ்வளவு தான்! ஆனால், உங்கள் +/- equation சுத்தமாக விளங்கவில்லை!

//
இப்போது நான் பாலாவும் தேசிகனும் எழுதியதை முன்வைத்து சுஜாதாவை திட்டினால் எப்படி இருக்கும்?
//
நான் யாரையும் திட்டவில்லை. எதற்கு இந்த Statement ?

//தங்கமணி சொல்ல வருவது என்னவென்று சிறுகுழந்தைக்கும் புரியும். பெரியார் பேசியதாக('காட்டுமிராண்டி பாசை' போல) சொல்லபடும் ஒரு விஷயம் குறித்து பேச, பெரியார் அது குறித்து எழுதியது பேசியதை அதன் சந்தர்ப்ப சூழலை முன்வைத்து விவாதிக்க வேண்டும் என்ற அர்தத்தில் "பெரியாரிடமே நேரடியாகச் சென்று" என்கிறார். அதற்கு பாலா "நான் மாட்டேன்! இன்னும் சிறிது காலம் இவ்வுலகில் வாழ்ந்த பின் பெரியாரை சென்று சந்திக்கிறேன் :-0" என்று அசட்டுதனமாய் பதிலளிக்கிறார்.
//
நகைச்சுவையாகத் தான் பதிலுரைத்தேன். எனக்குப் புரியவில்லை என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டால் என்ன செய்வது? தங்கமணி சொன்னது புரிந்து, பெரியார் எந்த context-இல் கூறினார் என்றும் படித்து தெரிந்து கொண்டேன்!!! அதை பின்னூட்டம் வாயிலாக உங்களிடம் ஒப்பிக்காமல் விட்டது பெரிய தவறு தான்! இதில் தங்கமணி சொன்னது போல் "நம்பிக்கைகள் உடையும் அபாயமோ ஏற்படும் தருணத்தில், தன்னை காப்பாற்றிக்கொள்ள நம்பிகையின்பாற்பட்ட மனம் எடுக்கும் தந்திரோபாயங்கள்" என்பதெல்லாம் சற்று TOO MUCH!

//
பாலா சொல்வது போல் அவர் மற்ற மதங்களை எதிர்க்கவில்லை என்பது உண்மையில்லை. கிருஸ்தவம் குறித்து அதிகமாய் பேசியுள்ளார். இஸ்லாம் குறித்து நேர்மறையாய் பேசியிருந்தாலும், இஸ்லாமியர்களிடையே பேசும்போதே அவர்களுக்கு உவப்பில்லாத கருத்துகளை பல முறை சொல்லியிருக்கிறார். பர்தாவின் கொடுமை பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார்.
//
மறுபடியும் சொல்கிறேன். பெரியார் இந்து மத நம்பிக்கைகளையும், கடவுளர்களையும் எதிர்ப்பதில்/சாடியதில் காட்டிய தீவிரத்தில் ஒரு சிறு பகுதியை தான் பிற மதங்களுக்கு எதிராகக் காட்டினார். Appeasement என்பது அன்று முதல் இன்று வரை நிலவி வருகிறது. வீரமணியும் இன்றைய தி.க வும் இதையே தான் செய்கின்றனர். பிள்ளையாருக்குப் போட்ட செருப்பு மாலையை பிற மத கடவுளர்களுக்கு பெரியாரும் போட்டுப் பார்க்கவில்லை. இப்படிச் சொல்வதால் என்னை மதச்சார்பின்மையில் நம்பிக்கை இல்லாதவன் என்று கூறினாலும் கவலையில்லை!

//
பாலா பெரியாரை ஓரளவு படித்துவிட்டு இன்னும் சற்று தீவிரமான கேள்விகளை எழுப்ப வேண்டும்.
//
ஓரளவு படித்திருக்கிறேன், தங்கள் அளவுக்கு வாசிப்பனுபவம் இல்லாவிட்டாலும் கூட!

//
எந்த தத்துவத்திற்க்கும், இயக்கத்திற்கும், அதன் கொள்கைகளுக்கும் எனது உடல்-ஆவி-மூளையை நான் அடகு வைக்காத காரணத்தால், பெரியார் சொன்ன எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பெரியாரியத்தின் அடிப்படையில்தான் பூமி சுற்றவேண்டும் என்றோ, மூச்சுவிட வேண்டுமென்றொ நான் நினைப்பதில்லை.
//
இதை 'கழுவுற மீனில் நழுவுற மீன்' என்று கொள்ளலாமா? இதில் பின்னூட்டமிட்ட பலரும் ஏதோ ஒரு "ISM" மீது நம்பிக்கை வைத்தவர்கள், நீங்கள் அப்படி இல்லை என்கிறீர்களா?
மேலே சொன்னது, இப்படியும் interpret செய்யலாம் என்பதற்காகவே கூறியது!

On the personal side, please spend as much time as possible with your son NOW! If not, you will feel about that later (from my experience!). So, please blog only when he is asleep :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

3/02/2005 4:02 AM  
Blogger Thangamani said...

ரோசா, உங்கள் பதிவுகளில் 'அவ்யப்போது' என்று வருகிறதே அது சரியா? 'அவ்வப்போது' தான் சரியென்று நான் நினைக்கிறேன்.

பாலா:
நான் பெரியாரைப்போன்ற ஒரு ஆளுமையை பற்றிய எனது புரிதலை வைக்கும் போதும் மற்றும் புதிய புரிதலின் போதும் நான் மிகுந்த தீவிரத்தோடுதான் (serious)செய்வேன். ஏனெனில் அது என்னுடைய முக்கியமான தேவையின் ஒரு பகுதி. அதை மற்றவர்களுக்கு பதில் சொல்வதற்காகவோ அல்லது ஒரு செய்தித் தொகுப்பாகவோ என்னால் செய்யமுடியாது. ஏனெனில் அவை என்னைப்பற்றிய புரிதலையும் உள்ளடக்கியவை. ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இருக்கவேண்டியதில்லை; அவர்கள் அதை எப்படியும் அணுகலாம். அவர்கள் அதை ஒரு தாக்குதல் தந்திரமாகக் கொள்ளும் வேலையில் செய்யும் உத்திகளைப் பற்றியே நான் சொல்லியிருந்தேன். நீங்கள் பெரியாரை அது குறித்து அறிந்துகொள்ள தொடர்பு கொண்டமை குறித்து மகிழ்ச்சியே.

நன்றி!

3/02/2005 5:56 AM  
Blogger ROSAVASANTH said...

டோண்டு, பாலா நன்றி.

பாலா, நான் சொல்ல வந்தது தேசிகனின் தலைப்பை நீங்கள் புரிந்துகொண்டது அபத்தமா இல்லையா என்பதல்ல. உங்களுக்கு ஏற்படும் புரிதல் மற்றவருக்கு அபத்தமாய் தெரிகிறது. அதே போலத்தான் அ.ராமசாமி சொல்வதும்! "இதில் என்ன அபத்தம் இருக்கிறது? " என்று நீங்கள் கேட்கும்போது அ.ராமசாமியின் விமர்சனத்தில் மட்டும் என்ன அபத்தம் இருக்கிறது? அவருக்கு மட்டும் அப்படி பார்க்க உரிமை இல்லையா என்பதுதான் நான் கேட்பது.

யாரையும் திட்டியதாய் உங்களை சொல்லவில்லையே. சரியாய் படியுங்கள். நான் சொல்ல வந்தது நீங்களும், தேசிகனும் சொன்னதை வைத்து சுஜாதா குறித்து பேசமுடியுமா என்பது. அதாவது அ.ராமாசாமியை முன்வைத்து மற்றவற்றை பேசுவது போல்.

அடுத்து என் பார்வை குறித்து சொன்னதை "இதை 'கழுவுற மீனில் நழுவுற மீன்' என்று கொள்வது" உங்கள் பிரச்சனை. நான் சொன்னது ஒன்றை நம்புவது குறித்து அல்ல. நம்புவதை பரிசீலிப்பது குறித்தது. தொடர்ந்து பரிச்சீலிப்பதன் மூலம்தான் இத்தனை மாற்றங்களையும், வந்தடைதல்களையும் கடந்து பயணித்து கொண்டிருக்கிறேன். மேலும் அதை சொன்னது சிறு வயதிலிருந்து எந்த மற்றமும் இல்லாமல் RSS என்ற இயக்கத்தீற்கு மூளை, உடல், அறிவு, பொருள் அனைத்தையும் அர்பணித்த ஒருவரிடம். நான் அது போல் எதற்கும் அடகு வைக்கவில்லை.

உங்கள் மற்ற சொந்த கருத்துக்கும் நன்றி. நிச்சயம் அதுதான் என் ஐடியாவும்.

தங்கமணி, திருத்தத்திற்கு நன்றி. அது 'அவ்வப்போதுதான்'. ஏன் அவ்யப்போது என்று இத்தனை முறை எழுதினேன் என்று புரியவில்லை. என் தலைப்பிலும் சரி செய்கிறேன். நன்றி!

3/02/2005 12:22 PM  
Blogger ROSAVASANTH said...

vinodhini: தேசிகன் வலைப்பதிவில் காதல் திரைப்படம் சம்பந்தமாக எழுதிய குறிப்பை ஒட்டி எழுதபட்ட பின்னூட்டங்களையும் ரோஸாவசந்த் தன்னுடைய வலைப்பதிவில் எழுதிய எதிர்வினைகள், விவாதங்கள் ஆகியவற்றை படித்தபோது இந்த சண்டை எதற்காக என்று உண்மையிலேயே குழப்பமாக இருக்கிறது. தேசிகன் அந்தத் கட்டுரைக்கு வைத்த தலைப்பு தேசிகனின் சாதி அடையாளத்தோடு சேர்த்துவைத்து பார்க்கும் ஒரு மனோபாவத்தை இந்த விவாததில் அவதானிக்க முடிந்தது. அது ஒரு விமர்சனத்தின் அபத்தத்தை குறிப்பதற்காக பயன்படுத்தபட்ட எளிய அங்கதமான வாக்கியமே அல்லாமல் அது பெரியாருக்கு எதிரான அல்லது நவீன சிந்தனைகளுக்கு எதிரான ஒரு கூற்று அல்ல. இப்படி ஒருவருடைய பிறப்பு அடையாளங்கள். ஈடுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே ஒரு பிரசினையை விவாதத்திற்கு எடுக்க முடியும் என்றால் அவை விவாதங்கள் அல்ல தீர்ப்புகள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டில் 'கட்டுடைப்பு' என்ற பெயரில் 'வாசிப்பு' என்ற பெயரில் நிகழ்த்தப்ப்பட அபத்தங்கள் பற்றிய ஒரு விவாதத்தின் தொடர்ச்சியாகத்தான் நாம் இதை பேசமுடியுமே தவிர ஒரு தனிநபரை தாக்குவதன் மூலம் அல்ல.
By vinothini, at 7:42 AM

ரோஸாவசந்த்: அறிவிஜீவி வினோதினி அவர்களே!

என் பதிவிலிருந்து ஒரு வரியை கூட நேர்மையாய் எதிர்கொள்ளாமல் எதையெல்லாமோ ஒளரி கொட்டியிருக்கும் உங்கள் மறுமொழியின் உளவியல் மிகவும் சுவாரசியமானது. நிச்சயம் நான் இதிவரை தேசிகனின் ஜாதி அடையாளத்தை முன்வைத்து ஒரு வார்த்தை எழுதவில்லை. இப்போது உங்கள் மறுமொழியின் வினோதமான வாதங்களை (நான் சொல்லாததை எல்லாம் வலிந்து சொல்லும் வாதங்களை) உங்கள் சாதி அடையாளத்தை வைத்து ஒருவேளை புரிந்துகொள்ள முடியும்.

"தேசிகன் அந்தத் கட்டுரைக்கு வைத்த தலைப்பு தேசிகனின் சாதி அடையாளத்தோடு சேர்த்துவைத்து பார்க்கும் ஒரு மனோபாவத்தை இந்த விவாததில் அவதானிக்க முடிந்தது. " இதற்கு ஆதாரமாய் ஒருவரி என் பதிவிலிருந்து எடுத்து காட்டமுடியுமா? அல்லது வேறு யாராவது அப்படி சொன்னார்களா? ஆனால் அ. ராமசாமியை தன் வாசிப்பாக சொன்னதை முன்வைத்து எதையும் பேசுவீர்கள். இதை ஜாதி புத்தி என்று சொன்னால்(கவனிக்கவும் இப்போதுதான் சொல்கிறேன்) அதில் என்ன மிகை?

இப்பாடி நான் *சொல்லாத ஒன்றை முன்வைத்தே*, கட்டுடைப்பு விவாதம் எதை பற்றியெல்லாமோ தீர்ப்பு சொல்லும் அளவிற்கு உங்கள் வாதங்கள் போகிறது. இதைத்தானே நான் இவ்வளவு நேரம் பேசி வந்தேன்.

3/02/2005 2:54 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

மறுமொழிக்கு நன்றி, ரோசாவசந்த்!

பதிவில் சில சொற்தவறுகள் உள்ளன! தங்கமணி ஒன்றை சுட்டிக் காட்டினார். என் கண்ணில் பட்ட சில:
'ஒளரி' அல்ல, 'உளறி'
'தர்கம்' என்பது 'தர்க்கம்'
'பார்பனர்' என்பது 'பார்ப்பனர்'
'அர்சகர்' அல்ல 'அர்ச்சகர்'
'தீர்பளிக்க' அல்ல 'தீர்ப்பளிக்க'
'குறிபிட்ட' என்பது 'குறிப்பிட்ட' (பல இடங்களில்!)
என்று இருந்திருக்க வேண்டும்.

பொதுவாக, மெய்யெழுத்தை விட்டு விடுகிறீர்கள் எனத் தோன்றுகிறது

என்றென்றும் அன்புடன்
பாலா

3/03/2005 12:03 AM  
Blogger Raj Chandra said...

Reg. Vinothini's comment:

I expected this earlier itself when Rozhavasanth wrote this article. I am at a loss where does RV mention about the caste. It is clear that whenever Periyaar's discussion comes up, it is being painted as a simple caste bashing. "Agraharam mentality"?
Disclaimer : no personal attack on Vinothini, it is my general opinion.

Regards,
Raj

3/03/2005 1:58 AM  
Blogger ROSAVASANTH said...

ராஜா, பாலா நன்றி!

பாலா, சில பிழைகளுடன் எனக்கு பிரச்சனையில்லை, உதாரணமாய் உளறி என்பதை ஒளறி, கொடுத்து என்பதை குடுத்து. பேச்சு மொழியை எழுதும் போது பயன்படுத்துவதை தவறு என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் குறிப்பிடும் மற்ற பிழைகளை கவனிக்கிறேன். அதில் சில எழுத்துப் பிழை, மற்றும் கவனக் குறைவு. சில உண்மையிலேயே குழ்ப்பம்!

தவறுகளை திருத்தியதற்கு நன்றி!

3/03/2005 1:48 PM  
Blogger SnackDragon said...

ரோசா , இப்பொழுதுதான் தேசிகன் பதிவு, உங்கள் 2 எதிர்வினைப்பதிவுகளை வாசித்து மண்டைக்காய்ந்தேன்.

முதலில் தேசிகன் "இலக்கியப்பத்திகைகளின் எழுதும் சினிமா விமர்சனம் புரியக்கூடது என்று எழுதப்படுகிறதா?" என்று தனக்கு அது புரிவதில்லை என்று எழுதியுள்ளார். அதோடு நிறுத்தியிருக்கலாம்.

அப்படி சொல்லிக்கொண்டே,
///ஒரு குறிப்பிட்ட விஷயத்தின்மீது பல்வேறு பார்வைகள் இருப்பது இயல்புதான். ஆனால் அதற்காக தான் விரும்புகிற எந்த அர்த்தைத்தை வேண்டுமாலும் ஒருவர் திணிக்க முடியுமா? பொதுவான பார்வையாளர்களின் கோணத்தில் இல்லாத ஒன்றை விமர்சனத்தின் வழியே அந்தப் படத்தில் புகுத்த முடியும் எனில் ஒரு சினிமாவின் ஒவ்வொரு. பிரேமிலும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள முடியும். பெரியார் சிலைக்குப் பதில் கண்ணகி சிலை, காந்தி சிலை அல்லது பசும்பொன் தேவர் சிலை அந்த ·பிரேமில் வந்துபோயிருந்தால் வரக்கூடிய விமர்சனத்தை இந்த பிளாக்கில் யாராவது எழுதலாம் //

இப்படி ஒரு விமர்சனத்தையும் வைக்கிறார்.

இவர்கள் அவலை நினைத்து உரலிடிப்பவர்களாக என் கண்ணுக்கு தெரிகிறார்கள்.பெரியார் சிலை இப்படி உறுத்துகிறதா? வறவேற்கப்படவேண்டிய தமாஷ்தான்! ;-)
இதற்கு உங்கள் இவ்வளவு பெரிய பதில் தேவையா என வருத்தம் ஏற்படுகிறது.

சரி நன்றி. [இந்த 3 பதிவுகளுமே ஜாங்கிரி சுட்டது போல் இருந்தது :-( ]

3/08/2005 1:00 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Roza vasanth,

2 (pallavis no. 1 and 8) more still pending at
பல்லவியும் சரணமும் - பதிவு 17 - இளையராஜா ஸ்பெஷல்! Still waiting for your answers:-)

---BALA

3/08/2005 5:38 PM  
Blogger ROSAVASANTH said...

Dear Bala,.
Sorry that I didn't see you are for waiting for me. I am not sure abt the songs. It is familiar, but not coming out. In fact 6 also was familiar, now after the anonymous pointed out it si clear that 'isai medaiyil..'/ Similarly when u give the answer it will be clear. SorrY.

I will also be tarvelling from tommorow, so won't be able to see you blog till monday, bye!
anbuLLa vasanth

(I won't be coming here till monday!)

3/08/2005 8:24 PM  
Blogger Vijayakumar said...

ரோசா அண்ணாச்சி, ஊருக்கா? போயிட்டு வாங்க. மெது மெதுவா பழைய பதிவுகளையெல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

3/08/2005 8:46 PM  
Blogger ROSAVASANTH said...

அல்வா மக்கா! ஊருக்குன்னா நம்ம ஊருக்கு இல்ல. இங்கனகுள்ளதான்! தொழில்!

மீண்டும் வருக!

3/08/2005 8:58 PM  
Blogger ROSAVASANTH said...

சுரேஷ் பதிவில் ஒரு மாபெரும் விவாதம்.

http://penathal.blogspot.com/2005/03/bore.html



ரோஸாவசந்த்: ஹிந்தி பள்ளியில் பயிலாமலேயே பின்னர் கற்பதில் உங்களுக்கு பிரச்சனை வரவில்லை. ஆனால் இங்கே அதை பயிற்று மொழியாக்குவதன் மூலம் இங்கே வரும் வடயிந்தியர்க்கு மட்டும் அது உதவும். மற்ற மானிலங்களை போல் இங்கேயும், தமிழ் கற்காமல் ஹிந்தியிலேயே ஓட்டமுடியும். கடையில் நீங்கள் ஹிந்தியில் கேட்டு பேச கற்றது போல் அல்லாமல், இங்கே நேரடியாய் ஹிந்தியில் பேசுவார்கள். (இப்போதய நிலமையிலேயே கூட வட இந்தியர்கள் சென்னையில் ஹிந்தியில்தான் நங்கநல்லூரில் காய்கறி காரியிடம் கேட்கிறார்கள். ) இன்னும் இது போன்ற பாதிப்புகளை மற்ற மாநில சங்கதிகளுடன் ஒப்பிட்டு பேசமுடியும். நீங்கள் அதையும் சொல்லியிருக்கலாம்.



posted by Voice on Wings : 7:33 PM : சுரேஷின் கூற்றில் எனக்கும் உடன்பாடுதான்.

ரோசாவசந்த், நங்கநல்லூரில் இந்தி பேசப்பட்டால் என்ன தவறு? மற்ற மாநிலத்தார் இங்கு வந்தால் தமிழில்தான் பேச வேண்டுமென்று அடம் பிடிப்பது நமக்குத்தான் நஷ்டத்தை விளைவிக்கும். பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்கள் வெளியோரை வரவேற்று cosmopolitan city என்ற நற்பெயரும் பெற்று, இன்று IT revolutionஇல் முன்னிடம் வகிக்கின்றன. மும்பை நகரமோ, காலகாலமாக பற்பல மானிலத்தவர்களின் திறமையும், முதலும் (investments) பெற்று இன்று commercial capitalஆக திகழ்கிறது. IT boom நம் பக்கமும் இப்போது தலைதூக்குவதன் அறிகுறியே நீங்கள் கேட்ட நங்கநல்லூர் வசனங்கள். இந்நிலையில் நமக்கு வேண்டியது பொருளாதார முன்னேற்றமா அல்லது தூசி படிந்த மொழிவெறிச் சிந்தனைகளாவென நாம் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும்.


ரோஸாவசந்த்: எனக்கு இங்கே விரிவாய் கருத்து சொல்ல ஆர்வமும், நேரமும் எனக்கு இல்லை. சுரேஷ் கொஞ்சம் உருப்படியாய் எழுதியதாக பட்டதால் என் கருத்தை சொன்னேன்.

" நங்கநல்லூரில் இந்தி பேசப்பட்டால் என்ன தவறு? " என்று கேட்பவருக்கு என்னத்தை சொலவது? என்ன தவறு என்பதைத்தானே என்ன பாதகம் என்று கோடிட்டு காட்டியிருக்கிறேனே! மதுரையிலிருந்து சென்னைக்கு போகும் தமிழர் சாலையில் ஒருவருடன் ஜாக்கிரத்தை உணர்வுடன் ஹிந்தியில் முதலில் கேட்டுவிட்டு தமிழுக்கு தாவலாம். இதிலும் என்ன தவறு என்று கேட்கலாமே! ஒவ்வொரு பதிலுக்கும்' என்ன தவறு?' என்று கேட்பவருக்கு என்னத்தை பதில் சொல்லமுடியும்? எதில்தான் என்ன தவறூ? என்ன எழவிற்கு இங்கே தமிழில் நாம் பேசவேண்டும்? இன்னும் என்ன எழவிற்கு பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிகொடுக்கவேண்டும்? ஆங்கிலத்தில் பேசினால்தான் என்ன தவறு?

ஆனால் *இவர் சொல்லும் வகையில்* (கவனிக்கவும் பொதுவாய் அல்ல) நிகழக்கூடிய IT புரட்சியால் தங்களுக்கு நன்மையைவிட தீமையே இருப்பதாகவே கர்நாடகத்தவர்கள் நினைக்கிறார்கள். கன்னடியர்கள் அடைந்த பலனைவிட மற்றவ்ர்களே சுரண்ட முடிந்தது என்பது அவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு தெரியும்.

(ஆனாலும் சென்னையில் அனைவரும் ஹிந்தி பேசி வட இந்தியர்களை வரவேற்றால்தான், IT புரட்சி வரும் என்ற லாஜிக் என் சிற்றறிவிற்கு எந்த விதத்திலும் விளங்கவில்லை என்பது இருக்கட்டும். வட இந்தியாவை முன்னேற்றத்திற்கான இடமாக கருதாமல் தெற்கை நோக்கி படையெடுப்பவர்களை, இங்கே உள்ள மொழியை கற்பதற்கான சின்ன தூண்டுதலை கூட தராமல், அவர்கள் மொழியில் பேசி வரவேற்றால் நாம் முன்னேற்றமடைவோம் என்றும், அப்படி செய்வதில் பிழை கண்டால் அது மொழிவெறி என்றும் போகும் அறிவு பூர்வமான வாதததை விளங்கி கொள்ளும் அளவிற்கு முதிர்ச்சி அடையாத நான் இங்கே என்ன கருத்து சொல்லிவிட முடியும்?)


posted by Voice on Wings : 7:44 PM : ரோசாவசந்த், பரவாயில்லை ஆர்வமின்றியே வெகு விரிவாக கருத்து தெரிவித்து விட்டீர். தமிழனும் தமிழனும் இந்தியில் உரையாட வேன்டுமென யாரும் கோரவில்லை. பிள்ளைகளுக்கு தமிழ் பாடம் குறித்தும் நான் எந்த மறுப்பு கருத்தையும் கூறவில்லை. எனது கேள்வியெல்லாம், ஒரு இந்தி தெரிந்த தமிழனும், இந்தி தெரிந்த வேற்று மாநிலத்தவனும் நங்கநல்லூரிலோ அல்லது மதுரையிலோ அல்லது அரக்கோணத்திலோ நின்று கொண்டு இந்தியில் உரையாடினால், அது எவ்வகையில் தமிழக நலனுக்கு பாதகம் விளைவிக்கும்?

IT புரட்சிக்கு பிறகு வருவோம். முதலில் நீவிர் சுட்டிக் காட்டிய காய்கறி விற்பனை சூழ்நிலை. அந்த பெண்மணிக்குத் தேவை வாடிக்கையாளர்கள். அவரிடம் இருப்பது ஒரிரு வார்த்தையாவது இந்தி பேசும் திறமை. அத்திறமையை கொண்டு ஒரு விற்பனையை சாதிக்கிறார், சற்று அதிக விலையில் கூட இருக்கலாம். இந்த market பொருளதார நிகழ்வு உங்களையோ, அல்லது மற்றவரையோ எவ்வாறு பாதிக்கிறது?

இப்போது IT புரட்சி. நான் சொல்லும் வகையிலோ, அல்லது வேறு வகையிலோ எவ்வாறாயினும் இது ஒரு people-centric industry. "தமிழர்களுக்கு மட்டுமே வேலை" என்ற கொள்கையை கடைபிடித்துக் கொண்டு எந்த நிறுவனமும் பிழைப்பு நடத்த இயலாது. வல்லுனர்கள் யராயிருந்தாலும் அவர்க்ளை கவர்ந்தே தம் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். இந்நிலையில், அவர்களுக்கு கட்டாய பாடங்கள் விதிக்கப் பட்டால், அதை அவர்கள் சுமுகமான சூழ்நிலையாக கருதமாட்டார்கள். நாம் அனைவரும் இந்தி பேசி வரவேற்க வேண்டும் எனக் கோரவில்லை. ஆர்வமுள்ளவர்கள் பேசினால் அதற்கு மொழித் தடை போடாதீர் என்றே கோருகிறேன். வல்லுனர்களென உதாரண்ம் கூறினேன். இது முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். பொருளாதாரத்துக்கு வேண்டிய capital மற்றும் human resource இவையிரண்டுமே சுமுகமான சூழல்களையே தேடிச் சென்றடையும். தமிழகம் அத்தகையவொரு சுதந்திரப் பூங்காவாக திகழ வேண்டுமா, வேண்டாமா என்பது கேள்வி.


ரோஸாவசந்த்: 1. நான் எழுதியது விரிவான கருத்து அல்ல. விரிவாய் கருத்து தருவது என்பது விங்க்ஸ் தரப்போகும் பதிலையும் எதிர்பார்த்து அல்லது பதில் வந்தபின் அதற்கு பதிலளித்து விரிவாய் ஒரு விவாதத்தில் ஈடுபடுவது. அதற்கு எனக்கு நேரமும் ஆர்வமும் இல்லை.இப்போது இதுவும் கிடைத்த சந்தர்பத்தில் அளிக்கும் ஒரு சின்ன இடையீடு மட்டுமே!

2. வாய்ஸ் விங்க்ஸ் 'தமிழர்கள் ஹிந்தியில் பேசிகொள்வது, பிள்ளைகள் தமிழ் படிக்காமலிருப்பது' இது குறித்தெல்லாம் என்ன கருத்து வைத்திருக்கிறார் என்பது அல்ல என் கேள்வி. அவற்றில் என்ன தவறு எனபதுதான் (ஒரு எதிர்வாதமாய்) என் கேள்வி.

நான் "தமிழனும் தமிழனும் இந்தியில் உரையாட வேன்டுமென யாரும் கோரி"யதாக சொல்லவில்லை. மகராஷ்டிராவில் நாக்பூரிலிருந்து போகும் ஒரு மராட்டியனுக்கு மும்பையில் இறங்கியவுடன் மராட்டியில் யாரிடமும் பேசும் தைரியம் இருக்காது. முதலில் ஹிந்தியில் தொடங்கி, பின் மராட்டியன் என்று அறிய நேர்ந்தால் மராட்டிக்கு தாவமுடியும். மும்பை ஒரு எக்ஸ்ட்ரீம் உதாரணம் மட்டுமே. நாக்பூரிலேயே ரோட்டில் பார்க்கும் ஒருவருடன் மராட்டியில் பேசுவது கிடையாது. இன்னும் சிறிய ஊரான வார்தாவில் முன் அறிமுகம் இல்லாத இருவர் ஹிந்தியில்தான் உரையாடலை தொடங்குவார்கள். வார்தா போன்ற ஒரு ஊருக்கு மராட்டி படங்களே வருவது கிடையாது. ஒரிசா, மகராஷ்டிரா எல்லா இடத்திலும் இதேதான் நிலமை. இந்த அளவிற்கு மோசம் இல்லாவிட்டாலும், ஹைதாராபாத்திலும் இதே போன்ற ஒரு நிலமைதான் பல இடங்களில் உண்டு. பெங்களூரில் கொஞ்சம் மூஞ்சி தூய கன்னடியனாய் இல்லாவிட்டாலோ, கொஞ்சம் வட இந்திய சாயல், அல்லது நிறம் இன்னும் எத்தனையோ காரணக்களுக்காக ஒரு கன்னடியனிடம் ஹிந்தியிலேயே ஒருவர் உரையாடலை தொடங்க கூடும். இதைத்தான் "மதுரையிலிருந்து சென்னைக்கு போகும் தமிழர் சாலையில் ஒருவருடன் ஜாக்கிரத்தை உணர்வுடன் ஹிந்தியில் முதலில் கேட்டுவிட்டு தமிழுக்கு தாவலாம். இதிலும் என்ன தவறு என்று கேட்கலாமே!" என்று எழுதினேன்.

அதை வாய்ஸ் எப்படி எதிர்கொள்கிறது என்றால் "தமிழனும் தமிழனும் இந்தியில் உரையாட வேன்டுமென யாரும் கோரவில்லை..... எனது கேள்வியெல்லாம், ஒரு இந்தி தெரிந்த தமிழனும், இந்தி தெரிந்த வேற்று மாநிலத்தவனும் நங்கநல்லூரிலோ அல்லது மதுரையிலோ அல்லது அரக்கோணத்திலோ நின்று கொண்டு இந்தியில் உரையாடினால், அது எவ்வகையில் தமிழக நலனுக்கு பாதகம் விளைவிக்கும்? "

வாய்ஸ் சொல்வது போல் யார் இங்கே யாருக்கு எந்த மொழியை பேச தடை விதித்தார்கள்?

வாய்ஸ் எதை கோருகிறார், எதை சரி/தப்பு என்கிறார் என்பதை பற்றி யாருகென்ன வந்தது? ஒரு குறிப்பிட்ட phenomenon எங்கே இட்டு செல்லும் என்பதை பற்றித்தான் பேச்சு! இதிலும் என்ன பாதகம், என்ன தவறு, இதனால் தமிழுக்கு என்ன கேடு என்றெல்லாம் வாய்ஸ் கேட்க கூடும். பதில் சொல்லத்தான் நமக்கு வக்கு இருக்காது.

3. காய்கறி விற்பனை குறித்து நான் சொன்னதை அவர் சரியாய் புரிந்து கொள்ளவில்லை. நான் குறிப்பிட்ட காய்கறி விற்கும் பெண்மணிக்கு ஹிந்தி தெரியாது. அவர் ஹிந்தியில் எந்த வார்த்தையும் பேசவும் இல்லை. பேசும் வட இந்தியர்களுக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை. அவர்களை பொறுத்தவரை ஹிந்தி தெரிந்திருப்பது இயலபானது.தெரியாதவர் அதை கற்றுகொள்வது இயல்பானது.

சுரேஷ் எழுதியதை கவனிக்க வேண்டும். அவர் வட இந்தியா போனபோது கடைகாரரிடம் ஒரிரு ஹிந்தி வார்த்தகளால் தொடங்குகிறார். அது அங்கே இயல்பானது. யோசித்தால் இங்கேயும் இந்த ஊரில் வாழ வருபவர் கடைக்கு போய் ஓரிரு தமிழ் வார்த்தைகளால் தொடங்குவதே இயலபாய் இருக்க வேண்டும். ஹைதாரபாத்தை, பெங்களூரை போல 'புரட்சி' வந்தால், இந்த இயல்பு தலை கீழாக்கப்படும். நங்கநல்லூரில் வாழ்ந்துகொண்டு ஹிந்தி தெரியாததை காய்கறி விற்கும் பெண் தன் தன்னுடய தவறாய் உணர வைக்கும் உளவியல் உருவாகும். ஏற்கனவே சென்னையிலேயே பல இடங்களில் இது உருவாகியிருக்கிறது. இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

அதை வாய்ஸ் தனது புத்திசாலித்தனத்தை கொண்டு எப்படி எதிர்க்கொள்கிறார் என்றால் "அந்த பெண்மணிக்குத் தேவை வாடிக்கையாளர்கள். அவரிடம் இருப்பது ஒரிரு வார்த்தையாவது இந்தி பேசும் திறமை. அத்திறமையை கொண்டு ஒரு விற்பனையை சாதிக்கிறார், சற்று அதிக விலையில் கூட இருக்கலாம். இந்த market பொருளதார நிகழ்வு உங்களையோ, அல்லது மற்றவரையோ எவ்வாறு பாதிக்கிறது?"

நான் குறிப்பிடுவது ஒரு சமூக சூழல், இயல்பாய் ஒன்றை கருதக்கூடிய உளவியல் எப்படி மாறும் என்பது குறித்தது. இதில் 'என்னை மற்றவரை' பாதிப்பது குறித்த கேள்வி எங்கிருந்த்து வருகிறது? இது வெறும் அசட்டுத்தனமான புத்திசாலித்தனம் அன்றி வேறென்ன?

4. கடைசி பாரவில் மீண்டும் வாய்ஸின் புத்திசாலித்தனம் மட்டுமே வெளிப்படுகிறது.

முதலில் IT புரட்சி வந்து பாலும் தேனும் ஓடப்போகிறதா என்ற கேள்விக்குள் போகவேண்டாம். ஆந்திராவில் புரட்சி நடந்ததாக சொல்லிகொண்டிருந்த போதுதான் பட்டினியாலும், வட்டி கட்டமுடியாமலும் விவசாயிகள் தற்கொலை செய்வது உச்ச எண்ணிக்கையில் இருந்தது. இதையும் அதையும் இணைக்கும் பொருளாதார காரணிகள் எதுவும் உண்டா என்பது குறித்து (எனக்கே தெளிவில்லாத காரணத்தால்)பேசாமல், ஒரு பேச்சுக்கு IT புரட்சி வந்துதான் நம் சமுதாயம் உய்யக்கூடும் என்றே வைத்துகொள்வோம்!

அதற்கும் இங்கே எல்லோரும் ஹிந்தி பயின்று, பேச தொடங்குவதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் எனது கேள்வி. இங்கே முதலில் இருந்தே அந்த கேள்வியில்தான் விவாதமே தொடங்குகிறது. லாஜிக் தனக்கே ஒத்து வராமலோ என்னவோ அவரே பதிலை மாற்றிக் கொண்டு விட்டார். ஆனால் அதிலும் பிரச்சனை.

"நாம் அனைவரும் இந்தி பேசி வரவேற்க வேண்டும் எனக் கோரவில்லை. ஆர்வமுள்ளவர்கள் பேசினால் அதற்கு மொழித் தடை போடாதீர் என்றே கோருகிறேன். " என்கிறார். தடை போடவேண்டும் என்று யார் சொன்னது? தடை போடுவது என்பதற்கு என்ன பொருள்? அதை எப்படி யாரால் நடைமுறைப் படுத்த முடியும்? அது குறித்து இங்கே யார் பேசினார்கள்? "தமிழர்களுக்கு மட்டுமே வேலை" என்ற கொள்கையை கடைபிடிக்க' வேண்டும் என்று யார் சொன்னார்கள்.

வாய்ஸ் நினைப்பது போல் இங்கே பெரிய அளவில் ஹிந்தி பேசப்பட்டால்தான் வல்லுனர்களும், முதலீட்டாளர்களும் வருவார்கள் என்பது உண்மையல்ல. இவை எல்லாம் வேறு காரணிகளாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. தேவையெனில் தூத்துகுடியிலிருந்து டோக்கியோ வரை எங்கு வேண்டுமானாலும் போக தயாராயிருப்பார்கள். நங்கநல்லூரில் காய்கறிகாரியை ஹிந்தி பேச *வற்புறுத்துவதை* இதை முன்வைத்து நியாயபடுத்த முடியாது. காய்கறி விற்பவரும், கண்டக்டரும் ஹிந்தி பேசாவிடில் "தமிழகம் அத்தகையவொரு சுதந்திரப் பூங்காவாக திகழ"வில்லை என்றாகிவிடாது.

இது வரை ஏதோ தமிழர்கள் எல்லாம் ஹிந்தி படிக்காமல் எதை எதையோ இழந்ததாக பீலா விட்டார்கள். ஆனால் யதார்தத்தில் மற்ற மொழியினரை (ஒப்பீடுரீதியில் மலையாளிகள் தவிர்த்து) விட தமிழர்கள் உலகில் மூலை முடுக்கில் எல்லாம் வாழ்ந்து வருகின்றனர். ஹிந்தி என்ன ஜுஜுபி, என்னென்னவோ மொழிகள் தமிழர்களால் பேசப்ப்டுகிறது. ஹிந்தி படித்த ஒரிசா, மராட்டி, கன்னடியர்களைவிட பரவலாய் உலகம் முழுவதும், வட இந்தியா உட்பட வாழ்ந்து வருகின்றனர். மைலாப்பூரில் பிரவீண் வரை படித்த அம்பியிடம் ஹிந்தி பேசினால் திகைத்து போகக்கூடும். அரிச்சுவடி தொடாத திருநெல்வேலி தமிழர் ஹிந்தியில் போட்டு தாக்கக்கூடும்.

தேவையின் நிர்பந்தத்தால் மட்டும் மார்வாடிகளும், இன்னும் எத்தனையோ வட இந்தியரும் 'திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டும் அள்விற்கு தமிழ் புலமை பெறக்கூடும். வேறு எந்த மானிலத்திலும் அவர்களுக்கு அந்த நிர்பந்தம் இருக்காது. (எல்லாம் பொத்தாம் பொதுவான கருத்துக்கள், விதி விலக்குகள் பல இருக்கலாம்.) ஹிந்தி தெரியாததால் எந்த முதலீட்டையும் இழந்ததாய் ஆதாரம் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை.

ஜப்பானிய மொழியை தவிர்த்து, ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரியாமல்தான் ஜப்பானில் புரட்சி நடந்திருக்கிறது. உடனே நிச்சயமாய் டோக்கியோவிற்கும் சென்னைக்கும் ஆயிரம் வித்தியாசங்களை காட்டமுடியும். அதனால்தான் நம்மால் ஆங்கிலத்தை தவிர்க்க முடியாது. ஆங்கிலத்தால் எவ்வளவோ நன்மை! ஹிந்தி அதில் எதையும் நமக்கு தரபோவதில்லை- பாதகத்தை தவிர. அதுவும் இந்த IT புரட்சி எந்தவித நம்பகதன்மையும் இல்லாதது. ஸாஃப்ட்வேர் போன்ற ஒரு போலியான புலமை வேறு ஒன்று இருக்க முடியாது. பெரிதாய் எந்த பயிற்சியும், அறிவும் புலமையும் (மற்ற துறைகளை போல) தேவையில்லாத துறை அது. அந்த புரட்சியும் ஹிந்தியும் சேர்ந்த கலவையால் நாம் பயன் பெறுவோமா மற்றவர்களா என்பது சிக்கலான கேள்வி அல்ல. பெங்களூர் புரட்சியில் கர்நாடகத்தவரை விட தமிழர்களுக்குதான் லாபம் அதிகம். ஆகையால் IT புரட்சிக்கு சென்னையை பலி கொடுக்காமல் பெங்களூரை புணர்ந்தே தமிழர்கள் தங்களை வளமாக்கி கொள்ளமுடியும். இது சரியா தப்ப எனப்து அல்ல கேள்வி. இங்கே வாய்ஸ் பேசுவதும் அது அல்ல. லாபமா/நஷ்டமா, புத்திசாலித்தனமா/அசட்டுத்தனமா என்பதுதான் கேள்வி.

ஹிந்தி பேசும் எந்த மானிலத்தைவிடவும் நாம் எவ்வாளவோ முன்னேறி இருக்கிறோம். இத்தனை வருட ஒரு மத்திய ஆட்சியின் வெளிப்படியான பாரபட்சத்திற்கு பின்னும். அங்கே எல்லாம் போனால் ஏதோ நானுறு வருடங்கள் முந்தய நகரத்திற்கு போனது போல் இருக்கிறது. அது முன்னேற்றத்திற்கான இடம் அல்ல என்று கருதும் வட இந்தியர்கள் இங்கே படையெடுக்கிறார்கள். இங்கே யாரும் அவர்களை தடை செய்யவில்லை. அவர்கள் தங்களின் வழக்கமானா திமிரில் இங்கிருக்கும் மொழியை கற்க சின்ன முயற்சி கூட செய்யாமல், இங்குள்ளவ்ர்களை ஹிந்தி பேச நிர்பந்திப்பதை விமர்சித்தால் அதை மொழி வெறி என்று திரிக்கப்படூகிறது. ஒரு வட இந்திய வெறியன் அதைத்தான் செய்வான். ஆனால் தமிழ் சூழலில் ஒருவர் அதை சொல்வதை வெறும் அவலம் என்று மட்டும் எடுத்து கொள்ளமுடியுமா?

மிகவும் அவசரமாய் அடித்ததில் ஒரு திட்டமில்லாமல் எழுதப்பட்டுள்ளது. விரும்பிய வண்ணம் வாசித்து தேவையானதை எடுஇத்துகொளவ்து அவரவர் விருப்பம்.


# posted by Voice on Wings : 3:55 PM : ரோசாவசந்த், உங்கள் பதிலின் உட்கருத்து: "தமிழகத்துக்கு வருகை தரும் அயலார், முன்பின் தெரியாதவர்களிடம் பேச்செடுக்க வேண்டுமென்றால் முதலில் தமிழில் ஆரம்பித்துவிட்டு பிறகுதான் வேறு மொழிகளுக்கு தாவலாம். இந்த அளவுக்கேனும் அவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும். இத்தகைய நிலை உறுதி செய்யப் படாவிடின் நம் கதி அதோகதிதான்." என் வாசிப்பில் தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்.

அயலார் - இவர்களில் பலவகை. வெளி மாநிலத்தவர் / நாட்டவர்; சில நாட்களே வந்து போகும் சுற்றுலா பயணி / சில மாதங்கள் வசித்தவர் / சில வருடங்கள் வசித்தவர். கடைசி வகையைச் சேர்ந்தவர் வேண்டுமானால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம். மற்றவர்கள் கதி? உங்கள் கண்டனத்துக்கு ஆளாக வேண்டியவர்கள் தானா?

நீங்கள் பரிந்துரை செய்யும் 'தூண்டுதல்' கொள்கையில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. அதுவும் ஒருவகைத் திணிப்பு என்றே கூறுவேன். இந்தி திணிப்பை எதிர்த்த அதே மனதுடன் நீங்கள் பரிந்துரைக்கும் தூண்டுதலையும் எதிர்க்கிறேன்.

தனி மனித சுதந்திரம் என்ற ஒரே வழிகாட்டும் கொள்கையை நினைவில் கொன்டு பார்த்தால் - ஒருவன் என்னிடம் வந்து French அல்லது German, ஏன் Japanese இல் பேச்செடுத்தால் கூட அது அவனது தனி மனித உரிமையே அன்றி வேறேதுவுமில்லை. அதற்கு விடை கூறும் அல்லது கூறாமலிருக்கும் உரிமை, என்னுடையது. இவ்வளவு எளிய தீர்வு இருக்கையில் எதற்காக செய்யவேண்டும் தூண்டுதல்கள்?

PS - இது நான் உங்கள் உட்கருத்துக்கு மட்டும் கூறிய விடை (விவாதத்தின் பயன் கருதி)


ரோஸாவசந்த்: இதற்கு பதில் சொல்ல உண்மையிலேயே தேவை, காரணம் சாத்தியம் எதுவும் இல்லாததால் ஜகா! யாருக்காவது பயன்பட்டால் சொல்லவும். நன்றி!

3/08/2005 9:21 PM  
Blogger Vaa.Manikandan said...

நன்றி ரோசாவசந்த்,
சோ ரசிகனுக்கு அவ்வளவு கடுமையான எதிர்வினை தேவை இல்லை என்றுதான் என நினைத்தேன்.
ஆனால் அவரினை போன்றோர் பெரியாரை தாக்கி பேசினால் கேட்பதற்க்கு யாருமே இல்லை(இணையத்தில்) என்னும் எண்ணத்தினை வளர்த்திக்கொள்ளக்கூடாது இல்லையா?

வா.மணிகண்டன்

3/08/2005 10:02 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter