ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, February 10, 2005

எதிர்கொள்ளும் மரம்.

குளிர் காலத்தில் இலைகள் எல்லாம் உதிர்ந்து போய்
ஓவியம் போலத்தான் காண்பித்துக் கொள்கிறது.
பனி கொட்டியிருந்தால்
'கலைத்தன்மை' இன்னும் கூடிவிடக் கூடும்
என்று வழக்கம் போலத் தோன்றுகிறது.
பெய்த பின் வேறு தோன்றலாம்!
நிலவின் ஏதாவதொரு பிறை
அதனிடையில்
தென்படக் கூடுமோவென தினமும் கவனிக்கிறேன்.
வானத்தின் பிண்ணணியிலாவது பார்க்க முடிகிறது.
வளர்சிதை மாற்றத்தில்
இலைகள் ஜனித்து
சூரிய ஒளியில்
அதன் மெய்மை
உயிர்ப்பிக்கும் வரை
காத்திருக்கிறேன்
அதனுடன் உறவாட!

Post a Comment

24 Comments:

Blogger ROSAVASANTH said...

நாளையிலிருந்து இணையத்தில் எழுதுவது கொஞ்சம் கஷ்டம். இங்கே எப்போதாவது உள்ளிடுவது பெரிய பிரச்சனையில்லை. ஆனால் விவாதத்தில் ஈடுபடுவது, மற்ற பதிவுகளில் பின்னூட்டமிடுவது, இங்கே என் பதிவிலும் பின்னூட்டங்களுக்கு பதிலிடுவது போன்றவற்றை தொடர்ந்து செய்ய, நாளையிலிருந்து இயலாது. இன்னும் சில மாதங்களுக்கு குடும்ப பொறுப்புகளும், வேலையும் என்னை ஆக்ரமித்திருக்கும் என்பதால் மற்றவற்றில் கவனம் செலுத்துவது கடினம்.

எனக்கு இணையம் மூலம் மட்டுமே தெரிந்த (முகம் தெரியாத) பல நண்பர்ளும், இன்னும் தெரியவே தெரியாத நண்பர்களும் என் பதிவுகளை வழமையாய் படித்து வருவது எனக்கு தெரியும். அவர்களுக்கு என் நன்றிகள். அவ்யபோது இங்கே எதையாவது நிச்சயம் தட்டி வைப்பேன். உருப்படியாய் எதையும் இன்னும் எழுதவில்லை என்றாலும், கடந்த ஒரு மாதமாய் கொஞ்சம் அதிகமாய் எழுதுவது போல் தொடரமுடியாது என்று மட்டும் தகவலாய் இங்கே எழுதுகிறேன். நன்றி!

2/11/2005 1:48 AM  
Blogger ROSAVASANTH said...

அட என்னடாப் பொல்லாத வாழ்க்கை!
இதுக்கு போய் அலட்டிக்கலாமா!
(சோதனை)

2/11/2005 2:27 AM  
Blogger KARTHIKRAMAS said...

http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=27&fldrID=1#comment

2/11/2005 3:41 AM  
Blogger ROSAVASANTH said...

In will be replying this tommorow, unless abideen apologise for this. Thanks for bringing this to my notice.

2/11/2005 4:09 AM  
Blogger ROSAVASANTH said...

இப்போது வேலையிலிருக்கிறேன். ஆபிதீனுக்கான பதிலை எழுத தொடங்க இன்னும் 5மணி நேரமாவது இருக்கிறது. எனக்கு பிறரிடம் மன்னிப்பை பெறுவதில் எந்த ஆர்வமும் கிடையாது. (மற்றவர்களிடம் நான் கேட்பதுண்டு என்பது வேறு விஷயம்.) அடுத்த 5 மணி நேரத்திற்குள் ஆபிதீன் தான் எழுதியதற்கு விளக்கமளிக்கவோ, திரித்தலாக எழுதியதை திரும்ப பெறவோ செய்யாவிடில்... வேறு என்னா? நான் என்ன ஞாநி மாதிரி அவதூறு வழக்கா போடபோகிறேன்! அல்லது ஆபிதீனை திட்டுவதற்கென்றே ஒரு இணையதளம் வைத்து நடத்த முடியுமா?

என்பதிவில் இது குறித்து எழுத நேரிடும். அவ்வளவுதான்.

ஆபிதீன் பிகேசிவக்குமரை போல் சுரணையற்று இருந்தால் நான் எழுதபோவதால் எந்த பாதிப்புமற்று கண்டுகொள்ளாமல் போய்விடமுடியும். இதனால் எனக்கு மட்டுமே சிலமணி நேரங்கள் வீண் என்ற நிலமைக்கு தள்ளமுடியும். ஆனால் நான் அறிந்தவரை ஆபிதீன் மிகவும் உணர்சிவசப்படுபவராகவும். வெளிப்படையாய் அதை காண்பிப்பவராகவும் தெரிகிறது. அதனால் நான் எழுதப்போவது ஆபிதீனை கஷ்டப்டுத்தும் என்று மட்டும் சொல்லிகொள்கிறேன். இன்னும் 5 மணி நேரம் இருக்கிறது.

2/11/2005 12:29 PM  
Blogger ROSAVASANTH said...

நாகூர் ரூமி, ஆபிதீனின் 'மறுமொழி', மற்றும் அதை தொடர்ந்து எழுதிய அனைத்தையும் நீக்கியிருக்கிறார். அங்கே நான் இட்டது, இன்னும் இது மேல் நடவடிக்கை எதியும் முடிவு செய்யவில்லை.

"நான் சாரு குறித்து எழுதியதை நீங்கள் படிக்கவில்லை என்பதை ஒப்புகொள்ளமுடியும். அதனாலேயே என்னை பற்றி கூறுகிறார் என்று விளங்கி கொள்ளாமலேயே ஆபிதீன் எழுதியதை இங்கே இட்டிருக்க கூடும் என்பதையும் ஒப்புகொள்கிறேன். ஆனால்

//ஏற்கனவே சாருவின் விசிறிகள் எவனுடைய ஆண்குறியையாவது வீராவேசமாக அறுத்தபடி (part time!) என் மேல் எரிந்து விழுகிறார்கள்.
//

//பெற்ற தாயையே விபச்சாரி என்று சொல்கிற ஆளாக சாருவை நான் காட்டியதற்கு கோபப்படும் சாருவின் விசிறி , உண்மையை ஒப்புக் கொள்ளும் நேர்மையாளனாக சாருவைக் காட்டுகிறார். //

//...மார்க்ஸீய -cum- பெரியாரிய வேஷம் போடும் மடையன்கள்.//

என்றெல்லாம் கூறுவது என்னைத்தான் என்பதை என் பதிவுகளை படிக்கும் அனைவருகும் தெரியும். ஆபிதீன் நான் எழுதியதை குறிப்பிடவில்லை. நான் எழுதியதை முற்றிலும் திரித்து, என் பெயரை கூட குறிப்பிடாமல், அதாவது சாரு ஆபிதீனுகு எதை செய்தாரோ, அதைப்போல என்னை பற்றி எழுதியிருந்தார். வேண்டுமானால் நான் சொல்வது உண்மையா என்று அவரிடமே கேட்கலாம்.

நான் சாருவையும், அவர் எழுத்தையும் 'போலி' என்று கடுமையாய் தாக்கி எழுதியிருந்தேன். ஆபிதீன் என்னை சாருவின் விசிறியாக்கியதோடு நான் எழுதிய அனைத்தையும் மிக மோசமான முறையில் திரித்திருந்தார்.

என்னை பற்றி தனிப்பட்ட அஞ்சல்களில் யாரேனும் திட்டினாலோ, எழுதினாலோ அது குறித்து எதுவும் செய்யமுடியாது. பொது களத்தில் எது குறித்தும் விவாதிக்க எனக்கு தயக்கம் கிடையாது.

நேரடியாக என் பதிவின் பின்னூட்டத்தில் எதையும் விவாதிக்க முடியும். அதை விடுத்து ஆபிதீன் செய்தது, சாரு அவருக்கு செய்துவருவதை போன்ற கயமைத்தனம்.

இப்போது நீங்கள் ஆபிதீனின் மறுமொழியை நீக்கியிருக்கிறீர்கள். ஆனாலும் குறைந்த பட்சம் ஒரு முழு நாள் இங்கே இருந்து அது பலரால் வாசிக்க பட்டிருகிறது. என்ன நடசடிக்கை எடுப்பது என்பது குறித்து நான் இன்னும் முடிவெடுகவிலை. வேலைக்கு நடுவிஉல் எழுத்கிறேன்.

2/11/2005 4:21 PM  
Blogger ROSAVASANTH said...

ஆபிதீனுக்கு எழுத மனதில் தயார் செய்திருந்த பெரிய பதிலை எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் அது குறித்து சின்ன குறிப்பு எழுதகூடும் நாளை.

2/11/2005 9:26 PM  
Blogger KARTHIKRAMAS said...

ரோசா ,
ஆபிதின் எழுதியதில் இருந்த பிரச்சினை எனக்கு உடனே புலப்பட்டது. நானே பதில் எழுதியிருப்பேன். இருப்பினும் நீங்கள் எழுதுவது முறை என்பதாலேயே உங்களுக்கு தெரிவித்தேன்.
ரூமியின் நிலைமை இப்போது புரிகிறதால், எழுத நினைத்ததை நிறுத்திக்கொள்கிறேன்.[இது ரோசாவுக்காகவும் , ரூமிக்காகவும்]

2/11/2005 11:43 PM  
Blogger ROSAVASANTH said...

i Have written about this in peyarili's blog. http://wandererwaves.blogspot.com/2005/02/blog-post_110807628491542644.html

I will write a similar note here tommorow.

Karthik, Thanks for informing me. Otherwise I wouldn't have noted this.

2/12/2005 12:08 AM  
Blogger ROSAVASANTH said...

இயற்பியல்.ஆர்ஜில் நான் நேற்றிரவு அளித்த பின்னூட்டம். ஒரு பதிவிற்காக இங்கே. இது குறித்து மேலே எழுதப்படும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

http://iyarpiyal.org/?item=24#commentform

அரவிந்தன் நீலகண்டனின் பழைய சுட்டிகளை இங்கே பார்க்கவில்லை. இந்த கட்டுரையை மட்டுமே பார்கிறேன்.

கருத்துக்களை கேட்பதால் சொல்கிறேன். மேலே உள்ள கட்டுரையை வாசிக்க முனைந்து, சரளாமான வாசிப்பிற்கு எதிரான மிகவும் அதன் கடூரமான மொழிநடையும், எந்தவித தெளிவும் இல்லாமல் தொடர்ந்து வந்துவிழும் தட்டையான மொழிபெயர்ப்பு வார்த்தைகளாலும் என்னால் அதை கவனாமாய் படிக்க முடியவில்லை. படிப்பதற்கு அது ஒரு கொடுமையான அனுபவம் எனபதில் சந்தேகமில்லை. மாறாக வெங்கட் உட்பட யாருக்காவது அது ஒரு சரளமான வாசிப்பை தந்தால் இங்கே குறிப்பிடவும்.

நான் வாசிப்பு கொண்ட வரையில் எனக்கு வார்த்தைக்கு வார்த்தை பிரச்சனை வருகிறது. உதாரணமாய் தொடக்கதில்லேயே "எந்த அளவுக்கு ஒரு சராசரி இயற்பியலாளரின் மொழி கவித்துவ நெகிழ்வடைந்ததோ அதே அளவுக்கு உயிரியலாளரின் மொழி பொருள் முதல்வாத இறுக்கமடைந்தது. பருப்பொருளின் சாராம்சத்தை தேடும் முயற்சி அதன் உச்சங்களில் பிரபஞ்சம் அளாவிய முழுமையைத் தேடும் ஒரு ஆன்மீக இயல்பினை அடைந்த அதே நேரத்தில் உயிரினை மூலக்கூறளவிலான இயக்கங்களின் அடிப்படையில் அறிந்து கொள்ளும் குறுகலியல் பார்வை உயிரியலின் மிகப்பெரும் வெற்றியாக அறியப்பட்டது. " இது எந்த விதத்தில் ஆதாரபூரசாமாய் முன்வைக்கபடுகிரது என்று எந்த தெளிவும் இல்லை. கட்டுரை முழுக்க, ஒன்று அதன் கடூரமான மொழிநடையின் காரணமாய் மண்டையில் ஏற மறுக்கிரது, அல்லது அது ஒரு பொத்தாம் பொது போடாக இருக்கிறது.


வெங்கட்டிற்கு தெரியுமா தெரியாது. இந்த அரவிந்தன் நீலகண்டன் தெளிவாக ஏற்கனவே அறிவியல் குறித்த புளுகுகளை முன்வைத்து, அது குறித்து நான் எழுதி, அது திண்ணையில் தடை செய்யப்பட்டு, பின்பு பதிவுகளில் வெளியாகி, அதற்கு 'திண்ணையிலேயெ பதில் அளிப்பேன்' என்று திமிராக சொன்னவர் இன்றுவரை வாய்திறக்கவில்லை.

பேச அதிகம் உண்டு எனினும் குறிப்பாக சொல்ல Dirac Delta Function என்பதை முன்வைத்து ஒரு அப்பட்டமான பொய்யை முன்வைத்தவர் இவர். (பிரச்சனைக்கு இடமில்லாமல்
சொன்ன பொய்யாக இதை சொல்கிறேனே ஒழிய பேச ஆயிரம் விஷயங்கள் உண்டு.) DDF குறித்து ஒரு அசட்டுத்தனமான மொட்டை மொழிபெயர்ப்பையும் கொடுத்து இதை செய்தவர். இவருடைய எல்லா கட்டுரைகளைகு பின்னாலும் அறிவியலைவிட வேறு அஜண்டாக்கள் உண்டு. எனக்கு வெங்கட் எழுதுவதில் பல முரண்பாடுகள் எதிர்ப்புகள் உண்டு எனினும். வெங்கட்டின் அறிவியல் எழுத்துகளுக்கு பின் அஜெண்டா எதுவும் இருப்பதாலக நான் இன்றுவரை நினைக்கவில்லை. போகிற போக்கில் 'தாசாவதாரம்' குறித்து பேசியது போல் ஏதாவது எழுதலாம்.அதற்கு எனக்கு எதிர்ப்பு இருந்தாலும், முதன்மை நோக்கம் அறிவியலாகவே எடுத்துகொள்கிறேன் . அரவிந்தன் நீலகண்டனின் எழுத்துக்களை போல் வேறு எதையொ குறிவைத்து எழுதுவதாக எனக்கு தோன்றவில்லை.

மீண்டும் இங்கே தூங்க போகும் முன் எழுதுகிறேன். சொல்ல வந்ததை ஒரளவு நிறைவாய் சொல்ல முடியவில்லை. இவர் எழுத்து இயர்பியல்.ஆர்ஜில் வரவேண்டியது அல்ல என்ப்தை மட்டும் சொல்லிவிட்டு மீதியை நாளை வந்து அலட்டுகிறேன்.

2/12/2005 2:10 PM  
Blogger Jsri said...

ஒரு அழகான கவிதையைப் போட்டுட்டு, அதுக்கு சம்பந்தமேயில்லாத பின்னூட்டங்களை இங்கதான் பார்க்க முடியும்.

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. நீங்க எழுதினதா? 'நிலவின் ஏதாவதொரு பிறை'- இப்படிக்கூட இதைச் சொல்லலாம்னே நினைக்க முடியலை. fantastic.

அப்புறம்.. சொன்னா எல்லாரையும் மாதிரி நீங்களும் கடுப்பாயிடாதீங்க, நிறைய எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை, தட்டுப்பிழைகள் கடைசிவரைக்கும் உ*ற*வாடுது. கவிதை ஒரு போர்ட்ரெய்ட் ஓவியம் மாதிரி; பெர்ஃபெக்டா இருக்க வேண்டாமா? உங்க மத்த பதிவுகள் மாதிரி அலட்சியம் செய்யாம தட்டிவைங்க. அவ்ளோதான். :)

2/13/2005 1:08 AM  
Blogger ROSAVASANTH said...

ஜெயஸ்ரீ,

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள், இந்த கவிதை உள்ளிடப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து எழுதப்பட்டது. நான் மற்ற இடங்களில் எழுதும் பின்னூட்டங்களை தேடி எடுப்பதில் சிரமம் இருப்பதாலும் (தேடி எடுக்க நேர்வதாலும்) இங்கே போட்டு கொள்கிறேன். அதனால் கொஞ்சம் கசமுசா!

இலக்கண பிழைகளை சுட்டினால் திருத்திகொள்வதில் பிரச்சனையில்லை. நான் ரொம்ப வீக்!

முழுமை என்பது சாத்தியமில்லாதது என்று நான் நம்புகிறேன். முழுமையை நோக்கி பயணப்படகூடும். அடைவது ஒருபோதும் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் திருத்தங்களை பரிந்துரைத்தால் அதை செயல்படுத்த முடியும். நன்றி!

2/13/2005 1:19 AM  
Blogger Jsri said...

////
முழுமை என்பது சாத்தியமில்லாதது என்று நான் நம்புகிறேன். முழுமையை நோக்கி பயணப்படகூடும். அடைவது ஒருபோதும் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.
/////

ஆஹா, குட்டிபூர்ஷ்வாகிட்ட வாய்கொடுத்து மீளமுடியுமா? முழுமைன்னா நான் அகத்தியர் பொதிகைலேருந்து வந்து சான்றிதழ் கொடுக்கணும்னு சொல்லலை. ஆனா ஓரளவு படிக்கும்போது தட்டாம இருக்கலாம்னுதான் நினைச்சேன்.

====
காண்பித்துக் கொள்கிறது
கூடிவிடக் கூடும்
போலத் தோன்றுகிறது
தென்படக் கூடுமோவென
உயிர்ப்பிக்கும் வரை
உறவாட
===

இதுலகூட ஏதாவது தவறு இருக்கலாம். இன்னும்கூட ஏதாவது நான் சொல்ல விட்டிருக்கலாம். வருவாங்க அதுக்கெல்லாம் பெரியாளுங்க.

ஆனா கவிதை நல்லா இருக்கு.

2/14/2005 12:16 AM  
Blogger ROSAVASANTH said...

உங்கள் பதிலுக்கும் திருத்தங்களுக்கும் மீண்டும் நன்றி!

தொடரும் வார்த்தையின் முதலெழுத்தால், முந்தய வார்த்தையின் இறுதியில் வரும் ஒற்றேழுத்தை முழுங்குவதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறேன். அதை முயற்சி செய்து மாற்றுவதில் பெரிதாய் ஈடுபடவில்லை, எனினும் முயற்சிக்கிறேன். அந்த மாற்றங்களை செய்துவிட்டேன்.

ஆனால் கடைசி இரண்டு எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.'உயிர்ப்பிக்கும்' என்பதில் இரண்டு ஒற்று தொடர்சியாய் வருகிறதே, இது சரியா? எனக்கு தெளிவில்லை. எனினும் ஒரு முறை நான் இப்படி இரண்டு ஒற்றுக்களை (கற்ப்பித்து என்பது போல) சேர்த்து எழுதுவது குறித்து (திண்ணையில் அறிவியல் கட்டுரை எழுதும்) ஜெயபாரதன் திருத்த சொல்லி எழுதியிருந்தார். அதிலிருந்து இந்த விஷயத்தில் கவனமாய் இருக்கிறேன். நீங்கள் யோசித்து சொல்லுங்கள், அல்லது ஜெயபாரதனிடமே கேட்கலாம். (வேறு நண்பர்களும் கருத்து சொல்லலாம்.)

ஆனால் உறவாட என்பதல்ல, உரவாட என்றே நினைக்கிறேன். உரவாட என்பது உரையாடல், உரை என்பதிலிருந்துதானே வருகிறது.அதற்கு உறவுடன் எந்த தொடர்பும் இல்லையே! (நான் குறிப்பிட விரும்பியதும் உரவாட எனும் பேசுவதைத்தான்.) அதனால் 'உரவாட' என்பதே சரி என்று நினைக்கிறேன். தவறானால் சொல்லவும்.

இந்த இரண்டு மாற்றங்களையும் உரவாடிய பின் முடிவுக்கு வரலாம் என்று இருக்கிறேன். நன்றி!

2/14/2005 1:24 AM  
Anonymous Anonymous said...

ரோசாவசந்தின் எழுத்துக்களை படிக்கும்போது எனக்கு எரிச்சலூட்டக்கூடிய ஒரே விஷயம் எழுத்துப் பிழைகள் தாம். தன்னுடைய பிரதிகளை எழுதிய பிறகு பிழைத் திருத்துவதில்லை என்று அடிக்கடி சொல்லியிருப்பதால் பிழைகளுடன் படிக்கப் பழகிக்கொண்டேன். இப்போது அவருடைய விளக்கத்தைப் படித்தால் சற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

திண்ணைக் கட்டுரைகளில் ரோசா தொடர்ந்து 'அதற்க்கு', 'இதற்க்கு' என்று எழுதிவந்ததில் ஜெயபாரதன் எரிச்சலடைந்தது நினைவில் இருக்கிறது. வல்லின 'ற்' க்கு அடுத்து இன்னொரு ஒற்று வராது. இடையின 'ர்' க்கு அடுத்து இன்னொரு ஒற்று வரலாம். (கற்ப்பித்தல் தவறு. உயிர்ப்பித்தல் சரி).

அதேபோல புதிய சொற்களை உருவாக்குவதிலும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். எனக்கும் 'உறவாட' என்பதைத் தான் பிழையாக 'உரவாட' என எழுதியதாகப் பட்டது. ஆனால் உரவாட என்பதற்கு அளித்திருக்கும் விளக்கமும் சற்று விந்தையாக இருக்கிறது. அந்தச் சொல்லாட்சி சரியில்லை. 'உரையாட' என்று ஒரு சொல் தான் ஏற்கனவே இருக்கிறதே, பிறகென்ன புதிதாக 'உரவாட'. உறுதி, வலிமை என்ற பொருளுடைய உரம்/உரன் என்ற சொல் உண்டு. உரவு என்ற சொல்லொன்று இருப்பதாகத் தெரியவில்லை.

பள்ளி நாட்களில் கற்ற இலக்கண விதிகள் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுவதென்பது முடியாதது தான். ஆனால் தொடர்ந்து படிக்கவும், எழுதவும் செய்யும் ஒருவருக்கு பிழைகளைக் குறைத்து எழுதுவதும், பிறர் எழுத்துக்களை படிக்கும்போது பிழைகள் துலக்கமாகத் தெரிவதும் ஆழ்மனத்தில் தானாக நிகழ வேண்டும். பதிப்பிக்கும் முன் பிரதியில் ஒருமுறையாவது பிழைத் திருத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது தன் எழுத்தின் மீதும், படிப்பவர்கள் மீதும் உள்ள அக்கறையைக் காட்டும்.

மு. சுந்தரமூர்த்தி

2/14/2005 5:39 AM  
Blogger Jsri said...

வசந்த், நான் சொல்லவேண்டியதை எல்லாம் மு.சுந்தரமூர்த்தி சொல்லிவிட்டார். பேச்சுமட்டுமே என்றால் 'உரையாட' என்றே இருந்திருக்கவேண்டும்.

அதைத் தாண்டியும் நீங்கள் சொல்வதுபோல் 'உரையாட' என்றே கவிதையில் வைத்துக்கொண்டாலும் வசந்த், உரையாடுதல் என்பது கவிதையில் வெறும் பேச்சு என்ற அளவில் சில எல்லைகளோடு நின்றுவிடுகிறது. உறவாட என்று எழுதும்போது அது தாண்டியும் கவிதை பற்றி நிறைய சிந்திக்கமுடிகிறது. நான் அப்படித்தான் சிந்தித்தேன். [ஒரு சின்ன ர, ற மாற்றம் கவிதையின் எல்லைகளையே மாற்றுவது, மொழியின் பேரதிசயம். என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை.]

கவிதை உங்களுடையது என்பதால் உங்களுக்குத்தான் அதைத் தீர்மானிக்க உரிமை இருக்கிறது. அதனால் இது என் கருத்துமட்டுமே. தவறாக நினைக்கவேண்டாம்.

2/14/2005 10:45 AM  
Blogger ROSAVASANTH said...

திருத்தினேன், திருந்தினேன். இனி கவனமாய் இருக்க முயற்சிப்பேன்.

இந்த அளவு கூர்மையாக படிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு ஜெயஸ்ரீக்கு முதல் நன்றி! சரியான சமயத்தில் இடை புகுந்த சுமுவிற்கும் நன்றி!

2/14/2005 12:49 PM  
Blogger ROSAVASANTH said...

'உரவாட' என்று பிழையாய் எழுதிய போது ஜெய்ஸ்ரீ சொன்னது போல், 'உரையாட, உறவாட' என்று இரண்டு வாசிப்புகள் சாத்தியம் இருந்தது, இப்போது அது தகர்ந்து விட்டதாகவும் தோன்றுகிறதே!

2/14/2005 12:55 PM  
Anonymous Anonymous said...

வசந்த்:
இதை எப்படிச் சொல்வதென்று பலமுறை யோசித்திருக்கிறேன். நீங்கள் வேறு எழுதிய பிரதிகளைத் திருத்துவதில்லை என்று பிரகடனம் செய்துவிட்டதால் வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஜெயஸ்ரீ தைரியமாக மணியைக் கட்டிவிட்டதால் இது தான் சமயமென்று இடையில் புகுந்தேன். இனிமேல் உங்கள் எழுத்துக்களைப் படிப்பதில் உள்ள கஷ்டங்கள் பெருமளவு குறையுமென்று எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் ஜெயஸ்ரீயிடம் சொல்லி ஒரு குட்டும் வைக்கலாம் :-)

சுந்தரமூர்த்தி

2/14/2005 1:38 PM  
Blogger ROSAVASANTH said...

சுந்தரமூர்த்தி, இது மட்டுமில்லாமல் எதை பற்றி வேண்டுமானாலும் சொல்ல தயங்க வேண்டியதில்லை.

எழுதுவது எல்லாமே (மின்னஞ்சல் உட்பட) மற்றவர் வாசிக்க தானே! எழுத்துப் பிழைகள் வாசிப்பதை கடினமாக்கும் போது அதை கண்டிப்பதில் தவறில்லையே!

ஆனால் இலக்கண பிழைகள் (வாசிப்பில் பிரச்சனைகள் ஏற்படுத்தாத போது) பெரிது படுத்த தேவையில்லை என்றே நினைக்கிறேன் - இலக்கணம் மொழியின் பரிமாற்றத்திற்கான பயன்பாட்டை தாண்டி, ஒரு ஒழுக்கப் பிரச்சனையாய் போகும்போது. ஆனாலும் இலக்கணம் பார்த்தே எழுதுகிறோம் என்பதால் இதில் வீம்பும் தேவையில்லை என்று நினைக்கிறேன். உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி!

2/14/2005 4:47 PM  
Blogger Jsri said...

///
'உரவாட' என்று பிழையாய் எழுதிய போது ஜெய்ஸ்ரீ சொன்னது போல், 'உரையாட, உறவாட' என்று இரண்டு வாசிப்புகள் சாத்தியம் இருந்தது, இப்போது அது தகர்ந்து விட்டதாகவும் தோன்றுகிறதே!
////

வசந்த், உரவாட என்று பிழையாய் எழுதியிருந்தபோது யாருமே (உங்களைத் தவிர)உரையாட என்று எடுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். அதை உறவாடவின் தட்டுப்பிழை என்றே நினைப்பார்கள். (சந்தேகமாக இருந்தால் இந்தப் பதிவு படிக்காத 10 பேரிடம் சோதிக்கவும்.)

நிற்க. இதில் வருந்தவும் எதுவும் இல்லை. உரையாட ஒரே அர்த்தம். அதுவும் உரையாடுதல் என்பது கொஞ்சம் மேம்போக்கான வார்த்தை. ஒரு formal அல்லது casual பேச்சு மாதிரி மட்டுமே (exclusively பேச்சை மட்டும்தான்) ஒலிக்கிறது. ஆனால உறவாடல் அதையும் சேர்த்து (inclusive- that too from sweet nothings to some meaningful/high-tech) மற்றும் அதற்கு மேலும் பல விஷயங்களைச் சொல்கிறது. கவிதைக்கு அழுத்தத்தைக் கொடுப்பது அதுதான். அதனால் நீங்கள் மாற்றியதால் கவிதையில் எதையும் இழக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

2/15/2005 1:00 AM  
Blogger ROSAVASANTH said...

மிக்க நன்றி ஜெயஸ்ரீ. இந்த கவிதைக்கு இவ்வளவு விவாதம் கொஞ்சம் ஓவரென படுகிறது. ஆயினும் சிலவற்றை கற்றதனால் பயனுள்ளதாய் தெரிகிறது. நன்றி!

2/15/2005 2:30 AM  
Anonymous ஃப்ரீடா said...

அன்புள்ள வசந்த்,
உங்கள் கதை மிகவும் அற்புதம். ஜெயகாந்தனின் இலக்கணம் மாறிய கவிதை கதை படிச்சிருக்கீங்களா? அது எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒரு கருத்து. கன்னடம் அவசியம் வேணுமா? அது ஒரு வகை யதார்த்தத்தை கொடுத்தாலும் ஏனோ கதையோட ஒன்றமுடியாமல் போக காரணமாயிருக்கு.

2/21/2005 9:45 AM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள ஃப்ரீடா, உங்கள் கருத்துக்கும், விமர்சனத்திற்கும் மிகவும் நன்றி! ஜெயகாந்தனின் இந்த குறிபிட்ட கதையை படித்த ஞாபகம் இல்லை. தாமதாய் மறுமொழிவதற்கு மன்னிக்கவும்!

2/22/2005 11:23 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter