ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Saturday, January 22, 2005துப்பாக்கி குறித்த மூன்று கதைகள்(மீண்டும் சோபாசக்தியின் 'ம்' நாவலில் இருந்து ஒரு அத்தியாயத்தின் சிறுபகுதி. அனுராதபுரத்தில் புலிகள் செய்த படுகொலையை சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதியினர், வன்மையாக கண்டித்து அறிக்கை எழுதும் பொறுப்பை இடதுசாரி சிந்தனையாளரான தோழர் பக்கிரியிடம் அளிக்கின்றனர். அவர் அன்னந் தண்ணி இல்லாமல் மூன்று நாட்களாய் மண்டையை உடைத்து இருபது பக்க அறிக்கையை தயார் செய்கிறார். அதை சக அரசியல் கைதிகளால் புரிந்துகொள்ள இயலவில்லை. முடிக்கும் போது மாவோவின் 'துப்பாக்கி குழல்களிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது' என்ற வாசகத்துடன் வேறு முடிகிறது. இந்த சந்தர்பத்தில் இந்த கதைகள் சொல்லப்படுகிறது.- ரோஸாவசந்த்) I 1971 ஏப்ரல் அய்ந்தாம் நாள் ஜே.வி.பி. தொடங்கிய ஆயுத கிளர்சியை இலங்கை இந்திய கூட்டு படைகள் நசுக்கியதன் பின்பாக பத்தாயிரத்துக்கும் அதிகமான சிங்கள் இளைஞர்கள் , மாணவர்களும் பெண்களும் சிறிமாவோ பண்டாரநாயகாவின் அரசால் கொல்லப்பட்டு, தெருவிலும், ஆறுகளிலும் பிணங்கள் வீசப்பட்டன. வகைதொகையின்றி ஜே.வி.பி.யினர் கடுமையான காவல் ஏற்பாடுகளுடன் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைபிடிக்க பட்டிருந்த ஜே.வி.பி. கைதிகளிடையே ஒரு புத்தகம் இரகசிய சுற்றில் இருந்தது. சிறைக்குள் இருந்த ஜே.விபி.யினர் இரகசியமாக 'மாவோ சே துங் சிந்தனைகள்' என்ற மவோவின் புகழ் பெற்ற புத்தகத்தை தீவிரமாய் படித்துகொண்டிருந்த போது, ஜே.வி,பி.யினரை சிறையில் அடைத்து வைத்துக் காவலுக்கு நின்ற போலிசார் மாவோ அரசு சிறிலங்கா அரசுக்கு வழங்கிய நவீனரக துப்பாக்கிகளை தங்களது கைகளில் வைத்திருந்தனர். II சோவியத் யூனியன் உடைந்த நேரத்தில் ரஷ்யா மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கியிருந்தது. அப்போது மொஸ்கோவின் பெரிய வங்கி ஒன்றுக்குள் நுழைந்த ஒரு வாலிபன் இடுப்பிலிருந்து துப்பாக்கியை உருவி வங்கி மேனேஜரின் நெற்றியில் வைத்து 2460 ரூபிள்கள் தரும்படி கேட்டான். வங்கி மேனேஜரோ உயிரே போனாலும் காசு பணம் தரமாட்டேன் என்று துப்பாக்கி வாலிபனிடம் கூறிவிட்டு தான் போலிசாரை அழைக்கபோவதாக சொன்னார். வாலிபனோ நீங்கள் அழைப்பதானால் அழையுங்கள் என்று கூறிவிட்டு , துப்பாக்கியை நீட்டியபடியே நின்றான். மனேஜர் போலிஸாரை தொலைபேசியில் அழைத்தார். போலிஸார் வந்து தீர விசாரணை செய்துவிட்டு, துப்பாக்கி வாலிபனின் வங்கி கணக்கிலிருந்து 2460 ரூபிள்களை வங்கி மேனேஜரிடமிருந்து பெற்று வாலிபனிடம் ஒப்படைந்தார்கள். III தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற குழந்தை போராளிக்கு வயது பதினைந்து. தம்பாட்டி கடற்கரையில் இரவு நேர காவல் கடமையிலிருந்த ராஜெந்திரன் உடல் அலுப்பாலும் கடற்கரை காற்றாலும் ஒரு கணம் கண்ணயர்ந்தபோது அவனது குழந்தை போராளி தோழர்கள் ராஜெந்திரனின் துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து மறைத்து வைத்தார்கள். ராஜேந்திரன் கண் விழித்த போது அவனருகில் இருந்த துப்பாக்கி காணாமல் அவன் ஏங்கிபோனான். அவனோடு அக்கடற்கரையில் இருந்த சிறுவர்களிடம் அவன் தனது துப்பாக்கி எங்கே என்று கேட்டபோது அவர்கள் இருளுள் குரும்பாக சிரித்தார்கள். தங்களுக்கு தெரியாது என்றும் துப்பாக்கியை பறிகொடுத்ததுக்கு பொறுப்பாளர் வந்தவுடன் பெரும் தண்டனை கிடைக்கும் என்றும் அவர்கள் விளையாட்டாக ராஜெந்திரனை பயமுறுத்தினார்கள். ராஜேந்திரன் அவமானத்தாலும் பயத்தாலும் அலைக்கழிக்கபட்டிருக்கலாம். அவன் உடனடியாக அந்த கடற்கரையிலேயே குப்பி கடித்தான். அவனது தோழர்கள் தடுப்பதற்கு முன்னதாகவே இறந்து போனான். இயக்கம் அவனது முகவரியை குறிப்பு புத்தகத்தில் பார்த்து போது தெளிவான முகவரி ஏதும் அதில் குறிக்கபட்டிருக்கவில்லை. முருகன் கோவிலுக்கு அருகில் ஹற்றன் என்றொரு முகவரியும் அதனருகே ஏர்னஸ்ட், பனைத்தீவு என்று இன்னொரு முகவரியும் காணப்பட்டன. 'ராஜேந்திரனின் உடலை பெற்று செல்ல விருப்பமா?' என்ற செய்தியை இயக்கம் பனைத்தீவுக்கு அனுப்பியபோது, தனக்கு ராஜேந்திரனுடன் எந்த உறவுமில்லை, உரிமையுமில்லை என்ற பதில் செய்தியை ஏர்னஸ்ட் இயக்கத்துக்கு அனுப்பினான். ராஜேந்திரன் உடல் இயக்கத்தாலேயே புதைக்கப்பட்டது. பின் குறிப்பு 1. மூன்றாவது பத்தியில் வரும் ஏர்னஸ்ட், நாவலின் கதை சொல்லியான நேசகுமாரனின் தகப்பன். ராஜேந்திரன் என்ற பனிரண்டு வயது பாலகனை பத்து ரூபாய் சம்பளம் பேசி, தன் வீட்டில் கடினமாய் வேலை வாங்குகிறான். கிட்டதட்ட கொத்தடிமையை ஒத்த வேலை வாங்கப்ட்ட ராஜேந்திரன், ஒரு தீபாவளியில் தப்பித்து இயக்கத்தில் போய் சேருகிறான். கதையின் இறுதி பகுதியில், ஒரு வழியாய் சிங்கள அரசாங்கத்தின் பல சிறைகளில் வாசம் முடிந்து தமிழ் பகுதிக்கு திரும்பும் நேசகுமாரன், புலிகள் இயக்கத்தால் கைது செய்யபட்டு காவலில் வைக்கபடுகிறான். அவனை பார்க்க வரும் ஏர்னஸ்ட் கண்கள் சிவந்து, முகாம் பொறுப்பாளனிடம் "நாங்கள் மாவீரர் குடும்பம்" என்றார். நேசகுமாரனை கைகாட்டி "இவனது தம்பி வீரச்சாவு அடைந்தவன்" என்றார். "எங்கே அவர் வீரச்சாவடைந்தார்? அவரின் பெயர் என்ன?": என்று கேட்க, "அந்த பிள்ளையை நான் சின்ன வயசில் இருந்தே எடுத்து என் பிள்ளை மாதிரியே வளர்த்தேன். ராஜேந்திரன் என்று பெயர் தம்பாட்டி கடற்கரையில் சயனைட் குடித்து செத்து போனான்" இதை சொல்லும் போது அவர் கண்ணிலிருந்து கண்ணீர் கண்ணீராய் கொட்டியது. பின் குறிப்பு 2. 1984 மார்ச் எட்டாம் தேதி சுன்னாகச் சந்தைக்குள் புகுந்து விமானபடையினர் மக்கள் கூட்டத்தை சுட்டதில் பத்து பேர் இறந்த்து போனார்கள். 1984 ஆகஸ்ட் பதினோரம் திகதி கொழும்பிலிருந்து யாழ்பாணத்திற்கு வந்துகொண்டிருந்த பேருந்து வண்டியை இராணுவத்தினர் காட்டுக்குள் மறித்து வெட்டியதில் பதினாறு பயணிகள் இறந்து போனார்கள். இவர்களில் மூவர் குழந்தைகள். 1984 டிசம்பர் இரண்டாம் திகதி செட்டிகுளத்தில் இருபத்தேழு பேரும் நான்காம் திகதி மன்னாரில் தொண்ணூறு பேரும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள். 1985 ஏப்ரல் இருபத்தி ஒன்பதில் அரியாலையில் அறுபத்தி நான்கு விசேட அதிரடி படையினர் கொல்லப்பட்டார்கள். 1985 மே ஒன்பதாம் திகதி வல்வெட்டிதுறை நூல் நிலயத்தின் உள்ளே அய்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை அடைத்து வைத்த இராணுவத்தினர் பின் இளைஞர்களோடு நூல் நிலயத்தையும் குண்டு வைத்து தகர்த்தனர். 1985 மே பதினான்காம் திகதி அனுராதபுரம் நகருக்குள் நுழைந்த தமிழீழ விடுதலை புலிகள் சீருடையிலிருந்த பள்ளி குழந்தைகள், பெண்கள் புத்தபிக்குகள் உட்பட 140 பேரை வெட்டியும் சுட்டும் கொலை செய்தனர். இதற்கு அடுத்த நாள் மே பதினைந்தாம் திகதி ஒரே நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெவ்வேறு கொலை செயல்களில், நெடுங்தீவிலிருந்து குறிகட்டுவானுக்கு வந்து கொண்டிருந்த குமுதினி படகு கடலில் கடற்படையினரால் மறிக்கப்பட்டு ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய் அறுபத்தோரு பேர் கடற்படையினரால் வெட்டி கொல்லப்பட்டனர். உடும்பன் குளத்தில் இராணுவத்தினரால் எழுபத்தியிரண்டு மக்கள் ஒரு பாடசாலைக்குள் அடைக்கபட்டு உயிரோடு கொழுத்தப்பட்டனர். நாய்பட்டிமுனையில் இருபத்தி மூன்று பேர் விசேட அதிரடி படையினரால் கொல்லப்பட்டனர். |
71 Comments:
பதிந்த பின் எடிட் செய்யபட்டுள்ளது. குறிப்பாய் பின் குறிப்பு 2 எழுதப்பட்டு சேர்க்கபட்டுளது.
படிக்க, படிக்க மேலும்(அவலத்தை)அறிந்துக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது. இன்றில்லாவிடினும், என்றேனும் ஒரு நாள், நம் மக்களுக்கு அறிவில் உரைக்கும், அப்போது, இந்த நாவல் ஒரு சமுகத்தின் உயிர் சாசனமாய் திகழும்.
சென்னையில் எங்கு இந்தப் புத்தகம் கிடைக்குமென சொல்லமுடியுமா?
முன்றிலில், திலிப்குமாரிடம் நிச்சயம் கிடைக்கும். திலிப்குமார் கடை ராமகிருஷ்ணா மடம் எதிரில் உள்ளது.
கதை 2: புரியவில்லை. துப்பாக்கியை நீட்டியதற்க்காக போலிஸ் கைது செய்யவில்லையா?
கதை 3: கொத்தடிமையாய் வேலை வாங்கிய சிறுவனுக்காக அழுவது எந்த கணக்கில் சேர்ப்பது?
மாவீரர்களுக்கு உரிமை கோரும் போட்டி அவ்வப்போது நடைபெறுவதுண்டு. இதிற் பல சிக்கல்களைப் புலிகள் எதிர்நொக்கியுள்ளார்கள். இதுபோலொன்றுதான் தான் அதுவும். ஆனால் நிச்சயமாய் அது நீலிக்கண்ணீர் தான். அவ்வீரனின் பெயரைத் தன் சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்த நினைக்கும் ஒருவரின் அழுகை (அதுவும் தான் முதலில் மறுத்த).
குழந்தைப் போராளிக்காக புலம்புவார் யாருமில்லையோ? டமில்நெட்டில் அதனை நிரூபிக்கும் சுட்டியும் பெயரிலிப்பெரியம்மா என்ற கயல்விழி என்ற பொடிச்சிக்கும் கிடைக்கோல்லையோ? எல்லாம் ஐ-யர் பி-த்மநாபரின் முகவரி தேடினால் கிடிக்கும்...
வந்துவிட்டதய்யா அநாமதேய ஓநாய்! எங்கே எது குறித்து(மட்டும்) பேசவேண்டும், ரத்தம் நக்க வேண்டும் என்று தெரிந்த ஓநாய்!
அநாமதேய ஓநாயெண்டது உங்களையும் இன்னும் சில அநாமதேய ஓநாய்களையும்தானே? செரியாச் சொன்னீகளாக்கும். சிறுகுழந்தைகள் ரத்தம் உங்களுக்கு ரொம்பவும் ருசிக்குமோ? புலி சாப்பிடும் சிறார்களுக்குப் பக்கத்தில் நின்று நல்லாச் சாப்பிடண்ணே என்று கைதட்டுவது அலுத்துப் போயிற்றோ? சிங்களவனுக்கு ரத்த ருசியில் கொஞ்சமும் சளைத்தவனில்லை புலியெண்டு ஊரறியும். சிங்களவனைக் காட்டிக் காட்டி புலி ஆள் சேர்ப்பான், புலியை காட்டி காட்டி சிங்களவன் ஆள் சேர்ப்பான். நடுவில சாவறது ஒரு கோடி. புலியை ஏதானும் சொன்னியோ கொன்னு போடுவன்னு திட்டுவதற்கு ஒரு படை சொறி சிரங்கு.
Sorry, I will b e back here in one hour, and reply this.
முகமிலி நண்பரே
பதினைந்து வயதில் குழந்தைப் போராளியெண்டு அவர் எழுதிட்டுப் போவார்.நீங்கள் குழந்தைக்கு வக்காலத்துக்கு வந்திட்டியள்.பதினைந்து வயதுப் பெடிக்கு துவக்குக் கொடுத்து காவலுக்கு விட்டது புனைகதைக்கு மட்டுமே உதவும் பதினாறு பதினேழு என்றால் ஒருவேளை நம்பலாம்.ஒரு ஏ.கே துப்பாக்கியின் நிறை 12.75 கிலோ,ஒரு கைக்குண்டொன்றின் நிறை 400 - 500 கிராம். தோட்டா அடங்கிய மகசீன் ஒன்று 1.0- 2.0 கிலோ இதனைவிட போருக்குப் போகும் போது உனவு நீர் என்று ஆகக்குறைந்தது 10 கிலோ எடையுடைய பையையும் தூக்கிப் போகவேண்டும்.
பதினைந்தே வயதுடைய குழந்தை என்ன ஒரு 35- 40 கிலோ இருப்பானா ஆகமொத்தம் 25- 30 கிலோ எடையுடைய பொருட்களைக் காவிக்கொண்டு குழந்தைப் போராளி போருக்குப் போகின்றான் என்ற பூச்சுற்றலை வேண்டுமானால் துப்பாக்கியையே நேரில் பார்த்திராத நீங்கள் நம்பலாம் நான் நம்பப் போவதில்லை.
அந்தச் சிறுவன் போருக்குப் போவதற்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஒன்றுதான் காரணமாக இருக்கவேண்டுமென்றில்லை கண்முன்னே அனுபவித்த கொடுமைகளும் காரணமாகவிருக்கலாம் அவற்றை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை.
ஒருவேளை புலி புலி என்று சொல்லி அடித்த மிச்ச இரத்தம் உங்களுக்கு ருசித்திருக்கிறதோ என்னவோ.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4171251.stm
Sri Lanka's Tamil Tiger rebels have been recruiting child soldiers from relief camps set up after December's tsunami, the United Nations says.
மெத்தச் சரி அதை பெடியன்களுக்கும் பொருத்திப் பாக்க வேணும் கண்டீரே. உம் தம்பிமார் இருக்கின்றானா என்று பார்த்திவிட்டால், மற்றதெல்லாம் தியாகமண்ணே.
யமுனா ராசேந்திரனையும் கூட்டிக்கொண்டு வாரும். அழகான வார்த்தையிலே எல்லாத்தையும் நியாயப்படுத்துவார். கொச்சையாயுளற வேண்டிமென்றால் டீசேயைக் கூட்டிக்கொண்டுவாரும். இடியாப்பமாய் இலக்கியதிட்டு விட வேண்டுமென்றால் ரமணியையும் கூட்டிக்கொண்டுவாரும். போவே.
நண்பரே,
மிகவும் மன்னிக்கவும். நான் உங்களை ஒரு 'இந்திய ஓநாய்' என்று நினைத்துவிட்டேன். இப்போது உங்கள் பின்னூட்டத்தின் வழக்கை கொண்டு ஈழத்தவர் என்று எடுத்துகொள்கிறேன். நான் மன்னிப்பு கேட்டாலும் இதற்கு நான் பொறுப்பாக முடியாது.
இங்கே பல அநாமதேயங்கள் எழுதுகின்றன. எனக்கு அது குறித்து எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எந்த அனாமதேயம் எதை எழுதியது என்று வித்தியாசம் விளங்க வேண்டும் எனில் வேறு பெயரில் வரவேண்டும். குறைந்த படசம் ஒரு எண்ணையாவது கூட சேர்த்துகொள்ள வேண்டும்.இரண்டு நாள் முந்தய பதிவில் எழுதிய அதே அநாமதேயம் இதை எழுதவில்லை என்று எப்படி எடுத்துகொள்வது?
மிக எளிதானது. தமிழில், ஆங்கிலத்தில் அல்லது உலகில் உள்ள ஏதேனும் ஒரு மொழி வார்த்தையை புனை பெயராக்கி கொண்டு, அந்த பெயரில் குழப்பமில்லாமல் எழுத வேண்டும். இதனால் உங்கள் அடையாளம் யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கும் வசதிபடும். ஆகையால் உங்கள் கருத்துக்கள் பொருட்படுத்தபட வேண்டும் எனில் இன்றே ஏதேனும் ஒரு பெயரில் Bளாகர் கணக்கு தொடங்கவும். இது வெறும் வேண்டுகோள் மட்டுமே -அதாவது நான் பொருட்படுத்த என்ன செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் மட்டுமே!
மற்றபடி "சிங்களவனுக்கு ரத்த ருசியில் கொஞ்சமும் சளைத்தவனில்லை புலியெண்டு ஊரறியும் " என்று நீங்கள் சொல்லுவதில் எனக்கு பெரிய மாறுபாடு கிடையாது. நான் ஆங்காங்கே அளித்த கருத்துக்க்களை படித்தால் அது புரியும். ஆனால் எந்த இடத்தில் எது குறித்து *நான்* பேசவேண்டும் என்று தீர்மானிப்பதில் எனக்கு சில சிக்கல்களும், புரிதல்களும், குழப்பங்களும், தெளிவுகளும் உண்டு. அதனடிப்படையில், அதைவிட என் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கை சந்தர்பத்தை பொறுத்து அது அமையும். நீங்கள் பேசுவதற்கும், பிரச்சனை வெளியிலிருந்து மட்டும் பார்த்து கொண்டு, வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லாத நான் பேசுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. மேலும் *எங்கே எதை* பற்றி பேசுகிறோம் என்பது மிக முக்கியம். வேறு உதாரணம் பார்போம். புரிந்துகொள்ள அது வசதியாகவும் இருக்கும்.
அமேரிக்கா, தாலிபான், சதாம் ஹுசேன் இவர்களில் எதை விட எதை அதிகம் எதிர்ப்பது, ஒன்றை எதிர்க்க இன்னொன்றை அதரிக்க முடியுமா போன்ற கேள்விகளுக்கே இடமில்லை. எல்லாமே அழியவேண்டியவையே! ஆனால் இங்கே இந்த அறிவுஜீவிகள் தளத்தில் தாலிபான் எதிர்பு பிரசாரம் சதாம் ஹுசைனின் மனித உரிமை மீறல்கள் என்று மொட்டையாய் பேசுவது வேறு நோக்கங்களுக்கு பயன்படலம். அதை விட எல்லாம் முக்கியமாய் இதை கொண்டுபோய் பாலஸ்தீன பிரச்சனையுடன் சொருகி, அங்கே லாஜிக்கை எல்லாம் திரித்து பாலஸ்தீன மக்களுக்கு பாதகமான தர்கத்தை கூட உருவாக்கமுடியும். எப்படி பல விஷயங்களை மொட்டையாய் செய்ய முடியாது என்று கோடிட்டுகாட்ட இப்படி ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்த இடத்தில் உள்ள சிக்கல்களை யோசிப்பது அவரவர் பார்வையை பொறுத்தது.
அந்த வகையில் என்னை போன்றே ஒரு தளத்திலிருந்து 'புலி ஆதரவாய்' பேசும் தங்கமணி, சுந்தரவடிவேல் போன்றவர்களின் கருத்துகளை எதிர்க்கிறேன்.அதை கடுமையான தொனியில் முன்பு செய்திருக்கிறேன். இப்போதும் அது வரும். அதை ஒரு நட்புரீதியான எதிர்பாக மட்டுமே செய்வதற்கு எனக்கு காரணங்கள் உண்டு.
ஈழ நண்பர்களிடம் பொதுவாய் நான் மல்லுக்கு நிற்பதில்லை எனினும், சில சந்தர்பங்களில் தீர்மானித்து செய்வதுண்டு. குறிப்பாய் ஈழநாதன் எழுதும் பல விஷயங்களில் எனக்கு எதிர்புண்டு. உதாரணமாய் அவர் இப்போது கூட விகடனின் பதிவில் முஸ்லீம்கள் விரட்டபட்டதை நியாயபடுத்துகிறார். அதாவது நியாயபடுத்தவில்லை என்று சொல்லிகொள்கிறார். அப்படி சொல்லிகொண்டே, 'முஸ்லீம்களின் துரோகத்தனமான சிந்தனையை' சொல்லி நியாயபடுத்துகிறார். இது எப்படி இருக்கிறது என்றால் 'IPKF செய்த அட்டூழியங்களை ஏற்கவில்லை' என்று பொதுவாய் சொல்லிவிட்டு அதை நியாயபடுத்தி எழுதிய பல இந்திய ஓநாய்களை ஒத்திருக்கிறது. அதே திறமையும் லாவகமும் இவரிடமும் வெளிப்படுகிறது. இதை உங்களுக்கு எதற்கு எழுதுகிறேன் என்று எனக்கு சரியாய் புரியவில்லை எனினும் பொதுவாய் சொல்லிகொள்கிறேன்.
கடந்த இரண்டு பதிவுகளும் நாவலின் வேறு பக்கங்களை காட்டுவது. இன்று நீங்கள் வலியுறுத்தும் விஷயத்தை எழுதாததை குற்றம் சொல்லும் நீங்கள் நேற்று சண்முகநாதன் கதை குறித்து எழுதவில்லையே! அது போல அவர்களுக்கு முக்கியமானதை, செய்ய சரியாய் தோன்றுவதை செய்கிறார்கள் என்று எடுத்துகொள்ள வேண்டியதுதான். நீங்கள் வலியுறுத்த விரும்பியதை நீங்கள்தான் எழுத வேண்டும். மற்றவர் ஏன் எழுதவில்லை என்று கேட்பது நியாயமில்லை.
கடைசியாக ஒரு விஷயம். இது உங்கள் பரிசீலனைக்கு கிடைக்கும் எத்தனையோ கருத்துக்கள் போல் உங்கள் முன்னால் வைக்கிறேன். இது வேண்டுகோள் கூட அல்ல.
புலி எதிர்ப்பு என்பதை கண்மூடித்தனமாய், எந்த பரிசீலனையும் இல்லாமல் அதை மட்டுமே குறிக்கோளாய் செய்யும்போது சிங்கள இனவாதம் தமிழ் மக்களின் நலன் என்று எது குறித்தும் சிந்தனை இல்லாமல் பலருக்கு போய் விடுகிறது. இதுதான் உங்களின் பலவீனம். மிக சரியாய் சொன்னல் அதுதான் புலிகளின் மிக பெரிய பலம். இந்த ட்சுனாமி அனர்த்தத்தின் போது கூட TROவிற்கு கொடுப்பதை விமர்சித்தும், சிங்கள அரசு காட்டிய பாரபட்சத்தை நியாயபடுத்தியும் பேசுவதை கேட்கும்போது, இவர்களுக்கு புலி எதிர்ப்பு என்பது அழிந்து கொண்டிருக்கும் மக்களை விட முக்கியமானதாக என்று புரிகிறது.
(எந்த)அரசாங்கம் என்பது எத்தனை கொடியது என்று இருந்தாலும், இது போன்ற பேரழிவு நிகழும்போது அவர்களாலேயே ஏதேனும் செய்யமுடியும். *வேறு வழியே இல்லை.* வன்னி பகுதி மக்களுக்கு உதவ வேண்டுமெனில், மீட்புபணி நட்க்க வேண்டுமெனில் புலிகளை தவிர்த்து வேறு யாராலும் அதை செய்யமுடியாது. அந்த சந்தர்பத்திலும் புலி எதிர்ப்பை மட்டுமே செய்வது மக்களுக்கான மாபெரும் துரோகம் அன்றி வேறில்லை. சும்மாவாவது இருக்கவேண்டும்.
ஏதோ தோன்றியது. எழுதியிருக்கிறேன். இதனால் பயனிருக்கும் என்று தோன்றினால் மேலும் எழுதமுடியும். மற்றபடி உங்களுக்கு தோன்றுவதை தாராளமாய் எழுதுங்கள்.
மிக்க அன்புடன் வசந்த்.
மன்னிக்கவும். நான் எழுதிகொண்டிருந்த போது ஈழநாதன் மற்றும் அநாமதேய நண்பரும் எழுதியிருக்கின்றனர். என் கருத்து எதற்கு முதயதற்கான பதில். இனி இது குறித்து இங்கே இப்போது பேசமாட்டேன் என்று நினைக்கிறேன்.
//அமேரிக்கா, தாலிபான், சதாம் ஹுசேன் இவர்களில் எதை விட எதை அதிகம் எதிர்ப்பது, ஒன்றை எதிர்க்க இன்னொன்றை அதரிக்க முடியுமா போன்ற கேள்விகளுக்கே இடமில்லை. எல்லாமே அழியவேண்டியவையே!//
மேலே சொன்னதில் அமேரிக்கா என்று மொட்டையாய் சொன்னது, அமேரிக்க ஏகாதிபத்திய அரசியல் என்பதாக இருக்கவேண்டும். அதாவது ஒரு லிபரல் சமூகமான யதார்த்ததிற்கு நேர்முரணாய் இருக்கும் அமேரிக்க அரசின், ராணுவத்தின் அரசியலையே அது குறிக்கிறதே
தமிழ் பாம்பின் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்.
http://dystocia.blogspot.com/2005/01/2-2.html
இதை அணுகுண்டு வெடித்த இந்தியாவிடம் ஒப்பிடாமல் அமேரிக்காவுடன் ஒப்பிடுவது ஆச்சரியமாய் இருக்கிறது.
மேலும் அமேரிக்காவிற்கு இது பொருத்தமான மேற்கோளாய் படவில்லை. அமெரிக்க பற்றி பேசும்போது வன்முறையின் பலத்தையோ, வலிமையின் பயன்பட்டையோ பற்றி பேசுவதை விட பயங்கரவாதத்தின் வெற்றியை பற்றி பேசுவதே பொருத்தமானதாய் இருக்கும்.
அன்பின் ரோசா
முஸ்லிம்கள் பற்றி எழுதியது எனக்கே வினையாக முடியுமென்று எனக்குத் தெரியும்.அது தெரிந்ததனால்தான் இதுவரை காலமும் அந்தப் பரப்பிற்கே போகாமலிருந்தேன்.நடுநிலையாக முஸ்லிம்களிலும் துரோகிகள் இருந்தனர் ஏன் எங்களிலும்தான் துரோகிகள் இருக்கின்றனர் என்று இருபக்கப் பாட்டாய் 'அறிவுஜீவித்தனமாய்' ஏதாவது சொல்லிவிட முடியும்.நான் சொன்னதைக் கூட நீங்கள் அந்த வகையில் சேர்த்திருக்கிறீர்கள் என்றே நினைக்கின்றேன்.
முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று தெரியுமா?இதே கேள்வியை புலிகளிடம் கேட்டு அவர்கள் சொன்ன பதிலைத் தான் விகடனின் பதிவில் குறித்திருந்தேன்.என்னளவில் நான் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தவில்லை(இதனால் பொருளாதார ரீதியில் கொடுத்த கடன்களைத் திருப்பிப் பெற முடியாமல் பலத்த அடிவாங்கியது என் குடும்பமாகையால் வெளியேற்றத்தை நான் ஆதரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை-இதை சொல்லியிருக்கவேண்டாம் என நினைக்கின்றேன் ஆயினும் சில புரிந்துணர்வுகளுக்கு இது உதவும்)
அதே நேரம் விடுதலைப்புலிகள் கூறிய பதிலை இல்லையில்லை முஸ்லிம்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்று மறுக்கும் ஆதாரமும் என்னிடம் இல்லை.அவர்கள் சொன்ன பதிலும் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமென்பதால் மட்டுமே அதை விகடனின் பதிவில் குறிப்பிட்டேன் ஒழிய அதை நான் நம்புகிறேன் என்று அர்த்தமல்ல
அந்நேரம் விடுதலைப்புலிகளுக்கு முஸ்லிம்கள் செய்தது துரோகம்.முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகள் செய்தது துரோகம்.இதில் நான் எதை நியாயப்படுத்த எதை விட. அந்நேரம் இதே வயது எனக்கு இருந்திருந்தால் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்று ஆகக்குறைந்த எதிர்ப்பையாவது காட்டியிருப்பேன்.அவ்வளவுதான் இது தொடர்பில் என்னால் கூற முடியும்
This comment has been removed by a blog administrator.
//நீங்கள் வலியுறுத்த விரும்பியதை நீங்கள்தான் எழுத வேண்டும். மற்றவர் ஏன் எழுதவில்லை என்று கேட்பது நியாயமில்லை.//
இதைத்தான் அனானிமஸ்சிற்கு நானும் சொல்லவேண்டியது. மற்றது ரோசாவசந்த் சொன்னது மாதிரி ஏதாவது நம்பரைப்போட்டாவது உங்களை பிற அனானிமஸ்சுடன் இருந்து வேறுபடுத்திக்காட்டினால் உரையாடுவதற்கு இலகுவாயிருக்கும்.
குழந்தைப் போராளிகளைப் பற்றி, குழந்தைப்போராளியை தனது கவிதைப்புத்தகத்தில் முன்னட்டையில் போட்டவரிடமிருந்து பலரிடமும் விவாதித்தாயிற்று. நீங்கள் போரிற்குள் இருந்திருந்தால் (இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன்) மேலைத்தேயம் பேசும் குழந்தைப்போராளிகளின் வயதெல்லை நகைச்சுவையாக தென்பட்டிருக்கும். முந்தி நீங்களும் ஒரு இயக்கத்தில் இருந்திருந்தால் அல்லது ஆதரவாயிருந்தால் கூட, நான் இப்போது குழந்தை என்று UNO சொல்கிறது, 18 வயதாகட்டும் பிறகு போராட்டத்தில் இணைகிறேன் என்றெல்லாம் அறிவுஜீவித்தனமாக காத்திருந்திருந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். இல்லை மேலைத்தேயம் வைத்திருக்கும் குழந்தைப் போராளிகளின் சட்டம்தான் பேசப்போகின்றீர்கள் என்றால், இப்போது ஈராக்கில் இறக்கும் அமெரிக்கா, பிரிட்டன் படைவீரர்களின் வயதெல்லைகளைப் பாருங்கள். அதில் எத்தனை பேர் 18 வயதில்/வயதிற்குள் இறந்திருக்கிறார்கள் என்று புரியும். 18 வயதைவிடக் குறைத்துக்காட்ட அந்த நாட்டு அரசாங்களுக்கு தயக்கமாயிருந்தாலும், 18 என்று போடும்போது, அவர்கள் என்ன (ஒரு வருடமாவது)பயிற்சிகள் எடுக்காமலா இந்தா பிடிடா துவக்கை, ஓடடா ஈராக்கிற்கு என்றா அனுப்பப்பட்டிருப்பார்கள்?
புலிகளில் 18 வயதிற்கு குறைவாக சிறுவர் சிறுமிகள் சேர்வது இப்போதுதான் உங்களுக்குத் தெரியவருகிறது என்றாள், நீங்கள் இவ்வளவு காலமும் கண்ணை மூடிக்கொண்டு பூனையைப் போல பால்குடித்து கொண்டிருந்திருக்கின்றீர்கள் என்றுதான் சொல்லமுடியும். மற்றபடி நீங்கள் தனிப்பட்ட ரீதியில் புலிகளால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்றால் உங்கள் கோபத்தை நியாயமாகப் பார்க்கிறேன். அதேவேளை சிங்கள இராணுவத்தால், ஏனைய இயக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உங்களைப் போலவே அவர்களும் தங்கள் கோபத்தை வெளிக்காட்ட சுதந்திரம் உள்ளது என்பதையும் புரிந்துகொள்ளுவீர்கள் என நம்புகிறேன்.
//கொச்சையாயுளற வேண்டிமென்றால் டீசேயைக் கூட்டிக்கொண்டுவாரும்.//
ஹிஹி... என்ரை கொச்சை மொழிக்காய் நீங்கள் என்னை மட்டும் blame பண்ணமுடியாது பாருங்கோ. முந்தி நீங்கள் விரும்புகிற மாதிரி அழகான தமிழில், ஆங்கிலத்தில்(அரைகுறை) தான் கதைப்பன். ஆனால் நான் காதலிக்கிற பொம்பிளைப்பிள்ளை சொன்னா, 'நீ வேணுமெண்டா நான் செத்தாபிறகு என்ரை சவத்திற்கு முன்னால இப்படி gramaticalயாய் பேசு. இப்ப slangயாய் normalயாய் கதையென்டு'. அதோடுதான் நான் இந்தச் சபதத்தை எடுத்தனான். உங்களோடு அழகான தமிழில் பேசுவதற்காய் என்ரை காதலியின் விருப்பத்தை எல்லாம் கைவிடமுடியாது பாருங்கோ!
(Sorry! I have removed my previous post to correct some spelling mistakes)
ஈழநாதன் எழுதியுள்ளதை நான் கடுமையாய் நிராகரிக்கிறேன். முதலில் எந்த ஒரு இயக்கமும், அரசாங்கமும் தங்கள் செயலுக்கு ஒரு 'நியாயத்தை' உருவாக்கி தருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காலம் காலமாய் பின்பற்றப்படும் வழிமுறைதான் இது. தனக்கு *ஆதரவு அளிக்க தயாரயிருக்கும்* வெகுமனத்திற்கு ஒரு 'நியாயமான' தர்கத்தை கண்டுபிடித்து தருவது ஒரு பிரச்சனையே இல்லை. மிக எளிதான வேலை. அமேரிக்கா, இந்தியா அதன் ராணுவங்கள் போலீஸ்கள், இன்னும் பார்பான்கள், வெள்ளாளத்தான்கள், தேவர்குல மாணிக்கங்கள், தமிழ்நாட்டு லோக்கல் தமிழ் தேசிய 'போராளிகள்' வரை எவனுக்குமே இதை செய்வதில் சிக்கலே வருவதில்லை. மிக எளிதாய் செய்ய கூடிய காரியம் இது.
புலிகளை பொறுத்தவரை 'துரோகி' என்ற சொல்லாடலை வைத்து, தனது ஆதரவு மனங்களை திருப்திபடுத்தும் வேலையை தொடர்ந்து இலகுவாய் செய்துவருகிறது. இதை வெளியில் இருந்து பார்பவருக்கு மிகவும் வியப்பாய் இருக்கலாம். தொடர்ந்து அததனை கொலைகளையும் இந்த ஒற்றை சொல்லாடலில், பெரிய காரணங்கள் ஆதாரங்கள் எதையும் காட்டாமல் செய்ய செய்ய, மந்தை கூட்டம் போல் அதை வெவ்வேறு தொனிகளில் அதன் ஆதரவாளர்கள் (தாங்களும் நம்பிகொண்டு) பிரசாரம் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் புலிகளை பொறுத்தவரை முதலில் காரியத்தை செயல்படுத்துவது, பின்பு அதை எப்படியாவது நியாயபடுத்தி கொள்வது என்பதாகவே இருக்கிறது.
இந்த இடத்தில் மட்டுமல்ல, பொதுவாகவே ஈழநாதனின் பல தர்கங்கள் மிகவும் பலவீனமானவை. அதில் சொதப்ப நேரிட்டால் அதை சமாளிகும் விதமே அலாதி. இதை சோபாசக்தி குறித்த அவரது பழைய விமர்சனங்களில் இருந்து விலாவாரியாய் எடுத்து காட்டமுடியும். (தங்கமணி, சுந்தரவடிவேல் போன்ற 'இரக்க சுபாவமுள்ள' பலவீனமான மனதிற்கு அது போதுமானதாய் இருக்கிறது போலும்.)
இப்போதும் அதையே செய்கிறார். 'முஸ்லீம்கள் துரோகியாய் செயல்பட்டார்கள்' என்பதற்கான ஒரே ஆதாரம் அதை விடுதலை புலிகள் சொல்வது. வறாலாற்றை வைத்து பார்க்குபோது அந்த ஆதாரத்தின் நம்பகத்தன்மை என்ற கேலிக்கூத்து ஒருபக்கம் இருக்கட்டும்.
ஈழநாதன் சொல்வது என்னவெனில் அதை மறுக்க தன்னிடம் ஆதாரம் இல்லை என்கிறார். இப்படி சொல்வதில் சாமர்தியம் மட்டுமே தெரிகிறது. இந்த இடத்தில் தேவைப்படுவது *நிருபிப்பதற்கான* ஆதாரமே ஒழிய மறுப்பதற்கானது இல்லை.
இந்திய அமைதிபடை கூடத்தான் எல்லா வன்முறையையும் மறுக்கும். இந்த இடத்தில் பாதிக்க பட்டவ்ர்களுக்கே சந்தேகத்தின் பலனை தரமுடியும். வன்முறையை இழைத்தவர்களுக்கு அல்ல.
அப்படியே இங்கே 'ஆதாரங்கள்' முன்வைத்தாலும், அது வருவது புலியிடத்திலிருந்து. அது அமேரிக்கா, தங்களின் போரின் மனித உரிமை மீறல் குறித்து வைக்கும் விசாரணை கமிஷணைன் விட நம்பகத்தன்மை குறைந்தது. ஆனால் அவர் அதை கூட செய்யவில்லை. மொட்டையாய் அதை சொல்லி, *மறுக்க* தன்னிடம் ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டு, "விடுதலைப்புலிகளுக்கு முஸ்லிம்கள் செய்தது துரோகம்.முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகள் செய்தது துரோகம்." என்கிறார். இரண்டையும் *சமமானதாக்குகிறார்.* இது முஸ்லீம்கள் வெளியேற்றத்தை நியாயபடுத்துவது என்பதை தவிர வேறு என்ன?
முஸ்லீம்கள் வேளியேற்றத்திற்கு சகிப்புதன்மையினமை என்பதை தவிர வேறு எந்த காரணமும் சொல்லயியலாது என்றுதான் தோன்றுகிறது. முஸ்லீம்களின் தனிதன்மையை, சுய செயல்பாட்டை சகிக்க இயலாமல் வெளிப்பட்ட ஒரு இன அழிப்பு செயல்பாடாக மட்டுமே இதை பார்க்கமுடியும். கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலே இது பரவலாய் பேசப்படாமலே இருந்து, தெரிந்தே பலரும் மௌனமாக இருந்து, சமீபகாலமாய்தான் இது விவாதிக்கபட்டே வருகிறது. இது குறித்து பேச இன்னும் அதிகம் உண்டு எனினும் இங்கே நிறுத்திகொண்டு வேறு சந்தர்பத்தில் செய்கிறேன்.
டீஜே எழுதியது தொடர்பாக வேறு சில. இந்த குழந்தை போராளி பிரச்சனையை *மொட்டையாக*, இந்தியர்களும் மேற்கில் உள்ளவ்ர்களும் பேசுவதை போன்ற ஒரு இனவாதம் இருக்கமுடியாது. அதாவது ஆப்பிரிக்காவில் அதன் காலாச்சாரம், வேர்கள் வறலாற்றுரீதியான பிரச்சனைகள் குறித்து எந்த அறிவும் இல்லாமல் (அல்லது தெரிந்துகொண்டே) இஷ்டதிற்கு கோடு போட்டு நாடுகளை உருவாக்கிய பின், அவர்கள் தங்களுக்கும் அடித்து கொள்வதை முன்வைத்து அது குறித்து மொட்டையான கரிசனத்துடன் பேசுவது போன்றது இது. அல்லது லத்தீன் அமேரிக்காவில் இல்லாத விளையாட்டுகள் விளையாடிவிட்டு, 'ஜனநாயகத்திற்கு' லாயகில்லாதவர்களாக பேசுவதை போன்றது. அல்லது இஸ்லாமிய உலகத்தில் தோன்றகூடிய எல்லா ஜனநாயகத்திற்கான தூண்டுதல்களை எல்லாம் முளையிலேயெ கிள்ளி எரியும் வேலைகளை மேற்பார்வை பார்த்துவிட்டு, இஸ்லாமிய அடைப்படைவாதத்தை *மட்டுமே* ஜனநாயகத்தின் எதிரியாய் சொல்வதை போன்றது.
இந்த குழந்தை போராளிகள் குறித்து இந்து பத்திரிகை தொடங்கி விடும் (அல்லது பாலஸ்தீன குழந்தை போராளிகள் குறித்து மேற்கு விடும்) கண்ணீரை, பிரசாரத்தை, அதை முன்வைத்த அரசியலை போன்ற ஒரு இனவாதம் ஒன்று இருக்கமுடியாது. ஒரு நிலையில், வேறு வழியின்றி தேவைப்பட்டால் எந்த அரசாங்கமும் கூட குழந்தைகளை போராளியாக்க தயங்காது.
நிச்சயமாய் புலிகள் கட்டாயபடுத்தி குழந்தைகளை சேர்ப்பது பற்றி பேச வேண்டும். ஆனால் அதை *மட்டுமே* முன்வைத்து வேறு நோக்கங்களுக்கான அரசிய்லை பற்றியே மேலே சொல்லியிருகிறேன். மற்றபடி தன் மகனை புலிகளிடமிருந்து மீட்டுவர பாடுபடும் ஒரு தாய் இது குறித்தெல்லாம் யோசிக்கமுடியாது.அதன் காரணமாகவாவது இந்த பிரச்சனை குறித்து பேசியே ஆகவேண்டும். எந்த தளங்களில் தேவ்ர்/பயன் படுமோ அந்த தளங்களில் தீவிரமாய் பேசவேண்டும். மற்ற இடங்களில் அதை மற்றவற்றுடன் தொடர்பு படுத்தி பேசவேண்டும் என்பதே என்கருத்து.
தமிழ் பாம்பின் பதிவில் மேலும்...
மோண்ட்ரஸர்:என்னதான் நாம் அணுகுண்டு வெடித்தாலும், பிற நாட்டு மக்களின் தலையில் அதைப் போட்டுச் சோதனை செய்யவில்லை என்பதால், நிலைமை அவ்வளவு மோசமில்லை என்று நினைக்கிறேன்!
பயங்கரவாதத்தின் வெற்றியைப்பற்றிப் பேசுவது என்றால்... யாருடைய பயங்கரவாதத்தைப் பற்றி? ;) நானும் யோசிக்கவேண்டிய கேள்வி.
என் பதில்:அதைத்தான் சொல்ல வந்தேன். அணுகுண்டு தயாரித்து, அதை முன்வைத்து மேலாண்மையை காட்டுவதை வலிமையை முன் வைத்த அரசியலாய் சொன்னேன். அணுகுண்டை கொண்டுபோய் (அதை தவிர்த்திருக்க மிக எளிதாய் முடிந்திருக்கும், அது நிகழாமலேயேஅமேரிக்க வென்றிருக்கும் என்ற யதார்த்தத்தின் போதே, சோதனை செய்யும் முகமாய்) இன்னொரு நாட்டின் மீது எந்த எச்சரிக்கையும் தராமல் போடுவது பயங்கரவாத அர்சியல். நான் இந்தியா செய்வதை வலிமையின் அரசியலாகவும், அமேரிக்கா செய்வதை பயங்கரவாத அரசியலாகவும் எழுதினேன். விஷயம் என்னவெனில் பயங்கரவாதம் தொடர்ந்து வெற்றிகரமான வழிமுறையாய் திகழுவதுதான்.
செய்மூர் ஹிர்ஷின் கட்டுரை : http://www.newyorker.com/fact/content/
மற்றும் சில...
http://www.zmag.org/content/showarticle.cfm?SectionID=17&ItemID=5775
http://online.sfsu.edu/~soh/comfortwomen.html
http://www.tibet.org/Why/occupation.html
http://www.rediff.com/news/2001/apr/17megh.htm
http://ntmani.blogspot.com/2004/09/lesser-indians.html
http://db.mipt.org/Home.jsp
என் பதிவில் பதிலிடுவதற்குப் பதில் இங்கேயே இடலாமென்று நினைத்தேன்...
நன்றி. ஒரு பின்னூட்டத்தில் இத்தனை விஷயங்களை ஒரு புனைவின் தன்மையுடன் இட்ட உங்களை பாராட்டுகிறேன். பொதுவாய் போய் பார்த்தேன். இன்னும் முழுவதும் படிக்கவில்லை. பயனுள்ளது என்று தெரிகிறது. அதனால் மீண்டும் நன்றி.
Anonymous No.3 Said:
புலிகள் சொல்லும் நியாயம் பிறருக்குத்தான். மற்றவர்களை விமர்ச்சிக்கும்போது வெட்கப்படாதவர். ரஜினி ரசிகன்களை விமர்ச்சிக்கும் புலி ஆரவாளர்கள் பிரபாகரனை தெய்வமாக கருதுவார்கள்.
பலவீனம் உலகுக்கு தெரிந்த உண்மைகள். பலம் இவர்களின் மீடியா.
இராணுவம் என்ற பெயரில் சிங்களனும் அமெரிக்கனும் தீவிரவாதம் காட்டுகிறான். புலிகள் என்ற பெயரில் இவர்கள் தீவிரவாதம் காட்டுகிறார்கள். இல்லையேல் ராஜீவ் காந்தியை பெல்ட் பாம் மூலம் பீஸ் பீஸாக்கியதை என்னவென்பது.
எல்லா தீவிரவாதமும் அழிக்கப்படவேண்டும். இலங்கை தமிழ் தேசிய தீவிரவாதம் உட்பட.
உங்கள் கருத்துக்கு நன்றி அனானிமஸ் நம்பர் 3!
சுனாமி துயரம். பொங்கும் மகிழ்ச்சி
http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2005/01/nor_t_pi.jpg&width=600&height=352
பணம் வருதண்ணை, சிரிப்பு வராமல் என்ன செய்யும்?
நன்றி ரோசா
இப்போதுதான் உங்கள் பின்னூட்டத்தை வாசித்தேன்.என்னுடைய பதிவுகளை ஒரேயடியாகச் சொதப்பல் என்று சொல்லிவிட்டீர்கள்.வருத்தமெதுவும் இல்லை.என்னுடைய அறிவீனமும் விவாதங்களில் அனுபவமின்மையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.இனிவரும் காலங்களில் சொதப்பாமல் உங்களை மாதிரி சிந்தித்து எழுத முயற்சி பண்ணுகிறேன்.
முஸ்லிம்கள் வெளியேற்றத்தை நானும் ஆதரிக்கிறேன் என்ற உங்களின் ஒற்றைப்படையான குற்றச் சாட்டை நான் மறுத்தால் அதுவும் பார்ப்பவர்களுக்குச் சொதப்பலாகவே தெரியும்.யாழ் ஜும்மா பள்ளிவாசலடியில் கடை வைத்திருந்த முஸ்லிம்களுக்கும் எங்களுக்கும் இருந்த உறவை இங்கே சொல்லி இன்னும் சொதப்ப விரும்பவில்லை.என்னை நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை.
தமிழ் முஸ்லிம் உறவின் தற்போதைய நிலை மிகச் சிக்கலான நிலை.இதனைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் என்னை மாதிரிச் சொதப்பாத வேறு யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பகுதியினராகவே இருப்பதில்லை என்று புரியும்.
சரி விவாதத்தை விட்டு வெளியே வந்து சில தகவல்களை பரிமாறலாம் என நினைக்கிறேன்.
இளைய அப்துல்லாவின் (அனாஸ்)எங்கள் தாயகமும் வடக்கே என்ற கவிதைத் தொகுப்பை வாசித்துப் பாருங்கள்.வலிந்து இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மகனொருவனின் குரலை அச்சொட்டாகப் பதிவு செய்திருக்கிறார்.முஸ்லிம்களின் வடபுல இடம்பெயர்வு பற்றி நூலொன்று வெளிவந்ததாக அறிந்து தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும் கிடைக்கவில்லை யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
நான் படித்ததைக் கூறி விளக்கம் கேட்கிறேன்.
"பிரபகரனின் தாய் தந்தையர் இந்தியாவில் பத்திரமாக இருக்கிறார்கள். அவருடைய குழந்தைகளும் பத்திரமாக இருக்கிறார்கள். அவரும் மற்றவர்களை முன்னிருத்தி தான் பத்திரமாக இருக்கிறார்"
உண்மையா?
அன்புடன்,
ராகவன்
அன்பின் ஈழநாதன், நீங்கள் எழுதிய எதுவும் சொதப்பலா இல்லையா என்பது ஒரு பிரச்சனையே இல்லை. அது குறித்து நான் பேசவும் இல்லை.
சொல்லொணா துயரத்தை அனுபவித்த மக்களுக்கு நிகழ்ந்து எவ்வாறு கற்பிக்கபடுகிறது, முன்வைக்கபடுகிறது என்பதே பிரச்சனை. அது ஈழத்து தமிழராயினும், முஸ்லீமாயினும், இல்லை பாலஸ்தீனத்தவராயினும் சரி.
நீங்கள் உங்கள் மக்கள் நலம் குறித்து மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுவராய் இருக்கலாம். முஸ்லீம் மக்கள் மீதும் உங்களுக்கு அக்கறை இருக்கலாம். தமிழ்-முஸ்லீம் நல்லிணக்கம் குறித்தும் உங்களுக்கு அக்கறை இருக்கலாம். ஆனால் பிரச்சனை நீங்கள் நிறுவனரீதியாய், ஒரு லட்சிய உருவாக்கமாய் எதை கருதி பார்க்கிறீர்கள் என்பதே.
இதன் காரணமாய், உங்கள் நிலைப்பாட்டை எல்லா தளங்களிலும் உறுதி செய்துகொள்ள, எல்லா விஷயத்திலும் தொடர்ந்து இந்த நிலைப்பாட்டை நியாயபடுத்தும் ஒரு தர்கத்தை உருவாக்கவேண்டியிருக்கிறது. நான் அறிந்தவரை இதுதான் அடிப்படை பிரச்சனையே. உண்மையில் இது தேவையே இல்லை. பல மனச்சமாதானங்கள், சமரசங்கள், முரண்பாடுகளுடனேயே கூட ஒரு நிலைபாட்டை சுமக்கமுடியும். அதற்கு மாறாய் எல்லா தளத்திலும் நியாயபடுத்த விளையும்போதே பிரச்சனைகள் வருகின்றன.
நீங்கள் இஸ்லாமியர் மொத்தமாய் வெளியேற்றபட்ட ஒரு நிகழ்வை நியாயபடுத்த விரும்பினீர்களா அல்லது அதற்கு ஆதரவானவரா எனபதல்ல பிரச்சனை. நீங்கள் அதற்கு எதிரானவராக கூட இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் அதை நியாயபடுத்தும் (ஏமாற்றும்) தர்க்கம் உங்களிடம் வெளிபடுவதை சொலவதே எனது நோக்கம். இங்கே ஏமாற்றும் தர்கம் என்பது திட்டமிட்டு ஏமாற்றுவதற்காக உருவாக்கபட்ட தர்கத்தை சொல்லவில்லை. அப்படியும் பலர் செய்யகூடும், என்றாலும் அதற்கு தேவையே இல்லாமல் நான் நம்பும் விஷயங்களை வலியுறுத்தும்போது நான் திட்டமிடாமலே கூட அது வெளிப்படகூடும்.
எப்படியிருப்பினும் *என்னை பொறுத்தவரை* தமிழ் இஸ்லாமிய புரிதலை ஏர்படுத்த நோக்கம் இருப்பின். முதலில் செய்ய வேண்டியது, இஸ்லாமியருக்கு நிகழ்ந்தது அநியாயமான வன்முறையன்றி வேறில்லை என்பதை (எந்த சாக்குகள் சொல்லாமல்) ஒப்புகொள்வது. அதற்கு வருத்தம் தெரிவிப்பது, முடிந்தால் மன்னிப்பு கேட்பது. இதுதான் தமிழ்-இஸ்லாமிய புரிதலை நோக்கிய முதல்படியாக இருக்க முடியும். மற்ற பிரச்சனைகள் குறித்து பிறகு பேசலாம். எனக்கு தோன்றுவது இதுதான். என் தனிப்பட்ட கருத்து.
நன்றி ரோசா நான் புலிகள் செய்வதையெல்லாம் நியாயப்படுத்த விரும்பவில்லை.ஆனால் புலி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ் மக்களின் குரல் வெளியே தெரியாமல் நசுக்கப்படும்போது நான் அதனை வெளிக்கொணர விரும்புகிறேன் அவை புலிச்சார்பாகத் தோற்றம்பெற்றுவிடுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னரேயே நடந்த சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் பகிரங்க மன்னிப்புக் கேட்டது.கூடவே மீளவும் குடியமரும்படி வேண்டுகோள் விடுத்தது.இது எவ்வளவு மனச்சுத்தியுடன் வெளியிடப்பட்ட வேண்டுகோள் என்பது எனக்கும் சந்தேகமே.சர்வதேசத்தின் அழுத்தம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
புத்தளத்தில் யாழ்மாவட்ட முஸ்லிம்களின் சம்மேளனம் உண்டு அதன் தலைவர்கள் வன்னிக்கு அழைக்கப்பட்டு புரிந்துணர்வை மீளக் கட்டமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டன.விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம் இது குறித்து அறிக்கையொன்றும் வெளியிட்டது.
அரசியல் நிலைப்பாட்டில் யாழிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் நிலைப்பாடு தமிழர்களுடன் சேர்ந்துவாழ்வதாகவே உள்ளது.அண்மைய தேர்தலில் கூட யாழ்,வன்னி மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் தமிழர் கூட்டமைப்பினருடன் சேர்ந்து போட்டியிட்டார்கள்.
புலிகள் தாம் செய்த தவறை ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது.
1)யாழிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும்.
2)பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதற்கு ஏதுவாக முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் சமாதான நடவடிக்கைகளில் இடம் வழங்கவேண்டும்.
3)மீளக்குடியமர விரும்பாத முஸ்லிம்கள் அவர்களதுவீடு நிலங்களை விற்றுப் பணம் பெறுவதற்கு முழு உதவியையும் விடுதலைப்புலிகள் செய்யவேண்டும்.
4)அதிகமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒரு அமைப்பொன்றை ஏற்படுத்தி அவற்றின் மூலம் பிரச்சனைகளைக் கையாள வேண்டும்.
மிக்க நன்றி ஈழநாதன். நீங்கள் எழுதியுள்ளது நம்ப்பிகையளிக்கிறது. ஒரு பக்கம் 'புலி எதிர்ப்பு' என்ற ஈழத்தமிழ் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது என்று நீங்கள் சொல்வதை ஏற்றுகொள்கிறேன். நிச்சயம் அது குறித்து பேசவேண்டும். ஆனால் 'புலி ஆதரவு' என்ற பெயிண்டில், விரித்து வைத்திருக்கும் வலையில் விழுந்துவிடாமலும் இருக்க வேண்டுமல்லவா!
நீங்கள் எழுதியுள்ள விஷயங்கள் குறித்து பல தளங்களில் பேசப்படவேண்டும். அத்தோடு முஸ்லீம் மக்கள் குறித்து ஈழத்தமிழ் மக்களிடையே இருக்கும் கற்பிதங்கள் குறித்தும் பேசவேண்டும்.
இந்த பேரழிவு மீட்புபணிகளில் முஸ்லீம் மக்களுக்கும் பலத்த அதிருப்தியும், வஞ்சிக்கபடும் உணர்வும் இருப்பதாக தெரிகிறது. இந்த நேரத்தில் பல நல்லெண்ணங்களை ஏற்படுத்த முடியும். மீண்டும் உங்கள் பதுலிக்கு நன்றி.
Anonymous 3 Says,
கீழிரண்டு லிங்க்-களை சேர்ப்பதன் மூலம் இதனையொட்டி சமீபத்தில் நடந்த மற்ற விவாதத்தை இணைத்து பார்வையாளர்களுக்கு கொடுக்கலாம்.
http://vikadan.blogspot.com/2005/01/blog-post_19.html
http://vikadan.blogspot.com/2005/01/blog-post_21.html
நல்ல விவாதம். தொடருங்கள்
நன்றி அனானிமஸ் 3. நன்றி கேங்ஸ்.
//பிரபகரனின் தாய் தந்தையர் இந்தியாவில் பத்திரமாக இருக்கிறார்கள். அவருடைய குழந்தைகளும் பத்திரமாக இருக்கிறார்கள். அவரும் மற்றவர்களை முன்னிருத்தி தான் பத்திரமாக இருக்கிறார்" //
நீங்களும் பத்திரமாகத்தானே இருக்கிறீர்கள், அப்பறம் எதற்கு இந்த கேள்வி எல்லாம்!
அப்பாடா ஒரு வழியாக என் கேள்விக்குப் பதில் கிடைத்தது. நான் பத்திரமாகவே இருந்து விட்டுப் போகிறேன்.
தன் குழந்தைகளை மட்டும் பாதுகாத்துக் கொண்டு ஊரார் குழந்தைகளைப் பணயம் வைக்கிறார் பிரபாகரன் என்பதை மறுக்காமல் மறைமுகமாகவாவது ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இதனால் அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் நம் தமிழக அறிவுஜீவிகளில் ஒருத்தருக்காவதுக் கண் திறக்காதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் கேளிவிக்கு பதில் தெரியாமலா கேட்டீர்கள்? ஆச்சரியம்தான்!
என் கேளிவிக்குதான் பதில் கிடைக்கவில்லை, உங்கள் குழந்தையும், நீங்களும் பத்திரமாயிருக்க பயமேன்? கண்ணீர் ஏன்? கவலை ஏன்?
Dear Rosa,
Firstly, your views are balanced here and I appreciate that. But, as I once mentioned, sometimes the usage of unnecessarily strong and objectionable words can be avoided, like, "Indian wolf". This branding is unwarranted. There are many in India (read, Tamilnadu) who also have balanced opinion on the Srilankan issue which I am sure you will agree! All Tamilians here, who pray for the well-being of Srilankan Tamils are INDIANS first and foremost. Also, pl. see my comments in Vanthiathevan's blog
http://vanthiyathevan.blogspot.com/2005/01/blog-post_14.html
enRenRum anbudan,
BALA
ஒரு தமிழன் தன்னை இந்தியனெண்டால், அவன் பாப்பானாய் இருக்கோணும், இல்லையேல், பாப்பன அடிவருடியாய் இருக்கோணும். ஈழம் உருவாகி பெங்களூர் கேரளா திருப்பதி என்று தமிழரிடமிருந்து பிடுங்கிய எல்லா நிலங்களையும் தமிழர்கள் மீட்போம். வழியில் சுனாமியே வந்தாலும் சரி, நடந்தே தீரும். சிங்களவண்களையும் முஸ்லீம்களையும் துரத்தியதுபோலவே பாப்பான்களையும் சேட்டுக்களையும் தேசியத்தலைவர் துரத்துவார். யுத்ததந்திரம் காரணமாய் துரத்தத்தான் செய்வார் என்பதே வருத்தம்.
பாலா, உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நான் எல்லா இந்தியர்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஓரிருவரை, அவர்க்ளை போலவே இன்னும் இணையத்தின் பல பகுதிகளில் எழுதியவர்களையே அவ்வாறு குறிப்பிட்டேன்.
வேறு உதாரணங்கள் உண்டேனினும், வலைப்பதிவில் ஒரு உதாரணமாய் இங்கே பார்க்கலாம்.
http://www.haloscan.com/comments/sundar23/109207617838661247/
இதனுடன் தொடர்புடையுது.
http://mynose.blogspot.com/2004/08/blog-post_09.html
நீங்கள் இது குறித்து என்ன முடிவுக்கு வேண்டுமானால் வரலாம். எனக்கு உடனடியாய் தோன்றிய கருத்தையே தெரிவித்தேன்.
இது குறித்து இப்போது பேசும் நோக்கம் இல்லை. நிதானமான வார்த்தைகளால் செய்வதும் சாத்தியம் இல்லை. விரிவாய் பிறகு நிச்சயம் எழுதுவேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
அனானிமஸ், நம்பர்3தானே.
நகைச்சுவையும் அங்கதமும் ஒருங்கே வீச என்னமாய் எழுதியிருக்கிறீர்கள். கருத்திலேதான் எத்தனை தெளிவு!
வாருங்கோ இந்தியாவுக்கு. உங்களும் சொதியும் இடியாப்பும் செஞ்சு தாரோம்!
என்னால் இதற்கு மே இங்கே எதையும் எழுத முடியாது என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன். இனி எழுத போகும் நன்பர்களுக்கு என் அட்வான்ஸ் நன்றிகள். அன்புள்ள வசந்த்.
இப்படித்தான் துவக்கத்தில் தேசியத்தலைவரை கிண்டலடித்திருந்தார்கள். குண்டி வெந்தவுடன் திட்டுறாண்கள். உமக்கும் வேகும். அப்போ தெரியும்.
அன்பின் ராகவன் நீங்கள் பிரபாகரன் பற்றிய கேள்வியைக் கேட்டபோதே அதன் விசமத்தனத்தை உணர்ந்து பதிலளிக்காமல் விட்டுவிட்டேம் மறுபடியும் உங்கள் பதிலில் விஷமத்திற்குப் பதிலாய் விஷம் தொனித்ததால் இதோ என் பதில்.
கார்கிலில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அப்படித்தான் அடி விடக்கூடாது பாகிஸ்தானை என்று கூச்சலிட்டப்போது நீங்களும் சரி உங்கள் தலைவர்களும் சரி கார்கிலில் இருக்கவில்லை.உங்கள் வீடுகளிலோ உல்லாச மாளிகைகளிலோ உட்கார்ந்து சன் ரீவி பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.உங்களுக்குப் பதிலாக ஏதோ ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் போராடிக்கொண்டிருந்தான்.
வாய்பாயின் தாயும் தந்தையும் ஏன் வாஜ்பாய் கூட கார்கில் யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.அவருக்கொரு மகன் இருந்திருந்தாலும் அவனையும் கலந்துகொண்டிருக்க விட்டிருக்கமாட்டார்.
அதிரடிப்படை காட்டுக்குள் இறங்கி வீரப்பனைத் தேடியபோது ஜெயலிலதா உல்லாச மாளிகையில் உட்கார்ந்திருந்தார்.சத்தியமங்கலம் எப்படியிருக்குமென்றே அவருக்குத் தெரியாது.அவரின் பதவிக்காக 700 இற்கும் மேற்பட்ட தாய்மாரின் குழந்தைகள் பணயம் வைக்கப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் வடபகுதியில் செத்துக்கொண்டிருக்கும்போது சந்திரிக்காவின் பிள்ளைகள் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
ரோகண விஜயவீரவுக்காக பலநூற்றுக்கணக்கான இளைஞர்கள் டயரில் எரிந்து கொண்டிருக்கும்போது அவர்ரது மனைவி பிள்ளைகள் மாளிகையில்தான் வசித்துக்கொண்டிருந்தனர்.
இந்த விடயத்தில் பிரபாகரனும் மற்றைய தலைவர்களையே பின்பற்றுகிறார் என நினைக்கிறேன்.
நாளையே தனக்குப் பின் தன் வாரிசை தலைமைப் பதவியில் அமர்த்தாதவரை அதில் எனக்கு எந்தவித வருத்தமுமில்லை.
இடியப்பமும் சொதியும் தந்துவிட்டால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஓடிவருவார் என்று இவ்வளவு துல்லியமாக எப்படி ரோசா கண்டுபிடித்தீர்கள்? உங்கள் அங்கதச் சுவைக்கு என் பாராட்டு.
நான் மேலே எழுதவேண்டம் என்று முடிவு செய்தாலும் தெளிவுக்காக இதை எழுதுகிறேன்.
எனக்கு அநாமதேய நண்பர் எழுதியது பிடிக்கவில்லை எனினும், அவரை புண்படுத்தும் நோக்கம் இல்லை. நான் இடியாப்பமும், சொதி குறித்து பேசியது, இந்தியாவில் அவருக்கு கிடைக்க கூடியது என்னவாய் இருக்கும் என்பது குறித்த கிண்டலே ஒழிய, அவர் குறித்த கிண்டல் இல்லை.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. குறிப்பாய் ஈழதமிழர்கள் இடையே சண்டை வரும்போது வார்த்தைகளில் கவனமாய் இருக்க விரும்புகிறேன். நன்றி!
மன்னிக்கவும் ரோசா! அது என்னுடைய நக்கலாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
Dear ரோசா,
விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் மேற்கோள் காட்டிய சுட்டியில் காணப்பட்ட பின்னூட்டங்களை படித்து முடிப்பதற்குள் காவு தீர்ந்து விட்டது. என்ன ஒரு கடுமையான சச்சரவு????
அநாமதேய நண்பரே,
//ஒரு தமிழன் தன்னை இந்தியனெண்டால், அவன் பாப்பானாய் இருக்கோணும், இல்லையேல், பாப்பன அடிவருடியாய் இருக்கோணும்.//
இது என்ன ஒரு அசிங்கமான விதண்டாவாதம்? பார்ப்பனர் அல்லாத தமிழர், இந்தியர் இல்லையா? நாட்டுப் பற்றை கேவலப்படுத்தாதீர்கள்! அதோடு, இந்திய ஒற்றுமையை குலைக்கும் வகையில் பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள். சிங்களத் தமிழர்களை தம்மக்களாகத் தான் இந்தியத் தமிழர்கள் பலர் கருதுகிறார்கள் என்பதை உணருங்கள்.
I forgot to sign in my previuos comment, repeated below.
Dear ரோசா,
விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் மேற்கோள் காட்டிய சுட்டியில் காணப்பட்ட பின்னூட்டங்களை படித்து முடிப்பதற்குள் காவு தீர்ந்து விட்டது. என்ன ஒரு கடுமையான சச்சரவு????
அநாமதேய நண்பரே,
//ஒரு தமிழன் தன்னை இந்தியனெண்டால், அவன் பாப்பானாய் இருக்கோணும், இல்லையேல், பாப்பன அடிவருடியாய் இருக்கோணும்.//
இது என்ன ஒரு அசிங்கமான விதண்டாவாதம்? பார்ப்பனர் அல்லாத தமிழர், இந்தியர் இல்லையா? நாட்டுப் பற்றை கேவலப்படுத்தாதீர்கள்! அதோடு, இந்திய ஒற்றுமையை குலைக்கும் வகையில் பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள். சிங்களத் தமிழர்களை தம்மக்களாகத் தான் இந்தியத் தமிழர்கள் பலர் கருதுகிறார்கள் என்பதை உணருங்கள்.
enRenRum anbudan,
BALA
This comment has been removed by a blog administrator.
பாலா!
அது என்ன சிங்களத் தமிழர்? இச்சொல்லின் அர்த்தம் விளங்கவில்லை. தவறுதலாகப் பாவித்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.
நிற்க,
அந்த யுழெலெஅழரள புலிகளை மட்டந்தட்டிக் கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு என்னவோ எழுதியுள்ளார். அவலை நினைத்து உரலை இடித்த மாதிரி. இவர்களின் மற்றைய புலியை விமர்சிக்கும் பதிவுகளும் இப்படி கோமாளித்தனமானதாக நோக்கப்படும் அபாயமுள்ளது. இது நல்லதல்ல. பரவாயில்லை நீங்களாவது கவனித்தீர்கள்.
பாலா!
அது என்ன சிங்களத் தமிழர்? இச்சொல்லின் அர்த்தம் விளங்கவில்லை. தவறுதலாகப் பாவித்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.
நிற்க,
அந்த Anonymous புலிகளை மட்டந்தட்டிக் கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு என்னவோ எழுதியுள்ளார். அவலை நினைத்து உரலை இடித்த மாதிரி. இவர்களின் மற்றைய புலியை விமர்சிக்கும் பதிவுகளும் இப்படி கோமாளித்தனமானதாக நோக்கப்படும் அபாயமுள்ளது. இது நல்லதல்ல. பரவாயில்லை நீங்களாவது கவனித்தீர்கள்.
"கார்கிலில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அப்படித்தான் அடி விடக்கூடாது பாகிஸ்தானை என்று கூச்சலிட்டப்போது நீங்களும் சரி உங்கள் தலைவர்களும் சரி கார்கிலில் இருக்கவில்லை.உங்கள் வீடுகளிலோ உல்லாச மாளிகைகளிலோ உட்கார்ந்து சன் ரீவி பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.உங்களுக்குப் பதிலாக ஏதோ ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் போராடிக்கொண்டிருந்தான்.
வாய்பாயின் தாயும் தந்தையும் ஏன் வாஜ்பாய் கூட கார்கில் யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.அவருக்கொரு மகன் இருந்திருந்தாலும் அவனையும் கலந்துகொண்டிருக்க விட்டிருக்கமாட்டார்."
என்ன பைத்தியக்காரத்தனாமனப் பின்னூட்டம்! இந்தியாவில் கட்டாய ராணுவச் சேவை கிடையாது. ஆகவே வாஜ்பாயி செய்தாரா, ஜெயலலிதா செய்தாரா என்றெல்லாம் கேட்பது அசட்டுத்தனம். வெறும் திசை திருப்பும் வாதம். புலிகள் விஷயத்தில் அப்படியில்லை. குழந்தைகளைக் கட்டாயப்படுத்தியோ மூளைச்சலவை செய்தோ இடுப்பில் பெல்ட் பாம் கட்டி அனுப்புகிறார்கள். கட்டாய ராணுவச் சேவைக்கு சயனைட் குப்பியைக் கொடுத்து அனுப்புகிறார்கள். தலைவர் மட்டும் தன் குழந்தைகளை அதில் ஈடுபடுத்தாமல் தானும் ஒளிந்துக் கொண்டு மாவீரன் பட்டம் மட்டும் பெற ஆசைப்படுகிறார்.
அதற்குள் ஈழநாதன் அவர் பிள்ளைகளை வாரிசாக நியமிக்காதவரைப் பரவாயில்லை என்றுக் கூறுகிறார். அதுதான் நடக்கப் போகிறது என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். அமெரிக்காவில் வியட்னாம் யுத்த சமயத்தில் கட்டாயச் சேவையை தவிர்த்த பில் க்ளிண்டனையும் அமெரிக்கப் பத்திரிகைகள் விடவில்லை. மிகக் கஷ்டப்பட்டுத்தான் அவர் அக்குற்றச்சாடை மீறி ஜனாதிபதி தேர்தலில் வேறு விஷயங்களுக்காக வெற்றி பெற முடிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
This comment has been removed by a blog administrator.
கட்டாய இராணுவச் சேவை என்று இல்லாத ஒன்றைத் திணிக்காதீர்கள். கட்டாய இராணுவப் பயிற்சி என்று வேண்டுமானால் சொல்லுங்கள். சரி, கட்டாய இராணுவச் சேவை இருந்தது என்று வைத்துக் கொண்டால் கூட அது தவறா? இந்தியாவோடு ஒப்பிட்டு கதைக்காதீர்கள். தனது இருப்பின் நிச்சயத் தன்மைக்காக எந்த நாடும் எதையும் செய்யும். மற்றது, சிறுவரகளிடம் குண்டைக் கொடுத்து தற்கொலைப் போராளிகளாக கட்டாயப்படுத்தி அனுப்பினதாகச் சொல்வது சரியா எனப்பாருங்கள். அப்படித் தாக்குதல் எங்கு நடந்தது என்று கூற முடியுமா? கரும்புலிகளின் பெயர் விபரங்கள் அவர்களால் பகிரங்கமாகவே வெளியிடப்பட்டுள்ளன. முதலில் உங்களுக்குக் கிடைக்கும் செய்திகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். UNICEF கூட அண்மையில் மிகப் பக்கச்சார்பான ஒரு வேலையைச் செய்திருந்தது.
இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்? பிரபாகரன் தமது பிள்ளைகளை போருக்கு அனுப்பிச் சாகடிக்க வேண்டும். அப்படித்தானே?
சரி அவரின் பெற்றோரையும் போருக்கு அனுப்பச் சொல்வீரோ?
This comment has been removed by a blog administrator.
I won't be coming here till thursday evening.
கோபத்துடன் நான் எழுதிய இரண்டு பின்னூட்டங்களை நீக்கியுள்ளேன். இதற்கு ஒரே காரணம் இதை இப்போது இழுத்துகொண்டு போய், நேரத்தை இதில் விரயம் செய்ய விருப்பமில்லாதது மட்டுமே! நிதானமான ஒரு சந்தர்பத்தில் இது குறித்து எழுதுவேன். வியாழன் இரவு வரை இந்த பக்கம் வரமாட்டேன்.
"இந்தியாவோடு ஒப்பிட்டு கதைக்காதீர்கள். தனது இருப்பின் நிச்சயத் தன்மைக்காக எந்த நாடும் எதையும் செய்யும். மற்றது, சிறுவரகளிடம் குண்டைக் கொடுத்து தற்கொலைப் போராளிகளாக கட்டாயப்படுத்தி அனுப்பினதாகச் சொல்வது சரியா எனப்பாருங்கள்."
இந்தியாவுடன் ஒப்பிட்டுக் கதைத்தது நான் அல்ல. உங்களில் ஒருத்தர்தான். இந்தியாவோடு ஒப்பிட்டு கதைக்காதீர்கள் என்றுதான் நானும் கூறுகிறேன், கார்கில் போர் பற்றிப் பேச முற்பட்டவருக்கு. "கட்டாயப்படுத்தியோ மூளைச்சலவை செய்தோ" என்றுதான் நான் கூறினேன். அதில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன். உங்கள் கூற்றுக்கே வருவோம். தானுடைய நாட்டின் இருப்பே நிச்சயத் தன்மையானதாக இல்லாத போது தன் பிள்ளைகளை மட்டும் காக்க நினைப்பவர் உங்களுக்கு மாவீரன்!
வீரத்தை விடுங்கள். அவரது போர்க்கால யுக்தியை நோக்குங்கள். 1980-களில் இந்தியாவே புலிகளுக்கு ஆதரவாக இருந்தது. சிறிது சிறிதாகப் புலிகள் தங்கள் செயல்களால் ஆதரவாளர்களை இழந்து வந்தாலும், ராஜீவ் காந்தியின் கொலை வரை ஏதோ இப்படியும் அப்படியுமாக இருந்தது. ராஜீவைக் கொலை செய்து ஒரே வீச்சில் அத்தனை இந்திய ஆதரவுகளையும் இழந்தனர் புலிகள். இந்த சறுக்கலுக்கு பிரபாகரனின் தவறான யுக்திதானே காரணம்? அப்புறம் என்ன மாவீரன் வேண்டியிருக்கிறது? இவ்வளவும் நடந்த பிறகு, ராஜீவின் கொலை ஒரு துரதிர்ஷ்டவசமானச் செயல் என்றுக் கூறுவாராம், இந்தியர்கள் எல்லோரும் அப்படியே புளகாங்கிதம் அடைய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பின் அசட்டுத்தனம் உறுத்த வேண்டாமா? அதே சமயம் பாலசிங்கத்துக்கு மருத்துவ உதவி எந்த முகத்துடன் கேட்டார்கள்? இந்தியர்கள் அவ்வளவு இளிச்ச வாயர்களா? ஐ.பி.கே.எஃப். வேண்டாம் என்றீர்கள். அவர்களும் வெளியேறியாகி விட்டது. இப்போது மறுபடியும் இந்தியாவின் தயவை ஏன் நாட வேண்டும்? புலிகளை எதிர்ப்பதாலேயே ஜயலலிதா மறுபடி தேர்தலில் வெற்றி பெற முடிகிறது. உடனே 1996 தோல்வியைக் காண்பிக்க நினைப்பவர்களுக்கு: அவ்வருடம் ஜயலலிதா தன் புலி எதிர்ப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டதாக மக்களுக்குப் பட்டது. அதனால் தன் ஒரே ப்ளஸ் பாயிண்டை இழந்தார்.
அன்புடன்,
ராகவன்
டோண்டு-வின் "கேள்விகளையும்" அதற்கு மற்றவர்களின் பதிலையும் silent mode-இல் படித்து வருகிறேன். அவரது இந்த கடைசி பேத்தலை பார்த்து தாங்க முடியாமல் எழுத வந்து விட்டேன்.
என்ன ஒரு அறிவு! என்ன ஒரு acumen! அடடே! புலி எதிர்ப்புதான் அம்மாவின் வெற்றியின் ரகசியமாமே. 91-இல் இந்த புலி எதிர்ப்பால் மாபெரும் வெற்றியை கொடுத்த மக்கள் அந்த எதிர்ப்பை "கொஞ்சம் குறைத்துக்கொண்ட" ஒரே பாவத்திற்காக அம்மாவுக்கு படுதோல்வியை கொடுத்தனர். அது சரி, கருணா அதே 96 தேர்தலில் ஜெயித்தது எப்படி? புலி எதிர்ப்பை "கொஞ்சம் கூட்டி" கொண்டதினாலா?
இந்த சூட்சமம் தெரியாமல் டாக்டர் அய்யா அன்புச்சகோதரியிடமும் அண்ணன் கலை-யிடமும் மாறி மாறி தவ்விக்கிட்டு இருக்காரு! திராவிட கட்சிகளிடம் சீட்டு வாங்க முடியாமல் திருமா தவிச்சிகிட்டு இருக்காரு! வைகோ வேவாத வெய்யில்லே நடைபயணம் போயிகிட்டு இருக்காரு! புலிகளை போட்டு தாக்குவோம்- ணு sound உட்டு புலிகளின் கடித்து கொதற வெறி கொண்டு அலையும் தமிழ் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ஓட்டையும் அள்ளிட வேண்டியதுதானே!
//1980-களில் இந்தியாவே புலிகளுக்கு ஆதரவாக இருந்தது.//
பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும் அதை வைத்து என்ன செய்திருக்க முடியும்? வங்காள தேசம் போல் தனிநாடு உருவாக்கித்தர இந்தியா தயாராக இருந்தாதா? அப்படித் தருவதாகச் சொல்லியிருந்தாலும் அதை யார் நம்பத் தயாராக இருந்தார்கள்? அப்படியொரு விடுதலையை (வங்க தேசம் போன்று) யார் விரும்பினார்கள்? அதில் இந்தியாவின சுயநலன் என்பது இல்லையா? உண்மையில் அம்மக்கள் மீது கொண்ட கரிசனையினால் தான் இது நடந்ததா? (எந்தவொரு நாட்டினதும் சுயநலன் என்பது தவறென நான் நினைக்கவில்லை. இன்றைய உலக ஒழுங்கு அப்படித்தான்.)
//சிறிது சிறிதாகப் புலிகள் தங்கள் செயல்களால் ஆதரவாளர்களை இழந்து வந்தாலும்இ ராஜீவ் காந்தியின் கொலை வரை ஏதோ இப்படியும் அப்படியுமாக இருந்தது.//
எந்தச் செயல்களால் என்று விளக்க முடியுமா? அதே ஆதரவுடன் தான் விடுதலைப்புலிகளுடன் சண்டையிட்டார்களா? சண்டை ஆரம்பமாகுமுன் அவர்களின் ஆதரவு கலைந்து போக என்ன காரணம். விடுதலைப்புலிகள் தான் காரணம் என்றால் எந்தச் சம்பவம்? இதற்குள் சண்டை முடிந்த பின்பும் ஆதரவாக இருந்தது என்று வேறு சொல்கிறீர்கள்.
முதலில் இந்தியா என்பது யார்? அல்லது எது? என்பதைச் சொல்ல முடியுமா? (அமெரிக்கா என்ற ஒரு நாட்டிற்கும் அமெரிக்க மனப்பான்மைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு) எனக்கென்னவோ அதை முதலில் தெளிவுபடுத்திக் கொண்டே மேலும் கதைப்பது நன்று எனத் தோன்றுகிறது.
//ராஜீவின் கொலை ஒரு துரதிர்ஷ்டவசமானச் செயல் என்றுக் கூறுவாராம்.//
அது துரதிஸ்டவசமான செயல் எனக் கூறவில்லை. “துன்பியல் சம்பவம்” என்றே கூறியுள்ளார். இரண்டு வார்தைகளுக்கிடையிலும் கருத்து வித்தியாசம் இருப்பதாகவே உணர்கிறேன். முன்னையது தானாக நடந்தது போன்ற தோற்றப்பாட்டைத் தருவிக்கும். பின்னையது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று பொருள்படும். அது பழிவாங்கும் செயலா அல்லது ஒரு முன்னோடி தற்காப்பு நடவடிக்கையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
அது நடந்திருக்காவிட்டால் இவ்வளவு காலத்துக்குள் இந்திய அரசாங்கம் என்ன செய்திருக்கும்? (தமிழக மக்களின் ஆதரவை இழந்திருக்க மாட்டோம் என்பதுமட்டும் உண்மை).
பாலசிங்கத்துக்கு மருத்துவ உதவி கேட்டது ஏனோ தெரியவில்லை. (சில வேளை உலகத்திலில்லாத மருத்துவ வசதிகள் இந்தியாவில் இருந்திருக்கலாம்) ஆனால் சில நன்மைகள் அவர்களுக்குக் கிட்டியுள்ளது. "நடந்ததெல்லாம் மறந்திட்டு இந்தியாவோட நட்பாப் போனீங்களெண்டாத்தான் உங்களுக்கு நல்லது" என்று புத்தி சொல்லும் சிலருக்குப் புரியவைக்கப்பட்டுள்ளது. வரதராஜப் பெருமாள் உட்பட பல புத்தி ஜீவிகளின் வாய்கள் அடைக்கப்பட்டுள்ளன. இப்போதல்ல இனியும் தம்மைப்பார்த்து இப்படியொரு விமர்சனம் வரமுடியாதபடி தம்மைத் தற்காத்துள்ளார்கள் புலிகள். உண்மையில் அவர்கள் விரும்பியதும் இந்தியாவின் மறுப்பைத் தான் என்றே நினைக்கிறேன்.
என் கேள்விகள் சில:
தனிநாடு அமைவதை இந்தியா விரும்பியதா?
இப்போதும் விரும்புகிறதா?
ஆம் என்று சொன்னால் ஏன் விடுதலைப்போராட்டத்திற்குக் குறுக்கே நிற்க வேண்டும். (எந்தெந்த வழிகளில் என்று விளக்கமாக எழுதவில்லை. கேட்டால் எழுதுவேன்)
முன்னர் விரும்பியிருந்து இப்போது விரும்பவில்லை என்று சொன்னால் என்ன காரணம்? ராஜீவின் கொலையோடு மாறிவிட்டார்களா?
முன்னரும் விரும்பவில்லை என்று சொன்னால் பிறகேன் ஆயுதங்களும் பயிற்சிகளுமளித்துப் போராளிகளைப் போருக்குத் தயார் செய்தது? இங்கே தான் இந்தியாவின் அன்றைய அரசியல சித்துவிளையாட்டு அம்பலமாகிறது என நினைக்கிறேன். முதலில் இந்தியா ஏன் 80களில் ஆதரவாக இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியா தன் திட்டத்தில் எவ்வளவு தெளிவோடு இருந்ததோ அதேயளவு தெளிவோடு விடுதலைப்புலிகளும் இருந்தார்கள். அவர்கள் மட்டுமே இருந்தார்கள். அப்படி இருந்ததால்தான் இன்றளவும் அவர்களால் நிலைத்து நிற்க முடிகிறது.
அவர்களின் திறமையைப்பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் கதைக்கலாம். உண்மையில் அவர்களின் எதிரிகளைக் கேட்டுப்பாருங்கள். (உங்களை அவர்களின் எதிரிகள் பட்டியலில் சேர்ககமுடியாது, மன்னிக்கவும்)
//ஐ.பி.கே.எஃப். வேண்டாம் என்றீர்கள். அவர்களும் வெளியேறியாகி விட்டது. இப்போது மறுபடியும் இந்தியாவின் தயவை ஏன் நாட வேண்டும்?//
ஐ.பி.கே.எஃப் மூலம் தான் இந்தியா உதவும் என்று ஒற்றைக்காலில் நின்றால், உங்களுக்கொரு கும்பிடு; இந்தியாவுக்கு ஒரு கும்பிடு. ஆளைவிட்டால் போதும் சாமி.
உதவியென்றவுடன் படையனுப்பத் தோன்றுவது இப்போது ஒரு “பாசனாகி” விட்டது. எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள். 80களின் காலம் திரும்புகிறது போலவும் தெரிகிறது. அதாவது சிறிலங்கா அமரிக்கா உட்பட மேற்குலகத்தின் காலடிக்குள் செல்வது போல் தெரிகிறது. ஆனால் ஒன்று, அப்போது இருந்ததைப்போன்று சிறிலங்கா அரசைப் பயமுறுத்தி தன்னிடம் பணிய வைக்க இந்தியா ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து போராளிகளை உருவேற்றி மோதவிடாது என்பது மட்டும் நிச்சயம்.
உங்கள் தமிழக அரசியல் ஞானத்திற்குப் பதிலளிக்க யாராவது இந்தியர் தான் வரவேண்டும்;.
"91-இல் இந்த புலி எதிர்ப்பால் மாபெரும் வெற்றியை கொடுத்த மக்கள் அந்த எதிர்ப்பை "கொஞ்சம் குறைத்துக்கொண்ட" ஒரே பாவத்திற்காக அம்மாவுக்கு படுதோல்வியை கொடுத்தனர். அது சரி, கருணா அதே 96 தேர்தலில் ஜெயித்தது எப்படி? புலி எதிர்ப்பை "கொஞ்சம் கூட்டி" கொண்டதினாலா?"
நிச்சயமாக கூத்து அவர்களே. கருணாநிதி வெளிப்படையாகப் புலிகளுக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். ஜயலலிதாவின் மற்ற எதிர்மறைச் செயல்களால் மக்களும் அவர் மேல் சலிப்பு கொண்டனர். மேலும் நான் கூறியதைப் போல அவர் புலி எதிர்ப்பும் நீர்த்துப் போனதாக மக்களுக்குப் பட்டது. எல்லாக் காரணிகளும் சேர்ந்துதான் கருணாவின் வெற்றிக்கு உதவின.
"அது துரதிஸ்டவசமான செயல் எனக் கூறவில்லை. “துன்பியல் சம்பவம்” என்றே கூறியுள்ளார். இரண்டு வார்தைகளுக்கிடையிலும் கருத்து வித்தியாசம் இருப்பதாகவே உணர்கிறேன். முன்னையது தானாக நடந்தது போன்ற தோற்றப்பாட்டைத் தருவிக்கும். பின்னையது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று பொருள்படும்."
நன்றி வசந்தன் அவர்களே. ராஜீவின் கொலைக்குப் புலிகள்தான் காரணம் என்று ஒத்துக் கொண்டதற்கு.
"அது நடந்திருக்காவிட்டால் இவ்வளவு காலத்துக்குள் இந்திய அரசாங்கம் என்ன செய்திருக்கும்? (தமிழக மக்களின் ஆதரவை இழந்திருக்க மாட்டோம் என்பதுமட்டும் உண்மை). "
இதுதான் உங்கள் மாவீரனின் போர் யுக்தித் திறன்!
சஜீ அவர்கள் வலைப்பதிவில் நான் கொடுத்தப் பின்னூட்டத்தை இங்கு அளிக்கிறேன். ஏதாவது பதில் கூற இயலுமா என்பதைப் பாருங்கள். இப்பின்னூட்டம் சஜீயின் "பாராட்டுக்கள் செல்வி ஜெயலலிதா" என்றப் பதிவுக்குக் கொடுக்கப்பட்டது.
"சந்தடி சாக்கில் புலிகளை நல்லவர்களாக்கினால் எப்படி? பிரபாகரன் மட்டும் ராஜீவின் கொலைக்கானத் தண்டனையிலிருந்து அப்பாற்பட்டவரா? "அது துரதிர்ஷ்டவசமானது" என்று கூறி விட்டால் அவர் உத்தமர் ஆகி விடுவாரா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் புலிகள் என்பதுதானே நிஜம்? தன்னை சந்திக்க வந்த புலிகளைச் சோதனையிட வேண்டாமென பெருந்தன்மையாகக் கூறிய தர்மலிங்கத்தை அதே புலிகள் அதே சந்தர்பத்தில் போட்டுத் தள்ளவில்லையா? அவர்கள் நம்பிக்கைத் துரோகிகள் இல்லையா?"
அதன் உரல் இதோ.
http://sajee.yarl.net/archives/002187.php
1980-களில் புலிகளின் செயல்பாட்டால் அவர்கள் ஆதரவு தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்தது என்று நான் கூறியது போராளிகளுக்குள் இருக்கும் சண்டைகளை தமிழகத்திலேயே தெருக்களில் நடத்தியது பற்றித்தான். ஆதரவு கேட்டு வந்த இடத்தில் கையைக் காலை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஆட்டம் போட்டால் இதுதான் கதி. அவர்கள் புகுத்திய துப்பாகிக் கலாசாரம், கள்ளக் கடத்தல்கள், கொலைகள் ஆகியவை எல்லோருக்கும் தெரிந்தவையே. ராஜீவின் கொலை எல்லாவற்றுக்கும் சிகரம். அது வரை புலிகளுக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுத்து அவர்கள் செயல்களுக்கு சப்பைகட்டு கட்டியவர்களின் ஆதரவையும் புலிகள் அப்போது அடியோடு இழந்தனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தர்மலிங்கம் or அமிர்தலிங்கம்?
அன்பின் ராகவன்.
ரோசா இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாத வரை அவரது வலைப்பதிவை விவாதத்திற்கு உபயோகிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.விரும்பினால் உங்கள் எண்ணங்களை ஓரிரு பதிவுகளாக உங்கள் வலைப்பதிவில் பதிவுசெய்யுங்கள்.உங்களை அங்கு சந்திக்கின்றேன்.
குழந்தை என்பதற்கும் சிறுவன் என்பதற்கும் பதினெட்டு வயது வராத இளைஞன் என்பதற்கும் உள்ள வித்தியாசங்களை இதே பதிவில் டி.ஜே விளக்கியுள்ளார்.குழந்தையால் போராட முடியுமா என்று எனது பின்னூட்டத்தில் விளக்கியுள்ளேன்.படித்துப் பார்த்துவிட்டு உங்கள் பதிலை தனியொரு பதிவாகப் பதியுங்கள்
என் கேள்விகள் சில:
தனிநாடு அமைவதை இந்தியா விரும்பியதா?
இப்போதும் விரும்புகிறதா?
ஆம் என்று சொன்னால் ஏன் விடுதலைப்போராட்டத்திற்குக் குறுக்கே நிற்க வேண்டும். (எந்தெந்த வழிகளில் என்று விளக்கமாக எழுதவில்லை. கேட்டால் எழுதுவேன்)
முன்னர் விரும்பியிருந்து இப்போது விரும்பவில்லை என்று சொன்னால் என்ன காரணம்? ராஜீவின் கொலையோடு மாறிவிட்டார்களா?
முன்னரும் விரும்பவில்லை என்று சொன்னால் பிறகேன் ஆயுதங்களும் பயிற்சிகளுமளித்துப் போராளிகளைப் போருக்குத் தயார் செய்தது?
வசந்தன்,
Srilankan Tamils என்பதை சிங்களத் தமிழர் என்று குறிப்பிட்டேன். அச்சொல்லாக்கம் தவறு என்பதை நான் அறியவில்லை! 'சிங்களம் வாழ் தமிழர்கள்' என்று எடுத்துக் கொள்ளுங்கள்!
என்றென்றும் அன்புடன்
பாலா
அனானிமஸ் 3, Said:
ரோசா வசந்த்! உங்களின் இந்த விவாத பதிவில் அனானிமஸ்-3 என்று நானே குறிப்பிட்டு எழுதிய கருத்து மட்டும்தான் என்னுடையது. அதுவும் நீங்கள் அனானிமஸ் முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால். மாறாக நீங்கள் இடியாப்ப சிக்கலையும் சொதியும் ஏற்படுத்திய
http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_21.html#110653171810787308
கருத்துக்குறிய அனானிமஸ் நான் அல்ல. நேற்று உங்கள் பதிவை பார்க்காததால் உடனே மறுப்பு தர இயலாமல் போய்விட்டது.
"அனானிமஸ் 3தானே" என்று நீங்களே கற்பனை செய்வதை தவிர்த்துவிட்டு, அந்த அனானிமஸ் சொன்ன வார்த்தையை போட்டு பதில்கொடுத்திருந்தால் நீங்கள் யாருக்கு இடியாப்ப பதிலை தந்தீர்கள் என்பது புரியும். இல்லையேல் என்னுடைய கருத்துகளும் அடிப்பட்டு போய்விடும். நகைச்சுவை எதுவும் எனது கருத்துக்களில் இல்லை.
நான் தந்த இரண்டு கருத்துக்கள்:
http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_21.html#110641877654150454
http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_21.html#110647254063980262
உங்களின் பதிவில் எனக்கு தெரிந்து இரண்டு முக்கிய விவாதம் நடந்துள்ளது. ஒன்று ஜெயமோகனின் கட்டுரை பற்றியது மற்றொன்று இதுவாகும். இவைகளை லிங்க் பகுதியில் நிரந்தரமாக இணைத்து தந்தால் பிறகு பயனுள்ளதாக இருக்கும். இல்லையேல் நீங்களே தேடக்கூடிய நிலையும் வரும்.
அன்புடன்
அனானிமஸ் 3.
அன்பின் பாலா!
நான் சொல்வதைத் தயவுசெய்து தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். உங்கள் சொற் பாவனை பொருத்தமுடையதன்று. சிங்களம் என்பது ஒரு மொழி. சிங்களவர் என்பவர்கள் அம்மொழியைப் பேசும் மக்கள், (தமிழர் போல). சிங்களம் என்று ஓர் இடமோ நாடோ இல்லை. சிறிலங்கா தான் நாடு. நீங்கள் சிறிலங்காவைத்தான் சிங்களம் என்று நினைத்து எழுதுகிறீர்கள் போலுள்ளது. திருப்பி எழுதிய பதிவிலும் 'சிங்களம் வாழ் தமிழர்கள்' என்று எழுதியுள்ளீர்கள். எனக்கு விளங்குகிறது உங்கள் பிரச்சினை. இதை உங்களுக்கு ஒரு தகவலாகவே தருகிறேன். இலங்கை வாழ் தமிழர்கள் அல்லது சிறிலங்கா வாழ் தமிழர்கள் என்று குறிப்பிடலாம்.
என்றென்றும் அன்புடன்.
வசந்தன்.
வசந்தன் அவர்களே:
நான் சாதாரண இந்தியக் குடிமகன். ராஜரீகக் காரணங்களை நேரில் அறிய மாட்டேன். ஆகவே உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் அதிகார பூர்வமான பதில் இல்லை. என் அறிவுக்கு எட்டிய வரை புலிகள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல. அவர்களுடன் எந்த சகவாசமும் இந்தியர்களுக்கு நல்லது அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
இங்குவந்து நான் பின்னூட்டங்கள் இட அனுமதித்த ரோஸா வசந்துக்கு நன்றி. எது எப்படியானாலும் கீழ்க் கண்டவைகளை மறுக்க ஒருவராலும் இயலவில்லை:
1. பிரபாகரன் மற்றவர்களை ஆபத்தை எதிர் நோக்கச் செய்து (முக்கியமாகச் சிறுவயதுப் போராளிகள்) தான், தன் பிள்ளைகள், பெற்றோர் ஆகியோர் பத்திரமாக இருக்கச் செய்து வருகிறார்.
2. ராஜீவ் காந்தியைக் கொலை செய்வித்து புலிகளுக்கானத் தமிழக மக்களின் ஆதரவை ஒரே வீச்சில் இழக்கச் செய்து தன் போர் யுக்தித் திறமையின்மையைக் காட்டிக் கொண்டார்.
3. அமிர்தலிங்கத்தை நம்பிக்கைத் துரோக முறையில் கொலை செய்வித்து, தான் நம்பத் தகாதவர் என்பதை மறுபடிக் காட்டிக் கொண்டவர்.
இந்த அழகில் இவர் மாவீரன். சிரிப்புத்தான் வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Vasanthan,
I committed a mistake. Thanks for pointing it out and correcting me! I got a bit confused :-)
enRenRum anbudan,
BALA
டோண்டு: மனிதர்களின்/மிருகங்களின் உடலும் வாலும் இரண்டு வகையில் ஆடும். தலை பிறப்பிக்கும் கட்டளைகளைக் கொண்டு ஆடுவது, தலை துண்டிக்கப்பட்டால் தாறுமாறாக ஆடுவது. தலை துண்டிக்கப்பட்டுத் தாறுமாறாக ஆடவேண்டுமென்பதுபோலிருக்கிறது நீங்கள் எழுதுவது. இது எந்தத் 'தலை'க்கும் பொருந்தும். நமது இந்தியத் 'தலை'கள் உட்பட. ஏன், நீங்களோ நானோ ஒரு குழுத்தலைவராக இருந்தால், உங்களுக்கும் எனக்கும்கூட பொருந்தும்.
டோண்டு:
யாருக்கு நம்பத்தகுந்தவர்களில்லை எனவும் கூறிவிட்டீர்கள். நன்றி. நம்புவதற்கும் இலட்சம் பேர் இருக்கிறார்கள்.
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளீர்கள். நான் கேட்ட வினாக்களுக்கும் உங்களால் பதில்கூற முடியவில்லை எனக் கூறியுள்ளீர்கள். இருவருமே தெரிந்தும் கூற விரும்பவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
உங்களை மடக்கவேண்டுமென்று நான் இக்கேள்விகளைக் கேட்கவில்லை. இந்தியா ஆரம்பத்தில் ஆதரித்தது (ஆதரித்தது என்பதன் அர்த்தம் மனப்பூர்வமாக எனக்கொள்க) என்று இன்றும் சொல்லிக் கொள்பவர்களிடம் நான் கேட்கும் கேள்விகள் தான் அவை. இந்தியா அக்காலத்தில் விடுதலைப்புலிகளைப் பற்றி ஓரளவு சரியாகவே கணித்திருந்தது என்றே கூறுவேன். விடுதலைப்புலிகளைத் தவிர்த்து ஏனைய இயக்கங்களைத்தான் இந்தியா முதலில் அழைத்தது. எம்.ஜி.ஆர். உட்பட பலரின் முயற்சியாலும் வற்புறுத்தலாலும் தான் அவர்களையும் இணைத்துக் கொண்டது அனைவரும் அறிந்ததே. கொடுக்கப்பட்ட ஆயுதங்களில் கூட பாரபட்சம் இருந்தது. (இ.பி.ஆர்.எல்.எப். இடம் மட்டுமே மோட்டர் சுடுகலன்கள் கையளிக்கப்பட்டிருந்தது.) இந்திய நிலைப்பாடு என்று நான் சொல்வது இந்தியத் தமிழர்களிற் பெரும்பாலானவர்களின் நிலைப்பாட்டை நிராகரித்து அன்று. அக்காலத்தில் நான் தமிழகத்தில் தான் இருந்தேன். சரி அவற்றை விடுவோம்.
உங்கள் இரண்டாவது கேள்வி அக்கொலை சரியா தவறா எனக்கேட்காமல் (உங்களால் கேட்கமுடியாமலும் போயிருக்கலாம்) யுக்தித் திறமையா இல்லையா என்பதாக அமைவது எனக்குச்சாதகமே. இக்கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க விரும்பவில்லை. ஒரே விடயம் அவரவர் பார்வையில் வேறுபடும். உங்கள் பார்வையில் அது திறமையின்மை. இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் இனத்தை நான் பிரதிநிதித்துவப் படுத்தவில்லையாதலால் (நான் என் குடும்பத்தைக்கூட பிரதிநிதித்துவப்படுத்தாதவன்) தனியே என் உணர்வு அடிப்படையிலேயே சிந்திப்பவனாகையால் என் பார்வை உங்களிலிருந்து வேறுபடும். (போட்டுத்தாக்க பலர் கொடுக்குக் கட்டுவது தெரிகிறது)
மூன்றாவது கேள்வி, அப்படித்தான் நடந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. நடந்திருந்தால் என்பதன் மூலம் நான் சடைகிறேன் என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். அது பற்றி மாறுபாடான கதைகளுண்டு. தினமுரசு பத்திரிகையில் (இது புலிகளைத் தீவிரமாக விமர்சித்துக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தாவின் இ.பி.டி.பி. இன் பத்திரிகை) அற்புதன் எழுதிய அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் சற்று மாறுபாடான கதை சொல்லப்பட்டது. (கொலையாளிகள் மாறவில்லை. அது விசு உட்பட அதே நபர்கள் தான்). ராஜினி திரணகம வின் கொலை கூட விடுதலைப்புலிகள் அல்லாத வேறு சக்திகள் சம்பத்தப்பட்டதாகத் தான் எழுதப்பட்டது. இது சம்பந்தமாக சரியான தகவல்கள் தெரியாததால் தான் அப்படி எழுதினேன்.
உங்கள் முதலாவது கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அதை ஒரு விமர்சனமாகக் கூடப் பார்க்கவில்லை. இது வழமையாக புலியெதிர்ப்பபை மட்டுமே குறியாகக் கொண்டவர்களின் கதை. குழந்தைப் போராளிகள் பற்றிக் கேட்பது ஆக்கபூர்வமானது. ஆனால் இது…? பதிலெழுதப் புறப்பட்டால் பலரை நாறடிக்க வேண்டிவரும். ஒன்று சொல்லட்டுமா..வன்னியில் இருக்கும் அனைவருக்குமே சாவுக்கான வீதம் ஏறத்தாள ஒரேயளவுதான். பெரியளவில் வித்தியாசப்படாது. இப்பதிவிற்கான பின்னூட்டத்தில் நீங்கள் முதலில் கேட்ட கேள்வியிலேயே தெரிந்தது, நீங்கள் யாரென்பதும் உங்கள் அசைக்கமுடியாத நிலைப்பாடு என்னவென்பதும். இப்போராட்டம், பிரபாகரன் தனியே தனக்காகவோ தன் குடும்பத்துக்காகவோ நடத்தும் போராட்டமன்று. அப்படிச்சொல்பவர்களில் நீங்கள் இருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
பிரபாகரனின் பெற்றோருக்கும் அவருக்கும் இருக்கும் உறவு பற்றி பலர் எழுதியாயிற்று. (அனிதா பிரதாப் முதல் நாராயண்சாமி வரை) பதினைந்து வயதிலேயே “என்னை என்வழியில் விட்டு விடுங்கள்" என்றுவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டவர் தான் அவர். தன் குடும்பத்துடன் தானிருந்த புகைப்படங்களைக்கூட எரித்து அழித்துவிட்டுப் புறப்பட்டவர். அதன் பின் அவர்கள் தாய்- தந்தை- மகனாக வாழவில்லை. நீண்ட காலம் இந்தியாவிலேயே இருந்தார்கள். இப்போது இந்தியாவில் தானா என்று யாராவது சொல்லுங்கள். ஏனென்றால் அவர்கள் வன்னிக்கு வரப்போகிறார்கள் என்று செய்திகள் அடிபட்டது. இலங்கை வானொலி கூட (சண்டை நிறுத்தக் காலத்தில்) இரண்டு வேறு வேறு நாட்களில் அவர்கள் கட்டுநாயக்காவில் வந்து இறங்கி விட்டதாகவும் வன்னி சென்றதாகவும் (வழமையான முறையில்) செய்தி வெளியிட்டது. ஆனால் அப்போது அவர்கள் இந்தியாவில்தான் இருந்தார்கள்.
“மாவீரன்” என்ற சொல்லை அடிக்கடிப் பாவிக்கிறீர்கள். இங்கே அந்தச் சொல்லுக்கான அர்த்தம் வேறு. அதாவது போரில் வீரச்சாவடைந்த (இச்சொற்பதம் உங்களுக்கு எரிச்சலைத்தரும் என்பது தெரியும். ஆனால் இதுவும் களத்திலே சாகிறவர்களைக் குறிக்கவென வரையறுக்கப்பட்டது.) போராளிகளைக் குறிப்பது.
இல்லை அதற்கு வழமையாக இருக்கும் அர்த்தத்தில் தான் சொல்கிறீர்களென்றால், எனக்கும் சிரிப்பு வருகிறது உங்களுக்குச் சிரிப்பு வருவதையிட்டு.
Post a Comment
<< Home