ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Wednesday, January 12, 2005காணாமல் போன சென்ற பதிவு.ஏன் பதிவுகள் காணாமல் போகின்றன என்று புரியவில்லை. இது மூன்றாவது முறை. வேறு சிலரும் இந்த பிரச்சனை குறித்து எழுதியுள்ளனர். பொதுவாய் எழுதிய உடனே காணாமல் போகும். இந்த முறை ஒரு நாள் கழித்து மறைந்துவிட்டது. யாருக்காவது என்ன செய்யலாம் என்று தோன்றினால் விளக்கவும். சென்ற பதிவையே மீண்டும் கீழே சில மாற்றங்களுடன் கீழே தருகிறேன். ட்சுனாமி மீட்பு பணி ஒருங்கிணைப்பு வலைப்பதிவும், அது குறித்த வேண்டுகோளும்! நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம். ட்சுனாமி பேரழிவால் பாதிக்க பட்டவர்கள் மீட்பு பணி குறித்து விவாதிக்க இந்த பதிவை தொடங்கியுள்ளோம். இதை ஒரு கூட்டு முயற்சியாக கொண்டு செல்வதே எங்கள் எண்ணம். தமிழ் வலைப்பதிவுகளில் அவ்யப்போது மீட்பு பணிகள் குறித்து பல விஷயங்கள் எழுதபட்டுள்ளன. அவற்றை ஒரு முறையான வகையில் ஒழுங்கு செய்து, வாசகர்களின் பார்வைக்கு வைப்பதே இதன் நோக்கம். இதில் பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். என்ன வகையான கருத்துக்களை வேண்டுமானாலும் இங்கே எழுதலாம். அறிவிப்புகளை இடலாம். வேண்டுகோள்களை முன் வைக்கலாம். அவையனைத்திற்கும் ஏதாவது ஒரு விதத்தில் ட்சுனாமி மீட்பு பணிகளுடன் தொடர்பு இருத்தல் இன்றியமையாதது, என்பதை தவிர வேறு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எந்த வகையான அரசியல் பேசுவதையும் தவிர்க்கவேண்டும், என்று சொன்னாலும், மீட்பு பணிகள் மற்றும் பிரச்னைகளை புரிந்து கொள்ளும் வண்ணம் தொடர்புள்ள அரசியலை பேசலாம். குறிப்பாய் சில உதவிகள், உரிய மக்களுக்கு போய் சேராததன் அரசியலை பேசலாம். வேறு ஒரு உதாரணமாய், அருள்குமரன் ஏற்பாடு செய்த அரட்டையில், மீனவர்கள் மீண்டும் கடற்கரையோரமாகவே குடிசைகள் அமைப்பது, சமூக சூழல் மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறை காரணமாய் அது தவிர்க்க முடியாமல் போவது குறித்து பேசபட்டது. இது போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புள்ள சமூக அரசியலை பேசலாம். அப்படி செய்யும் போது பிரச்சனை எந்த விதத்திலும், தங்கள் சார்பு நிலைபாடுளால், திசை திரும்பி விடாத வண்ணம், அதன் அடிப்படை மீட்பு பணிகள் குறித்த கரிசனமாய் இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டியது அவசியம். இது தொடர்பான பழைய பதிவுகளை, அதன் முக்கியத்துவம் சார்ந்து, அவ்யப்போது நான் (ரோ.வ.) இங்கே இடுவேன். ஆனால் பொதுவாய் மீட்புபணிகள் குறித்து பேச நான் தகுதியில்லாதவனாகவே இருக்கிறேன். பிரச்சனையோடு நேரடி தொடர்பில்லாதவனாய், எல்லாவற்றையும் செய்திகளாய் கேட்கும் நிலையிலேயே நான் இருக்கிறேன். ஆகையால் பிரச்சனையோடு எதாவது ஒரு வகையில் தொடர்புள்ள அனைவரும், தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுகொள்கிறேன். பங்களிக்க விரும்புபவர்கள், தங்கள் மின்னஞ்சல் முகவரியையும், பெயரையும் என் வலைப்பதிவிலோ, நரைனின் வலைப்பதிவிலோ அல்லது இங்கேயோ பின்னூட்டமாய் விட்டு செல்லவும். மின்னஞ்சலாய் rksvasanth@yahoo.com அல்லது narain@gmail.com என்ற முகவரிக்கும் எழுதலாம். வலைபதிவதற்கான அழைப்பு, அல்லது கடவுசொல் கொடுக்கப்படும். பொதுவாய் இங்கே வலைப்பதிவிலோ அல்லது மற்ற இணைய பத்திரிகைகள் மூலம் அறிமுகமானவராக இருப்பது நல்லது. வலைபதிய விரும்பாதவர்கள், எழுத விரும்பும் விஷயத்தை என் முகவரிக்கு எழுதினாலும், அதை என்னால் பதிவு செய்ய முடியும். இப்போது பத்ரி, ரஜினி ராம்கி, கார்த்திக், மாலன், பெயரிலி ஆகியோர் உறுப்பினராகியுள்ளனர். இன்னும் சிலருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. வாருங்கள் நண்பர்களே! இதை ஒரு கூட்டுமுயற்சியாய் கொண்டு செல்வோம். உங்களால் சாத்தியமான எல்லாவகை பங்களிப்பையும் தாருங்கள். எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு பயன் இருக்கும். நன்றி! அன்புள்ள ரோஸாவசந்த் மற்றும் நரைன். |
20 Comments:
என்ன நடக்கிறது என்று ஒரு எழவும் புரியவில்லை. http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_11.html போய் பார்த்தால் பதிவு இருக்கிறது. http://rozavasanth.blogspot.com/ போய் பார்த்தால் காணும். Bளாகர் கணக்கினுள் நுழந்து உள்ளே பார்த்தாலும் காணும். என்ன கதையிது?
/ஏன் பதிவுகள் காணாமல் போகின்றன என்று புரியவில்லை. இது மூன்றாவது முறை./
ஜெயிலிலே இருந்து வெளியே வந்த மௌனச்சாமி "ஓட்டப்பம் வீட்டைச்சுடட்டும்; நெட்டுலே என்னைத் திட்டினவன் லாக் லாஸ்டாப்பாகட்டும்" என்றேதும் சாபம் தீயாகப் போட்டிருக்கிறாரோ தெரியவில்லை. அடுத்தமுறை சின்னச்சாமியைத் திட்டமுன்னாலேயாச்சும் கவனமாக இரும்; திரும்ப சுனாமியை ஸ்வாமி உம்மோட வலைப்பதிவை அள்ளிக்கொண்டுபோல அனுப்பப்போகிறார்.:-)
பதிவு ஸ¥க்கும ஸரீரம்விட்டு,ஸ்தூல ஆத்மாவாக உட்பதிந்துதான் போயிருக்கிறதேயழிய, அழிந்துபோகவில்லை; வலைப்பதிவுக்கு அழிவில்லை;கொஞ்சம் பார்த்துத் தேடினால், கச்சே ஏகம்பன் காட்டுவான். இது blogger இலே அறியப்பட்ட சிக்கல். தலைப்பினை ஆங்கிலத்திலே போட்டுப்பாரும் அல்லது" தொடக்கம் ~ வரையான புறச்சின்னங்களை வலைப்பதிவு நெத்தியிலே விலத்திப்பாரும். தொலைகின்ற சாத்தியங்கள் குறைவாகலாம். எதுக்கும் போட்ட பதிவின் சரியானபூர்வஜென்ம முகவரியையும் குறித்துக்கொள்ளும். பதிவுச்சாமிநிலை தொலைந்துபோனால், பூர்வஜென்ம முகவரியூடாக மீட்டுக்கொள்ள உதவும். :-)
பெயரிலி எடுக்கும் அவதாரங்களில் கிருஷ்ணாவதாரமும் ஒன்று என அறிந்தேன். புதிய கீதை கேட்டு தெளிந்தேன். அப்படியே விடும், விஸ்வரூபம் எதும் எடுக்காதயும்!
(நன்றி!)
Dear rosavasanth,
Greetings. It happened to me also lot of times. Avoid long subjects...thats the main reason. Regards,Arun Vaidyanathan
Dear Arun, Thanks for your comment and suggestion/
anbuLLa vasanth
1.வலைக்குறிப்புக்கள் காணாமல் போகும் வேதனையை நானும் வெகுவாக அனுபவிக்கிறேன்.
2.எல்லோருமாக சேர்ந்து ப்ளாக்கருக்கு மணி கட்டினால் ஏதாவது நடக்கக்கூடும்.
3. கூகிள் அல்லது ப்ளாகருக்கு நெருக்கமானவர்கள் யாராவது எமது சமுதாயத்தில் இருக்கிறீர்களா?
4.பதிவுகளை republish செய்யும்போது, எவ்வெவ் கோப்புகள் பிரசுரிக்கப்படுகிறது என்ற பட்டியலை ப்ளாகர் சாளரத்தில் இப்போது பார்க்கலாம்.
5. பதிவுகள் எங்கேயோ, ததற்குரிய முகவரியோடு இருக்கிறது என்ற நம்பிக்கையில் அண்மையில் மண் விழுந்தது.
என் பதிவொன்றின் முகவரி மின்னஞ்சலில் பத்திரமாக இருந்தது. ஆனால் அம்முகவரியில் அதற்குரிய வலைப்பக்கம் இல்லை.
யாராவது கூகிள் தாத்தாவுக்கு இது பற்றி முறையிடுங்களேன்?
இது பெரியச்சாமி சின்னசாமி பிரச்சினை என்று பெயரிலி சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அப்படி என்றால் என் சுனாமி க(டி)வதை எப்படி காணமல் போயிற்று என்று விளக்குவாரா? ;-) இப்படி எதிர் வினை வைத்தால் ஓடி ஒளிந்து கொள்வாரா? :)
யோவ் , போஸ்ட் காணாமப் போச்சு; கழிஞ்சுகிட்டே கிட்டே போச்சுன்னு ஒரு போஸ்ட் அதுக்கு 78 பின்னூட்டம் வேறயா! போங்கையா நீங்களும் உங்க ப்ளாக்கும் :)
//யோவ் , போஸ்ட் காணாமப் போச்சு; கழிஞ்சுகிட்டே கிட்டே போச்சுன்னு ஒரு போஸ்ட் அதுக்கு 78 பின்னூட்டம் வேறயா! //
79வதா விட வெக்கமா இல்ல!
அதென்ன 78, ரவுண்டப் பண்ணகூடாது!
என்னைப்பொறுத்தவரை இது ஏதோ ஒரு லோக்கல் மாபியா வேலையாக இருக்கும். பில்லி சூனியமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. வாய்ப்பில்லாமலும் இருக்கும். நாளை வாய்ப்பு வந்தாலும் வரலாம் . வராமலும் போகலாம். எல்லோருக்கும் அவரவர் போஸ்ட் காணமல் போகுவது ஒரு சம உரிமை, இதெயெல்லாம் வைத்து பிசாசு/முனி/சனி தின்னும் அரசியல் பேசக்கூடாது.
எல்லாத்துக்கும் மேல இது என் கருத்து; அப்பறம் பட்டைய கிளப்பிடுவேன் :))
78 என்று சொல்வது என் பிறப்புரிமை; எங்கள் தாத்தா காலத்திலிருந்து 78 -ஐத்தான் நாங்கள் உபயோகிக்கிறோம். 79 -உபயோகிப்பது உங்கள் உரிமை; அதை யார் கேட்கப்போகிறார்கள்; உபயோகித்துக் கொள்ளுங்களேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். மற்றவர்கள் நாளை ,
80 81 82.. என்று வரிசையாய் உபயோகிக்க கேட்பார்கள் என்ன ப்தில் சொல்லப்போகிறீர்கள்!
தலைவா, நீ பெரிய ஆள்தான். ஆனா இதெல்லாம் பேசத்தானே நத்திங் பட் Bளாக்ஸ்ன்னு, ஒரு பேட்டைகிது. அத்த வுட்டுனு ஏன் இங்க வந்து சத்தாய்ச்சுனுக்கிர!
எனிவே கமெண்டுக்கு தேங்க்ஸ்பா!
மயூரன், பின்னூட்டதிற்கு நன்றி. இலங்கையிலிருந்து எப்போது வந்தீர்கள்? )அல்லது அங்கேதான் இருக்கிறீர்களா?)
:D :D
78கமெண்ட்ல 70 கமெண்டு இந்தாளு, மீதி 7 நான்
பின்னூட்டங்கள் எழுதியதன் அடிப்படை (ப்ளாட்) புரியாமல் போனால் வம்பில் மாட்டிக்கொள்வேன் எனபதால் அதையும் இங்கே சொல்லி விடுகிறேன். இப்பெல்லாம் வலப்பதிவு/பின்னூட்ட சண்டை/விவாதம் நடக்கும் போது அடிக்கடி சொல்லப்படும் வரிகள் இது போல இருக்கும் என்பது போல் எழுதியுள்ளேன். பெயரிலி சண்டைக்கு வருவதற்குள் விடுகிறேன் ஜூட்.
இருந்தாலும் அந்த 78 வது கமண்ட் யார் எழுதுனது? :)
சண்டையில் தலைகாணாமற் போனவனே சும்மாயிருக்கிறான் பதிவு காணாமற் போனதுக்கு இந்த அழுகையா?மயூரன் திருகோனமலை போவதாகச் சொல்லியிருந்தார் இப்போது கொழும்பு வந்திருப்பார் என நினைக்கிறேன்.அவரிடம் ஏதாவது கேட்டு கூட்டுப்பதிவில் போடலாமென்றால் தொலைபேசியில் ஆளைப்பிடிக்க முடியவில்லை.
அந்த 78 பின்னூட்டக்காரருக்கு சு.வ பதிவுகள் நினைவிருக்கிறதா என்று கேளுங்கள்
ஈழநாதனே, இதென்ன ஈழத்து குசும்பா? பதிவுகள் காணாமல் போனதற்கு நான் அழுதேனா?
மயூரன் தொடர்ந்து வரட்டும், அந்த வலைப்பதிவில் பங்கு கொள்ள அவருக்கு அழைப்பு விடுகிறேன்.
நீங்களும் அழைக்கலாம்!
நன்றி ஐயா நன்றி....!
கூட்டு வலைப்பதிவினை தவறாமல் பார்த்துவருகிறேன்.
அதற்கு என்னால் எந்தவிதத்தில் பங்களிப்பு செய்ய முடியும் என்று தெரியவில்லை.
நான் கொழும்பில்தான் இருக்கிறேன்.
திருக்கோணமலைக்கு போய்வந்தேன்.
மூதூர், கிண்ணியா பிரதேசங்களுக்கு போகக்கூடியதாக இருந்தது.
பெரிய அவலம்.
இப்போது அவலம் "பழகிப்போய்விட்டது"
சுனாமி சுனாமி என்று தொலைக்காட்சி வானொலியெல்லாம் பாடுப்போடவும் தொடங்கிவிட்டார்கள்.
திருக்கோணமலையில் இடம்பெறும் நிவாரணப்பணிகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட வலைத்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
ஆகக்குறைந்தது ஒரு வலைக்குறிப்பாவது உடனடியாக வரும்.
பெயரிலியின் சகோதரர் இதற்கான பங்கெடுப்பினை பெரியளவில் செய்துகொண்டிருக்கீறார்
என் தொலைபேசிக்கு அழைக்க முடியவில்லையா?
இரண்டு மூன்று முறைகள் முயற்சித்துப்பாருன்கள்.
புதிய வலையமைப்பு.
அதுதான் மக்கர்பண்ணுது
நன்றி மயூரன், உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ, முடிகிறதோ, அப்போது எழுதுங்கள். இங்கே எழுதுவது அத்தனை முக்கியமில்லை. அதைவிட நீங்கள் ஈடுபட்டிருக்கும் பணியே முக்கியமானது. எழுத முடிவெடுத்த பின் எதை பற்றி வேண்டுமானலும் (மீட்பு பணி தொடர்பாக) எழுதுங்கள்! நன்றி!
Post a Comment
<< Home