ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, December 27, 2004



உண்மையில் எதையுமே சொல்ல தோன்றவில்லை. எதை எழுத நினைத்தாலும் போலியாக இருப்பது போல் ஒரு சந்தேகம் வருகிறது. மீண்டும் மீண்டும், குறிப்பாக படங்களை பார்கும்போது தொண்டை அடைக்கிறது. இதில் பலவற்றை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கும்போது கோபம் வருகிறது. இந்திய பொறுப்பின்மைதனம் கொஞ்சம் என்னில் இருப்பதுவும், நானும் ஏதோ வகையில் காரணமாய் இருப்பதையும் எங்கோ ஒரு நாட்டில் துரும்பை கூட எடுத்து போடாமல் உட்கார்ந்து நினைக்கும்போது கோபப்பட கூட வெட்கமாயிருக்கிறது. எத்தனை பெரிய பேரழிவு தாக்கினாலும், இங்கே ஜப்பானில் சாவு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தாண்டுவதில்லை. இங்கே அரசு இயந்திரங்களால் எடுக்கபடும் துரிதமான மீட்பு பணிகளை நினைக்கையில் ரொம்பவே ஏக்கமாய் இருக்கிறது. இதற்கு, பேரழிவை எதிர்பார்த்து அதற்குரிய அறிவுடன் தயாராய் இருப்பதுவும், ஒரு முன்னேறிய நாடாய் இருப்பதுவும் மட்டும் காரணமாய் தோன்றவில்லை. ஒவ்வொரு உயிருக்கும் தரப்படும் மரியாதையே அந்த நடவடிக்கைகளின் துரிதத்திற்கு பின் இருப்பதாக தெரிகிறது. செய்திகளை தொடர்கையில், முதலில் எரிச்ச்லாய் இருந்தாலும், எனக்கென்னவோ இந்த முறை (தமிழகத்தில்) ஓரளவு பொறுப்புடன் நடந்துகொண்டதாகவே தெரிகிறது - குறிப்பாய் மகாராஷ்டிரா, குஜராத் பூகம்பம், ஒரிசா புயல் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் . முக்கியமாய் மேற்சொன்னவைகளில் வெளிபட்ட பாகுபாட்டு மனப்பான்மை, அவ்வளவு துரம் வெளியில் தெரியும் வகைகளில் நடந்ததாக கேள்விபடவில்லை.

பூகம்பம் குறித்து எந்த விதத்திலும் முன்னெச்சரிக்கை பெறமுடியாது. இன்னமும் அறிவியலால் ஒரு புயல்போல், அனுமானிக்க முடியாததாகவே இருக்கிறது. ஆனால் பூகம்பத்தை, தொடர்ந்த கடல் கொந்தளிப்பை ஊகித்து, ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பாவது கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை இந்த எதிர்பார்ப்பு கூட அதிகமோ தெரியவில்லை. வாசித்தவரையில் இந்த செய்தி மட்டுமே நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

இப்போதய தேவை நேரடியாய் மீட்புபணியில் அர்பணித்து கொள்ளும் வாலண்டியர்ஸ்தான். நிச்சயமாய் நான் வேலையை துறந்து இந்தியா போய் ஈடுபடும் அளவிற்கு சுயநலமில்லாதவன் இல்லை. இந்நிலையில் நிதிரீதியாக உதவுவதே என்னை போன்றவர்களால் இயலகூடிய ஒன்று. நிச்சயமாய் அரசின் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. இதிலெல்லாமா ஊழல் செய்வார்கள் என்று அப்பாவியாய் சிலர் கேட்கிறார்கள். தங்கள் அரசியல் நலத்திற்காக இந்த அளவிற்கு ஒரு பேரழிவை உருவாக்க கூட தயங்க மாட்டார்கள் நம்ம ஊர் அரசியல்வதிகள், ஊழல் செய்வது பற்றியா சொல்லவேண்டும்! வேறு வழியில்லை எனில் பிரதமர் நிவாரண நிதி போன்றவற்றிற்கு அளிக்கலாம். மற்றவகையில் அர்பணிப்புடன் நேரடியாய் மீட்புபணியில் ஈடுபடும் அரசு சாராதவர்களுக்கு அளிப்பதே விவேகமானது என்று தோன்றுகிறது. எனது பழைய நண்பர்கள் யாரிடமும் தொடர்பில்லை. பத்ரி போன்றவர்களிடம் கேட்டிருக்கிறேன். பதில் வரவில்லையெனில் ஓரிரு
நாட்களில், முயற்சி செய்து நம்பகமான சிலர் குறித்து இங்கே அறிய தருகிறேன்.

தமிழகத்தை (அந்தமான் நிகோபாரை சேர்த்து இந்தியாவை) விட இலங்கையில் இன்னும் பல மடங்கு அழிவு அதிகம். அங்கே பிரச்சனை இன்னொரு பரிமாணத்தில் வேறு இருக்கிறது. மோசமாய் பாதிப்படைந்த பல இடங்கள் புலிகளின் கட்டுபாட்டில் இருக்கின்றன. பல நாடுகள் -குறிப்பாக இந்தியா- ஒரு லெஜிடிமைஸ்ட் அரசாங்கமாக கருதபடும் இலங்கை அரசாங்கத்திடமே நிதி மற்றும் மீட்புபணிக்கான உதவிகளை அளிக்கும். ஏற்கனவே இனப்பகை கொண்டிருக்கும் ஒரு அரசு, கூடிய அளவிலாவது பாகுபாடில்லாமல் நடந்துகொள்ளும் என்று தோன்றவில்லை. அப்படி நம்ப காரணங்களோ மூன்னுதாரணங்களோ இல்லை. இந்நிலையில் புலிகளின் வசம் உள்ள ஈழதமிழ் இடங்களின் மீட்பு பணிகளே முதன்மை கரிசனதிற்கு உரியன. அதற்கு இலங்கை அரசு சக்திகளிடம் நம் உதவிகளை கையளிக்காமல் வேறு வழிகளில் -புலிகள் சார்பு சக்திகளிடம் -போய்சேருமாறு பார்த்துகொள்ள வேண்டியது அவசியம். இது குறித்து ஈழநாதன் எழுதியுள்ளார். இந்நிலை பெருமளவில் தொடரும் படசத்தில், அதை ஒரு பிரசாரமாய் உலக அளவில் கொண்டு செல்வது அவசியம்.

ஈழநாதனின் இன்னொரு பதிவு.

கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவுங்கள்.

Humanitarian Disaster in Sri Lanka - தமிழோசை.

Tsunami Relief- Google

மா.லே. இயக்கங்களுடன் தொடர்புடைய, பல களப்பணிகளில் நேரடியாய் ஈடுப்பாடுடைய நண்பர் மதிவண்ணனின் கட்டுரை. கட்டுரை பல தார்மீக கேள்விகளை உணர்சிபூர்வமாய் கேட்டுசெல்கிறது.

பத்ரியின் வலையிலிருந்து,

"நான் சென்னையில் கருணாலயா எனும் NGO வழியாகத்தான் உதவி செய்கிறேன்.அவர்களுடைய வங்கிக் கணக்கு எண் கேட்டிருக்கிறேன். வந்ததும் தகவல் தருகிறேன்.சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 7,500 குடிசைகள் நாசமானதில் அங்கு வசிப்பவர்கள் அனைவரும் இப்பொழுது தெருவில். அவர்களில் கிட்டத்தட்ட 2250 பேர்களுக்கு கருணாலயா உணவு வசதிகளைச் செய்து தருகிறது. மேலும் அவர்களிடம் உடுத்த வேறு எந்த துணியுமில்லை. வசிக்க சரியான ஷெல்டர் கிடையாது. மார்கழிக் குளிரில் இரவு திண்டாடப் போகிறார்கள்.இந்த 2250 பேர்களுக்கு மட்டும் ஒருநாள் உணவுக்கு ரூ. 5,000 தேவைப்படுகிறது. மேற்கொண்டு தகவல்கள் நாளை கொடுக்கிறேன்.உங்கள் உறவினர்கள் யாரேனும் சென்னையில் இருந்தால், அவர்கள் பழைய துணிகள் - புடைவை, சட்டை எதுவானாலும் அதுதான் இப்பொழுது அவசிய தேவை. என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். மேலும் வீட்டில் உபயோகிக்காத போர்வைகள் எது இருந்தாலும் கொடுக்கலாம். நான் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி எடுத்துக்கொள்ளச் சொல்கிறேன்.என்னை மின்னஞ்சலில், அல்லது 98840-66566 தொடர்பு கொள்ளலாம். அல்லது கருணாலயா தொண்டர் ஜெயராமன் என்பவரை 94442-29580 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்."

Folks in USA can donate thru AID India org. They are working with Tamil Nadu Science Foundation and their own volunteers. Please visit this page:http://www.aidindia.org/CMS/
Srikanth.

மேலே குறிப்பிட பட்டுள்ள Tamil Nadu Science Forum (not foundation) எந்த வித மனப்பிரச்சனையும் இல்லாமல் நம்பகூடிய இடம். அதன் தளத்தில் இல்லாத மற்ற விவரங்கள் (கேட்டு எழுதியிருக்கிறேன்) எனக்கு கிடைக்கும் பட்சத்தில் இங்கே தருகிறேன்.


The SEA-EAT blog for short. News and information about resources, aid, donations and volunteer efforts.


Some links and information regarding Tsunami Relief


Information needed on NGOs serving the fisherman community

South Indian Federation of Fishermen Societies (SIFFS)

ரஜினி ராம்கியின் வேண்டுகோள்.

An apeal ரஜினி ரசிகர்கள்.

Centers in Chennai and their contact numbers.

இலங்கையில் உதவ: பதிவுகள் செய்தி.

Urgent Humanitarian Relief Appeal byTRO Sri Lanka சந்திரவதனா

TRO Bank account in Colombo, Sri Lanka:Bank A/C: 01607837001Standard Chartered BankWellewatte BranchColombo 06Sri Lanka

http://www.troonline.org/en/

TRO lists immediate relief needs
ஈழநாதன்.

பெட்ஷீட்கள் வாங்கித்தர விருப்பமா? பி. கே. சிவகுமார்.

உண்டியல் குலுக்குவோமா? சுந்தரவடிவேல்.

துபாயில் உதவ - ஆசிஃப் மீரான்.

Releif Funds Links For Non Residents கார்திக்ராமாஸ்.

சிங்கையில் வசிப்பவர்கள் இந்த இணைப்பில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு கனாமி ஆசிய பேரழிவு துயர் துடைப்பு பணிக்கு உதவுங்கள்.

மலேஷியாவில் http://tamilfound.org/tsunami.jpg

The Hindu Relief Fund

Oxfam

Sudhar's Diary Links for donating.

Clothes, grains, utensils, dresses , blankets , match boxes, medicines ,rice, dals, raagis, sugar, wheat powder , milk powder. ...any times.. whatever it may be... may kindly be send to them...

Please call SPOT TAXI on 5110 0000 in Bangalore ... they will come andcollect the items anywhere in Bangalore.. their taxi will pick the items from your doorstep..... They WILL ensure that it reaches to those people (currently they are taking care for nagapattinam .. I called them and checked it)so... kindly note these numbers....... This is done by Bridge foundation.....
2558 1869/70/71

...anbudan,Eswaran

you can take DD for "Rotary Club of Nagapattinam Tsunami Relief Fund" ..
It should be payable at nagapattinam. and you can send DD to the following address
Govindrajan: 20, Perumal North Street,Nagapattanam.
for more details , you can directly contact his mobile number (09842415994)
.. anbudan,eswaran


திருநெல்வெலியில் துணவியோடு பேசினேன். சாய்பாபா, சின்மயாநந்தா சார்பான சில சங்கங்களே -வேட்டி, சேலை, உணவு அளிப்பது போன்ற - நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவே தெரிகிறது. வீட்டிற்கு வந்து வாங்கி சென்றதாக சொன்னார். அவர்களிடமே தன்னாலான பொருட்களை அளித்ததாக சொன்னார். என்னை போலவே இவர்கள் மீது விமர்சனமும், எதிர்பும் உள்ளவர்கள், இந்த நேரத்தில் அதை பொருட்படுத்தாமல், இப்படி பட்டவ்ர்களையும் (அவர்கள் மட்டும்தான் கண்ணில்படகூடும் என்றால்) பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அரசாங்கத்தை விட இவர்கள் மூலம் பாதிக்கபட்டவர்களிடம் போய் சேரகூடுய வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது.




Post a Comment

8 Comments:

Anonymous Anonymous said...

rosa,
தாங்கள் கூறியவை ஏற்கக்கூடிய கருத்துக்களே. நம்மூரில் உயிருக்கு (குறிப்பாக, ஏழைகளின்) மதிப்பு கிடையாது, அவர்கள் வோட்டுக்கு மதிப்பு உண்டு என்பதே நிஜம்.

//இதிலெல்லாமா ஊழல் செய்வார்கள் என்று அப்பாவியாய் சிலர் கேட்கிறார்கள்//

என்னைத் தானே குறிப்பிடுகிறீர்கள்? பேரைக் கூறினாலும் தவறில்லை :-)

"பிரதமர் நிவாரண நிதி" "முதலமைச்சர் நிவாரண நிதி"யை விட better எனத் தோன்றுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

12/27/2004 10:23 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி பாலா. இரு நண்பர்களுக்கு எழுதியுள்ளேன். அவர்களின் மின்னஞ்சல் முகவரியும் மாறாமல், பதிலும் வந்து, நம்பகமான இடங்கள் குறித்த செய்திகள் கிடைத்தால் இங்கே எழுதுகிறேன். பத்ரி கருணாலயா குறித்து எழுதியுள்ளதை இப்போதுதான் படித்தேன். ( http://thoughtsintamil.blogspot.com/2004/12/blog-post_27.html#comments )

12/27/2004 11:12 PM  
Blogger துளசி கோபால் said...

தகவலுக்கு நன்றி. போனவுங்க போயிட்டாங்க. இனி அவுங்க நினைவுகளோடு வாழப்போறவுங்களை நினைச்சா

மனசு கலங்குது.

12/28/2004 5:16 AM  
Anonymous Anonymous said...

ஸ்ரீகாந்த் கொடுத்திருந்த தகவல் பயனுள்ளதாக இருந்தது.

மதிவாணனின் கட்டுரை இப்போதைக்கு தேவையில்லாத ஒன்று என்பது என் எண்ணம். வரவுள்ள இயற்கையின் சீற்றத்தை (அதுவும், சுனாமி போன்ற நம் பகுதியில் இதற்கு முன் கேள்வியேபடாத ஒன்றை) முன்னறிவிக்க தொழில் நுட்பம் பயன்(படுத்தப்)படவில்லை என்பதும் ஒரு குற்றசாட்டு. aidindia.org இல் நிவாரணப் பணிக்கு பணவுதவி பெற்றுக்கொள்ளும் தளத்துக்கு சென்று பார்க்கும்போது தெரிவது மனிதநேயம் மட்டுமல்ல. இவ்வளவு துரிதமாக ஒரு அமைப்பு மட்டும் இத்தனை பெரிய தொகையை வசூலிக்க முடிவதற்கு தொழில் நுட்பமும் காரணம். சுதந்திரம் அடைந்த 57 ஆண்டுகளில் இவ்வளவு தூரமாவது முன்னேறியிருக்கிறோமே என்று கண்டிப்பாக ஆறுதலடைய வேண்டும். இறந்தவர்களை காப்பாற்ற முடியாமல் போனாலும், இருப்பவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு முன்னெப்போதையும் விட இப்போது சாத்தியம் அதிகம்.

சுந்தரமூர்த்தி

12/28/2004 8:07 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி துளசி, சுமு.

மதிவாணன் நேரடியான களப்பணிகளில் தொடர்புள்ளவர். அவருக்கு வரக்கூடிய கோபங்களில் நியாயம் இருக்கலாம் என்று தோன்றியது. கல்பாக்கம் குறித்தும், மற்ற கடற்கரை சார்ந்த நிறுவனங்கள் குறித்து அவர் எழுப்பும் கேள்விகள் அவசியமானது என்று தோன்றியதால் இங்கே இணைப்பு தந்தேன். அது குறித்து ரவியும், வெங்கட்டும் பேசியுள்ளார். நான் தொடர்புள்ள அனைத்தையும் இன்னும் வாசிக்கவில்லை.

மற்றபடி மதி சொல்லும், 'எந்த விஞ்ஞானமும் ஏழைகளுக்கு உதவ போவதில்லை' என்ற 'வர்க்க பார்வை' நடைமுறைக்கு ஆரொக்கியமானதல்ல, விஞ்ஞான வளர்ச்சி எல்லொருக்குமே பயனுள்ளது (வேவ்வேறு சத்கவிகிதத்தில்) என்று உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன்.

12/28/2004 11:38 AM  
Blogger ROSAVASANTH said...

மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன். மேலே உள்ள aidindia.org , Tamilnadu Science Forum எந்த பிரச்சனையும் இல்லாமல், நாம் மனமுவந்து நம்பகூடிய இடம். இவர்களிடம் அளிக்கபடும் நிதி எந்த பிரச்சனையும் இன்றி, உரிய முறையுஇல், தகுந்தவர்குபோய் சேரும். இவர்களின் பணியும் பரவலானது. இவர்களின் முந்தய பணிகள் குறித்து என்க்கு தெரியும்.

க்ரெடிட் கார்ட் மற்றும் செக் மூலம் அளிக்க வசதி மேலே உள்ள சுட்டியில் உள்ளது. வங்கி கணக்கு எண் என் கண்ணில் படவில்லை. tsfன் உறுப்பினர் ஒருவருக்கு எழுதிகேட்டுள்ளேன். பதில் வந்ததும் விவரம் தருகிறேன்.

12/28/2004 11:55 AM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

துயரமான சம்பவம். தகவல்களுக்கு நன்றி. இந்த மாதிரி சம்பவங்கள் தான் நமது மனிதாபி மானத்தையும், ஒற்றுமையும் மேலும் வலுப் பட வைக்கிறது. எனது ஆழ்ந்த அனுதாபங்கள், மற்றும் கடவுளிடம் அனைத்து ஆன்மாக்களும் அமைதியடைய வணங்கி எல்லா துன்பப் படும் மக்களுக்கு நம்பிக்கையும், நல்ல வாழ்வையும் கூடிய விரைவில் கிடைத்திட எனது ஆழ்ந்த பிரார்த்தனைகள்.

12/29/2004 1:54 PM  
Blogger Mangai said...

nalla muyarchi

12/28/2007 6:13 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter