ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Friday, November 19, 2004ஸப்மிஷன்!திண்ணையில் ஆசாரகீனனின் கடித்தின் உதவியால், ஸப்மிஷன் குறும்படம் பார்க்க நேர்ந்தது. சாதாரணமாக இருந்திருந்தால் படம் குறித்த பல விமர்சனங்களை (குறிப்பாய் இனவாதம் முகிழ்ந்து குறிபிட்ட கட்டத்தை அடைந்துவிட்ட நெதர்லேண்டில் அந்த படம் ஏற்படுத்தகூடிய வாசிப்புகளை) முன் வைத்திருக்கமுடியும். ஆனால் வான் கோ கொலைக்கு பின்னால், அதை எந்த முஸ்லீமும் கண்டிக்காத நிலையில், அதை நியாயபடுத்தி ஒரு கடிதமும் திண்ணையில் வெளியான பின்னர் அந்த விமர்சனங்களை எழுதமுடியாது. மிக சாதாராணமான ஒரு படத்திற்கு வான் கோ கொலைசெய்யபட்டது, சில விஷயம் குறித்து பேசுவதில் (வேறென்ன இஸ்லாம் குறித்த வெளிப்படையான விமர்சனம்தான்) இன்னும் தயக்கம் காட்டுவது அவலமான ஒரு சூழலுக்குத்தான் இட்டுசெல்லும் என்று தோன்றுகிறது. அதுவும் அந்த வேலையை (சூர்யா, அரவிந்தன் , ஆசாரகீனன்) போன்ற இந்துத்வ ஆதரவாளர்கள் மட்டுமே செய்து வருவது மிகவும் அருவருப்பான ஒரு சூழலுக்கே இட்டுசென்று கொண்டிருக்கிறது. மற்றபடி இந்த நிகழ்வுகளை, இன்னும் பல விவாதங்களை இந்துத்வவாதிகள் பயன்படுத்தி வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அது இயல்பானதாகவும் தெரிகிறது. அது குறித்து கவலைபடுவதோ, இப்படி பயன்படுத்தி கொள்வார்களே என்று மௌனமாக இருப்பதோ எந்தவிதத்திலும் ஆரோக்கியமானதாக தெரியவில்லை. உண்மையில் இந்த மௌனத்தைத்தான் அவர்கள் அதிகமாய் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆசாரகீனனை பொறுத்தவரை அவர் ஒரு இனவெறியராகத்தான் எனக்கு தெரிகிறார். (தொடக்கத்தில் ஒரு ஏதிஸம் சார்ந்த அடிப்படைவாதியாக மட்டுமே சந்தேகத்தின் பலனை அளித்து அவரை நினைத்திருந்தேன்.) அப்படி இருந்தும் கூட அவர் எழுத்தில் பல விஷயங்களை (அதில் உள்ள இனவாதம், இடதுசாரிகள் மீதான வசைகள், சில அசட்டுத்தனமான வாதங்கள் மற்றும் பொய்கள் தவிர்த்து, இஸ்லாம் குறித்த விமர்சனங்களை) எதிர்கொள்ளவேண்டும் என்றே நினைக்ககிறேன். அதையும், நேசகுமார் எழுப்பியுள்ள விவாதத்தயும் முன்வைத்து எனது கருத்துக்களை குட்டிபூர்ஷ்வா வாழ்க்கை அனுமதிக்கும் தருணத்தில் இங்கே தருகிறேன். அதுவரை இது ஒரு அவசர அடி மட்டுமே. யாரேனும் வம்புக்கு இழுத்தால், இதிலுள்ள சில ஸ்வீப்பிங் கமெண்டுகளை விரித்து தருகிறேன். மீண்டும் ஒரு முறை, அடிப்படைவாதத்திடம், ஒரு கலைபடைப்பிற்காக தன் உயிரை இழந்த வான் கோவிற்கு எனது தாமதமான அஞ்சலிகள். |
10 Comments:
ஆசாரகீனன், ஸாரி, அவரது நாகர்கோவில் பதிப்பான அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பகைச்சுவையும், வித்தியாசமற்ற கட்டுரை. ( http://www.thinnai.com/of1118042.html )
வான்கோவின் படுகொலையை பார்த்தபோது, உண்மையில் அமெரிக்காவில் ஓரளவாவது படைப்புச்சுதந்திரம்(கொலைசெய்யப்படாத அளவிற்கு) இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. மைக்கல் மூர் போன்றவர்கள், 9/11 பாரனைட் போன்ற படைப்புக்களில் விமர்சனத்தை வைத்துவிட்டு நடமாடக்கூடியதாக இருக்கிறது (FBI போன்றவற்றின் இரகசியக்கண்காணிப்பு இருக்கக்கூடும்). என்ன சொன்னாலும், அமெரிக்கா தனது citizens
மீ£து கொடுக்கும் மரியாதை கவனத்துக்குரியது. இரசியாவில் இப்போது நடக்கும் பணயநிகழ்வுகள் அனைத்திலும் எப்படி அந்த நாட்டின் அரசாங்கம் தமது சொந்தமக்கள்மீது கூட கரிசனமில்லாது கிளர்ச்சியாளர்களை மட்டும் கொல்வது என்ற நோக்கத்தில் தாக்குதல்கள் நடத்துவது புரியும். அந்தவகையில் அமெரிக்கா அரசாங்கம் தனது ஒரு குடிமகன்/மகள்களை எந்தச்சேதாரமின்றி காப்பாற்ற பிரயத்தனப்படுவது கவனத்துக்குரியது.
அன்புள்ள ரோசாவசந்த்,
இன்று தான் உங்களுடைய வலைப்பதிவைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. இதைச் செய்ய எவ்வளவோ தூண்டியும் செய்யாமல் இப்போதாவது மனது
வந்ததே. பார்த்தீர்களா என் குடிசையில் ஒண்டியிருந்த போது தீண்டாதவர்களும் இங்கே வந்து அரவணைப்பதை! விடாமல் போட்டுத் தாக்குங்கள்.
மாற்று சிந்தனையுடன் கூடிய பதிவுகள் மிகவும் அவசியம். அச்சில் வார்த்து போல ஒரே பாவனையில் இருக்கும் தமிழ் வலைப்பதிவு
கும்பல்களில் இருந்து மாற்று மிக மிக முக்கியம். மாற்று என்ற பெயரில் இருக்கும் தங்கமணி மற்றும் சுந்தரவடிவேல் போன்றவர்களும் வெள்ளைக்
கடித அபவாதம் இல்லாமல் எழுதுவது எப்படி என்ற சிந்தனையோட்டத்துடன் எழுதுவதால் வரும் ஒரு வித தேவையற்ற போலித்தனம், அவர்களது
எழுத்தை மேலோட்டமாகவே படிக்க வைக்கின்றது. சமரசமில்லாமல் எழுத நினைக்கும் பெயரிலி ( எங்கே போனார் இவர்), ரவி ஸ்ரிநிவாஸ் என்று தேடித் தேடி மாற்றுக்கு
அலைவதற்கு சற்று நிவாரணம் உங்களது இந்தப் பதிவுகள் தரவேண்டும். இப்பொழுது தான் டீசே தமிழனது பதிவையும் பார்த்தேன் அங்கேயும் போய்
உள்ளேன் அய்யா சொல்ல வேண்டும்.
ஆமாம் அது என்ன குட்டி பூர்ஷ்வா ? கலகம் மற்றும் நல்லிணக்கம்? ஒரே கெட்ட கெட்ட வார்த்தையாக இருக்கின்றதே.கொஞ்சம் தலைப்பு அளவை
மாற்ற முடியுமா?
தினமும் எழுதவேண்டும் என்ற கட்டளையுடன்,
அனாதை.
அநாதை ஆனந்தன்,
வாங்க, வாங்க. இதை தொடங்கினதுலே அநாதையின் வலைபதிவுகளை விட்டு ஓடிவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். உங்க கூட அங்கேதான் சண்டைபோட
உத்தேசம்.
எல்லாம் எதேச்சை நிகழ்வுகளாகவே நடந்துகொண்டு இருக்கிறது. சுந்தரவடிவேல் தளத்தில் கமெண்ட் எழுதபோனபோது, ஒவ்வொரு முறையும் இந்த Bளாகர் கணக்கு கேட்கும்
லொள்ளு தாங்காமல் இதை தொடங்கினேன். தண்ணியும், பீஃபும் சிக்கனுமாய் போய்
கொண்டிருந்த வாழ்க்கையில் அவ்யப்ப்போது எதையோ தட்ட நினைத்தேன். (இணையத்தில் வந்து
எழுதபோய் அந்த வாழக்கையின் சந்தோஷம் போய்விடுமோ என்றே பல நேரங்களில் எழுத
உந்துதல் வந்தும் அடக்கிகொண்டேன்.) ஏதோ தோன்ற எல்லார் பார்வைக்கும் வைத்துவிட்டேன்.
தினமும் எழுதுவதேல்லாம் இப்போதைக்கு நடக்ககூடிய விஷயமல்ல. குறைந்தது ஒரு பத்து
மேட்டரை பற்றியாவது கைவசம் எழுத உள்ளது. ஆனால் எழுதி உள்ளிடுவது எல்லாம்
எப்பவாவதுதான் ஏதேச்சையாகத்தான் நிகழ்கிறது. ஆமாம், இந்த வொயிட் மெயில் பலருக்கு
பிரச்சனையாய் இருப்பதையும், விரும்பியோ விரும்பாமலோ ஏதோ ஒரு வகையில் இணங்கி
போவதும் நடக்கத்தான் செய்கிறது. சமீபத்திய வெங்கட்-சு.வ. `விவாதம்' ஒரு உதாரணம். இது
குறித்து அடுத்து எழுத(விவாத்தை பற்றியல்ல, இந்த வொயிட்மெயில் பற்றி) உத்தேசம் உள்ளது.
அதற்கு முன் இந்த (உங்கள் அகராதியின்) பெரிய வெளுத்தனின் லொள்ளு பற்றி கொஞ்சம் எழுத
நினைத்து கொண்டிருக்கிறேன். உங்களோடு இருந்தபோது தீண்டாதவர்கள் இப்போது
அரவணைப்பதாக தோன்றுகிறதா? சரி, கொஞ்சம் பொறுத்து பிறகு பார்போம்.
Bளாகர் கணக்கு திறக்க போனால் தலைப்பு கேட்டு கம்பெல் பண்ண, அப்போது தோன்றியது
இப்படி ஒரு தலைப்பு. ஆனாலும் கொஞ்சம் பொருளோடு வைத்துள்ளதாக எண்ணம்.
கண்டதையும் படித்து தார்மீக கோபம், தர்மாவேசம் எல்லாம் வரக்கூடும். அப்படி வரும்போது,
திங்க குடிக்க எந்த பிரச்சனையுமில்லாமல், குளுரூட்டபட்ட அறியில் அல்லது குளிருக்கு
அடக்கமாக சூடேற்றபட்ட அறையில் குஷன் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு நாம் வாழும் இந்த
குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையை எனக்கும் எல்லோருக்கும் நினைவூட்டும் விதமாய் தலைப்பு.
முடிந்தவரை இந்த confrontationஐ குறைப்பது அல்லது தவிர்ப்பது என்கிற வகையில்தான்
வாழவேண்டியிருக்கிறது. அதை எழுத்தில் செய்யமுயற்சித்து, வேறு வழியில்லாமலே இந்த கலகம் Vs
நல்லிணக்கம் என்று ஏதோ நடந்துகொண்டிருப்பதையும் குறிக்க விரும்பினேன்.
உதாரணமாய் வெங்கட் இந்த `நல்லத்தொர் வீணை செய்து..' பாட்டு பற்றி எழுதியிருக்கிறார்.
எல்லோரும் ரொம்ப ரசித்து கூட்டமாய் சந்தோஷமாய் இருக்கிறார்கள். நடுவில் போய் அபசகுனமாய் எழுத கொஞ்சம் கூச்சமாய் இருக்கிறது. அது தவிர எனக்கும்
அந்த பாரதி பாடல் பிடிக்கத்தான் செய்கிறது. ஆனால் பாருங்கள் இந்த பாலசந்தர், மற்றும்
வாலி படத்தில் பாட்டுக்கு வேறு அர்த்தம் வந்துவிடுகிறது. உதாராணம் `ஒரே ஒரு கிராமத்திலே' படம்
பத்தி தெரியும்லே! சுகாசினி, ரேவதி கேரக்டருக்கு முன்னாடி இந்த லட்சிய பெண் வேஷத்துக்கு
ஏத்த நம்ம லெச்சுமி. ஃபார்வர்டு காஸ்ட் பாவம்! (`பொறந்தா எஸ்சியா பொறக்கணும்டே' என்று
ஒருவர் ரோட்டில் சொல்வதை வைத்து நண்பர் மதிவண்ணன் முன்னாடி ஒரு கவிதை
எழுதியிருப்பார். நினைவில் வரும்போது சொல்கிறேன்.) பார்வர்டு காஸ்டுலே(அதாவது அய்யர்
காஸ்டுலே) பிறந்ததாலே, என்ன புத்தி/திறமை/தகுதியிருந்தும் வேலை கிடைக்காம பாழும் தமிழ்நாட்டுல கஷ்டபட, பொய்
சர்டிஃபிகேட் கொடுத்து வேலை வாங்கி, ஒரு ரௌடி அதை வச்சு ப்ளாக் மெயில் பண்ணி, அதுக்கு இணங்கி,
கடைசியில் பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்து, கோர்டில் பராசக்தி சிவாஜியை எல்லாம் தூக்கி சாப்டர மாதிரி
வாலி எழுதி குடுத்த வசனம் பேசி....நல்லதோர் வீணை செய்து நலம் கெட்ட புழுதியில் இருப்பது புரிந்ததா?
பாட்டு படத்தில் ரொம்ப பொருத்தமாக இருப்பதாக வெங்கட் சொல்கிறார். உண்மைதானே. அதை
யார் மனமும் கோணாமல் எப்படி சொல்வது? அதான் நல்லிணக்க முயற்சி!
தலைப்பு அளவை குறைப்பது எப்படி?
தலைப்பு அளவை குறைப்பது எப்படி?
templateல் இந்த வகையில் ஒரு வரி இருக்கும்.
#Title{font-size:25px;padding-left:15px;padding-top:10px;
இதனுள் இருக்கும் font-size அளவை மாற்றிக் குறைக்கலாம்.
அன்புடன்,
அனாதை.
டெம்ப்ளேட்டில் தேடி பார்தேன். எளவு, அந்த வரி மட்டும் கண்ணில் படமாட்டேனென்கிறது. இப்போது வேறு டென்ஷனில் இருக்கிறேன்(பழைய கமெண்டில் சொன்னதுதான்). இந்த வார இறுதிக்குள் சரி செய்ய முயற்சிக்கிறேன். நன்றி! அன்புள்ள வசந்த்.
This comment has been removed by a blog administrator.
ரோசா,
ப்ளாக் ஆரம்பிக்க சொல்லி ஒரு வருடத்துக்கும் மேல ஆகி, ஆரம்பித்துள்ளீர்கள். டைட்டில் பத்தி எல்லாம், ஒன்னும் பெரிய அவசரமில்லை. அது சரி, (tamilblogs) யாகூ குழுமத்தில் சேருங்கள் முதலில்.
அனாதை! நீங்களும்தான். அங்கே உள்ள பழைய மடல்களில் , ப்ளாக் பற்றிய நிறைய விஷயங்கள் படிக்க கிடைக்கும்.
நன்றி கார்திக்!
Post a Comment
<< Home