ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Sunday, November 14, 2004

நினைச்சு பாத்தா எல்லாம் பொம்மை..!

கொஞ்சம் வலைபதிவுகளை பீராய்ஞ்சதுல பெருசு உள்ளபோனதில நெறய சனம் ரொம்பவே அப்ஸெடாகி ஆடிபோனா மாறித்தான் தெரியுது. கொஞ்சம் பாவமாவே இருக்கு, நம்ம கும்படர விஷயம் சாக்கடைல விளுகரப்போ எல்லோருக்குமே இப்படிதானே இருக்கும். இதுல குட்டிபூர்ஷ்வா ஆடிப்பாடி சந்தோஷப்பட பெருசா எதுவுமில்ல. (அதென்னமோ போங்கோ, எல்லோரும் எதோ கூடி பேசி க்ரூப் டிஷ்கஷன் பண்ணி மனு சமர்பிச்ச தினுசில ஒரே மாதிரி புலம்பியிருக்காளே! அதுவும் சோ ஸார் கொடுத்த ரீடிஃப் பேட்டியோட எஃபக்ட் நன்னாவே தெரியறது.)

யாரும் மாறுவாங்கன்னோ, பாடங்கத்துக்குவாங்கன்னோ எல்லாம் தோணல. சும்மா கண்ண கசக்கிகினு, கொஞ்சம் விமர்சனம் பாவ்லா, தர்மாவேசம் அப்டி இப்டி டான்ஸ் காட்டினு, அப்பால பழய பஜனைக்கே திரும்பிடுன்னு தெரியும். அது பிரச்சனையில்ல. ஆனாலும் இந்த சந்துல சிந்து பாடரதுதான் தாங்கமுடியல.

போலிஸாண்ட பலான எவிடன்ஸ் சிக்கிகீது. வெளியவும் அது லீக்காயிருச்சு. நக்கீரன் வேற போட்டு தாக்கிகீது. பார்டீங்கள்ளாம் ஆர்பாட்டம் அது இதுனு ரௌஸ் விட்டுனுக்குது. அதுக்கப்பால லேட் பண்ணி வேற வழிதெரியாம ஜெயேந்திரரை புட்சி உள்ளே போட்டதுக்கு ஜெயாம்மாக்கு பாராட்டா? (பாரா ஸார் கூட!) என்னப்பா அனியாயமாக்குது! விஜயகுமார் குருதிபுனல் ஸெட்போட்டு, பலான வேலையெல்லாம் செஞ்சு வீரப்பனை புட்சாரு, சரி காலிபண்ணாரு. அதுக்கு எல்லோரும் ஜெயாம்மாவை பாராட்டினா `ஏதோ லாஜிக் இக்குதுபா'ன்னு குட்டி பூர்ஷ்வா ஒத்துக்குவானா இருக்கும். இதுக்குமா? ஸரி, பெருசை உள்ள போடரதுக்கு முன்னாடி மேடத்தாண்ட ஒரு வார்த்த நிச்சயமா கேட்டுருப்பாங்க. அதும் வேர வழி தெரியாம ஸரின்னு சொல்லியிருக்கும். அதுக்கு பாராட்டா?

ரொம்ப பயமாக்கீது. அடுத்து எலீக்ஷன் வரும். ஜெயாம்மா அப்பீடாயி பார்லிமெண்ட் எக்ஸாம்ல வாங்கின மார்கையே வாங்குதுன்னு வை. மறுநா கவர்னராண்ட ராஜினாமா லெட்டர் குடுக்குது. அதுக்கும் `அட, இன்னா பிராம்டா ரிஸைன் பண்ணிட்டாங்க, இந்த தைரியம் யாருக்கு வரும்'ன்னு பஜனை பண்ணுவாங்க போல தெரியுது.

சினிமா காரங்கல்லாம் ரொம்ப ஜெயா பஜனை செய்ரது தாங்காம பத்ரி ஸார் ரொம்ப பேஜாராயிட்டாரு. அதுங்களுக்கு பொழப்பு அது. இதுங்களுக்கு? இதை பாக்க ஸொல்ல என்னா தோணுது? கமெண்ட்ல அவுத்துவுடு கபாலி!

Post a Comment

7 Comments:

Blogger ROSAVASANTH said...

எனது கருத்தை கார்திக்கிற்கான பதிலில் ( http://rozavasanth.blogspot.com/2004/11/blog-post.html ) தந்திருக்கிறேன். மற்றபடி இந்த விஷயத்தை பெரிது படுத்தி நெருக்கடி கொடுத்த திமுக உடபட்ட கட்சிகளே பாராட்டுக்குரியவனவாக தெரிகிறது. ஏனெனில் இன்றய நிலமையில் இதனால் அவர்கள் அரசியல் லாபமடைய எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அனாவசிய வெறுப்பு மட்டுமே வரும்.

11/14/2004 7:00 PM  
Blogger ROSAVASANTH said...

காஞ்சி சமாச்சாரம் குறித்து மிகவும் ஆச்சரியமாய்தான் இருந்தது. சங்கராச்சாரியார் சம்பந்தபட்டிருப்பதில் அல்ல ஆச்சரியம், இப்படி ஒரு நடவடிக்கை அதுவும் ஜெயாம்மா கொடையின் கீழ் நிகழ்ந்ததுதான். மிக மிக முக்கியமான-எந்தவித சால்ஜாப்பு, சொதப்பலுக்கு இடமில்லாமாத-ஆதாரம் கிட்டியிருப்பதாகத்தான் தோன்றுகிறது. வேறு வழியில்லாமல் கைது நடந்திருப்பதாக தெரிகிறது.

மற்றபடி இதில் எனக்கு பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. என் புரிதலின்படி பார்பனியம் என்று நான் நினைப்பது பொதுவாக மிகுந்த சாந்த ஸ்வரூபத்தை காட்டகூடியது. தர்கத்தில் விளையாடும். வன்முறையில் தான் ஈடுபடாமல் காரியத்தை சாதிக்கும். மேலும் பிரச்சனையை வேறு சிக்கலாக்கும். அத்தோடு தனக்கான நியாயத்தை பேச தேவையான எல்லா தர்கத்திற்கும் ஆதாரமும் வைத்திருக்கும். ஆனால் இதை எல்லாம் மீறி ஒரு கட்டம் வரும் போது அது நேரடியாய் வாளை தூக்க தயங்காது என்பது என் புரிதல். இது உண்மையில் பெரியாரை முன்வைத்து வரும் புரிதல் அல்ல. அம்பேத்காரை வாசித்ததின் விளைவாய் அடைந்த புரிதல்.

இதை தர்க்கரீதியாய் நிக்ழ்ததி காட்டுவது கடினம். இந்த காஞ்சி சமாச்சாரம் கூட அதற்கு ஆதரமாய் முன்வைக்க முடியாது. தனிபட்ட முறையில் இதை முன்வைத்து புரிந்துகொள்ளலாம், அவ்வளவே!

11/14/2004 7:26 PM  
Blogger ROSAVASANTH said...

இதுவரை ஏதோ கலக்கமான சில பதிவுகளை மட்டுமே இந்த விஷயத்தில் பார்தேன். இப்போது சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை திட்டும் பதிவுகளை பார்த்ததில், வெறுப்பு என்பது எந்த அளவு இவர்களுக்கு ரத்ததில் கலந்திருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

வலுவான ஆதாரங்கள் கிடைத்தும் புறநிர்பந்தத்தின் காரணமாய் நடந்தது ஜெயேந்திரரின் கைது. சோ போன்ற சங்கரமடத்தின் மீது மிகவும் மரியாதை/அளவிலா பக்தி கொண்ட ஒருவராலேயே சாக்கு சொல்லமுடியாத அளவில் நடந்த கைது. கருணாநிதி மீது நடந்ததோ, மிக தெளிவாகவே கருணாநிதியை பழிவாங்கும் பொருட்டு(ஜெயலலிதாவே தெளிவாய் தேர்தலுக்கு முன்னமே கூறியது போல்) humiliate பண்ணும் வகையில் நடத்தபட்டது. ஜெயலலிதாவை கைது செய்யும் முன் மேற்கொண்ட முன்னேற்பாடுகளில் சிறிதுகூட கடைபிடிக்கபடாமல் மிக தெளிவாகவே வன்மத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட ஒரு நடவடிக்கை. அதையும் இதையும் முடிச்சு போட்டு கருணாநிதியை திட்டுவதை பார்த்தால், திமுக மாதிரி நமக்கு இந்த விசயத்திற்கு வெடிபோடத்தான் தோன்றுகிறது. (கருணாநிதிபோல் ஜெயேந்திரர் ஜெயில் உடையும் அணிந்து ஜெயில் சாப்பாடு(அய்யோ அபச்சாரம்!) சாப்பைடமாட்டார் என்றாலும்.)

11/14/2004 8:51 PM  
Blogger ROSAVASANTH said...

அது சரி, இத்தினி பேர் அறிக்க மேல அறிக்கை வுட்டுக்கறாங்களே, இந்த ஜெயாம்மா மட்டும் இன்னும் வாயையே தொறக்கலியே. எங்கியாவது தொறந்துருக்காங்களா? நாந்தான் பாக்கலியா? தெரிஞ்சவுங்க யாரவது தகவல் தரக்கூடாதா?

11/15/2004 6:46 PM  
Blogger KARTHIKRAMAS said...

ரோசா,
ஜெயேந்திரர் கைது குறித்து எனக்கு பெரிதான கருத்து ஒன்றும் இல்லை. ஏதோ தவிர்க்க முடியாத காரத்தினால் தான் "அம்மா" இதற்கு சம்மதித்திருப்பார் என்று புரிந்து கொண்டேன். கொலைக் குற்றம் அவர் மீது நிருபிக்கப் பட்டால் (னிருபிக்க படவிடாமல் எத்தனை முயற்சிகள் நடக்கும் எனபது சாக்ஷாத் அந்த சிவபெருமானுக்கே வெளிச்சம், அல்லது சங்கர்ராமன் ஆவிக்கே வெளிச்சம்) அவரை கொலைகாரன் என்று நம்ம மக்கள் ஏற்றுக்கொள்ள எத்தனை சங்கடம் இருக்கும் என்று நினைபது தான் இன்னும் யோசிக்கத்தக்கது.

பெரியவர் (செல்லமாய் பெரியவா) இருந்தப்பவே, இந்த அசட்டு ஜெயேந்திரனை பிடிக்கலை அவாளுக்கு. இன்னும் சில நெருக்கிய வட்ட செய்திகள் கிடைத்தன. எல்லாம் ஜெயேந்திரர் மீது அதிருப்தியையே காட்டுவதாய் உள்ளன. அவாளுக்குள்ள உள்ள பிரccஇனையில நம்ம தலையிடலாமன்னு யாரவது கேள்வி கேட்டுட்டா எனக்கு பதில் சொல்ல தெரியாது. பெரியவா தனது கடைசி தருணத்தில் கூட நம்ம ஜெயெந்திரரை வெளியே போகச் சொன்னதாக கேள்வி. (னிருபி ந்னு சொன்னா கான்சி மடத்தில தான் போய் கேக்கனும். இன்டெர் நெட் லின்க் எல்லம் இல்லை இப்பவே சொல்லிட்டேன்.)

11/16/2004 12:01 AM  
Blogger KARTHIKRAMAS said...

ஆனாலும் இந்த கைதைத் தவர்த்திருந்தால், இந்த வாலுங்க எல்லாம் ஆடாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படி செய்திருந்தால் , விஷயம் வெளியே தெரியாமால் போயிருக்கவும் வாய்ய்புள்ளது என்பதால் எல்லாம் நல்லதுக்கேன்னு நினைக்கிறேன்.

மத்தபடி, வலைப்பதிவுகளில் நடக்கும் கையறுப்பு காட்சி , ஒருப்பக்கம் "அப்படி போட்டுத் தாக்கு, மகனே இப்ப என்னடா செய்வீங்க" என்பது போல் தோன்றினால்ம், அவர்கள் நம்பிக்கை அடிபடுகிறதே என்கிற அத்ருப்தியும் எனக்குள்ளது. எத்தனையோ பேர், கான்சி மட விவகாரங்களே தெரியாமல் நம்பியுள்ளார்களே அவர்கள்தான், உண்மையில் பாவம்.

11/16/2004 12:09 AM  
Blogger KARTHIKRAMAS said...

சாமியாரை பதவி விலகக் கோரி முதல் குரல் எழுப்புகிறேன். அவர் மீது குற்றச் சாட்டு ஆதரமற்றது என்று நிருபிக்கப்படும் வரை அவர் பதவி விலகியிருக்கவேண்டும்.

11/16/2004 6:34 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter