ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Friday, October 29, 2004தத்துவம்!"டேய்.. கபடியாடலாம், கிரிக்கெட் ஆடலாம், பரதநாட்டியம், ஆடலாம்... கதகளி கூட ஆடலாண்டா! ஆனா இந்த ஆணவத்தில மட்டும் ஆடவே கூடாது மச்சான். அப்படி ஆடினியோ மவனே! அதோகதிதான்.." |
9 Comments:
சொன்னது `இளைய தளபதி', படம் : கில்லி
சுஜாதா "' confused psychological thriller" என்று வர்ணித்த குடைக்குள் மழையின் ஸ்ப்லிட் பர்ஸனாலிடி பாதிப்பா? :-) நீங்களே போஸ்ட் போட்டு, நீங்களே கமண்ட்டும் எழுதிக் கொள்கிறீர்கள்? :-)
நன்றி ப்ரகாஷ் ஸார், உங்கள் தயவில் தேசிகனின் வலைப்பதிவு போய் சுஜாதா பதில்களையும் படித்துவிட்டு வந்தேன்.
என்ன செய்வது? கை அரிக்கிறது. நமக்கு கையில் நல்ல வார்த்தைகளும் வரமாட்டேனென்கிறது. எதையாவது குண்டக்க மண்டக்க எழுதி, பெரிதாய் இழுத்துகொண்டு போக இப்போது விருப்பமில்லை. இன்னும் என் பெயரை தமிழ்மணம் வாசலில் கூட சேர்க்கவில்லை. யாரும் இதை படிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து ஸீரியஸாய் எழுதலாம் என்று உத்தேசம்.
நீங்கள் சொன்னது போல் இல்லாவிட்டாலும், வேறு ஏதாவது ஸைக்காலஜிக்கல் பிரச்சனை இருக்கலாம்(நிச்சயமாய் டிப்ரஷன் எதுவும் இல்லை, சந்தோஷமான சைக்காலாஜிக்கல் பிரச்சனைதான்). அளவுக்கு மீறிய தனிமை. சுற்றிலும் புரியாத மொழி பேசும் மக்கள் கூட்டம். எண்ணி ஒரு நண்பர்கூட இல்லை. இப்போதெல்லாம் சூப்பர் மார்கெட், மெட்ரோ, ரோட்டில் சைக்கிளில் எல்லாம் பேசியபடியோ பாடியபடியோ சென்று கொண்டிருக்கிறேன் (தமிழில்தான்! கர்நாடகத்திலோ வடநாட்டிலோ இதை செய்தால் அடி விழலாம், இங்கே விசித்திரமாய் அன்பான புன்முறுவலுடன் பார்த்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள்). வேலை, அதிலிருந்து விடுபட தண்ணி, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அனுபவித்து சமயல், இசை என்று போய்கொண்டிருக்கிறது.
இதற்கு நடுவில் சோம்பல் முறித்துகொள்ளும் போது யாருக்கும்(எனக்கும்) பிரச்சனை வராமல் எதையாவது எழுதலாமே என்று இங்கே தத்து பித்தென்று தட்டி வைக்கிறேன். இதை வந்து பார்க்க தோன்றிய உங்கள் பெயரை சொல்லி இன்று ஒரு பெக் BORDEAUX வொயின் பொட்டு கொள்கிறேன், நன்றி!
மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஊரில்[dewas] ஒரு மாசம் ஓட்டலில் தங்கி இருந்த போது, ஓட்டலில் வேற யாரெல்லாம் தமிழ்க்காரன்கள் இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க, லாபியில் சத்தமாக " புதிய வானம் , புதிய பூமி" என்று பாடிக் கொண்டே செல்வேன். உத்தரவாதமாக இரண்டு கதவுகளாவது திறக்கும். இப்படிப் பட்ட Acquaintance களால், உதவியை விட தொந்தரவுதான் அதிகம் என்றும் ஒரு கட்டத்தில் புரிந்தது. எல்லோரும் கூடி, உரக்கப் பேசி, மற்றவர் கவனத்தை ஈர்க்கின்ற வேலைகளில் தற்செயலாகவோ, வேண்டுமென்றொ, பிற காரணங்களுக்காகவோ, ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற வேளையிலே, ஏகாந்தமாக நின்று பத்திரகிரியாரின் மெய்ஞானப்புலம்பல் கணக்காக,தனக்குத் தானே ஆடப் பாடிப் பேசித் திரியும் ஆனந்தம், விடுமுறையில், ஒரு கோடை வாசஸ்தல கெஸ்ட் அவுசில், செல்பேசி-சேல்ஸ் டார்கெட்-ஸ்லீப்பிங் பில்ஸ் தொந்தரவுகளின்றி, நிராயுதபாணியாக, ஷவரில் குளிக்கும் ஆனந்தத்துக்கு ஈடானது என்று எனக்குத் தெரியும். வந்து தொந்தரவு செய்துவிட்டேனோ என்பது மட்டுமே என் சஞ்சலம். ஆமாவா இல்லையா?
அய்யோ, தொந்தரவு எல்லாம் இல்லை. இந்த மெய்ஞான புலம்பல், ஷவர் குளியல் எல்லாம் ஆனந்தமாக செய்துகொண்டுதான் இருக்கிறேன். அதை இணையத்தில் வந்து செய்யவெண்டியது இல்லை. யாராவது எப்போதாவது வந்து படிக்கத்தானே இங்கே கிறுக்குகிறோம். கொஞ்ச நாள் கழித்து பார்வைக்கு வைக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் நீங்கள் விசிட் அடித்துவிட்டிர்கள். அவ்வளவுதான்!
(நேற்று இப்படித்தான் தெருவில் யாரும் இல்லையென்று நினைத்து மிக சத்தமாக(உண்மையிலேயே மிக சத்தமாக) `வேட்டையாடு விளையாடு, விருப்பம் போல உறவாடு..!' என்று வாத்தியார் ஸ்டைலில் ஆடியபடி சைக்கிளில் போக எதிரில் (அபூர்வமாய்)கிமோனோ அணிந்த பாட்டி ஒருவர், வேற்றுகிரக மொழியை கேட்டதுபோல் திகைத்து பார்த்துகொண்டிருந்தார். அவர் ரஜினிபடம் பார்த்ததில்லை போலும்(நான் இருப்பது ஜப்பானில்!)).
லேட்டாகிவிட்டது, வீட்டுக்கு கிளம்புவதால் இங்கே நிறுத்திகொள்கிறேன்!
('யானை தந்தம் போலே பிறை நிலா..' MKடீ பாட்டு கேட்டிருக்கிறீர்களா? முன் பின் அறிமுகமில்லாத(தூள்.காம். மூலம்) நண்பர் MP3 அனுப்பியிருந்தார், ஒரு நாளைக்கு பத்து தடைவைக்கு மேல் கேட்டுகோண்டிருக்கிறேன்! பிறை நிலாவிற்கு யானை தந்தத்தை உவமை சொல்லி இதற்கு முன் கேட்டதில்லை.)
//('யானை தந்தம் போலே பிறை நிலா..' MKடீ பாட்டு கேட்டிருக்கிறீர்களா? //
அய்யோ அய்யோ அய்யோ... நம்மாளா நீங்க? வாங்க வாங்க....அமர கவி படம் தானே அது? யானை தந்தம் போலே பிறை நிலா.......வானிலே ஜோதியாய் வீசுதே... அந்தப் பாட்டுதானே? அனேகமா ஏதோ குதிரைப் பாட்டா இருக்கும்னு நினைக்கிறேன். பாட்டு முழுசும், ஒரே பீட். இருவர்லே, 'உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு' கேட்டிருக்கிங்களா? அந்த நினைப்பு வரும். அதே படத்திலே, ' செடி மறைவிலே ஒரு பூங்கொடி, மறைந்தே மாயம் செய்வதேன் ங்கற பாட்டை கேட்டிருக்கீங்களா? mp3 இருக்கு. ஆனால் மெயில் பண்ணச் சொல்லாதீங்க. சென்னை டயலப் இணைப்புலே, 3.5 mb கோப்பை அனுப்பச் சொன்னால், ஒண்ணு அம்பானி மாதிரி வெல் டு டூவா இருக்கணும் இல்லாட்டி சுவிஸ் பாங்கில் அக்கவுண்ட் வச்சிருக்கணும் :-) வேணும்னால், kaaza விலே அக்கவுண்ட் திறந்து போடறேன். எடுத்துக்குங்க சியாமளா சியாமளா கேட்டிருக்கீங்களா?
மன்னிக்கணும் இகாரஸார், நேற்று இங்கு விடுமுறை(வீட்டில் இணைய இணைப்பு இன்னும் இல்லை, விரைவில் வரும்). உங்க கமெண்டை இப்பதான் பாத்தேன். `செடி மறைவிலே..' மட்டும் பரிச்சயமில்லை. ரெண்டுமாசம் முன்னாடி மெட்ராஸ் வந்தபோது உஸ்மான் ரோட்டில் MKT கலெக்ஷன் ஒரு MP3 வாங்கி வந்தேன்(ஜெயலலிதா புதிய சட்ட திட்டங்களுக்கு பிறகு இதெல்லாம் உண்டா?). என் நேரம், file completely corrupted, உள்ளே என்ன இருக்குன்னு கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மெயில் வேண்டாம், இந்த யாஹூ ப்ரீஃப்கேஸ்னு எதோ சொல்றாங்களே, அதுல கொஞ்சம் முயற்சி பண்ணி எனக்கு ஏற்பாடு பண்ணமுடியுமா? ( நான் இதுவரை முயற்சி பண்ணியதில்லை, அங்கிருந்து எடுத்து மட்டும் பழக்கம், யாருக்கும் கொடுத்ததில்லை).
இன்னும் ஒரு மணியிலிருந்து ஊர் சுற்றும் வேலை,(மற்றும் சுற்றுலா, மற்ற தீவுகளுக்கு,) அடுத்தவாரம் வியாழனிலிருந்து மீண்டும், மெய்ஞான புலம்பலும், ஷவர் குளியலும்! வந்து உங்களுக்கு நிதானமாய் எழுதுகிறேன். அன்புள்ள வசந்த்.
(பத்திரமாய் வந்து செர்ந்தவுடன் உங்க கணக்கிலே `உள்ளேன் ஐயா' வைக்கிறேன்.)
so at all long last you also have fallen prey to the temptation of having a blog of ones own and use that to vent feelings.welcome rosavasanth.
no prizes for guessing who am i.
>> மெய்ஞான புலம்பலும், ஷவர் குளியலும்! >>
பதிவை விட பின்னூட்டங்கள் சூப்பர்!
Post a Comment
<< Home