ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Friday, November 12, 2004விதி!!!கொகுரா என்ற ஜப்பானிய நகரம் குறித்து யாராவது கேள்வி பட்டிருக்கிறீர்களா? வாய்பில்லை என்றே தோன்றுகிறது. உண்மையில் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒரு பெயராக இது இருந்திருக்க வேண்டும். சின்ன வயசில் பாடத்திலும், குவிஸிற்கு போகும்போதும் மனப்பாடம் செய்ய வேண்டிய பெயராகவும் இருந்திருக்கும். ஆண்டுதோறும் நினைவு கூரவேண்டிய ஒரு பெயராகவும் இருந்திருக்கும். இத்தனையும் நிகழாமல் போனதற்கு ஒரே காரணம் 1945ஆம் ஆண்டின் அந்த நாளில் கொகுராவின் வானம் மிகுந்த மேகமூட்டத்துடன் இருந்ததுதான். கித்தா க்யுஷு( நேரடியாய் மொழிபெயர்த்தால் வடக்கு க்யூஷு) என்று ஒரு இடம், ஜப்பானின் நான்கு தீவுகளில் ஒன்றான க்யூஷு தீவின் (ஹான்ஷுவிலிருந்து) நுழைவாய் முனையில் உள்ளது. இது உண்மையில் ஐந்து நகரங்கள் ஒன்றிணைந்து உருவான ஒரு ஆலை நகரம். அதில் ஒன்று கொகுரா. அமேரிக்க வான்படையை சேர்ந்த வெடிகுண்டு வீசும் B-29 Bock car, 'குண்டு மனிதன்'(fat man) என்ற (ஹிரோஷிமாவில் வெடித்த 'சின்ன பையனை' விட) சக்தி வாய்ந்த அணுகுண்டை சுமந்தவாறு கொகுரா நகரத்தின் மீது மூன்று முறை சுற்றியும் கூட தனது இலக்கை கண்டுகொள்ள முடியவில்லை. மேக மூட்டத்தின் காரணமாக அணுகுண்டு போடும் திட்டம் நாகஸாக்கியை நோக்கி திசை திருப்பபட்டது. இவ்வாறாக ஒரு பேரழிவிலிருந்து கொகுரா நகரம் அன்றய காலை மேகமூட்டத்தின் காரணமாக தப்பியது. |
5 Comments:
கலககாரருக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும். :)
Anbu ROsaa,
Ithu enna? :) , puthu santhoshaththukku uriya
athirchi. Ungal Varukai enakku puththNarrchi aLikkiRathu. Thayavu seythu thodarnthu ezuthungal.
Kaanchi - samaachaaram patRi ungal karuththu enna.
summa ezuthungka naanum poottu thaakkuRen.
நன்றி பாலாஜி. உங்களுக்கு பழைய(காவியம்) பதிவிலும் எழுதியிருக்கிறேன். என்ன ஆச்சு! உங்கள் இதயத்தை தொடும் கதையை தொடரவில்லை.
எங்கு இருக்கிறீர்கள்? ஒழுங்காய் விசா எல்லாம் கிடைத்து செட்டிலாகிவிட்டிர்களா? (தனி மெயிலிலாவது) பதில் எழுதவும்!
RosaVasanth,
Welcome back to blog! I am always facinated by your writings. So, like to see your writings more n often here.
~dj
நன்றி டீஜே, வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்சி. நீங்களும் ஒரு தளம் கைவசம் வைத்திருப்பது இப்போதுதான் தெரிந்தது. அதில் உள்ள பதிவுகளை பதிவுகளில் ஏற்கனவே படித்திருந்தாலும்.
Post a Comment
<< Home