ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, November 11, 2004

தோழர் அராஃபத்!

பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாஸர் அராஃபத் சற்று முன் இறந்ததாக அதிகாரபூர்வமாய் அறிவிக்கபட்டுள்ளது. எந்தவித இரக்கத்திற்கும் இடமளிக்காத மிக மூர்கமான அரசவன்முறைக்கு சரியான உதாரணமாய் திகழும் இஸ்ரேலின் 50 ஆண்டுகால bruttal ஆக்ரமிப்பு, படுகொலைகள், சதிகளை எதிர்த்து போராடிய ஒரு சகாப்தம் முடிவுற்றுள்ளது. அராபத் என்ற மனிதன் இல்லாமலிருந்தால் பாலஸ்தீன விடுதலை போராட்டம் இத்தகைய ஒரு எழுச்சியை அடைந்திருக்காது, அல்லது திசை திரும்பியிருக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லையற்ற அதிகாரத்திலிருந்து பிறக்கும் வன்முறையை எதிர்க்க உந்துதலாய் என்றென்றும் இருக்க போகும் தோழருக்கு எனது அஞ்சலிகள்.

தனது பிந்தய காலகட்டத்தில் அராஃபத் பல சமரசங்களை ஏற்றுகொள்ளவேண்டியிருந்தது. கையாலாகாமல் வாளாவிருக்க நேர்ந்தது.(எட்வர்டு சையத்தால் மிகவும் இதற்காக எதிர்க்கபட்டார்.) இவை, எத்தகைய போர்குணம் கொண்டவரானாலும் அரசு மற்றும் (ஏகதிபத்திய சார்) உலக அமைப்புகள் மேற்கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தை, சமாதான முயற்சிகள் இவைகளில் பங்கு கொண்டால் எப்படியெல்லாம் சொதப்ப நேரிடும் என்பதற்கான உதாரணங்கள். அரஃபத்தின் அரசே(மற்றும் பாதுகாப்பு படையினர்) ஊழல்-முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றசாட்டுகளும் உண்டு. அரசு என்ற நிறுவனத்தினுள் நுழைந்தபின் யாரும் கறைபடாமல் இருக்க முடியாது என்பதற்கான இன்னொரு உதாரணம் இது(மண்டேலாவே விதிவிலக்கில்லாமல் போனபின்).

வறலாற்றின் விகாரமான வக்ரங்களில் ஒன்றாக இஸ்ரேல் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இனவாதத்தினால் தங்கள் மீது நிகழ்த்தபட்ட பெரும் இன அழிப்பால் பாதிக்கபட்ட ஒரு இனம், அதே போன்ற ஒரு கொடுமையான வன்முறையை இன்னொரு இனத்தின் மீது 50 ஆண்டுகளாக பிரயோகித்து வருவது போன்றதொரு வக்ரம் வேறு இருக்கமுடியாது. இஸ்ரேல் என்ற ஒரு அரசு நிறுவனம் அப்படி இருப்பதில் ஆச்சரியப்பட அதிகமில்லை. ஆனால் உலகமெல்லாம் உள்ள யூதர்கள்(எண்ணிவிடக் கூடிய சிலரை தவிர) அதற்கு ஆதரவாகவும்,. அதை நியாயபடுத்துவதும் தான் மிக பெரிய வக்ரமாய் தெரிகிறது. அதிலும் முக்கியமாக தங்கள் மீது நிகழ்த்தபட்ட இன அழிப்பை, இன்றய தங்கள் ஆக்ரமிப்பிற்கான நியாயங்களில் ஒன்றாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பிரசாரம் செய்து வருவதும், பாலஸ்தீன சார்பாய் பேசுபவர்களை யூத வெறுப்பாளர்களாய் முத்திரை குத்துவதும் தான் வக்ரத்தின் உச்சமாய் தெரிகிறது. தங்கள் மீது நிகழ்த்தபட்ட இன அழிப்பிலிருந்து இதைதான் கற்றுகொண்டார்கள் என்றபோது மானுட சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து உற்சாகம் கொள்ள எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அராஃபத்தின் இறப்பு நிலமையை எங்கு இட்டுசெல்லும் என்று தெரியவில்லை. நிச்சயமாய் இதையும் இஸ்ரேல் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி கொள்ளும் என்பது மட்டும் புரிகிறது.

Post a Comment

7 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

வணக்கம் ரோசாவசந். நீங்கள் வலைப்பதிவுலகிற்கு வரவேண்டும் என விரும்பியவர்களில் நானும் ஒருவன்.தொடர்வோம்

11/12/2004 11:18 PM  
Blogger KARTHIKRAMAS said...

Anbu ROsaa,
Ithu enna? :) , puthu santhoshaththukku uriya
athirchi. Ungal Varukai enakku puththNarrchi aLikkiRathu. Thayavu seythu thodarnthu ezuthungal.

Kaanchi - samaachaaram patRi ungal karuththu enna.
summa ezuthungka naanum poottu thaakkuRen.

11/12/2004 11:25 PM  
Blogger writerpara said...

அன்புள்ள ரோசாவசந்த்,

பாலஸ்தீனின் குரலாக இன்று நமக்கு அதிகம் வாசிக்கக் கிடைப்பது பேராசிரியர் எட்வர்ட் சயீதின் நூல்கள் மட்டுமே. தொண்ணூறுகளுக்குப் பிறகான அராஃபத்தின் அரசியல் சார்ந்த சமரசங்கள் குறித்த அவரது விமரிசனங்களைச் சமீபத்தில் படித்தேன். அவை அனைத்தும் ஒருபக்கப் பார்வையாகவே தென்படுகின்றன. இவ்விஷயத்தில் நம்பகமான ஆவணங்கள் என்று நீங்கள் எதையும் சிபாரிசு செய்வீர்களா? (பாலஸ்தீன் தொடர்பான விஷயங்களுக்குச் சென்னையில் கிடைப்பதெல்லாம் எட்வர்ட் சயீதின் நூல்கள் மட்டுமே.)வேறு யாரும் குறிப்பிடத்தக்கவகையில் பங்காற்றியவர்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

11/13/2004 2:05 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி ஈழநாதன். நானும் நீங்கள் எழுதுவதை கூர்ந்து படித்து வருகிறேன். உங்கள் எழுத்துக்களை முக்கியமாய் நினைக்கிறேன்.

நிச்சயமாய் பலத்த முரண்பாடுகள் உள்ளன. குறிப்பாய் ஷோபாசக்தியை முன்வைத்து நீங்கள் எழுதியிருந்தது குறித்து காட்டமான கருத்துக்களை முன் வைக்க நினைத்திருந்தேன். அபத்தமான குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையில் விடுபட்டுவிட்டது. எப்படியும் எது குறித்து எழுதுவேன் என்றே நினைக்கிறேன். இத்தகைய கருத்துரீதியிலான எதிர்ப்பை மீறி இதே நட்பை தக்கவைத்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நன்றி!

11/13/2004 7:59 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி கார்திக், நீங்களும் ரொம்பநாளாய் சோம்பிகிடப்பதாய் தெரிகிறது. எழுத விஷயமா இல்லை!

கொஞ்சம் வளமையாய் தொடருவேன் என்றுதான் நினைக்கிறேன். இடையில் அதிகபட்ச வேலையிலிருந்து இளைப்பாரபோய், பின் சாதாரனமாய் தொடங்கி கொஞ்சம் ஓவர் குடியில் மாட்டிகொண்டேன்(இன்னும் முழுவதும் மீளவில்லை). முடிந்தவரை தொடருகிறேன். உங்கள் வரவேற்பிற்கு நன்றி!

11/13/2004 8:08 PM  
Blogger ROSAVASANTH said...

காஞ்சி சமாச்சாரம் குறித்து மிகவும் ஆச்சரியமாய்தான் இருந்தது. சங்கராச்சாரியார் சம்பந்தபட்டிருப்பதில் அல்ல ஆச்சரியம், இப்படி ஒரு நடவடிக்கை அதுவும் ஜெயாம்மா கொடையின் கீழ் நிகழ்ந்ததுதான். மிக மிக முக்கியமான-எந்தவித சால்ஜாப்பு, சொதப்பலுக்கு இடமில்லாமாத-ஆதாரம் கிட்டியிருப்பதாகத்தான் தோன்றுகிறது. வேறு வழியில்லாமல் கைது நடந்திருப்பதாக தெரிகிறது.

மற்றபடி இதில் எனக்கு பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. என் புரிதலின்படி பார்பனியம் என்று நான் நினைப்பது பொதுவாக மிகுந்த சாந்த ஸ்வரூபத்தை காட்டகூடியது. தர்கத்தில் விளையாடும். வன்முறையில் தான் ஈடுபடாமல் காரியத்தை சாதிக்கும். மேலும் பிரச்சனையை வேறு சிக்கலாக்கும். அத்தோடு தனக்கான நியாயத்தை பேச தேவையான எல்லா தர்கத்திற்கும் ஆதாரமும் வைத்திருக்கும். ஆனால் இதை எல்லாம் மீறி ஒரு கட்டம் வரும் போது அது நேரடியாய் வாளை தூக்க தயங்காது என்பது என் புரிதல். இது உண்மையில் பெரியாரை முன்வைத்து வரும் புரிதல் அல்ல. அம்பேத்காரை வாசித்ததின் விளைவாய் அடைந்த புரிதல்.

இதை தர்க்கரீதியாய் நிக்ழ்ததி காட்டுவது கடினம். இந்த காஞ்சி சமாச்சாரம் கூட அதற்கு ஆதரமாய் முன்வைக்க முடியாது. தனிபட்ட முறையில் இதை முன்வைத்து புரிந்துகொள்ளலாம், அவ்வளவே!

11/13/2004 8:22 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள பாரா,

உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.

உடனடியாய் பதில் சொல்ல தெரியவில்லை. நானும் அராஃபத்தின் சமரசங்கள் குறித்து எட்வர்ட் சையத்தின் விமர்சனங்களையே முக்கியமாய் படித்திருக்கிறேன் -அதுவும் 96-97இல் சையது காட்டமாய் விமர்சனங்களை வைத்துகொண்டிருந்த சமயத்தில். இந்த குறிப்பிட்ட விஷயத்தில்(அராஃபத்தின் சமரசம் குறித்த) வேறு எதையும் குறிப்பிட்டு சொல்ல எனக்கு தோன்றவில்லை. ஆனால் தனிபட்ட முறையில் எனக்கு சையத்தின் விமர்சனங்களுடன் உடன்பாடாகவே உள்ளது. நீங்கள் அதை ஒருபக்க பார்வை என்று சொல்வதை கொஞ்சம் விளக்கமுடியுமா?

சையத்தை விட்டால் பலரை காட்டமுடியும். ஆனால் அவை பாலஸ்தீனத்தை விட இஸ்ரேலை பற்றியே குறிப்பாய் இருக்கும். Znetஇல் வண்டி வண்டியாய் இருக்கும் சமாச்சாரங்கள் குறித்து உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.

என்னால் குறிப்பாய் பதில் சொல்லமுடியாததற்கு மன்னிக்கவும். எனக்கென்னவோ இப்படிபட்ட குறிப்பான வினாக்ளை தொடுக்க ரவி ஸ்ரீனிவாஸ்தான் சரியான ஆளாய் படுகிறது. கேட்டுபாருங்களேன்! எனக்கு எதுவும் தோன்றினால் பின்னால் எழுதுகிறேன். அன்புள்ள வசந்த்.

11/13/2004 8:33 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter