ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, December 15, 2004

உள்ளம்!

தண்ணீர் தணல் போல் எரியும்,
செந்தணலும் நீர் போல் குளிரும்.

நண்பனும் பகை போல் தெரியும்,
அது நாட்பட நாட்பட புரியும்.

Post a Comment

30 Comments:

Blogger ROSAVASANTH said...

பாடல் : உள்ளம் என்பது ஆமை.
படம்:பார்த்தால் பசி தீரும்.
வரிகள்: கண்ணதாசன்
பாடியது: டி.எம். சௌந்தர்ராஜன்.

12/15/2004 4:01 PM  
Blogger -/பெயரிலி. said...

ஏன் ரோசரு,
"நடிகர்: சிவாஜி
இயக்குநன்: பீம்சிங்
சந்தர்ப்பம்: ஜெமினி, தனக்கும் சாவித்திரிக்குமிடையே ஏதாச்சுமோ என்று எண்ணியதையெண்ணி, காலை விந்தி விந்தி சிவாஜி பாடுவது"
என்பதையெல்லாம் விட்டுவிட்டீர்களே? :-)

12/15/2004 6:23 PM  
Blogger ROSAVASANTH said...

அதெல்லாம் நீங்க வந்து எழுதுவீங்கன்னுதான்!

12/15/2004 6:33 PM  
Blogger சுந்தரவடிவேல் said...

:)
சிரிச்சது உங்க உரையாடலுக்கு.

12/15/2004 8:13 PM  
Blogger ravi srinivas said...

what next :)

12/15/2004 9:17 PM  
Blogger ROSAVASANTH said...

அடுத்த பாட்டு "ஒண்ணுமே புரியலை ஒலகத்துல..".
கடந்த பாட்டு எழுத நேர்ந்த காரணம - எனக்கும் அநாதைக்குமான உரசலை மனதில் வைத்து எழுதவில்லை, அங்கேயும் பொருந்திவர கூடும் என்றாலும். இன்று காலச்சுவட்டில் இந்த கூட்டறிக்கையையும் (http://tamil.sify.com/kalachuvadu/dec04/fullstory.php?id=13625453 ) அதில் பொ.வேல்சாமியின் பெயரையும் பார்த்தபோது, இந்த பாட்டு தன்னிச்சையாய் மனதில் வந்தது.
உண்மையிலேயே ஒண்ணுமே புரியலை ஒலகத்துல.

12/15/2004 10:33 PM  
Blogger icarus prakash said...

//எனக்கும் அநாதைக்குமான உரசலை மனதில் வைத்து எழுதவில்லை, //

என்று எழுதாதிருந்தால் "இப்பலேந்து ராத்திரி வரிக்கும் கொஞ்சம் ·ப்ரீயாத்தான் இருக்கேன். நா வேணா வந்து பஞ்சாயத்துப் பண்ணி விடவா? " என்று கேட்டிருப்பேன். காலச்சுவட்டு உரலை இடித்தால் ஒண்ணும் புரியலை.

12/15/2004 11:29 PM  
Blogger ROSAVASANTH said...

நட்பின் இகாரஸ், பஞ்சாயத்தா? அதை சொன்னவுடனேயே நாங்க சமாதானமா போயிருவோம்ல
(ரெண்டு வரி பாட்டுக்கு இவ்வளவு கமெண்டா?)

12/15/2004 11:41 PM  
Anonymous Anonymous said...

வசந்த்:
'காலச்சுவடு' கட்டுரை படித்தபோது உங்களுக்கேற்பட்டது போல வியப்பு எனக்கும் ஏற்பட்டது. 'நிறப்பிரிகை'க் குழு இப்போது 2-1 என்ற கணக்கில் பிரிந்திருக்கிறது. 'தலித் எழுத்தாளர்கள்' கூட்டறிக்கையில் கையப்பமிட்டுருப்பவர்கள் எல்லோருமே தலித்துகள் அல்லர் (எ-டு. பொ. வேல்சாமி, அ. ராமசாமி, அய்யனார், நஞ்சுண்டன் போன்றோர்). அதேவேளை அவர்கள் குறிப்பிட்டுள்ள 'தலித் இதழ்களில் தமிழ் எழுத்தாளர்கள் (சாதி எழுத்தாளர்கள்) எழுதக்கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்றியவர்கள் குழுவில் 'விடியல்' பதிப்பகமும் இருப்பது இன்னொரு ஆச்சரியம். இவர்கள் எல்லோருமே எந்த அடிப்படையில் கூட்டு சேர்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது அரசியல் கட்சிகள் கூட்டு சேர்வதை புரிந்துகொள்வதை விட குழப்பமானது. நல்லவேளையாக கட்சித் தொண்டர்களைப் போல நாமெல்லாம் "வாழ்க! ஒழிக!!" என்று கோஷம் போடவோ, ஓட்டு போடவோ வேண்டிய அவசியம் இல்லை.

மு. சுந்தரமூர்த்தி

12/16/2004 12:23 AM  
Blogger ravi srinivas said...

pls read this article
http://thatstamil.com/specials/art-culture/essays/aadhavan1.html

12/16/2004 1:20 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி ரவி, நான் முதலில் இந்த கட்டுரையை படித்து அதற்கு பின்னே காலச்சுவடு பக்கம் போனேன். சுந்தரமூர்த்தி பின்னூட்டத்தீர்க்கு நன்றி(மற்றும் அனைவருக்கும்). இங்கே மணி இரவு இரண்டு. தூங்கவில்லையெனில் மீண்டும் வந்து எழுதுகிறேன். அல்லது நாளை. இது ரொம்பவும் சிக்கலான(கவலைக்குரிய) நிலமை. விரிவாய் எழுதவேண்டும்.

12/16/2004 1:52 AM  
Blogger ravi srinivas said...

i understand ur point.but there are limits to ones intervention.i dont know what is happening but i am
sure that this politics is murkier than typical
party politics.and there is no point in worrying
about it beyond a point.

12/16/2004 2:15 AM  
Blogger ROSAVASANTH said...

/i am sure that this politics is murkier than typical
party politics./ என்று நீங்கள் சொன்னது மிகவும் சரி. இதனால் பெரும் விபத்துக்கள் எதுவும் நிகழபோவதில்லை, காலப்போக்கில் இதையெல்லாம் உள்வாங்கி சிந்திக்க நேரிடலாம் என்றாலும், இதன் இப்போதய பாதிப்புகள் கவலைக்குரியவை. ஜெயமோகன் போன்றவர்களுக்கு இது இன்னும் பல தர்க்க ஆதாரங்களையும் கொடுக்கும். (குருசு சாக்ரடீஸைஉ வைத்து அவர் எழுத்கியுள்லதைஉ திண்ணையில் பார்ர்கவும்). ஒரு பெரும்(தலித், மற்ற நம்பிக்கை தரும்) இளம் எழுத்தாளர் கூட்டம் வெட்டி வேலைகளில் இறங்ககூடும்

தமிழ் சூழலில் நிறப்பிரிகை போன்ற அற்புதமான ஒரு அறிவு சூழல் அதற்கு முன் தோன்றியதாக எனக்கு தெரியவில்லை. நிறப்பிரிகை அளவிற்கு கேடு கெட்டு குட்டிசுவரானதும் எதுவும் இல்லை.

அ.மார்க்ஸ், ரவிகுமார் இருவரும் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு விடுப்பு எடுத்துகொண்டு போவது எவ்வளவோ நன்மை பயக்க கூடும்-குறைந்த படசம் அ.மார்க்ஸாவது, என்று நினைக்கிறேன்.

12/16/2004 2:26 AM  
Blogger ravi srinivas said...

Relax rosa, these will have no long term impact.the impact of what jayamohan or kalachuvadu writes is very
limited. i am sure that dalit writers and activists can see through all these power games and politics soon, if
not today.try to concentrate on other issues and read more.there is more to life than worrying about such petty minds and their plans.

12/16/2004 3:07 AM  
Blogger ROSAVASANTH said...

Thanks Ravi. Your comment was helpful. I also agree, in a long run, one can overcome the effects of this petty clash, may be one can learn some lessons also. But something should put an end to this, an ego clash between amarx and ravikumar having an impact on everything. See you tommorow.

12/16/2004 3:32 AM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

12/16/2004 4:51 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

12/16/2004 5:14 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ரோசா நான்கு வரிப் பாடலுக்குப் பின் இவ்வளவு விளக்கங்களா ஏதோ கொஞ்சம் புரிகிறமாதிரி இருக்கிறது ஆனால் நிரம்ப புரியவில்லை அதிலும் இந்த தலித் சன்டைகள்.கொஞ்சம் உங்களைப் பொன்றவர்கள் விளக்கிச் சொன்னால்(இந்தப் பதிவு போன்று) பரவாயில்லை.

12/16/2004 7:28 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

12/16/2004 7:36 PM  
Blogger ROSAVASANTH said...

test

12/16/2004 9:18 PM  
Blogger ROSAVASANTH said...

சுந்தரமூர்த்திக்கு நான் எழுதிய பெரிய பதிலை நீக்கியிருக்கிறேன். எழுதிய பல விஷயங்கள் (குறிப்பாக அ.மார்க்ஸ், ரவிகுமார் இருவர் மீதான விமர்சனங்கள், மற்றும் இன்றய தலித், பிற்படுத்தபட்டவர்களின் அரசியல்)*இங்கு* தேவையற்றது, அதுவும் குறிப்பாக இந்த இணைய சூழலில் இது குறித்து பேசவேண்டிய அவசியம் இல்லை, அது வேறு விளைவுகளுக்கு உதவும் என்று தோன்றுவதால் நீக்கியிருக்கிறேன். மற்றபடி இதை இதற்கான தளங்களாக நினைக்கும் இடங்களில் பேச தயக்கமில்லை. இது வரை படித்தவர்களால் பிரச்சனையில்லை. சுமு இன்னும் படிக்கவில்லையெனில், படிக்க விரும்பினால் தனி மெயிலில் அனுப்புகிறேன்.

12/16/2004 9:30 PM  
Blogger ROSAVASANTH said...

ஈழநாதன் பின்னூட்டதிற்கு நன்றி. உங்களுக்கு எழுதிய பதிலையும் நீக்கிவிட்டேன்.

12/16/2004 9:32 PM  
Blogger ROSAVASANTH said...

ஈழநாதன் பின்னூட்டதிற்கு நன்றி. உங்களுக்கு எழுதிய பதிலையும் நீக்கிவிட்டேன்.

12/16/2004 9:32 PM  
Anonymous Anonymous said...

ரவி:
ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரையை சுட்டியமைக்கு நன்றி. இந்த கட்டுரையையும், 'தலித் எழுத்தாளர் கூட்டறிக்கை' யையும் ஒருங்கே படித்தபின் சில விஷயங்கள் தெளிவாயின. இதே காலச்சுவடு இதழில் ஜெயமோகன் மறுபதிப்பு செய்த நித்யசைதன்ய யதியின் நேர்காணல் நூலில் அதை முதலில் வெளியிட்ட காலச்சுவடுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்று கண்ணன் குதிக்கிறார். ஆனால் ஈரோடு கூட்டத் தீர்மானங்களை திரித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை கூச்சமின்றி வெளியிடவும் செய்கிறார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒரு நடுநிலை பத்திரிகை அடுத்த பக்கத்து விளக்கத்தையும் கேட்டு அதே இதழில் வெளியிடும். தமிழ் எழுத்துலகில் தனிமனித ஈகோவும், அதைச் சுற்றிக் கட்டப்படும் குழுக்களின் சண்டைகளும் சாதாரணமானது தான். காலச்சுவடு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று வணிகரீதியாகவும் வெற்றிகண்டுள்ளது என்பது கவலைகொள்ளத்தக்க ஒன்று.

வசந்த்:
நீங்கள் குறிப்பிட்ட பாடல்களோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்--"யாரைத்தான் நம்புவதோ பேதையின் நெஞ்சம்...". தலித் அறிவுஜீவிகளில் ராஜ்கௌதமன் மட்டும் தான் சம நிலையோடும், தெளிந்த விமர்சனப் பார்வையுடனும் எழுதுகிறார் என்பது என் கணிப்பு. நீங்கள் எழுதி, நீக்கிவிட்ட பதிவுகளை படிக்கவில்லை. முடிந்தால் தனி அஞ்சலில் அனுப்பவும்.

மு. சுந்தரமூர்த்தி

12/16/2004 11:43 PM  
Blogger ROSAVASANTH said...

நீக்கபட்ட எனது பின்னூட்டத்தை மெயிலில் அனுப்பியிருக்கிறேன். அதில் உள்ள சில விஷயங்களை வேறு சந்தர்பங்களில் இங்கே எழுதகூடும்.

காலச்சுவடு விளையாடும் விளையாட்டும், இவைகளை பயன்படுத்திகொள்ப்வதும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் என்று எனக்கு தோன்றுவதை மெயிலில் எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

நீங்கள் ராஜ்கவுதமன் குறித்து சொல்வதும் கொஞ்சம் ஆச்சரியமாய் இருக்கிறது. சமீபத்திய காலச்சுவடு பேட்டியில் புதுமைபித்தனிடம் தலித் மனநிலை வெளிப்படுவதாக இவர் சொன்னதை படித்துவிட்டுத்தான் சொல்கிறீர்களா? இவர்தான் முதலில் புதுமைபித்தனை முழுவதும் நிராகரித்து எழுதினார். இப்போது அந்த பாட்டை அமார்க்ஸ் போன்றவர்கள் பாடுவதால், காலச்சுவடுக்காக ப்ளேட்டை மாற்றுகிறார். 10 ஆண்டுகளில் வேறு கருத்தை வந்தடைவது வேறு. சூழலுக்கு ஏற்ப (அதுவும் மாற்றம் குறித்த விளக்கம் எதுவும் தராமல்) மாற்றிகொள்வது வேறு. அறிக்கையில் இவர் ஏன் கையெழுத்திடவில்லை என்று தெரியவில்லை.


அதவன் தீட்சண்யாவின் கட்டுரையோடு நான் ஒப்பவில்லை. எந்தவகையிலும் தலித் இதழ்களில் எழுதகூடாது என்று தீர்மானம் ஒரு நவீன தீண்டாமைதான். கண்டிக்க வேண்டியதுதான். பெரியாரை விமர்சிப்பதற்கு எதிர்வினை என்ற பெயரில், கோபத்தை காட்டும்போது ஆதிக்கஜாதி மனோபாவம் வெளிப்படுவதை கவனிக்கவேண்டும். உதாரண்மாய் ஒருவர் பன்றி உவமை போட்டு பேசியிருப்ப்தை கவனிக்கவும். http://tamil.sify.com/kalachuvadu/nov04/fullstory.php?id=13604568

12/17/2004 12:40 AM  
Anonymous Anonymous said...

இதை இங்கே மேலும் வளர்த்துச் செல்ல விருப்பமும், நேரமும் இல்லை. முடியுமானால் மாலை வீடு திரும்புமுன் தனி அஞ்சலில் மொத்தமாக என் கருத்துக்களை எழுதுகிறேன்.

மு. சுந்தரமூர்த்தி

12/17/2004 1:57 AM  
Blogger ravi srinivas said...

i thought of writing an article on this issue and on su.ras article in theeranathi.but i wonder whether i
should write it for the politics behind these is silly
and his article in theeranathi is so absurd that it
cannot be taken seriously.

12/17/2004 4:51 AM  
Blogger ROSAVASANTH said...

Dear Ravi, My personal opinion is as follows. I think *this*(tamil internet) is not the right space to talk about this issue. (I haven't read Su.ra's article so no commnets). Here we should write, but that should be something to do with how this issue is being exploited by Jeyamohan and others, and other dimensions. So i removed what I wrote here.

12/17/2004 12:05 PM  
Blogger டிசே தமிழன் said...

ரோசாவசந்த்,
இந்த விடயத்தில் கருத்துக்கள் சொல்ல எனக்கு விரும்பமிருந்தாலும் நீங்கள் சொல்வது போல இந்தவிடம் கருத்துச்சொல்ல சரியான இடம்மில்லை என்று நினைக்கிறேன். மற்றது விவாதத்தை காலச்சுவடு உட்பட்ட வகையறாக்கள் தவறாக அர்த்தப்படுத்தி தங்களை நியாயப்படுத்தவும் கூடும். ராஜ்கெளதமன், பிரபஞ்சன் என்று பெரும்கூட்டம் எப்பவோ தொடக்கம் காலச்சுவடிற்கு பாதபூஜை செய்யத்தொடங்கிவிட்டது (இது குறித்தும், மற்றும் நிறப்பிரிகை பற்றியும் ஒரு நண்பரோடு இரண்டு வருடங்களுக்கு முன் தனிப்பட்டமுறையில் விவாதம் செய்ததும் நினைவிலுண்டு). இவர்கள் எல்லாம் மீண்டுவருவார்கள் என்று நம்புவதைத் தவிர வேறென்னத்தைச் செய்ய?

12/17/2004 1:02 PM  
Blogger ROSAVASANTH said...

டீஜே, பின்னூட்டத்திற்கு நன்றி. தனி மெயில் ஒன்று அனுப்பியிருக்கிறேன். அன்புள்ள வசந்த்.

12/17/2004 1:08 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter