ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, December 31, 2004

என்ன செய்ய இந்த பெர்வர்ட்களை?

இந்திய அரசியலின் பெர்வர்ட்களின் தலைவனான் சுப்பிரமணிய சாமி இந்த நேரத்திலும் தன் வக்கிரபுத்தியை காட்ட கூடிய சந்தர்பத்தை நழுவ விடவில்லை.

இந்த செய்தியை படித்து பலத்த ஆத்திரத்துடன் ஒரு பதிவு எழுத வந்தேன். அதற்குள் பத்ரி எழுதியிருப்பதை படித்தேன். ஸ்வாமி மாதிரி மெண்டல் மட்டுமில்லாமல் பெர்வர்டை இந்திய அரசியலில் வேறு யாரையும் பார்க்கமுடியாது. ஆனால் இந்து ஏன் இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் இதை முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக்க வேண்டும். தொடர்ந்து ஈழப்பிரச்சனையில் இந்து எடுத்து வரும் நிலைபாடு எப்படியும் இருக்கட்டும். இந்த நேரத்திலுமா? எனக்கென்னவோ இந்து இது குறித்து தலையங்கம் எழுதும் அளவிற்கு பாதாளத்தில் இறங்குமோ என்று பயமாய் இருக்கிறது. இந்து என்ன எழவை எழுதினாலும் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவில் ஓரளவு முற்போக்காய், மதசார்பின்மையாய், இன்னும் உலகின் இனப்பிரச்சனைகள், பேரழிவுகள் குறித்து அக்கறையுடன் பேசும் ஒரு ஆரோக்கியமான கூட்டத்தின் கருத்துருவத்தை இந்து போன்ற பத்திரிகைகள் பாதித்து வருகிறது. அதனாலேயே பயம் வருகிறது.

இதை வன்மையாய் கண்டிக்கவும் பயமாய் இருக்கிறது-அனாவசியமாய் இதற்கு ஒரு விளம்பரம் கிடைத்து விடுமோ என்று. இதை கண்டுகொள்ளமல் விடுவதே நல்லது. ஆனால் வைகோ போன்றவர்கள் மத்திய அரசை கட்டாய படுத்தும் விதமாய் குரல் எழுப்பாமல், தன்னால் இன்ஃப்ளுயன்ஸ் செய்யகூடிய விஷயங்களை கவனிக்காமல் வேறு எதையோ பேசி வருவது மொள்ளமாரித்தனமாகவே தெரிகிறது. இந்தியாவிலிருந்து செல்லும் உதவிகள் வன்னி பகுதியையும் அடைய குரல் கொடுக்காமல் வேறு எதை ஈழதமிழருக்காய் செய்ய முடியும்? இப்போது இதை பேசாமல், வேறு எப்போது எதை பேசமுடியும்?

பல காலமாய் தொடரும் இனப்பகையின் தீவிரத்தை குறைக்கவும், சில நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தவும் இந்த பேரழிவை ஒரு சாக்காக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் காலத்துக்கும் சரி செய்ய இயலாத நிலைக்கு கொண்டு செல்வதே இவர்கள் நோக்கமாய் இருக்கிறது. இத்தனை ஆண்டுகால இனவாத பகையரசியல், இத்தனை உயிரிழப்பிற்கு பின் எதையும் கற்று தரவில்லை எனில் என்ன செய்ய?


Post a Comment

17 Comments:

Blogger Koothu said...

I share your anger and frustration. More than this idiot, the daily which is giving so much importance to a lunatic and its ulterior motives need to be condemned the most.
Your last paragraph was well said. If these people can't shed their hatred and bias at this moment of disaster, they will never be able to.

12/31/2004 1:52 PM  
Blogger Thangamani said...

இந்து, சு. சாமி இன்னும் இவர் போன்றோர் விழுகின்ற நேர்க்கோடு எது?
வெறும் அரசியலா? வெறும் அரசியலென்றால் இந்து பொருட்படுத்துமா சாமியின் இந்தக்கூற்றை?
அரசியலுக்கு அப்பாற்பட்ட அந்த உள்ளிணக்கம், புரிதலின் மையம் எது?
எத்தனை பேர் இறந்தாலும் எனக்கென்ன கவலை 'அவர்கள்' அழியவேண்டும் என்ற வன்மம் இவர்களுக்கு இருப்பதுபோல கொழும்புக்கு இருக்குமா?
இருந்தாலும் இப்படி வெட்கமின்றி துணியுமா?

//பல காலமாய் தொடரும் இனப்பகையின்//
நீங்கள் சொல்லும் இனப்பகை இப்பொழுது எங்கு மையம் கொண்டு எம்க்கு அலையடிக்கிறது?

12/31/2004 1:55 PM  
Blogger Thangamani said...

வசந்த்,
நீங்களும் இதை பைத்தியக்காரத்தனம், பெர்வர்ட் என்றெல்லாம் எழுதி இதை குறைவாக, எளிதாக மதிப்பிட வழிவகுக்காதீர்கள்! இவ்வளவு சாவுகளுக்கிடையில் சிங்கள அரசு புலிகளையும் பேரழிவுகளை மீளமைப்பதற்கான தேசிய செயற்குழுவில் உள்ளடக்குவதாக (ஒப்புக்காகவாவது) அறிவித்திருக்கும் வேளையில் கூட இவ்வளவு முனைப்பாக தங்களது வெறியை வெளிப்படுத்தியிருக்கும் இந்த சுவாமி-இந்து கூட்டு நடவடிக்கைக்கு பெயர் வெறும் பைத்தியக்காரத்தனமென்றால், உண்மையில் பைத்தியங்கள்தான் மிக அபாயகரமான கொலைகாரர்கள், சதிகாரர்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இந்த அச்சு எப்போதும் முறியாதது; முனைப்பானது; ஈழத்தமிழர்கள் இதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது!!

12/31/2004 2:07 PM  
Blogger ROSAVASANTH said...

இதை ஒப்புகொள்கிறேன் தங்கமணி. ஏதோ வாயில் வந்த வார்த்தைகள். மற்றபடி பைத்தியகாரர்களையும், பெர்வர்ட்களையும் கேவலப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

12/31/2004 2:14 PM  
Blogger -/பெயரிலி. said...

இலங்கைத்தமிழருக்கு, ஆயிரம் சுனாமி = ஒரு சுப்பிரமணிய சுவாமி

12/31/2004 2:51 PM  
Blogger ROSAVASANTH said...

பெங்களூர் நண்பர் ஒருவர் கர்நாடகத்தில் எவ்வாறு எல்லா மொழியினரும் தமிழகத்திற்கு உதவிகள் அளிப்பதையும், KSRTC நிறுவனம் தனது பணியாளர்களை நிவாரண பணிக்கு அனுப்பியுள்ளதையும் (இவைகளை தமிழக அரசு சரியாய் பயன்படுத்திகொள்ள முடியாததையும்) எழுதியிருந்தார். தமிழர்கள் மீது பகையுணர்வு காட்டி வந்த சம்பவங்களின் பிண்ணணியில் இதை கேட்கும்போது நெகிழ்ச்சியாய் உள்ளது.

ஈழத்தில் இப்படி யாரும் நெகிழ்சியுற கூடதென்பது சாபக்கேடா? சிலரின் வக்ரமா?

12/31/2004 3:43 PM  
Blogger சுந்தரவடிவேல் said...

சந்திரிகாவே சரின்னாலும் இந்த சு.சாமி சமாதானத்தை வர விடாது போலிருக்கே.

12/31/2004 4:00 PM  
Blogger இராதாகிருஷ்ணன் said...

இதுவும் ஒருவகையான இனப்படுகொலை.

12/31/2004 4:33 PM  
Anonymous Anonymous said...

This is a clear indication of the direction in which Hindu is moving. In spite of a tragedy, they dont want the people of Eelam to settle. As vasanth says, let's not give too much importance to this and this will turn out in TN as some of the "Aarivu Jeevis" will support The Hindu & Swamy.

These people are intellectual criminals, knowledged idiots.

12/31/2004 6:17 PM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

ரோசாவசந்த், கடைசிப் பத்தியில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் மனப்பாங்கையும் ஆதங்கத்தையும் நானும் பகிர்ந்து கொள்கிறேன். இது போன்ற பேரழிவிலாவது பெரிய உண்மைகளைப் புரிந்து கொள்ள முயன்று இனவாதத்தை மறந்து பிரச்சினை தீரும் வழி நோக்கிச் செல்ல முயன்றிருக்கலாம். இந்த நிலையிலும் தம் வட்டத்திற்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடப்பவர்களை என்ன தான் செய்வது?

(ஜாபர் அலி பதிவில் நீங்கள் எழுதி இருந்த கருத்துக்களையும் படித்தேன். பிடிவாதமாய் ஒரு நிலைப்பாடு எடுத்துப் பிடித்துக் கொள்ளாமல் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்.)

12/31/2004 8:50 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Swamy is an absolute crank of a person and let us not discuss this further and waste our time. One must condemn THE HINDU and people like N Ram who publish such trash.

12/31/2004 9:09 PM  
Anonymous Anonymous said...

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு அதன் தலைநகரிலேயே தலைமையகத்தையும், உலகெங்கிலும் கிளைகளையும் அமைத்துள்ள TRO வுக்கு இந்தியாவில் ஒரு கிளைகூட இல்லாமலிருப்பதற்கு இந்து-சாமி வகையறாக்களின் பாசிஸ அரசியல் தான் காரணம்.

தழிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அழிவுகளைப் பற்றி இதுவரை ஒரு சிறு செய்திகூட வெளியிடாத இந்து இப்போது சு.சாமியின் வாயிலிருந்து விழும் நரகலை அள்ளிப் பூசிக்கொண்டு நம் மேலும் பூசிக்கொண்டிருக்கிறது. பாருங்கள், இன்னும் இரண்டொரு நாளில் இதையும் ஆமோதித்து இன்னும் சில வக்கிரங்கள் இந்துவுக்கு கடிதமெழுதி குதூகலிக்கும்.

சுந்தரமூர்த்தி

1/01/2005 1:33 AM  
Blogger ROSAVASANTH said...

பின்னுட்டமளித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

சுமு, அதுதான் எனக்கு பயமே! இந்தியாவில் இன,மொழி வேறுபாடின்றி பல மனங்களை இந்த சம்பவங்கள் பாதித்திருக்கும். அவர்கள் இயற்கையாய் சிந்திப்பதை கூட இந்து வெளிப்படுபவை பாதிக்கும்.

1/01/2005 2:01 AM  
Anonymous Anonymous said...

சமரசப் பேச்சுவார்த்தைகளில் துணைபுரிந்து வந்த நார்வே நாட்டு அரசோ, அந்நாட்டின் அமைப்புகளோ நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனவா? அதைப் பற்றி செய்தியே இல்லையே! அவர்கள் மூலம் செய்தால் உதவிகள் சென்று சேரவேண்டியவர்களுக்கு சேரும் நம்பிக்கை இருக்குமே. அத்தகைய செயல்பாடுகள் பற்றி யாரேனும் தகவல்கள் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சுந்தரமூர்த்தி

1/01/2005 2:54 AM  
Blogger வீச்சறுவாள் said...

நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த அயோக்கியர்களின் முகங்களை கண்டுகொள்ள சுனாமி வழிவகுத்திருக்கிறது. இந்து போன்ற பத்திரிக்கை = செத்தவர்களின் சடலங்களின் மீது கூட இனப்பகை பாரட்டும் "தமிழர்கள்" என்ன்று சொல்லிக்கொளும் பச்சோந்திகள். இந்துவைப் படித்துவிட்டு எல்லாம் அறிந்ததாய் மனப்பால் குடிக்கும் மூதேவிகளை கண்டுகொள்வதற்கும் இதுநல்லதொரு செய்தி.

1/01/2005 8:16 AM  
Blogger Moorthi said...

சுப்ரமணிய சாமி சொல்றத யாருமே பொருட்படுத்துவதில்லை!(அவர் உண்மையே சொன்னாலும்கூட!). அந்த அளவுக்கு அவரின் மேல் மக்களுக்கு நம்பிக்கை. சோனியா இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்ததாகச் சொன்னார்!(திருமலை அண்ணாவின் தமிழோவியக் கட்டுரை படிக்கவும்!). நன்கு மெத்தப் படித்த கோமாளி என்றால் அது சுசாமிதான்!

1/01/2005 12:10 PM  
Blogger KARTHIKRAMAS said...

விவாதத்துக்கு நேரடி தொடர்பில்லாமல் இருந்தாலும், காந்தியைப் பற்றிய இந்த கட்டுரை பாடிக்கவேண்டிய தொன்று. இது குறித்து என் சார்பு இங்கு தேவையில்லை என் நினைக்கிறேன்


http://www.vho.org/tr/2004/2/Kemp184-186.html


அன்புடன்
கார்திக்

1/05/2005 5:53 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter