ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, December 30, 2004

சுனாமி காட்டிய வக்ரங்கள்.

தமிழகம் இதுவரை காணாத ஒரு அழிவை கண்டிருக்கிறது. அதைவிட மோசமாய் தமிழ் சூழலின் வக்கிரம் முகங்காட்டிகொண்டிருக்கிறது. ஏற்கனவே நமது அரசாங்கம், சமூகத்தின் மெத்தனம், அதன் காரணமாகவே அதிகரித்த உயிரிழப்பு, இப்படி பேச எவ்வளவோ இருக்கிறது. ஒரு 'மூன்றாம் உலக சமூகமாய்' நமக்கு இருக்ககூடிய இந்த பிரச்சனைகளை, பேரழிவின் தீவிரம் மனதில் சற்று குறைந்த பின் பேசலாம் என்று நினைத்தால், வரும் செய்திகள் நமது சமூகத்தின் வேறு வக்ரங்க்ளை எடுத்துரைக்கிறது.

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் பிணத்தை ஒப்படைக்க பணம் பறிக்கிறார்களாம். அடிவயிற்றிலிருந்து கோபம் வந்தாலும், இதற்கான சமூக காரணக்களைத்தான் யோசிக்கவேண்டியுள்ளது. ஏனெனில் நானும் ஒரு குட்டிபூர்ஷ்வா! இந்த அவலத்திற்கு ஏதோ வகையில் என் இருப்பும் காரணம். வெறும் வாய்வார்த்தையில் நம் சமூகத்தின் லஞ்ச ஊழலை பற்றி பேசமுடியவில்லை. இது இன்னும் புரையோடிப்போன ஒரு நோயின் அறிகுறி மட்டுமே என்று உணர்கிறேன். அதே போலவேதான் மக்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளையடிப்பவர்களையும், பிணங்களிடமிருந்து நகைகளை திருடுபவர்களையும் பார்க்கவேண்டியுள்ளது. இறந்த உடல்களை நாய்கள் குதறுவது போலத்தான் இதுவும். அந்த நாய்களை எந்த சக்தி உந்துகின்றதோ, அதே போல ஒன்றுதான் இறந்த உடல்களில் கொள்ளையடிக்க வைக்கிறது. இதை விட எல்லாம், நிவாரண நிதிகளில் கை வைக்க போகும் அரசியல்வாதிகள் மேலே சொன்ன நாய்கள், மனிதர்களைவிட பல மடங்கு வக்ரமனம் படைத்தவர்கள். மேலே சொன்னவர்களுக்கு கூட வரக்கூடிய, இயல்பின் உந்துதலாய் வரும் இரக்கத்தையும் கொல்லகூடியவ்ர்கள் இவர்கள்.


நேற்று ஜாஃபர் அலி என்று ஒருவர், குரான் வாசகத்தை முன் வைத்து, நடந்த பேரழிவிற்கு மக்கள் செய்த அநியாயமே காரணம் என்று சிவப்பு கலரில் எச்சரிக்கை வைக்க, அவர் எழுதியது பலத்த கண்டனத்திற்குள்ளாகியது. நானும் என் பங்கிற்கு கண்டனத்தை தெரிவித்தேன். எல்லா கண்டனமும் ஜாஃபர் இன்னும் திடமாய் தன் நம்பிக்கையை முன்வைப்பதில் முடிந்தது.. இப்போது அதையே கொஞ்சம் மாற்றி பாலிஷான பாஷையில் ரஜினி சொல்கிறார். ரவியை தவிர எத்தனை பேர் இப்போது ரஜினியை கண்டிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு கூட்டம் சேரரது என்றே தோன்றுகிறது. வைரமுத்துவின் என்ற நாயின் கவிதை தரும் அருவருப்போ சொல்லி மாளது. அதன் ஒவ்வொரு எழுத்தும் போலித்தனத்தால் ஆனது. ஒவ்வொரு வார்த்தையும் தனது கேடுகெட்ட ரசனையுடன் அவர் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது. ஒரு உதாரணம் "சுமத்ராவை வென்றான் சோழமன்னன் ராஜராஜன் அந்தப் பழிதீர்க்கவா சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச் சோழநாடு கொண்டாய்?" நமக்கு எழுத தோன்றுகிறது. இந்த மாதிரி ஆசாமிகளை விட்டுவிட்டு ஏழைமக்களை கொண்ட கடலை ரசிக்க முடியுமா? கையில் கிடைத்தால் இந்த ஆசமிகளை எல்லாம் கடலில் வீசவேண்டும் என்று தோன்றுகிறது.


இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒருவிஷயம். இந்த உலகின் மீதே நேசத்துடன் வெங்கடேஷ் எழுதியிருக்கிறார். சுனாமிக்கு நன்றி சொல்கிறாராம். அவர் சுனாமியிலிருந்து தப்பிவிட்டார். ரொம்ப சந்தோஷம், அதற்காக நன்றி சொன்னால் கூட மன்னிக்கலாம், எல்லா மனிதனுக்கும் இருக்கும் சுயநலம்தானே அது என்று. அவர் எதற்காக நன்றி சொல்லியிருக்கிறார் என்றால்,

"சுனாமி என்ற இந்த மிகப்பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ள வடு மிக ஆழமானது. என் வரையில், வாழ்வைப் பற்றியும் உயிரின் மகத்துவம் பற்றியும் இது ஏற்படுத்தியுள்ள புரிதல்களும் மிக அதிகம். நன்றி சுனாமி."

அடப்பாவி, உங்களுக்கு இந்த புரிதல் வர இத்தனை ஆயிரம் பேர் சாகவேண்டுமா? படித்த இலக்கியங்களும் தத்துவ நூல்களும் இங்கேதான் உங்களை கொண்டுவிடுகிறதா? ஒரு தமிழ் சிறுபத்திரிகை எழுத்தாளனை விட இவ்வளவு சுயநலமாய், இத்தனை வக்கிரமாய், வன்முறையாய் யாராலும் கருத்து சொல்லமுடியாது. இவர்கள் தேடிய அறிவு எல்லாம் இங்கேதான் கொண்டுவிடும் என்றால் அந்த அறிவு எத்தனை ஆபத்தானது, பயங்கரவாத தன்மையுடையது என்றுதான் கேட்க தோன்றுகிறது. ஒரு பக்கம் அவர் தப்பித்ததையும், அவருடைய மனசஞ்சலத்தையும் அங்கீகரிக்கும் தொனியுடன் இது குறித்து கேள்வி எழுப்பி எழுதிய பின்னூட்டங்களை நீக்கிவிட்டார், சுனாமி அளித்த ஞானம் அவரிடம் இருந்த கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும் கூட கொன்றுவிட்டது ஆச்சரியமாய் இருந்தது. என்னை விடுங்கள். "எப்படி அய்யா, இத்தனை பேரை கொன்ற சுனாமிக்கு நன்றி சொல்ல முடிந்தது, ஒரு எழுத்தாளன் தன் சொந்த துயரங்களை மீறி சிந்திக்க வேண்டாமா" என்று மனிதநேயன் என்ற பெயரில் ஒருவர் கேட்டிருந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட்டார். ஒரு உயிராபத்திலிருந்து மீண்டவர் குறித்து, கரிசனமில்லாமல் பேசுவதாக யாருக்கேனும் தோன்றலாம். இதே மதிரி இல்லாவிட்டாலும், உயிர்தப்பித்த அனுபவம் பலருக்கும் உண்டு. அதைவிட நெருங்கியவர்களை இழந்த அனுபவம் பலருக்கும் உண்டு. எனக்கு நிச்சயம் உண்டு. அதனால் இது எத்தகைய வக்ர அறிவுஜீவி பயங்கரவாதம் என்று எனக்கு நன்றாகவே புரியும்.


ஜாபர் அலியை கண்டித்த பெரிய கூட்டம் வெங்கடேஷை கண்டிக்கும் என்று தோன்றவில்லை. சுரணை இல்லாத கூட்டம் அங்கே போய் சொரிந்துகொண்டிருக்கிறது.


Post a Comment

23 Comments:

Blogger சுந்தரவடிவேல் said...

இந்த எல்லாக் கருமங்களையும் பார்த்து எனக்கும் ஆத்திரம் வருகிறது. போதாக்குறைக்கு மோட்சதீபம் ஏத்துறாகளாம். ஏண்டா அங்க பொணம் கெடந்து நாறுது இங்க என்ன மோச்ச தீபம், மெழுகுவர்த்தின்னு வெரட்டியடிக்க முடியலயே. இப்போது இதுகளை எதிர்த்து எழுதிக் கொண்டிருப்பதை விட வேறு எதையாவது செய்யலாம்.

12/30/2004 1:24 AM  
Blogger KARTHIKRAMAS said...

வெங்கடேஷின் "நன்றி" கண்டிக்கப் படவேண்டியதொன்று. அது போலவே இந்த "மத காரணங்களை அடுக்கும்" அடி முட்டாள்களையும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஜாபர், அல்லா இன்னும் எத்தனை பேரை அழிப்பான், எங்கெங்கு அழிப்பான் என்று சொல்வாரா? எழுதும்போது மனசாட்சியை விற்றுவிட்டு எழுதும் ஜென்மங்கள். வைரமுத்துவின் புத்தி இத்தனை கேவலமானதா?

12/30/2004 1:34 AM  
Blogger Venkat said...

ரோஸா வஸந்த் - உங்கள் குறிப்பைக் கண்டபின் வெங்கடேஷ் குறிப்பைப் படித்தேன். அவர் குறிப்பாக "மற்றவர்களைச் சாகடித்து என்னைப் பிழைக்கவைத்ததற்கு நன்றி" என்ற ரீதியில் தொனிக்க எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. செத்தவர்களை பாவிகள் என்றும் தான் நல்ல்லவன் என்றும் சொல்லவில்லையே. சாவின் விளிம்பில் தொட்டுத் திரும்பிய தனக்கு வாழ்வைப் பற்றிய புரிதல் கிடைத்ததாகத்தானே எழுதியிருக்கிறார் (இல்லை இரவு நான் தூங்கி விழிக்குமுன் சில வரிகள் நீக்கப்பட்டுவிட்டனவா?).

"போதும்பா ஒஞ் சங்காத்தமே வேணாம், ரொம்ப தாங்கஸ்" என்று சொல்வதில் ரொம்ப தாங்க்ஸ் என்ன அர்த்தமோ அதே அர்த்தத்தில்தான் சொல்வதாகத் தெரிகிறது.

வெங்கடேஷின் இந்தக் குறிப்பில் கட்டாயம் மனிதாபிமானம் தொனிக்கவில்லை. சாவின் விளிம்பைத் தொட்டுப் பார்த்த தான் இனி கிடைத்திருக்கும் தன் உயிரை வைத்துக்கொண்டு பிறருக்கு என்ன செய்யலாம் என்று எழுதவில்லை. ஆனால் இதில் வக்ரமேதும் தொனிப்பதாகவும் தோன்றவில்லை. - இல்லை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா?

நிமிர்ந்து நின்று செத்தவர்களைக் குற்றவாளிகளாக்கும் ஜாபருடன் இதை எப்படி ஒப்பிடுகிறீர்கள்? மற்றபடி ரஜினி, வைரமுத்து பெனாத்தல்கள் பொதுவில் தெரிந்ததுதானே. ரஜினியின் அறிக்கைக்கெல்லாம் விளக்கம் சொல்லியோ கேட்டோ எழுதுவதும் வைரமுத்தின் சந்தத்திலும் சத்தத்திலும் அர்த்தம் தெடுவதும் வெட்டிவேலை என்று நமக்கு முன்னரே தெரிந்ததுதானே!

12/30/2004 1:34 AM  
Anonymous Anonymous said...

வெங்கட்,
அவர் குடும்பத்தில் இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டு இருந்தால்,
"போதும்பா ஒஞ் சங்காத்தமே வேணாம், ரொம்ப தாங்கஸ்" என்று எழுதுவார இந்த நேசக்காரர்?

12/30/2004 1:41 AM  
Blogger டிசே தமிழன் said...

RosaVasanth,
I have read and experienced lots of similar things like you are saying. But I postponed those to put in writtings cuz instead of responding to stupid people i could do some help for the affected people. These ppl neva gonna learn anything,man. But itz (like you've written) better to show them that we are not gonna tolerate their sick minds.

12/30/2004 1:41 AM  
Anonymous Anonymous said...

நான் எழுதிய கருத்தையும் நீக்கி விட்டார்கள். பாதகமில்லை. விமர்சனங்களை தாங்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்கள் என்ன செய்தாலும் சரி தான் என்று சொல்லும் கூட்டம் ஒன்று இருக்கிறது.

நான் எழுதியதின் சாராசம் இது தான் ?

தன்னைச் சார்ந்து எழுதாமல் இந்தச் சமூகத்தை சார்ந்து எழுதுபவன் தான் எழுத்தாளன். பல ஆயிரம் உயிரைக் கொன்ற சுனாமி, தனக்கு வாழ்க்கையின் தத்துவத்தை புரிய வைத்ததாம். அதற்கு ஒருவர் நன்றி சொல்கிறாராம். அவருடைய வலைப்பக்கம் உலகை நேசிக்கிறதாம்.

65,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய சுனாமிக்கு எப்படியய்யா உங்களால் நன்றி சொல்ல முடிகிறது.

இது குருரம் மட்டுமல்ல மகா குருரம்

மனிதநேசன்

12/30/2004 1:44 AM  
Blogger ROSAVASANTH said...

வெங்கட், உங்கள் பார்வை மிக மேலோட்டமானது. இப்படி நேரடி லாஜிக் போட்டு, 'இதில் என்ன தப்பு' என்பது போல் கேட்டால், பதில் சொல்வது, அதிலும் கன்வின்ஸிங்காக சொல்வது ரொம்ப கஷ்டம்!

விஷயம் மிக எளிதானது. ஒரு பேராபத்திலிருந்து தப்பித்ததை *தன்* மன அளவிலொருவன் பாடமாய் எடுத்துகொள்வது என்பது வேறு. அது குறித்து உலகிற்கு ஒரு கட்டுரை எழுதும் போது, 'எனக்கு ஞானம் அளித்தாய், நீ வாழி' என்பது வேறு. அவருடய பார்வையில் வெளிப்படுவது ஒரு எக்ஸீஸ்டென்ஷியஸ்ட் சார்ந்த ஒரு அன்னியமாகிய அறிவுஜீவி பாசிசம். அதயே நான் கண்டிக்கிறேன். நீங்கள் இப்படி நேரடி லாஜிக் போட்டால் பேசுவது கஷ்டம். அதைவிட இந்த ஆசாமிகளே இப்படித்தான், எல்லாவற்றிலும் நொள்ளை சொல்வார்கள் என்றுமுற்றிலும் புறக்கணித்துவிட்டு போய் விடுவார்கள்.

மிக தெளிவாய் என் எண்ணபடி, வெங்கடேஷ் எழுதியது, பிணங்களிடம் பிடுங்கும் திருடர்க்ளைவிட, ஜாபர் அலி என்ற மத அடிப்படைவாத க்ளோனை விட, நமது ஜிகினா மேனா மினுக்கிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளில் வெளிபடுவதை விட வன்முறை மிகுந்தது என்று நினைகிறேன். இதை ரொம்ப தர்க்கபடுத்தி, எதிராளிக்கு விளங்கும் படி அல்லது இடையீடு செய்தி கேள்வி கேட்கமுடியாதபடி எழுத என்னால் முடியும். ஆனால் இப்போது முடியாது.

12/30/2004 1:52 AM  
Blogger ROSAVASANTH said...

//"போதும்பா ஒஞ் சங்காத்தமே வேணாம், ரொம்ப தாங்கஸ்" என்று சொல்வதில் ரொம்ப தாங்க்ஸ் என்ன அர்த்தமோ அதே அர்த்தத்தில்தான் சொல்வதாகத் தெரிகிறது. //

வெங்கட், அவர் சொன்ன நன்றி, நீங்கள் குறிப்பிடும் "ரொம்ப தேங்ஸ்" அல்ல. எப்படி உங்களால் அப்படி எடுத்துகொள்ள முடிகிறது என்று புரியவில்லை.நீங்கள் சொல்வது வெறும் வார்த்தை! அவரோ மிக ஸீரியஸாய் வாழ்வின் மிகபெரும் 'ஞானம்' ஒன்றை தந்ததர்காய், உண்மையான அர்த்தத்தில் சொல்லப்படும் நன்றி. இதை நான் குறிப்பிட்ட விதமாய் பார்க்க பலருக்கும் முடியும், என்ன வகை புரிதல் கைவசம் இருக்கிறது என்பதை பொறுத்தது அது -தர்கத்தை அல்ல.

12/30/2004 2:07 AM  
Blogger ROSAVASANTH said...

தர்க்கபடுத்தி எதையும் பேசுவது இப்போது சாத்தியமில்லை. பொத்தாம் பொதுவாய் ஒரு விஷயம் சொல்கிறேன். ஒரு உதாரணத்திற்கு இந்த http://zendaily.blogspot.com/2004/12/blog-post_110421081106542857.html ஜென் கதையை படிக்கவும். இதில் வெளிப்படுவது ஒரு ஞானம் ஒரு அறிவு. இதுவும் மரணத்தை குறித்ததுதான். வெங்கடேஷிடம் வெளிப்படுவது தான் அறிவு என்று நினைப்பதை பறைசாற்றும் ஒரு வன்முறை. இதைவிட தெளிவாக வேறு எதையும் என்னால் சொல்லமுடியாது.

12/30/2004 2:38 AM  
Blogger ravi srinivas said...

என்னைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி என்று வேண்டுமானால சொல்லலாம், அப்போதும் கூட
ஏன் எத்தனை பேரை பலி கொண்டாய் என்ற கேள்வியும் கூடவே எழும்.வெங்கடேஷின் பதிவில்
அந்தத் தொனி இல்லை.சில விஷயங்களை கற்றுத்தருகின்றன என்பதற்காக யாராவது விபத்துக்களுக்கும், தொற்று நோய்களுக்கும் நன்றி தெரிவிக்கிறார்களா என்ன. எப்படி பார்த்தாலும் நேசமுடன் பதிவு தரும் தொனி விமர்சனத்திற்கும்,கண்டனத்திற்கும் உரியதுதான்

12/30/2004 2:39 AM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டமளித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. இப்போது தூங்கபோயாகவே வேண்டும்.

ரவி, அவர் கடவுளுக்கு நன்றி சொன்னால் கூட புரிந்துகொள்ளமுடியும். மற்றவரை பற்றி எண்ணாவிட்டால் கூட புரிந்துகொள்ள முடியும். இங்கே ஒரு பேரழிவு அவருக்கு ஞானம் தரும் போதிமரமாக திகழ்கிறது. அதன் வன்முறை உன்னதபடுத்த படுக்கிறது. தரிசனமாகிறது. அதுதான் வக்கிரம். உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.

12/30/2004 2:43 AM  
Anonymous Anonymous said...

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களிடம் வேறுவகையான எதிர்வினைகளை எதிர்பார்ப்பது நமது குற்றம். இதேபோல் கும்பகோணம் தீவிபத்தின்போதும் சில வக்கிரமான, கோமாளித்தனமான எதிர்வினைகள் வெளிப்பட்டன. அப்போதும் இந்த வக்கிரப்போட்டியில் வென்றது ஒரு எழுத்தாளர் தான்.

பா. ராகவன் அப்போது தன் வலைக்குறிப்பில் எழுதியது இது:
"எண்பது குழந்தைகளை மொத்தமாகச் சாப்பிடும் அளவுக்கு எந்த அசைவக் கடவுளுக்கு அப்படியொரு பேய்ப்பசி எடுத்ததோ தெரியவில்லை".

ஒரு வெற்றிகரமான எழுத்தாளரால் இப்படி முட்டாள்தனமாக கற்பனை செய்யமுடிவது ஆச்சரியமாக இருக்கிறது. நெஞ்சை உலுக்கிய சோகத்தை உடனடியாகச் சொல்லவேண்டி வரும்போதுகூட இவ்வளவு கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க முடிவதற்குக் காரணம் சமூக நோயா அல்லது தனிநபரின் மன நோயா என்று தெரியவில்லை.

பாராவும், வெங்கடேஷ¤ம் நண்பர்களாயிருப்பதில் ஆச்சரியமில்லை.

சுந்தரமூர்த்தி

12/30/2004 2:55 AM  
Anonymous Anonymous said...

At this juncture, it is better for EVERYONE concerned to find ways to help the affected people than trying to find fault with the opinions expressed by fellow bloggers. Let us all do that FIRST and there is always time to argue and fight later. How about setting up a Joint Blogger Fund?

12/30/2004 3:53 AM  
Blogger துளசி கோபால் said...

ஏம்ப்பா,

இயற்கை அழிவுலே பாவம் புண்ணியம் எல்லாம் எங்கிருந்து வந்தது? செத்தவுங்க எல்லாம் பாவிங்கன்னா
பிஞ்சுக்குழந்தைங்க அப்படி என்ன பாவம் செஞ்சிருக்கும்?

ஏழையாப் பிறந்து, வசதி வாய்ப்புங்க இல்லாம மீனவர் குப்பங்களிலே கடலுக்குப் பக்கத்திலே இருந்ததுதான்
அவுங்க செஞ்ச பாவமோ?

ஏன் இப்படி மனசாட்சி இல்லாம வெந்த புண்ணுலே வேல் பாய்ச்சுறாங்க? நம்மளால் ஆன உதவியை
மட்டும் செஞ்சுகிட்டு இருந்தாப் போதாதா?

அடுத்தவன் கஷ்டத்தைப் பார்த்தும் மனசுலெ ஈரம் இல்லேன்னா, நாமெல்லாம் மனுஷன்னனு சொல்லிக்க
முடியுமா?

12/30/2004 5:09 AM  
Blogger டிசே தமிழன் said...

Anonymous,
I beleive itz a better idea to start a joint block. Me willing to help you.

12/30/2004 5:53 AM  
Blogger ROSAVASANTH said...

anonymous, I agree with you. It is ridiculous to talk about other things.

The sequence of news and writings, I read yesterday, made me to write. Sorry for the diversion. Yes, we should have a joint blog for relief. I have collected whatever i found here, in my earlier post. I will post it again. Thanks!

12/30/2004 1:18 PM  
Anonymous Anonymous said...

Rosa, DJAY
Anonymous was me. Without putting my name, I published the comment. Sory!
We need ideas from everyone on setting up a common fund, if possible. Co-ordination from bloggers thru'out Tamilnadu is required for this effort.
enRenRum anbudan,
BALA

http://balaji_ammu.blogspot.com

12/30/2004 4:40 PM  
Blogger ROSAVASANTH said...

I am jus writing a blog

12/30/2004 4:41 PM  
Anonymous Anonymous said...

ROSA,
Forgot to mention one more thing. We discussed in our company and it has been decided to deduct one day's salaray (agreed by most of the employees) towards contribution to Tsunami relief. We are looking at some NGOs for disbursement of relief.
enRenRum anbudan
BALA

12/30/2004 4:46 PM  
Anonymous Anonymous said...

Hello Tamil saar arivu jeevihalae,

There is no meaning for anything. Life has no meaning. If you try to interpret what nature is saying, it would be a waste. I consider all these posts as people's interest to prove that everyone is a karuththu kandasamy. If you really feel bad about someone dieing this way..thats your right...and if someone feels thankful about escaping from a danger, that too is his right. If selfishness is the reason for al these that's natural. Human life is existing because of selfishness...you are writing and I am writing and everyone is existing because of selfishness...but when that is expressed it looks odd...thats all...maranthu vittu velaya parpom ...vangayya...

1/02/2005 11:03 PM  
Blogger ROSAVASANTH said...

//There is no meaning for anything.// Yes, definitely!

Thanks for your karuththu, Mr. Kandasamy.

1/02/2005 11:14 PM  
Blogger Nambi said...

சுனாமி சோகத்தைத் தொடர்ந்து எதுவுமே எழுதத் தோன்றாமல் மனம் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்த பிறகு துக்கத்தையாவது சொல்லி அழலாம் என்றிருந்தேன். ஆனால் சுனாமியை சாக்காக வைத்து வக்கிரங்கள் வெளிப்படும்போது மனம் இன்னும் வலிக்கிறது.

முதலாவதாக:
ரஜினி என்னும் நடிகனின் அறிக்கை மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இப்படிகூட ஒரு வக்கிரம் மனதில் இருக்குமா?. இந்த ஆள் கொடுத்த உதவித்தொகையை தூக்கி மூஞ்சியிலேயே ஏறிய வேண்டும். இந்த ஆளை ஒரு கோமாளி என்று மட்டுமே நினைத்திருந்தேன். இமயமலை போய் வக்கிரத்தையா வளர்க்க வேண்டும்?

அடுத்து:
கருணானிதி, வைரமுத்து கவிதைகள். சோகத்தை வெளிப்படுத்த அவரவர்க்கு தெரிந்த விதத்தில் செய்கிறார்கள் என்பதை இங்கு சொல்ல முடியாது. கவிதை எழுத சுனாமியால் செத்துப்போனவர்களால் இவர்களுக்கு இன்னுமொரு கரு. எரியும் வீட்டில் பிடுங்கிய வரை லாபம்.

"பறவைகள் கூட்டமாக வந்தால் அழகு
மரணம் தனியாக வந்தால் அழகு"

கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும்போல் உள்ளது.வெங்கடேஷ்:
இவர் எழுதியுள்ளது உணர்ச்சி வசப்படாமல் முழு அறிவுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ள கடைந்தெடுத்த வக்கிரம். ஆழத்தில் "நான் பிழைத்து விட்டேன்" என்ற நிம்மதி மட்டும் இல்லை "என் நிலையில் இருந்த மற்றவர்கள் செத்துப்போய் விட்டார்கள்" என்கிற சந்தோஷம் வெளிப்படுகிறது.

* * *

சோகத்தை சுவரிடமாவது சொல்லி அழு என்பது உண்மைதான். சோகத்தை மட்டும் சொல்லி அழுங்கள். அது உங்களுக்கு ஆறுதாலாக இருக்குமானால். ஆனால் உங்கள் மன வக்கிரங்களுக்கு வடிகால் தேடாதீர்கள்.

நம்பி.

1/04/2005 4:19 PM  
Blogger ROSAVASANTH said...

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பதிவை பார்த்துவிட்டு, இப்போதுதான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். சிவக்குமார் எழுதியது குறித்து நான் எழுதியிருக்க தேவையில்லை. உங்களை போலவே பொறுக்க முடியாமல் மட்டும், சில விஷயங்களை எழுத நேர்ந்த போது, அவர் முன் வைத்த தாக்குதல் எதிர்பாராதது. அதனால் அதை பொருட்படுத்தி எழுத நேர்ந்தது.

1/04/2005 5:23 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter