ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, January 05, 2005

குமட்டல் வாரங்கள்.

வலைப்பதிவுகளிலும் மற்றும் இணையத்திலும் சுனாமியை முன்வைத்து படிக்க நேர்ந்த சில விஷயங்கள் இரண்டு வாரமாய் ரொம்பவே குமட்டிவிட்டது. வலைப்பதிவுகள் படிப்பதை நன்றாகவே குறைத்துகொண்டு கொஞ்சம் மற்ற விஷயங்களை படிக்கலாம் என்று போனால் பதிவுகளில் இந்த கட்டுரை படிக்க நேர்ந்தது.

இந்த வெங்கட் சுவாமிநாதன் விவகாரத்தை முதலில் இருந்தே கவனித்து வருகிறேன். நண்பர் டீஜே 'ஏதோ' எழுதி ஜெயமோகன் தாக்குதலிட்டதில் மலையில் அடிக்க பட்ட டார்ச் ஒளியாய் தெரிந்த சில காட்சிகள் குறித்து எழுத ஒரு சந்தர்பத்தை நோக்கியிருந்தால், இன்னொரு பக்கத்தில் காலச்சுவடின் நிறுவனமாக்க பட்ட குதர்க்கங்கள் வேறு பரிமாணத்தை காட்டி, அதன் நிழல் இந்த காட்சிகளில் மங்கலடிப்பது தவிர்க்க முடியாமல் போவதை எப்படி எடுத்துகொள்வது என்ற குழப்பத்தின் உச்சமாக காலச்சுவட்டின் இந்த மிரட்டல்.

இந்த மிரட்டல்களில், நமக்கு எந்த வகையிலும் தெளிய வாய்பில்லாத வகையில், நேரடியாகவோ, உந்துதலாகவோ, நிழலாகவோ, மௌனமான ஆமோதித்தலாகவோ சுந்தர ராமசாமி பின்னால் இருக்கிறார். இவர்தான் 80களில், - சொல்லபோனால் விக்ரகங்கள் உடைத்து சிதறடிக்க பட்டு, அதன் ஜல்லியில் போடப்பட்ட சாலைகளில் நவீனவகை வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் இன்றும்- ஒரு தேர்ந்த இலக்கியவாதியாகவும், முக்கியமாய் ஒரு இருத்தலியல்வாதியாய் அறியபட்டார்- படுகிறார் - என்றால் தமிழ் இலக்கிய சூழலை நினைக்கையில், ஹாரிபிள்!

சுந்தர ராமசாமியை இன்னமும் இருத்தலியல் வாதியாக நினைக்கும் நபர்கள் இருக்கும் இலக்கிய சூழல் ஒரு பக்கம் இருக்கும்போது, சுனாமிக்கு நன்றி சொன்ன ஆசாமி பாரதியோடும், அவருக்கு சுனாமி தந்த ஞானம் அசோகனின் கலிங்கத்து மனமாற்றத்துடனும் ஒப்பிடப் படும் வலைப்பதிவு வக்கிரம் புரிந்துகொள்ள முடியாதது அல்ல.



Post a Comment

17 Comments:

Blogger -/பெயரிலி. said...

இப்படியெல்லாம் பார்த்தால், நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது தமிழ் இடர்க்கியவாலிகள் நீதிமன்றத்திலே நிற்கின்றதே முழுநேரத்தொழிலாகக் கொள்ளவேண்டும். வெங்கட் சாமிநாதனின் கருத்துகளோடுநான் வாசித்த அளவிலே பலவற்றில் உடன்பாடில்லை; ஆனால், இப்போது, காலச்சுவடு செய்வது ... "ஸாரி கொஞ்சமில்லை... ரொம்பவுமே ஓவர்." இப்படியாகப் பார்த்தால், பிரமிள் தொடக்கம் வேதசகாயகுமார்வரை எத்தனை பேருக்குக் காலச்சுவடு நீதிமன்றம் வர வழிவைத்திருக்கவேண்டும்.. இனி இதை வைத்தே பாதிப்பத்திரிகைகளும் மீதி இணையத்தினரும் ஒரு கிழமை ஓட்டுவார்கள் :-( தமிழன்பனினால் வந்த சூட்டோடு வந்த சட்ட அழைப்போ :-)

1/05/2005 5:02 PM  
Blogger ROSAVASANTH said...

அன்பின் பெயரிலி, இடர்க்கியவாலிகள் என்று சொன்னது எழுத்து பிழையா, அல்லது உத்தேசித்து செய்த பகடியா?

1/05/2005 5:05 PM  
Blogger -/பெயரிலி. said...

பகடிதான்

1/05/2005 5:28 PM  
Blogger ROSAVASANTH said...

நன்று!

1/05/2005 5:42 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

see my response in thinnai, i have criticised venkat swaminathan,su.ra and kalachuvadu. there was no response
from any of them.when kannan openly declared in kalachuvadu that there is nothing wrong in lobbying for prizes on behalf of the author there was not even a murmur as protest from any of the authors or critics.
i had questioned his logic also in my response.kalachuvadu is the kanchi mutt of tamil literary world and there are other less powerful mutts being presided over by individual authors.

1/05/2005 7:36 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

என்னவோ பெரிய பெரிய வார்த்தையள் கதைக்கிறியள். எனக்கெண்டா ஒண்டுமே விளங்கேல. இப்போதைக்கு விளங்காமலிருக்கிறது நல்லம் போலக் கிடக்கிது.

1/05/2005 7:42 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த பெயரிலி, ரவி, வசந்தனுக்கு நன்றி.

ரவி, உங்கள் திண்ணை கட்டுரையை படித்தேன். காலச்சுவட்டை இலக்கிய காஞ்சி மடம் என்று சொல்வதை ஏற்றுகொள்கிறேன்.

நான் இங்கே சொல்லவருவது பரிசு குறித்து அல்ல. ஒரு இலக்கிய விமரிசகர் எழுதிய குற்றம் சாட்டும் கட்டுரைக்கு, அவதூறு வக்கீல் நோட்டீஸ் விட்டு அவர் இருப்பை கேள்விகுள்ளாக்கும் மிரட்டலின், ஒரு குறைந்தபட்ச ஆட்சேபம் கூட இன்றி பின்னே இருக்கும் ஒருவர், தமிழில் முக்கிய இருதலியவாத எழுத்தாளராகவும், அவரது நாவல் எல்லா பட்டியலிலுமொரு முக்கிய இருத்தலியல் நாவலாகவும் அறியபடும் அவலம் குறித்தே!

வசந்தன், உண்மையிலேயே விளங்கவேண்டும் எண்டு ஆசைபட்டால் பதிவுகளில், திண்ணையில் வெ.சாமிநாதனுக்கு விருது குறித்த கட்டுரைகள், எதிர்வினைகளை படியுங்கோ! அதைவிட உருப்படியாய் பல வேலைகள் செய்ய இயலும்.. அதைவிட விளங்காமலிருப்பதே நலம் என்று நினைத்தால், அதுவும் சரிதான்.

1/05/2005 8:15 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

will su.ra claim that he has not sent the notice, but only kannan and kalachuvadu.the whole affiar is sickening.i disagree with venkat swaminathan but he
does not deserve such a legal notice.i am sure that how
he would have realised that kalachuvadu had done to him
what kailasapathy or others marxists whom he had criticised did not do. i think the notice is not just to him but also to any one who dares to criticise them.

1/05/2005 9:51 PM  
Blogger Narain Rajagopalan said...

Pongaya Neengalum, Unga Illaykiya Sundayum....pesama Kumudam padika poyidalam

1/05/2005 10:41 PM  
Anonymous Anonymous said...

சு.ரா.வும், 'காலச்சுவடு'ம் இலக்கியச் சேவையிலிருந்து வியாபாரம், அதிகாரம் என்று பரிணாம வளர்ச்சியடைந்து விட்டார்கள். பணமும், அதிகாரமும் கொழுத்தால் இப்படி முதலில் புலம்பல், பின் மிரட்டல் என்று ஆரம்பித்து வக்கீல் நோட்டீஸ், அடியாட்கள் என்று ஒவ்வொன்றாக வரும். இந்த கொழுப்பை அடக்க நம்மால் முடிந்தது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு சந்தா கட்டி அவர்கள் பத்திரிகையையும் வாங்காமலிருப்பது தான். ஓசியில் படித்துக்கொள்வதில் தப்பில்லை.

சுந்தரமூர்த்தி

1/06/2005 1:01 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி. சுந்தர்மூர்த்தி சொன்னதுபோல் அடுத்த கட்டம் அடியாட்கள் அனுப்புவதுதான். அப்படி நடந்தாலும் ஆச்சரியம் வராது.

ஆனால் காலச்சுவடு போன்ற ஒரு பத்திரிகை (அதுவும் அதன் சர்குலேஷன் எகிறி) வெளிவருவது ஆஃரோக்கியமன விஷயமாகவே எனக்கு தெரிகிறது. காலச்சுவட்டை எதிர்க்க வேண்டும் ,கண்டிக்கவேண்டும், விமர்சிக்க வேண்டு. அதே நேரம் விவாதம் என்று ஏதாவது உயிர்த்திருக்கவாவது அது தொடர்ந்து இதே நிலமையில் வெளிவரவும் வேண்டும்.

அனானிமஸ், குமுதம் படிப்பதும் எனக்கு நல்ல ஐடியாவாகத்தான் தெரிகிறது. ஆனால் எதேனும் வகையில் சிறுபத்திரிகை பாதிப்பு எல்லாவற்றிற்கும் உண்டு, கபர்தார்!

1/06/2005 1:18 AM  
Blogger ROSAVASANTH said...

I am sorry, it was narain, I mistook for anonymous! sorry about that.

1/06/2005 1:21 AM  
Blogger SnackDragon said...

காலச்சுவடு/கண்ணன்/சு.ரா. இப்படிசெய்வதற்கான உள்நோக்கம் ஆராயப்படவேண்டியது. வெறு ம் கோபம்தானா எனத்தெரியவில்லை. மேலும் பதிவுகளில் இதைப் பிரசுரம் செய்ததற்கும் தாம் தூம் என்று குதிக்கலாம் காலச்சுவடு. இருந்தாலும் இது ரொம்ப ஓவர்தான், அதும் வெங்கட் சாமிநாதன் வயசுக்கு, கோர்ட்டுக்கு கூப்பிட எப்படி மனசு வந்தது?

1/06/2005 1:34 AM  
Blogger இராதாகிருஷ்ணன் said...

ஒரு சந்தேகம் (இப்பதிவையோ, அக்கட்டுரையைப் பற்றியதோ அல்ல, சார்ந்தது): தமிழகத்தில் நீதிமன்ற ஆட்சிமொழி ஆங்கிலமா? மதுரைக்காரத் தமிழர் ஒருவர் சென்னைத் தமிழருக்குக் கடிதத்தை ஆங்கிலத்தில் அனுப்புகிறார்?!!!

1/06/2005 8:04 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

i think one can send in tamil also.but many prefer english as they are more comfortable with that.the notice has been drafted so badly that it makes one
laugh.

1/06/2005 1:18 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

சஷி கபூர் படம். பெயர் ஞாபகம் இல்லை.

ப்ரேம் சோப்ரா மேல் நாட்டிலிருந்து வந்தப் பெருமையில் பாடத் துவங்குகிறார். "லண்டனிலிருந்து வந்தேன் நான்" என்று. (பொறியியல் கல்லூரி மாணவர்கள் கழிப்பறையை லண்டன் என்றுக் குறிப்பிடுவார்கள். அந்த லண்டன் இங்குக் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்கே கூறி விடுகிறேன்).

சஷி கபூர் தான் பாடும் எசப்பாட்டில் கூறுவார்: " குதிக்கிறாய் நீ குரங்கு மாதிரி. கிழக்குக் கலாசாரத்தை மறந்து, மேற்குக் கலாசாரத்தையும் அவமதிக்கும் நீ ஒரு அதிசயப் பிறவியே"

அது போலத்தான் தமிழை விடுத்து ஆங்கிலத்தில் நம்மவர்களில் சிலர் எழுதும் ஆங்கிலத்தைப் பார்த்தால் எங்கு அடித்துக் கொள்வது என்பது விளங்கவில்லை. தமிழும் சரியாக வராது என்பது இதை விடப் பெரிய சோகம்.

அன்புடன்,

டோண்டு ராகவன்

1/06/2005 1:49 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த நண்பர்கள் கார்திக், ராதாகிருஷ்ணன், ரவி, டோண்டு ராகவன் ஆகியோருக்கு நன்றி.

1/06/2005 7:48 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter