ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, January 18, 2005

ஃபேன்ஸி பனியன்கள்!

நண்பர் டீஜே சாருநிவேதிதா பற்றி எழுதியதை தொடர்ந்து, பத்ரியின் பழைய பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தை (தாவி தீர்ந்து போய்) தேடி எடுத்து, பிழைதிருத்தி, இன்னும் சிலதை சேர்த்து, மீண்டும் ஒரு முறை தேடி எடுக்க தேவையில்லாத வண்ணம் இங்கேயே இடுகிறேன். தமிழ் சூழலில் சாருவின் எழுத்துக்கள் தனித்துவமானதும் முக்கியமானதுமாகும் என்பது என் கருத்து.

எனக்கு சாருநிவேதிதாவுடன் நேரடி பழக்கம் கிடையாது. ஆனால் அவருடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்த சிலருடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. அப்படி அறிந்தவகையில் சாரு மிகவும் போலியான மனிதர், `குறைந்த பட்ச தொடர்புடைய நட்பிற்கு' கூட அவர் லாயக்கற்றவர் என்று கூறவே கேள்விபட்டிருக்கிறேன். அதே போல நான் வாசித்தவரையில் அவருடய எழுத்தில் காட்டப்படும் தீவிரமும் ஒரு போலித்தனத்தை அடக்கியது என்றே நினைக்கிறேன். சாரு அறிவுறுத்தும் வகையில் அவர் வாழ்க்கையையோ, எழுத்தையோ மட்டும் தனித்து புரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல், இவற்றை எல்லாவற்றுடனும் தொடர்பு படுத்தி பார்க்கையில் போலித்தனமே மிகுதியாய் தெரிகிறது.

வெங்கட் பலவகை பொய்கள் குறித்து போனமாதம் சில பதிவுகள் எழுதியிருந்தார். அதில் சாருவகை என்ற ஒரு வகை பொய்யை விட்டுவிட்டார். அதன் தனித்தன்மை குறித்து அவர் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. சாருவின் ஸ்பெஷாலிடியாக நான் அறிவது, பொய்யை முழுமையாய் தானும் நம்பிகொண்டு சொல்வது. வெங்கட் பொய்கள் குறித்த கடைசி பதிவில், பொய்களை கண்டுபிடிப்பது குறித்து பேசுகிறார். 'பொய் சொல்பவரின் உடலில் இரத்த அழுத்தம், வெப்பம், இருதயத் துடிப்பு, தோலின் விரைப்புத்தன்மை என அசாதாரண மாற்றங்களை அளந்து' சொல்லும் பாலிகிராஃப் பற்றியும், 'பொய் சொல்பவர் மூளையில் ஏற்படும் மின்னோட்ட மாறுபாடுகளை' அணுக்கரு காந்த ஒத்திசைவு (Nuclear Magnetic Resonance) என்ற கருவியை பற்றியும் எழுதியிருந்தார். ஆனால் இது எதுவுமே சாருவகை பொய்யை கண்டுபிடிக்க அணுவளவும் உதவாது. சாரு பொய்யை முழுமையாய் தானும் நம்பிகொண்டு அதை சொல்பவர். இவ்வாறு தானே அதை நம்புவதால், மேற்சொன்ன எந்த மாற்றமும் நிகழாமல் போவதால், அதை பொய் என்று கண்டுபிடிக்கும் சாத்தியமற்று போய்விடுகிறது. எந்த பொய்யறியும் கருவியையும் சாருவால் ஏமாற்றிவிட முடியும் என்றே தோன்றுகிறது.

இதை எல்லாம் தாண்டியே அவருடைய எல்லா வகை எழுத்துகளும் முக்கியமானதாக தெரிகிறது. இவ்வாறு தெரிவதற்கான முக்கிய காரணம் தமிழ் சூழலும், அதன் எழுத்து வரட்சியும், அது பலவகை நவீன வடிவங்களிலும் பேணிவரும் சனாதனமுமே காரணமே அன்றி, சாருவின் எழுத்தாற்றல் அன்று. ரொம்ப காலமாகவே தமிழிலக்கிய சூழல் பேணிவந்த, அவருடைய பாணியில் சொல்வதானால், ஒரு தயிர்வடை ஸென்ஸிபிலிடியை உடைத்தவர் அவர்தான். அதிர்ச்சி மதிப்பிட்டிற்காக செய்வதாக, அதே தயிர்வடை சென்ஸிபிலிடிக்கள் கூறலாம். அதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதிர்ச்சி அளிப்பதற்காக செய்திருந்தாலும் கூட வரவேற்க தக்கதாகத்தான் தெரிகிறது. தனது தாயை பாலியல் தொலிலாளி என்பதை/என்று சொல்லிகொள்ளும்/புனையும் தைரியம் நம் சூழலில் யாருக்கும் இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அதையே முன்வைத்து வசைபாட எத்தனை பெரிய கூட்டம்! தன் கதையை திருட்டு கொடுத்த ஆபிதீன் கூட சாருவை இந்த விஷயத்தில் குத்த முனையும் போது எனக்கு சாருவின் சார்பாகத்தான் யோசிக்க தோன்றுகிறது.

நிச்சயமாய் புரியவில்லை, தனது தாய் ஒரு ஸெக்ஸ் வொர்கர் என்று சொன்னதன்/புனைவதன் மூலம்(அல்லது அப்படி நிஜமாகவே இருப்பதன் மூலம்) என்ன கீழான நிலையை ஒருவர் அடைய முடியும் என்று புரியவில்லை. `கற்போடு' இருப்பதாக நம்பபடும் (என்னையும் சேர்த்து) நமது தாய்மார்களை விட ஸெக்ஸ்வொர்கர் எப்படி கீழனவர் என்று விளங்கவில்லை. `தேவிடியா மவனே' என்ற ஒரு வசைக்கு அத்தனை முக்கியத்துவமும், கோபமும் தரும் நமது சமூக மதிப்பீட்டில் சாருவின் (எழுத்தின்) இருப்பு மிக முக்கியமானதாகவே தெரிகிறது. நம் சூழல் எத்தனை அபாசமானது என்பதை சில காலம் முன்பு 'மன்மதன்' படத்தை ஏதோ வகையில் நியாயபடுத்தும் எல்லா விமர்சனங்களையும், ஆனால் 7G RBC படத்தில் கதாநாயகி நாயகனை புணர்சிக்கு அழைப்பதை சீரழிவாய் எழுதிய கூட்டத்தையும் பார்கும் போது புரிந்து கொள்ளலாம். 'அதிர்ச்சி தருவதன்' மூலம் இங்கே 'புகழை' விட வசைகளை அதிகம் வந்து விழும் என்கிற யதார்தத்தை கணக்கில் கொள்ளும் போது, இந்த 'அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக' என்கிற தர்கம் தயிர்வடைகளின் இன்னொரு துக்ளக் பாணி அசட்டு லாஜிக்காகிவிடுகிறது. இத்தகைய சூழலில், சாருநிவேதிதா என்ற மனிதன் சுய வாழ்க்க்கையில் செய்யும் சமரசங்கள், போலித்தனங்கள், நண்பர்களுக்கான துரோகங்கள் இதை மீறி இந்த முக்கியத்துவம் அப்படியே இருப்பதாக தெரிகிறது.

சாருவின் எழுத்தின் அடுத்த முக்கியதன்மை அதன் பாப்புலர்தன்மைதான். அதே நேரம் அது pulபாகவும் மாறிவிடுவதில்லை. சீரிய(அல்லது சீரியஸ்) இலக்கியத்திற்க்கும், வெகு இலக்கியத்திற்குமான இடைவெளியை அழிப்பது பின் நவீனத்துவ எழுத்தின் ஒரு தன்மையாக சொல்லபடுகிறது. சாருவின் எழுத்து பலவகை வாசகர்களுக்கு இடமளிப்பதை காணமுடியும். ஜீரோ டிகிரியே தினமலர் வாசகர்களாலும், தீவிர சிறுபத்திரிகை வாசகர்களாலும் வாசிக்க பட்ட ஒரு நாவல். இந்த இரண்டு நேரெதிர் தளங்கள், மற்றும் இதற்கு இடைப்பட்ட எல்லாவகை வாசகர்களுக்கும், சுவாரசியமான ஒரு வாசிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அது எழுத பட்டிருப்பதை அறிய முடியும்.

இதை விட முக்கியதன்மை சாருவின் எழுத்தில் வெளிப்படும் நையாண்டிதன்மை. காமெடி என்கிற நகைச்சுவையையோ, ஜெயமோகன் முன்னிலைபடுத்தும் அங்கதத்தையோ நான் குறிக்கவில்லை. Parody என்பதையே நையாண்டி என்பதாக குறிப்பிடுகிறேன். (இதை எள்ளல் என்பதாக டீஜேயும் குறிக்கிறார். ) ஆனால் இங்கே எள்ளல் செய்யபடுவதன் பின்னே ஒரு ஆழமும் இருப்பதை உணரமுடியும். வெறும் புன்முறுவலை மட்டும் வரவழைக்க செய்யும் எள்ளல் அல்ல. பல நவீன கருத்தாக்கங்கள், நிறுவனங்கள் சாருவின் எழுத்தில் சாரளமாய் நையாண்டி செய்யபடுவதை காணலாம். (யாருக்கேனும் இங்கே 'சோ' நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. இங்கே குறிப்பிட படும் நையாண்டி சோவின் அசட்டுத்தனமான அரசியல் நையாண்டி தன்மைகளை உள்ளடக்கியது அல்ல, அதன் தன்மைக்கு நேரெதிரானது. விரிவாய் வேறு ஒரு சந்தர்பத்தில் உதாரணத்துடன் எழுத முயற்சிக்கிறேன்.) ' எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்ஸி பனியன்களும்' நாவல் எக்சிஸ்டென்சியலிஸத்தை, குறிப்பாக அன்று கொண்டாடபட்டு கொண்டிருந்த ஜேஜே சில குறிப்புகளை(மற்றும் தன்னை) நையாண்டி செய்ய எழுதியதாக பார்கலாம். இன்னொரு உதாரணமாய் ஜீரோ டிகிரியில் வரும் `லால் சலாம்' என்ற அத்தியாயத்தை குறிப்பிடலாம். இந்த அத்யாயத்தில் சாரு ஒரு பெரும் விளையாட்டை நிகழ்த்தியிருப்பார்.

(கையில் புத்தகம் இல்லை. அதானால் விரிவாய் மேற்கோள் காட்ட முடியவில்லை. படித்தும் 6 வருடங்கள் 5 வரிடங்கள் ஆகபோகிறது. )

ஒரு போலீஸ்தனமான வன்முறை கலந்த நக்கலுடன் பேசும் ஒரு போலிஸ்காரன், கைது செய்யபட்டுள்ள ஒரு தமிழ்தேசிய புரட்சிகாரன், மற்றும் சாருவின் பிரதிபலிப்பான ஒரு பெட்டி பூர்ஷ்வா எழுத்தாள பாத்திரம், இவர்களிடையேயான உரையாடல். (அந்த பாத்திரம் எந்த அளவிற்கு நாவல் முழுவதும் பகடி செய்ய படுகிறது என்பதை பார்க்க வேண்டும். இதை தன்னை பற்றிய பிம்ப உருவாக்கமாக எல்லாவற்றையுமே அருவருப்பு தரும் அளவிற்கு எழுதும், ஜெயமோகனின் எழுத்தின் தன்மையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.)

ஒரு கட்டத்தில் தேசியகீதம் பற்றி போலிஸ்காரன்,

"தோழர், தேசியகீதம் பத்தி என்ன நினைக்கறீங்க?"

"அது உங்கள் நாட்டின் தேசிய கீதம். எங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எங்கள் லட்சியத்தை அடையும் போது நாங்கள் எங்களுக்கான தேசிய கீதத்தை எழுதுவோம்."

"அடி சக்கை! ஸார் நீங்க தேசிய கீதத்தை பத்தி என்ன நினைக்கறீங்க?"

"நான் அதை ஒரு பிரதியாக பார்கிறேன், ஒரு இலக்கிய பிரதியாக."

"அய்ய யய்யயோ என்னா பதிலு ஸார். இந்த பதிலுக்கே ஒங்களுக்கு நோபல் பரிசு குடுக்கணும் ஸார்!"

(என் நினைவில் இருந்து எழுதபடுகிறது, அதனால்...)

இப்படி ஒரு ஏகபட்ட அர்தங்கள் தொனிக்கும் ஒரு நையாண்டித்தனமான எழுத்தை தமிழில் வேறு யாரும் சாருவிற்கு முன் எழுதியதில்லை. சாருவிற்கு பின் அது ஷோபாசக்தியிடம் வெளிப்படுகிறது, ஆனால் சாருவிடம் வெளிப்படும் *போலித்தனம் நீங்கலாக*. இன்னும் பலமடங்கு தீவிரத்துடன் வெளிப்படும் அந்த நையாண்டி குறித்து விரிவாய் எழுத இருப்பதால் இங்கே மீண்டும் சாருவிற்கே வருகிறேன்.

மேலே சொன்னவற்றை எல்லாம் விட அவருடைய முக்கியமான எழுத்தாக அவர் ஜேஜே சில குறிப்புகளுக்கு எழுதிய விமர்சனத்தை பார்கிறேன். 80களில் ஜேஜேக்கு எழுந்த தகுதியற்ற HYPEற்க்கு எந்த சரியான நேர்மையான எதிர்வினையும் வந்ததில்லை. வந்த சில எதிர்வினைகள் பழமைவாதிகளிடமிருந்து வந்த நொள்ளைகளாக இருந்தது, ஜேஜேயை தூக்கிபிடிக்க இன்னும் வசதியாகவும் போயிற்று. அதை சொல்லவே அன்றய சூழலில் மிகுந்த தைரியம் தேவைபட்டது. சொல்பவன் கேனையனாக பார்க்கபட்டான். பிரமீள் ஜேஜே குறித்து எழுதிய விமர்சனம், பல முக்கியமான தர்கங்களை கொண்டிருப்பினும், மிகுந்த தனி நபர் விமர்சனமும், சொந்த வெறுப்பும் கொண்டது. மேலும் பிரமீளின் (ஜேஜேயின் விதவை மனைவியை முன்வைத்தது போன்ற) வக்கரமும் வெளிப்பட, பிரமீள் சொல்ல வந்த விஷயம் அதில் அடித்து செல்லபட்டுவிடுகிறது. சாருவின் விமர்சனமே ஜேஜே ஒரு போலி என்பதையும், சுத்தவாதி என்பதையும், ஜேஜேயிடம் வெளிப்படுவது எக்சிஸ்டென்ஷியலிஸம் அல்ல, பாசிசமே என்பதை சொன்னது. இதை மிக விலாவாரியாய் மிகுந்த எள்ளல் தன்மையுடன் விளக்குவதாகவும், ஜேஜே குறித்த பல பிரமைகளை உடைக்கும் விதமாக சாருவின் விமர்சனம் மட்டுமே வெளிப்பட்டது. எக்சிஸ்டென்ஷியலிஸமாக கொண்டாடபட்டு, விவரிக்க படும் (குஷ்டரோகி பிச்சைகாரனுக்கு அளித்த பிச்சைமூலம் ஜேஜேக்கு ஏற்படும் 'மாபெரும்' மனவலி) சம்பவங்களை, ஒரு குட்டி கதை மூலமாய் மகாநையாயண்டியுடன் தொடங்கும் விதமே அலாதியானது. இதை விரிவாய் நினைவிலிருந்து இப்போது எழுதமுடியாது.மொத்தத்தில் மீண்டும் ஒரு விளையாட்டை நிகழ்த்தியிருப்பார் என்று மட்டும் சொல்கிறேன். அன்றய சூழலில் அதை அவரால் எந்த பத்திரிகையிலும் வெளியிட முடியாமல், பல முயற்சிகளுக்கு பின், மிகுந்த சிரமத்துடன் தன் சொந்த செலவில் தனி பிரசுரமாக கொண்டுவந்தார். இந்த ஒரு விமர்சனம் சாருவை தமிழ் சூழலில் தனித்து காட்டுவதாகவே எனக்கு தோன்றுகிறது.

முடிக்கும் முன் சொல்லாமல் இருக்க முடியாது. 'ஆபிதீன் கதையை திருடினாரா?' என்பதில் இனியும் சந்தேகப்பட, அல்லது சாருவிடம் ஏதேனும் நியாயம் இருக்கும் என்று நம்ப இனியும் எந்த காரணமும் இல்லை. அது குறித்து சாரு காட்டி வரும் மௌனம் வெறும் கயமைத்தனம் மட்டும் இல்லை. இங்கேதான் சாரு அம்பலபடுகிறார். திருடியது கூட அல்ல, அது குறித்த மௌனத்தில்தான் சாரு ஒரு சாதாரணனாக, ஒரு பெட்டிபூர்ஷ்வா கயமைத்தனத்தை தாண்டாதவராக விழுந்துவிடுகிறார். மிக எளிதாய் அது குறித்த உண்மையை ஒப்புகொள்வதன் மூலம், தனது சாதனைகளை அவரால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அப்படி நிகழாமல் இருப்பதில் சாரு நிகழ்திய அனைத்தின் தீவிரமும் பொசுக்கென்று போய்விடுகிறது.

மீண்டும் இதை முன்வைத்து தங்கள் அரசியல்களை பழமைவாதிகள் புதுப்பித்து கொள்வதும், தங்கள் சனாதன தர்கங்களுக்கு இதை ஒரு ஆதாரமாக முன்வைப்பதும் விளங்கிகொள்ள முடியாதது அல்ல. இதில் தன்னைதானே சாரு அழித்துகொண்டதே என்னை பொருத்தவரை மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஆனால் இதை முன்வைத்து இன்னும் குற்றசாட்டுகளை அதிரடியாய் வைத்து, தங்கள் சொந்த கணக்குகளை தீர்க்கமுனைவது நம் இலகியவாதிகளை எவ்வளவு தூரம் ஸீரியஸாய் எடுத்துகொள்ளலாம் என்பதை சொல்கிறது. உதாரணமாய் ரமேஷ்-பிரேம் எக்சிஸ்டென்ஷியலிசம் பென்ஸிபனியனையும், ஜீரோ டிகிரியை திருடி எழுதியதாக கூறுவது வெறும் நகைச்சுவை. 'எக்சிஸ்டென்ஷியலஸமும், பேன்ஸிபனியன்களும்' நாவலுக்கு பிரேம்தான் முன்னுரை எழுதினார், காப்பியடிக்கபட்ட நாவல் என்று தெரியாமலா எழுதினார்? அதே பொலவே ஜீரோ டிகிரி வந்து அத்த்னை காலம் ரமேஷும் பிரேமும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. மேலும் ஜீரொ டிகிரியில் வெளிப்படும் நையாண்டியை ரமேஷ் பிரேமால் உருவாக்கமுடியும் என்று தோன்றவில்லை. அதற்கான முன்னோடி எழுத்தும் அவர்களிடத்தில் இல்லை.

Post a Comment

21 Comments:

Blogger ROSAVASANTH said...

நண்பர் கார்திக்குடன் நேற்று சேட் செய்ய நேர்ந்தது. நான் வலைப்பதிவுகளை வழக்கமாய் படிக்காததால், இலங்கை பிரச்சனை பற்றி முன்பு நடந்த வலைப்பதிவு சண்டைகளின் தளமுகவரிகளை தந்திருந்தார். இந்திய *நாய்களின்* இலங்கை பிரச்சனை பற்றி எழுதியிருந்ததை படித்த குமட்டல் இன்னும் நிற்கவில்லை. எனக்கு உலகத்திலேயே ரெஸிஸ்டுகளாக இந்த இந்திய நாய்கள்தான் தெரிகிறார்கள். பாஸ்டர்ட்ஸ்!

1/19/2005 12:09 AM  
Blogger சன்னாசி said...

இந்திய 'நாய்கள்' இன்னும் எப்படியெல்லாம் சிண்டைப் பிய்த்துக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமிருந்தால், f... tamil, tamil mentality, tamil idiots போன்ற கூகிள் தேடல்களைக் கொடுக்கவும்! Forumhub Tamilல் சட்டை பனியன் அண்டர்வேர் கிழியுமாறு நாயடி அடித்துக்கொண்டிருப்பார்கள். தமிழன் கன்னடனைத் திட்ட, கன்னடன் தமிழனைக் கறுப்புக் கம்மனாட்டி என்று திட்ட, 'இந்திக்காரன்' தமிழனை குரங்குக்குப் பிறந்தவனே என்று திட்ட, தமிழ்க்காரன் இந்திக்காரனை, பல்விளக்காத வெளிநாட்டு காலாட்படைகளுக்குப் பிறந்த இழிபிறவியே என்று திட்ட, இந்த அனைத்து 'காரர்'களும் சேர்ந்து, யாராவது இலங்கை ஆசாமிகளைத் திட்ட, அவர்கள் பதிலுக்குத் திட்ட....நாலு இந்தியர்கள் சேர்ந்தால், ஐந்தாவது ஆள் ஒருவனைக் கவிழ்ப்பதற்காகத்தான் இருக்கும் என்று சொல்வது இந்த விஷயங்களில் சரிதான்.

நிற்க: ஜே.ஜே. சில குறிப்புகள்? ஒரு அவசரச் சுட்டி -
http://www.litencyc.com/php/sworks.php?rec=true&UID=7531

//அவருடைய பாணியில் சொல்வதானால், ஒரு தயிர்வடை ஸென்ஸிபிலிடியை உடைத்தவர் அவர்தான். அதிர்ச்சி மதிப்பிட்டிற்காக செய்வதாக, அதே தயிர்வடை சென்ஸிபிலிடிக்கள் கூறலாம். அதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதிர்ச்சி அளிப்பதற்காக செய்திருந்தாலும் கூட வரவேற்க தக்கதாகத்தான் தெரிகிறது.//

சாரு நிவேதிதாவின் பாலியல் shock valueக்களில் எத்தனை அவர் சொந்தமாகக் கண்டுபிடித்தது என்பது எனக்குத் தெரியவில்லை? வேற்றுக் கலாச்சாரங்களிலிருந்து உந்துசக்திகளைப் பெற்று சமுதாயச் சீரழிவுகளைச் சீர்திருத்துபவர்களைச் சீர்திருத்தவாதிகள் என்போமோ? அப்படியானால், அவரை ஒரு சீர்திருத்தவாதி என்று அழைப்பதா எழுத்தாளர் என்பதா? சிலுக்கு ஸ்மிதா பற்றி எனக்குத் தெரிந்து வேறு எந்த எழுத்தாளரும் எழுதியதில்லை. Demonize செய்யப்பட்டார். ஆனால் அதுதானே அவர் விரும்பியது? வாழ்வையும் எழுத்தையும் பிரித்துப் பார் என்பதே அனைவர் விருப்பமாக இருந்தாலும், அது வெறும் பாவனை மட்டுமே. சாத்தியமற்ற ஒன்று. அதற்கு எழுத்தாளன் முகமூடி போட்டுக்கொண்டு திரியவேண்டும், யார் என்றே தன்னைக் காட்டிக்கொள்ளக் கூடாது. இது ஏதாவது சாத்தியமா என்ன? தினமலர் வரை போய்விட்டபிறகு தன்னை Garboesque ஆகக் காட்டிக்கொள்ள என்ன தேவை இருக்கிறது? அந்துமணி கோஷ்டிகளைவிட்டு சாரு ஒருநாள் உதைத்துத் தள்ளப்பட்டால் அப்போது இருக்கிறது அவர்களுக்கு வேட்டு என்று நினைக்கிறேன் :)

//'என் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் எழுத்தைப் பார்க்காதே. என் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் வாழ்க்கையைப் பார்க்காதே. என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு'
-in Zero Degree Novel//

என்று இருப்பதையே, என் எழுத்தைப் பார், என்னையும் பார் என்ற அழைப்பாகவே பார்க்கிறேன்.

1/19/2005 1:23 AM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டத்திற்கு நன்றி. இன்னும் எனக்கு ஈழபிரச்சனை தொடர்பாக சில பதிவுகளை படித்த குமட்டல் நிற்கவில்லை. சும்மா இருந்தவனை இப்படி மாட்டிபார்க்க இந்த கார்திக்கிற்கு ஒரு ஸேடிஸ ஆசை ஏன் வந்தது என்று தெரியவில்லை. இதுநாள் வரை வீட்டில் இணையம் வந்து இறங்காததில் இருந்த வசதி இப்போது புரிகிறது.

அமேரிக்கா என்ற நாடு எவ்வளவு வன்முறையை செலுத்தியிருந்தாலும், பொதுவாய் அமேரிக்கர்களுடன் பேசும்போது அவர்களிடம் அது குறித்து சிறிதேனும் விமர்சனம் இருப்பதை அறியலாம். குறிப்பாய் அறிவுதளத்தில் பேசும் போது, தெளிவாக இதை காணமுடியும். இங்கே அறிவுரீதியாய் பேசுபவன்தான் மிக பெரிய வன்முறையாளனாய் இருக்கிறான்.

"என்னதான் இருந்தாலும் இந்த (அமேரிக்க)தேசத்தின் மட்டமான தலைவன் கூட நான் பிறந்த தேசத்தின் "நல்ல" தலைவனை விட பலமடங்கு மேலானவனாக இருக்கும் பொழுது என்னைப் போன்றவர்கள் வாய் திறப்பது கேவலம் தான்." என்று அனாதை சொன்னபோது ( http://anathai.blogspot.com/2004/11/blog-post.html ) அது குறித்து எதிர் கருத்து சொல்ல நினைத்த எனக்கு ரொம்பவுமே சுய பரிதாபமாய் இருக்கிறது.

இத்தனையையும் இவர்கள் *தமிழர்கள்* விஷயத்தில் செய்யும்போது மற்றவற்றில் எவ்வளவு மோசமாய் இருப்பார்கள் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.
(யோவ் கார்த்திக்கு நாம் பாட்டுக்கு எதோ ஜாலியா, நிதானத்துடன் எழுதிகொண்டிருந்தேன்? ஏன்யா உமக்கு இந்த வேண்டாத வேலை?)

1/19/2005 1:40 AM  
Blogger ROSAVASANTH said...

ஜேஜே சிலகுறிப்புகளையும் The Real Life of Sebastian Knightஐயும் முடிச்சு போட்டு நாகார்ஜுனன் எழுதி படித்திருக்கிறேன். அது குறித்த உண்மை எனக்கு தெரியாது. நாவலை படிக்கவில்லை. நீங்கள் படித்திருந்தீர்கள் எனில் எழுதவும்.

1/19/2005 1:47 AM  
Blogger SnackDragon said...

ரோசா,
நானும் இந்த குமட்டல்களை லேட்டாகத்தான் படித்தேன். சம்பவத்தன்று அமெரிக்காவில் இல்லை/வலைப்பதிவு எழுதவும் வாய்ப்பில்லை. இல்லையெனில் வழக்கம் போல, லுங்கியை மடித்துவிட்டுக்கொண்டு பட்டாக்கத்தி பைரவனாய் இறங்கியிருந்திருப்பேன். அதைப்படித்தபின் சில விஷ்யங்களை யோசித்தேன். குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் கருத்துக்களை விடமாட்டேன் என்று தமிழர்கள் திரிவதும், நேர்மையான விவாதத்துக்கு அவர்கள் மனம் திறக்காமல் இருப்பதன் கயமைத்தனமும்தான் தெரிகிறது. எத்தனை திருகிப்போன சமுதாயத்தின் ப்ராடக்ட் -களாக இருக்கிறோம் எனப்தற்கு நல்ல சாட்சி. நான் மிகவும் வேதனைப்படுவது இன்றும் கூட இந்த இழிநிலையிலிருந்து நாம் வெகுதொலைவு வந்து விடவில்லை என்பதும் அதற்கான பலமான எதிர்ப்புக்ளை பயன்படுத்த முடியாமையும்தான்.

அந்த விவாதததை பொறுத்தவரியில், அப்படி ஒன்னும் புரிந்து கொள்ளமுடியாத விஷயங்களை பேசவில்லை என்றும், புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பவர்களை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்தும் சிந்திக்க வைத்தது.

பை த வே, ஸேடிஸ்ட் என்ற பட்டத்துக்கு என் நன்றி ;-)

1/19/2005 2:19 AM  
Blogger SnackDragon said...

சாரு பற்றி,
நான் ஒரு சுண்டைக்காய் இலக்கியவியாதி என்பதாலும், சாருவின் (சில கோணலாய் கிழிந்த பக்கங்களைத்தவிர)ஒரு மண்ணையும் வாசித்ததில்லை என்பதாலும் இன்றைய வரைக்கும், சாரு ஆபிதீனை ஏமாற்றியதுதான் பெரிதாய் மனத்தில் நிற்கிறது என்று பதிவு செய்ய விரும்புகிறேன்.

லேசாய் ரோசாவின் கருத்துகளில் சார்பு உள்ளது என்று சொல்வேன்.

ஆனால் ஜெயமோகனையும், தீவிர இலக்கியத்தையும்- சாருவையும் எப்படி தொடர்புகொண்டு புரிந்துகொளவது என்று தெரியவில்லை.

வேறு சமயங்களில் ஏதாவது வாசித்து கருத்து வந்தால் ஒரு விவாத்ம் செய்யமுடியும்.

1/19/2005 2:28 AM  
Blogger SnackDragon said...

நேற்று ஒரு சிம்ரன் விசிடி பார்த்தேன்,
பத்துபாடல்களில் 5 பாடல்களுக்கு மேல் நீச்சல்காட்சிகள், அத்தனையும் சிம்ரனை எக்ஸ்ப்ளாட் செய்வதற்காக வே இடைச்செருகல் செய்யப்பட்டவை. அததனையும் சிம்ரன் ஆரம்பகால படங்கள்.

இந்த சினிமாவில் வரும் பெர்வர்ட்டிசத்தை பார்க்கும் நாவலில்/எழுத்தில் ஒரு பெரிய கேவலத்தை செய்துவிடமுடியாது என்று தோன்றுகிறது.

சினிமா-பாலியல்-இளைஞர்களை பாலியலுக்கு அடிமைப்படுத்திக்கிடக்கும் சமூகம், அதை அட்வான்டேஜாக வைத்துக் கொண்டு பணம் பண்ணும் பெர்வர்ட் டைரக்டர்கள்/நடிக நாய்கள் என்று பல மனதில் தோன்றின.

1/19/2005 2:35 AM  
Blogger இளங்கோ-டிசே said...

This comment has been removed by a blog administrator.

1/19/2005 5:35 AM  
Blogger SnackDragon said...

மாயவரத்தான் சொல்வது போல் பன்றிகளும் வலைப்பதிவுகள் வைத்துள்ளன என்ற கருத்தில் எனக்கு உடன்பாடே. ;-), மாயவரத்தானை மேலும் எழுத அன்போடு இங்கு அழைக்கிறேன்.

1/19/2005 7:24 AM  
Blogger Thangamani said...

வசந்த்:
ஊங்களது விரிவான பதிவுக்கு நன்றி. நானும் ஏறக்குறைய உங்களுடன் ஒப்பிடுகிறேன். சாருவின், கோணல்பக்கங்கள், ஜீரோ டிகிரி இரண்டையும் வாசித்துள்ளேன். கோணல் பக்கங்களில் சில இலத்தீன் அமெரிக்க படங்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் இவை தவிர பெரும்பாலனாவை அவருடைய போலித்தனத்தைக் காட்டும் வகைலானவையே. அவரது ஜீரோ டிகிரியை அவரது மொத்த இலக்கிய நேர்மையின், தைரியத்தின் சிகரங்களையும், போலித்தனத்தின் பள்ளத்தாக்கையும் ஒருங்கே காட்டும் ஒரு பிரதியென்றே நான் கருதுகிறேன். ஆனால் அவர் நீங்கள் சொன்ன காரணத்துக்காகவே (தயிர் வடை ஸென்ஸிபிலிட்டியை உடைத்தமைக்காக) முக்கியமானவர். எழுத்து என்று இங்கு எழுதப்பட்டு வந்த கற்பனைகளைவிட, பொய்களைவிட, குமட்டும் சுயதம்பட்டத்தை விட அவரது வீழ்ச்சிகள் மோசமானவையல்ல. அவை மறுமுனையில் அவரது சிகரங்களை நினைவூட்டவே செய்கின்றன. நான் சாருவை அவருடைய போலித்தனத்துக்காகவும், பொய்யான நம்பிக்கைகளுக்காகவும் வெறுக்கவே செய்கிறேன். அவை இல்லாவிட்டால் அவரால் ஒரு கணமேனும் அந்துமணி கோஷ்டியோடு இருக்கமுடியாது; ஆனால் ஒழுக்கவாதிகளாகவும், அகிம்சாமூர்த்திகளாகவும், நேர்மையின் மொத்தக் குத்தகைக்காரர்களாகவும் இருக்கும் அனேக எழுத்தாளர்களை (வலைப்பதிவர்களை) விட அவரது இந்த போலித்தனம் மோசமானதல்ல; ஏனெனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இந்த 'இலக்கிய-நேர்மையாளர்-ஒழுக்கசீலர்கள்' நன்கு அறிவார்கள்; சாரு அறியமாட்டார். அதனாலேயே சாருவின் எழுத்து குமட்டவைப்பதில்லை; பரிதாபப்படவைக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான தி.ஜானகிராமன் ஒரு முறை சொன்னதை இங்கு குறிப்பிடவிரும்புகிறேன். 'நான் பல்வேறு எழுத்துக்களை எழுதுகிறேன். எனக்கே எனக்கு பிடித்தவைகளை, எனக்கும் உங்களுக்கும் பிடித்தவைகளை,' (இதை என் நினைவிலிருந்து எழுதுவதால் வார்த்தைபிரயோகங்கள் மாறுபடலாம்-தங்கமணி). இதில் சாரு தனக்கு பிடித்தவைகள் என்று அவர் நம்புவது இன்னொரு வகையாகக் கொள்ளலாம். அதுவே அவரது போலித்தனம்.

வசந்த்/கார்த்திக், அந்த சுட்டிகளை எனக்கும் அனுப்பமுடியுமா? நான் என் மனநிலையைக் கெடுத்துவிட்டதாக உங்களைத்திட்டமாட்டேன் :))).

1/19/2005 8:30 AM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், தங்கமணி, மாயவரத்தான், டீஜேக்கு நன்றி.

குறிப்பாய் பன்றி என அழைத்த மாயவரத்தானுக்கு நன்றி. உங்கள் மத்தியில் வாழும்போது ஒரு பன்றியாய் இருக்க மிகவும் பெருமையடைகிறேன். நாய்கள் ஒருபோதும் ரேசிஸ்டாக நடந்துகொள்வதில்லை. கோபம் வரும்பொது இப்படி அவைகளை கேவலப்படுத்தும் தவறு நிகழ்ந்துவிடுகிறது. (வழக்கமான வசன்மாய்) நாய்கள் மன்னிக்கவும்!

1/19/2005 11:07 AM  
Blogger ROSAVASANTH said...

டீஜே, ஏன் கருத்தை நீக்கிவிட்டீர்கள்? நாய்களுக்கோ பன்றிகளுக்கோ எதிர்பு தெரிவிக்கும் வகையில் அல்ல என்று நம்புகிறேன்.

1/19/2005 11:08 AM  
Anonymous Anonymous said...

I wrote this bit in 1992 in soc.culture.tamil in my selection of 10 best Tamil novels. I guess I have both 'existentialism ...' and 'zero degree'. If you need any particular quotes or pages I can scan and email you.

Sundaramoorthy
-----------------------------------------------------
(8). existentialisamum fancy baniyanum (Chilek kuyil, Kumbakonam) -
Charu Nivedita

Came as a shock to the moralist writers and critics, even among the so
called serious writers. This new novel by the critic Charu Nivedita (his
new pen name is Muniyaandi) is an experiment in Tamil both in form and
content. There are three kinds of narrative styles employed and two sides
of an 'intellectual' exposed. This is an attempt to break the halo of an
'intellectual', which was glorified in Sundara Ramaswamy's 'J.J. cila
kuRippugaL'. Even the size and cover of the book are unusually in the form
of the popular "pocket novel".
-----------------------------------------------------

1/19/2005 11:59 AM  
Blogger இளங்கோ-டிசே said...

ரோசாவசந்த்,
நீக்கியதற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை. பன்றிகள் மொழி மனிதர்களுக்கு விளங்காது என்றே அகற்றியிருந்தேன். சரி நம்ம பாஷை நமக்குப் புரியும்தானே. இதுதான் நான் முதலில் எழுதி அகற்றியது.

YO, WHY DON'T U WRITE SUMFYNK TO PRAISE RAJINI'S VISIT TO SANKARACHCHARI INSTAED OF WASTING YOUR TIME WITH US (PIGS) HERE?

1/19/2005 2:06 PM  
Blogger Narain Rajagopalan said...

சரி விடுங்க வசந்த். பன்றிகளும், நாய்களும் கோவிச்சுக்க போகுது.

1/19/2005 3:13 PM  
Blogger ROSAVASANTH said...

நண்பர்களுக்கு நன்றி.

சு.மு., முடிந்தால் அந்த 'லால் சலாம்' அத்யாயத்தை அனுப்பலாம். என்னால் தட்டச்சு செய்ய முடியுமா தெரியவில்லை. முயற்சிக்கிறேன், வேறு யாரும் கூட முயற்சிக்கலாம்.

1/19/2005 5:10 PM  
Blogger Narain Rajagopalan said...

நானும் முயற்சிக்கிறேன். என் பதிவில் வெள்ளியன்று போடுகிறேன்.

1/19/2005 7:56 PM  
Blogger மாயவரத்தான் said...

தமிழனுக்கும் கன்னடனுக்கும் சண்டை தான்.. கன்னடனுக்கும் ஹிந்திக்காரனுக்கும் சண்டை தான்.. இப்படி ஒவ்வொருக்கொருவர் அடித்துக் கொள்ளுவோம்... சேர வேண்டிய நேரத்தில் சேர்ந்துக் கொள்ளுவோம். இது பலமுறை நிருபிக்கப்பட்டிருக்கிறது. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது தான் இந்தியாவின் தாரக மந்திரமே! இதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு புரிய வைக்க இயலாது தான். தம்மாத்தூண்டு நாடுகளிலேயே ஒற்றுமையாக இருக்க முடியாமல் அடித்துக் கொள்ளும் போது, இவ்வளவு பெரிய நாட்டில் கருத்தொற்றுமையை எதிர்பார்ப்பது பெரும் தவறு! இப்படி பொத்தாம் பொதுவாக இந்தியர்களை 'நாய்கள்' என்று அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். நானும் பதிலுக்கு உணர்ச்சிவசப்பட்டு பன்றி என்று திட்டியதற்காக வருந்துகிறேன். பன்றியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ;) யாராவது உங்கள் உணர்ச்சிகளை புண்படுத்துகிறார்களா..அவர்களை நேரடியாக திட்டலாம்... ஒட்டு மொத்தமாக இந்தியாவையோ, இந்தியர்களையோ குற்றம் சாட்டுவதை தவிருங்கள்!!

1/19/2005 9:08 PM  
Blogger ROSAVASANTH said...

மாயா, ஏன் இத்தனை முட்டாளாக இருக்கிறீர்கள்? சரி அது தெரிந்த விஷயம்தானே!

நீங்கள் என்னை பன்றி என்று சொன்னதை நான் மிகவும் பெருமையாய்தானே எடுத்து கொண்டேன்! பிறகு எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்? அப்படி கேட்கும்போது கூட மீண்டும் பன்றி என விளித்து உங்கள் போலித்தனத்தை நிருபித்ததற்கு நன்றி.

நீங்கள் நினைப்பது போல் நான் ஈழத்தவன் இல்லை. தமிழகத்தவன். நான் எல்லா இந்தியரையும் நாயென சொல்லவில்லை. நான் ரேசிஸ்ட் என்று தெளிவாய் அடையாளம் கண்ட சில இந்திய தாயோளிகளை மட்டுமே அப்படி அழைத்தேன். பொதுவாய் ஒருவனை நாய் என்று திட்டினால் மொத்த மனித குலத்தை அப்படி அழைத்ததாய் ஆகுமா? (கவனிக்கவும் எல்லா இந்தியனும் தாயோளி இல்லை. சில தாயோளிகளை மட்டுமே!) இப்போது நாய்களை கேவலப்படுத்தும் அந்த விளிப்பை வாபஸ் வாங்கிவிட்டேன்.

இந்த வேற்றுமையில் ஒற்றுமை இதையெல்லாம் என்ன எழவுக்கு பேசுகிறீர்கள், இங்கே என்ன சம்பந்தம், என்று உங்களிடம் கேட்பதில் அர்த்தமில்லை. வாய்ப்பு கிடைத்தது பேசிகிறீர்கள். ஜமாய்!

1/19/2005 9:34 PM  
Blogger Narain Rajagopalan said...

மாயா, உங்களின் உணர்ச்சி புரிகிறது. ஆனால், இந்த, வேற்றுமையில் ஒற்றுமை என்பது மிகப் பெரிய ஜோக். அப்படியொன்று இந்தியாவில் இருக்கிறது என நான் நம்ப தயாரில்லை.

என்ன பெரிய வேற்றுமையில் ஒற்றுமை, தமிழகத்தில் குண்டி கழுவ கூடத் தண்ணியில்லாதபோது, தண்ணீர் இருந்தும் தர மாட்டேன் என்று, உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் இருந்த கர்நாடக அரசை மத்திய அரசு என்ன செய்தது ? 55 வருடங்களாக, வடகிழக்கு மாநிலங்களில், என்ன நிலவரம் மாறியிருக்கிறது ?

சக மனிதனை, மனிதனாகக் கூடக் கருத தெரியாத நாட்டில், என்ன பெரிய வேற்றுமையில் ஒற்றுமை வாழ வழி இருக்கிறது. வந்தே மாதரம் சொல்வதும், கிரிக்கெட்டிற்கு குரல் கொடுப்பதும் மட்டும் தேச பக்தி இல்லை.

நீங்கள் எல்லாம், இதனை மறந்துவிட்டு, அரசாங்கத்தின், Intelligence failure-ஐ, கூட, நீங்கள், கார்கில் போர் எனக் கூறி புல்லரிக்கீறீர்கள்? அண்டை நாடான, பாகிஸ்தானை கிரிக்கெட்டில், வெல்வதை, சொந்த பகை தீர்க்கும் செயலாக, நினைக்கும் நீங்கள், ஒரு வெள்ளை நாட்டிடம் தோற்பதை, competing spirit-ஆக நினைக்கிறீர்கள்.

உங்களின், pseudo தேசப்பக்தி புல்லரிக்க வைக்கிறது. சற்று நேரம் கிடைத்தால், Tehelka படியுங்கள், அப்போது தெரியும், இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது.

1/20/2005 2:44 AM  
Blogger WordsBeyondBorders said...

மிக மிக தாமதமான பின்னூட்டம். பதிவு குறித்து சற்றே மாறுபட்ட கருத்து இருந்தாலும் (சில முரண்கள் இருப்பதாக தோன்றியது), மிக convincingஆன நடை பிடித்திருந்தது. (இதுவும் கூட முரண் தானோ?)

12/03/2011 8:46 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter