ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, January 13, 2005

பழமைக்கு ஏங்கும் 'அழகியலின்' உளவியல்!

ஒரு வாரம் முன்பு விஷ்வதுளசி என்ற படத்தை இணையத்திலிருந்து இறக்கி முழுவதுமாய் பார்த்தேன். அதற்கு சில வாரங்களுக்கு முன் படத்தை பார்க்க தொடங்கி, தொடர இயலாமல் போய், அது குறித்து கீழ்கண்டவாறு மனப்போக்கில் முன்பு குறித்திருந்தேன்.

"விஷ்வதுளசி படம் கொஞ்சம் பார்தேன். பத்ரி ஏற்கனவே இந்த படம் குறித்து எழுதியிருந்ததை படித்து, படம் பார்க்க எந்த ஆசையும் இல்லையென்றாலும், இளையராஜா என்ற பெரும் மேதையின் இசைக்காகவும், நந்திதா என்ற பேரழகி, பெரும் நடிகைக்காகவும் (முதல் காரணம்தான் முக்கியம்) பார்க்க துணிந்தேன். இருந்தும் என்னால் 20 நிமிடங்களுக்கு மேல் பார்க்கமுடியவில்லை. அமேரிக்காவிலிருந்து வந்து ஒரு பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு படம் எடுக்க தோன்றியது என்று தெரியவில்லை. அவர் தமிழ் படம் பார்க்கவில்லை என்று சொன்னாலும், மலையாளபட்ங்கள் பார்த்து, அதன் மோசமான அம்சத்தை மட்டும் கற்றிருக்கிறார் என்று தெரிகிறது. மேலே சொல்ல எதுவும் இல்லையென்றாலும், இதை எழுதும்போது இன்னும்க் நந்திதாவின் முகம் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கிறது. மீண்டும் படத்தை இறக்கி பார்க்ககூடும் என்று தோன்றுகிறது."


படத்தை பார்க்கும் விபத்திலிருந்து அப்போது தப்பினாலும், பின்னர் அமைந்த சந்தர்பத்தில் மாட்டிகொண்டேன். காதல், கிராமம் போன்றவற்றை முன்வைத்த படம் என்பதால் எழுந்த, இளசு + எம்.எஸ்.வி. இணைவு குறித்த என் எதிர்பார்ப்பு முற்றிலும் ஏமாற்றப்பட்டது. சில பாடல்கள் தூர்தர்ஷன் மெல்லிசை பாணியில் இருந்தது. வேறு சில இசைஞானி 80களின் மத்தியில், வருடம் நூறு படங்கள் என்ற கணக்கில் இசையமைத்தபோது, மோனோடானஸாக இடையில் வழங்கிய சில சாதாரணங்களை ஒத்திருந்தது. "மயக்கமா..அந்தி மயக்கமா.." என்ற பாடல் மட்டும் உருப்படியாய் என் பார்வையில் தேர்கிறது. ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்த, பிண்ணணி இசையில் துணுக்குகளாக இசைஞானி அளிக்கும் அற்புதமான பொறிகள் கூட அகப்படவில்லை, மிக சாதாரணமாய் இருந்தது பிண்ணணி இசை. ஆனால் நந்திதா என்னை ஏமாற்றவில்லை, அதற்கான வாய்பும் இல்லை.எப்படி அழகாய் இருந்தாரோ, அதே அழகில் படம் முழுக்க தொடர்ந்து, ஒரு நாள் மனநிலையை வியாபித்தார்.

பத்ரி படம் குறித்து உருப்படியான விமர்சனம் எழுதியிருந்தார். (ஆர்கைவில் தேடினேன் கிடைக்கவிலை.) அதை தொடர்ந்து பின்னூட்டமாய் எழுதியதில், " உங்கள் பதிவை படித்த பிறகு மீண்டும் ஒரு முறை என் கணணியில் 'கில்லி' போட்டு பார்பதே சால சிறந்தது என தோன்றுகிறது" என்றிருந்தேன். மற்றபடி எழக்கூடிய கேள்வி ஒன்றே ஒன்று, மேலே சொல்லியதுதான். அமேரிக்காவிலிருந்து வந்து, தமிழில் படமெடுக்க துணிந்த ஒரு பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு முழுக்க, முழுக்க நிலபிரபுத்துவ ரசனையுடன் படம் எடுக்க நேர்ந்தது என்பதுதான். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் அந்த ரசனையை பார்க்கலாம். மம்முட்டியின் இளம் வயது பாத்திரம், சங்க்கீதம் கற்றுகொள்ள வரும் காட்சியில் வாத்தியார் ஏதாவது பாடச்சொல்ல, ஸ்ரீனிவாஸின் பிண்ணணி குரலில் அரோகணிக்க,

"ம்.. ஜமீன் பரம்பரை இல்லையா! அதான் ஸ்ருதி சுத்தமா இருக்கு!" இது ஒரு உதாரணம்தான்.

ஒரு அமேரிக்க ஆணுக்கு இப்படி பட்ட ஏக்கம் இருப்பதை புரிந்துகொள்ள முடியும். பெண்கள் மீதான இந்திய நிலபிரபுத்துவம், மற்றும் வெகுகலாச்சாரம் உள்ளிட்ட எல்லாவகை இந்திய கலாச்சாரமும் அளிக்கும் தளைகளிலிருந்து விடுபட்டு, மேற்கின் சுதந்திரத்தில் செட்டிலாகிவிட்ட இவருக்கு இருக்கும், இந்த பழைய காலத்திற்கான ஏக்கத்தை எப்படி புரிந்து கொள்வது? கவனிக்க வேண்டியது இது ஒரு தனித்த உதாரணம் அல்ல. மேற்கில் செட்டிலாகிவிட்ட, தமிழக பிராமண மற்ற ஆதிக்க சாதியினரின் பொதுவான குணாதிசியமாகவே இது தெரிகிறது. மொழி தவிர்த்த கலாச்சாரத்தின் மீதான இவர்களின் தேடல், மொழிரீதியான அடையாளங்களை தக்கவைப்பதில் இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருப்பதையோ அவதானிக்க முடியும். புலம் பெயர்ந்த ஈழதமிழ் பெண்களிடம் இந்த பொதுவான தன்மை நேர்மாறாக இருப்பதை காணலாம். மீண்டும் கவனிக்க வேண்டியது, தமிழ் மொழிரீதியான அடையாளங்களை அவர்கள் தக்கவைக்க முயற்சிப்பதையும், மற்ற கலாச்சார ரீதியான மாற்றங்களை எளிதாய் ஏற்றுகொள்வதையும் காணமுடியும்.

தழிழகத்து மாமிகள் சென்னையிலேயே தமிழில் பேசுவதை கேவலமானதாய் மாற்றி வருபவர்கள். மேற்கில் நிலைகொண்ட பின் தமிழை திரும்பி பார்க்காததில் ஆச்சரியமில்லை. ஆனால் மேற்கில் இந்தியர்கள் கூடும் ஏதாவது ஒரு நிகழ்சிக்கு போனால், ஏதோ கட்சி கட்டுபாட்டுடன் நடப்பதுபோல் அத்தனை பெண்களும் புடவை கட்டியிருப்பார்கள்.இதற்கு மாறாக புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் எங்கேயுமே வெளிநாட்டில் புடவை அணிந்து பார்க்கவே முடியாது. அவர்களிடையேதான் பல ராடிக்கல் பெண்ணியவாதிகளும் உருவாகியிருக்கிறார்கள். இத்தனையும் அவர்கள் மொழிரீதியான தமிழ் அடையளத்தை தக்கவைத்தபடியே செய்வதை கவனிக்க வேண்டும். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் சென்னையில் சில ஃபெமினிஸ்ட்(அதாவது கர்நாடக சங்கீதம் பரத நாட்டியம் என்று கேள்வி கேட்காமல் சமரசம் கொள்ளும்) மாமிகளுடன் உறவாடிய போது, அவர்கள் தமிழ் பேசாததற்கு, 'தமிழ் மேல் ஷோவினிஸத்தை' ஒரு காரணமாய் சொல்ல கேட்டிருக்கிறேன்.

இப்படி சொல்லிகொண்டு போகும்போதே ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டி இருக்கிறது, நான் மேலே சொன்னது போல் விஷயம் அத்தனை மேலோட்டமானது அல்ல. யதார்த்தத்தில் மேற்குலகில் ஸெட்டிலாகிவிட்ட மாமிகள் மேற்கு தரும் சுதந்திரத்தையும், விடுதலையையும், சுயத்தையும் அனுபவித்தே வருகிறார்கள். நம்ம அம்பிகள் கூட அதை அவர்களுக்கு *வழங்க* தயங்குவதில்லை. ஆனால் கலாச்சரத்தின் மீது தாக்குதல் நடப்பதோ, குறைந்த பட்ச விமர்சனமோ இவர்களுக்கு உவப்பானதாய் இல்லை. தாங்கள் கடைபிடிக்க இயலாத கலாச்சாரத்தை, உன்னதமாய் போற்றிகொள்ள, நிகழ்ச்சிகளுக்கு புடவை கட்டிகொள்கிறார்கள். வைபவங்களில் மடிசார் கட்டிகொள்கிறார்கள். கடைபிடிக்க முடியாவிட்டாலும் அதை ஒரு உன்னதமாய் பார்கிறார்கள். அந்த பார்வையின் உளவியல்தான் தாய்நாடு வந்து 'விஷ்வ துளசி' மாதிரி ஒரு படத்தை எடுக்க வைக்கிறது, என்று தோன்றுகிறது.

எதையோ பேசப்போய் எங்கேயோ போய்விட்டேன். நான் எழுத நினைத்து தொடங்கிய விஷயம் இதுவல்ல, முற்றிலும் வேறுபட்டது. இப்போது எழுதியதற்கு முற்றிலும் நேர்மாறானது. அதனால் இப்போது தலைப்பை மாற்றிவிட்டு, எழுத தொடங்கிய தலைப்பில் நாளை தொடர்கிறேன்.

Post a Comment

16 Comments:

Blogger பினாத்தல் சுரேஷ் said...

இந்தப் படத்தின் இயக்குநர் மாமி இதற்கு முன் எந்த ஷூட்டிங்கையுமே பார்த்ததில்லையாம். அப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பது தெரியவில்லை.
இளையராஜா வீணடிக்கப் பட்டது இந்தப் படத்தின் மன்னிக்க முடியாத குற்றங்களில் ஒன்று. மேலும் திறமையான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைக்கொண்டு இப்படி ஒரு அரைவேக்காட்டு முயற்சி!

ஆனால் உங்கள் பதிவில் தெரியும் பொதுமைப்படுத்தல்-உடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மாமி ஒரு செல்வம் படைத்த பழமை எண்ணம் நிரம்பிய ஒரு போலி - அவ்வளவுதான்.

1/13/2005 3:40 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி சுரேஷ், நான் பொதுமைபடுத்த முனையவில்லை. பொதுவாய் தோன்றுவதை எழுதினேன்.

1/13/2005 3:46 PM  
Blogger Jayaprakash Sampath said...

vElai nEraththulE ippadi tempt seyvathu nyAyamA? rAththiri varEn :-)

1/13/2005 4:10 PM  
Blogger ROSAVASANTH said...

வாரும்!

1/13/2005 4:11 PM  
Blogger Badri Seshadri said...

http://thoughtsintamil.blogspot.com/2004/10/blog-post_26.html

1/13/2005 4:42 PM  
Blogger Badri Seshadri said...

கட்டுடைத்துப் பார்த்தால் இந்தப் படம் எத்தனை அபத்தமானது, ஒழித்துக்கட்ட வேண்டிய பல கலாசாரக் கூறுகளை உயர்த்திப் பிடிக்கிறது என்று கவனிக்கலாம்.

1. நிலவுடைமை அமைப்பு. மிராசுதார் புண்ணியத்தில் கிராமம் சுபிட்சமாக இருக்கும்.

சரி கதை பழசுதான், அந்தக் காலத்தில் மிராசுதார்கள்தானெ இருந்தார்கள் என்றால், உண்மையில் ஒரு மிராசுதாராவது மக்களுக்கு நல்லது செய்துள்ளார்களா?

2. ஆண்-பெண் காதல் நிறைவேறாது போகையில், இருவரும் மணம் செய்துகொள்ளாவிட்டாலும், ஆண் லோகாயத வாழ்க்கையில் நிறைவு அடைய, பெண் பக்தி, இசை, நாட்டியம் எனும் கலைகளில் நிறைவு அடையத் தேடுவாள். முந்தையதில் பணம், சுக வாழ்க்கை; பிந்தையதில் தெருப்பிச்சைதான். அந்தப் பெண்ணை வார்த்தைகளால் தாக்கி, கடைசியில் கொலையும் செய்துவிடுகிறார் இயக்குனர்.

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பின்னோக்கிய ஒரு பார்வை இது. இதைத் தாங்கிப் பிடித்து, ஒரு விமர்சனமும் இல்லாது சென்று விடுகிறார் இயக்குனர்.

3. அழகான கலையம்சத்துடன் காட்சியரங்கினை அமைத்துவிட்டால் போதும், பார்ப்பவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.

'ஒருத்தி' படத்தின் கிராமங்கள், வீடுகள், சாலைகள் ஆகியவற்றை 'விஷ்வதுளசி' படத்துடன் ஒப்பிட்டால் எவ்வளவு வித்தியாசம் என்பது புரியும்.

4. வசந்த் சொன்னதுபோல "ஜமீன் பரம்பரையில்லையா..." கமெண்ட். ஜாதி/பரம்பரை மூலம்தான் ஒருவருக்கு உயர்ந்த கல்வி, ஞானம், அறிவு கிடைக்கிறது என்பதை இன்றும் நிலைநாட்ட முயற்சி செய்வது. அதன்மீது எந்த விமர்சனமும் வைக்காதிருப்பது.

4. தட்டையான ஹீரோ-வில்லன் பாத்திரங்கள். ஹீரோ நல்லவன், முழு நல்லவன். தவறே செய்யாதவன், தவறே செய்ய முடியாதவன். வில்லன் கெட்டவன், மிகக் கெட்டவன், எப்பொழுதும் குரோத உணர்வோடு இருப்பவன்.

ஹீரோயின் மெழுகு பொம்மை, ஹீரோவின் ஸ்பர்சத்துக்காக மட்டும்தான் அவள் ஏங்குவாள். அது கிடைக்காவிட்டால் இசை, நாட்டியம், பக்தியில் தன்னை முழுக்கிக் கொள்வது. (to sublimate her feelings) அவளுக்கென்று வேறு உணர்வுகள் தேவையில்லை. அவளது சுயம் எதுவும் அவசியமானதும் இல்லை. Her existence is to fulfill his desires, and if not, she can as well die. She dies.

1/13/2005 5:02 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்துகளுக்கு நன்றி பத்ரி. நீங்கள் சொன்னதை ஏற்றுகொண்டு, எனக்கு வந்த கேள்வி, இப்படிபட்ட படத்தை ஏன் ஒரு அமேரிக்க வாழ் இந்திய பெண் எடுக்க நேர்ந்தது என்பது.

1/13/2005 5:12 PM  
Anonymous Anonymous said...

ரோ.வ, அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? மேடம் படம் எடுக்கரேன்னு சொன்னதும், அவ ஆத்துகாரர் இந்தாடிம்மான்னு பணத்த எடுத்து கொடுத்தாராம்!
அதுவும் கேட்க, கேட்க ஒரு வார்த்தை ஏன்னு கேட்காம அள்ளி அள்ளி தந்தாராம். உம்! இதெல்லாம் அவா அவா வாங்கிண்டு வந்த வரம்னு கண்ணுல ஜலமே வந்துடுச்சு!
என்னமோ, டூயட்ல மம்முட்டி, திருதிருன்னு முழிக்கிறா மாதிரி இருந்தது.
உஷா

1/13/2005 5:43 PM  
Blogger ROSAVASANTH said...

//இதெல்லாம் அவா அவா வாங்கிண்டு வந்த வரம்னு கண்ணுல ஜலமே வந்துடுச்சு!//

என்ன உஷா மேடம், நீங்க படமெடுக்க பணம் கேட்டு உங்க ஆத்துகாரர் பணம் தரமாட்டேன்னுட்டாரா?

1/13/2005 5:52 PM  
Anonymous Anonymous said...

சே! சே! அப்படி எல்லாம் தவறா நெனைக்காதீங்க, கட்டாயம் கொடுப்பார். ஆனா எடுக்கிற படம் கில்லி, காதல் மாதிரி இருக்கும்னு
நிபந்தனையும் கூடவே சொல்லுவார். போட்ட பணத்த திரும்ப எடுக்க வேண்டாமா? இதுல இன்னொரு கொடுமை என்னவென்றால்,
செகண்ட ஈரோவா வந்து, ஈரோயின் கூட கனவு டூயட்டாவது இருக்க வேணும்னு அடம் பிடிப்பாரேன்னு யோசனையா இருக்கு!
உஷா

1/13/2005 9:59 PM  
Blogger ROSAVASANTH said...

அய்யோ, நீங்க எவ்வளவு நல்லா கத வுடறீங்க, ஸாரி எழுதறீங்க! கவித கூட ட்ரை பண்ணலாம். சினிமால்லாம் எதுக்கு, அதுவும் தமிழ்ல? ப்ளீஸ்!

1/13/2005 11:19 PM  
Blogger Jayaprakash Sampath said...

பழைய விஷயங்களின் மீதான கவர்ச்சி அபாரமானது. என்.சி வசந்தகோகிலம் எல்ப்பி ரெக்கார்டுக்காக, வலது கையை வெட்டிக் கொடுக்கத் தயாராக இருந்த ஒருவனை நான் அறிவேன். அவன் வயசு 25க்கும் கம்மி. வேர்களைத் தேடுதல் என்று பலர் சொல்லும் விஷயங்களுக்கு அடிப்படையே இந்தக் கவர்ச்சிதான். விஷ்வதுளசி ஐ இந்த கேடகரியில் சேர்த்தது கண்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். பத்ரியின் வலைப்பதிவில், அவர் எழுதி இருந்த சமயத்தில், நான் அந்தப் படத்தை பார்க்கவில்லை. இரு மாதங்களுக்கு முன்பு, சிடியில் அப்படத்தைப் பாக்க நேர்ந்தது. இரண்டை மணிநேரம் ஓடக்கூடிய அப்படத்தை முக்கால் மணி நேரத்தில் பார்த்து முடித்தேன். அந்தப் படத்தின் இயக்குனர் சுமதி ராமை, அவரது இன்டென்ஷனை என்னால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்குத் தேவைப்பட்டது ஒரு விசிட்டிங் கார்ட். அது கிடைத்து விட்டது. தேசிய விருது பெற்ற மம்மூட்டி, நந்திதா தாஸ், முந்தைய நூற்றாண்டில் நடக்கும் கதை, இளையராஜாவின் இசை, இசை/நாட்டியப் பின்புலம் போன்ற விஷயங்கள் எந்த ஒரு படத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பை உண்டு செய்யும். அந்த எதிர்பார்ப்பை கேஷ்-இன் செய்யும் முயற்சிதான், இப்படம். இந்தப் படம், வலைப்பதிவு வரை வந்தது, டாலர் பணங்களின் பி.ஆர் முயற்சிகளின் வெற்றி என்பதை உறுதியாகச் சொல்லலாம். பல காட்சிகள், மலையாளப் படங்களின் தாக்கத்தில் இருந்து பிறந்தவை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. வி.ஜி. சந்தோஷத்தின் கவிதை எழுதுவது போன்ற அமெச்சுர்த் தனமான முயற்சிதான் விஷ்வதுளசி. அலசல்களுக்கு எல்லாம் இடமே இல்லாத இப்படத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறேன். பழையதின் மீதான கவர்ச்சி, வேர்களைத் தேடுதல், இந்தியக் கலாசாரத்தோடு ஐக்கியப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தல் என்பதெல்லாம், விஷ்வதுளசி படத்துக்கு சற்றும் தொடர்பில்லாதது. இந்தப் படத்தை உள்ளே இழுக்காமல் எழுதுங்கள். விரிவாகப் பேசுவோம்.

1/14/2005 1:41 AM  
Blogger ROSAVASANTH said...

இகாரஸ், உங்க விரிவான கருத்துக்கு வசந்த் நன்றி சொல்றான்! போய் நல்ல "வண்ணகிளி சொன்ன மொழி.." மாதிரி எதாவது வாத்தியார் பாட்டு கேளுங்க. இல்ல "கேள்வி பிறந்தது நேற்று .." மாதிரி ஆப்டிமிஸ்டிக்கா எதாவது கேளுங்க!

துரதிர்ஷ்ட்டவசமா நாளைக்கும் இதை பத்தி எழுத போறேன் (அதாவது இன்னிக்கு எழுத நினைச்சத). ஒருவேளை அது உங்களுக்கு பிடிக்கலாம்.

1/14/2005 1:53 AM  
Blogger ROSAVASANTH said...

ரொம்ப பேச இதுல எதுவும் இல்லன்னாலும், நான் "பழமைக்கு ஏங்குதல்" என்றது "வேர்களை தேடும் அர்தத்தில்" அல்ல. ஒரு ஃபியூடல் சமாச்சாரத்தை உன்னதமாய் போற்றும் ரசனையையே குறிப்பிட்டேன். இதற்கும் அதற்கும் நூண்ணிய வித்தியாசங்கள் உண்டு. ஒரு மாமியின் மேலோட்டமான மடிசார் ஸென்ஸிபிலிடியையே அவ்வாறு சொன்னேன். மீதி நாளை!

1/14/2005 1:57 AM  
Blogger Balaji-Paari said...

RV,
Ithu suvaarasiyamaana topic. Enakku rendu - moonu naalaa intha kelvi varuthu. 'Shogun' Japan patriya novel vaasithulleegalaa?. Po.Selvan et al pondra oru nadaiyil 1600 AD period-ai cover seithullar antha author. Still reading.
Antha kathai is more close to reality of that date.
Ithuellaam pazhmai meethu nammakku thondrum oru kaathalaa allathu ithu oruvagaiyaana manopaavamaa?
Sari ithai patri eluthunga...

1/14/2005 6:58 AM  
Blogger ROSAVASANTH said...

Dear Balaji, Thnaks for the comment.

You are asking a complicated question, as I look at it. I myslef a bit confused. I am clear about certain things, I am only confused how to put it. Exactly for that reason I did n't contest Icarus' post, eventhough I am quite critical about that.

I haven't read 'shogan, but read PS. I will try to present my point of view, as a sperate post, in a week or so. This week I won't be able to do anything.

But if you notice, my last two posts on Vishva thulasi, are in conflict. Eventhough it was not my intial intention, it is juxtaposed. More later.

anbuLLa vasanth.

1/14/2005 5:20 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter