ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, January 20, 2005

ரோஸா!

யமுனா ராஜேந்திரன் பதிவுகளில் எழுதியுள்ள இந்த கட்டுரையை பார்தேன். படிக்க தொடங்கி, சில வரிகள் தாண்டி, இரவு நேரமாகிவிட்டதாலும், நீளம் காரணமாகவும் தொடர முடியவில்லை. நாளை பொழுதோடு வேலைக்கு போகவேண்டியிருப்பதால், நாளை பார்த்து கொள்ளலாம் என்று தூங்க போனால் தூக்கம் வர மறுக்கிறது. போய் யமுனாவின் கட்டுரையையும் படிக்க முடியும் என்று தோன்றவில்லை. கிட்ட தட்ட 9 வருடங்கள் முன்பு சென்னை ஃபிலிம் சொசைட்டி புண்ணியத்தில் ரோஸா லக்ஸம்பர்க் படம் பார்த்து, பித்து பித்து பிடித்த அந்த தினம் நினைவில் வந்தவண்ணம் இருக்க, இப்போது தூங்குவதும் சாத்தியமில்லை என்று தெரிகிறது.

20ஆம் நூற்றாண்டு, அதன் தொடக்கம்தான் எத்தனை நம்பிக்கை தருவதாய் இருந்தது! அந்த நம்பிக்கைகள் அத்தனையும் பாசிசமாய் பரிணமித்த பின், எல்லா ஊன்றுகோல்ளையும் இழந்து, எதை பற்றி கொண்டு தொடர்வது என தெரியாமல் முழித்துகொண்டு தத்தளிக்கிறோம். ஆனால் தொடங்குபோதே பிரச்சனையுடன் தான் அவைகள் பிறந்திருக்கின்றன. ரோஸா லக்சம்பர்க் திரைபடத்தில் ரோஸாவும், காட்ஸ்கியும் முரண்படும் கட்டத்தில், " இடது சாரிகளான நாங்களும் நாட்டு பற்றுடையவர்கள்தான் என்று காட்ட விரும்பினோம்" என்று போருக்கு சாதகமாய் முடிவு சொல்லும்போது, எதோ ஒரு வகையில் தேசியம் எல்லா லட்சியத்துடன் பிணைக்கப்படும் சிக்கலும், தவிர்க்க முடியாமையும், பின்ன்னாளில் தலைதூக்க போகும் பாசிசத்திற்கான கவர்ச்சி குறித்த புரிதலுக்கான சாவி கிடைக்கிறது. யமுனா அது குறித்த கேள்விகளுக்குள் போவார என்று எனக்கு மிகுந்த சந்தேகமாய் உள்ளது.

இருப்பினும் படித்தவரை யமுனா எழுதியுள்ளது முக்கியமானதாய் தெரிகிறது. தவறுகளால் குறிக்க படும் புரட்சியின் மீது அவிழ்த்து விடப்படும் அரசு வன்முறையின் நம்பமுடியாத பரிமாணத்தை பலமுறை வறலாற்றில் பார்த்திருக்கிறோம். வங்காளத்தில் நக்ஸ்லைட்டுகள், இலங்கையில் (தொடக்க கால) ஜேவிபியினர் என்று, அரசாங்கம் என்பது அதற்குதான் காத்திருந்தது போல் ரத்த ஆறு ஓடவிடுவதில் இறங்க, எத்தனையோ தியாகங்கள் அதில் பலியிடபடுகிறது.

மறைவிடத்திலிருந்து ரோஸா கண்டுபிடிக்க படுகிறார். அழைத்து வரப்படும் ரோஸா மீது, திட்டமிடபட்டு, தாக்குதலுக்கு காத்திருக்க வைக்கபடும் 'உணர்ச்சி பூர்வமான' கும்பல் " you whore!" என்று ரோஸாவின் மீது பாய்கிறது. ரோஸாவின் உடைகள் கிழிபட, ரோஸா காவலர்களால் அழைத்து செல்லபடுகிறார். கூட்டம் போலிஸை 'மிஞ்சி' முண்டியடித்து ரோஸாவின் மூஞ்சியில் குத்துகிறது. படம் முழுக்க ஒட்டிவைத்த புன்னகையுடனே இருக்கும் ரோஸா அந்த ஒரு கட்டத்தில் மட்டுமே தெளிவாய் புண்பட்ட முகத்துடன் வருகிறார். ஆனால் சிறையிலும் காவலுக்கு இருக்கும் இளைஞனிடம் பேச்சு கொடுக்கிறார். அவரால் கவரப்படுவதை அவனாலும் தவிர்க்க முடிவதில்லை.

ரோஸாவை கொல்ல முடிவெடுக்க படுகிறது. ரோஸா இரவு சிறையிலிருந்து அழைத்து செல்ல படுகிறார். சிறைக்கதவை திறந்து வெளியே கால் வைக்கும் ரோஸா துப்பாக்கியால் காவல்காரனால் ஒரு இயந்திரத்தனாமான வேகத்துடன் தாக்கபடுகிறார். அது ஏதோ கொல்வதற்கு முன்னான சடங்கு போல இருக்கிறது. ரோஸாவை அழைத்து செல்லப்படும் வாகனத்தில், வாகனம் சென்று கொண்டிருக்கும் போது அவன் ஓடிசென்று ஏறிகொள்கிறான். துப்பாக்கியை எடுப்பது தெரிகிறது, அடிபட்ட மயக்கதின் நினைவில் "Don't shoot" என்கிறார். சுடப்பட்டு ஆற்றில் வீசப்படுகிறார்.

படம் பார்த்து விட்டு, விடுதியறையில் இருக்க முடியாமல் ஸ்டார் வொயின்ஸ் போய் மித மிஞ்சி குடித்தேன். ரோஸாவின் காதலர்கள், குறிப்பாய் அந்த இளைஞன்(பெயர் நினைவிலில்லை). ரோஸாவை பிரிந்து செல்வதை நினைத்து அழு அழு என்று அழுகிறான். அந்த காட்சியும். சுடபடுவதற்கு முன் "சுடாதே!" என்று ரோஸா சொல்லும் காட்சியும் மாறி மாறி ஆக்ரமித்து கொண்டிருந்தது.

ஸ்டார் வொயின்ஸ் அடையார் டிப்போ பஸ் ஸ்டாப்பை, எல்.பி.ரோட்டை இந்திரா நகரிலிருந்து தொடும் முனையில் இருக்கிறது. கடையில் குவார்டரும், தண்ணி பாக்கட்டும் வாங்கி கொண்டு ரோட்டோரமாகவே மணல் திண்டில் உட்கார்ந்து அடிக்கலாம். நான் ரோட்டில் தண்ணியடித்து குலுங்கி, குலுங்கி அன்றிரவு அழுது கொண்டிருந்தேன்.

Post a Comment

18 Comments:

Anonymous Anonymous said...

தூங்குவதற்கு முன் ஏதோ மனப்போக்கில் தட்டியிருக்கிறேன். அர்வமுள்ளவர்கள் யமுனாவின் கட்டுரையையோ, இணையத்தில் தேடியோ படித்துகொள்ளவும்.

1/20/2005 3:00 AM  
Blogger ROSAVASANTH said...

எழுதியது நான்தான். ஏனோ அநாமதேயமாய் வந்துவிட்டது.

1/20/2005 3:01 AM  
Blogger SnackDragon said...

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன், (96 இறுதி , 97 ஆரம்பம்) நானும் எல்.பி ரோடு,இந்திரா நகர் வழியாய்தான் தினமும் சென்று கொண்டிருந்தேன். நீங்கள் 7 ஸ்டாரில் சரக்கு அடித்து கொண்டிருக்கும்போது அநேகமாக நான் எம் ஜி ஆர் திரைப்பட நகருள் இருக்கும் (பேர் மறந்துவிட்டது) ஒரு நல்ல ஏ சி பாரில் பீர் அடித்து கொண்டிருந்திருப்பேன். :) திருவான்மியூர் ஜெயந்திக்கு பின்புறம்தான் வேலை செய்துகொண்டிருந்தேன்.

ரோசாவின் படம் பார்த்த நாளிலிருந்துதான் வசந்த் ரோசாவசந்த் ஆனானா/ரா?

1/20/2005 3:33 AM  
Blogger SnackDragon said...

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன், (96 இறுதி , 97 ஆரம்பம்) நானும் எல்.பி ரோடு,இந்திரா நகர் வழியாய்தான் தினமும் சென்று கொண்டிருந்தேன். நீங்கள் 7 ஸ்டாரில் சரக்கு அடித்து கொண்டிருக்கும்போது அநேகமாக நான் எம் ஜி ஆர் திரைப்பட நகருள் இருக்கும் (பேர் மறந்துவிட்டது) ஒரு நல்ல ஏ சி பாரில் பீர் அடித்து கொண்டிருந்திருப்பேன். :) திருவான்மியூர் ஜெயந்திக்கு பின்புறம்தான் வேலை செய்துகொண்டிருந்தேன்.

ரோசாவின் படம் பார்த்த நாளிலிருந்துதான் வசந்த் ரோசாவசந்த் ஆனானா/ரா?

1/20/2005 3:36 AM  
Blogger Thangamani said...

அதானே இந்த ரோசாவை எங்கே பிடித்தார் என்று நானும் யோசித்ததுண்டு.

நல்லது. 7 ஸ்டார் ஒயின்ஸ் நான் கேள்விப்பட்டதில்லையே!

1/20/2005 10:28 AM  
Anonymous Anonymous said...

After seeing Rajini movie, if you become rajini ramki that is kevalam. But after seeing a communist asshole movie and become rosa vasanth, then it is something to be proud of..

1/20/2005 11:29 AM  
Blogger Thangamani said...

வசந்த்,

அந்தக் கட்டுரையப் படித்தென். எனக்கு ரோஸாவைப் பற்றித் தெரியாது. உங்கள் பதிவின் வழி தெரிந்துகொண்டேன். யமுனாவுக்கும், உங்களுக்கும் நன்றி. நீங்கள் பார்த்த படம் என்னவென்று குறிப்பிடமுடியுமா? நன்றி!

1/20/2005 11:50 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி கார்திக் தங்கமணி.

படத்தின் பெயர் ரோஸா லக்சம்பர்க்.

அனாமதேயம் சொன்னது போல் என் பார்வையில் ரஜினி பெயரை ஒருவர் சேர்த்துகொள்வதில் எந்த கேவலமும் கிடையாது. சொல்லபோனால் அந்த காரணத்திற்காக ரஜினி ராம்கி மீது மதிப்பு கூட உண்டு. வெகு சினிமா குறித்த என் கருத்துகளில் அதை வலியுறுத்தி சொல்லிவருகிறேன். அனாமதேயத்திற்கு எதையும் புரிந்துகொள்ளும் குறைந்த பட்ச அறிவுகூட இருக்க வாய்பில்லை என்று தெரியும் என்றாலும், மற்றவர்களுக்காக இதை சொல்கிறேன்.

1/20/2005 12:07 PM  
Anonymous Anonymous said...

Rosa! u know i wrote that for a specific reason. I saw your comments abt Rajiniramki in either yahoo groups or in one of the blog comments, where u ridiculed him for attaching a cinema star's name before his name. I am searching for that comment. Once I get it, i will post that here, Hypocrite!

1/20/2005 12:21 PM  
Blogger ROSAVASANTH said...

you don't have to. I will do in few mins!

1/20/2005 12:54 PM  
Blogger ROSAVASANTH said...

ரஜினி ராம்கியின் பதிவிலும், ராகாகியிலும் நான் எழுதியது.

"சிந்தனையாளர் ரஜினி ராம்கியின் அளவுகோல்களின் படியேகூட, இந்த உலகின் உச்சகட்ட 'ஆபாசம்' வெளிப்படகூடிய பாடல் ஒன்றை சொல்லவேண்டுமானல் முத்து படத்தில் வரும் 'கொக்கு சைவ கொக்கு' பாடலை
சொல்லலாம். நடுவீட்டில் அக்கா, அம்மா, தங்கைகள் முன்னால் ஸ¥ப்பர் ஹிட் முக்காப்லாவில் முதல் பாடலாய் அதை திகழவைத்தவரை ஒரு தலைவராய் தன்
பெயரில் சேர்த்துகொண்டவர், ஒரு அகவாசிப்புக்கு உட்படும் ஒரு கவிதையில் வெளிப்படும் 'ஆபாசம்' பற்றி யோக்கியமாய் புலம்புவதைவிட வக்ரம் ஒன்றை யாருடைய எழுத்தில் பார்க்கமுடியும் என்று தெரியவில்லை. இன்றய சூழலில்
ரஜினிகூட ரொம்ப கவலையாய் இது குறித்து புலம்பகூடும்.(பி.கு. நான் 'கொக்கு சைவ கொக்கு' பாடலை தடை செய்யவேண்டும் என்று சொலபவனல்ல.) "

எழுதிய சந்தர்பம், ரஜினி ராம்கி இன்று எழுதப்படும் சில பெண்கள் கவிதைகளை பற்றி மோசமாய் எழுதியதை கண்டிப்பது. அதாவது ஒரு ஒரு *தனிப்பட்ட வாசிப்புக்கான* கவிதை ஆபாசம் என்று எழுதுபவர், தமிழ்கத்தின் ஒவ்வோரு குடும்பத்தின் நடுஅறையில் 'கொக்கு சைவ கொக்கு.." பாடலை அப்பா, அம்மா, தங்கையுடன் பார்க்க நேர்ந்ததற்கு காரணமானவரின் பெயரை தன்னோடு சேர்த்திருக்கிறார். அவரிடம் வெளிப்படும் முரணை சொல்வதும், பெண்கவிதைகள் குறித்த அவர் கருத்தை கண்டிப்பதுமே என் நோக்கம்.

இங்கேயும் சைவ கோக்கு பற்றி என் கருத்தை சொல்லவில்லை. ரஜினி ராம்கியின் அளவிகோல்படியே அது பெரிய ஆபாசம். அவருக்கு அது பிரச்சனையில்லை, காலச்சுவடு அந்த கவிதைகளை வெளியிட்டது ஆபாசம். அதைதான் எடுத்துரைத்தேன்.

மற்ற படி அவர் ரஜினி பெயரை சேர்த்திருப்பது குறித்து எனகு கேவலம் ஒருக்காலுமில்லை. அதை தெளிவு படுத்த வாய்ப்பு தந்த அனாமதேயத்திற்கு நன்றி.

கடைசியாக, அனாமதேயம், என்னை ஹிபோகரைட் என்று நீங்கள் சொன்னால் மிகவும் பெருமையாய்தான் நான் எடுத்துகொள்வேன். இதை எத்தனை முறை சொல்வது? என்னை பிரச்சனைகுள்ளாக்க வேண்டுமானால் "நேர்மையானவன்" என்று சொல்லி பாருங்கள். உதாரணமாய் PKசி ஜெயோமோகன் சுனாமி கட்டுரை பற்றி நான் எழுதியது நன்றாய் இருப்பதாய் சொன்னார், எனக்கு ஒரே பயம் வந்துவிட்டது. ஆகையால் வேறு முயற்சிகளில் இறங்கவும்.

1/20/2005 1:25 PM  
Blogger Narain Rajagopalan said...

வசந்த், நீங்கள் சொன்ன படம், ஜெர்மானிய/பிரெஞ்ச் படமா? எப்போதோ, பாலகுமாரனின் கதையில் இந்தப் படம் மேற்கோள் காட்டப்பட்டதாக நினைவு. இது தவறாகக் கூட இருக்கலாம். இன்றைக்கு சினிமா பேரடைசோவில் தேடுகிறேன்.

1/20/2005 1:38 PM  
Blogger Narain Rajagopalan said...

வசந்த், நீங்கள் சொன்ன படம், ஜெர்மானிய/பிரெஞ்ச் படமா? எப்போதோ, பாலகுமாரனின் கதையில் இந்தப் படம் மேற்கோள் காட்டப்பட்டதாக நினைவு. இது தவறாகக் கூட இருக்கலாம். இன்றைக்கு சினிமா பேரடைசோவில் தேடுகிறேன்.

1/20/2005 1:39 PM  
Blogger ROSAVASANTH said...

Narain. yes it is German (if I remember correctly). the English diologue I have given, comes from subtitles.

1/20/2005 1:51 PM  
Blogger Narain Rajagopalan said...

Thanks Vasanth. Will try to get that DVD today.Have you seen "Abandoned" & "42Up", just wrote a brief in my blog ( http://urpudathathu.blogspot.com/2005/01/blog-post_19.html )worth watching

1/20/2005 2:32 PM  
Anonymous Anonymous said...

Rosa,
I know "STAR WINES" :-) Great place, once upon a time! Nostalgia, really! Saw your comment in my latest posting on "DRINKING" :-)
enRenRum anbudan,
BALA

1/21/2005 12:34 AM  
Blogger ROSAVASANTH said...

thanks Balaji, for the comment.

1/21/2005 2:26 AM  
Blogger -/பெயரிலி. said...

யமுனா ராஜேந்திரன்கூட, தன் மகளுக்கு ரோஸா என்றுதான் பெயரை வைத்திருக்கின்றார்.

1/21/2005 12:33 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter