ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Wednesday, February 23, 2005அ. ராமசாமியை முன் வைக்கும் சோ ராமசாமிகள்!இது தேசிகனின் பதிவிற்கான ஒரு அவசர எதிர்வினை! தலைப்பில் சோ. ராமசாமியின் பெயர் அர்தத்துடனேயே பயன்படுத்த பட்டுள்ளது. அ. ராமசாமி, மு. ராமசாமி இருவரும் எழுதிய காதல் திரைப்பட விமர்சனத்தை நான் படிக்கவில்லை. அது குறித்து மேற்கோள் காட்டப் பட்ட வரிகளை மட்டுமே படித்திருக்கிறேன். அதனால் இருவரும், குறிப்பாய் அ. ராமசாமி எழுதியிருக்க கூடிய உருப்படியான விமர்சன வரிகளை குறித்து சொல்ல எதுவும் இயலவில்லை. அ. ராமசாமி எழுதியுள்ளது (அதாவது மேலே உள்ள வரிகள்) மிகவும் அபத்தமான விமர்சனம் என்பது சந்தேகமில்லை. எனக்கு சுவாரசியம் அளிப்பது அதை முன்வைத்து மற்றவர்கள் தங்கள் அரசியலை அஜண்டாக்களை நிறைவேற்றி கொள்வதுதான். இரண்டாவது இதை முன்வைத்து திரைவிமர்சனம் என்பது குறித்து முன்வைக்கப் படும் ஒரு அபத்தமான பார்வை. அதன் குழப்பமற்ற நேரடி வெளியீடுதான் தேசிகனின் இந்த பதிவு. அ. ராமசாமி இது வரை எத்தனையோ உருபடியான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்த கட்டுரையில் கூட வேறு பல உருப்படியான வரிகள் இருக்கலாம். ஆனால் ஒரு ஒற்றை வரி மட்டும் மேற்கோள் காட்டப் பட்டு, அதை முன் வைத்து ஒரு தர்க்கமற்ற ஒரு வாதம் மற்ற விமர்சனங்களை மறுக்க பயன்படுத்த படுகிறது. அதாவது இதை முன்வைத்து, விமர்சனம் என்பதே இப்படித்தான் என்பது போல் பேசுவதும், முக்கியமாய் வேறு விமர்சனங்களை மறுப்பது போல் பேசுவதும். உதாரணமாய் ராகாகி அபத்தங்களை சொல்லலாம். ரஜினி ராம்கி ஞாநியையும் இத்துடன் இணைத்து ஞாநியின் பாபா விமர்சனத்தை மறுக்க முனைகிறார். இங்கே தேசிகன் "ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி" என்று ஒரு தலைப்பு வைத்து வேறு ஏதோ சொல்ல வருகிறார். இந்த தலைப்பின் மூலம் என்ன எழவை சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். பெரியார் எழுதியது பேசியதெல்லாம் அ. ராமசாமி சொல்வது போன்ற அபத்தம் என்று சொல்லவருவதாக எனக்கு தோன்றுவதை எடுத்து சொன்னால், என் இஷ்டத்திற்கு வாசிப்பதாக அவருக்கு தோன்றலாம். ஆக இவர்கள் அ. ராமசாமியின் ஒரு அபத்தமான வரிகளை வைத்துகொண்டு, இருக்கும் அத்தனை விமர்சனங்களையும் நிராகரிக்க பயன்படுத்தும் ஒரு அசட்டு வெறிதான் தெரிகிறது. உதாரணமாய் காதல் படம் குறித்து நான் கூட ஒரு முக்கிய விமர்சனம் வைத்துள்ளேன். இதை யார் கண்டுகொள்ளுவார்கள்? இது இப்படியிருக்க தேசிகன் விமர்சனம் என்பது குறித்து எழுதியுள்ளதும் இன்னும் மற்றவர்களும் சொல்ல வருவது என்ன? ஒரு குறிப்பிட்ட காட்சியில் "பெரியார் சிலைக்குப் பதில் கண்ணகி சிலை, காந்தி சிலை அல்லது பசும்பொன் தேவர் சிலை அந்த ·பிரேமில் வந்துபோயிருந்தால்' அதை முன்வைத்து எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்பதுதான். அ. ராமசாமி படத்தில் இறுதிகாட்சியில் வரும் பெரியார் சிலையை முன்வைத்து எழுதியது எவ்வளவு அபத்தமோ, அதை விட அபத்தம் இப்படி ஒரு குறிப்பிட்ட ஃப்ரேமில், வரும் பெரியார் சிலையையும் அதன் காமிரா கோணங்களையும் முன்வைத்து விமர்சனமே கூடாதென்பது. ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் போது நிச்சயமாய், அதில் இடம்பெரும் காட்சி பிண்ணணிகளையும், காமிரா கோணங்களையும் குறித்து நிச்சயமாய் பேசலாம். உதாரணமாய் மு. ராமசாமியின் விமர்சனம் (அதாவது மேற்கோள் காட்டப் பட்ட வரி) நிச்சயமாய் ஒரு சாத்தியமுள்ள வாசிப்பு. தமிழ் சினிமா பார்வையாளர்களின் வாசிப்புகளில் (ஒரு வேளை பாப் கார்ன் தின்றுவிட்டு தேசிகன் இது குறித்து யோசிக்காவிட்டாலும்) பிண்ணணியில் வரும் சிலைகள், நபர்கள், அடையாளங்களுக்கு நிச்சயமாய் வாசிப்புகள் உண்டு. தியேட்டரில் படம் பார்த்த எவருமே இப்படிப்பட்ட வாசிப்புக்ளில் இருந்து ப்தப்பிக்க இயலாது. ஞாநி பாபா விமர்சனத்தில் முக்கியமான ஒன்றை சொல்லியிருப்பார். 'நண்பர் பகைவர் யார் வந்தாலும்..' என்ற பாடல்வரியின் போது பகைவர் என்பதன் குறியீடாய் இஸ்லாமியர் வருவார். படத்தில் தெளிவாகவே இது காட்சி படுத்த பட்டிருக்கும். ஞாநி சொல்லும் இந்த விமர்சனத்தை மறுக்க அ.ராமசாமியை பயன்படுத்தி மறுப்பதை போன்ற அபத்தம் உண்டுமா? அ. ராமசாமி முன்வைத்துள்ளது ஒரு அபத்தமான over interpretation. அதை முன்வைத்து இப்படி பட்ட விமர்சனங்களையே நிராகரிப்பதும், கிண்டலடிப்பதும், இன்னும் முக்கியமாய் வேறு விமர்சனங்களை மறுக்க நினைப்பதும் நம் சூழலின் அழுகலை மட்டுமே காண்பிக்கிறது. இதை அவசரமாய் அடிக்க வேண்டுயுள்ளது. குடும்ப சூழலில் என்னால் விரிவாய் இது குறித்து எழுத முடியவில்லை. எதிர்வினையே வைக்காமல் போய்விட கூடுமாதலால் இப்போதைக்கு இதை தட்டி வைக்கிறேன். |
31 Comments:
என் இணக்கத்தினை தெரிவிக்கவே இந்த பதிவு. விமர்சகர்கள் சில சமயங்களில் அபத்தமான கருத்தை முன்வைக்கிறார்கள் என்பதற்காகவே, அவ்விமர்சகனையும், விமர்சனைத்தையும் கேள்விக்குறியாக்குதல், சில முன்திட்டமிட்ட கருத்தாக்கங்களை பரப்புவதற்கான முயற்சியே. விமர்சகனை விமர்சிக்கும் விமர்சகர்கள், விமர்சனத்தினையொட்டி கருத்துக்களை சொல்லாமல், விமர்சனைத்தையே ஒட்டு மொத்தமாக மறுத்தல் ஏற்புடையது அல்ல. ஒடிக் கொண்டிருப்பதால், இப்போதைக்கு இவ்வளவு மட்டுமே. மீண்டும் வந்து விரிவாய் பதிகிறேன்.
பதிக்க மறந்து போனது. தா.சந்திரன் மற்றும் எம்.எஸ்தர் இந்த வார தீம்தரிகிட வில் காதல் பற்றி (காதல் எவ்வாறு தமிழ்படங்களில் காண்பிக்கப்படுகிறது என்பதைப் பற்றி) 2 பதிவுகளை வைத்திருப்பார். நேரமிருந்தால் அனுப்பிவைக்கிறேன்.
"அபத்தம்" என்ற சொல் உங்களுக்கு ரொம்பப் பிடித்தம் போலிருக்கிறது. அடிக்கடி கையாண்டிருக்கிறீர்கள்.
அதென்ன "எழவு"! ஒருவேளை அது அவ்வளவு அமங்கலச் சொல்லல்ல என்று நிரூபிக்க இருக்கலாம்!!
எஸ்.கே
http://kichu.cyberbrahma.com/
நன்றி நாராயணன், எஸ்கே.
இந்த பதிவு மிக அவசரமாய் வந்த வார்த்தைகளை வைத்து எழுதப் பட்டது. அதில் 'அபத்தம்' என்ற வார்த்தை அடிக்கடி வருவதற்கு ஏதேனும் உளவியல் காரணம் இருக்கலாம். அது அபத்தமாய் வராமல் பொருளிஉடன் வரும்போது பிரச்சனையில்லை.
ஒரு எரிதம் நீக்கப் பட்டுள்ளது
intha padhivai padika muyarchi seidhen. ungal pakkathin vannangal avvalavaaka contrast illai. nondhu poi vittu vitten. naduvil irukkum manjal pattai mattum thelivaaka ulladhu. andha bluevai konjam lightaakinaal nandraaga irukkum.
மு.ராமசாமி மற்றும் அ.ராமசாமி இருவரும் ஈ.வெ.ராமசாமியைப் பற்றி எழுதியிருப்பது தனக்குப் புரியவில்லை என்று தேசிகன் தன் பதிவில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதில் குழப்பம் என்ன வந்தது? மேலும் பொதுவாக அறிவுஜீவிகள் எப்போதும் புரியாமல் எழுதுவதைப் போன்றத் தோற்றமும் வருகிறது.
மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி என்பது மேலே கூறியக் கருத்தைத்தான் முன்னிறுத்துவதாக நாஞ் புரிந்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"Desikann. Ippo tamilnadu konjam munneritu irukku. Periyar vandhaa avlo dhaan. Hindi edhirpu, brahmin edhirpu, hindi board kku thaar poosi azhikaradhu, pillayar kku seruppu maalai podaradhu idhu ellam start aagidum. Avlo dhaan. Kurangilirindhu vandha manidhanai marubadiyum kurangu aaki viduvaargal namadhu dravidar kazhaga pagutharivu vyadhigal"
இந்த பின்னூட்டம் சோ ரசிகன் என்கிற பெயரில் தேசிகனின் பதிவில் இடப்பெற்றிருந்தது. கவனமாக பாருங்கள். பெரியார் என்கிற ஒரு மாமனிதனை, எவ்வளவு சாதாரணமாய் குறுக்கியிருக்கிறார்கள் என்று. ஒரு சமூக மறுமலர்ச்சியின் வித்தாக அமைந்த ஒரு தலைவனை "ஹிந்தி பலகைக்கு தார் பூசுவது" என்று அற்ப அரசியல்வாதியாய் முன்னிறுத்துவதின் பிண்ணணியை கொஞ்சம் அறிந்து கொள்வோம். பகுத்தறிவு என்கிற சிந்தனை இவ்வளவு தூரம் பரவாவிட்டால், தமிழகமும் ஆதிக்க சாதிகளின் பிடியில் சிக்கி, இன்னுமொரு குஜராத்தாக ஆகாமல் தடுத்து வைத்திருப்பது தான் பெரியாரின் வெற்றி. பின்னால் வந்த திராவிட இயக்க தலைவர்கள் திசை மாறி விட்டார்கள் என்பதனாலேயே பெரியாரின் கொள்கைகளும், கேள்விகளும், அவரின் கருத்து பரவலாக்கமும் அழிந்துப்போய்விடாது. சில அடிப்படைவாதிகள் ஒரு கருத்தினை எவ்வாறெல்லாம் திரிப்பார்கள் என்பதற்கு மிகச்சிறந்த சான்று இது.
ரோ.வ,
'பாபா'வுக்கு பலபேர் விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் நடத்தினார்கள். உருப்படியான விமர்சனம் என்று சொன்னால் அது கல்கி மற்றும் தினமணிகதிரில் வந்தவைதான். பாபா பத்தி நான் எது சொன்னாலும் எடுபடாது என்பதால் ஜூட்!
மட்டமான மசாலா படத்துக்கு கூட ஞாநி இப்படியெல்லாம் மெனக்கெட வேண்டுமா என்பதுதான் என்னுடைய கேள்வி. லேட்டஸ்ட் படத்துக்கு மட்டுமல்ல 'ஊமை விழி'களுக்கு கூட ஒரு காமெடி விமர்சனம் எழுதியிருக்கிறார். 'பாய்ஸ்'க்கு இவர் எழுதிய விமர்சனத்தை படித்ததும் ஷங்கர் மீது எனக்கொரு அனுதாபமே வந்துவிட்டது. 'தென்றலை' ஏனோ தீண்டவேயில்லை! ஞாநி சினிமா விமர்சனம் பண்ணாமல் இருந்தால் சினிமாக்காரர்களை விட அதிகமாக சந்தோஷப்படும் ஆள் நானாகத்தான் இருப்பேன்!
'காதல்' பற்றிய அ.ராமசாமி விமர்சனத்தின் ஒரு பகுதியை நான் ராகாகியில் இட்டதும் அதற்கு திருமலை தந்த எதிர்வினையையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். முழுமையான விமர்சனம் தீம்தரிகிடவில் வந்திருக்கிறது. தேசிகன் தவறாக குறிப்பிட்டு விட்டார் என்று நினைக்கிறேன். குமுதம், விகடனில் வரும் சிரிப்பு வராத ஜோக்குகளை படிப்பவர்கள் அவசியம் படிக்கவேண்டிய விமர்சனம்.
எந்த 'சாமி'யா இருந்தாலும் என்னோட வேண்டுகோள் இதுதான்.
அய்யா, நாட்டுல எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்குது. அதை வுட்டுட்டு பைசா பிரயோசனமில்லாத சினிமாவை நோண்டாதீங்க..!
மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி in Desikan's Blog:
இதைப் போன்ற பதிவுகளின் பின்னூட்ட களத்தில் ரோசா வசந்த் குதிக்காவிட்டால், ஏது சுவாரசியம்? இதற்கு மறுமொழி இடுவதென்பது அவருக்கு தி.அல்வா சாப்பிடுகிற மாதிரி :-)
//
உதாரணமாய் காத்ல் விமர்சனம் குறித்து நான் கூட ஒரு முக்கிய விமர்சனம் வைத்துள்ளேன். இதை யார் கண்டுகொள்ளுவார்கள்?
//
ரோசா,
நீங்கள் எழுதிய விமர்சனத்தை, என்னை மாதிரி ஆட்கள் தான் கண்டு கொள்வார்கள்! ஏனெனில், நீங்கள் சிறுபத்திரிகை எழுத்தாளர் இல்லையே, சுற்றி ஒரு கூட்டம் வைத்திருப்பதற்கு :-)
மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமிஇந்த தலைப்புக்கு என் மனதில் பட்ட interpretations-ஐ கூறுகிறேன்!
1. சிலை வரும் காட்சியை ஒருவர் பாஸிடிவாக பார்க்கிறார். மற்றவர் நெகடிவாகப் பார்க்கிறார்! இதிலிருந்து, ஈ.வெ.ரா வும், நல்ல விஷயங்களும் செய்திருக்கிறார், தவறுகளும் செய்திருக்கிறார் என்று கொள்ளலாம். அவரது, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, தலித் மேம்பாட்டுக்கான உழைப்பு போன்றவைகள் பாஸிடிவ் வகை! பிற மத மூடநம்பிக்கைகளையும், கடவுளர்களையும் கண்டு கொள்ளாத ஓரவஞ்சனையான அதி தீவிர இந்துக் கடவுளர் எதிர்ப்பு (வீரமணி செய்வதும் இது தான்!), தமிழ் மொழியை காட்டுமிராண்டிகளின் பாஷை என்று சாடியது போன்றவைகள் நெகடிவ் வகை என்பேன்!
2. இரண்டு முரண்பட்ட விமர்சனம் தந்த ஆசாமிகளை கூட்டினால் ஈ.வெ.ரா வருவதால், ஈ.வெ.ரா விடமும் முரண்பாடுகள் இருந்தன என்றும் கொள்ளலாம்!
பொதுவாக, இலக்கியவாதிகளின் திரை விமர்சனம் கூட தலைக்கு மேலே ஓடும் வகையில் (over the head) உள்ளன என்ற தேசிகனின் கூற்று ஓரளவு சரியானதே எனத் தோன்றுகிறது! எனவே, இலக்கியப் பத்திரிகைகளில் வரும் திரை விமர்சனங்களை படித்தல் ஆகாது :-) அப்படியே படித்தாலும், அவை பற்றி விமர்சனம் செய்தல், வம்பை விலைக்கு வாங்குவதற்கான சிறந்த வழி :-(
என்றென்றும் அன்புடன்,
பாலா
நான் காதலையும் பார்க்கவில்லை, இரண்டு இராமசாமிகளையும் படிக்கவில்லை. ஆனால் பாலாவுக்குச் சொல்ல ஒன்றுண்டு. தமிழை காட்டுமிராண்டி மொழியாக பெரியார் சொன்னதெல்லாம் அவரரின் மேல் வைக்கப்பட்ட உண்மையான விமர்சனமல்ல. இந்த விமர்சனத்தை வைப்பவர்கள் சோ வகையறாக்கள். அவர்களிடமிருந்து இப்படியான விமர்சங்களைப் படிக்கும் போது,அதை அலட்ச்சியப்படுத்தச் சொல்லமாட்டேன், தயவுசெய்து பெரியாரிடமே நேரடியாகச் சென்று, எந்தச் சூழலில், எந்தப் பிண்ணனியில் அவர் இதைப் பேசியிருக்கிறார் என்று பாருங்கள்; அது இந்த சோ-வகையறாக்களின் வியாபாரத் தந்திரத்தையும், பேனைப் பெருமாளாக்கும் வித்தையையும் தெரிந்துகொள்ள உதவும். அது என்ன ஓரவஞ்சனையான இந்து கடவுள் எதிர்ப்பு? மேற்கு நாடுகளின் நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்டுகள், கிருத்துவத்தையும், பைபிளையும் இயேசுவையும்தான் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கினார்கள் அதனால் அவர்கள் எல்லாரும் ஓரவஞ்சனை கொண்டவர்கள் அல்ல; புத்தரும், அதற்கு முன்பே சார்வாகர்களும், வைதீக பிராமணியத்தை கடுமையாக சாடவே செய்தார்கள். அவர்களெல்லாரும் பெரியார் சொல்லியோ அல்லது ஓரவஞ்சனை கொண்டோ செய்யவில்லை.
எனது அம்மாகூட சிறுவயதில் என்னை அஞ்சு கண்ணனிடம் தூக்கிக் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்; அதையெல்லாம் அவர் மேலான விமர்சனங்களாகச, ஓரவஞ்சனையாகச் சொல்லமாட்டேன்.
i agree that the cited paras are problematic.i have not read the reviews but prima facie such interpretations seem to be too far fetched to be taken seriously.
and is it difficult to find nonsense in sujathas writings.we all know the stupid and
irrelevant comment he made on blogs and bloggers.one can find many absurd, false and totally irrelevant views in his writings and illogic in his works of fiction.i think it is better to catalog them also.and the silly remarks about periyar are too old and stale.some people will neither try to learn nor try to understand and they are fit to be fans of fools only.
Ravi's disparaging and off-the-cuff (personal) remarks on a person of Sujatha's calibre is totally unwarranted and irrelevant to the topic of discussion!He MUST realize that this is not the forum to settle personal animosity with people for whom he has ONLY hatred.
He needs to tone down a bit. Abuse must never become the order of the day :-( enRenRum anbudan
BALA
//they are fit to be fans of fools only//
உண்மையைத்தான் சொல்லியிருக்கீங்க.. ஆனா, சம்பந்தமேயில்லாம சுஜாதாதான் முழிச்சுட்டிருக்கார் பாவம்!
thanks to all for the comments. I will write in detail soon.
தேசிகனின் வலைப்பதிவில் சோ
ரசிகர் எழுதி இருந்தார்...அதற்கு என் எதிர் வினை
பெரியாரை சபிக்கறதுக்குனே சிலது திரியறதுகள்!
என்ன ஓய்!பெரியார் உனக்கு துரோகம் செஞ்சுட்டாளா?நீ மத்தவாளுக்கு பண்ணின்டு
இருந்தேள்....அவாள எல்லாம் விழிக்க வெச்சார் பெரியார்!
அதுக்கு அநியாயதுக்கு புலம்பின்டு இருக்கேள் நோக்கே அடுக்குமா?
சரி விஷயதுக்கு வருவோம்...
தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறதா? எதனைக்கொண்டு சொன்னீர்?
நித்தம் சிறை செல்லும் சாமியார்களைக்கொண்டா?
பாதம் கழுவி குடித்தால் பிரசினை தீரும் என்று சொன்னாலும்,
மதம் மாறினால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும் என்று சொன்னாலும்,
நம்பிக்கொண்டு அலையும் மக்களை வைத்து சொல்கிறீரா?
கொஞ்சாமாய் தமிழைத்தின்று வரும் ஆங்கிலமா உங்காளின் கூற்றுக்கு காரணம்?
ஒரு இனம் மட்டுமே படித்து,தன்னை அறிவாளி இனமாய் காட்டிக்கொண்டிருந்த போது,
மற்றோரும் படிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை விதைத்தவர் பெரியார்.
மனிதனை மனிதனே மிருகமாய் நடத்தி வந்த காலத்தில்,
மனிதம் என்னும் சொல்லை அந்த மிருகங்களுக்கு சொல்லி தந்தவர் பெரியார்.
மதராஸி என தமிழனும்,தென்னிந்தியனும் விலக்கி வைக்கப்பட்ட காலத்தில்,
திராவிடம் என சொல்லி ஏனையோரை அசர வைத்து தமிழனை திரும்பி பார்க்க வைத்த தனி மனிதர் அவர்.
அடிப்படைவாதம் பேசிக்கொண்டு திரியாதீர்!அது எந்த மதத்தின் வடிவிலாக இருப்பினும்...
பிறரின் செயல் குறித்து நன்றாக தெரிந்தால் எழுதவும்,அரைகுறை அரசியல்வாதித்தனத்தை நிறுத்துங்கள்.
நன்றி மணிகண்டன்!
/on a person of Sujatha's calibre/
SIGH!!
தங்கமணி,
//பெரியாரிடமே நேரடியாகச் சென்று, எந்தச் சூழலில், எந்தப் பிண்ணனியில் அவர் இதைப் பேசியிருக்கிறார் என்று பாருங்கள்;
//
நான் மாட்டேன்! இன்னும் சிறிது காலம் இவ்வுலகில் வாழ்ந்த பின் பெரியாரை சென்று சந்திக்கிறேன் :-0
//மேற்கு நாடுகளின் நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்டுகள், கிருத்துவத்தையும், பைபிளையும் இயேசுவையும்தான் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கினார்கள் அதனால் அவர்கள் எல்லாரும் ஓரவஞ்சனை கொண்டவர்கள் அல்ல;
//
மேற்கு நாடுகளில், மிகப் பெரும்பாலானோர் கிறித்துவர்கள். அதனால், அம்மத சம்பந்தப்பட்டவைகள் பகுத்தறிவாளர்களின் எதிர்ப்புக்கு ஆளாயின! நமது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே சமய சார்பற்ற கொள்கை உடையதாக அறியப்படுகிறது. அதனால் தான், பிற சமயங்களை பெரியார் (அவர் என்றில்லை, அன்று முதல் இன்று வரை, பலரும் அப்படித் தான்!) கண்டு கொள்ளாமல் விட்டதை ஓரவஞ்சனை என்றேன். அவரைப் போன்ற, மதிக்கப்பட்ட சமூகச் சிந்தனையாளர்கள், அதையும் செய்திருந்தால், இப்போது தமிழ்நாட்டுச் சூழல் இன்னும் ஆரோக்கியமாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி, பெயரிலி, பாலா. அடுத்த வாரம் விரிவாய் வருகிறேன்.
ஐயா ரோசாவசந்த்,
சந்தோஷமான விஷயத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? வாழ்த்துக்கள்!
புரட்சிக்காரருக்கு மகனா, மகளா? இனி சில காலம், எழுத / தூங்க நேரம் கிடைப்பது அரிது :-)
Also, pl. go and have a look here on comments from Jsri and Narain!!!
http://balaji_ammu.blogspot.com/2005/02/16.html#comments
என்றென்றும் அன்புடன்
பாலா
பாலா, ஜெய்ஸ்ரீ, மிகவும் நன்றி.
மகன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது, போன வாரம்தான் துணைவியும், மகனும் என்னுடன் சேர்ந்துகொண்டார்கள்.
ஆமாம், ஒரு வாரமாய் தூக்கம் இல்லைதான். அதற்காகதானே மூன்று மாதமாய் காத்திருந்தேன். ஒரு வாரமாய் வலைப்பதிவுகலை படிக்கவே கூட முடியவில்லை. உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி!
ரோஸாவசந்த், இப்போதுதான் இதைப் படித்தேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்... பெயர் வைத்தாயிற்றா? இனிமேல்தானா?
ரோசாவசந்த் துணைவியாரும் மகனும் வந்துவிட்டார்கள்.. ஆ.. இனிமேல் எழுத எங்கே நேரம் கிடைக்கப் போகின்றது. வாழ்த்துக்கள் குடும்பத்துடன் இணைந்து கொண்டதற்கு.
good luck and best wishes on the new arrival.have a wonderful time with the babe.cheers.why dont u post a family pic here.
இந்தியாவிலிருந்து "அன்பளிப்பு " வந்துவிட்டதா? வாழ்த்துக்கள்.
மாண்ட்ரீஸர், கறுப்பி, ரவி, கார்திக் மிகவும் நன்றி! தனிப்பட்ட பதில் எழுதிகிறேன்.
மாண்ட்ரீஸர் உங்க மின்னஞ்சல் முகவரி உங்கள் தளத்தில் கண்டுபிடிக்க முடியவில்லையே! வெளியிட முடியாவிடில் ஒரு தனி மெயில் rksvasanth@yahoo.comற்கு அனுப்ப முடியுமா?
வஸந்தின் வாரிசு, ஏக சுறுசுறுப்பு. நேரிலேயே பார்த்துட்டேன்! ஜப்பான் கிளைமேட்டுக்கும் நங்கநல்லூர் கிளைமேட் வித்தியாசம் தெரியறவரைக்கும் ஸார் செம சவுண்டு குடுத்துட்டுத்தான் இருப்பாரு!
மிகவும் நன்றி, ரஜினி ராம்கி! நீங்கள் சொல்வதும் உண்மை. வந்தவுடன் சின்ன பிரச்சனை, ஆனால் இப்போது தலைவர் க்ளைமேட்டுக்கு பழகிவிட்டதாய் தெரிகிறது.
ஜெயஸ்ரீ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அதற்குள் இன்னோரு முறை பிண்ணணியை கார்த்திக் மாற்றிவிட்டார். இன்னும் ஒரு வாரத்திற்கு என்ன வேண்டுமானாலும் விளையாடி கொள்ளும்படி கேட்டு கொண்டிருக்கிறேன். என்னவெல்லாம் வரும் என்று தெரியாது. நானும் ஒரு வாரம் இணையத்திலிருந்து விடுதலையாகி பயணப்படுகிறேன். வந்து என்ன நினலமியில் இருக்கிறது என்று பார்க்கலாம்.
கார்த்துக்கிற்கும், மதிக்கும் நன்றி!
Post a Comment
<< Home