ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Saturday, March 19, 2005அறிவிப்பு!என் பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளது. அல்லது வேறு ஏதோ நடக்கிறது. எனக்கு இது குறித்த விவரங்கள் தெரியாததால் நண்பர்கள் உதவும்படி கேட்டுகொள்கிறேன். இப்போதுதான் காஞ்சி ஃபிலிம்ஸின் பதிவில் பார்தேன். நான் எழுதாத ஒரு மறுமொழி என் பெயரில் வெளியாகியிருக்கிறது. சுதர்சன் அவர்களுக்கு பதிலாக எழுதப்பட்டுள்ளது. (அதை மேற்கோள் காட்ட முடியவில்லை. இப்போது ஏதோ பிரச்சனையால் காஞ்சியின் அந்த பக்கம் முழுவதும் என் கணணியில் வர மாட்டேனென்கிறது. ராமதாஸை கட்டிவைத்து அடிக்க வேண்டியதாகவும், கிட்டதட்ட எனது மொழி நடையிலேயே எழுதபட்டுள்ள பின்னூட்டம். அதற்கு கீழே 'நான் discalimerஆக, 'அது என்னுடயதல்ல' என்று பின்னூட்டம் இட்டுள்ளேன்.) இந்த மறுமொழி நான் எழுதியது அல்ல. (வேறு ப்ளாகர் கணக்கிலிருந்து) வெறுமன என் பெயரில் மட்டும் எழுதப்பட்டுள்ளதா என்று பெயரில் சுட்டினால் அது என் ப்ளாகிற்கே சென்றது. இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. பாஸ்வேர்ட் திருடப்பட்டுள்ளதா அல்லது வேறு வழிகளில் இது சாத்தியமா என்று புரியவில்லை. எது எப்படியிருப்பினும் இது நான் எழுதிய பின்னூட்டம் அல்ல என்று அறிவிக்கவே இந்த பதிவு. இப்போது தூங்கவேண்டும். இடையில் எது நடந்தாலும் நான் பொறுப்பு அல்ல. காலையில் வந்து (நண்பர்களின் அறிவுரைகளையும் கணக்கில் கொண்டு) ஏதேனும் செய்ய வேண்டும். இப்போது என் பாஸ்வேர்ட் மட்டும் மாற்றப்பட்டுளது என்று அந்த (என் பெயரில் பொய் பின்னூட்டமிட்ட) நண்பருக்கு தெரிவித்துகொள்கிறேன். என் பெயரில் பின்னூட்டமிட்ட நபரின் கோழைத்தனத்தையும், வெட்கங்கெட்டதனத்தையும் இகழும்போது, இதை சாதித்த அவரின் (வில்லன்தனமான) திறமையை வியக்கிறேன். பாராட்டுகிறேன்! மீதி நாளை. |
24 Comments:
இது மிக இலகுவானது ரோசா. பின்னூட்டம் பதியும்போது ழவாநச என்பதை கிளிக்கினால் பெயரையும் இணையத்தள முகவரியையும் கேட்கும். அப்போது விரும்பின பெயரை ஆங்கிலத்திலோ தமிழிலோ கொடுத்து பின் விரும்பிய தள முகவரியையும் கொடுக்கலாம்.
change your password atleast once in a month.do that first before posting any new entry or comments
elsewhere.
இது மிக இலகுவானது ரோசா. பின்னூட்டம் பதியும்போது ழவாநச என்பதை கிளிக்கினால் பெயரையும் இணையத்தள முகவரியையும் கேட்கும். அப்போது விரும்பின பெயரை ஆங்கிலத்திலோ தமிழிலோ கொடுத்து பின் விரும்பிய தள முகவரியையும் கொடுக்கலாம்.
மேலே ரோசா வசந் என்று வந்த பின்னூட்டம் நான் தான் கொடுத்தேன். ஒரு பரிசோதனைக்காக. Other என்பதை கிளிக் பண்ணினால் என்று வர வேண்டும்.
நன்றி வசந்தன். நான் பின்னூட்டங்களை மின்னஞ்சலாகவே முதலில் வாசிப்பதுண்டு. மீண்டும் என் பெயரில் நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை கண்டு பயந்தேவிட்டேன். தெளிவு படுத்தியதற்கு நன்றி.
தெளிவுக்காக மேலே என் பெயரில் உள்ள ஒரு பின்னூட்டம் வசந்தன் அளித்தது. இது நான் அளிப்பது. இணையத்தில் பல கேஸ்கள் (அதுவும் குறிப்பாய் எனக்கு எதிராய்) அலைவதால் எங்காவது என் பெயரில் குண்டக்க மண்டக்க பின்னூட்டத்தை பார்க்க நேர்ந்தால் அது நான் எழுதியதா என்று தெளிந்த பின் அது குறித்து கருத்து சொல்லவும் நன்றி.
மற்றபடி இந்த கேஸ்களுக்கு,
இது போன்ற பிரச்சனைகள் சின்ன சலனத்தை ஏற்படுத்துமே அன்றி, இது போன்ற எதிர்பின் விளைவாக ஏற்படுத்தப்படும் சிக்கல்களே என்னை தொடர்ந்து எழுதவைக்கிறது.அந்த வகையில் என் பெயரில் பின்னூட்டமிட்ட நண்பனுக்கு நன்றி!
என்னய்யா நடக்குது இங்கே? இந்த விளையாட்டு நல்லாத்தேன் இருக்குது இருந்தாலும் இதை தடுக்க எதாவது வழி இருக்கா என்ன?
சகிக்கலை... போதும் நிறுத்துங்கப்பா... ஓவரா பேசி பேசி தமிழ்மணத்தையும் ஊத்திமூடிறாதிங்க...
என்னால வந்த பிரச்சனை போதுமடா சாமி. இப்போதே நான் எல்லா "comments"களையும் "mask" செய்து விடுகிரேன். நிலைமை சரியான பின் பார்க்கலாம்.
கருத்து தெரிவித்த வசந்தன், ரவி, செந்தில், இளவஞ்சி, காஞ்சி ஃபிலிம்ஸிற்கு, மற்ற லூஸுகளுக்கும் நன்றி!
வசந்தன் விளக்கியபின் என் பெயரில் பின்னூட்டமிட்டதில் திறமை எதுவும் இல்லை, வெறும் வெட்கங்கெட்ட, மானம் கெட்ட கோழைத்தனம் மட்டுமே இருக்கிறது என்று தெரிகிறது. அதனால் பாரட்டுக்களை திரும்ப பெற்று கொள்கிறேன்.
என் கருத்துக்களை ஆர்வமாய் வாசிப்பவர்களுக்கும், தீவிரமாய் கவனிப்பவர்களுக்கும், மற்றும் ஏதோ விதத்தில் பொருட்படுத்துபவர்களுக்கும்....
இனி எங்கு பின்னூட்டமிட்டாலும் இங்கேயும் அதை ஒரு முறை இடுவேன். இதிலும் சிலர் விளையாட இயலும் என்றாலும், இது என் கவனத்தில் இருக்கும். நன்றி!
I haven't writen anything in this post.
I don't have any business in the 'jaathi sangakal' anymore.
thanks dass, I wasn't refering to you.
தங்கமணி பதிவில் எழுதியது.
தங்கமணி,உங்களுக்கும் ஜெயகாந்தனுக்கும் (எல்லாவகை)வாசிப்பின் மூலம் இருக்கும் உறவை முன்வைத்து எழுதியுள்ளீர்கள். படிக்க சுவாரசியமாக இருந்தது.
ஆனால் இதை ஜெயகாந்தன் மீதான உருப்படியான விமர்சனமாக என்னால் எடுத்துகொள்ள முடியவில்லை. எனக்கு ஜெயகாந்தனின் எழுத்து வாசிக்க அவசியமானதாகவும், வாசிப்பது முக்கியமானதாகவும், அதன் உலகத்தை உள்வாங்க வேண்டியது மிக அவசியமானதாகவும் தெரிகிறது. ஆனால் மிகுந்த விமர்சனத்துடன் இதை செய்யும் போது, ஜெயமோகனுக்கும் ஜெயகாந்தனுக்கும் பெரிய வித்தியாசங்களை காணமுடியவில்லை. ஜெயமோகன்/ஜெயகாந்தனின் உறவை பொருந்தா சமன்பாடாக பலர் பார்க்கும்போது, எனக்கு அப்படி தோன்றவில்லை. ஜெயகாந்தனின் திண்ணை பேட்டி, அண்ணா மறைவை ஒட்டி அவர் பேசியது இவையனைத்தும் ஜெயமோகன் என்று பெயர் போட்டு படித்தால் எந்த வித்தியாசமும் தெரியாது. இலக்கிய பாசிசம் என்பதற்கு உதாரணமாகவே என்னால் ஜெயகாந்தனை பார்க்க முடிகிறது ('திராவிட இயக்கம் ஒரு நோய்' எனும்போது). அதை நாம் தீவிரமாக உள்வாங்கவும் விமர்சன பூர்வமாய் எதிர்கொள்ளவும் இன்றியமையாதது என்பதை தவிர வேறு எதுவும் ஜெயகாந்தனை பற்றி நல்லதாய் சொல்ல தெரியவில்லை.
ஜெயகாந்தன் ஏதோ ஆரோக்கியமான நிலையிலிருந்து தடுமாறி மாறியதாக சொல்வதும் எனக்கு ஒப்புதலில்லை. தொடக்கத்திலிருந்த நிலைப்பாட்டிலேயே அவர் கடைசிவரை இருந்ததாகவே தெரிகிறது. வித்தியாசம் நம் பார்வையிலும் அறிதலிலும் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.
ரோசா,
இந்த பாஸ்வேர்ட் திருட்டை ஒரு சக-வலைப்பதிவன் என்ற முறையில் கடுமையாக கண்டிக்கிறேன். இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. இவர்களது முகம் காண்பிக்காமல் கருத்து/பின்னூட்டம் இடமுடியும்போது வேறு என்ன வேண்டும் இவர்களுக்கு? இது சிக்-மென்டாலிடியை காண்பிக்கிறது. இதை செய்பவர்களுக்கும் உணமையை திர்ப்பவர்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இல்லை, அதை விட ஒருபடி கீழ் என்றும் சொல்லலாம்.
கருத்து கூட எழுதாமல், அபத்தமாய் மட்டையடி கூட எழுதாமல் மூத்திரம் பெய்யும் இந்த அனானிமஸ்களை பொருட்படுத்தும் உங்களை புரிந்துகொள்ளமுடியவில்லை. இதற்காக வலிந்து நீங்கள் எழுதும் பதில்கள் ஏதோ மற்றவ்ருக்கு பயன் படும் என்றால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் இந்த மூத்திரங்களுக்கு[மட்டையடி கூட இல்லதபோது] நீங்கள் வலிந்து எழுதும் பதிலை அந்த அனானிமஸ் படிக்குமா என்று ஒரு போது நம்மால் எதிர்பார்க்க முடியாது. இதற்கு நம்/நீங்கள் நேரத்தை செலவிடுவது வீண் என்று நினைக்கிறேன். இதைத்தான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். "மட்டையடி அனானிமஸ்களை" பொருட்படுத்துவதில் எனக்கு பிரச்சினை இலை. என் ஆதங்கத்தை/லாஜிக்கை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். [குறைந்த பட்சம் 2 வரியாவது புரிந்து கொல்ளவேண்டும் என்று வாசிக்கும் எந்த அனானிமசுகளும் இந்த மூத்திரம் பெய்யாது என்று நினைக்கிறேன்]
கார்திக், கருத்துக்கும் அக்கறைக்கும் நன்றி! பாஸ்வேர்ட் திருடப்படவில்லை, வசந்தன் என்ன நடந்தது என்பதை விளக்கியிருக்கிறார். மற்றபடி அநானிமஸ்களை கண்டுகொள்வதில்லை. நீங்கள் கவலையில்லாமல் வேலையில் ஈடுபடுங்கள்.
the second comment in my name has not been posted by me.
விஷமத்தனமான பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கியமைக்கு வருந்துகிறேன். அனாமதேய பின்னூட்ட வசதியும் நீக்கப்படும். Bளாகர் கணக்கு இல்ல்லாமல் விமர்சனம் எழுத விரும்புவோர் எனக்கு மின்னஞ்சலில் எழுதலாம். நன்றி!
http://ntmani.blogspot.com/2005/03/blog-post_19.html#comments
தங்கமணி, நான் குறிப்பிட விரும்பியதும் நீங்கள் முன்வைத்தது விமர்சனம் அல்ல என்பதைத்தான்.
//ஜெயகாந்தனின் அரசியலை வெறுக்கும் பலரும் அவருடைய கலை-இலக்கியத்தை போற்றுவது வெளிப்படை.//
அரசியலையும் இலக்கியத்தையும் முழுவதும் பிரித்து தனித்தனியாக பார்க்க முடியாது என்பதுதான் என் கருத்தும். சுந்தரமூர்த்தி 'இலக்கியத்தை போற்றுவது' என்ற கருத்தையே " எனக்கு ஜெயகாந்தனின் எழுத்து வாசிக்க அவசியமானதாகவும், வாசிப்பது முக்கியமானதாகவும், அதன் உலகத்தை உள்வாங்க வேண்டியது மிக அவசியமானதாகவும் தெரிகிறது. " என்றும், ஜெயகாந்தனின் இலக்கிய உலகத்தை "தீவிரமாக உள்வாங்கவும் விமர்சன பூர்வமாய் எதிர்கொள்ளவும் இன்றியமையாதது " என்றும் என் கருத்தாய் சொல்கிறேன். அவருடய அரசியல் பார்வை இலக்கிய உலகத்தில் வரவில்லை என்று அதை தனியாய் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.
ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' படித்த போதும் என்னை அதன் உலகம் புரட்டி போட்டது. படித்த அன்று தூங்கவே இல்லை. நாம் எதிர்கொண்ட ஜெயமோகனை இந்த உலகில் எப்படி பொருத்தி பார்பது என்பது போன்ற பிரச்சனையே இது. இன்னும் இதை எப்படி செய்வது என்று தெளிவில்லை.
ஜெயகாந்தனுக்கு ஞான பீட விருது கிடைத்தது சிறந்த விஷயமாக தோன்றுகிறது. இன்றய நிலமையில் அது குறித்து பெரிதாய் பேச எதுவு இல்லையெனினும்!
வாழ்த்துக்கள் ரோஜா.
நான் இட்ட மறுமொழிகளை நீக்கியதுடன், பல உண்மைகளையும் தெரியப்படுத்து உதவி உள்ளீர்கள். உங்களின் பண்புகளென அறியத்தகுந்தவை:
1) அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் இடும் சுதந்திரம் உங்கள் பதிவில் இருக்கும் என்று புளுகியது.
2) தன்னைப் பற்றி வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டால் அதிர்ந்து கோழைத்தனமாக எதிர்கொள்ள முடியாமை.
3) பெரியாரின் முகமூடியில் சுயக்காழ்ப்புக்களை மறைப்பது.
4) அப்பட்டமாக ஜாதிசார்பை வெளிப்படுத்துதல்.
5) ப்ளாகர் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமை.
6) நகைச்சுவை உணர்வு (உதா: "என் Password திருடப்பட்டு விட்டது")
இதோடு இன்று போதும். பிறகு என் பதிவ்ல் நானும் விளக்கமாகத் தொடர்கிறேன். ஆனால் உங்கள் அளவுக்கு ஏனைய 'சீர்திருத்தவாதிகள்' கோழைகளாக இருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
இந்த மறு மொழி நீக்கப்படாது. இது போல் தொடர்ந்து எழுதப்படும் Bளாகர் கணக்கில் இருந்து வரும் பின்னூட்டங்கள் நீக்கப்படாது. என் விளக்கம் அடுத்த பதிவில் வரும். நன்றி!
அநாதையின் பதிவில்...
நன்றி அனாதை! ஒரு பக்கம் கேனத்தனமான வாதங்களையும், கேவலமான எதிவினைகளையும் (கருத்துகளாய் அல்லாமல் செயல்களாகவும்) எதிர்கொள்ள நேரும்போது, உங்கள் பதிவு ஆசுவாசம் அளிக்கிறது. வந்த எதிர்வினைகள் நமது நிலைப்பட்டில் மேலும் தீவிரமாக இருக்கவே உதவியதே தவிர, அதனால் வேறு பிரச்சனைகள் இல்லையெனினும், இது போன்ற பதிவுகளை பார்க்கும்போது கொஞ்சம் நெகிழ்சியுடனும், சந்தோஷத்துடனும் செய்ய முடிகிறது. நன்றி!
http://anathai.blogspot.com/2005/03/blog-post_20.html
நீக்கப்பட்டதை மீண்டும் விரும்பியவர் பதியலாம். மின்னஞ்சலாய் என்னிடம் இருந்த இரண்டு இங்கே ....
"உங்கள் பெயரில் பின்னூட்டம் இடப்பட்டதை உங்களுக்கு காண்பிக்கபட்ட எதிர்ப்புக்கும், கோழைத்தனம் விலத்தனம் வெட்கங்கெட்டத்துடன் உங்கள் பெயரில் பினூட்டம் இடுவதற்கும் கூட பிரித்து அறிய உங்களுக்கு துப்பு இல்லை. இதுதான் தமிழ் சூழலில் அவலம்.
இணையத்தில் உலாவுவதால் பிரச்சனை. இல்லாவிட்டால் ரோஸுக்கு செருப்பால் நாலு குடுத்திருப்பேன்!
நான் சொன்னதை நேர்மையாய் எதிர்கொண்டால் இன்னமும் ஏதோ ஒரு ஜாதிக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கான எதிர்ப்புதான் இது என்று புரியும்.
"திறமையை" பாராட்டியதற்கு நன்றி ரோஜாவுக்கு. "
கடைசியாய் மேலே உள்ள புழு அனானிமாஸாய் எழுதியது
" ராமாசு,
வன்மையாக கண்டித்துக்கொண்டே இருங்கள். password திருட்டு என்று ரோஜா பிதற்றிய வேதத்தை அப்படியே ஓதும் உங்கள் மூளையே மூளை? எங்கள் வில்லப்பணி இதனுடன் முடிவுறுகிறதில்லை. நிறைய பேர்கள் மிச்சமுள்ளனர்.
ரோஜா இரு இடத்திலும் பின்னூட்டம் இடவேண்டிய நிலைக்கு வருந்துகிறேன். நாங்களும் இடவேண்டுமே என்பதை நினைத்து இன்னமும் வருந்துகிறேன்.
நீங்கள் இருவரும் கொஞ்சம் சந்திப்பிழைகளையும் சொற்பிழைகளையும் கவனித்து எழுதுதல் தமிழுக்கும் உங்களுக்கும் நன்று.
தொடர்ந்து எழுதி எல்லோரையும் புண்படுத்துங்கள் தமிழ்க்காப்பாளர்களே! "
அனானி, நேற்றே இங்கு வந்திருந்தாலும், பதில் எழுத நேரமில்லை.
உண்மைதான் எனக்கு ப்ளாக்கர் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லை. ப்ளாக்கரில் இப்படி ஒரு விஷயம்
இருப்பது வசந்தன் சொல்லியும் எனக்கு சரியாய் புரியவில்லை. இப்பொழுது ரோசா சொன்ன பின்னரே புரிந்து கொண்டேன். அனானிக்கு நன்றி.
இருந்தாலும், பேசப்பட்ட கருத்துக்கு சம்பந்தமாய் ஒரு மசிரும் புடுங்காமல், "ப்ளாக்கர் அறிவு இல்லை"
எனபதை வைத்துக்கொண்டு அடிக்கும் "மட்டையடியை" [இது எந்த வகை மட்டையடி என்று ஆராய்ந்து தான் பதில் சொல்லவேண்டும், அதை பிறகு செய்கிறேன்]இந்த வருட சுப்ரீம் மட்டையடியாய் கருதுகிறேன்.நான் எழுதியது உங்களை பாதிக்கிறது என்று தெரிவித்ததற்கும் நன்றி.
//நீங்கள் இருவரும் கொஞ்சம் சந்திப்பிழைகளையும் சொற்பிழைகளையும் கவனித்து எழுதுதல் தமிழுக்கும் உங்களுக்கும் நன்று.//
இதை ஏற்றுக்கொள்கிறேன்[என்னைப்பொறுத்தமட்டில்] நன்றி அனானி.
வசந்த், அந்தப் பின்னூட்டம் கிட்டத்தட்ட உங்கள் நடையிலேயே எழுதப்பட்டிருந்தது. வெட்டி வேலை செய்து விட்டு இந்தக் கோமாளிகளுக்கு வெற்று ஆரவாரம் வேறு! ஜனநாயகம் என்று நினைத்து அனாமதேயங்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் முதலுக்கே மோசமாகிவிடுகிறது.
கார்திக், சுதர்சன் கருத்துகளுக்கு நன்றி!
Post a Comment
<< Home