ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Thursday, June 23, 2005ஷங்கரின் 'அந்நியன்' பற்றி...அந்நியன் திரைப்படம் 'பார்பனியத்தை' பிரச்சாரம் செய்வதாக இன்னும் யாரும் எழுதி கேள்விப் படவில்லை என்றாலும், அப்படி ஒரு ஸ்டிரியோடைப் குரல் தமிழ் சூழலில் ஒலிக்க எல்லா வாய்ப்பும் இருப்பதால் இந்த பதிவை எழுதவேண்டியுள்ளது. அந்நியன் திரைப்படம் பிராமணர்களை பற்றி எடுக்கப்பட்டதல்ல. சொல்லப்போனால் அது அய்யங்கார்களை பற்றியது கூட அல்ல. அது எவரையும் பெருமைபடுத்தவும் இல்லை. எவரையும் இழிவுபடுத்தவுமில்லை. அதில் நொசிவாக, நொகையாக சித்திரிக்கப் படும், கருப்பான நிறத்துடன் உலாவரும், சமூக சீரழிவின் காரணிகளாக, சுய ஒழுக்கம் அற்றவர்களாக, நேர்மை யற்ற முறையில் வாழ்வதாக சித்தரிக்கப்படும் எந்த பாத்திரமும் பிராமணரல்லாதவரை குறிக்கவில்லை. தமிழில் வெளிவந்துள்ள சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இதை குறிப்பிடலாம். படத்தின் முக்கிய பாத்திரங்கள் மூன்று. அவற்றில் இரண்டு அம்பி என்ற பாத்திரத்தின் பிளவு பட்ட மற்ற ஆளுமைகளாக வந்தாலும், அவைகள் அம்பியின் சாதிய அடையாளத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்து கொண்டு, பொதுவான மனித பண்புகளின் அடையாளங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. ரெமோ, அந்நியன் என்ற இரண்டு பாத்திரங்களும் பிராமண தமிழில் பேசுவதில்லை. ஸ்ரீசுவர்ணம் இட்டுகொள்வதும் இல்லை. சமுதாயத்தின் அநீதிகளை கண்டு பொறுக்க முடியாமல் போகும், அநியாயங்களை தட்டி கேட்கும் தன் நேர்மை காரணமாகவும், அதன் விளைவாகவே காதலில் வெற்றி பெற முடியாத அம்பியின் கையாலாகாத்தனத்திற்கு வடிகாலாகாவே, அவனது ஆளுமை பிளக்கப் பட்டு ரெமோவாகவும், அந்நியனாகவும் உருவெடுக்கிறான். கல்மனசையும் உருக செய்யும் வகையில் அம்பியின் பாத்திரம் படைக்கபட்டிருக்கிறது. லுங்கி கட்டிகொண்டு, சுத்தமற்ற தன்மையில் சைக்கிளில் செல்லும் கருப்பு நிற இளைஞன்(சார்லி), தன் பாட்டிற்கு தேமேனென்று சென்று கொண்டிருக்கும் அம்பியின் மீது துப்புகிறான். ஒரு காலத்தில் சமூகத்தால் மிகவும் மதிக்கப்பட்ட பிராமண வாழ்க்கை, இன்று மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அந்த காட்சி அற்புதமாய் படம் பிடித்தாலும், அந்த காட்சி ஜாதி அடையாளங்களை மீறி காண்பிக்கப் பட்டிருக்கிறது. சுத்தத்தையும் ஒழுக்கத்தையும் அம்பி பேணுவதை போல, சமூகத்தின் மற்ற உறுப்பினர்கள் பேணாததையும் அவ்வாறு பேண வேண்டியதன் அவசியத்தையுமே அது வலியுறுத்துகிறது. சார்லி கருப்பு நிறத்தில் லுங்கி கட்டிகொண்டு, கலீஜ் சென்னை தமிழ் பேசுவதால் மட்டும் அது ஒரு பிற்படுத்த பட்டவரை குறிப்பதாக நாம் கொள்ள முடியாது. கருப்பு/சிவப்பு தோல்நிறங்கள், லுங்கி/வெள்ளை நிற உடை இவையனைத்தும் சுத்தம்/அசுத்தம் குறித்த குறியீடே தவிர, அது எந்த ஜாதியினரையும் குறிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் படத்தில் பிராமணர்கள் யாரும் இத்தகைய ஈனசெயல்களில் ஈடுபடாமல் ஒழுக்கமாகவும், செய்பவர்கள் அனைவருமே மற்ற ஜாதியினராக இருப்பதாகவும் சித்தரிக்கப் பட்டிருப்பதாக சிலருக்கு தோன்றக்கூடும். ஒரு கலைப்படைப்பை வாசிக்க தெரியாத முதிர்சியின்மையாக மட்டுமே இதை பார்க்க முடியும். பிராமணர்கள் சுத்தத்தை பேணுபவர்களாகவும், சாந்த சுபாவம் கொண்டவர்களாகவும் இருப்பதாலேயே அவர்கள் அவ்வாறு குறியீடு செய்யப்பட்டிருக்கிறார்கள். குறியீட்டின் பொருத்தப்பாடு காரணமாகவே இவ்வாறு திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது. மொழி மட்டுமில்லாது, கலை என்பதே ஒரு குறியீட்டு அமைப்பு (sign system) என்பதாக இன்று கலையியலாளர்கள் சொல்லி வருகிறார்கள். அது திரைப்படத்திற்கு மிகவும் பொருந்தும். ஒரு கலைப்பிரதியை புரிந்துகொள்ள அதற்குள் இருக்கும் குறியீடுகளை வாசிக்க வேண்டும். அந்த வகையில் அய்யங்கார், கருப்பு, லுங்கி இவையெல்லாம் வெறும் குறியீடுகள் மட்டுமே. அப்படி வாசிக்கும் போது திரைக்கதையில் வரும் அய்யங்கார்கள் என்பதாக குறிக்க படுபவர்களுக்கும், இன்று அய்யங்கார்களாக அறியபடுபவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புரிந்துகொள்ளலாம். அதே போல உருவத்தையும், பேச்சு வழக்கையும் மட்டும் கொண்டு அயோக்கியர்களாக சித்தரிக்க படும் மற்றவர்களை பிற்படுத்த/தாழ்த்தபட்ட அல்லது பிராமணர் அல்லாதவராகவோ முடிவுக்கு வருவது ஒரு கலைப்படைப்பை வாசிக்க தெரியாத அறியாமை மட்டுமே. நீதிகான போராட்டத்தின் குறியீடாகவே கருட புராணமும் குறிக்க படுகிறது. தமிழகத்தின் சென்ற நூற்றாண்டின் திராவிட இயக்க அரசியலின் பிண்ணணியில், பிராமணர்களின் நிலையை முன்வைத்து மட்டும் இந்த கதையை பார்க்கமுடியாது. வறலாற்றை ஒற்றை பார்வையால் தனக்கு வசதியாக்கி கொண்டு, பிரதிகளை வாசிக்கும் முதிர்சியின்மை மட்டுமே இதில் வெளிபடுகிறது. மாறாக கடந்த 50 வருட அரசியல் சமுதாய நிகழ்வுகளில் நாம் இழந்து விட்ட ஒழுக்க மதிப்பீடுகள், நாணயம், சுத்தம் சுகாதாரம் நிறைந்த வாழ்க்கை முறை, இவற்றின் பிண்ணணியில் வைத்து இந்த கதையை வாசிக்க வேண்டும். சண்டை காட்சிகளிலும், விக்ரமின் உருவ மாற்றங்களிலும் சில லாஜிக்கல் பிழைகள் இருந்தாலும், தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக வைப்பதற்கு தகுதி பெற்றது இந்த திரைப்படம். இந்த படத்தின் சிறப்பை பிரமணர்(கள் என்ற அடையாளத்துடன் எழுதும்) வலைப்பதிவாளர்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படம் 'பார்பனியத்தை' பிரசாரம் செய்வதாக பேச தொடங்குவது "நல்ல கலைப்படைப்புகளை புரிந்துகொள்ளும் அறிவு பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. பிராமணரல்லாதவர்களுக்கு கிடையாது. அவர்கள் சாதியை சொல்லி ப்ளாக் மெயில் மட்டுமே செய்யக் கூடியவர்கள்" என்பது போன்ற தவறான கருத்துக்கள் வலுப்படவே வழி வகுக்கும். இது பிராமணரல்லாதவர்களுக்கு எந்த விதத்திலும் உதவக்கூடியதல்ல. பின் குறிப்பு: இந்த பதிவை எழுத உதவியவை 1. முக்கியமாக ரவிக்குமாரின் 'பிள்ளை கெடுத்தாள் விளை' பற்றிய கட்டுரை. 2. அருண் வைத்தியநாதன் தொடங்கி, ஸ்ரீகாந்த் மீனாட்சி வரை ஒத்ததாக எழுதப்பட்ட சில விமர்சனங்கள். அவற்றிற்கு என் நன்றிகள். |
42 Comments:
பின்னிப் பெடலெடுத்திருக்கிறீர்கள் வசந்த்! :)
;-)
ஒரே சமயத்தில் பல காய்கள் அடிப்பது என்பது இது தானோ?
ஒலிக்கும் பறை இந்த "பிள்ளை கெடுத்தாள் விளை " கதையை எழுதியுள்ளார் அதன் சுட்டியை ரவிக்குமாரிடம் கொடுத்து படிக்க சொல்லவேண்டும்,
http://olikkumparai.blogspot.com/2005/06/blog-post_111944408367076249.html
:-))
நல்ல பதிவு ரோஸா வசந்த் அவர்களே. இப்போது தமிழ் வலைப்பூவுலகம் இருக்கும் சூழ்நிலையில் வெறுமனே நெருப்புப் பெட்டியை வெளியே எடுத்தாலே பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கும்போது நீங்கள் இதை எழுதியது உங்கள் சமுதாய அக்கறையையே காண்பிக்கிறது. பாராட்டுகள் ரோஸா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
கலையைக் கலையாகப் பார்க்கும் விமர்சனம்.நன்றி ரோசாவசந்
//கலையைக் கலையாகப் பார்க்கும் விமர்சனம்.நன்றி ரோசாவசந் //
அண்ணே ஈழநாதன், ரோசாவசந்த்தின் பதிவு புரியவில்லையா? டோண்டு சார் உங்களுக்குமா புரியவில்லை? ஒரு வேளை நான் தான் தவறாக புரிந்துகொண்டேனா?
//பின் குறிப்பு: இந்த பதிவை எழுத உதவியவை
1. முக்கியமாக ரவிக்குமாரின் 'பிள்ளை கெடுத்தாள் விளை' பற்றிய கட்டுரை.
2. அருண் வைத்தியநாதன் தொடங்கி, ஸ்ரீகாந்த் மீனாட்சி வரை ஒத்ததாக எழுதப்பட்ட சில விமர்சனங்கள்.
அவற்றிற்கு என் நன்றிகள்.//
இதை படிக்கும் போது நான் சரியாக புரிந்து கொண்டேன் என நினைக்கின்றேன்
அம்மாடியோவ்.........!
//வஞ்சபுகழ்ச்சி அணி தெரிஞ்சுருக்கனுமோ?//
கண்டிப்பாக. ;-)
பதிவுகள்.கொம் -லிருந்து எடுக்கப்பட்ட ரவிக்குமாரின் கட்டுரை இங்கே கீழே. நன்றி பதிவுகள்.கொம்.
---
சுந்தர ராமசாமியின் சிறுகதை தலித்துகளைப் பற்றி எழுதப்பட்டதல்ல. அது எவரையும் இழிவு படுத்தவுமில்லை. தமிழில் வெளிவந்துள்ள நல்ல சிறுகதைகளில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அந்தச் சிறுகதையில் டெய்லர் செல்லத்துரை, ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் நிருபர் தங்கக்கண் என இரண்டு கதை சொல்லிகள் வருகின்றனர். தங்கக்கண் கொஞ்சம் 'கூட்டிச் சொல்கிறவன்' அவனிடம் 'கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு'. 'பொட்டையா? போடாதே மேல் சீலை' என்று ஒடுக்கப்பட்டிருந்த குடும்பம் ஒன்றிலிருந்து வருபவள் தாயம்மா.ஒரு ஜெர்மன் பாதிரியாரின் உதவியால் 'ஐரோப்பாவில் மிகப்பெரிய பள்ளியில் இளங்கலை கற்றுத் தேர்ந்த பெண்ணிற்கு நிகராகக்' கல்வி பெறுகிறாள். மனசுக்குள் ஆங்கிலம் பேசி; யாருமில்லாத நேரங்களில் ஆங்கிலக் கவிதைகளை வாய்விட்டுச் சொல்லிப்பார்த்து, தனது திறமையைப் புரிந்துகொள்ள அந்த ஊரில் ஒருவருமில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த தாயம்மா 'காலத்தின் கூத்தால்' ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை ஆக்கப்படுகிறாள். 1950களில் அவளுக்கு முன்னூறு ரூபாய் சம்பளம். தினமும் மீன் சாப்பிட்டு, நாளுக்கொரு சேலை உடுத்தி,பார்க்கிற பெண்களும் பொறாமை கொள்கிற அளவுக்கு அழகோடு இருக்கும் தாயம்மாவை தேர்தலில் நிற்கச் சொல்லிஅரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள். இப்படி பேரும் புகழுமாக இருக்கும் அவளை ஒரு நாள் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் ரகஸியமாகக் கூடி சதி செய்து பழி சுமத்தி அடித்து விரட்டுகிறார்கள்.
ஐம்பத்துமூன்று வருடங்கள் தாயம்மாள் போன இடம் தெரியவில்லை. எண்பது வயதைத் தண்டிவிட்ட நிலையில் மீண்டும் அவள் அந்த ஊருக்கு வருகிறாள். அப்போதும் அவள் பகலில் வெளியே தலை காட்டக் கூடாது என அந்த ஊர் கட்டுப்பாடு போடுகிறது. "நாம் ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு "அவளை நல்ல முறையில் காப்பாற்றலாம் என தங்கக்கண்ணிடம் கதைகேட்டுக்கொண்டிருந்தவர்கள் முன்வரும் வேளையில் தாயம்மா இறந்துவிட்டாள் என்று சொல்லி கதையை முடிக்கிறான் தங்கக்கண்.
'கல்மனசையும் உருகச் செய்யும்' இந்தக்கதை ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் தங்கக்கண்ணால்தான் சொல்லப்படுகிறது. அது அவன் சொன்ன கட்டுக்கதையாகவும் இருக்கலாம். ஏனென்றால் அவன் கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு என முன்பே ஒரு குறிப்பு தரப்பட்டுள்ளது. தாயம்மாமீது சுமத்தப்பட்டது வீண்பழிதான் என்பதைப் புரிந்துகொள்ள சுந்தரராமசாமி கதையில் பல தடயங்களை விட்டுச் செல்கிறார். தாயம்மாவின் அழகு மட்டுமின்றி அவளது செல்வச் செழிப்பும் அவள்மீது
பொறாமை உண்டாகக் காரணமாகியிருக்கலாம். அவளுக்கு அபவாதம் வந்துசேரக் காரணமாக இருந்த மாணவன் மணிகண்டன் வசதியான ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகன். கணக்கில் ஓட்டையான அவனுக்கு சிரத்தை எடுத்துக்கொண்டு தனியே பாடம் சொல்லித் தருகிறாள் தாயம்மா. மணிகண்டன் வீட்டுக்கு வரும்போது அவன் முகம் வீங்கி இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. அவனை கன்னத்தில் அடித்து தாயம்மா பாடம் சொல்லித் தந்ததால் அப்படி முகம் வீங்கிப் போயிருக்கலாம்.அதனால் கோபம் கொண்ட அந்தப் பையனின் தாய் ஊரெல்லாம் தாயம்மாமீது கோபப்படுகிறமாதிரி ஒரு பொய்க் கதையைக் கிளப்பி விட்டிருக்கலாம். இப்படி பார்ப்பதற்கான தடயங்களே அந்தக் கதையில் உள்ளன. தாயம்மாவின் ஒழுக்கம்பற்றி சந்தேகம் கொள்கிறமாதிரி கதைக்குள் ஒரு குறிப்புமே இல்லை. ஊர்ப் பிரமாணிகளும், சக ஆசிரியர்களும் பதுங்கியிருந்து அவளை அடித்துத் துன்புறுத்தும் காட்சியின் வர்ணனை மட்டுமின்றி மிகவும் துயரார்ந்த முறையில் சொல்லப்பட்டுள்ள அவளது மரணமும் அவள்மீது சுமத்தப்பட்டது வீண்பழிதான் என்பதற்கு சாட்சியங்களாக உள்ளன.
மொழி என்பது ஒரு குறியீட்டு அமைப்பு(சிக்ன் ச்ய்ச்டெம்) என்று மொழியிலாளர்கள் சொல்லியுள்ளனர். ஒரு பிரதியை வாசிப்பதற்கு அதற்குள் இருக்கும் குறியீடுகளை வாசிக்கவேண்டும். 'விளை' என முடியும் ஊரின் பெயரும், தாயம்மா, தங்கக்கண் என்பனபோன்ற நபர்களின் பெயர்களும் சுட்டுகின்ற பண்பாடு எதுவெனெத் தெரிந்துகொள்ள நாகர்கோயில் பகுதியின் பண்பாட்டு வரலாறு நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இக்கதையில் உள்ள குறியீடுகளை வாசிக்கும்போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என அறியப்படுபவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.தாயம்மாவை
'தாழ்ந்தஜாதிப் பிள்ளை' என்று கதையில்வரும் பாத்திரமொன்று குறிப்பிடுவதைக்கொண்டு அவள் இன்றைய தலித் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.
திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் வரலாற்றின் பின்னணியிலும்; அப்படிப் போராடிய சமூகத்தவருக்குக் கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின் பின்னணியிலும் வைத்து இந்தக் கதையை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் இது அந்த மக்களுக்கு தரவாக சொல்லப்பட்டிருப்பது புரியும்.
மாடக்குழியை ஓரிடத்தில் மாங்குளம் எனத் தவறாகக் குறித்திருப்பது, உள்ளூர் தினசரியின் தலைமை நிருபருக்கு இப்போது 40 ரூபாய் சம்பளம் எனச் சொல்வது போன்ற சிறு பிழைகள் இருந்த போதிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக வைப்பதற்கு தகுதிபெற்றது இந்தக்கதை. இது தலித்துகளுக்கு எதிரானதென்றும்,இதை எழுதியவர் மன்னிப்பு கேட்காவிட்டால் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்குபோடுவோம் என்றும் சொல்லுவது, "தலித்துகளுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது,அவர்கள் சாதியைச் சொல்லி 'பிளாக் மெயில்' செய்யக்கூடியவர்கள்" என்பதுபோன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்ச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.
adheedhan@rediffmail.com
21.4.2005
//இக்கதையில் உள்ள குறியீடுகளை வாசிக்கும்போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என அறியப்படுபவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.//
+
//திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் வரலாற்றின் பின்னணியிலும்; அப்படிப் போராடிய சமூகத்தவருக்குக் கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின் பின்னணியிலும் வைத்து இந்தக் கதையை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் இது அந்த மக்களுக்கு தரவாக சொல்லப்பட்டிருப்பது புரியும்.// :-(
எங்கோயோ போய்ட்டார் ரவிக்குமார்...அட அட அட.. ;-)
இது தான் நிதானமான வாசித்தலா?
:) :)
பின்னிட்டீங்க....
வஞ்ச புகழ்ச்சி அணி என்பதை ஸ்கூல்ல படிச்சது. அப்புறம் அப்பப்போ அப்பப்போ என்னை சுத்தியிருக்கிற மக்கள் கிட்ட பார்ப்பேன். ரொம்ப நாளா வஞ்ச புகழ்ச்சி அணியை பார்க்கலை.இப்போ தான் இந்த பதிவுல பார்க்குறென்னு நினைக்கிறேன்.
:_)))))))))))))))))))))
நொசிவு அல்லது நொகை என ஏதேனும் ஒன்றை negative என்று சொல்லுதற்குப் புழங்குங்கள். நான் இரண்டு உகப்பு(option)க்களைக் கொடுத்திருந்தேன். அதே போல positive என்பதற்குப் பொதிவு என்ற சொல்லைப் புழங்கலாம். எதிர்/நேர் என்ற சொற்கள் அவ்வளவு சரியான பொருளைக் கொடுக்கவில்லை என்பது என் சிந்தனை.
அன்புடன்,
இராம.கி.
ரோசா,
என்ன ஒரு சாத்வீகம் ? ;-)
ஒண்ணுமே புரியலே உலகத்திலே, என்னமோ நடக்குது, மர்மமா நடக்குது :-)
மற்றபடி, இது ஒரு wonderful satirical பதிவு என்பது என் அபிப்ராயம் !!!!
படத்தைப் பாக்கனும், இன்னும் மத்ததுகளை வாசிக்கலை.
சந்திரமுகி விமர்சனத்தையும் இன்னொரு தடவை ஒழுங்கா படிக்கணும் ;;-)
vilaasi thalli putteere! nice satire, it would have been even better if it did not have so many statements directly taken from ravikumar's blabber. neways, too good!
வசந்த், சாரு வின் 'கிரிக்கெட்டை முன்வைத்து..' போல இது 'அன்னியனை முன் வைத்து ...'. Bring back the eighties!
அருள்
கட்டுடைப்போம், பொறுத்திருப்போம், காலம் மாறும்....
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
ரோசாவசந்த், இண்டைக்கு இரவுக்குத்தான் அன்நியன் படம் பார்ப்பதாக இருக்கிறேன். வலைப்பதிவாளர்களுக்குத் தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் பார்க்கலாமா? வேண்டாமா? ஒரு படத்தை ஒருவரும கண்டுகொள்ளாவிட்டால் பார்க்கும் ஆர்வம் வராது. சந்திரமுகியைத் தொடர்ந்து அன்நியன் படம்தான் எல்லோரது விமர்சனத்தும் உள்ளாகிக் கொண்டிருக்கிறது. எனவே பார்க்கத் தூண்டுகின்றார்கள் விமர்சனம் வைப்பவர்கள். சங்கருக்கென்ன எதையாவது சொல்லிப் பணம் பண்ணினால் போதும் தானே.
யப்பா சாமி,
எப்படிப்பா இதெல்லாம். மொதல்ல ஒன்னும் புரியலே. ரோசா கிட்டேந்து இப்படி வராதேன்னு.. கடைசியா linkக படிச்சாதான் தெரிஞ்சுது...
:-)))))))))))))))))))
முதல் முறை படிச்சப்ப நான் கூட ரோசா உண்மையாகவே ஒரு நல்லிணக்க முயற்சியில் இறங்கிட்டாரோனு நினச்சி ஏமாந்துப்புட்டேன்!:-)))
அவதார மகிமைகளை நவீன இராமநாரயணன் பாணியில் (25 கோடி செலவழித்து) சொல்லும் போது அரக்கர்கள் (கருப்பாக, துருத்திய பல்லுடன்) வேண்டாமா காலடியில் கிடந்து மிதிபட்டுச் சாக?
அ.மார்க்ஸ், அவரது அய்ரோப்பிய பயணம் பற்றிய புத்தகம் ஒன்றில் (வெள்ளை நிறவெறி ?) சுத்தத்துக்கும் ஜெர்மானிய இன மேலாதிக்கத்துக்கும் உள்ள தொடர்புக்கான நடைமுறை நிகழ்வுகளை சுட்டுவார்.
எனக்கு இரவிகுமாரின் கட்டுரைதான் மிகப்பெரிய நகைச்சுவையாய் இருந்தது.
//'தாழ்ந்தஜாதிப் பிள்ளை' என்று கதையில்வரும் பாத்திரமொன்று குறிப்பிடுவதைக்கொண்டு அவள் இன்றைய தலித் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.//
இதைப்படித்த போதுவியந்தே போனேன். இன்றைய தாழ்ந்தசாதியான இன்னாரின் மகன் என்று தாசில்தார் சான்றிதழின் பேரிலேயே இவர் சாதி ஒடுக்குமுறையை புரிந்துகொள்ள வேண்டுமென்கிறாரா?
//வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்குபோடுவோம் என்றும் சொல்லுவது, "தலித்துகளுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது,அவர்கள் சாதியைச் சொல்லி 'பிளாக் மெயில்' செய்யக்கூடியவர்கள்" என்பதுபோன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்ச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.//
அடப்பாவி, இவர்களது சான்றிதழ் அவ்வளவு முக்கியமா? கலையை தீர்மானிப்பதே யார் என்ற கேள்வி இருக்கையில் அதை ரசிப்பதற்கும் அதன் வரையறைகளைத் தீர்மானிப்பதற்கும், ஒடுக்கும் கருத்தியலிடமே சான்றிதழ் கேட்கவேண்டுமென்பது வேடிக்கையாக இருக்கிறது. இரவிக்குமாரும் இன்னொரு அரசியல்வாதியாகிப்போனது இந்தக் கட்டுட்டுரையில் தெளிவாகத் தெரிகிறது. நன்றி வசந்த்.
நான் ஒரு பெண். என் பின்னூட்டத்திற்கு மரியாதை அற்ற முறையில் யாரும் பதில் பின்னூட்டம் அளிக்காதீர்கள் என எச்சரிக்கிறேன். ரோசா வசந்த்., இந்த மாதிரி நிறைய எழுதுங்கள். அப்போதுதான் உண்மையான மனக்குமுறலை எழுத எண்ணம் கொண்டுள்ளோர் தைரியமாக எழுத முடியும். இவர்கள் எழுதுவதை விமர்சித்தால்., உடனே கிடைக்கும் பட்டம் 'அபத்தம்' 'பேத்தல்' இன்ன பிற... இவர்கள் எழுதுவதை ஒத்துக் கொண்டேயாக வேண்டிய நிர்பந்தம்தான் என்ன?., என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாமல் உடனடியாக 'அபத்தம்' 'போத்தல்' போன்றவையே பதிலாக கிடைக்கிறது. இந்த நூற்றாண்டிலும் விடாமல் 'சாதீ' யை சுமந்து கொண்டு., ஒரு பகுதி மக்களை தாழ்த்தப்பட்டவர்களாக., இன்னபிறரை பிற்படுத்தபட்டவர்களாக வைத்து ஒரு 'ஆண்டான்' மனோபாவத்தில் எழுதப் பட்ட படைப்புகளை உடனே கண்டியுங்கள். சரியெனப் பட்டதை நல்ல மனதுடையவர்கள் ஆதரியுங்கள். வாசத்தில் வாழ்ந்து கொண்டு., நாற்றத்தில் அவர்களால் உழல்பவர்களை நக்கலும்., நயாண்டியும் பண்ணி எழுதும் போது தயவுசெய்து யாரும் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். எதிர்ப்பை எழுத்தில் கட்டாயம் காட்டுங்கள்.
I could not help myself think that this particular blog is the joke(f***up)of the century. //
தூ!..., இதை அனானிமஸ் எழுதினால் ஆபாசம்., நீங்கள் எழுதினால் விமர்சனமா?
டோண்டுவும் அதே உயர்வு நவிற்சியில் தான் கூறியிருக்கிறார் என நினைக்கிறேன் ..
பூடகமான உங்கள் கருத்துகளுக்கு முன்னால் ,ஒலிக்கும் பறையை படித்ததினால் நிறைய விஷயங்கள் புரிந்தது .. சந்திரமுகியில், 'தாழ்ந்த ஜாதியில்' என ரஜினி கூறியதற்காக அவர் நாக்கை அறுக்கவேண்டுமென நீங்கள் கூறுவீர்கள் என எதிர்பார்த்தேன் ..
குழலி அதே வஞ்சப் புகழ்ச்சி.ரோசவுக்கல்ல டோண்டுவுக்கும் பின்னாலே வரவிருக்கும் சகாக்களுக்கும்.ஆனால் எல்லோரும் சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்
//கலையைக் கலையாகப் பார்க்கும் விமர்சனம்.நன்றி ரோசாவசந் //
அண்ணே ஈழநாதன், ரோசாவசந்த்தின் பதிவு புரியவில்லையா? டோண்டு சார் உங்களுக்குமா புரியவில்லை?//
ரோசா பதிவை எப்போதும் வரிகளுக்கிடையில் வாசிக்கவேண்டுமென்று எனக்கும் தெரியுமில்ல
//குழலி அதே வஞ்சப் புகழ்ச்சி.ரோசவுக்கல்ல டோண்டுவுக்கும் பின்னாலே வரவிருக்கும் சகாக்களுக்கும்.ஆனால் எல்லோரும் சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்//
//ரோசா பதிவை எப்போதும் வரிகளுக்கிடையில் வாசிக்கவேண்டுமென்று எனக்கும் தெரியுமில்ல //
ம்.. நான் தான் இத்தனை நாள் இது தெரியாம இருந்திருக்கிறேனா?
அடா அடா எல்லோரும் சரியாதான் இருக்கீக நான் தேன் கிறுக்கு பயலா திரிஞ்சிக்கிட்டுருக்கேன் போல தமிழ்மணத்துல
கருத்து சொன்ன நண்பர்களுக்கு மீண்டும். நன்றி. என் கணணி 'துயில் கலையும் போதெல்லாம் விழிப்பு கொள்வதில்' மக்கர் செய்வதால் இப்போதுதான் வர முடிந்தது.
பல பெயர்கள் வெறும் கேள்விகுறிகளாய் வந்துவிட்டதால் (மின்னஞ்சலில் பார்த்து) பெயர்களை குறிப்பிடுகிறேன்.
சுதர்சன், பெயரிலி, குழலி, யளனகபக கண்ணன், டோண்டு, ஈழநாதன், முதன் முறையாய் அனாவசியமாய் 'கெட்ட'வார்த்தைகள் கலக்காமல் யாரையும் திட்டாமல் ஒரு பின்னூட்டம் அளித்த 'மனிதன்', பாண்டி, தருமி, கார்திக், பாலாஜி-பாரி, முதன் முறையாய் என் பதிவில் பின்னூட்டம் அளித்து பெருமை சேர்த்த இராம.கி ஐயா, அல்வாசிடி விஜய், என்றென்றும் அன்புடன் பாலா, பண்டாரம், சுந்தர வடிவேல், பாஸ்டன் பாலா, சுவடு சங்கர், அருள், என்னமோ போங்க, கறுப்பி, சோழநாடன், BR, தங்கணி, அப்படி போடு, தாஸு ஆகியோருக்கு நன்றி.
இது தவிர தனிப்பதிவின் மூலம் கருத்து சொன்ன அருண் மற்றும் ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கும் நன்றி.
கணணி அனுமதித்தால் இன்னும் சிறிது நேரத்தில் வந்து, ஸ்ரீகாந்த சொன்ன சில கருத்துக்கள் குறித்தும், லாடு லபக்கு தாஸ் எழுப்பியுள்ள(நக்கல் என்று அவர் நினைத்து எழுதினாலும், கொஞ்சம் அர்த்தமுள்ளது என நான் நினைக்கும்) கேள்விக்கும் பதில் கருத்து சொல்லுகிறேன். நன்றி!
நான் நக்கலாக நினைத்துக்கொண்டு இதை கேட்கவில்லை .. சந்திரமுகியில் இந்த வார்த்தை வரும்போது, என்னில் எழுந்த கேள்வி இது.. என்னுடைய direct-ஆன நேர்மையான கேள்விதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . இதற்குமேல் உங்கள் இஷ்டம் ..
ஸ்ரீகாந்த் மீனாட்சி (எழுதியது)எழுப்பியுள்ள கேள்வி முக்கியமானது என்று நினைக்கிறேன்.
http://kurangu.blogspot.com/2005/06/blog-post_111962344694579099.html
//இவற்றை மீறி படத்தின் தொழில் நுட்ப சாகசங்களுக்காகவும், நடிப்பு, பாடல்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் ரசிக்க வேண்டும் என்றால் பார்ப்பவர்கள் ஷங்கரின் நியாய வாதத்தை முன்வைப்பவர்களாகவோ, ஏற்றுக்கொள்பவர்களாகவோ, அல்லது அதை சகித்துக் கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்க வேண்டும். நான் மூன்றாம் வகை. ஆனால் இதைச் சகிக்க முடியாது என்று சொல்பவர்களின் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது.//
மேலே உள்ள கருத்தினை நான் அப்படியே ஏற்றுகொள்ளவில்லை. ஆனால் அதன் சாரம்சத்தை ஏற்றுகொள்கிறேன். ஒரு திரைப்படம் அல்லது இலக்கிய படைப்பு நாம் எதிர்க்கும், கண்டிப்பதாக இருந்தாலும், அதில் ரசிப்பதற்கும், இன்பமடைவதற்கும், அறிவு பெறவும், இன்னபிறவற்றை துய்பதற்கும் ஏதேனும் இருக்கலாம். அதை துய்ப்பவர்கள் எல்லோரும் ஷங்கரின் நியாய வாதத்தை முன்வைப்பவர்களாகவோ, ஏற்றுக்கொள்பவர்களாகவோ இருக்க வேண்டும் என்று இல்லை. ஸ்ரீகாந்த சொல்வது போல சகித்து கொள்பவர்ளாக இருக்கலாம். இந்த மூன்று வகையிலும் முழுவதும் சேராமல் இடைபட்டதாகவோ, மூன்றையும் பகிர்ந்து கொள்பவர்களாகவோ இருக்கலாம். பிரச்சனைகுரியவைகளை கண்டுகொள்ளாத சமரசம் மிக்கவர்களாக இருக்கலாம். அதைவிட முக்கியமாய் தங்கள் மீது படர முயலும் ஊடக திணிப்பை உள்வாங்காமல் பிரதிபலித்து திருப்பி அனுப்புபவர்களாக இருக்கலாம். பெரும்பாலான பார்வையாளர்கள் இந்த வகையை சேர்ந்தவர்களாகவே எனக்கு தோன்றுகிறது. இந்த பிரதிபலித்து அனுபும் தன்மையே சிறந்த அணுகுமுறையாய் எனக்கு படுகிறது.
'ஜெண்டில்மேன்' படத்தை அத்தனை பெரிய ஹிட்டாக்கிய அத்தனை மக்களையும் அயோக்கியர்களாக நினைக்க முடியாது. அப்படி பார்பதும் பாசிச சிந்தனையாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. திரைப்படத்தை எவ்வளவு புத்திசாலித்தனமாய் பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து எடுத்தாலும், யாரும் சொல்லப்பட்ட 'மெஸேஜை' அப்படியே எடுத்துகொள்வதில்லை. அதில் மிக குழப்பமான ஒரு negotiation இருக்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் சமரசமாகி, பிரதிபலித்து, சிலதை உள்வாங்கி தனக்கு தேவையானதை மட்டும் துய்த்துகொள்ளும் வேலை நடக்கிறது. ஆனால் பொதுவாய் யாரும் அத்தனை குழம்புவதில்லை. அந்த கணத்தில் தோன்றிய விதத்தில் முடிவு எடுக்கப்பட்டு துய்க்கப்டுகிறது.
நானும் அதையே செய்கிறேன். ஜெண்டில்மேன் படத்தின் 'மெஸேஜ்' எப்படியிருந்தாலும் 'சிக்கு புக்கு ரயிலே' பாடலையும் அது போன்ற இன்ன பிற சமாச்சாரங்களையும் இன்று வரை மிகவும் ரசித்து இன்பமுற்று வருகிறேன். அதை எந்த விதத்திலும் இழந்தது கிடையாது. அன்னியன் படம் இணையத்தில்தான் பார்த்தேன். மேற்சொன்ன காரணங்களுக்காக நிச்சயம் இந்தியா செல்லும்போது தியேட்டரில் பார்பேன்.
ஆனால் பிரச்சனைகளை பேசவே கூடாது, படத்தை 'இப்படி பார்க்க வேண்டும்' என்று சொல்லும் குரலுக்கு மட்டுமே எதிர்ப்பு காட்டவேண்டியுள்ளது.
தாஸு, 'நாக்கை அறுக்கவேண்டுமென நீங்கள் கூறுவீர்கள் " என்று சொன்னதால் நக்கல் என்று நினைத்தேன். நீங்கள் தெளிவுபடுத்திய பின்னும் 'நக்கல்' என்று எடுத்துகொள்ள காரணங்கள் இல்லை. எனக்கிருக்கும் கருத்துக்களை சிறிது நேரத்தில் பதிகிறேன். நன்றி.
//L.L. தாஸு: சந்திரமுகியில், 'தாழ்ந்த ஜாதியில்' என ரஜினி கூறியதற்காக அவர் நாக்கை அறுக்கவேண்டுமென நீங்கள் கூறுவீர்கள் என எதிர்பார்த்தேன் .. //
தாஸ் கேட்ட கேள்வி மிகுந்த அர்த்தமுள்ளது. நம் புழக்கத்தில் உள்ள பல வார்த்தைகளின் ஜாதிய, ஆணாதிக்க தன்மை காரணமாய் மாற்று வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று பல காலமாய் பலத்த வலியுறுத்தல்களை கேட்டிருக்கலாம். 'கீழ் சாதி, தாழ்ந்த ஜாதி' போன்ற சாதியத்தை உள்ளர்த்தமாய் ஒப்புகொள்ளும் வார்த்தைகளையும், 'விலைமாது, விபச்சாரி' தொடங்கி ஆணாதிக்கத்தை உள்ளர்தமாய் ஒப்புகொள்ளும் பல வார்த்தைகளை உதாரணமாய் குறிப்பிடலாம். இது 'அரசியல் ரீதியாய் சரியானது' (politically correct) என்ற பார்வையால் அடையாளப்படுத்தப் படுகிறது.
'தாழ்ந்த ஜாதி, பிற்பட்ட ஜாதி' என்பதை 'தாழ்த்தப்(பிற்படுத்தப்)பட்ட ஜாதி' என்று சொல்வது அரசியலிரீதியாய் சரியாய் இருக்கும். என்னை பொறுத்தவரை இன்னும் 'SC' என்று சொல்வதை எல்லாம் விட 'தலித்' என்ற வார்த்தையே ஏற்றுகொள்ளக் கூடியது. அதே போல 'விபசாரம்' என்பதற்கு பதில் 'பாலியல் தொழில்' என்பதே சரியானது. வலைப்பதிவில் இது போன்ற வார்த்தைகள் என் கண்ணில் படும்போது என் மெல்லிய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறேன். நண்பர் அருள் கூட 'கீழ்ஜாதி' என்ற வார்த்தையை தன் பதிவில் ஒருமுறை பயன்படுத்தியிருந்தார். ஆனால் அவருடைய கரிசனம் தலித் சார்பானது என்பதை அந்த பதிவை படிக்கும் அனைவரும் உணரமுடியும். அதனால் அவர் எழுதியதை கண்டிக்க தேவையிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மெல்லிய கருத்து முரண்பாடாய் மட்டுமே சொன்னேன். வேறு இடங்களிலும் இதை சொல்லியிருக்கிறேன். பாலியல் தொழிலாளர்கள் மீதான அக்கரையுடன் எழுதப்பட்ட பதிவு ஒன்றில் கூட 'விபச்சாரிகள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதையும் கண்டிக்கவில்லை. ஒரு பரிந்துரையாய் முன்வைத்தேன்.
ரஜினியின் சந்திரமுகி திரைப்படத்தை தலித் மீதான அக்கரை என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்த ஒரு வார்த்தையை வைத்து 'நாக்கை அறுக்க வேண்டும்' என்றும் சொல்லும் அளவிற்கு எதுவும் உள்ளதாக எனக்கு தோன்றவில்லை. அது குறித்து பாமக உறுப்பினர் வழக்கு தொடுத்திருக்கிறார். இது போன்ற எதிர்ப்புகள் தேவையானவை. அதை நானும் பதிவு செய்கிறேன்.
மற்றபடி விஷயங்களின் தீவிரத்தை பொறுத்தே காண்பிக்கும் எதிர்ப்பும் இருக்க முடியும். பெண்களை கொல்லவேண்டும் என்ற 'தர்மத்தை' வலியுறுத்தியதாலேயே 'சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்' என்று எழுதினேன். தாஸிற்கான பழைய எதிர்ப்பும் அத்தகையதே. இரண்டும் பலரால் திரிக்கப்பட்டது. அது எதிர்பார்க்காதது அல்ல.
அது எப்படியிருந்தாலும் ரஜினியின் சந்திரமுகி வசனத்திற்கு சம்பிரதாய் எதிர்ப்பு போதுமானது என்று நினைக்கிறேன். ஏனெனில் இது சமூகத்தில் புழங்கும் வார்த்தைகள் தொடர்பானது. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்க பட்ட பின்னரும், திமிருடன் செய்ல்பட்டால் அது கண்டிக்கப்பட வேண்டியது. மற்றபடி இதில் 'நாக்கை அறுக்க வேண்டும்' என்று உதார்விட ஏதுமில்லை என்றே நினைக்கிறேன். தாஸின் இந்த கருத்திற்கு என் நன்றி.
http://ravisrinivas.blogspot.com/2005/06/blog-post_26.html#comments
// நான் பின்னூட்டமிட்டதாக கருதி அங்கு ஒருவர் ஒரு முட்டாள்த்தனமான அபிப்பிராயத்தை உதிர்த்திருக்கிறார்/
பிராகாஷ் சண்டை எதுவும் வரவில்லை என்று சந்தோஷப்படுவதால்...
ரவி அவர் பின்னூட்டமிட்டதாக நான் கருதி முட்டாள்தனமாய் கருத்து சொன்னதாய் நினைத்திருக்கிறார். என் பெயர் போடாமல் என்னை தாக்கியிருக்கிறார். இப்போது யார் தவறாக கருதி முட்டாள்தனமாய் கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்று புலப்பட்டுவிட்டது. அவருக்கு என் நன்றி.
This comment has been removed by a blog administrator.
அதிகாரம் உடையவர்களுடைய தத்துவங்கள், வழிமுறைகள் குமுகாயத்தில் முன்நிறுத்தப்படுவதில் ஆச்சரியமில்லை. அப்படியான எல்லா தத்துவங்கள், வழிமுறைகள் பிளை என்றும் கருதமுடியாது. ஆனால், வெளிப்படுத்தப்படும் விதம் பின் தங்கியவர்களை முன்னோக்கி வளர செய்யக்கூடிய ஆக்கபூர்வமான படைப்பாக இருக்க வேண்டும். மாறாக தங்களுடைய இருப்பை உறிதி செய்யும், மற்றவர்களை இழிவு செய்யும் படைப்புக்கள் கெடுதலை வரவிக்கும்.
வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியர்கள், ஆபிரிக்கர் போன்றோர் எப்படி இழிவாக மேற்கத்தய சில கலைப்படைப்புக்களில் காட்டப்பட்டார்கள், அது எப்படி இந்தியர்களையும் மற்றவர்களையும் பாதித்து என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
சந்திரமுகி ·பாலோ அப். சம்பந்தப்பட்ட 'தாழ்ந்த ஜாதி' விஷயம் குறித்து அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறும் வெள்ளிவிழாவில் ரஜினி தனது கருத்தை தெரிவிக்க இருக்கிறார். இது செய்தி மட்டுமே. ஜல்லி அல்ல!
ராம்கி, இது ஜல்லியல்ல ரோடு, உள்குத்து அல்ல வெளிவேட்டு இதையெல்லாம் சொல்ல என்ன அவசியம் வந்தது என்று சொல்லமுடியுமா? நான் ரஜினி பற்றி தவறாககூட எதுவும் சொல்லவில்லையே. சாதகமாகத்தானே பேசியிருக்கிறேன்.
ஒருவேளை உள்ளே உங்களுக்கே உங்கள் உளவியல் குத்தி கொண்டிருந்தால், ஸாரி!
ரோ.வ,
அய்யா.. செய்தி, உங்களுக்கு அல்ல. 'தாழ்ந்த ஜாதி' பத்தி சிங்கப்பூர்க்காரர் கருத்து தெரிவித்திருந்தாரே...அதற்கான ·பாலோ அப். நீங்க டென்ஷனாவாதீங்க...!
ஏதோ.. உளவியல், குத்தின்னு சொல்லியிருக்கீங்க.. நானும் விளக்கம் கேட்கலை.. நீங்களும் சொல்ல வேணாம்.. அப்படியே அபிட் ஆயிக்கிறேன்!
//நீங்க டென்ஷனாவாதீங்க...!//
டென்ஷனா? மேலிருந்து தொங்கும் ஒரு கம்பியின் கீழே எடையிருந்தால் ஏற்படுமே, அதுவா? அது எனக்கு ஏற்படவில்லை அய்யா!
ராம்கி..
நான் 'என் ஒரு துளி.. சிங்கப்பூர்' என்றெல்லாம் வசனம் பேசியதில்லையே.. என்னை எப்படி நீங்கள் சிங்கப்பூர்காரர் எனலாம்? (என்னை சொல்லியிருந்தால்...)
Post a Comment
<< Home