ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, May 23, 2005

ஜெயகாந்தனுக்கு நன்றி!

ஜெயகாந்தனுக்கும் சிவக்குமாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

PKசிவக்குமாரின் பதிவின் மூலம் ஜெயகாந்தனின் பேச்சை கேட்டேன். சிவக்குமாரின் பதிவுகளை படிப்பதில் எனக்கு பொதுவாய் உள்ள ஒரே சிக்கல், எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் ஏற்படும் குமட்டலை அடக்கி கொள்வது. ஆனாலும் மனித மன வெளிப்பாடு எவ்வளவு தூரம் நேர்மையற்று இருக்க முடியும் என்று அறிந்துகொள்ள, எனக்கு இருக்கும் ஆவலின் காரணமாய், எங்கே கிடைத்தாலும் அவர் எழுதியதை படிக்கும் மசாக்கிச முயற்சியில் இறங்குவதுண்டு. இது தீமையின் பரிமாணத்தை முழுமையாய் அறிந்துகொள்ளும் முனைப்பு அல்ல. ஏனெனில் நேர்மை என்பது தீமைகளின் உறைவிடத்தில் கூட காணக்கூடியது. உதாரணமாய் மார்க்வெஸ் தெ சாத் என்ற, சாடிஸம் என்ற கருத்தாக்கம் உருவாக காரணமான மனிதனின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். அவை அத்தனையும் உச்சகட்ட நேர்மையுடன் எழுதப்பட்டவை. அவரது புனைவில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் நேர்மையாய் பேசக்கூடியவை. சரியாக சொல்ல வேண்டுமானால் பெரியாரிடம் நான் கண்ட முரட்டுத்தனமான நேர்மையை sadeஇடம் என்னால் காண முடிந்தது. (ஆனால் பெரியாரிடம் மனிதமாகவும் ஸாடிடம் சாடிஸமாகவும் அது வெளிப்பட்டது வேறு விஷயம்.)

ஆனால் சோ தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரை நான் எதிர்க்கும் எல்லோரிடமும் ஏதோ ஒரு கட்டத்தில் காணக்கூடிய நேர்மை துளிகூட காணக் கிடைக்காமல் எனக்கு சிவக்குமாரின் எழுத்துக்கள் மட்டுமே தெரிந்து வந்தது. இதற்கு இவ்வளவு பொருத்தமான வேறு உதாரணம் எனக்கு கிடைத்ததில்லை. இதனாலேயே அவர் எழுத்து அச்சுபிச்சுத்தனமாக இருந்தாலும், அதனால் பயன்பெற எனக்கு எதுவும் இல்லாவிட்டாலும் அவரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் (குமட்டல் தாக்குபிடிக்கும் வரை) படித்து வந்தேன். ஆனால் அந்த மனிதருக்கு, நான் எதிர்த்த போதும் நேர்மையாளனாய் மதித்த, ஜெயகாந்தன் ஆதர்சமாய் இருப்பது மட்டும் எனக்கு ஒரு முரணாய் தொடர்ந்து உறுத்தி வந்தது. ஆனால் அந்த பிரச்சனை ஜெயகாந்தனின் இந்த பேச்சை கேட்டவுடன் மறைந்தது. சிவக்குமாரின் பதிவுகளில் காணக்கூடிய, மிக அபத்தமான ஒரு வாதத்தை மிகவும் நேர்மையற்ற முறையில் திறமையாய் தர்க்க படுத்துவது என்ற தன்மையை, ஜெயகாந்தனின் பேச்சில் கேட்க முடிந்தது. உண்மையில் ஜெயகாந்தனின் 'நாய்பேச்சு' கூட எந்த ஆச்சரியத்தையும் அளிக்காமல் பழைய ஜெயகாந்தனின் தொடர்ச்சியாய்,அவரின் 'வெளிப்படையான நேர்மை' என்று நினைத்ததன் பகுதியுமாகவே தெரிந்தது. அதற்கு அவர் அளித்த விளக்கங்கள் மட்டுமே இந்த தெளிவை அளித்தது. இப்போது பார்க்கும்போது எனக்கு ஜெயகாந்தன் என்ற ஆளுமையின் எச்சமாக சிவகுமார் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த புரிதலை எனக்கு அளித்ததற்காகவும், வாழ்வும் இயற்கையும் முரண்பாட்டின் அடிப்படையில் அமையப்பட்டதோ என்ற என் ஐயத்திற்கான ஒரு கண்ணியை உடைத்ததற்காகவும் ஜெயகாந்தனுக்கும், அதை தனது வழக்கமான தர்க்கத்துடன் அளித்த சிவக்குமாருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதை ஜெயகாந்தனின் பேச்சை கேட்டு கொதித்து போய் எழுதவில்லை. ஏனெனில் இப்போது கூட நான் ஜெயகாந்தனின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை புறக்கணிக்க அழைப்பு விட மாட்டேன். எந்த விதத்திலும் ஸாடை ஒப்புகொள்ள முடியாவிட்டாலும், ஸாடின் பார்வைக்கு எதிராகவே பயணித்தாலும், தீமைகளின் உடோப்பியாவை முன்வைத்த ஸாடின் எழுத்துக்கள், அதன் நேர்மை காரணமாகவும், நம்மை ஏதோ ஒரு விதத்தில் பரிசீலிக்க வைத்து கருமாற்றம் செய்வதற்காகவும் அது முக்கியமானது. ஸாத் என்ற ஜீனியஸுடன் ஒருக்காலும் ஜெயகாந்தனை ஒப்பிட முடியாது. நாம் ஏற்றுகொள்ளாமல் எதிர்க்கும் ஒருவரின் எழுத்து எப்படி மிக முக்கியமாகிறது எனபதற்கான உதாரணமாய் மட்டும் ஸாடை குறிப்பிட்டேன். அது போல் முரண்பாடுகளின் இயங்குதலை புரிந்துகொள்ளவும், நம் சமூகத்தின் அழுகலை அடையாளம் காணவும், நேர்மையின்மையின் பல பரிமாணங்களை தெரிந்துகொள்ளவும், ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள் எவ்வளவு சுயமரியாதையற்று இருக்க முடியும் என்று அறிந்துகொள்ளவும் (பேச்சினிடையே கைதட்டல்களை கவனிக்கவும்) ஜெயகாந்தனின் எழுத்துக்களும், வாழ்வும், கருத்துக்களும் நமக்கு மிகவும் அவசியமாகிறது. அதனால் ஜெயகாந்தனை அவசியம் அலசவேண்டுமே ஒழிய, புறக்கணிக்க வேண்டாம் என்று என் சார்பில் கேட்டுகொள்கிறேன்.

ஒரு மனத்தெளிவை உடனடியாய் பதிந்து வைப்பதற்காக மட்டுமே இந்த பதிவு. தொடர்ந்து அஞ்ஞாதவாசத்தை பாவனை செய்யபோவதால் யாரேனும் பின்னூட்டமிட நேர்ந்தால் முன்னமே நன்றி!

பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க சீரியஸானது, ஒரு வார்த்தை கூட கிண்டல் இல்லை என்பதை, அப்படி எடுத்துகொள்ளும் வாய்ப்பை கணக்கில் கொண்டு, சொல்லிக் கொள்கிறேன்.

Post a Comment

31 Comments:

Blogger ROSAVASANTH said...

Saarah கருத்துக்கு நன்றி!

5/23/2005 8:22 PM  
Blogger SnackDragon said...

//இதற்கு இவ்வளவு பொருத்தமான வேறு உதாரணம் எனக்கு கிடைத்ததில்லை.//
அப்படியே. அதை எதிர்/மாற்றுக் கருத்து வைக்கிறேன் என்று மிகவும் புத்திஜீவித் தோரணையில் வடிகட்டிய பொய்ப்பொதியாய் வைக்கிறாரே அதை என்ன சொல்வது.பார்ப்பனியத்துக்கு மேலே ஒருபடி நடந்து கொள்வதை சுட்ட ஏதாவது 'இசம்' போட்டு வார்த்தை இருந்தால் சொல்லுங்கள்.

5/23/2005 10:44 PM  
Blogger Mookku Sundar said...

//ஒரு மனத்தெளிவை உடனடியாய் பதிந்து வைப்பதற்காக மட்டுமே இந்த பதிவு. தொடர்ந்து அஞ்ஞாதவாசத்தை பாவனை செய்யபோவதால் //

எதற்கு இந்த அஞ்ஞாதவாசம்..??வேலைப்பளு மட்டுமே காரணம் என்றால் ஓகே.

5/23/2005 11:18 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

கலக்கல் ரோசா வசந்த்!!!
இதுப் போல நிறைய எழுதுங்கள்!!!
நன்றி.
மயிலாடுதுறை சிவா...

5/24/2005 1:04 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

ஒருநாள் வேறு பணிகள் நிமித்தமாக தமிழ் மணத்தைப் படிக்கவில்லை. அதனால் ஜெயகாந்தன் தொடர்பான முக்கியமான பதிவுகளையும் பின்னோட்டங்களையும் இன்னமும் முழுவதும் படித்து முடிக்கவில்லை. இருந்தாலும் சிவக்குமாரின் எதிர்வினையைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியவற்றை மிகச் சுருக்கமாக ஆனால் புரியும் படியாக ரோசா வசந்த் சொல்லி இருக்கிறார்.

ரோசா வசந்த் முன்னர் சிவக்குமாருடைய எழுத்துக்களின் நேர்மையின்மையை சொன்ன போதெல்லாம் அப்படியே புரிந்து கொள்ளவில்லை. திண்ணையில் சிவக்குமாருடன் ஒரு முறை விவாதம் செய்த போது கூட, "பொதுவாக எல்லோரிடமும் (நான் உள்பட) இருக்கும் சுயநம்பிக்கைகளை சரியென விவாதிக்கும் கர்வ மனநிலை" என்றுதான் எண்ணினேன். ஆனால் தற்பொழுது முழுமையாக அவருடைய நேர்மையின்மையை புரிந்து கொள்ள முடிகிறது. சுருக்கமாக காரணத்தைச் சொல்கிறேன்:

திண்ணையில் அவரிடம் முன்வைக்கப் பட்ட கேள்விகளின் போது அவர் சொன்னவை இரண்டு - ஒன்று ஜெயேந்திரரை ஜெயகாந்தன் ஆதரிக்கவில்லை, மாறாக விமர்சித்திருப்பார் என்றார். இரண்டு ஜெயகாந்தனுக்குச் சாதியில் நம்பிக்கையும் இல்லை, சாதியத்தை ஆதரித்தும் பேசவில்லை என்றார். அண்ணாவின் மறைவைப் பற்றியும், இந்திராவின் மறைவைப் பற்றியும் ஜெயகாந்தனின் முரண்பாடுகளைப் பற்றிய கேள்விகளுக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் தான் ஒரு படிப்பாளி, மேதாவி என்று சுயதம்பட்டம் அடிக்குமாறு எதையோ அள்ளி வீசி விட்டு காணாமல் போனார். ஆனாலும் எனக்கு அவருடைய படிப்பு மேல் இன்னும் பெரும் மதிப்பு உண்டு, ஆனால் அவர் படிப்பின் தொடர்ச்சியான சிந்தனை இருக்கிறதா என்பதில் பெரும் சந்தேகமும் உண்டு.

திண்ணையை விட்டு இப்பொழுது தமிழ் மணத்தில், ஜெயகாந்தனின் முரண்பாடான, ஒருபக்கச் சார்பான பேச்சுகளை தன்னுடைய தர்க்கமாக முன் வைத்த பொழுது, மறுபடியும் அதற்கான எதிர்க் கேள்விகளை வைத்த பொழுது, நானெல்லாம் சிவக்குமார் பதில் சொல்வதற்ககே அருகதையில்லாதவன் என்று முழக்கியிருக்கிறார். அவர் அப்படியே என்னைப் பற்றியும், என் கேள்விகளையும் அபத்தங்கள் என்று ஒதுக்கியிருந்தால் கூட வெறுமனே கோபப் பட்டிருப்பேன், அவரை நேர்மை தவறியவறாகக் கருதியிருக்க மாட்டேன். ஆனால் என்னுடைய கேள்விகளை அபத்தமானவை என்று சொல்லிக் கொண்டே, அவற்றைப் பற்றி மரத்தடி குழுமத்துக்கு (என்னுடைய பெயர் குறிப்பிடாமல்) எழுதியிருக்கிறார். ஏனென்றால், இந்த அபத்தங்களை யார், எங்கு சொல்லியது என்று குறிப்பிட்டால் அவற்றை மற்றவர்களும் படித்து விடுவார்களெ! இவருடைய திரிப்பு வேலையும் தெரிந்து போய் விடுமே! போதாதற்கு, அவருடைய குருநாதர்களின் (ஜெயகாந்தன், சோ) பாணியில் சம்பந்தமேயில்லாமல் புலிகளின் ஆதரவாளர்கள் என்று திசை திருப்புவது வேறு.

ரோசா வசந்திடம் கூட முன்பு ஒருமுறை சிவக்குமாரைப் பற்றி வாதிட்டிருந்தேன், அவர் எதிர்க்கப் பட வேண்டியவர் இல்லை, அவருடைய பிற்போக்கு சாதியச் சிந்தனைகளிலிரிந்து விடுவிக்கப் பட வேண்டியவர் என்று. அதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேண். சிவக்குமார் சோ. இராமசாமி போல சாதியத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் எதை வேண்டுமானாலும் நேர்மையில்லாம திரிக்கக் கூடியவர். சோ இராமசாமி போல, அவருடைய நேர்மையில்லாத பம்மாத்து வேலைகளை அடையாளங் காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிடின், தங்களுடைய வேலையில் மற்றும் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளினால் எல்லாவற்றையும் தேடிப் பிடித்து படிக்க நேரமில்லாத நல்லவர்களை, வெளிப்பூச்சில் நியாமாகத் தோன்றும் ஒருபக்கத் தர்க்கத்தை முன்வைத்து மூளைச் சலவை செய்து கொண்டிருப்பர்.

சுந்தரமூர்த்தியின் வேண்டுகோளை புரிந்து கோள்ளுகிறென், ஆனால் ஜயகாந்தனுடைய உளரல்களை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் அவற்றை நிறுத்த வேண்டுமென்பதினால் அல்ல. அவருடைய உளரல்களில் உள்ள முரண்பாடுகளையும், ஒருபக்க நியாயத்தையும் கண்டு கொள்ளாமல், தங்களுடைய இழிந்த அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சிவக்குமார் போன்ற கிரகங்களை எதிர்கொள்ளுவது மிக அவசியம். ஜெயகாந்தனுடைய இலக்கியப் பங்களிப்பைப் பெரிதும் மதிக்கும் நான் ஞானபீட பரிசு பெற்ற வேளையிலாவது அவர் கசப்புணர்ச்சிகளை மறந்து இருபக்கத்தினரையும் அணுகி உருப்படியான காரியங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவருடைய சாதிய அரசியலை இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அவருடைய இலக்கியப் படைப்புகளை எல்லாத் தமிழருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். வாசிங்டன் தமிழ்ச் சங்க இதழில் அவருக்கு பரிசு கிடைத்த நற்செய்தியை அறிவித்து அவருடைய சிறுகதைகளைப் படிக்க அழைத்திருக்கிறேன். அதில் ஜெயகாந்தனின் அரசியலை மறந்து அவருடைய இலக்கியச் சாந்தனைகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன். அவருடைய இலக்கியத்தை படிக்காதவர்களிடம் போய் அவருடைய அரசியலைப் பற்றிப் பேசுவது அழகல்ல என்று நினைக்கிறேன். அவருடைய ஒரு சிறுகதையை மறுபதிப்பு செய்வதற்காக சிவக்குமாரின் இணையத் தளத்திலிருந்து இறக்கிக் கொள்ள அனுமதி வேண்டி சிவக்குமாருக்கே மூன்று வாரங்களுக்கு முன்னால் இருவரி மின்னஞல் ஒன்றை அனுப்பினேன். அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவருக்கு நேரமில்லை என்று நினைத்திருந்தேன். அவருக்கு ஜெயகாந்தனின் இலக்கியம் மக்களிடம் எடுத்துச் செல்லப் படவேண்டும் என்பதை விட அவருடைய அரசியலை பயன் படுத்திக் கொள்ள வேண்டுமென்பதெ நோக்கமோ என்று சந்தேகமாக இருக்கிறது.


நன்றி - சொ. சங்கரபாண்டி

பி. கு. - திண்ணையில் ஜெயகாந்தன் தொடர்பாக முன்பு நடந்த விவாதங்கள் இங்கே:

திரு.அண்ணாதுரை மரணத்தின்போது ஜெயகாந்தன் பேசியது - மறுபதிப்பு பி.கே.சிவக்குமார்

ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது விமர்சனம் - சொ.சங்கரபாண்டி

பி.கே.சிவகுமாரின் முதல் பதில்

சங்கரபாண்டியின் இரண்டாம் கட்டுரை

ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப்பார்வை - பி.கே.சிவகுமார்

ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகள் - சொ.சங்கரபாண்டி

ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும் - பி.கே.சிவகுமார்

5/24/2005 1:39 AM  
Blogger Thangamani said...

அருமையான பதிவு வசந்த். நன்றிகள். இப்போதும் இதையெல்லாம் எழுதுவது ஜெயகாந்தனின் பொருட்டல்ல. மாறாக எவ்வளவு அழகான, நேர்த்தியான முறையில் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட முடியும் என்ற உண்மையைக் காட்டும் பொருட்டே!

நல்லது. Take care.

5/24/2005 8:10 AM  
Blogger Thangamani said...

சங்கரபாண்டி, நான் திண்ணையின் மூலம்தான் ஜெயகாந்தனின் அரசியலை அறிந்துகொள்ள ஆரம்பித்தேன். அவரது மற்ற படைப்புகளை வெகு காலத்துக்கு முன்பே அறிந்திருந்தாலும், நான் அவரது அரசியல், சாதீய பார்வை குறித்து அறியாதிருந்தே வந்தேன். உங்கள் கட்டுரைகளுக்கும் இங்கே நன்றிகள் சொல்லிக்கொள்கிறேன்.

5/24/2005 8:13 AM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், மூக்கன், மயிலாடுதுறை சிவா, சங்கரபாண்டி, தங்கமணி கருத்துக்களுக்கு நன்றி.

மூக்கன், வேலை மற்றும் குடும்பம் சார்ந்த பளுதான் காரணம். இது இப்போதைக்கு இலகுவாகும் என்றும் தோன்றவில்லை. விசாரிப்புக்கு நன்றி.

சங்கர பாண்டி விரிவான கருத்துக்கு நன்றி. சுந்தரமூர்த்தியின் பதிவை இதை எழுதும் முன் படிக்கவில்லை. தமிழ்மணத்தில் டாப்25இல் அவர் பதிவை பார்த்தாலும், மாலை வீட்டுக்கு கிளம்பும் போதுதான் முழுவதும் படிக்க முடிந்தது. அவர் சொல்வதும் சரி என்றே படுகிறது. ஆனால் 'புறக்கணிக்க வேண்டாம், அலசவேண்டும்' என்று நான் சொல்வது அகவாசிப்பு மற்றும் பிரச்சனைகளை புரிந்துகொள்ளும் காரணக்களுக்காக. அவர் 'புறக்கணிக்க வேண்டும்' என்று சொல்வது இலக்கிய அரசியலை முன்வைத்து. இரண்டுமே எனக்கு ஒப்புதலாகவே படுகிறது.

விரிவாய் எழுத முடியவில்லை. அந்த வேலையை தங்கமணி, சங்கரபாண்டி, சுந்தரவடிவேல் போன்றவர்கள் திறம்பட செய்யும் போது நான் எழுதத் தேவையில்லை என்றே நினைத்தேன். ஜெயகாந்தனின் பேச்சை(முதலும் கடைசியுமாக) கேட்டபோது மனதில் பட்டதை சுருக்கமாய் பதிந்தேன். அவ்வளவே!

5/24/2005 1:08 PM  
Blogger ROSAVASANTH said...

http://valavu.blogspot.com/2005/05/blog-post_23.html#comments

"தமிழ் எனது மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விடமாட்டேன்" என்று ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் எழுதியிருப்பார். என் வாசிப்பில, தன் மொழியை மற்றவர் மீது திணிப்பதற்கு எதிரான விரிகளாக (குறைந்த படசம் அப்படி மட்டும்) இதை பார்க்க முடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் எழுச்சி பெற்றிருந்த திராவிட இயக்கத்தை கொச்சை படுத்தும் நோக்கம(உம்) இந்த வரிகளின் பின்னால் எனக்கு இருப்பதாக படுகிறது.

ஆனால் நான் இராம.கி ஐயாவை படித்தவரையில் அவரிடம் ஒரு போதும் இந்த 'பிறர் மீது மூச்சுவிடும்' தன்மையை பார்த்ததில்லை. உண்மையில் "தமிழ் எனது மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விடமாட்டேன்" என்று இராம.கி சொல்லியிருந்தால் பொருத்தமாக (அவருக்கு உண்மையிலேயே மூச்சாக இருப்பதாலும்) இருக்கும். ஆனால் அவரையே வடமொழி வெறுப்பாளர் பார்பன வெறுப்பாளர் என்றெல்லாம் திரிக்கும் போது, திருமாவளவனையும், ராமதாஸையும் (உண்மையிலேயே வாய்ப்பு இருக்கும் போது) எந்த காழ்ப்புணர்வையும் தார்மீக போர்வையில் கக்க முடியும் என்று புரிகிறது.

5/25/2005 12:29 PM  
Blogger Narain Rajagopalan said...

//அருமையான பதிவு வசந்த். நன்றிகள். இப்போதும் இதையெல்லாம் எழுதுவது ஜெயகாந்தனின் பொருட்டல்ல. மாறாக எவ்வளவு அழகான, நேர்த்தியான முறையில் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட முடியும் என்ற உண்மையைக் காட்டும் பொருட்டே!//

அதே. Take care and convey my regds to everyone there at home.

5/25/2005 12:54 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி நாராயணன், கொஞ்சம் மின்னஞ்சலை பார்க்கவும் (பதிலை மின்னஞ்சலிலேயே தரவும்.)

5/25/2005 12:56 PM  
Blogger ROSAVASANTH said...

அன்னியன் டெரெயிலர் இணையத்தில் பார்த்தேன். இன்னொரு ஜெண்டில்மேனாக இருக்கும் போல தெரிகிறது. ஒருவேளை ஜெண்டில்மேனை விட இன்னும் மோசமாய் இருக்கலாம். தாங்கள் ஏதோ விசாரணைக்கு உட்படுத்தபட்டதாய் கற்பிக்க முயலும் பார்பனர்களுக்கு ஒரு உளமகிழ்ச்சியை தருவதாகவும், ஈகோ ஸாடிஸ்பையராகவும் இன்னொரு முறையும் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனாலும் படம் பெரிய ஹிட்டாகும் என்றே நினைக்கிறேன். வெறும் ட்ரெயிலரை பார்த்ததும் ஏற்பட்ட உணர்வு. பார்க்கலாம்!

5/25/2005 1:32 PM  
Blogger ROSAVASANTH said...

http://www.domesticatedonion.net/blog/?item=504

உங்களுடன் முழுதும் உடன்படாவிட்டாலும், முரண்கள் இருப்பதாய் சொல்வதை ஒப்புகொள்கிறேன். இது ரமேஷ்-ப்ரேம் எழுத்துக்களில் இன்று உள்ள பிரச்சனை இல்லை. rigour என்பது பல நேரங்களில் அவர்களில் எழுத்துக்களில் பொதுவாகவே காணக் கிடைக்காததாகவே இருக்கிறது. ஒருவேளை பின்நவீனத்துவ எழுத்தில் கறார் தேவையில்லை என்ற அபத்தமாய் நினைக்கின்றனரோ என்னவோ! பொத்தாம் பொதுவாய், உணர்வு பூர்வமாய் சொல்வதை விட்டு, கறாரான தர்கத்துடன் அவர்கள் எழுத முயல்வார்கள் என்று தோன்றவில்லை. ஏனெனில் இது ரொம்ப நாளாய் தொடர்ந்து, அவர்கள் எழுத்தின் தனிதன்மையாய் மாறிவிட்டதாய் தோன்றுகிறது.

அடுத்த பாகங்கள் வந்தபின் வேறு கருத்துக்கள் இருந்தால் சொல்கிறேன்.



http://pksivakumar.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அ.மார்க்ஸ் ரொம்ப காலமாய் தமிழ் தேசியம் குறித்து விமர்சனமாய் எழுதிவருகிறார். ஆனால் அதை வரதனும், சிவக்குமாரும் (வசதிக்கு ஏற்ப) முன்வைப்பதை போல, அவர்களின் இந்திய தேசிய வெறிக்கு சார்பானது அல்ல. தமிழ் தேசியத்தை விட இன்னும் தீவிரமாய் இந்திய மற்றும் இந்து தேசியத்தையும் அ.மார்க்ஸ் எதிர்த்து வருகிறார். அ. மார்க்ஸின் கருத்துக்கள் வரதனுக்கும், சிவக்குமாருக்கும் உவப்பாய் இருக்க வாய்பில்லை. இப்படி வசதிக்கு ஏற்ப பேச மட்டுமே பயன்படும். (அ. மார்க்ஸின் இந்திய தேசியத்தின் மீதான விமர்சனத்தையும் இங்கே குறிப்பிடும் அளவிற்கு சிவக்குமாருக்கு நேர்மை இருக்காது என்பதை நான் குறிப்பிட்டு பலர் அறியவேண்டியதில்லை.)

5/26/2005 2:00 PM  
Blogger சன்னாசி said...

அட! 120 days in Sodom மற்றும் Justine இரண்டும் எனக்கும் மிகப் பிடித்தவையே. மிகக் குறைந்த வார்த்தைகளில் மிகத் தெளிவான பதிவு. நன்றி.

5/26/2005 2:34 PM  
Blogger சன்னாசி said...

This comment has been removed by a blog administrator.

5/26/2005 2:35 PM  
Blogger ROSAVASANTH said...

மாண்ட்ரீஸர்,

ஜூலியட் படித்திருக்கிறீர்களா? ஜுஸ்தினை விட ஜூலியட் இன்னும்ம் விரிவான தளத்தில் இயங்க கூடியது. மேலும் ஜுஸ்தீனில் பகுத்தறிவு பூர்வமாய் இயங்கும் ஸேட் ஜுலியத்தில் மெடா ஃபிஸிகலாய் மாறிவிடுவார். (சாத்தானுடன் ஒப்பந்தம் செய்வது etc..) 120 days of Sodom இணையத்தில் உள்ளது. கருத்துக்கு நன்றி.

5/26/2005 2:41 PM  
Blogger ROSAVASANTH said...

http://pksivakumar.blogspot.com/2005/05/blog-post_25.html

அ.மார்க்ஸின் கட்டுரையை படித்தேன். அதை பற்றி ஒரு பதிவு எழுதும் சிவக்குமாரின் உத்வேகம்தான் புல்லரிக்க வைக்கிறது.

என் கருத்துக்களை அணுவளவும் பிசகாமல் நிருபித்து வரும் அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னலும் தகும்.

பெரியாரை தாக்க ரவிக்குமார் சிவகாமியை முன் வைக்கலாம். இன்னும் குணாவைகூட துணைக்கு கூப்பிடலாம். 'தமிழ் எதிரி' பெரியாரை கவனித்த பின், தமிழ் தேசியவாதிகளையும், திருமா போன்றவர்களுக்கும் முடிவு கட்ட அ.மார்க்ஸை துணைக்கழைக்கலாம். பேஷ், பேஷ்!

5/26/2005 3:13 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//அன்னியன் டெரெயிலர் இணையத்தில் பார்த்தேன். இன்னொரு ஜெண்டில்மேனாக இருக்கும் போல
தெரிகிறது. ஒருவேளை ஜெண்டில்மேனை விட இன்னும் மோசமாய் இருக்கலாம். தாங்கள் ஏதோ விசாரணைக்கு உட்படுத்தபட்டதாய் கற்பிக்க முயலும் பார்பனர்களுக்கு ஒரு உளமகிழ்ச்சியை தருவதாகவும், ஈகோ ஸாடிஸ்பையராகவும் இன்னொரு முறையும் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனாலும் படம் பெரிய
ஹிட்டாகும் என்றே நினைக்கிறேன். வெறும் ட்ரெயிலரை பார்த்ததும் ஏற்பட்ட உணர்வு. பார்க்கலாம்!
//
ரோசா,
உங்களை இன்னொரு முறை அக்ஞான வாசத்திலிருந்து வெளியே வர வைப்பதற்காக இதை எழுதவில்லை.
ஜெண்டில்மேன் மோசமான படம் என்று கூறுவதற்கு காரணங்கள் உங்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்னியன் "ஈகோ ஸாடிஸ்பையராக" இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளும் அதே
நேரத்தில், பார்ப்பனர்களை கேவலமாக கிண்டலடிக்கும் காட்சிகள் உள்ள திரைப்படங்கள் பல வந்துள்ளன.
அதை தவறு என்று கூற வரவில்லை. ஆனால், பஞ்சக்கச்சத்தை கட்டிக் கொண்டு, குடுமியோடு டான்ஸ்
ஆடுவதை காண்பிப்பதின் அபத்தத்தை சுட்டிக் காட்டுகிறேன். இதே ஆட்கள், பிற மதத்தவர்களை
(அவர்களின் குறியீடுகளுடன்) கூத்தாடுவது போல சித்தரிக்க தயங்குவார்கள். மைனாரிட்டி
அப்பீஸ்மெண்ட் என்ற மனப்போக்கு இங்கு பலரிடமும் காணப்படுகிறது என்பது கண்கூடு.

சமயம் கிடைக்கும்போது (கூற விரும்பினால்) தங்கள் மறுமொழியை தாருங்கள். இந்த வார இறுதியில்
"பல்லவியும் சரணமும் - 25" (வெள்ளி விழா மற்றும் தற்காலிக இறுதிப் பதிவு) அரங்கேற்ற இருக்கிறேன்.
நீங்கள் (பழைய பாடல் எக்ஸ்பர்ட் என்ற முறையில்!) கண்டிப்பாய் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்
:))

என்றென்றும் அன்புடன்
பாலா

5/26/2005 4:11 PM  
Blogger ROSAVASANTH said...

பாலா, வீட்டில் இணைய இணைப்பு இப்போது தற்காலிகமாய் இல்லை. அதனால் வார இறுதியில் வரமுடியாது. திங்கள் வந்து நான் பார்க்கும் வரை விட்டுவைத்திருந்தால் பார்க்கலாம். கருத்துக்கும் அழைப்புக்கும் நன்றி.

5/26/2005 6:31 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்,
தேசியம் என்பதும் மதம் போன்று ஒரு கற்பிதமே என்ற அடிப்படையில் இந்திய தேசிய, தமிழ் தேசிய வெறிகளை எதிர்ப்பவர் மார்க்ஸ். மதவெறியர்களையொத்த தேசியவெறி கொண்டவர்கள் மார்க்ஸை பயன்படுத்திக்கொள்வது சாதுரியம் தான்.

5/26/2005 8:49 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு,

உங்கள் கருத்துக்கு நன்றி. இப்போதுதான் எல்லாவற்றையும் படிக்க முடிந்தது. சங்கரபாண்டி இன்னமும் (இத்தனை வசைகளை கூசாமல் சொல்லிவிட்டு, அது குறித்து ஒரு திரிபு விளக்கமும் அளிக்கும்) சிவக்குமார் போன்றவர்களுடன் ஏதோ ஒரு விதத்தில் உரையாட முடியும் என்பது நினைப்பது ஆச்சரியமாக இருந்தது. அவருடைய சாந்தமான தொனிதான் அவரது பலவீனம். மாறாக பிறவியிலேயே ஏற்பட்ட குறை போன்ற நேர்மையின்மையை, கவச குண்டலம் போன்ற வரமாக மாற்றிகொள்ளும் திறமை கொண்டவர்கள் குறித்து பேசாதிருப்பதுதான் நலம்.

ஆனாலும் 'விளம்பரங்களுக்கு நன்றி' என்று சொல்வது வெறும் வார்த்தை சாமர்த்தியம்(அல்லது அப்படி பாவனை செய்யும் சாமர்தியமே) அன்றி, வெளிவரும் ஆத்திரத்தை பார்த்தால் அப்படி எடுத்துகொண்டதாக கொள்ளமுடியாது. ஒருவேளை இதையெல்லாம் புத்தக வியாபாரத்திற்கு விளம்பரமாக கொள்ளலாம். அப்படி நடந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இன்று வேலை அதிகம். உங்கள் பதிவை படித்தேன். பின்னூட்டம் எழுத முடியவில்லை. சிலவற்றை நாம் எழுதுவதும், எழுதாமலிருப்பதும் இந்த சூழலில் சவாலாய் இருக்கிறது. நாமே ஸ்டீரியோடைப்பாய் மாறும் சுழலில் விழாமலிருப்பதும், சக்தியனைதையும் ஒரே விஷயத்தை பற்றி கத்தி வீணாக்கும் வலையில் விழாமலிருப்பதும் பெரும் சவாலாய் இருக்கிறது.

5/30/2005 2:12 PM  
Blogger Narain Rajagopalan said...

அந்நியன் = ஜென்டில்மேன் + இந்தியன் + முதல்வன் நீங்கள் சொன்ன ஈகோ சாடிஸ்பையர் என்பதை விட பெரிய வார்த்தைகள் இருக்கிறதா. இங்கே சத்யமில் ட்ரெய்லருக்கு இருந்த ஆராவாரத்தினை பார்த்தால், படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று நினைப்பதில் தவறில்லை.

சங்கரின் டிபிக்கல் படம் தான் இது. ஒரு பிராமண இளைஞன், புரட்சிகாரன், தனி நபர் தீர்வுகள், இரண்டு முகாப்புலா வகைப் பாடல்கள், கர்நாடக சங்கீதத்தினை அடிப்படையாக வைத்தப் பாடல்கள், பாலகுமாரன் அல்லது சுஜாதா வசனம், இது தாண்டி சமீபகாலத்தில் நாம் எல்லோரும் பார்த்து,பார்த்து தேய்த்தா மேட்ரிக்ஸின் தொழில்நுட்ப ஜிகிடிகள் என தான் வைத்திருக்கும் டெம்ப்ளேட்டின் இம்மியும் குறையாமல் படம் எடுத்திருக்கிறார் என்றான் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் வேலை செய்யும் நண்பன்.

பின் எங்கே போனாலும் 36 கேமராக்களை சங்கர் கூடவே கொண்டு போனால், வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும். ஜூன் 10-ல் படம் வருகிறது. சங்கரின் மிக ஆதர்ஷமான, பள்ளி, கல்லூரி திறக்கும் போது வருகின்ற படம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படத்தினை ஒட்டுவார்கள் என்று தோன்றுகிறது. இவ்வளவும் தாண்டி, கொஞ்சமாய் "அய்யங்காரு வீட்டு அழகேயும்", "கண்ணும் கண்ணும் நோக்கியாவும்", 'அண்டங்காக்கா கொண்டைக்காரி"யும் பிடித்து தான் இருக்கிறது.

5/31/2005 3:32 AM  
Blogger ROSAVASANTH said...

http://christopher_john.blogspot.com/2005/05/55.html#comments

//ஆகவே பாலஸ்தீன அரேபியர்கள் வழியில் நிற்காமல் இடத்தை காலி செய்தால் தாங்கள் யூதர்களை அப்படியே கடலில் தள்ளி விடுவோமாக்கும் என்று வீரம் பேசின,//

இதே பொய் பிரச்சாரத்தை இஸ்ரேலும் மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. இங்கே சொல்லபடுவதுபோல் பாலஸ்தீன்ர்கள் தாங்களாக இடத்தை காலிசெய்யவில்லை, மாறாக இஸ்ரேலால் தாக்கப்பட்டு துரத்தப்பட்டு காலி பண்ணபட்டார்கள் என்பதே உண்மை. டோண்டு இஸ்ரேலின் இந்த பொய்யை மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்துவருகிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், துரத்தப்பட்ட அரேபியர்கள் இன்றளவிற்கும் உள்ளே வரவிடாமல் தடுக்கப்பட்டிருப்பது. தம் நிலத்திலிருந்து துரத்தப்பட்ட மக்கள் மீண்டும் அங்கே வருவதை விட குறைந்தபட்ச நியாயம் வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் அதற்கு வேறு (பொய்)தர்க்கம் தரும் இஸ்ரேலும், அதை வாந்தி எடுக்கும் டோண்டுவும், ஏதோ அரேபியர்களின் ஒரு வானொலி அறிவிப்பை கேட்டு பாலஸ்தீனர்கள் தங்கள் நிலத்தை காலிசெய்ததாக பொய்பிரசாரம் செய்து வருகிறார். பா.ராகவன் எழுதுவதை படித்து வருகிறேன். இதே பிரச்சனை குறித்து நானும் பிறகு எழுதுவேன்.

5/31/2005 4:01 PM  
Blogger Vijayakumar said...

//120 days of Sodom இணையத்தில் உள்ளது. கருத்துக்கு நன்றி. //

அப்படியே சுட்டியையும் கொடுத்தால் நாலு பேருக்கு உதவுமே.

5/31/2005 4:25 PM  
Blogger ROSAVASANTH said...

விஜய், நான் இணையத்தில் படித்து மூன்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. கூகிளித்தால் கிடைக்க கூடும். கிடைக்காவிட்டால் என்னை மீண்டும் அணுகவும். என் ஏதாவது ஒரு யாஹு அக்கவுண்டில் இருக்க கூடும். (தேடுவது எளிதல்ல என்றாலும் முயற்சிக்கிறேன்) ஆனால் படித்துவிட்டு என்னை திட்டவோ அடிக்கவோ கூடாது. அதற்கு மகானுபாவன் தெ சாதே பொறுப்பு!

5/31/2005 4:33 PM  
Blogger Vijayakumar said...

நன்றி வசந்த். கூகிளிக்க கூடப்படும் சோம்பேறிதனத்துக்கு என்னவென்று அழைப்பது என்று தெரியவில்லை? இருந்தாலும் கட்டாயம் கூகிளிக்கிறேன்.

அப்படியே உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது
http://halwacity.blogspot.com/2005/06/blog-post.html (இது ஒன்றும் தலைபோகிற அவசரம் இல்லை). கூகிளித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதை எல்லாம் படித்து புரிந்துக் கொள்வதற்குள் மண்டை தான் கலங்குகிறது. தெள்ளுத்தமிழ் விளக்கம் மருந்தாகலாம்.

6/01/2005 2:40 PM  
Blogger ROSAVASANTH said...

விஜய், உங்கள் பதிவை பார்த்தேன். எனக்கு சொல்ல சில விஷயங்கள் உண்டு எனினும், விரிவாய் எழுதாவிட்டால், தவறாய் போகும் பாதகம் காரணமாய் இப்போது எதுவும் முடியாது(இனி வரும் மூன்று வாரங்களுக்கும் எதுவும் முடியாது.) இணையத்தில் எல்லாமே விளக்கமாய் உள்ளது. சிவக்குமார் குறிப்பிட்ட பாலாவில் 'சர்ரியலிசம்'('ஒரு அறிமுகம்' என்று தலைப்பில் வரும் என்று நினைவிலில்லை) புத்தகம் எளிமையான அறிமுகத்திற்கு உகந்தது. எஸ்.வி.ராஜதுரை இருத்தலியல் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அதை படிப்பதற்கு இலகுவானது அல்ல(மேலும் சில பிரச்சனைகளும் உண்டு என்பது என் கருத்து.) நம்ம பெயரிலி கூட பதிவுகளில் மேஜிக்கல் ரியலிஸம் பற்றி ஒரு நல்ல கட்ட்டுரை எழுதியிருந்தார்.

நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றி வேறுபடும் விளக்கங்கள் கிடைக்க கூடும். பழமையை முழுமையாய் நிராகரித்து வந்ததாய் (ஒரு பொத்தாம் பொதுவாய்) நவீனத்துவம் பற்றி சொல்ல முடியுமெனில், பழமையை ஓரு முரண்நகை(irony)யுடன் ஒப்புகொண்டு(acknowledge) செய்வதை பின் நவீனத்துவம் என்கிறார்கள். நவீனத்துவம் ஒரு வகை ஒழுங்கை, மையத்தை, தெளிவை நோக்கிய செய்ல்பாட்டை பரிந்துரைத்தால், பின் நவீனத்துவம் மையத்திற்கு எதிராய், சிதறலை முன்வைப்பதை, குழப்பத்தை அங்கீகரிப்பதையும், நவீனத்துவத்தை நையாண்டி செய்வதாகவும் வெளிப்படுகிறது. காஃப்கா, காம்யூவை நவீனத்துவ எழுத்துக்கு உதாரணமாய் சொல்லலாம். ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் நவீனத்துவ எழுத்து. ஆனால் யுலீசியஸில் கொன்சம் தொட்டும், 'பினிகன்ஸ் வேக்'கில் முழுவதுமாய் பின் நவீனத்துவமாகிவிடுகிறார். இது இலக்கியம் என்றால், அரசியல் பார்வையில் பெருங்கதையாடல்களின்(metanarratives) தோல்வியை ஒப்புகொண்டு அதை நிராகரித்து, அதற்கு எதிராய் சிறுகதையாடல்களை வைப்பதையும், சாரம்ச படுத்துவதற்கு எதிரானதையும் பின் நவீனத்துவம் எனலாம். உதாரணமாய் இஸ்லாம், பைபிள், மனு தர்மம், மார்க்சியம் இவயெல்லாம் ஒரு வகை பெருங்கதையாடல். இன்னும் அறிவியலே ஒரு பெருங்கதையாடல் என்று சொல்பவர் உண்டு என்றாலும் எனக்கு ஏற்புடையது அல்ல. தலித்தியம், நர்மதா அணைக்கு எதிரான இயக்கம் இவற்றையும் இவற்றில் பயன்படுத்த்படும் சொல்லாடல்களையும் பார்த்தால் அது சிறுகதையாடல். எல்லா காலகட்டத்துக்கும் பொருந்த கூடிய உண்மையையும், கோட்பாடுகளையும், தீர்ப்புகளையும் நிராகரிப்பது பின் நவீனத்துவம். இப்படி சொல்லி பின் நவீனத்துவத்தையும் சாரம்சபடுத்துவது உண்டு என்பது என் கருத்து. தமிழில் அ.மார்க்ஸ், நாகார்ஜுன என்று எதிரும் புதிருமாய் தன்னை பின் நவீனத்துவவாதைகளாய் அறிவித்து கொண்டவர்கள் உண்டு. இதில் என் கருத்துப்படி நாகாரஜுனனின் செயல்பாடுகள் தெளிவாய் பின்நவீனத்துவமானவை. அ.மார்க்ஸ் அரசியல்ரீதியாய் பின் நவீனத்துவத்தை பார்ப்பவர். ஆனால் அவரின் பல கட்டுரைகள் சாரம்சபடுத்துபவை. எனக்கு அ.மார்க்ஸ் மீது மிகுந்த மரியாதை உண்டு எனினும், அவர் பின்நிவீனத்துவம் என்று சொல்லி அதையும் சாராம்ச படுத்துவதாகவே தோன்றுகிரது-சில சமயங்களில்.


ஏதோ இப்போது தோன்றிய்யது. தட்டியுள்ளேன். இன்னும் வாசித்து விவாதத்தை தொடங்கினால் பிறகு வருகிறேன். ஆனால் கடைசியாய் ஒரு விஷயம். நான் ஏதோ அதிக வாசிப்பனுபவம் உள்ளவனாய் பார்க்க படுவது சரியல்ல. மாண்ட்ரீஸர், ரவி ஸ்ரீனிவாசுடன் ஒப்பிட்டால் நான் காற்றில் அலையும் ஒரு தூசு. கொஞ்சம் அப்படி இப்படி -நாய் வாயை வைத்தது போலவோ, மாடு புல் மேய்ந்தது போலவோ- அவ்வப்போது வாசித்திருக்கிறேன் என்றாலும். நன்றி!

6/02/2005 1:55 PM  
Blogger Vijayakumar said...

விளக்கங்களுக்கு நன்றி ரோசாவசந்த். விக்கிபீடியாவில் ஆயிரம் தான் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழ் விளக்கம் படிக்கும் போது நல்ல தான் இருக்கு? அதுக்கு தான் கேட்டேன். இந்த இசங்களையும் அது பயன்படுத்தப்பட்டுள்ள இலக்கியங்களை படிக்க வேண்டும் ஒரு நப்பாசை தான்.

உங்கள் பதிவுகளில் உங்களின் சில கருத்துக்களில் என்னுடைய அபிப்ராயம் வேறுபட்டு இருந்தாலும் கட்டுரையில் உங்கள் கருத்தை வலியுறுத்தும் விதம், (சினமில்லாமல் சொல்லும்)பயன்படுத்தப்படும் வார்த்தைகள், விரிவாக சில விளக்கங்கள் கொடுப்பதால் பொதுவாகவே படிக்க பிடிக்கும் என்பதால் நீங்கள் படிப்பாளி என்று எண்ணுவதை தடுக்க முடிவதில்லை. தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி.

6/02/2005 4:59 PM  
Blogger ROSAVASANTH said...

http://pksivakumar.blogspot.com/2005/06/blog-post.html#comments

//ஒரு பத்திரிகை எவ்வளவு ஜனநாயகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், பத்திரிகை ஆசிரியர் எவ்வளவு குறைவாக படைப்பாளியின் எழுத்தில் கை வைத்துத் திருத்தவோ நீக்கவோ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், இவர் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் திண்ணை.காமைச் சொல்லலாம்//

இந்த அளவிற்கு பொருத்தமான, நேர்மையான வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்பதை நேரடியாகவே அனுபவம் மூலம் உணர்ந்திருப்பதால் புரிந்துகொள்கிறேன். நன்றி!
(திண்ணையில் நான் தடை செய்யப்பட்ட கதை குறித்து பின்னர் ஒரு சமயம் இங்கே எழுதப்படும். கோ.ராஜாராமின் இன்னொரு முகத்தை அது காட்டக்கூடும்.)

6/03/2005 12:04 PM  
Blogger ROSAVASANTH said...

ராகாகியில் பதிவுகளில் வெளிவந்த அசோகமித்திரனின் 'தன்னிலை விளக்கம்' குறித்து, இகாரஸிற்கு பதிலாய் எழுதியது.

"அசோகமித்திரன் சொல்வது உண்மையாய் இருக்கலாம். ஆனாலும் இகாரஸின் அவசரம் ஆச்சரியமளிக்கிறது. அசோகமித்திரனின் பேட்டி வந்தவுடனேயே, 'அசோகமித்திரன் சொல்லாதது திரிக்கப்பட்டிருக்குமோ?' என்று 'இலக்கிய ரசிகர்கள்' ஆச்சரியப்பட்டார்கள். சந்தேகத்தை மட்டும் எழுப்பிவிட்டு, அதன் உண்மைதன்மை குறித்து அடுத்த வாரங்களில் கவலைப்படாமல் மறக்கடிக்கப் பட்டுவிட்டது. அதற்கு பின்னர் பலர் பேசி, சாருநிவேதிதா தீராநதியில் விமர்சித்து எல்லாம் நடந்த பிறகு, இப்போது அசோகமித்திரன் ஒரு வார்த்தை சொன்னவுடன், 'நான் முழுமையாய் நம்புகிறேன்' என்று சொல்வது கட்சி தொண்டன், ரசிகர் மற்ற உறுப்பினர் இவர்களின் மனநிலையிலிருந்து வேறுபடாமல் இருக்கிறது.

பத்ரி போன்றவர்கள் அசோகமித்திரனிடம் நேரில் கேட்பதாக சொன்னார். அதற்கு பிறகு எழுத்து பட்டரையில் சந்தித்ததாகவும் தெரிகிறது. அப்போதெல்லாம் வராத அசோகமித்திரனின் தன்னிலை விளக்கம், இப்போது சம்பந்தமில்லாமல் பதிவுகளில் வருகிறது. அந்த மறுப்பை அவுட்லுக்கிற்கு அனுப்புவதில் என்ன பிரச்சனையோ புரியவில்லை. ஆங்கிலத்தில் வெளிவந்து அனைத்துலக வாசகர்களால் படிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்கு, இணையத்தின் மூலையில் இருக்கும் ஒரு தமிழ் பத்திரிகையில் மறுப்பு தெரிவிப்பதன் பொருத்தமும் புரியவில்லை. மேலும் அசோகமித்திரன் சொல்லாதவை வந்திருந்தால், விஷயத்தின் தீவிரத்தை முன்னிட்டு (அவுட்லுக் மீது) வழக்கு தொடுக்க முடியும். அதை செய்யாதவரை அசோகமித்திரனின் தன்னிலை விளக்கத்தை, தீவிர ரசிக மனோபாவம் கொண்டவர்கள் தவிர, சிந்திப்பவர்கள் அனைவரும் சந்தேகத்துடனேயே பார்க்கமுடியும்.

இணையத்தில் அவருக்கு ஞானம் இல்லை என்பது ஒரு காரணமாகவே படவில்லை. தன்னை பற்றி வந்த கட்டுரையும் விவாதமும், வந்துவுடனேயே மற்றவர் உதவியுடன் பார்த்திருக்க முடியும். குறைந்த படசம், கேட்கபோவதாக சொன்ன பத்ரியிடமாவது (பத்ரி அவரிடம் கேட்டிருந்தால் பத்ரியிடமிருந்து இணையத்தில் வெளிவந்தது குறித்து) கேட்டிருக்க முடியும். அதைவிட முக்கியம் அச்சு பத்திரிக்கையிலேயே தான் சொல்லாதது வந்திருப்பதாக இப்போது சொல்கிறார். 'டெல்லி பத்திரிகைக்கு' அடுத்த வாரம் மறுப்பெழுதும் அஞ்சல் ஞானம் கூட இல்லாமலா இருந்தார்? இப்படி கேள்வியே கேட்காமல் நம்பதயாராக இருக்கும் மனநிலைதான் சுவாரசியமாக இருக்கிறது."

வெங்டேஷிற்கு எழுதியது,

"ஒரு வகையில் எழுத்தாளர்களும், வாசகர்களும் ஒரு திமுக தொண்டனின் மனோபாவத்தில் இருப்பது அறிந்து எனக்கு மகிழ்ச்சிதான். அசோகமீத்திரன் சொன்ன ஒரு வார்த்தை கூட அவுட்லுக்கில் வரவில்லையாம்.
//ரபரப்பான காலகட்டத்தில் எது சொன்னாலும் புத்திக்குப் போகாது என்பதால் அமைதி காத்தாரோ
என்னவோ?
இருக்கலாம். நமக்குத்தான் எதைப் பார்த்தாலும் முட்டி மோதி, வீரத்தைத் நிரூபித்துவிடும் அவசரம்
உண்டாயிற்றே. அவையெல்லாம் ஒரு துளி பயனும் தரப்போவதில்லை என்ற ஞானம் அவருக்கு இருக்கவேண்டும்.
அனுபவம் தரும் பாடம், நமது அவசரங்களை விட மேலானது.//

அவுட்லுக்கில் வந்தது அசோகமித்திரன் மீதான ஒரு குற்றச்சாட்டோ, அவதூறோ அல்ல. அவர் மனம் திறந்து அளித்ததாக ஒரு இரண்டு பக்க பேட்டி. அதை மறுக்காததை இப்படி கூட திரிக்க முடியும் என்று இப்போதுதான் அறிகிறேன். இது உண்மையானால் (அதாவது வெளிவந்ததில் ஒரு வார்த்தை கூட அமி சொல்லவில்லையெனின்) நிச்சயமாக அவுட்லுக் மீது வழக்கு தொடுக்க முடியும். அதை செய்யாமல் பதிவுகளில் ஒரு நாலு வார்த்தை எழுதி போடுவதற்கு இத்தனை ஆராவரமா? இங்கே பேசுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. மேலும் நான் பயணப்பட போவதாலும் ஜமாயுங்கள்!"

6/03/2005 5:24 PM  
Blogger ROSAVASANTH said...

சற்று முன்னர் சிவக்குமாரின் பதிவை படித்தேன். இன்னும் குமட்டல் நிற்கவில்லை. வீட்டில் துணைவியுடன் பேசவும், மகனுடன் கொஞ்சவும் கூட முடியவில்லை. உண்மையில் இதை மீண்டும் மீண்டும் சொல்ல மிக மிக போரடிக்கிறது. இப்படியும் ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா? அடுத்தவர்கள் எழுதியதை முழுவதும் திரிப்பதில், அதை வேறாய் மாற்றி எழுதவும்.. இவர் செய்வதை விளக்க ஒரு சரியான வார்த்தை கூட என்னிடம் இல்லை. இப்படியும் கேவலமான ஒரு பிறவி இருக்க முடியுமா என்று வியந்துகொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் கூட சளைக்காமல் தொடர்ந்து இந்த மனிதர் இதை வருடக்கணக்கில் (நான் அறிந்து) செய்து வருகிறார். எனக்கு சிவக்குமார் பற்றி, இணையத்தில் அவர் எழுதியதை தவிர வேறு எதுவும் தெரியாது. ஒருவேளை அவர் சொந்த வாழ்க்கையில், வேலையில் நேர்மையானவராய் கூட இருக்கலாம். நண்பர்களுக்கு உண்மையாய் கூட இருக்கலாம். ஆனால் எழுத்தில்/தர்க்கத்தில் இப்படி ஒரு நேர்மையின்மை(வேறு வார்த்தை கிடைக்காததால் இதை நேர்மையின்மை என்று மட்டும் சொல்கிறேன்)யை காட்டும் மனிதனை எப்படி விளங்கி கொள்ள? எப்படி ஒரு மனிதனால் இப்படி ஒரு கேவலமான (எழுத்து) வாழ்க்கையை எந்த சஞ்சலமும் வெட்கமும் இல்லாமல் வாழ முடிகிறது. இதைவிட எந்தவித பிழைப்பும் மேலல்லவா? தூ!

உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. புஷ், சோ, பால் தாக்கரே, ஹிட்லர், யூதர்கள் இவர்கள் எல்லாம் அப்படி இருபதை புரிந்துகொள்ள ஒரு தர்க்கம் என்னிடம் இருக்கிறது. இந்த மனிதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் எந்த மிகையும் நான் காட்டவில்லை. படித்து குமட்டல் தாங்காமல் அதிலிருந்து மீண்டு வரும் வடிகாலாய் இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இரண்டு வார பயணத்திற்கு புறப்படுகொண்டிருக்கிறேன். அந்த அவசரத்தில் இதை எழுதுவது தவிர்க்க முடியாத கட்டாயமாகிவிட்டது.
(இனி கொஞ்சம் இயல்பாய் வேலையில் இறக்க கூடும்.)

சிவக்குமார் பதிவில் எழுதியது கீழே!
http://pksivakumar.blogspot.com/2005/06/blog-post_03.html

மீண்டும் நன்றி பிகேயெஸ். இதைவிட விஷம் பொருந்திய, கயமைத்தனமான, பொய்யான, போலியான இன்னும் பல பல பரிமாணங்கள் கொண்ட எழுத்தை என் வாழ்வில் படித்ததில்லை. இதை பதிவாக தந்ததற்கு மிகவும் நன்றி. இனி உங்களை படிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்காது என்று தோன்றுகிறது.

6/04/2005 5:33 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter