ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Wednesday, April 06, 2005மசாக்கிஸ்ட்!அசோகமித்திரனின் வாக்குமூலத்தை படித்த போது தமிழ் எழுத்து சூழலில் ஒரு முக்கிய இலக்கியவாதி எவ்வளவு நோய்கூறு மனநிலையுடன் இருக்க முடியும் என்று இதுவரை கருதி வந்ததற்கு இன்னோரு உதாரணம் கிடைத்ததாக மட்டும் எடுத்துகொண்டேன். ஏற்கனவே தமிழ் இலக்கிய சூழல் குறித்து அத்தகைய ஒரு புரிதலையும், அதன் மூலம் கிடைத்த சமன்பாட்டையும் கொண்டிருந்ததானால் இது எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் நான் மிகவும் மதிப்பும், நம்பிக்கையும் கொண்டிருந்த நண்பர்கள் இதற்கு தந்த எதிர்வினைகள்தான் தாள முடியாமல் இருக்கிறது. முழுவதும் ஒருவருடன் உடன்படுவதும் ஒத்துப்போவதும் நிச்சயமாய் சாத்தியமில்லாதது. அப்படி நிகழ்ந்தால் ஏதோ பிரச்சனை என்றுதான் எண்ண வேண்டும். ஆனால் ஒரு பச்சையான இனவாத வாக்குமூலத்தை தமிழின் மூத்த முதிர்ந்த எழுத்தாளன், முக்கிய பத்திரிகையில், அகில இந்திய வாசகர்களின் முன்வைக்கும்போது, குறைந்த பட்ச கண்டனம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, அதை நியாயபடுத்திக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு நம்பிக்கையை கொண்டிருந்ததற்காக என்னை நானே செருப்பால் அடித்து இன்புருவதை தவிர வேறு வழி தெரியவில்லை. இது குறித்த என் கருத்தை சொல்லிவிட்டேன். அசோகமித்திரன் சொல்லியது பச்சையான இனவாத கருத்து. தங்களை 'சாமி' என்று இன்றும் கூட பல இடங்களில் (திருநெல்வேலி வாங்கய்யா காட்டறேன்) அழைக்கும், அரசியல், கருத்தியல், வலைப்பதிவு உட்பட்ட அனைத்து ஊடகங்களில் தங்களுக்கு விசுவாசமான ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை மிக மோசமான முறையில் கேவலப்படுத்தியுள்ளார். இது குறித்து எழுதுவதல்ல என் நோக்கம். ஆனாலும் அருள் சொன்ன ஒரு கருத்தை போன்றுதான் அசோகமித்திரனின் எழுத்துக்களை அணுகுகிறேன். "அவர் இப்போது சொன்ன கருத்துகள் அவரைப்பற்றிய என் இலக்கியம் சார்ந்த மதிப்பை மாற்றிவிடப் போவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் பச்சை பிராமணீய விழுமியங்களைக் கொண்டவராக அறியப்படும் மௌனி இன்னொரு பிடித்த எழுத்தாளர். இவர்கள் கதைகளையெல்லாம் படிக்கும்போது எனக்கு அவர்கள் பிராமணீய வாழ்க்கையைப்பற்றியே எழுதினாலும் அது ஜாதி சார்ந்த்த எழுத்து என்று என்றும் பட்டதில்லை. இலக்கியத்துக்கு ஒரு தன்மை உண்டு. ஒரு சிறு இனக்குழுவினைப் பற்றிய பிரச்சனைகள், வாழ்வியல் துக்கங்கள் இவற்றைப்பற்றி மிகநுணுக்கமான விவரணைகளுடன் எழுதப்படும் புனைவுகள் மானுடத்தின் பொதுமைகளை தம்முள்ளே வியக்கத்தக்க வகையில் கொண்டிருக்கும். The more particular you get, the more general it becomes. இவ்வகையில் ஜாதிசார்ந்து, வட்டாரம் சார்ந்து எழுதப்படுபவை மிகுந்த வலிமையான ஆக்கங்களாக முழு மானுடத்தைக் காட்டுபவைகளாக மாறுகின்றன. " அருள் பிராமணியம் என்று சொன்னதை நான் பார்பனியம் என்று சொல்லியிருப்பேன். மற்றபடி இதை ஒத்த ஒரு அணுகுமுறையே கிட்டதட்ட எனக்கும் உண்டு. எனினும் இது எந்த விதத்திலும் விமர்சன பூர்வமாய் அசோகமித்திரனின் எந்த பிரதியையும் அணுகுவதில் பிரச்சனையாய் இருக்காது. பிரதியுடன் அடையாளம் கொண்டு வாசித்த பின், அசைபோடுதலில் எல்லா விமர்சனத்தையும் பிரயோகித்த பின்பும், இத்தகைய அணுகுமுறையில் கிடைக்கும் எந்த உலகையும் இழக்கமுடியாது என்பதே என் பார்வை. இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த பார்வை "அமி என்பதால் ஸ்பெஷலாக எதிர்ப்புக் காட்டவேண்டாம்" என்று ஒரு சலுகையையோ, "ஒரு பலகீனமான எழுத்தாளனை நமக்கு தைரியமாக கேட்கமுடியுமென்பதற்காக கண்டனம் செய்வது நாம் அப்பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள நம்மில் ஒருவரை பலிகொடுக்க முனையும் தந்திரமேயன்றி வேறேன்ன? " என்று தங்கமணி போல அபத்தமாகவோ என்னை யோசிக்க வைக்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு விஷயத்தையாவது அருள் (நேரடியாய் இல்லாவிடினும்)கண்டித்திருக்கிறார். அருள் பதிவிலும், பின்னூட்டங்களிலும் ஆனந்தின் கைவண்ணம் குறித்த சந்தேகத்தினை வரிசையாக பலர் கேள்வி எழுப்பியது மட்டுமே உறுத்தியது. அசோகமித்திரன் எழுதியதாய் ஒரு 'full text' வந்துள்ளது. அதில் திரிக்கப்படிருக்குமோ (என்ன வகையில் அது நிகழ்ந்தாலும்) என்ற சந்தேகம் வர, இவர்கள் அமி மீது வைத்திருக்கும் அபிமானத்தை தவிர வேறு காரணம் கிடையாது. அதற்கு ஆனந்தை சந்தேகப்படுவது எரிசலாய் இருந்தது. (ஆனந்த் மீது விமர்சனம் எனக்கும் உண்டு, சுமு போல் நானும் எதையாவது (அல்லது அதையே) கேள்வி பட்டிருக்கிறேன். இந்த பிரச்சனனயில் கூட அசோகமித்திரனின் இந்த பேட்டியை போடுவதன் அவர் நோக்கம் குறித்த கேள்விகள் உண்டு. ஆனால் இங்கே அவர் திரித்திருக்க கூடும் என்று சந்தேகம் வர என்ன அடிப்படை என்பதுதான் முக்கியம்.) வெங்கட் தன்னால் முடிந்த அளவு விமர்சனமாய் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் விமர்சிப்பதாய் நினைத்து அமிக்கு 'மனிதன்' சர்டிஃபிகேட் தந்திருக்கிறார். தன் சாதியை மட்டும் முன்னிறுத்தி, அதன் பெருமைகள் குறித்த ஏக்கத்துடன், மற்ற அனைத்து சாதியினர் மீதும் அபாண்ட பழிபோடும் ஒருவரை விமர்சிக்கும் பதிவிற்கு, 'அசோகமித்திரன் என்ற மனிதன்' என்ற தலைப்பு சூட்டுவது குறித்து பேசினால் என்னிடம் விதண்டாவதமும், வக்கிரமும் இருப்பதாக சிலருக்கு தோன்றலாம். யாருக்கு தோன்றுகிறதோ இல்லயோ, எனக்கு இந்த பிரச்சனையையே பேசி கொண்டிருப்பதும் நோண்டி கொண்டிருப்பதும், மிக மிக அலுப்பானதாக, குமட்டலை உண்டு பண்ணுவதாக நிச்சயம் இருக்கிறது. இந்த வலைப்பதிவை தொடங்கியபோது, 'பார்பனியம்' என்ற வார்த்தையையே பயன்படுத்த கூடாது என்ற முடிவுடன்தான் தொடங்கினேன். அது குறித்த கட்டாயம் மீண்டும் மீண்டும் எதிர்வினையாய் மற்றவினைகளாலேயே எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த சூழலில் இந்த அளவிற்கு சுய விமர்சனம் செய்துகொள்ளும் வெங்கட்டை பாரட்டத்தான் எனக்கு தோன்றுகிறது, கிறேன். தங்கமணிதான், தான் மட்டுமில்லாமல் சும்மா எல்லோரையும் கூண்டோடு எங்கேயோ கூட்டிகொண்டு போய்விட்டார். முதலில் தங்கமணி எழுதியது புரியவில்லை. கிண்டலாகவோ, விளையாட்டாகவோ சொல்கிறாரோ என்று நப்பாசை கொண்டிருந்தேன். நான் உலகை பார்க்கும் வகையில், அணுகும் விதத்தில், எதிர்க்கும் தளத்தில், கண்டிக்கும் தோரணையில் மற்றவர்கள் செய்ய வேண்டியதில்லை. நிச்சயமாக தங்கமணி எழுதியதை நான் கொச்சைப் படுத்தவில்லை. " இன்னும் தோதான சமயங்களில் இப்பெருமைகள் வெளிப்படுத்தும் கோரமுகங்களைத்தான் குஜராத்தில் சமீபத்தில் கண்டது. இப்படிப்பட்ட பெருமைகளுக்கு தார்மீகமான அடிப்படை ஏதேனும் இருக்கிறதா? இன்னொருவனை சிறுமைப்படுத்துகிற ஒன்றின் மேல் கட்டப்பட்ட ஒன்று உண்மையில் பெருமையா? அதை இழப்பது என்பது ஒரு இழப்பா? " என்கிறபோது பழைய தங்கமணிதான் என்று தெரிகிறது. இதைமீறி அவர் வேறு வார்த்தைகளில் அமியை நியாயபடுத்துவதையும், வக்காலத்து வாங்குவதையுமே எதிர்கிறேன். முதலில் தங்கமணியுடன் முரண்(மட்டும்)படும் இடம். அசோகமித்திரன் 'நேர்மையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டதற்கு பாராட்ட அல்லவா வேண்டும்' என்கிறார். இப்படி ஒரு கருத்தை பல இடங்களில் கேட்டிருகிறேன். நேர்மையாய் தன்னை வெளிப்படுத்துவதற்கு பாரட்ட வேண்டும் என்றால் ஹிட்லரைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். நான் ஹிப்பாகரஸியை எல்லா இடங்களிலும் ஒரு பிரச்சனையாக பார்க்கவில்லை. ஒரு காலத்தில் சாதி நேரடியாக பேசப்பட்டது. சாதிய வசையை, சாதிய பெருமையை நேரடியாக சொல்வார்கள். இன்று வீட்டினுள் வெளிப்படையாகவும், வெளியில் பூடகமாகவும் பேசுகிறார்கள். இதை போலித்தனம் என்று பார்க்கமுடியவில்லை. ஆரோக்கியமான சமுதாயம் நோக்கிய பயணமாகத்தான் தெரிகிறது. சமூகத்தில் அத்தனை பேரும் திருந்தி சாதியை துறப்பதோ, மறப்பதோ நிகழக்கூடியதல்ல. சட்டம் மற்றும் சமூக நிர்பந்தங்கள் காரணமாய் நிகழும் மாற்றங்கள் போலித்தனமானவை என்று கருத முடியாது. இப்படித்தான் அடுத்த கட்டத்திற்கு போக முடியுமே ஒழிய எல்லோரும் தன்னை விடுதலை செய்துகொண்டு அல்ல. "சாதி என்பதைப்பற்றிய நமது போலியான புரிதல், நாகரீகம் என்ற புனையப்பட்ட ஆடையைக் கிழித்து வெளிப்பட்டதற்காக அதிர்ச்சி அடைகிற நாம் அந்த போலித்தனத்தைக் குறித்து ஏன் அதிர்ச்சி அடைவதில்லை?" என்று கேட்கிறார் தங்கமணி. என் பார்வை இப்படி கேட்பதற்கு எதிரானது. வெளிப்படையாய் பேசாமலிருக்கும் போலித்தனம் என்பது நோய் பரவாமலிருக்க அணியும் முகமுடி மாதிரி அவசியமானது. அதனால் தங்கமணி போல் அசோகமித்திரனின் 'வெளிப்படையை' ஆரோக்கியமானதாக அல்லாமல், நோய் பரப்பும் தன்மையாயகவே பார்கிறேன். இது தங்கமணியுடம் முரண் மட்டும் படும் இடம். அடுத்து இதை போல வெறும் முரண் மட்டும் பட இயலாமல் தெளிவாக எதிர்ப்பது. "...அவர் நம்புகிற பெருமிதத்தை, நம்பிக்கையை, அது சோதனைக்குள்ளாகும் போது அடைகிற வலியை அவர் சொல்லக்கூடாதா? நான் இதைக் கேலிக்காக கேட்கவில்லை. ...... அசோகமித்திரன் பார்பனர்களின் சமூக நிலையை, பார்ப்பன மதிப்பீடுகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியைப் பேசுகிறார். அது பார்ப்பன அரசியலைப் பேசுவதுதான். பா.ம.கவையும், திருமாவையும் சாதி அரசியலைப் பேசுவதாக கருதும் போது, நாம் வெற்றிகரமாக சாதியைக் கடந்துவிட்டதாக எண்ணினோமே, இப்போது ஏன் அதிர்ச்சி அடைகிறோம்." என்ன சொல்ல வருகிறார் என்று தலை கால் மட்டுமல்ல, நகம், மயிர், சதை, ரத்தம் எதுவும் புரியவில்லை. சாதிய பெருமிதம் பேசுவதிலும், அதன் இழப்பை புலம்புவதிலும் எந்த பிரச்சனையும் இல்லையா? அதில் என்ன தப்பு என்கிறாரா? வேறு என்ன எழவுக்கு நாம் இத்தனை காலமாய் புலம்பி கொண்டிருக்கிறோம். அதில் தவறு எதுவும் இல்லையெனில் எதற்கு "இன்னொருவனை சிறுமைப்படுத்துகிற ஒன்றின் மேல் கட்டப்பட்ட ஒன்று உண்மையில் பெருமையா? " என்று ஏன் கேட்கிறார். இல்லை, எனக்குத்தான் புரியவில்லையா? சாதி பெருமை, அதற்கான ஏக்கம் எங்கே எப்படி வெளிப்பட்டாலும் அதை விமர்சிப்பது அல்லவா நம் அணுகுமுறையாய் இருக்க முடியும்? "கொண்டாடப்படும் அறிவாளிகள், நெடுஞ்சாண் கிடையாக நிறுவப்பட்ட மதபீடங்களின் முன் விழுந்து எழுந்து வேதக்கல்வி பற்றி கூச்சமில்லாமல் பேசும் விஞ்ஞானிகள், ஜனாதிபதிகள், இடதுசாரிகள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், போலிஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் ஆத்மார்த்தாகவும், ஆணித்தரமாகவும் நம்புகிற பெருமையை " நாம் கேள்வி கேட்காமல் ஏற்கிறோமா? அதை பற்றி வாய்கிழிய பேசுவதுதானே நம் வேலை! சந்தர்ப்பம் எதற்கு ஏற்படுகிரது என்பதுதானே பிரச்சனை. எழுத்தாளன் செய்தால், படைக்கப்படும் பிரதியில் அது வெளிப்பட்டால் அதை இன்னும் அதிகமாய் விமர்சனம் செய்துதானே ஆகவேண்டும். விஞ்ஞானி கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலேயோ, கணிதவியலாளன் நிறுவிய தேற்றத்திலோ கொண்டிருக்கும் ஜாதிய உளவியல் வெளிப்படாது. எழுத்தாளனிடம் அது வெளிப்படும் என்பதால் அதைத்தானே அதிகம் விமர்சிக்க வேண்டும்! தங்கமணிக்கு எங்கேயிருந்த இந்த போதி ஞானம் வருகிறது என்று புரியவில்லை. பாமக, திருமா ஜாதி பேசுவதையும் அசோகமித்திரன் பேசுவதையும் ஒப்பிடமுடியுமா? பொத்தாம் பொதுவாய் இணையத்து அம்பிகள் கேட்கும் மட்டையடி கேள்விகளை கேட்கும் அளவிற்கு தங்கமணிக்கு என்ன கட்டாயம் அல்லது அறிவொளி வந்தது என்று புரியவில்லை. கேட்கிறார். "ஒரு சாதியின் சுய பெருமிதம் (பிறப்பை வைத்து இருக்கும் இன்றைய சூழலில்) இன்னும் அனேக சாதியினரை மிக இயல்பாக தாழ்த்துகிறது என்பதைத் தான். எனவே அவர் தமது சாதியின் பெருமைகளை (அது இழந்துவிட்டதாகவே இருக்கட்டுமே) பேசும்போதே மற்ற அனைவரையும் தாழ்த்துகிறார். இதே மனநிலையை நமது சமூகத்தில் இருக்கும் அனைவரும் கொண்டிருக்கையில் அசோகமித்திரனை மட்டும் கண்டிப்பதில், குறை சொல்வதில் என்ன இருக்கிறது? " உதாரணமாய் ஒரு தேவன் தன் சாதி பெருமையை பேசுவதென்பது, தன்னை 'சிங்கமாக' உருவகிப்பது, தன் வீரம் இன்ன பிற வீச்சரிவாள் குணங்களை கொண்டாடுவது. இந்த சாதிபெருமை தலித் மீதான வன்முறையாய் வெளிப்படுகிறதே அன்றி இது எந்த விதத்தில் பார்பனர்களை தாழ்த்துகிறது. இது போல ஒவ்வொரு சாதியின் பெருமையும் அதற்கு கீழே கற்பிக்கப்பட்டுள்ள மற்ற சாதிகளை தாழ்த்துமே ஒழிய மேலே கற்பிக்கப்பட்டுள்ளதை எப்படி தாழ்த்த முடியும்? சொல்லப் போனால் ஒருவன் தனது சாதி பெருமையை பேசும்போது, தனக்கு மேலே உள்ளதன் கீழே தான் இருப்பதையும் ஒரு வகையில் உறுதிபடுத்தி ஒப்புகொள்கிறான். தான் அடிதடிக்கும், தலித்தை கண்காணிக்கவும் பிறந்ததை ஒப்புகொள்வதுதானே தேவர் ஜாதி பெருமை. இதற்கு எதிராக பேசுவதோ, பெருமைகொள்வதையோ சாதிய பெருமை என்று சொல்லமுடியுமா? சமஸ்கிருத மயமாக்கலுடன் இயைந்துபோவதை சாதி பெருமையாய் கொள்வது இதில் இன்னொரு போக்கு. இதுவும் பார்பன சாதியை இன்னும் பெருமை படுத்துமே ஒழிய சிறுமைபடுத்தவோ தாழ்த்தவோ செய்யாது. உதாரணமாய் தங்களை தேவேந்திர குலமாகவும், அருந்ததி இனமாகவோ கற்பிப்பித்து கொள்வதால் எந்த விதத்திலும் ஆதிக்க சாதிகள் தாழ்ந்து போக போவதில்லை. தங்களை சாதி ரீதியாய் பெருமை கொள்வதை எல்லாம் ஒழித்து கட்டிவிட்டு, இந்த எழவை மொத்தமாய் ஒழிப்பதுதான் சரியான வழி என்றாலும், பல காரணக்களுக்காக இப்படி சமஸ்கிருத மயமாக்க பெருமை தேவைப்படுகிறது. 'சக்கிலியர்' என்பதை விட அருந்ததியினர் என்று சொல்வது மரியாதையாய் இருக்கிறது. "ஒரு சாதியின் சுய பெருமிதம் (பிறப்பை வைத்து இருக்கும் இன்றைய சூழலில்) இன்னும் அனேக சாதியினரை மிக இயல்பாக தாழ்த்துகிறது என்பதைத் தான்." என்று பொத்தாம் பொதுவாக தங்கமணி சொன்னது அபத்த குவியலாகவே எனக்கு தெரிகிறது. அம்பிகளுக்கு இப்படி தர்கிப்பது தேவையானது. தங்கத்திற்கு என்னானது என்று முடியை பிய்த்துகொண்டிருக்கிறேன். இதை யெல்லாம் கூட மன்னித்துவிடலாம். ஆனால் ஏதோ அசோகமித்திரன் பேசியது வெறும் சாதி பெருமிதம் அல்லது அதை இழந்ததன் ஏக்கம் *மட்டும்தான்* என்று வர்ணிப்பதைத்தான் தாங்கமுடியவில்லை. தெளிவாக "நாங்கள் யூதர்கள் போல' எனும்போது மொத்த பார்பனரல்லாத தமிழ் மக்களால் தாங்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதாக சொல்கிறார். பேட்டியின் அவர் திராவிட இயக்கம் பற்றி மட்டும் அவர் குறிப்பிடவில்லை. (திராவிட இயக்கத்துக்கு அது பொருந்துமா என்பது வேறு விஷயம்.) ஒரு காலத்தில் சங்கரமடத்தின் ஆலோசனைப்படி செயல்பட்ட ஜெயலலிதா, யாருக்குமே முழுவதும் புரியாத காரணத்தால் நடத்திய ஜெயேந்திரர் கைதை கூட விசாரனையின் ஒரு பகுதியாய் பார்கிறார். அவரை ஆதர்சமாக கொண்ட வாசகர்கள் உள்ளிட்ட எல்லா தமிழ் மக்களையும் நோக்கி கையை நீட்டுகிறார்.பொதுவான பிராமண உளவியலுடன் ஒத்து திமுகவை மீண்டும் மீண்டும் தோற்கடித்த பெரும்பான்மை மக்கள் கூட்டம் பற்றி கூட அவருக்கு பேச எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் தங்களுக்கு வக்காலத்து வாங்கிய எந்த இலக்கிய/அரசியல்வாதி, பத்திரிகையாளர் யாரும் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. தங்கமணி சொல்வதுபோல அவர் தனது சாதிய பெருமிதம் பறிபோனது பற்றி பேசவில்லை. தாங்கள் அவமானப்படுத்த பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மாறியது குறித்து பேசுகிறார். குடுமி வைக்க முடியாமல் போனதையும், பார்பனரல்லாதவர் போல் மீசை வைத்துகொள்ள கட்டாய நிலைக்கு வந்ததையும் பேசுகிறார். அவர் மிக நேரடியாக முன்வைத்த ஒரு வாக்கியம் மட்டுமே அருள் சுட்டிகாட்டியது. அமி பேசியது வெறும் சாதிய பெருமிதம் மட்டும்தான் என்று நினைக்கும் அளவிற்கும் (அதிலும் என்ன தப்பு என்று கேட்கும் நிலையில்) நான் மதித்த நண்பர்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அருள் சொல்கிறார் " உங்கள் பதிவும் பார்த்தேன். அதுவும் சரிதான்." சுந்தர்மூர்த்தி "தங்கமணி நீங்கள் எழுதியிருப்பது மெத்த சரி." என்ன சரி? அசோகமித்திரன் "நம்பிக்கையையோ, அவருடைய குலப் பெருமைகளையோ, அவற்றின் இன்றைய நிலைக்கு அவர் வருந்துவது குறித்தோ, அந்த நிலைக்கான காரணமாக ஒரு நூற்றாண்டு தமிழக அரசியலை சுட்டிக்காட்டுவதையோ" மட்டும்தான் பேசுகிறார் என்பதா, அல்லது அதிலும் தவறு எதுவும் இல்லை என்று வக்காலத்து வாங்குவதா? அடுத்து நாராயணண் "இதையே தான் நானும் சொல்ல வருகிறேன்." என்னய்யா விளையாட்டு இதெல்லாம்? தமிழின் சமீபத்தில் கொண்டாடப் பட்ட எழுத்தாளன் தமிழ்நாட்டின் அத்தனை பார்பனரல்லாத மக்களையும் குற்றவாளியாக்கி அபாண்டமாய் ஒரு பொய் குற்றசாட்டை சொல்கிறார். அம்பிகள் மாமாக்கள் அதை கொண்டாடினால் பொறுத்துகொள்ளலாம். (அதில் அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள்.) நம் சூழலின் மேல் நம்பிக்கை வர வைத்த நண்பர்கள் எல்லோரும் எதையோ பினாத்திகொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கே போய் முட்டிகொள்வது. இப்படி ஒரு நம்பிக்கை வைத்த என்னையே செருப்பால் அடித்துகொள்வதை தவிர வேறு என்ன வழியிருக்கிறது? அருளுக்கு ஒரு விஷயத்தையாவது குற்றம் சொல்ல தோன்றியிருக்கிறது. வெங்கட் தன்னால் முடிந்த அளவு விமர்சித்திருக்கிறார். சங்கரபாண்டி தனது பாணியில் நிதானத்துடன் நேர்மையாய் தனது கருத்தை சொல்லியிருக்கிறார். அனாதை மட்டுமே இதன் இனவாத்தைத்தை சரியாய் எடுத்து "இவரைப் போன்ற்றொரை ஆதர்சமாகக் கொள்ளும் பார்ப்பனரல்லாதவர்களின் முகத்தில் அடித்த மலம்" என்றிருக்கிறார். நான் என் பாணியில் முன்வைத்ததை அவர் பாணியில் சொல்லியிருக்கிறார். அதற்கு பாராட்டுக்கள். ஆனால் நான் அனாதையுடன் முரண்படுவதை இந்த பதிவின் தொடக்கத்தில் அருள் எழுதியதை மேற்கோள் காட்டி எழுதியதை படித்தால் புரிந்துகொள்ள முடியும். தன்னுடய அரசியலை முன்வைத்து, அசோகமித்திரனிடமிருந்து எடுத்து கொள்வதும், முழுவதும் நிராகரிப்பதும் அனாதையின் தனிப்பட்ட உரிமை. நான் அந்த விஷயத்தில் அவருடன் வேறுபடுகிறேன். அவ்வளவுதான். ஜெயின் கமிஷன் ராஜிவ் காந்தியின் கொலைக்கு மொத்த தமிழ் மக்களையே குற்றவாளியாக்கியதன் இனவாத தன்மையை புரிந்துகொள்ளக் கூட நமது சூழலில் பலருக்கு நாதியில்லாமல் இருந்தது. அந்த நிலமையை கடந்து ஆரோக்கியமான வலைப்பதிவு சூழலுக்கு வந்துவிட்டதாய் நினைத்தேன். ஜெயினை விட பல மடங்கு வீரியத்துடன் மொத்த தமிழ் மக்களின் மீது இனவாதமாய் குற்றம் சாட்டியதை நியாயபடுத்தும் நண்பர்களை நம்பியதற்கு என்னையே அடித்து கொள்கிறேன். பின் குறிப்பு: 1. தங்கமணியின் பதிவு பிடித்திருந்தாக என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் முதலில் சொல்லியிருப்பேன். அது அவர் முதலில் எழுதிய கவிதை. பிறகுதான் மற்ற பதிவை பார்க்க முடிந்தது. 2. இவ்வளவு சொன்னாலும் இன்னும் தமிழ் சூழலை ஆரொக்கியமானதாக, திரவிட இயக்கத்திற்கு ஒரு பாதிப்பு இருப்பதாகவும்தான் நினைக்கிறேன். அதை மற்ற மாநில சூழலுடன் ஒப்பிட்டும், அசோகமித்திரனின் கட்டுரைக்கும் அவுட்லுக்கில் வந்த மறுமொழிகளை முன்வைத்தும் உறுதிப் படுத்தி கொள்கிறேன். |
38 Comments:
வசந்த், உங்களின் எண்ணங்கள் புரிகின்றது. நேரமில்லாத காரணத்தினால், விரிவாக இரண்டொரு நாட்களில் வந்து பதிகிறேன்.
அசோகமித்திரன் செவ்வியைப் படித்ததில் எரிச்சல் தான் மிஞ்சியது. பல வருடத்தைய வார்ப்பும், வளர்ப்பும், சமூகச் சூழலுமே இப்படியான ஒரு உளவியலை உருவாக்கியுள்ளது என்று கொண்டாலும், இவர்கள் வளர்க்கும் பிள்ளைகள் நாளை எப்படி இருப்பார்கள் என்ற கவலை தான் மனத்தில் பெரிதாக விரிந்து நிற்கிறது.
2002 டிசம்பர் 25 ஆம் தேதி கிருஷ்ண கான சபாவில் சுதா ரகுநாதனின் காலைக் கச்சேரிக்காய் காத்திருந்த நேரம், பக்கத்து இருக்கையில் ஒருவர் இப்படி அளந்து கொண்டிருந்தார். "நான் எல்லா வருஷமும் தவறாம வந்துடுவேன். கோயமுத்தூர்ல எங்க சங்கீதம் கேக்கறது? நம்ம "காஷ்ட்" யாருமில்லை - பைசா புழங்கி என்ன? எல்லாரும் (இங்கே ஒரு சாதிப் பெயரச் சொல்லி)தண்ணிய கிண்ணியப் போட்டுட்டு இருப்பான் எப்பவுமே". குபீரென்று பொங்கிய கோபத்தில் சொன்னவனைப் பார்த்துக் கத்த வேண்டும் போல இருந்தது. ரொம்பவும் சிறுத்துப் போய்விட்டேன். வேறு இடம் பார்த்து உட்கார்ந்தாலும், கச்சேரியில் மனது முழுதாக லயிக்கவில்லை.
கோயமுத்தூரில் caste என்பதைச் சரியாக உச்சரிக்கவராத சாதாரணனில் இருந்து, பரந்த சமூக ஞானம் உள்ள, அருள் சொன்னது போல, பச்சைப் பிராமணீய விழுமியங்களைத் தழுவிநின்றாலும், அதன் சாயை துளியும் எழுத்தில் வெளிக்காட்டாத சாமர்த்தியசாலியான அமி வரைக்கும் பரந்து விரவியிருக்கும் நோய் இது. இம்மாதிரியான வெளிப்பாடுகளை அந்த இடத்திலேயே தட்டிக் கேட்க வேண்டும். வன்மையாகக் கண்டனம் செய்யவேண்டும்.
நீங்கள் சொல்வது போல பாவனைக் கேனும் இந்த மாதிரியான egalitarian நிலைப்பாட்டை ஒருவர் கொள்வாராயின், இம்மாதிரி கண்டனங்களுக்கு அது வெற்றியே.
இப்போது பிராமணர்களே ஒடுக்கப்பட்ட வகையைச் சேர்ந்துவிட்டார்கள் என்றும், அதற்கெதிராக அவர்கள் ஒன்று திரள வேண்டும் என்று ஒரு லாபியிங் கிளம்பியிருக்கிறது. தன்னை பிராமணர் அல்லாதவர் என்று காட்டிக் கொள்ளச் சிலர் மிகுந்த பிரயத்தனம் செய்கிறார்கள் என்ற குற்றச் சாட்டையும் சிலர் முன் வைக்கிறார்கள். இவைகளைக் குறித்து என் புரிதல் இதுவே:
பல வருடங்களாக ஒடுக்குமுறைக்கும், மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளுக்கும் எதிரான ஒரு எழுச்சி வரும்போது, அதன் சக்தியில் சமூக ஏற்றத் தாழ்வுகள் தலைகீழாகப் போவதைப் போன்ற தோற்றம் இருக்கும். சம நிலை ஏற்படும் முன்னர் உருவாகும் தளும்பலே என்று கொள்ளலாம்.பிராமணீய ஒடுக்குமுறை என்ற முள்ளை அதற்கு எதிரான ஒடுக்குமுறை என்ற முள் கொண்டு எடுத்துவிட்டால், இரண்டு முட்களுக்கும் வேலை இருக்காது. இரண்டையும் எறிந்துவிடலாம்.
மனிதம் என்ற மகத்துவத்தை முன்வைக்காத எந்த ஒரு அமைப்பும் சுயமரியாதை உள்ள எவருக்கும் உவப்பாகாது. தீண்டாமை தொடங்கிய இம்மாதிரி மனிதரைச் சிறுமைப் படுத்தும் பழக்கங்களை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுக்கும் விதமாகச் சிலர் தம்மை பிராமண அடையாளங்களில் இருந்து விடுவித்துக் கொண்டால் அதில் தவறொன்றும் இல்லை.
//சமூகத்தில் அத்தனை பேரும் திருந்தி சாதியை துறப்பதோ, மறப்பதோ நிகழக்கூடியதல்ல. சட்டம் மற்றும் சமூக நிர்பந்தங்கள் காரணமாய் நிகழும் மாற்றங்கள் போலித்தனமானவை என்று கருத முடியாது. இப்படித்தான் அடுத்த கட்டத்திற்கு போக முடியுமே ஒழிய எல்லோரும் தன்னை விடுதலை செய்துகொண்டு அல்ல...வெளிப்படையாய் பேசாமலிருக்கும் போலித்தனம் என்பது நோய் பரவாமலிருக்க அணியும் முகமுடி மாதிரி அவசியமானது.//
- அருமை வசந்த்! இது ஒரு நல்ல தொடக்கம்...
இன்னும் என்னென்னவோ எழுத ஆசை. கோர்வையாக வரவில்லை, நேரமும் இல்லை. நல்ல பதிவு...
பி.கு.: தார்மீகக் கோபம் கொண்டு வரும் வாத்தைகளுக்கும், வேண்டுமென்றே provocative ஆக வீசப்படும் வசைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் உணர்கிறேன். உங்கள் கோபத்தை நான் சார்ந்த சமூகத்தின் கோபமாக மதிக்கிறேன். அதனாலேயே இந்த விஷயம் குறித்து (ஒரு மாதமாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்) என் கருத்தை இங்கே பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
வசந்த்:
உங்கள் பதிவுவினில் என்மேலான சந்தேகத்தைவிட என் மேலான நம்பிக்கையே இருப்பதாக புரிந்துகொள்கிறேன். உங்களுடைய நம்பிக்கைக்கு மிக்க நன்றி! இப்போது மிகவும் களைப்பாக இருப்பதால் தூங்கப்போகிறேன். மணி இரவு 2:00. காலையில் எழுதுகிறேனே!
நாராயணன், யளனகபக கண்ணன் கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றி.
தங்கமணி சந்தேகப்பட, அதுவும் உங்கள் மீது கொள்ள என்ன இருக்கிறது? இன்னமும் நீங்கள் எழுதியதின் நோக்கம், பிண்ணணி சாரம்சம் எதுவும் எனக்கு சுத்தமாய் புரியவில்லை. ஒரு பிறழ்வாக நீங்கள் மட்டும் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. மற்றவர்களும் ஆமோதிக்க, இரண்டு நாள் பொறுமையிலும் பிடிபடாமலே எழுதினேன். இல்லையெனில் தனிப்பட்ட முறையில் குறைப்பட்டு கொண்டிருக்கலாம். அது ஒரு பொதுகருத்தாக மாறும்போது சொல்ல வேண்டியதாகிவிட்டது. மற்றபடி நான் விதண்டாவாதம் செய்வதாக நினைக்காததற்கு நன்றி. நாளை என்ன தோன்றுகிறதோ அதை எழுதுங்கள்.
ரோசா,
நான் வெங்கட்டுக்கு பின்னூட்டமாய் இட்டது.
"but i didnot want to critisize everything he said as i simply did not have the heart considering his age. any one younger, i would not have been so restrained".
மேலோட்டமாய்ப் பார்த்தால் இதற்கும் நான் தங்கம்ணிக்கு எழுதிய
" உங்கள் பதிவும் பார்த்தேன். அதுவும் சரிதான்."
என்பதற்கும் சற்றே முரண் இருப்பதாகப் படலாம். ஆனால் கொஞ்சம் பொறுங்கள். இந்த விடயம் வெறும் அமி யைப் பற்றியதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது வெறும் சாதிச் சண்டையல்ல. இந்தப் பேட்டியின் வீச்சு அதிகம். பல நிலைபாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் போல் இருக்கிறது. அமியின் தரப்பும் ஆனந்தின் அதற்கான விளக்கமும் அடுத்த அவுட்லுக் இதழில் வரத்தானே வேண்டும். அதைப் பார்த்துவிட்டு இதை நான் மீண்டும் தொடர்கிறேன்.
அருள்
ஆனந்த்/அசோகமித்ரனின் பதிவுக்கான பின்னூட்டங்கள் அவுட்லுக்கில் இங்கே. இதேபோன்ற ஒரு சந்தேகம் முன்பும் எனக்கு ஒருமுறை, வேறொரு விஷயத்தில் வந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய எனது இந்தப் பதிவில். நேரடியாக, கட்டுரையை எழுதிய ரிச்சர்டு கார்லிஸுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டினேன்: ஏ.ஆர் ரஹ்மான் இதே phrasing ல் சொன்னாரா இல்லை எழுதும்போது மாறிவிட்டதா என்று. அடுத்த நாளே பதில் வந்தது - இதே வார்த்தைகளில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார் என்று. அந்தமட்டில் சந்தேகம் தீர்ந்தது. இதை அசோகமித்திரன் தான் சொன்னாரா என்று கேட்குமளவு, இது ஏதும் 'ஒரு வாக்கியம்' மட்டும் அல்ல - ஒரு முழுக் கட்டுரை என்பதால், இன்னும் தெளிவுபடுத்திக்கொள்ள விருப்பமிருப்பவர்கள், அசோகமித்திரன் 'மனம்திறந்த' ஆனந்துக்கு பட்டென்று ஒரு மின்னஞ்சலைத் தட்டுங்கள், இதுகுறித்த வலைப்பதிவுகளில் உள்ள அனைத்து விவாதங்களின் சுட்டிகளுடன். ஏதாவது 'quoted out of context' உள்ளதா என்று. பதில் வந்தால், அந்த மின்னஞ்சலை அனுமதிபெற்று அப்படியே வலைப்பதிவில் இடலாம். மறுபடி எழுதமுயல்கிறேன்...
வசந்த்,
மின்னஞ்சலில் எழுதிய என்னுடைய விளக்கம் போதவில்லை என்று நினைக்கிறேன். விரிவாக வீட்டுக்கு போனவுடன் இரவு எழுதுகிறேன். மற்றவர்கள், கூடவே ஆனந்தின் இந்த இன்னொரு கட்டுரையையும் வாசித்துக் கொள்ளுங்கள். (இன்னும் பிற பழைய கட்டுரைகளும் Outlook இல் தேடினால் கிடைக்கும்)
http://www.outlookindia.com/full.asp?fodname=20050411&fname=Brahmins+%28F%29&sid=1
எல்லாப் பதிவுகளும் பதிந்தவுடன் பின்னூட்டங்களும் உடனேயே வந்து விடுகின்றன. எப்பொழுதுதான் நேரம் இருக்குமோ :-)
வழக்கம் போல கடைசி ஆளாய் வந்து என்னால் முடிந்ததை பதிந்து விட்டுப் போகிறேன். கடைசி ஆளாய் வருவதில் ஒரு இலாபம், என்னைத் திட்டி எந்தப் பின்னூட்டமும் வராது :-)
ஏற்கனவே இது தொடர்பாக நான் அருளின் பதிவில் பின்னூட்டம் விட்டேன். படித்தீர்களா எனத்தெரியவில்லை.
http://aruls.blogspot.com/2005/04/blog-post_111253571156736199.html#comments
மேலும் ஒரு கருத்தை மட்டும் இங்கே பதிகிறேன்.
வசந்த், ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டது போல் உங்களின் போர்க்குணத்தைப் பாராட்டுகிறேன். அதைவிட உங்களுடைய Caste Sensitivity-யை மிக மதிக்கிறேன். அது இருந்தால்தான் நம்மிலிருந்து சாதியை ஒழிக்க முடியும். நான் கூட Dalit Sensitivity-யைப் பற்றி முன்பு டோண்டுவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஆனால் லாடு லபக்கு தாஸூ திருமாவை திட்டிய பொழுது அந்த Dalit Sensitivity-யை உங்களிடம் தான் பார்த்தேன். நீங்கள் விளக்கியபின் தான் எனக்கே புலப்பட்டது.
ஒவ்வொரு சாதியினரும் தம் சாதிக்குக் கீழே உள்ள சாதியினரின் Caste Sensitivity-யுடன் நடந்தால் சாதி ஒழிந்து விடும். தன் சாதிக்கு மேலே உள்ள சாதியினரின் Sensitivity என்பது சாதியை எதிர்க்கும் Sensitivity அல்ல. நாகரீகம் என்ற பெயரால் சாதியை மறைத்து வாழ வைக்கும் Sensitivity.
ஆனந்த் எப்படிப் பட்டவரானாலும், அவர் அசோகமித்திரனின் பார்ப்பனிய முகத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அசோகமித்திரனின் இந்த வடிகட்டிய கேவலமான கருத்துக்களைப் படித்தபின் அவருடைய இலக்கியங்களை அள்ளி அவரே குப்பையில் போட்டுவிட்டது போலத் தோன்றியது. அதையேதான் நாமும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
This comment has been removed by a blog administrator.
எழுதிய சென்ற பின்னூட்டத்தை நீக்கியுள்ளேன். தங்கமணியின் அனுமதி பெற்ற பின்பு மீண்டும் இடுவேன்.
சுமு,
நீங்கள் (மற்றும் நாரயணன் மெஸென்ஞ்ரில்) அளித்த சுட்டி மூலம் ஆனந்தின் இன்னோரு கட்டுரையை படித்தேன். 'பாம்பை நம்பினாலும் பாப்பானை நம்பகூடாது' என்று சொல்வதை விமர்சிக்க தார்மீகம் எதுவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு என்ன சொல்ல என்று புரியவில்லை. இந்த ஆனந்தை தலித் சாம்பியனாக எல்லாம் வர்ணிப்பதை பார்க்கும்போது மலத்தை தின்றது போல் வாந்தி வருகிறது.
ஆனந்தை நேரில் (மீண்டும்) சந்திப்பேன் என்று நினைக்கிறேன். சுய நிம்மதியை முன்னிட்டு மேலே எதுவும் உடனடியாய் எழுத விரும்பவில்லை.
ஒரு பத்து நாட்களுக்கு எதை பற்றியும் எழுதாமல் பேசாமல் இருக்க விரும்புகிறேன். அதற்கு பிறகு வருகிறேன். வாசிப்பவர்களுக்கும், பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கும் நன்றி
ரோசா ஏன் எடுத்துவிட்டீர்கள்? அது சரிதான். இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம்ம் பெரிதாய் இருக்கும். இங்கும் என் பதிவிலும் இடுகிறேன். அந்த ஆனந்த் சுட்டியை இங்கோ, மின்னஞ்சலிலோ அனுப்ப முடியுமா?
வசந்த்,
இங்கு எழுத நினைத்த விளக்கம் எங்கோ போய் நீண்டு போய்விட்டது. இன்று முடிக்கவும் நேரமில்லை. ஆகவே இரண்டு பகுதிகளாக என் பதிவில் போட உத்தேசித்து முதல் பகுதியை போட்டாகிவிட்டது. இரண்டாவது பகுதி நாளை அல்லது மறுநாள்.
நன்றி தங்கமணி, உங்களிடம் அனுமதி கேட்காமல், நீங்கள் தனிப்பட்ட முறையில் சொன்னதில் சிறு பகுதியை எடுத்து போட்டதால் நீக்கினேன். மீண்டும் இடுகிறேன்.
ஆனந்தின் அடுத்த கட்டுரையை ( http://www.outlookindia.com/full.asp?fodname=20050411&fname=Brahmins+%28F%29&sid=1 ) படித்ததும் கொதித்து போய்விட்டேன். அசோகமித்திரன் சொன்னது என்னை கோபப்படுத்தவே இல்லை. ஆனந்த் ஒரு தலித்திய ஆதரவாளராக தன்னை முன்னிறுத்தியவர். ரவிக்குமாரின் உற்ற தோழர். முன்பு அ.மார்க்ஸ் இவர் குறித்து கவிதாசரணில் எழுதியதை படித்த போது, அ.மார்க்ஸ் polemics செய்வதாகவும், அவருடய விமர்சனம் சற்று அதிகமாகவும், antagonism கலந்ததாகவும் பட்டது. அதை ஒருவேளை மெய்யாக்க ஆனந்த் இப்படி செயல் படுகிறாரோ தெரியவில்லை. எதுவானாலும் வேலை என்னை இதிலிருந்து சற்று விலகியிருக்க கட்டாயப் படுத்துகிறது. சொல்ல ஏராளமாய் இருந்தாலும், ஒரு பத்து நாட்கள் விலகிய பிறகு, மனதை பக்குவப் படுத்தி கொண்டு எழுத தொடங்குகிறேன். இதை தொடர்ந்து எழுதிகொண்டிருப்பது என்னையும் குமட்டி கொண்டிருப்பதும் ஒரு காரணம். எனது நீக்கப்பட்ட பழைய பின்னூட்டம் கீழே தொடர்கிறது.
***************************************
தங்கமணி எனக்கு தனிப்பட்ட முறையில் (கடந்த பதிவின் பின்னூட்டம் தொடர்பாக)எழுதியுள்ளார். பதிவை எழுதிய பிறகே அதை பார்த்தேன்.
தங்கமணியின் தனிப்பட்ட அஞ்சலை மேற்கோள் காட்ட விரும்பாவிட்டாலும் நிலமையை தெளிவு படுத்த சில விஷயங்களை சொல்ல வேண்டியுள்ளது. எல்லோராலுமே தனது பதிவு தவறாக புரிந்துகொள்ளப் பட்டதாக கூறுகிறார். அதாவது பொதுவாக சாதிரீதியான அடையாளங்களை தனிப்பட்ட முறையில் போற்றுவதையும், பெருமிதம் கொள்வதையும் *அனுமதிக்கும்* கருத்துக்களை உடையவர்கள் அசோகமித்திரனை மட்டும் ஏன் கண்டிக்க வேண்டும் என்பதுதான் அவர் கருத்து (என்று புரிந்துகொள்கிறேன்). இப்படி கேட்பது நியாயமானது என்று நினைகிறேன். ஆனால் தங்கமணி அதை கேட்பதாக நினைத்துகொண்டு ரொம்பவே சொதப்பி விட்டார் என்பதுதான் என் கருத்து. 'அசோகமித்திரன் சொன்னதில் தவறில்லை, சாதிய பெருமிதம் அவரது தனிப்பட்ட பிரச்சனை, அதை வெளிப்படுத்துவதை கண்டிக்க வேண்டியதில்லை' என்று எல்லோரும் புரிந்துகொண்டு, அதை ஒப்புகொண்டு, பின்னூட்டம் அளிக்கும் போதாவது தங்கமணி விளக்கம் தந்திருக்க வேண்டும். மாறாக நிலமை விபரீதமாய் போகும்போதும் மீண்டும் சொன்னதையே சொல்லி சொதப்பி தள்ளிவிட்டார் என்று நினைக்கிறேன். மேலும் இதை சொல்ல திருமா/பாமக வை அவர் இழுத்திருக்க வேண்டிய தேவையில்லை.
முதலில் தங்கமணி வேறு எதையோ சொல்ல வருகிறாரோ என்றுதான் நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் தொடர்ந்து நாராயணன், அருள், சுமு, தொடங்கி ஒரு museஉம் அதற்கு பாரட்டி, நிலமை விபரீதமான பின்னே என் கருத்தை எழுதினேன். இது பொதுக்களத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் தனிப்பட்ட முறையில் மட்டும் தங்கமணியிடன் குறைப்பட்டுகொள்ள முடியவில்லை. பொதுவில் எழுத வேண்டியது அவசியமாகிவிட்டது.
எப்படியிருந்தாலும் என்னை பொறுத்தவரை பிரச்சனை அசோகமித்திரனின் தனிப்பட்ட ஜாதி பெருமிதம் அல்ல. அவர் முன்வைப்பது தாங்கள் (பார்பனர்கள்) மற்ற அனைத்து மக்களினாலும் 'யூதர்களை போல விசாரணை' செய்யப்பட்டதான குற்றச்சாட்டு. இப்படி சொல்வது பொய்யான, அபண்டமான (இது வரை, இன்னும் மற்ற சாதியினரின் அரவணைப்பையும் போற்றுதலையும், பணிதலையும் பெற்று) அயோக்கியத்தனமான ஒரு ரேசிஸ்ட் குற்றச்சாட்டு. அதுதான் என் கருத்து. அதை எல்லோருமே தவறவிட்டதானால் இந்த பதிவை எழுதினேன்
நன்றி சுந்தரமூர்த்தி. நான் எழுதும் போது நீங்களும் எழுதியிருக்கிறீர்கள். திரும்ப பலமுறை வந்த உங்களின் மற்ற பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன்.
Dear வசந்த்,
பிராமணர்கள் ஒதுக்கப்படுவது (அல்லது ஒடுக்கப்படுவது) குறித்து பேசும்போது, ஒரு விடயம் சொல்ல விழைகிறேன். நமது சமூகத்தில் பணக்காரர்களாக (upper middle class and above) இருக்கும் பட்சத்தில், இந்த பிரச்சினைகளே (சாதியால்) கிடையாது. அவர்கள் மத்தியில் இவை அதிகம் தென்படுவதில்லை.
தலித்துகளில் ஏழைகள் (and lower middle class) அதிகம் இருப்பதால், எப்போதும் அவர்கள் தான் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களிலும் அந்தஸ்து பெற்றவர்களுக்கு ஒடுக்கப்படுவது (அல்லது ஒதுக்கப்படுவது) என்பது இருப்பதாகத் தோன்றவில்லை (இளையராஜாவை காஞ்சி மடத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பதை இதில் சேர்க்க வேண்டாம் (காஞ்சி பிலிம்ஸ் சொன்னது!) அவர் அங்கு போயிருக்கவே கூடாது என்பது என் கருத்து). அதே போல, பிராமணர்களிலும் ஏழைகளாக இருப்பவர்கள் தான், பல தருணங்களில், மிகுந்த அவதியையும், ஏளனத்தையும், அவமானங்களையும் (பிராமணர்களாலும் பிற சாதியினராலும் ஏற்படும்) சந்திக்க நேரிடுகிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா
Vasant,
Forgot to tell you something! Nobody talked about the title of your article (masochist!). Good one :-)
I assume it is meant for AM!
enRenRum anbudan
BALA
ரோசாவசந்த்,
அசோகமித்திரன் இப்படிச் சொன்னதன் பிறகு, நமது இலக்கியவாதிகள்/இலக்கிய உலகத்திலிருந்து என்ன விதமான எதிர்வினைகள் வருமென்பதைப் பார்க்கத்தான் ஆவலாக இருக்கிறது.
சென்றவருடம்,வெங்கட்சாமிநாதனின் ரொரண்டோ ஒன்றுகூடலைப் பற்றி எழுதுகையில், வெங்கட்சாமிநாதன், கருஞ்சுழி ஆறுமுகம் நவீனநாடகங்களுக்கு வருவதை அங்கீகரிக்கமுடியாதிருப்பதற்கு, அவரின் சாதிய பின்புலம் ஒரு காரணமாக இருக்கலாம் (கவனிக்க இருக்கும் என்று உறுதியாகச் சொல்லவில்லை) என்று எழுதியதற்கு, ஜெயமோகன் ஓடிவந்து வசை அது இதுவென்று பதிவுகள் தளத்தில் எழுதியிருந்தார். அப்படியே இதுதான் சாட்டென்று, ஈழத்தவர்கள் எல்லாம் எப்போது இந்த சாதி பார்ப்பதைவிட்டுவிட்டு படைப்புக்களை வாசிக்கப்போகின்றீர்கள் என்று வழமையான இலவச ஆலோசனை ஒன்றையும் வழங்கியிருந்தார். அசோகமித்திரன் இப்படிச்சொன்னதன்பிறகு ஜெயமோகன் தரவழிகள் என்னசொல்லப்போகின்றார்கள் என்று ஒருக்கா பார்ப்பம்?
I already posted these comments in ullal.blogspot.com. I want reply badly.... ensure that you reply for the posts...
Could everyone who posted a comment, reply why reservation system is still in place?
If we can't amend that, why are we claiming their supremacy?
We ourselves are accepting our defeat through reservation system. Therefore, they claim the advantage out of ours!
If I am ready for the open competition, why are we claiming the advantage of the reservation system?
I was arguing with my Brahmin neighbour and he asked me all the above questions, for which I had only minimal answers.
Please send your comments on the same. I believe, the government can abolish the reservation system.
பாலா கருத்துக்கு நன்றி!
டீஜே, முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். அந்த விஷயம் குறித்து எழுத என்னால் முடியாமல் போய்விட்டது. அசோகமித்திரன் தமிழர்களைத்தானே ஒட்டுமொத்தமாய் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜெயமோகன் தன்னை மலையாளியாய் அடையாளம் கண்டு நிம்மதிகொள்ளலாம். மற்றபடி நீங்கள் ஒரு குறிப்பிட்ட பார்வைக்கு சாதிய பிண்ணணி காரணமாய் இருக்கலாம் என்று சொல்ல்லும் கருத்திற்கும், அசோகமித்திரனின் இனவாத குற்றச்சாட்டிற்கும் வித்தியாசம் காணும் தலையெழுத்து ஜெயமோகனுக்கு ஏன் வரப் போகிறது!
சந்திரன் அவர்களே, உங்கள் பின்னூட்டத்தைப் படித்தேன். அது பற்றி என் எண்ணங்கள்.
சுதந்திரம் வந்தப் பிறகு வெகு விரைவில் இட ஒதுக்கீடு வந்தது. ஆரம்பத்தில் அம்முறையில் பயன் பெற்று க்ளாஸ்- 1 ஆக வந்த ஒரு அதிகாரியைப் பார்ப்போம். அவரைப் பொறுத்த வரை அப்போதே முன்னேறி விட்டார். இருப்பினும் அவருக்கென்று பதவி உயர்வுக்காக தனி லிஸ்ட். தன்னுடன் வேலைக்குச் சேர்ந்தவரை விட பிரமிக்கத் தக்க அளவில் அவர் பதவி உயர்வு பெறுகிறார். அவர் தன் பிள்ளைகளை நல்லப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைத்திருப்பார். அவர்களுக்கும் படிப்பு மற்றும் வேலை சமயங்களில் இலவச படிப்பு மற்றும் இட ஒதுக்கீடு வேலைக்கு மற்றும் பதவி உயர்வுக்கெனத் தொடர்ச்சியாக நடக்கிறது. அப்பிள்ளைகளின் பிள்ளைகள் இப்போது இலவசப் படிப்பு முடிந்து இட ஒதுக்கீடுடன் வேலை மற்றும் தனி ரேஞ்சில் பதவி உயர்வு என்றுப் போய் கொண்டேயிருக்கிறது. இப்போதைக்கு அது நிரந்தரமாகவே உள்ளது.
இதற்கிடையில் மண்டல் கமிஷன் சிபாரிசுகள் வேறு. பார்ப்பனரைத் தவிர மற்ற எல்லா சாதியினரும் இதில் பலன் பெறத் துடிக்கின்றனர். இவர்களுக்குள் பொருளாதரத் தகுதியை முன்னிறுத்த முயன்ற எம்.ஜி. ஆருக்கு பலத்த எதிர்ப்பு.
இப்போது பார்ப்பனர்கள் தாங்கள் ஒடுக்கப்பட்டதாக நினைப்பதில் என்னத் தவறு? அதைத்தான் அசோக மித்திரன் பிரதிபலித்திருக்கிறார்.
தகுதி அடிப்படையில் வேலை கொடுக்கக் கோரிக்கை எழுந்தால் பார்ப்பன ஆதரவு என்று எதிர்ப்பவர்கள் தங்களை அறியாமலேயே பார்ப்பனர்கள் திறமை மிக்கவர்கள் என ஒத்துக் கொள்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளத் தூண்ண்டுகிறது.
தங்களின் மேல் நிகழ்த்தப்படும் இச்செயல்பாட்டைப் பார்ப்பனர்கள் அவரவருக்குத் தோன்றிய முறையில் எதிர் வினை இடுகின்றனர். அவர்களில் சிலர் தங்கள் பார்ப்பனத் தன்மையை மறைத்துக் கொள்கின்றனர். ராமன், சீனுவாசன் என்றத் தங்கள் பெயர்களை முகமூடி மூலம் மறைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் எப்போதுமே அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவ்வாறில்லாது அடப்போடா ஜாட்டான் என்றுச் செல்லும் பார்ப்பனர்கள் உயர்ந்த நிலையிலேயே உள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Chandran,
I am surprised that you could have come to such conclusion based on your neighbour's opinion given that you are in favor of women getting 1/3 reservation for elected offices. If you put forth your reasons for a need in this case that can be a good starting point for the discussion on caste-based reservation.
Sundaramoorthy
P.S. I posted this comment in Aathirai's blog a couple of hours ago.
1. என்னுடைய பக்கத்து வீட்டு கிருத்துவ நண்பர் அடிக்கடி கூறுவது.
அவர் 1968 ஆம் வருடம் கிண்டியில் கெமிகல் பொறொயியல் கல்லூரியில் படிக்கும்போது
அவருடைய வகுப்பில் 23 பேர்.
இதில் 22 பேர் பார்ப்பனர்கள்.
மீதியுள்ள ஒரே பார்ர்ப்பனரல்லாதவர் இவர் (கிருத்துவர்.)
(1968 தமிழ்நாட்டின் மக்கள்தொகை எவ்வளவு ?)
2. டோ ண்டு சார் சொல்லாமல் விட்டது. -
அவர் சொல்வது போல இந்த BC , FC லிஸ்ட் ஒன்றும் மாறாத லிஸ்ட் இல்லை.
முன்னர் BC ஆக இருந்த சில வேளாள( உதாரணத்திற்கு சில முதலியார்) சாதிகள்
FC லிஸ்ட் இல் சேர்க்கப்பட்டு வெகு நாட்களாகின்றன. (அவர்கள் யாரும் இவர்களை போல
புலம்பவில்லை 68ஆம் வகுப்பில் அவர்கள் ஒருவர் கூட இல்லாத போதும். )
ஆகவே பார்ப்பனர்கள் மட்டும் ஒதுக்கப்படுவதாக சொல்வதும் தவறு.
3. சாதி ரிசர்வேஷனில் சில சமயம் ஜமீந்தார் மக்களும், எம்.பிக்களிம் மக்களும்
பயன் பெற்றது உண்மை. இது உண்மையில் ஏழை மாணவ்ர்களத்தான் பாதிக்கிறது.
4. இன்று தெருவெங்கும் பொறியியல் , மருத்துவ கல்லூரிகள் உள்ளதால் , கல்வியில் ரிசர்வேசன்
முறை ஹைஜாக் செய்யப்பட்டு வெகு நாட்களாகின்றன. மீண்டும் ஏழை மாணவர்கள்தான்
இன்று பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்
anbudan balaa,
vellala yezhaikalai nyabaga marathiyil vittu vitteergala ? vendumendre vitteergala?
ரோசா,
அமியின் பேட்டி எனக்கு (அவரை வாசித்ததில்லை நான்) அவர் மூத்த எழுத்தாளர் என்றபோதிலும் ஒரு அருவருப்பைத்தான் தந்தது. அந்த அருவருப்புக்கு நான் காரணம் என்று நினைத்தவை அவர் காரணங்கள் என்று சொன்னது ஒரு சராசரி வலைப்பதிவு மட்டையடியின் தரத்துக்கும் கீழே இருந்ததுதான்.[ஆனால் இதை ஒரு உணமையாக வே பார்த்தேன்] 100 ஆண்டுகளாக பிராமணர் துன்ப்பப்டுகின்றனர் என்று சொல்லும் அமி அதற்கு காரணம் "பிராமண-எதிர்ப்பு இயக்கம் " என்று ஒரு சூப்பர் புருடா விட்டிருந்தார்.இந்த நூறு ஆண்களில் நடந்த பார்ப்பனிய கோரமைகளை பார்க்க அசோகமித்திரனுக்கு கண் இல்லையோ? இந்த நூறு ஆண்டுகளிலேயே பார்ப்பனியம் "ஒபன் வகையறா" என்பதிலிருந்து "எலீட் வகையறா" என்று உருமாற்றம் பெற்றிருப்பதாகத்தான் நான் நம்புகிறேன். இந்த "எலீட் வகையால்" பிரச்சினை இங்கு முன்னைவிட அதிகம் ஆகிறதே ஒழிய குறைவதாகா எனக்குப் படவில்லை. அல்லது இதை ஒழிப்பது கடினம் என்று விளங்கிக்கொள்கிறேன். (உதாரணத்துக்கு , சமீபத்தி வந்த ஒரு செய்தி: உங்களுக்கு தமிழில் கோயிலில் மந்திரம் சொல்லவேண்டுமென்றால் , நீங்களே கோயில் அமைத்துக்கொள்ளுங்கள், நீங்களே உங்கள் இஷ்டப்படி மந்திரம் சொல்லிக்கொள்ளுங்கள் என்பது போன்ர ஆப்பு. ) இதை ஏன் ஒழிப்பது பிரச்சினை யாகின்றது என்றால், இந்த "எலீட் வகை" பார்ப்பனியம், முகத்துக்குகெதிரே ஏதும் பேசாத்து. சம்பந்தப்பட்ட ஆள் இல்லாதபோது "ஜாடை மடையாய்" காரியங்களை செய்யவல்லது , அல்லது "நேர்மையற்றது" , "புத்திசாலித்தனமானது".
அமி பாசையில் சொன்னால், குடுமி வைத்த பார்ப்பனியத்தை அடையளம் காண்பதை விட, மீசை வைத்த பார்ப்பனியத்தை அடையாளம் காண்பது , போரடுவது கடினமானது என்று விளங்கிக் கொள்கிறேன்.
அவர் "நாங்கள் யூதர் போல" என்று சொன்னதில் ஏதோ உளறல் இருந்ததாகப்பட்டாலும், சரியாக முதல் வாசிப்பின்போது எனக்கு விளங்கவில்லை.(அனாதையின் பதிவை வாசித்தும் பிடிபடவில்லை , ஆனால் ஏதோ வில்லங்கம் இருக்கும் என்று மட்டும் புரிந்து கொண்டேன்.)
ஆனாலும் "நானொரு ஒரு குரங்கு" என்று எனக்கு புரிந்தவரை ஒரு கவிதை எழுதி வைத்தேன். காரணம், அமி தனது ஜாதி அடையாளத்தை விட்டு துளியும் பிரிய மனமற்றவ்ர் என்று புரிந்து கொண்டேன். சமூகச் சீர்நிலைபற்றி கவலையில்லாத ஒரு மன்போக்கு கொண்டவர் என்று புரிந்து கொண்டேன்.
அன்னால், "எத்தனி வாசிப்புக்கும், விமர்சனங்களுக்குப் பின்னும்" , ஒருவரின் படைப்புக்கள் தரும் உலகத்தை மறுக்கமுஇடியாது என்ரு நீங்கள் சொல்வதை இன்றைய அளவில் ஏற்ல்கமுடியவில்லை.
உதாரணமாய் சுமூ சொன்ன ,அமியின் "ரிக்ஷா" என்ற கதையில் , அவர் ஒரு ரிக்ஷ்காரணைன் பிரச்சினைகளைத் தொட்டிருப்பார் என்றல் , சுரா பாசகியில் சொல்லவேண்டுமென்றால், அவனது திரைக்குள் எட்டிப்பார்க்காமல் , தட்டையான அளவில்தான் தொட்டிருப்பார் என்ற அளவில்தான் **ஊகிக்கிறேன்**. [வாசிக்காமல் கருத்து சொல்கிறாய என்று கேட்பவர்களுக்கு , இந்த பேட்டியிலிருந்து அமியை பின்னால் வாசித்தால் அங்குதான் போய்ச்சேரமுடியும்.] உதாரணமாய், ஒரு ரிக்ஷாத் தொழிலாளி காலங்காலமாய், ரிக்ஷா தொழிலாளியாகவே இருப்பதும் பார்ப்பனியமும் எப்படி இருக்கிறது என்று சொன்னால், அவந்து மூலP பிரச்சினையான தலித்து க்லித் பிரச்சினைத் தொடவேன்டியிருக்கும். அதைத் தொடாத படைப்பு ஒரு "தட்டையான" படைப்பு அல்லது "ஒதுங்கிச்செல்லும் " ப்டைப்பு ஆகிறது. இதற்கு அர்த்தம் , அமி "ரிக்ஷா" வில் திட்டிருக்கும் பிரச்சினை சாதரணமானது எனப்து அல்லா. முக்கிய மூலப்பிரச்சினை தொடும் சாத்தியங்களற்ற என்பதைத்தான் சொல்கிறேன். ரிக்ஷா ஓட்டுனன் ஏன் குடிக்கிறான் என்பதை, அமி சொல்வது போல் "பார்ப்னரல்லாதோர் குடியிலும்,இறைச்சியிலும் செல்வழிப்பவர்கள். மழை நாளுக்கு சேர்க்கத்தெரியாதவர்கள்" [[மழை நாளுக்கு சேர்ப்பது என்பது ஒரு ஜனநாயக எகானாமியை குலைக்கும் செயல் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு என்றாலும்]என்று பார்க்கும் ப்டைப்பாளி என்ன மசிரை படைப்பில் புடுங்கியிருப்பான் என்ற கேள்வி வருகிறது எனக்கு. இதை நீங்கள் படைப்பு வேறு, அதன் உலகம் வேறு, படைப்பாளியின் புரிதல் வெறு என்று சொல்வது எப்படி என்று புரியவில்லை[உங்கள் பாசையில் சொன்னால் குமட்டல் வருகிறது], குறைந்த ஒரு லாஜிக்கையாவது வைத்திருப்பீர்கள் என்று இப்பொதைக்கு நினைத்துக்கொள்கிறேன். எதோ பாத்து செய்யுங்கள்.
உதாரணமாய், இதே அச்சொகமித்திரன், இன்னொரு தலித் ப்டைப்பாளியை தன் வீடுக்குள் அனுமதிக்கும் போது , இந்த மன் நிலை அவரை நிச்சயம் தடுக்கலாம். அது வராண்டா வரை அனுமதிக்கும் அல்லது கால் வரை அனுமதிக்கும். அதையும் தான்டினால் , என்கோ ஒரு மூலையில் உதைக்கும் மனதுக்குள்ளே. {** இதை இங்கு ஊகிப்பாய்த்தான் வைக்கிறேன்**. இதை குற்றச்ச்சாஅட்டாய் பார்ப்பவர்களுக்கு என்னிடம் பதில்லை. நிரூபிக்கவும் சொல்லமுடியாது. ) இந்துதான் படைப்பாளியின் லட்சணம் என்று உறுதி செய்து கொள்கிறேன்.
உதாரணமாய், சுனாமி குறித்து , அது நடந்த முதல் 2 நாட்களுக்குள் எழுதிய ஜெயமோகனின், பிரச்சினையின் புலம்பல் கட்டுரையும், பிறகு ஒருவாரம் கழித்து வந்த , பதிவுகளில் வெளியான "ஆர் எச் எச் " கலந்த மட்டையடியையும் குறைக்கலாம்.
இதைத்தான் , இவர்கள் "பிரச்சினையின் மன உளைச்சலில் மட்டும்தான், உண்மையாய் எழுதுவார்கள் என்று நினைக்கிறே" என்று அமி பற்றி உங்கல் முன்னைய பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்.
[வளக்கம் போல களி சுட்டிருந்தால் மன்னிக்கவும்., இப்பொதைக்கு மசாலாவில் அவ்வளவுதான். மற்றவை பிறகு]
கார்த்திக்,
வணக்கம்.
ஒரு தகவலுக்காக, 15 வருட நினைவிலிருந்து. அசோகமித்திரனின் "ரிஷ்கா" கதை ரிக்ஷாக்காரனைப் பற்றியதில்லை. ஒரு வீட்டில் குழந்தை "ரிக்ஷா" என்று சொல்ல வராமல் "ரிஷ்கா" "ரிஷ்கா" என்று சொல்லும். குழந்தையின் அப்பா "ரிஷ்கா" இல்லை "ரிக்ஷா" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். கடைசியில், எங்கோ போவதற்காக "ரிக்ஷா"வைக் கூட்டிவரப்போவதாக மனைவியிடம் சொல்வார். மனைவி "ரிஷ்காஇல்லைங்க ரிக்ஷா" என்று சொல்லித் திருத்துவார்.
ஒரு விஷயத்தை இன்னொருவருக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்க முயற்சிக்கப் போய் பிறகு தன்னையே அந்த விஷயம் தொற்றிக் கொள்ள நேரிடும் நிலையை அற்புதமாக சொல்லும் கதை. (நான் "ரிக்ஷா" என்று சரியாகச் சொன்னேனா?")
நீங்க ரொம்ப நாளா அடிக்கடி வசந்திடம் பேசுவதால் "குமட்டல்" உங்களைத் தொற்றிக்கொண்ட மாதிரி :-)
சம்பந்தமில்லாத ஒரு துணுக்கு: எங்க ஊர்ல வீட்டுல ஒரு பையன நெல் அறுப்புக்கு ஆள் கூப்பிடச் சொல்லி அனுப்பனாங்க. அவன் எல்லார் வீட்டிலியும் போய் வால் அறுப்புக்கு வரச் சொல்லி கூப்பிட்டிருக்கிறான். தெலுங்கில் "கோத" என்றால் அறுவடை; "தோக" என்றால் வால்.
கார்த்தி போட்டு கலக்கியிருக்கீங்க!
//குடுமி வைத்த பார்ப்பனியத்தை அடையளம் காண்பதை விட, மீசை வைத்த பார்ப்பனியத்தை அடையாளம் காண்பது , போரடுவது கடினமானது என்று விளங்கிக் கொள்கிறேன்.//
சூப்பர் மாமு! இதைத்தான் பெரியார் 'லௌகீக, வைதீக' உருவகத்தில் சொன்னார். நானும் வைதீக பார்பொஅனியத்தை(உதாரணமாய் டோண்டு, அசோகமித்திரனை கூட) மிக பெரிய ஆபத்தாய் பார்க்கவில்லை. ஆனந்த் போன்றவரகளே மிகவும் ஆபத்தானவர்கள். நவ பார்பனையமே மிகவும் ஆபத்தானது என்று நினைக்கிறேன்.
அப்புறம் நான் சொல்ல வந்தது நீங்கள் குறிப்பிட்டது போல் "படைப்பு வேறு, அதன் உலகம் வேறு, படைப்பாளியின் புரிதல் வெறு " என்பது அல்ல. அப்படி நான் சொல்லவில்லை. அப்படி புரிந்து கொள்ளப்படும் ஆபத்து இருக்கிறது. உதாரணமாக பத்ரி (சுமு பதிவின் பின்னூட்டத்தில்) அப்படி சொல்லியிருக்கிறார். அருளும் அப்படி கிட்டதட்ட தொனிக்கிறார். நான் சொல்ல வந்தது அது அல்ல.
படைப்புக்கும், படைப்பாளிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும். படைப்பாளியின் பார்வை அதில் நிச்சயம் வெளிப்பட்டிருக்கும். நான் அழைப்பு விடுவது அது குறித்து சுயநினைவுடன் கூடிய ஒரு விமரசன வாசிப்பைத்தான். நம் வாசிப்பின் மூலம் கிடைப்பதற்கு ஏதாவது இருக்கும். அது என்ன என்று கேட்டால் மிகவும் குழப்பமான முறையில் பதில் சொல்ல வேண்டும். இந்த பிரச்சனையை பின்னால் விரிவாய் அணுகி என் கருத்தை சொல்ல நோக்கமிருக்கிறது. இப்போ இதை மட்டும் சொல்கிறேன்.
உதாரண்மாய் "...ப்டைப்பாளி என்ன மசிரை படைப்பில் புடுங்கியிருப்பான் என்ற கேள்வி வருகிறது எனக்கு" என்று கேட்பதுதான் எனக்கு ஒப்புதலில்லை. உதாரண்மாய் நமது இயக்குனர் மகேந்திரன் மிக மோசமான முறையில் தீபா மேத்தாவை திட்டி துக்ளக்கில் பேசியிருப்பார். அதை பார்த்தால் இந்த மனிதன் 'என்ன மசிரை படைப்பில் புடுங்கியிருப்பான் என்ற கேள்வி'தான் மீண்டும் வரும் ஆனால் புடிங்கியிருப்பது என்னவோ நிஜம். அதைத்தான் சொல்லவந்தேன். அதாவது நாம் ஒரு விமர்சன வாசிப்பை கொள்ளவேண்டும். அதேநேரம் "ப்டைப்பாளி என்ன மசிரை படைப்பில் புடுங்கியிருப்பான' என்று கேட்டால் வாசிக்கமலேயே குப்பையில் போட்டுவிடலாமே! இல்லை, வாசிக்க வேண்டியிருக்கிறது, வாசித்துவிட்டு விமரசிக்க வேண்டும் என்பதுதான் நான் சொல்ல வருவது.
ஜெயகாந்தனை வாசிக்க வேண்டும், வாசித்து விட்டு விமர்சிக்க வேண்டும். ஜேஜே சில குறிப்புகளை வாசிக்க வேண்டும், வாசித்துவிட்டு விம்ர்சிக்க வேண்டும். இதில் என்ன கிடைக்கும் என்று கேட்டால், என்னேன்னவோ கிடைக்கும். ஏனேனில் படைப்பாளியில் ரோல் ரொம்ப கொஞ்சம் மாமு! நாமதான் படைப்பாளி.
"அவர் 1968 ஆம் வருடம் கிண்டியில் கெமிகல் பொறொயியல் கல்லூரியில் படிக்கும்போது அவருடைய வகுப்பில் 23 பேர். இதில் 22 பேர் பார்ப்பனர்கள்."
1963-ல் நான் கிண்டிப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த போது, மொத்தம் 280 புது மாணவர்களில் பாதிக்கு மேல் பார்ப்பனரே. அதில் யாரும் எந்த ஒதுக்கீட்டிலும் வரவில்லை. இது "மற்றவர்கள் என்னதான் தலைகீழாக நின்றுத் தண்ணீர் குடித்தாலும் பார்ப்பனர் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" என்று நான் பல முறை, பல பதிவுகளில் எழுதியதை நிரூபிக்கிறது.
ஆகவே பார்ப்பனர்களே, உங்கள் ஜாதியைக் குறித்து வெட்கப்பட ஒன்றும் இல்லை. தீண்டாமைக் கொடுமைகளை இதை விடப் பெரிய அளவில் செய்த, இன்னமும் செய்கிற மற்ற உயர் ஜாதியினரே தங்கள் ஜாதிகளைப் பற்றிப் பெருமையாக இருக்கும் போது உங்களுக்கு என்ன வந்தது. மற்றவர்களின் போற்றலும் தூற்றலும் உங்களை ஒன்றும் செய்யாது. வெளிப்படையாக இருங்கள். அதை விடுத்து உங்கள் பார்ப்பனிய வேர்களை மறைத்து மற்றவர் புகழ்வதற்காக வாழ்ந்தால் எல்லோரும் உண்மை அறிந்தவுடன் உங்களைத்தான் குதிரையேறுவார்கள். தேவையா இது? இவ்வளவுதான் என்னால் தற்சமயம் கூற முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரோசா,
நல்லது. சொல்ல வந்ததில் ஒரு இடைவெளி இருப்பதாக உணர்கிறேன். மாலையிலெ கிரிக்கெட் பிராக்டிஸ்
முடித்து இரவில் எழுதுகிறேன். நன்றி
ரோசா, சு.மூ இன் பதிவை பார்த்தேன். உங்களை இந்த விவாதத்தில் இழுத்து டிஸ்டர்ப் செய்ய விரும்பவில்லை. இதை மேற்கொண்டு நீங்கள் விரிவாக எழுதும்போது எழுதுகிறேன்.
இப்போதைக்கு "வாசிக்க வேண்டும்" என்று சொல்வதற்கு நான் எதிரிஅல்ல.
எஞ்சாய் மாமு!!!
வசந்தோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன். ஆனந்த் போன்ற நவபார்பனீயம் பேசுபவர்கள் தான் ஆபத்தானவர்கள். நான் கேள்விப்பட்டவரை ஆனந்த் தலித் சார்பாளர் என்று சொல்லிக் கொண்டாலும், அவரின் எழுத்துகளில் தொக்கி நிற்கும் வெறி மாற்ற இயலாததாக இருக்கிறது. அமியின் பேட்டிக்கு எனக்கு தெரிந்தளவு பத்திரிக்கையில் எதிர்ப்பு வந்ததென்றால், அது குமுதம் ரிப்போர்டரில் விடுதலை ராஜேந்திரன் எழுதியது தான். ஒரு வேளை தலித் இதழ்களில் மே மாத தொகுப்பில் வரலாம். குமுதமின் சந்தாராக வேண்டிய கட்டாயமிருப்பதால், அச்செய்தியை அப்படியே இங்கே பதிகிறேன். சுட்டி - http://www.kumudam.com/reporter/mainpage.php
/*‘‘தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள், யூதர்களைப் போல நடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர்களைப்போல உணர்கிறார்கள். இன்றைக்கு பிராமணர்கள் அரசு வேலையை இழந்து, கடுமையாக உழைத்து தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தங்களுடைய அதிகாரங்களை இழந்து பின்தங்கியுள்ளார்கள். பிராமண எதிர்ப்பு இயக்கங்களுக்கு பயந்து, குடுமி வைப்பது, பூணூல் போடுவதைத் தவிர்த்து, தங்கள் அடையாளங்களை இழந்துவிட்டனர். பிராமண மொழி பேசுவதுகூட குறைந்துவிட்டது. திரைப்படத்துறையிலும் அவர்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. பிராமணரல்லாதவர்களிடம் பணம் சேரும்போது, அவர்கள் மது, புலால் உண்டு அழித்துவிடுகிறார்கள். ஆனால் பிராமணர்கள் எதிர்காலத்திற்காகச் சேமிக்கிறார்கள்’’ என்று ‘அவுட்லுக்’ வார இதழுக்கு அளித்த பேட்டியில் பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் கூறியுள்ளார். அவர் பேட்டியின் ஒரு பகுதிதான் இதழில் வெளியாகியுள்ளதென்றாலும் முழுப் பகுதியும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தக் கருத்துக்கள், திராவிட இயக்கத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
அசோகமித்ரனின் கருத்து பற்றி பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ‘விடுதலை’ ராஜேந்திரனிடம் கேட்டோம். மனிதர் பொங்கியெழுந்துவிட்டார். அவருடன் பேசியதிலிருந்து...
‘‘பிராமணர்களை யூதர்களோடு ஒப்பிட்டுள்ளார், அசோகமித்ரன். அது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். யூதர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இஸ்ரேலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த யூதர்கள், மெல்ல மெல்ல அந்த நாட்டு மக்களைத் துரத்தியடித்தனர். இன்றைக்கும் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் நிதித்துறையைக் கவனிக்கும் அதிகார மையத்தில், யூதர்கள்தான் இருக்கிறார்கள். அதுபோலத்தான் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கும் பிராமணர்கள், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் ஊடகங்களில் இன்னமும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களின் புனித நூல் என்று சொல்லப்படும் மனு தர்மத்தில் ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே’ என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட இயக்கம் உருவானது. நியாயத்தைக் கேட்பதே தவறு என்கிறாரா, அசோகமித்ரன்?
இன்றைக்கு பிராமணர்கள் அதிகாரமற்றவர்களாக இருப்பதாக அவர் சொல்கிறார். அதுவும் தவறுதான். மாநில அரசின் இடஒதுக்கீடு வேண்டுமானால் பிறருக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால் மத்திய அரசின் உயர் பதவிகள், வங்கி, பன்னாட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகளில் கணிசமான அளவு பிராமணர்களே உள்ளனர். மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று மண்டல் கமிஷன் சொன்னதும், பொதுத்துறை நிறுவனங்கள் அவசர அவசரமாகத் தனியார்மயமாக்கப்படுகின்றன.
தனியார்மயம் என்றாலே அதில் முழு லாபம் அடையப்போவது, பிராமணர்கள்தான். நிதித்துறையில் இன்றைக்கு பிராமணர்களின் லாபிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், உலக வங்கி, வெளிநாட்டு வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள், பெரும்பாலும் பிராமணர்கள்தான். மத்திய அரசு இலாகாகளில் இப்போதும் அதிகாரம் செலுத்துபவர்கள் பிராமணர்கள்தான். உண்மை இப்படியிருக்க... அதிகாரம் போய்விட்டதாகப் புலம்பியிருக்கிறார்! தமிழ்நாட்டில் மாற்றம் வந்திருப்பது என்பது உண்மை. ஆனால் மற்ற மாநிலங்களில் இன்னமும் பிராமணர்களின் ஆதிக்கமே இருக்கிறது.
எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் இருக்கும் அசோகமித்ரன், உள்ளுக்குள் சாதிய உணர்விலிருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். பூணூல் போடுவது, குடுமி வைப்பது, கலாசார குறியீடு என்று சொல்லியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சின்னங்களை அணிவதன் மூலம் மற்ற சமுதாயத்தினர் தங்களுக்கு அடங்கி அடிமைகளாக வாழ வேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. பெரியார் வார்த்தைகளில் சொல்வதானால், ‘‘தெருவில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் பத்தினி வாழும் வீடு’’ என்று எழுதி வைப்பது போன்றதாகும் இது. மற்றவர்களை இழிவுபடுத்தும் செயலை எப்படி அடையாளக் குறியீடு என்று சொல்ல முடியும்?
பெரிய கோயில்களில் கர்ப்பக்கிரகத்துக்குள் சென்று அர்ச்சனை செய்ய பிராமணர்களைத் தவிர, யாராலும் முடியாது. பிற சமுதாயத்தினர் சென்றால் தீட்டு ஏற்பட்டுவிடுமாம். கிருபானந்த வாரியாரோ, குன்றக்குடி அடிகளாரோ கூட சென்று அர்ச்சனை செய்ய முடியவில்லை. சமுதாயத்தில் உயிர் நாடியாக விளங்கும் கோயில்களில் இன்னமும் அவர்களின் ஆதிக்கமே இருக்கிறது. குடுமி வெட்டுதல், பூணூல் அறுத்தல் போன்றவை போராட்டங்களாக ஒருபோதும் தமிழகத்தில் நடந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், பெரியார் கூட்டம் நடக்கும் வழியாக சாமி ஊர்வலங்கள் அமைதியாக நடந்துள்ளன.
சிலப்பதிகாரத்தில் மதுரை பற்றி எரியும்போது, ‘‘பிராமணர்களையும் பசுக்களையும் ஒன்றும் செய்யக் கூடாது’’ என்று கண்ணகி சொன்னதாகக் கூறப்பட்டுள்ளது. மன்னன் செய்த தவறுக்கு மக்களை எரித்ததே தவறு. அதிலும் பிராமணர்களுக்கு ஏன் விதிவிலக்கு? அவருடைய வாதப்படியே எடுத்துக் கொண்டாலும், தமிழர்களின் இலக்கியத்திலும், கலாசாரத்திலும் பிராமணர்களின் ஆதிக்கம் எவ்வளவு தூரம் இருந்துள்ளது, என்பதைத்தான் அது காட்டுகிறது.
அடித்தட்டு மக்கள் மேலே எழுந்து வரும்போது, மேல்தட்டு மக்களின் ஆதிக்கம் குறைவது சகஜம்தான். அப்படியானால் அடித்தட்டு மக்கள் தங்களுக்குச் சமமான நிலைக்கு வருவதை நியாயமில்லை என்கிறாரா அசோகமித்ரன்? இதை அவர் விளக்க வேண்டும்.
பிராமண மொழி பேசுவது குறைந்துவிட்டதாகச் சொல்வதும் தவறு. இன்றைக்கும் டி.வி.க்களில் பிராமண மொழிதான் பேசப்படுகிறது. அதுதான் பெருமைக்குரியதாகவும் கருதப்படுகிறது. எத்தனை நிகழ்ச்சிகளில் சேரி மொழி பேசப்படுகிறது? அப்படியே பேசினாலும் அது தரம் குறைந்ததாகவே கருதுப்படுகிறது. இதையெல்லாம் மறைக்க முயற்சி செய்கிறார் அசோகமித்ரன்.
இப்படிப்பட்ட மோசமான வகுப்புவாதப் பார்வையை விட்டுவிட்டு, இன்னமும் வளரமுடியாமல் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கிடைக்க வழி செய்வதே நல்ல பண்பாக இருக்கும். அதைவிட்டுவிட்டு அதிகாரத்தை இழந்துவிட்டதாகச் சொல்லிப் புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை!’’ என்று முடித்தார். */
நன்றி நாரயணன்.
எனது சில பின்னூட்டங்கள்.
http://thoughtsintamil.blogspot.com/2005/04/blog-post_10.html#comments
//அப்புறம் இன்னொன்று வினோபா, திராவிடக் கட்சிகளின் மேல் (நீதிக்கட்சி தொடங்கி) நீங்கள் வைப்பது விமர்சனமற்ற ஒரு டிப்பிக்ல் தீண்டாமை மனப்பான்மை. இதைத்தான் சோவும், ஜெயகாந்தனும் செய்கிறார்கள்.//
தங்கமணி, நீதி கட்சி போலவே காங்கிரஸும் தொடக்க காலத்தில் பிரிடீஷ் ஆதரவு அமைப்புதான். காங்கிரஸ் கூட்டங்களில் ஜார்J மன்னனை புகழ்ந்து ராஜ வாழ்த்து பாடிவிட்டே தொடங்குவதுண்டு. வினோபா நீதி கட்சி பற்றி சொன்ன மற்றவைகளும் காங்கிரஸுக்கும் பொருந்தும். காங்கிரஸுக்கு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நீதிகட்சிக்கு மாறாமலிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் இதை கூட வினோபா நேர்மையாய் செய்யவில்லை. ஏனேனில் நீதிகட்சியை திட்டும் அதே தொனியில் பின்னாள் சுயமரியாதை இயக்கத்தையும் சுட்டுகிறார். ஆனால் பெரியாரின் முந்தய காங்கிரஸ் வாழ்க்கையையும், அதில் கொண்ட ஈடுபாடு போராட்டம், எல்லாவற்றையும் விட முக்கியமாக நீதிகட்சியினராலேயே (காங்கிரஸில் இருந்த போது) வசை பாடபட்டதையும் சொல்லிவிட்டு அல்லவா செய்ய வேண்டும். பெரியார் இயக்கத்தாலேயே 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' தமிழில் முதலில் வந்தது தொடங்கி கம்யூனிஸ்டுகளுடன் முடிந்த தேனிலவையும் சொல்லிவிட்டு அல்லவா செய்ய வேண்டும்.
பெரியார் இந்த எல்லா விஷயத்தையும் தொடக்க காலம் தொட்டு தொடங்கி எம்ஜியார் பிரிந்த நிகழ்வு வரை, கடைசி நாட்களில் ஒரு கூட்டத்தில், பேசியிருக்கிறார். முடிந்தால் படிக்கவும்
http://jannal.blogspot.com/2005/04/blog-post.html
1. கீழே உள்ளது மாலனின் இன்னொரு பதிவில் நான் எழுதியது. காலையில் எழுந்து அதைத்தான் முதலில் படித்து பின்னூட்டமிட்டேன். அதற்கு பிறகு சிவக்குமாரின் பதிவை படித்தேன். நான் வழக்கமாகவே சொல்லி வருகிற சிவக்குமாரின் நேர்மையினமைக்கு உதாரணமாக அவர் எழுதிய முதல் சில பத்திகளை குறிப்பிடலாம். ஆயினும் முதலில் எழுதிய கருத்தில் மாற்றமில்லை. அது கீழே.
"சிவக்குமாரை நான் எவ்வளவு எதிர்கிறேன் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அவருடய குறிப்பிட்ட பதிவு குறித்து மாலன் சொல்வது எனக்கு ஒப்புதலாயில்லை. சிவக்குமார் எதிர்வினை வைத்ததற்கு உள்நோக்கம், அல்லது மாலன் கூறியது போல் ஜெயகாந்தன் மீதான விமரசனம் என்று காரணம் இருக்கலாம். அதை விமர்சிக்கலாம். ஆனால் அதை நோய்கூறு என்று சொல்வதெல்லாம் ரொம்ப அதிகம். சிவக்குமார் பதிவிற்கு நேரடியாய் பதில் சொல்வதை விட அதிகமாக செய்வது தேவையில்லை என்று எனக்கு தோன்றுகிறது. மாலன் நிலமையில் நான் அதை மட்டுமே செய்திருப்பேன். அதை மீறி இதை சூழலின் நோய்கூறு என்று சொல்லி மாலன் எடுத்த முடிவுகள் எல்லாம் அதீதமாகவே படுகிறது. "
2. எனது பழைய பின்னூட்டம் சிவக்குமாரின் பழைய பதிவை *மட்டும்* படித்தபின் மாலனின் இந்த பதிவை படித்து எழுதியது. பிறகுதான் பின்னூட்டமாய் மாலன் (pks pathivil)எழுதியதையும் சிவக்குமாரின் பதிலையும் படித்தேன். சிவக்குமாரின் பதில் அவரது வழக்கமான பாணி பதில். அது மாலனை நிச்சயம் புண்படுத்தியிருக்கும் என்பதும், அந்த பதிலின் நோக்கமாக அது பின்னிருப்பதும் புரிகிறது. ஆனாலும் அதை சொல்லும் உரிமை சிவக்குமாருக்கு இருப்பதையும், அதை இன்னமும் சூழலில் ஆரோக்கிய கேடாக என்னால் பார்க்க முடியாமல் இருப்பதையும் சொல்ல விரும்புகிறேன்.
இங்கே சூழ்நிலை எனக்கு கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. பொதுவாய் என் போன்றவர்களின் *கருத்தை முன்வைத்த* தாக்குதலகளை தனிப்பட்ட தாக்குதல்களாய் திரித்து பேசுவது சிவக்குமாரின் வழக்கம், இங்கே அவருக்கு தர்ம அடி விழுந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் சொன்ன கருத்துக்களை சொல்ல அவருக்கு உரிமை இருப்பதையும் மனநோய்கூறாகவோ என்னால் இன்னமும் கூட பார்க்க முடியவில்லை என்று சொல்வதுதான் எனக்கு நேர்மையாய் தெரிகிறது, அதையே சொல்கிறேன் - இந்த நேர்மையை சிவக்குமார் எனக்கு எந்த கட்டத்திலும் காட்டமாட்டார் எனினும்.
இது இப்படியிருக்க மாலன் இந்த பதிவின் தொடக்கத்தில் சிறுப்பத்திரிகை சண்டையை முன்வைத்து வலைப்பதிவை ஒப்பிட்டு பேசியவை எல்லாம் க்ளிஷேயாகிப்போன புளித்து போன கருத்துக்கள். இது வரை பல சண்டைகள் கருத்துலகில் நடந்திருக்கிறது. அதிலிருந்து என்ன பாடத்தை கற்றுகொண்டு, எப்படி ஈகோவால் கிட்நாப் செய்யப்படாமல் ஆரோக்கியமான முறையில் சண்டைபோடலாம் என்று யோசிக்கலாம். தர்க்கம் என்பதிலேயே இருக்கும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து யோசிக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இன்னும் சண்டை போடுவதே சூழலுக்கு கேடு என்பது போன்ற கவைக்குதவாத கருத்துக்கள்தான் வந்து விழுகின்றன.
சிவக்குமார் என்ற ஒருவர் சொன்ன விஷயத்திற்காக வலைப்பதிவுகளையே குற்றம் சொல்வதும், புறக்கணிப்பது நியாயமானதாய் தெரியவில்லை. பொதுக்களத்தில் செய்லாற்ற வந்த பிறகு இவைகளை எதிர்கொள்வதே விவேகமானது. மௌனமாய், புறக்கணிப்பாய் கூட அதை செய்யலாம். ஏற்கனவே கருத்து சொல்லிவிட்டதால் மீண்டும் வந்து சொன்னேன், இதுவும் கருத்தின் அடிப்படையிலேயெ எழுதப்பட்டுள்ளது.
மற்றபடி எனக்கு மாலன் எடுத்த முடிவு வருந்தத் தக்கது. புண்படும்போது உதாசீனம் செய்து, தன்னை ஆதர்சமாய் நினைத்திருக்கும் (எனக்கு அல்ல) மற்றவர்களுக்கு உதாரணமாய் இருப்பதே சிறந்தது, அதையே வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி!
http://poetraj.blogspot.com/2005/04/blog-post.html
//ரஜினி ராம்கி என்ற அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு, ஜெ. ராம்கியாக ஆசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். //
இப்படியே எல்லோரும் சொல்லிகொண்டு அதையும் ஒரு பாராட்டாகவும் சொல்லிகொண்டிருயப்பது ரொம்ப ஓவராய் இருக்கிறது. ரஜினி ரசிகன் என்ற 'அடையாளத்தை' எப்படி துறக்க முடியும், அதுவும் தனது பெயரில் சேர்த்துகொண்ட ரஜினி அடைமொழியை மறைப்பதன் மூலம் எப்படி துறக்க முடியும் என்பதற்கு அபத்தமாக கூட எதுவும் விடை தெரியவில்லை. ரஜினி ராம்கி என்ற பெயரை வெறும் ராம்கி என்று வைத்து கொண்டிருப்பதன் மூலம், ரஜினி ரசிகர் என்ற அடையாளத்தை மறைத்திருக்கிறாரே ஒழிய துறந்திருக்கிறார் என்று சொல்லமுடியாது. இப்படி மறைப்பதும், அப்படி மறைப்பதையே நடுநிலைமைக்கு அத்தாட்சியாய் சொல்வதும் நேர்மைகுறைவாகவே தெரிகிறது. நேர்மைகுறைவையே நேர்மை என்று தர்க்கம் செய்ய முடிவது (நீங்கள் செய்வதாக சொல்லவில்லை) தர்க்கத்தை எப்படி வளைக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம்.
கடைசியாய் இந்த விவகாரம் குறித்து ஒரு கருத்து.
ஆனந்தை சந்தேகப்படுவது குறித்து நான் வினாவெழுப்பியது குறித்து..
இது போன்ற சந்தேகங்களை எழுப்புவதில் உள்ள பிரச்சனை என்னவெனில், சந்தேகம் தீர்ந்தவுடன் யாரும் (இப்போது) தீர்ந்துவிட்டதை சொல்லி, மூல விஷயம் (அதாவது அசோகமித்திரன் பேசியது) குறித்து பேசுவதில்லை. அந்த நேரத்தில் இப்படிபட்ட சந்தேகங்களை எழுப்புவதுடன் நின்றுவிடுகிறது. அதையே இப்போதும் பார்கிறேன். பொதுவாக இது போன்ற சந்தேகங்கள் அந்த சமயத்தில் சமாளிக்கவும், தீவிரமான முறையில் முக்கிய விஷயம் குறித்து கருத்து சொல்லாமல் திசை திருப்பும் வசதிக்காகவும் சொல்லப் படுவதாய் நினைக்கிறேன். இல்லையெனில் அப்போது சந்தேகப்பட்டவர்கள், இப்போது தெளிந்த பின் கருத்து சொல்லியிருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வாரகாலத்தில் விஷயம் பழசாகிவிடுவதுடன், பேச வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விடுகிறது. மற்றபடி என் கருத்துக்களை சொல்லிவிட்டதால் இது குறித்து எழுத எதுவும் இல்லை. ஆனந்தை முன்வைத்து வேறு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
சொல்ல விடுபட்டது. எனது இந்த பதிவுக்கு பதிலாக தங்கமணி ஒரு பதிவை தயார் செய்து எனக்கும் அனுப்பியிருந்தார். ஏனோ அதை பதிப்பிக்கவில்லை.
http://desikann.blogspot.com/2005/04/blog-post_13.html
கிச்சா, சுட்டிக்கு நன்றி. முதல் மூன்று அத்தியாயங்களை படித்தேன். படித்தவரை தேசிகன் அளித்த லிங்கைவிட சற்று கறாரான தளத்தில் கட்டுரை செல்கிறது. (ஜெயலலிதாவைவிட கலைஞர் குறைவாகத்தான் ஊழல் செய்தார் என்பதுபோல்.) இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக (அது குறித்த விவரங்களை அறிய முயலவில்லை) ஜல்லியடிக்க பட்டிருப்பது சுவாரசியமாய் இருக்கிறது. இது போல் இன்னும் முக்கிய ஜல்லிகளை படித்திருக்கிறேன். உதாரணமாய் இந்தியாவிலிருந்து 'கணித்' என்ற பெயரில் ஒரு கணித இதழை பார்க்க நேர்ந்தது, இன்றய குவாண்டம் மெகானிக்ஸிற்கு தேவையான கணித சமாச்சாரங்கள் வேதங்களில் இருப்பதாக கட்டுரை செல்கிறது. கட்டுரையை ஆழமாய் படித்தால் மீண்டும் தேசிகனின் பதிவின் தரத்திலேயே அதுவும் இருக்கிறது. இப்படித்தான் சமஸ்கிருதம் செயற்க்கை அறிவிற்கான மொழி என்று சொல்லி ஒரு கட்டுரை artificial intelligence குறித்த ஒரு இதழிலேயே ஜல்லியடிக்கப் பட்டிருக்கிறது. கூர்ந்து படித்தால் இதே போன்ற புளுகு. இது குறித்து நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதனால் உங்களுக்கு பிடித்த அறிவியல் கணித சமாச்சாரம் ஏதாவது சொல்லுங்கள். நம் தமிழர் மரபை போற்றும் வகையில் சங்க இலக்கியத்தில் அதை கண்டுபிடிப்போம். என்ன தேடுகிறோம் என்று தெளிவாய் இருந்தால் கண்டுபிடிப்பது கடினமே அல்ல. கோக் பெப்ஸி கூட அகப்படும். உண்மையிலேயே இது குறித்து (ஜல்லி அடிக்காமல்) தீவிரமாய் பேச விரும்பினால் தெரிவிக்கவும். பிறகு முயற்சிக்கிறேன்!
http://karupu.blogspot.com/2005/04/blog-post_14.html#comments
அப்பாடி, இப்பதான் எல்லா பின்னூட்டங்களையும் தின்னு முடிச்சேன். இதற்கு கறுப்பிக்கு நன்றி.
சுமு சொன்னதில் பாதியாய் கறுப்பியின் கடைசி வரியும், மாண்ட்ரீஸர், இகாரஸ் சொன்னதுடனும் பெருமளவு ஒத்து போகிறேன். ஆனால் அவர்களும் (மாண்ட் + இகாரஸும்) கூட ரஜினியை மற்றதுடன் ஒப்பிட்டு வக்காலத்து வாங்கிகிறார்களே(அதை நானும் ஒப்புகொள்கிறேன்) தவிர, ரஜினியையே நேர்மறையாய் பார்க்க முடியவில்லை. இங்கேதான் நான் வேறுபடுகிறேன். என்ன இருந்தாலும் ரஜினி ட்ரெண்டும் மாறி 'ஆரோக்கியமாக' வேண்டும் என்பதாகவே அவர்கள் கருத்து இருக்கிறது. அதுதான் எனக்கு புரியவில்லை.
http://arunhere.com/pathivu/?p=17
என் பார்வையில்..
கதையின் துவக்கம் சுவாரசியாமாக இருந்தது. பிம்பங்களுக்கு உயிர்கொடுப்பது என்பது நல்ல கற்பனை. ஆனால் அந்த கற்பனையை வளர்த்து அதன் சிக்கல்கள் எதற்குள்ளும் கதை பயணிக்கவில்லை. அந்த கற்பனை உத்தி வளராமல், மிகவும் சாதாரணமாக குமுதம் ஒரு பக்க கதை உத்தியுடன் அற்பமாக கதை முடிந்து விடுகிறது. மேலும் அறிவியல் புனைக்கதை என்று சொல்லும் வகையில் அறிவியல் சம்பந்தமான கருத்தாக்க கற்ப்னையும் சிறிதும் இல்லை. (பிம்பங்களுக்கு உயிர் தருவது ஒரு சாதாரண கற்பனையே தவிர அறிவியல் கருத்தாக்கம் எதனின் நீட்சியான கற்பனை இல்லை. உதாரணமாய் யோசிப்பவர் என்று ஒருவர் கூட அப்படி ஒரு கற்பனைய முன் வைத்து கதை எழுதிஇருப்பார்.) கதையை படிக்க துவங்கிய போது நல்ல கதை என்று சொல்லும் மனநிலையில் இருந்தேன். ஆனால் இது மிக சாதாரணக் கதை. மாண்ட்ரீஸரை கதையை நிராகரித்து இதை தேர்ந்தெடுத்தது சுஜாதாவின் ரசனையின்/அறிவின் எல்லையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
Post a Comment
<< Home