ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Sunday, June 05, 2005

கழுதைப்புலி வாழுமிடத்தில்...

சிவக்குமாரின் தளத்தில் நான் எழுதி நீக்கிய பின்னூட்டத்தை, அவர் மீண்டும் இட்டு முதன் முறையாய் நான் எழுதிய ஒன்றிற்கு நேரடியாய் 'பதில்' சொல்லியுள்ளார். வழக்கம் போல விஷயத்தை திரித்து நான் எழுதியதை தனக்கு சாதகமாய் பயன்படுத்தும் அற்பத்தனத்தில் ஈடுபடுள்ளதால், நான் ஏதோ நிதானமின்றி எழுதி நீக்கிவிட்டதை, அவர் கையும் களவுமாய் இட்டது போல் பேசுவதால் இதை பதியவேண்டிய கட்டாயமாகிறது.

அவர் தளத்தில் முதலில் நான் எழுதியது.


"மீண்டும் நன்றி பிகேயெஸ். இதைவிட விஷம் பொருந்திய, கயமைத்தனமான, பொய்யான, போலியான இன்னும் பல பல பரிமாணங்கள் கொண்ட எழுத்தை என் வாழ்வில் படித்ததில்லை. இதை பதிவாக தந்ததற்கு மிகவும் நன்றி. இனி உங்களை படிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்காது என்று தோன்றுகிறது."

அதற்கு பின்னர் பின்னூட்டமாய் என் பதிவில் எழுதியது,

"சற்று முன்னர் சிவக்குமாரின் பதிவை படித்தேன். இன்னும் குமட்டல் நிற்கவில்லை. வீட்டில் துணைவியுடன் பேசவும், மகனுடன் கொஞ்சவும் கூட முடியவில்லை. உண்மையில் இதை மீண்டும் மீண்டும் சொல்ல மிக மிக போரடிக்கிறது. இப்படியும் ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா? அடுத்தவர்கள் எழுதியதை முழுவதும் திரிப்பதில், அதை வேறாய் மாற்றி எழுதவும்.. இவர் செய்வதை விளக்க ஒரு சரியான வார்த்தை கூட என்னிடம் இல்லை. இப்படியும் கேவலமான ஒரு பிறவி இருக்க முடியுமா என்று வியந்துகொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் கூட சளைக்காமல் தொடர்ந்து இந்த மனிதர் இதை வருடக்கணக்கில் (நான் அறிந்து) செய்து வருகிறார். எனக்கு சிவக்குமார் பற்றி, இணையத்தில் அவர் எழுதியதை தவிர வேறு எதுவும் தெரியாது. ஒருவேளை அவர் சொந்த வாழ்க்கையில், வேலையில் நேர்மையானவராய் கூட இருக்கலாம். நண்பர்களுக்கு உண்மையாய் கூட இருக்கலாம். ஆனால் எழுத்தில்/தர்க்கத்தில் இப்படி ஒரு நேர்மையின்மை(வேறு வார்த்தை கிடைக்காததால் இதை நேர்மையின்மை என்று மட்டும் சொல்கிறேன்)யை காட்டும் மனிதனை எப்படி விளங்கி கொள்ள? எப்படி ஒரு மனிதனால் இப்படி ஒரு கேவலமான (எழுத்து) வாழ்க்கையை எந்த சஞ்சலமும் வெட்கமும் இல்லாமல் வாழ முடிகிறது. இதைவிட எந்தவித பிழைப்பும் மேலல்லவா? தூ!

உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. புஷ், சோ, பால் தாக்கரே, ஹிட்லர், யூதர்கள் இவர்கள் எல்லாம் அப்படி இருபதை புரிந்துகொள்ள ஒரு தர்க்கம் என்னிடம் இருக்கிறது. இந்த மனிதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் எந்த மிகையும் நான் காட்டவில்லை. படித்து குமட்டல் தாங்காமல் அதிலிருந்து மீண்டு வரும் வடிகாலாய் இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இரண்டு வார பயணத்திற்கு புறப்படுகொண்டிருக்கிறேன். அந்த அவசரத்தில் இதை எழுதுவது தவிர்க்க முடியாத கட்டாயமாகிவிட்டது.
(இனி கொஞ்சம் இயல்பாய் வேலையில் இறக்க கூடும்.) "

இன்று நான் பார்த்த போது அவர் என் நீக்கப்பட்ட பின்னூட்டத்தை மீண்டும் இட்டு பதிலாக எழுதியிருந்தது,

"நன்றி ரோசா வசந்த்! "இதைவிடக் கயமைத்தனமான எழுத்தைப் படித்ததில்லை.", "உங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது." - இப்படியெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, மீண்டும் வந்து வழக்கம்போல இந்தப் பழைய பல்லவியைப் பாடுவீர்கள் என்பது நான் அறிந்ததுதானே! சர்ச்சையைக் கிளறி வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கும், உருப்படியாக எதைப் பற்றியும் ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை எழுதுகிற திராணி இல்லாதவர்களுக்கும், தான் என்ன எழுதுகிறோம் என்கிற நிதானமே இல்லாமல் கண்டதையும் எழுதிப் பின் அதைத் தாங்களே அழித்துவிடுபவர்களுக்கும், எந்த ஒரு விஷயத்திலும் யாரையாவது திட்டியே பிழைப்பை ஓட்ட வேண்டும் - உருப்படியாகத் தாமாக எதைப் பற்றியும் தம் கருத்தைச் சொன்னால் தம்முடைய வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்று பயப்படுபவர்களுக்கும், இப்படியெல்லாம் அடுத்தவரைப் பற்றி "கயமைத்தனம், இனிப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை" என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால்தான் பிழைப்பு ஓடும். அந்தப் பிழைப்பில் ஏன் மண்ணைப் போடுவானேன்?

அடுத்த முறையும் வந்து இதையே எழுதுங்கள். நீங்கள் கண்டிப்பாக எழுதுவீர்கள். உங்களைப் போன்றவர்களுக்குத்தான் கோபத்தை அடக்கவும் நிதானமாக யோசிக்கவும் மாற்றுக் கருத்திருந்தாலும் சொல்லாமல் போகிற முதிர்ச்சியைப் பெறவும் எல்லாம் medidation வேண்டுமே. மெடிடேஷன் செய்யாமலேயே அவதூறுகளையும் அத்துமீறல்களையும் பொருட்படுத்தாமல் போகிற ஞானம் வாய்த்தவர்களைக் கண்டால்தான் உங்கள் ஈகோ அடிபட்டுப் படம் எடுத்து ஆடுமே! எனவே, ஆடுங்கள். நீங்கள் வருவீர்கள். வந்து எழுதுங்கள். இது தெரிந்த விஷயம்தானே. அப்புறம் எதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மாதிரி, "இனி உங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது" என்கிற வீரவசனம் எல்லாம்? என்னை மட்டும் திட்டுகிற வரை உங்கள் கருத்துகள் நீக்கப்பட மாட்டா. எனவே, மெடிடேஷன் செய்யாமல், சட்ட நடவடிக்கை எடுக்காமல், நான் எழுதியதை நானே "often" அழிக்காமல், அத்துமீறுவதும் அவதூறு செய்வதும்தான் கருத்துச் சுதந்திரம் என்று முனையாமல், இப்படிப்பட்ட அவதூறுகளைகளையும் அத்துமீறல்களையும் எதிர்கொள்கிற பக்குவம் எனக்கு அதிகமாகவே உண்டு"

அதற்கு கீழே நான் எழுதியது,

"//தான் என்ன எழுதுகிறோம் என்கிற நிதானமே இல்லாமல் கண்டதையும் எழுதிப் பின் அதைத் தாங்களே அழித்துவிடுபவர்களுக்கும்,//

சிவக்குமார் சொல்வது உண்மையல்ல. நான் அழித்ததற்கு காரணம் நிதானமின்றி எழுதியதனால் அல்ல. இங்கே எழுதியதை என் தளத்தில் (பின்னூட்டமாய்)பதிவு செய்திருக்கிறேன். அதனால் சிவக்குமார் சொல்வது போல் அதை மறைக்கவோ அழிக்கவோ எனக்கு காரணம் இல்லை. சிவக்குமார் எழுதியதை படித்ததும், அது குறித்து எழுதியதும், என்னுள் ஏற்படுத்திய குமட்டலின் காரணமாய், இங்கே எழுதும் விருப்பமின்மை காரணமாய் இதை நீக்கினேன். அதை மீண்டும் இட்டது அநாகரிகம் ஆயினும் அதனால் பிரச்சனை இல்லை.

மற்றபடி சிவக்குமார் என்னை பற்றி சொன்ன கருத்துக்களுக்கு நன்றிதான் தெரிவிக்க வேண்டும். நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் இந்த உலகில் நேர்மையின்மையின் உரைகல்லாக நினைக்கும் அவர் என்னை பற்றி சொன்ன அத்தனையையும் பாராட்டாக மட்டுமே எடுத்துகொள்ள முடியும். அவர் என்னை ஒரு முறை பாராட்டியபோது (அதன் பிண்ணணி என்னவாக இருந்தாலும்) மட்டுமே கலக்கம் வந்தது. அதனால் அவரின் நல்ல வார்த்தைளுக்கு நன்றி. அவர் சொன்ன விஷயங்கள் அவருக்கு பொருந்துமா எனக்கு பொருந்துமா எனபது சுயமாய் சுதந்திரமாய் சிந்திக்கும் அனைவருக்கும் புரியும். அப்படியில்லாதவர்கள் குறித்து கவலைப்பட ஏதுமில்லை."

அசோகமித்திரன் மனம் திறந்ததாய் அவுட் லுக்கில் வந்ததை (அதில் திரித்தல் இருக்கும் பட்சத்தில்) மறுப்பது அவரது வேலை மேலும் கடமை, அல்லது அவர் சார்பாய் வேறு ஒருவர் அதை செய்யலாம். ஆனால் அதை அவர் (நேரடியாய் நேர்மையாய்) மறுக்காத வரை, அதை முன்வைத்துதான் மற்றவர்கள் பேசமுடியும். அவ்வாறு பேசிவர்களை "பாம்பைவிடவும் விஷமானவர்கள். " என்றெல்லாம் சிவக்குமார் திரித்தார். அசோகமித்திரனின் பேட்டி வந்ததும் அதை முன்வைத்து அருளும், வெங்கட்டும் எழுதியிருந்தார்கள். இருவருமே அசோகமித்திரனின் இலக்கிய பங்களிப்பை, இந்த பேட்டிக்கு பிறகும் நிராகரிக்கவில்லை. நான் வாயையே திறக்கவில்லை. தங்கமணியின் சொதப்பலான பதிவு, மற்றும் வந்த பின்னூட்டங்களை முன்வைத்தே நான் எழுதினேன். அதிலும், அதற்கு பின் பின்னூட்டத்திலும் தெளிவாக அசோகமித்திரனின் இலக்கிய பங்களிப்பை வாசிக்காமல் புறக்கணிக்க முடியாது என்றும், அதற்கு காரணமும் சொல்லியுள்ளேன். அதற்கு பின்னர் எல்லாரையும் ஒட்டுமொத்தமாக "அவர்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதும், அவர்களைத் தமிழின விரோதிகளாகச் சித்தரிப்பதுமான அநியாயங்கள் தமிழில் மட்டுமே நடைபெறும். " என்று இந்த நபர் திரிக்கிறார். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. சங்கரபாண்டியுடன் திண்ணையில் இவர் போட்ட சண்டையில், மீண்டும் மீண்டும் "நேரு பண்டிட் பட்டத்திற்கு தகுதியானவர் என்று நிறுவமுடியும்' என்று உதார் (மட்டும்)விட்டவர். நான் அது வெறும் சாதிப்பட்டம் மட்டுமே என்று சுட்டிகாட்டியதும், மௌனமானது மட்டுமின்றி அது குறித்து எங்கேயும் எதிர்கொண்டது கிடையாது. மாறாக தான் 'ஜாதி வெறியன்' என்று திட்டப்பட்டதாக பின்னர் திரித்தார். சிவக்குமாரின் திரித்தல்களை அடுக்குவது இங்கே சாத்தியமில்லை. புதிதாய் படிக்கும் நபர் நான் ஆதாரமின்றி குற்றம் சாட்டுவதாய் நினைக்க கூடாது என்பதனால் மட்டுமே இதை குறிப்பிடுகிறேன். எதிராளி பலவீனமானவனாய் இருந்தால் அல்லது பலவீனப்படும் போது எல்லாவகையிலும் தாக்குவது (அதையும் கூட திரித்து தன்னை யோக்கியமாய் காட்டிகொள்வது -பார்க்க சங்கரபாண்டி பற்றி அவர் எழுதியுள்லது), பிரச்சனை வரும்போது மூச்சுவிடாமல் மௌனமாகி ஒளிந்துகொள்வது என்ற அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். தான் கையும் களவுமாய் பிடிபட்ட விஷயங்களை பற்றி பேசாததை "அவதூறுகளையும் அத்துமீறல்களையும் பொருட்படுத்தாமல் போகிற ஞானம் வாய்த்த"தாக அவரே பெருமையடித்து கொள்கிறார்.

ஜெயகாந்தனை பற்றி பேசினால், பேசுபவரை விடுதலை புலிகளுடன் சம்பந்த படுத்துவார்.என் விஷயத்தில் அதுவும் முடியாது. நான் மிக வெளிப்படையாய் புலிகளை விமர்சிப்பவன் மற்றும் எதிர்பாளன். நண்பரான தங்கமணியுடன் வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையிலும் தீவிரமாய் இந்த விஷயத்தில் சண்டை போடுபவன். அவர் தொடக்கூடிய பலவீனமான அம்சம் எதுவும் என்னிடம் கிடையாது. மேலும் அசோகமித்திரனை இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் குறித்தே அவரை விட எனக்கு ஆழமான பரிச்சயம் இருக்க வாய்புண்டு. எனக்கு சுட்டி கொடுக்க வேண்டிய அவசியம் கூட வராது, நேரடியாய் எழுத முடியும். அதனால் என் நீக்கப்பட்ட ஒரு பின்னூட்டத்தை வைத்து பிலிம் காட்டுகிறார்.


சிவக்குமாரரை முன்வைத்து நான் எழுதியவைகளை மிகைப்படுத்தப்பட்டதாக பலர் நினைக்கலாம். சில நண்பர்களும் கூட நினைக்கலாம். ஆனால் அது நான் ஈகோ உணர்சிகளை மீறி அவர் எழுத்தில் கண்ட ஒன்றை சொல்வதாக நினைக்கிறேன். அதை ஏற்றுகொள்ளதவர்கள் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதன் ஒரு உண்மை பரிமாணத்தையாவது காணக்கூடும் என்று நினைக்கிறேன். மற்றபடி அவர் கருத்து அதைவிட முக்கியமாய அவரது தர்க்கத்தை தவிர வெறுக்க அவரிடம் என்க்கு நிச்சயமாய் எதுவும் இல்லை.


ஆனாலும் சிவக்குமார் எழுதியதில் ஒரு உண்மையுண்டு. நேர்மையின்மையும், திரித்தல்களையும் பார்த்தால் அதை நிதானமாக அணுகும் பக்குவம் எனக்கு இல்லைதான். அப்படி ஒரு பக்குவத்தை அடைய முயற்சிக்கிறேன். இத்தனை தகிடுதத்தங்களை மிக அமைதியாக, எந்த குத்தல் குடைசல் இல்லாமல் அவர் செய்வது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. அதை வியந்துமிருக்கிறேன். இப்போதும் வியக்கிறேன். அடுத்து அவர் நான் எதுவும் உருப்படியாய் எழுதவில்லை என்றதும் உண்மைதான். இதுவரை எழுதியதில் 90விழுக்காடு மேலே சொன்ன காரணத்தினால் எழுதப்பட்டதுதான். ஆனால் உருப்படியாயயெழுத முடியும் என்பதற்கான தடையங்களாய் பல இடங்களிலும், உருப்படியாய் சில இடங்களிலும் எழுதியிருக்கிறேன். உருப்படியாய் எழுதுவதை காலம் நிச்சயம் தீர்மானிக்கும். சிவக்குமார் போன்றவர்களின் எழுத்துக்களை படிக்காமல் உருப்படியான வேலைகளில் ஈடுபடும் ஆசையும் நோக்கமும்தான் எனக்கும் உண்டு. ஆனால் அவரே கிண்டலடிப்பது போல் அது முடிவதில்லை. என்ன செய்வது கழுதைப்புலி வாழுமிடத்தில் அதை எதிர்கொள்வதும் தவிர்க்க முடியாது போய்விடுகிறது. (பெயரிலிக்கு நன்றி.)

அசோகமித்திரன் விஷயம் குறித்தும் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறேன். தான் மனம் திறந்ததாக வந்ததில் எதையெல்லாம் அவர் மறுக்கிறார் என்பது இன்னும் தெளிவில்லை. அசோகமித்திரன் இலக்கிய எழுத்தில் ஒரு வரி படித்திருக்காதவர்கள் பலர் கூட அவரது பார்பனியமயமான 'பேட்டியை' தலை மேல் வைத்து கொண்டாடினார்கள். அசோகமித்திரன் சொன்ன ஒரே காரணத்தால் அது முக்கியமானதும் ஆகியது. அவர் அதை அளிக்கவில்லையெனில், அதை மறுக்காமல் இருந்ததே கூட ஒரு குற்றம்தான். அதையும் முதிர்ச்சி என்பது போன்ற அபத்தம் எதுவும் இல்லை. இது குறித்தும் திரும்பி வந்ததும் எழுதுகிறேன்.

என் (இப்போதய) வேலையிடத்தில் தமிழ் எழுத்துக்கள் தெரிவதில்லை. ஒரு நண்பரின் தயவால் விண்டோஸ் XPயில் தமிழில் இப்போது எழுதவும் படிக்கவும் முடிகிறது. மீண்டும் இப்படிப்பட்ட வந்தால் ஒழிய தமிழ் பதிவுகளை படிக்கவோ, எழுதவோ முடியாது. இது ஒரு அவசர பதிவு மட்டுமே!

Post a Comment

17 Comments:

Blogger Sri Rangan said...

விமர்சனம்,சுயவிமர்சனம் எப்போதும் அவசியமானது.தங்கள் மனம் திறந்த பார்வைகள் மிகையற்ற ஆழ்மனப் புரிதலுக்கான பாங்கைக் கொண்டிருக்கின்றது.

6/06/2005 6:27 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

// எதிராளி பலவீனமானவனாய் இருந்தால் அல்லது பலவீனப்படும் போது எல்லாவகையிலும் தாக்குவது (அதையும் கூட திரித்து தன்னை யோக்கியமாய் காட்டிகொள்வது -பார்க்க சங்கரபாண்டி பற்றி அவர் எழுதியுள்லது), பிரச்சனை வரும்போது மூச்சுவிடாமல் மௌனமாகி ஒளிந்துகொள்வது என்ற அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். //

வசந்த் - நான் பலவீனமாகவோ அல்லது பலவீனப்பட்டோ பி.கே.சிவக்குமாருடைய பதிவில் விவாதம் செய்வதிலிருந்து விலகவில்லை. நீங்கள் அப்படிச் சொல்ல வரவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை சிவக்குமார் என்னைப் பற்றி அப்படி நினைத்திருக்கலாம் என நீங்கள் சொல்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

பி.கே.சிவக்குமாருக்கே தெரியும் பலவீனப்பட்டவர் அவர்தான் என்று. சிவக்குமாரின் வாசிப்பனுபவத்தை உயர்வாகக் கருதுவதாக ஏற்கனவே அவரிடம் வாதம் செய்யும் பொழுதே சொல்லியிருக்கிறேன். எனவே அ. மார்க்ஸின் எழுத்துக்களைப் பல ஆண்டுகளாகப் படித்து வந்திருக்கிறார் என்று நம்புகிறேன். அப்படியிருக்க அ. மார்க்ஸ் கட்டுரைகளில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தன்னுடைய கருத்துக்களை அல்லது ஜெயகாந்தனிடம் இரவல் பெற்றவற்றை வலியுறுத்துவதற்குப் பயன்படுத்தும் நேர்மையின்மையை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினேன். அது கூட பி.கே.சிவக்குமாரைப் புரியவைக்க வேண்டுமென்று செய்யவில்லை. அந்த நம்பிக்கை அவர் தனது நண்பர் சுவாமிநாதனுக்கு எழுதிய கடிதத்தை படித்தவுடனேயே போய் விட்டது.

சிவக்குமாரின் நேர்மையின்மையையும், அதன் நோக்கத்தையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டுமென்றுதான் அவருடன் விவாதித்தேன். இறுதியில், சிவக்குமாரின் பதிவில் மட்டும் இனிமேல் எழுத முடியாது என்றுதான் வெளியேறினேன், மற்ற பதிவுகளில் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதற்குக் காரணம் என்னுடைய பலவீனமல்ல, சிவக்குமாரின் கீழ்த்தரமான செயலினால்தான்.

என்னுடம் மறுப்புத் தெரிவிக்க முடியாமல் பலவீனப்பட்டுப் போன சிவக்குமார் கீழ்த்தரமான ஒரு செயலை அவருடைய பதிவில் செய்தார். என்னுடைய தந்தையாருடைய பெயரிலுள்ள சாதிப் பெயரைச் சுட்டி நான் சாதிப் பற்றாளன் என்று கூற விரும்பினார் என்றாலும் மற்றவர்கள் தன்னை அநாகரிகமாகக் கருதி விடுவார்கள் என்று ஒரு பயம், அதனால் என்னுடைய துறந்த சாதிப் பெயரை வெறும் புள்ளிகள் போட்டு (சொர்ணம் ...) என்று எழுதினார். ஆனால் திரும்பவும் அதையே வெளிப்படையாகச் சொல்லி என்னை சாதிப் பற்றாளன் என்று காண்பித்து வாதத்தை திசை திருப்ப வேண்டும் என்று அவருடைய மூளை பரபரத்தது. கண்டுபிடித்தார் ஒரு கீழ்த்தரமான வழியை.

அவரே சூச்சு என்ற பெயரில் ஒரு அனாமத்து பெயரை உருவாக்க(கி) வைத்து அந்த சூச்சு வாயிலாகத் தான் சொல்ல நினைத்ததைச் செய்தார். அதுமட்டுமல்லாமல், அப்படியெல்லாம் என்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி எழுதுவது அனாகரீகம் என்று கருதுவதாகவும் சூச்சுவைக் கண்டித்து என்னை மன்னித்து என்னுடைய மரியாதையையும், கவுரவத்தையும் மீட்டுக் கொள்ள வேண்டுமானால், நான் அவரிடம் வேண்டினால் சூச்சுவின் பின்னூட்டத்தை நீக்கி விடுவதாகச் சொன்னார். மேலும் இந்த வண்டவாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக டோண்டுவின் பதிவிலும், மூர்த்தியின் பதிவிலும் சென்று அனாமத்தாக எழுதுவது எவ்வளவு நாகரீகமற்ற செயல் என்று சாத்தானின் வேதம் வேறு.

இதை சிவக்குமாருடைய பதிவுகளையும், என்னுடைய பின்னூட்டங்களையும், அவருடைய பின்னூட்டங்களையும் முழுவதும் படித்தால் உணர்ந்து கொள்ளலாம். அவருடைய கீழ்த்தரமான செயலை வெளிப்படையாகச் சொல்லாமல், அவருடைய பதிவுகளை முழுவதும் படிக்குமாறு மற்றவர்களைக் கூறிவிட்டு வெளியேறினேன்.

அவர் என்னுடைய தந்தையாரின் பெயரிலுள்ள சாதியைக் கண்டுபிடித்துக் கூறியதால் பலவீனப்பட்டு வேளியேற வில்லை. நான் ஏற்கனவே வலைப் பதிவுப் பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். எனக்கும் இளவயதில் என்னுடைய சாதியின் மேல் நம்பிக்கையிருந்தது. எங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் நிலவி வந்த பொதுமைப் படுத்தல்களை (stereotypes) நானும் நம்பியிருக்கிறேன். பெரியாரையும், இடதுசாரி நூல்களைப் படித்த போது கூட அவை குறைந்து போயின ஆனால் மறைந்து போகவில்லை. தலித்திய நூல்களைப் படித்த பிறகுதான் அவை உண்மையிலே கரைந்து போய்க் கொண்டிருக்கின்றன, அதன் எச்சங்களை இன்னமும் சில நேரங்களில் உணரமுடிந்தாலும். என்னுடைய சாதியை நான் துறந்து விட்டதுமல்லாமல் அச்சாதியினரின் பார்ப்பனிய - சாதிய நம்பிக்கைகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறேன். இங்கு கூட என்னுடைய எந்தப் பின்னூட்டத்தை வேண்டுமானாலும் போய்ப் பார்க்கவும், பார்ப்பனர்களை மட்டும் தனிமைப் படுத்தி விமர்சித்ததில்லை.

எனவே சிவக்குமாரோ, அவரது சூச்சுவோ என்னுடைய சாதியை கண்டுபிடித்து என்னைப் பலவீனப்படுத்தியதால் அவருடைய பதிவிலிருந்து வெளியேறவில்லை. இதைச் செய்வதற்கு கூட நேர்மையில்லாமல் கீழ்த்தரமான செயலில் இறங்கியதால் அவருடைய பதிவில் மேலும் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று நினைத்துதான் வெளியேறினேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

6/06/2005 1:01 PM  
Blogger Choochu said...

சொர்ணம்பிள்ளை சங்கரபாண்டி என்று எழுதிவிட்டால், சங்கரபாண்டி என்பவர் சாதி வெறியர் என்று நான் சொல்வதாக அர்த்தமா? என்ன வினோதம் இது என்று எனக்குப் புரியவில்லை.

அதனை ஒப்புக்கொண்டாற்போல சிவக்குமாரும் எழுதியிருப்பதும் எனக்கு புரியவில்லை.

அப்போ வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று எழுதிவரும் அத்தனை பேரும் மாவீரனை(!) ஜாதிவெறியர் என்றா சொல்கிறார்கள்? (ஆகா, அதை மறந்துட்டோ மே! என்று இணையபிலிப்படையினர் தலையிலடித்துக்கொள்வது இங்கிருந்தே தெரிகிறது)

(புலிகளுக்கு சொம்படிக்கும் சொர்ணம்பிள்ளை சங்கரபாண்டி, தன்னை புலி வழி வருபவர் என்று சொல்லிக்கொள்ள ஒரு காரணம் வேறு கொடுத்திருக்கிறேன். அவருடைய இளிப்பை இங்கிருந்தே பார்க்கிறேன். ஹெ ஹெ)

இதனை முன்பே எழுதியிருப்பேன். சிவக்குமார், சொர்ணம்பிள்ளை சங்கரபாண்டி கேட்டுக்கொண்டால் என் கருத்தை நீக்குகிறாரா என்று பார்க்கவே காத்திருந்தேன்.

அனானிமஸாக எழுதுபவர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்பதுபோல சிவக்குமார் தம்பட்டம் அடித்துக்கொள்வதும் சரியல்ல. ௾ந்தக் காலம் தீவிரவாத ஆதரவாளர்கள், பயங்கரவாத ஆதரவாளர்கள், வன்முறை ஆதரவாளர்கள் தைரியமாகவும், அவற்றை எதிர்ப்பவர்கள் முகமூடியோடும் அலையவேண்டிய காலகட்டம். சிவக்குமார், டோ ண்டு, ரஜினி ராம்கி போன்ற சில அசடுகள் வேண்டுமானால் ௾தனை பெரிய தம்பட்டமாக நெற்றியில் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால், அவர்களுக்கும் மற்றவர்கள் முகமூடிகளை ௾ழக்க வேண்டும் என்று கோர உரிமை கிடையாது. என்னைப் பொறுத்தவரை it it better to be safe than sorry.

6/07/2005 1:30 AM  
Blogger -/பெயரிலி. said...

/அப்போ வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று எழுதிவரும் அத்தனை பேரும் மாவீரனை(!) ஜாதிவெறியர் என்றா சொல்கிறார்கள்?/

What a joke! o, now Pirabakaran belongs to a Pillai clan. An idot should know what the heck he is speaking about. At least, he should know what he really knows.

6/07/2005 2:24 AM  
Blogger Choochu said...

அதென்னங்க pillay clan? அப்படீன்னு ஒன்னு இருக்குங்களா?

6/07/2005 7:44 AM  
Blogger -/பெயரிலி. said...

/அதென்னங்க pillay clan? அப்படீன்னு ஒன்னு இருக்குங்களா? /

ஐயய்யோ அப்படி ஒண்ணுமே ஊரிலே இல்லையா? நான்தான் தவறாகப் பரமசிவம் பிள்ளையைப் பற்றிச் சொன்னால் பரமசிவன் பிள்ளைக்குப் பற்றிக்கொள்கிறது என்று சகோதரபாசத்திலே புரிந்துகொண்டேனா? முருகா! பழனிவேலா! சுவாமிநாதா! சே எல்லாமே வெறும் நக்குற நாய்க்கூட்டத்தின் குரைப்புத்தானா? :-( மதநாயை மறைத்த மமதாநாயை மறைத்த மதநாய் உலகமடா இது:-( சூச்சூ! காலை நக்காதே! ஓடு ;-)

6/07/2005 8:44 AM  
Blogger Choochu said...

பிலிங்களோடத்தான் நல்ல பழக்கம்னு நெனச்சேன். நாயுங்களோடயும் உண்டா. இந்த பிள்ளை விவகாரத்த எதுக்கும் குரு வம்சத்து சத்திரியர்கள்ட்ட கேட்டுக்கோங்க. அப்படித்தான் சொல்லிக்கிறாங்க.
எனக்குத் தெரியுமண்ணே. மாவீரர் பெயர் போட்டவுடனேயே இணையப்பிலி பாவ்லோவிய டாக் மாதிரி பாஞ்சு வருவார்னு.. ஆட்ரா ராஜா ஆட்ரா ராஜா..

6/07/2005 9:35 AM  
Blogger ராஜேஷ் said...

நாமதான் புலி இன்னு தெளிவாகத் தெரியுதே? இதுக்கெல்லாம் கண்ணாடி வேணுமா?

சத்திரியர்கள்..
யாரு மராட்டிய சிவாஜி வம்சத்துக்காரர்களையா?

6/07/2005 10:27 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

//இணையப்பிலி பாவ்லோவிய டாக் மாதிரி //

அதென்னங்கோ டாக்?
தெரிஞ்சு கொள்ளுற ஆர்வத்திலதான் கேக்கிறன்.
ஏதும் கருமையா இருக்குமோ?

6/07/2005 10:55 AM  
Blogger நோக்கர் said...

" /அப்போ வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று எழுதிவரும் அத்தனை பேரும் மாவீரனை(!) ஜாதிவெறியர் என்றா சொல்கிறார்கள்?/

What a joke! o, now Pirabakaran belongs to a Pillai clan. An idot should know what the heck he is speaking about. At least, he should know what he really knows."

இதுக்குத் தான் சூச்சு சொல்றது, பொல்லக்கொடுத்து பல்ல உடைக்கிறது.

6/07/2005 11:20 AM  
Blogger KARTHIKRAMAS said...

Test comment

6/07/2005 11:23 AM  
Blogger ROSAVASANTH said...

Thanks to everyone who commented here.

Unfortunately (or fortunately) I can only read two lines written in English(by someone whom I cant recognise), about pirabakaran and pillai. I think I wont be able to read this in the next two weeks. So I will write something after two weeks, if I feel like. thanks to every one.

To Choochu, I have seen two of your comments before, and it is not necessary to know what you have written here. I only congratulate you for choosing a very apt name, for what you write. I hope you know what choochu usually mean.

6/07/2005 11:37 AM  
Blogger கொழுவி said...

//அதென்னங்கோ டாக்?
தெரிஞ்சு கொள்ளுற ஆர்வத்திலதான் கேக்கிறன்.
ஏதும் கருமையா இருக்குமோ?
//
ஐயோ ஐயோ.. புத்தூ.. இது கூட தெரியாதா..?
டாக் என்றால் டோக்.. (Dog)
டாக் என்றால் dark..

என்ன வசந்தன்..? ஒண்ணும் தெரியா பிள்ளை(??????) யாக இருக்கிறீங்களே

6/07/2005 6:50 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Roza,
//I hope you know what choochu usually mean.
//
"choochu" usually mean NOTHING ;-) Do you mean the word "choochu" as a brahminical slang ???????

6/07/2005 8:51 PM  
Blogger Choochu said...

//To Choochu, I have seen two of your comments before, and it is not necessary to know what you have written here.//
அட நானும் உங்களப்போலத்தான். ஒருதடவைத்தான் படிச்சேன். அதுக்கப்புறம் தேவையில்லைன்னு விட்டாச்சி..
//I hope you know what choochu usually mean. //
what it usually means?
ஆனா, உங்க கூட்டத்துக்கு பதில் சொல்றதுன்னு ஆரம்பிச்சாக்கூட நானும் இப்படி நாய் பேய்-னு அறிவுப்பூர்வமான வாதம் பண்ணிகிட்டு இருக்க வேண்டியதுதான்.

6/07/2005 9:25 PM  
Blogger ROSAVASANTH said...

Bala, I am not sure whether it is only a Brahminical slang. Even then, it is made familiar by Sujatha and others. The point is the aptness here. Thanks for the comment.

again I say, I wont be able to read anything in Tamil this week and next week. It is ok to have any kind of discussion here, without my participation.Thanks!

6/08/2005 11:29 AM  
Blogger ROSAVASANTH said...

interesting

http://www.hindu.com/2005/06/10/stories/2005061008120100.htm

6/10/2005 11:48 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter