ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Thursday, August 11, 2005லாஜிக்!`அம்மா', `அப்பா' எனும்போது ஒரே ஒருமுறை மட்டுமே ஒட்டும் உதடுகள், `மாமா' எனும்போது இரு முறை ஒட்டுகிறது. அதனால் 'நாம்' என என்னால் கூறித் திரியமுடியாமல் போனது போல..... 'நாம்' எனும்போது 'நான்' கரைந்து போவதால், வேறு வழியின்றி பேசாதிருக்க முடிவு செய்தேன். 'இருள் என்றால் குறைவான ஒளி' என்று மாகவிஞன் சொன்னதுபோல், பேசாதிருத்தல் என்றால் சிலவற்றை தேர்ந்தெடுத்து பேசாதிருத்தல் அல்லது தேர்ந்தெடுத்து பேசுதல். பேச்சின் அலைகளிலே படகு ஓட்டவும், கப்பல் விடவும், உப்பெடுக்கவும், மீன்பிடிக்கவும், விட்டால் வைரமுத்து வாலி துணைகொண்டு விண்மீன்களை வலைவீசி பிடிக்கவும் பகைவர்கள் முயலும்போது, போராட்ட சூழலும், போராளி மனநிலையும் கடத்தி செல்லப்படுவதை அனுமதிக்காமலிருக்கும் வண்ணம், பேசாதிருத்தலே பொதுக்குழு மறைமுடிவாய் எனக்கு வாய்க்கப் பெறுகிறது. பேசாதிருத்தல் என்பது என் தேர்விற்காக மட்டும் பேசுதல். அதிகாரத்தின் விசாரணையற்ற குட்டி பூர்ஷ்வா விவாதத்தில், பேசாதிருக்க மௌனமாய் இருந்தால் போதுமானது. ஆனால் பேசுவதற்கு வாக்கியங்கள் அமைக்க வேண்டும். அதற்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து செதுக்க வேண்டும். அதன் பொருளை பகைவர்கள் கொந்திச் செல்லாவண்ணம் பதுங்கு குழிகளிலே அமைக்கவேண்டும். பேசியபின்னும் பாதையிலே பாதிப்பை கவனிக்க வேண்டும். அதனால் பேசாதிருத்தலிலே காட்டும் கவனம் பேசுவதிலே சாத்தியமில்லை. இயன்றாலும் கவனமின்மை குறித்த பாவனை இன்றியமையாதது. என் கவனமும் கவனமின்மையும் கவனிக்கப் படும் போது, நான் கவனத்தையும் கவனமின்மையையும் கவனமாகவே கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. எதிரியின் கவனத்தை கண்காணிக்க வகையில்லாத பின்தொழில்நுட்ப யுகத்தில், பேசாதிருத்தலே எனக்கு பணிக்கப் படுகிறது. பேசாதிருத்தல் என்றால் மற்றதை பேசாதிருத்தால். முடிந்தால் எனக்கு மற்றதாகிப் போனவற்றினுள்ளே மற்றதின் மற்றதை பற்றி மட்டும் பேசுதல். பேசா பொருளை புணரத் துணிந்தவர்கள் பன்றி பிடிக்கும் வளையங்களுடன் வலம் வந்து, பேசா வார்த்தைகளை இரவுகள் எல்லாம் ஊளையிட வைப்பார்கள் என்று யாரேனும் அறிவுறுத்தினாலும், 'பேசாதிருந்தாலே புரட்சி சித்திக்கும்' என்ற பொதுகுழு சிந்தனையை மீறும் துரோகத்தை செய்வதில் நேர்மையை தவிர வேறு பிரச்சனையில்லை. அதனால் பேசாதிருப்போம். பேசாது திரியும்போது பேச நேர்ந்தால், "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை என்று ஒப்புக்கொள்!" என்ற பாடலை ஒருமுறை பாடிக்கொள்வோம். |
14 Comments:
**@#$%^**
பேச முடியவில்லை..
...........................................................................................................................................................................
ஐயோ, என்னை யாராவது புடிங்க புடிங்க. தலை சுத்துது!
க்ருபா
//பேசாது திரியும்போது பேச நேர்ந்தால், "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை என்று ஒப்புக்கொள்!" என்ற பாடலை ஒருமுறை பாடிக்கொள்வோம். //
ஒத்துக்கொள்கிறேன்!!
திறந்த விவாதம் என்று ஆரம்பித்து பின்னர் அதைத் தங்களுக்கான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்து உடைந்து/ஒதுங்கிப் போகிறார்களோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.
பொறுக்கி
http://porukki.blogsome.com/
பேசாதிருக்கும் சித்தி பெரும்பாலானவர்களுக்குக் கைவரப் பெறுவதில்லை. ஆதலின் அதுபோன்ற நிலைகளில் நாம் பேச விரும்பும் வேறு விடயத்தைப் பற்றிக் கொண்டு அது குறித்துப் பேசத் தொடங்குவது பலனளிக்கிறது. பேசாமலிருக்கவியலாதென்றானபின் விருப்பமானவொன்றையே பேசுதல் எளிது
//அதனால் பேசாதிருத்தலிலே காட்டும் கவனம் பேசுவதிலே சாத்தியமில்லை.//
மிகச் சரி.
off -track
--
இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள
விழைவில்லாமல் போனதற்குக் காரணம்
இருந்து இருந்து சலித்துப்போன
இருப்பைதவிர வேரேதாவது
இருக்க முடியுமா?
கோயிஞ்சாமி - நான் மனுசாஸ்திரம் படித்தவனல்லன். படித்தவர்கள் அதில் அப்படியாக இருக்கிறது என்று சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.
என்னைப் பொருத்தவரை இது தப்பித்தல் இல்லை. வெற்றியை முழுமையாக எதிராளிடம் கையளித்து அவரைச் சந்தோஷமாக இருக்கவிட்டுவிட்டு (one who laughs last...) நாம் நகர்வது.
This comment has been removed by a blog administrator.
நான் இதை படித்தேன், ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
சிலரோடு பேசி வெற்றி கொள்வது அல்லது இணக்கத்திற்கு வருவது என்பது இயலாத காரியம் என்பதால் "பேசாதிருத்தல்" நலம் பயப்பதே ;-)
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பெயரிலி என்ற நண்பர் திண்ணைதூங்கி,
நீங்கள் பின்னூட்டத்தை அழித்துவிட்டதை கவனிக்காமல், மின்னஞ்சலில் படித்து, பாட்டையும் கேட்டுவிட்டேன். செய்தி மற்றவர்களுக்கு என்பதுபோல், தோற்றமளித்தாலும் எனக்குதான் என்று தெரிந்ததால் இதனால் பாதகமில்லை என்றே நம்புகிறேன். பதிலாக அதே பின்னூட்டத்தை அப்படியே தர விரும்புகிறேன் -உங்களை பற்றி அல்ல, உங்கள் செய்திக்காக. நன்றி!
http://wandererwaves.blogspot.com/2005/08/33.html#comments
"வால்வெள்ளிகளை விண்கற்களாக உருப்பெருக்கவும் உருத்திரிக்கவும்போகும் அறிவியலாளர்களின் புத்திசார்த்திட்டமிடுதல்கள்" சரித்திரம் முழுவதும் நடந்து வருவது. அதைவிட இப்போதய முக்கிய பிரச்சனை, யாருடய கவுட்டா பெல்டிலிருந்து வீட்டுக்கூரையை பிய்த்துகொண்டு சென்ற, கல்லடித்து meteor கீழே விழ நேர்ந்தது என்பது குறித்த ஆராய்ச்சிதான்.
Post a Comment
<< Home