ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, July 14, 2005

எல்லை!

கருகித்தான் விறகு தீயாகும்.
அதிராத தந்தி இசைக்குமா?
ஆனால் அதிர்கிற தந்தியில் தூசி குந்தாது.
கொசு நெருப்பில் மொய்க்காது.

(செங்கள்ளு சித்தரின் பதிவில் மேற்படி பிரமீளின் கவிதையை கண்டு, சற்று அதிகமாகவே உணர்சி மற்றும் பழைய ஞாபகத்தின் வசம் சென்று விட்டதால் இங்கே இடுகிறேன்.)

Post a Comment

21 Comments:

Blogger Narain said...

ஆஹா! நீங்களூமா, முந்திக் கொண்டீர்களய்யா, இதையும் கலாய்க்கலாம் என்றிருந்தேன் ;-)

7/14/2005 1:39 PM  
Blogger G.Ragavan said...

அருமையான கவிதை.

7/14/2005 3:43 PM  
Blogger Thangamani said...

இப்பவெல்லாம் எனக்கு கவிதையும் புரிய மாட்டேங்குது; அதிநவீனத்துவ கட்டுரையும் புரியமாட்டேங்குது.

7/14/2005 5:11 PM  
Blogger நிழல்மனிதன் said...

பின்னூட்டத்தையே ஒரு பதிவாக்கிட்டீரே! வெவ(கா)ரமான ஆளுய்யா.

7/14/2005 6:53 PM  
Blogger ROSAVASANTH said...

நாரயணன், ராகவன், தங்கமணி நன்றி.

நிழல்மனிதன் பின்னூட்டமாகவும் கொள்ளலாம். நன்றி

7/15/2005 1:57 PM  
Blogger ROSAVASANTH said...

http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_14.html#comments

நான் இந்த 'விவாத'த்தில் எதையும் சொல்ல விரும்பவில்லை எனினும், பாரதியின் வரிகளை மாலன் திரித்ததாக சுரேஷ் சொன்னது மிக அபாண்டமானது என்று தோன்றியதால் அது குறித்து மட்டுமே எழுதினேன். அதற்கு இன்னும் கூட(வேறு யாரும் கூட) சரியான எதிர்விளக்கம் கொடுத்ததாக தெரியவில்லை. இந்த பதிவிலும் மொட்டையாகவே சுரேஷ் சொல்லி செல்கிறார்.


மற்றபடி சிவக்குமாரின் பின்னூட்டம் வழக்கம் போல ரசிக்கும்படியாக இருந்தது.

//கூடவே - தமிழ் வலைப்பதிவுகளில் சமீபகாலத்தில் ஒரு கும்பல் பிடிக்காதவரை ஏசவும் தாக்கவும் கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் - கொள்கைகளை எல்லாம் உதறிவிட்டுப் - பிடிக்காதவரைத் தாக்குவது மட்டுமே கொள்கை என்ற அளவில் பயன்படுத்தி வருவதையும் நான் அறிவேன்.//

வழக்கம் போல யாரை குறிப்பிடுகிறோம் என்று சொல்லாமல் அவர் எல்லோரையும் குறிக்கும் வேலையை செய்யும் போது, அவரை தெளிவாகவே (மிகுந்த வெளிப்படையான நேர்மையுடன்) திட்டியுள்ள நானும் அடங்குவதால், ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.

மாலனின் அபத்த நாடகத்தின் முடிவில் 'விடைபெறுகிறேன்' என்று போட்ட பதிவில் சிவக்குமாருக்கு வரிசையாக எல்லோரிடமும் தர்ம அடி மட்டும் விழுந்துகொண்டிருந்த போது அவருக்கு ஆதரவாக அங்கே எழுதிய முதல் ஆள் நான். என்னை வழி மொழிந்து பெயரிலி எழுதினார். வேறு யாரும் எழுதியதாக தெரியவில்லை. (சீமாச்சு என்பவர் சிவக்குமாருக்கு ஆதரவாய் எழுதியதை சீரியஸாய் என்னால் எடுக்க முடியவில்லை.) இப்போதும் அந்த ஆதரவில் மாற்றமில்லை - இந்த நேர்மையை சிவக்குமார் எனக்கு எந்த கட்டத்த்திலும் காட்டமாட்டார் என்று அப்போது சொன்னது, இப்போதும் இனியும் பொருந்தும் எனினும்


(தமிழ் மணம் பக்கம் வருவதையே கொஞ்ச காலம் நிறுத்த வேண்டும் என்று நினைத்து கடைபிடித்தும் வந்தேன். கிடைத்த ஒரு இடைவெளியின் சபலத்தில் வந்து, பின்னூட்டமும் இடவேண்டியதாகவிட்டது. )

7/15/2005 2:13 PM  
Blogger ROSAVASANTH said...

http://aruls.blogspot.com/2005/07/blog-post_18.html#comments

ஒரே ஒரு பாடலை(புற்றில் வாழ்..) மட்டும் தூள்.காம் தயவில் கேட்டேன். ராஜாவின் குரலை விட குறைந்த பட்சம் அதைப் போல் பொருந்தக்கூடிய வேறு குரல் எனக்கு தட்டுப்படவில்லை.

" என்றாலும் நல்ல சாப்பாட்டை பரிமாறிவிட்டு கூடவே எதையோ வைத்தாற் போலத்தான் ராஜாவின் குரல் எனக்கு ஒலித்தது." என்று சொல்வது சுரேஷ் கண்ணன் பற்றி சொல்கிறதேயன்றி ராஜாவை பற்றி யல்ல என்பது என் தாழ்மையான எண்ணம். இதை சொல்வதால் ராஜாவின் வெறியனாக மாட்டேன், சுரேஷிற்கு இருப்பது போல் இது இன்னொரு கருத்து மட்டுமே என்று திடமாய் நம்புகிறேன்.

ஞாநி என்ன ஒளரியிருப்பார் என்று அறிய பெரிய ஊகம் தேவையில்லை. அதை (ஞாநியின் மற்ற பங்களிப்புகளையும், நேர்மையையும் கணக்கில் கொண்டு) பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

7/18/2005 6:08 PM  
Blogger ROSAVASANTH said...

http://www.domesticatedonion.net/blog/?item=557&comment=2869#comment2869

ரவி சொன்னது // யாருக்கும் இது போல் பிரத்தியேக உரிமை கிடையாது என்று விதிகளை மாற்றுவதே சரியானது.ஆனால் அரசு இதைச்
செய்யுமா என்பதே கேள்வி.//

என்னது? எல்லோருக்கும் அனுமதி உண்டு(அதாவது அடிப்படையில் நுழைவதற்கான தகுதி) என்பதுதானே சரியாய் இருக்கும். அதற்கான விதியை மாற்ற முடியாமல்(மாற்றியும் அதை சுப்ரீம் கோர்ட் தடை செய்தும்) தானே இருக்கிறது. இதில் புதிதாய் 'இதுதான் சரி' என்றும் அதை அரசு செய்யுமா என்றும் கேட்பதும் எந்த ஆகமத்தின் அடிப்படையில் என்று புரியவில்லை.

7/18/2005 6:31 PM  
Blogger ROSAVASANTH said...

http://aruls.blogspot.com/2005/07/blog-post_18.html#comments


அருள், ராஜாவின் குரல் பற்றி எழுதியுள்ளது மிகவும் ஒப்புகொள்ள கூடியதாய் உள்ளது. தமிழுக்கும், மேற்கத்திய இசைக்கும் ஒரே நேரத்தில் பொருந்த கூடியதாகவே எனக்கு தோன்றுகிறது. (சீர்காழி போன்றதோ, எஸ்பிபி ஹரிஹரன் தொடங்கி இன்றைய பிரபலமோ, மகராஜபுரம் அல்லது வேறு கர்நாடக சங்கீத மேதைகளோ கூட பொருந்தும் என்று தோன்றவில்லை.)

மேலும் ஒரு விஷயம். ராஜாவின் குரலில் 90களின் இறுதியில், 2000 பிறந்த பிறகு பெரிய மாற்றம் வந்திருப்பதை காணமுடியும். 'தென்றல் வந்து தீண்டும் போது..'பாடலை அந்த நாட்டுபுற இசை மேற்கத்திய (பிரிக்க இயலாமல்)மயப்படுத்திய தன்மைக்கு ராஜாவின் குரலை தவிர வேறு பொருத்தமான குரல் தெரியவில்லை. அவர் 80களின் பாடி பல பாடல்களை கெடுத்தது வேறு விஷயம். அதிலிருந்து, அதனால் ஏற்பட்ட முன் அபிப்ராயத்திலிருந்து விடுபட்டு அவர் குரலில் -பாடும் விதத்தில் -வந்துள்ள ஒரு முதிர்ச்சியை கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிரது.

7/18/2005 8:07 PM  
Blogger ROSAVASANTH said...

ரவியின் விரிவான பதில். அவருக்கு என் நன்றி. (என் பின்னூட்டத்தை இட்டதால் பொருத்தாமாய் இருக்கும் என்று இதையும் இடுகிறேன். அவருக்கு இதில் ஆட்சேஅப்ம் இருக்காது என்று நம்புகிறேன். )

ரவி: கோயிலின் கருவறைக்குள் நுழையும் உரிமை ஒரு சிலருக்கே இருக்குமானால், இங்கு சங்கராச்சாரியார்கள், நேபாள மன்னர் அதை நீக்கி யாருக்கும், கோயிலில் பூஜை செய்யும்
அர்ச்சகர்கள் தவிர, யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று ஆக்க வேண்டும்.இதுதான் நான் சொல்லவந்தது.கருவறைக்குள் நுழைவது ஆகமவிதிகளின் படி வழிபாடு நடத்தப்படும் கோயில்களில் அனைவருக்கும் கிடையாது.நானறிந்த வரையில் பல கோயில்களில் எந்தத்துறவிக்கும், சங்கராச்சாரியாருக்கும் இந்த உரிமை கிடையாது.

உச்சநீதிமன்றம் 2002ல் கொடுத்த தீர்ப்பின் படி அர்ச்சகராககும் உரிமை அனத்து இந்துக்களுக்கும் உண்டு.முறைப்படி பயிற்சி பெற்றவர் யாராயிருந்தாலும் ஜாதி பாகுபாடு காட்டாமல் அவரை அரச்சகராக அரசு நியமிக்கலாம். தமிழக அரசு பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்க தயாராக உள்ளது என்று இந்த் ஆண்டு மார்ச் 8ம் தேதி அறிவித்தது. அதை விஸ்வ இந்து பரிஷத் ஏற்கவில்லை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்துதான் சட்டம் இயற்றப்பட்டது, முன்னர் உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.ஆனால் 2002ல் தரப்பட்ட தீர்ப்பு வேறுவிதமாக உள்ளது. இது பழைய கண்ணோட்டத்திலிருந்து மாறுபடுகிறது.

அனைவரும் கருவறைக்குச் சென்று வழிபாடு நடத்த வகைச் செய்யும் சட்டம் எதுவும் இயற்றப்பட்டதாகவோ அல்லது அதை உச்சநீதிமன்றம் தடை செய்ததாகவோ தெரியவில்லை, நானறிந்த வரையில்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் வழிபாட்டு உரிமை மத உரிமைகளின் கீழ் வருகிறது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை எப்படிப் பொருள் கொள்வது என்பதுதான்
பிரச்சினையே.ஒரு அடிப்படை உரிமை (அனைவருக்கும் சம உரிமை) இன்னொரு அடிப்படை உரிமையுடன் (இங்கு மத உரிமை, சம்பிரதாயங்களை, பாரம்பரிய வழிபாட்டு முறையை கடைப்பிடிக்கும் உரிமை) முரண்படும் வகையில் பொருள் கொள்ளப்பட்டு அமுல் செய்யப்பட்டால்
என்ன நிலைப்படு எடுப்பது, சட்ட ரீதியாக இதை எப்படித் தீர்ப்பது என்பதே கேள்வி

("நான் எழுதியது சட்டசிக்கலை பற்றியது அல்ல" என்று நான் சொன்னதையடுத்து அவர் மீண்டும் சொன்னது)

ராஜதுரை இது குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார்.2001ல் வெளியானதுஅந்த தீர்ப்பினை தி.க வினர் சரியாக படித்துப் புரிந்துகொள்ளவில்லை.அதனால் குழப்பங்கள் ஏற்பட்டன..என் நினைவிலிருந்து இதைக் குறிப்பிடுகிறேன்:

அந் நூலினைப் படித்து எழுதலாமென்றால் அது என் வசம் இப்போது இல்லை. கருவறையில் அனைவரும் நுழைவது என்பதும், அனைத்து சாதியினரும் அர்ச்சகரகலாம் என்பதும் வெவ்வேறு விஷயங்கள். இப்போதும் கூட கருவறையில் நுழையும் உரிமை அர்ச்சகர்களுக்குத்தான் உண்டு.
ராமநாதசுவாமி கோயிலில் அந்த உரிமை சங்கராச்சாரியர்களுக்கும், நேபாள மன்னருக்கும் இருக்கிறது. அது தேவைதானா என்பதே கேள்வி. இது சட்டப்பிரச்சினை மட்டுமல்ல்ல.ஆனால்
சட்டரீதியாக இதை அணுகாமல் தீர்வு இருக்கமுடியாது.

7/18/2005 11:10 PM  
Blogger ROSAVASANTH said...

http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_18.html#comments

//அந்த இயக்குநரே எதிர்பார்த்திருக்காத ஒரு கோணத்தில் கட்டுடைக்கும் சிற்றிதழ்களில் எழுதப்படும் விமர்சனங்கள் எனக்கு பெருத்த நகைப்பை உண்டாக்குகிறது. 'காதல்' என்கிற படத்தில் வரும் பெரியார் சிலை காட்டப்படும் காட்சியை அ.ராமசாமி 'தனக்கேயுரித்தான பார்வையில்' விமர்சிக்கும் போது இவர்களது மனநிலையின் ஆரோக்கியத்தை கண்டு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது. //

பாரதியின் வரிகளை ஒரு நேரடி மேற்கோளாய் மாலன் தந்திருந்ததை, அவர் திரித்து ஜெயகாந்தன் மீது பழி போட்டதாக அபாண்டமாய் எழுதி அது குறித்து எந்த விளக்கமும் தராத போதும், அன்னியன் படத்தில் வரும் சித்தரிப்புகள் குறித்து பேசாத பேசுபவர்களை குறை கூறும் இந்த பதிவு, இதன் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் என்னால் புரிந்துகொள்ள முடியாத மன ஆரோக்கியத்தை, அ.ராமசாமியின் ஒரு விமர்சனத்தில் வரும் ஒரு விஷயத்தை வைத்து சிற்றிதழின் கட்டுடைக்கும் விமர்சனம் வைப்பவர்களின் மன ஆரோக்கியம் பற்றி (இன்னும் தெரிதா பற்றி கூட சொல்லியிருக்கலாம்) சுரேஷ் முடிவுக்கு வரும் வேகம் மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதை விட இப்படி மேலோட்டமான கருத்துக்களை, பொது புத்தியில் மிக எளிதாய் படுகிற/ உவப்பளிக்கிற கருத்துக்களை மட்டும் தொடர்ந்து முன் வைத்து விட்டு, தான் ஏதோ ஆழமான விஷயங்களை எழுதியிருப்பதாகவும் ஆனால் தன் சர்ச்சை பதிவுகளுக்கு மட்டும் 'ஹிட் கிடைக்கிறதே' என்று அங்கலாய்ப்பதும் இன்னும் சிலிர்க்க வைக்கிறது.


//ஒரு தனிமனித அலட்சியம், கவனக்குறைவு, சலிப்பு, முயற்சியற்ற தன்மை எவ்வாறு பல்கி பெருகி "இந்திய குணமாக" நம் எல்லோருக்குள்ளும் ஊறிப் போய்விட்டது என்பதை நினைவுறுத்தியதற்காகவாவது ஷங்கருக்கு சபாஷ் போடலாம். //

நாராயணன் அதற்கு மட்டும் சபாஷ் போடுவாரா, அல்லது பிரச்சனை இத்தனை எளிதானது என்று சித்தரித்ததற்கும், உண்மையான அழுகல்களை பார்க்காமல் இப்படி திசை திருப்புவதற்கும் கூட 'சபாஷ்' போடுவாரா என்று தெரியவில்லை. ஏதோ நல்லாயிருந்தா சரி.


நான் இந்த படத்தை அதிகம் எதிர்க்கவில்லை. பாராட்டக்கூட செய்வேன். ஆனால் அதற்கான காரணம்தான் முற்றிலும் வேறு. அது சுரேஷ் கண்ணன் கடைசியில் சொன்னதுதான் அது, "சதாவின் தொப்புளையும், விக்ரம் பறந்து பறந்து போடுகிற சண்டைகளையும் 'ஆ'வென்று பார்த்துவிட்டு, வழக்கம் போல் தம் இயந்திர வாழ்க்கைக்கு திரும்பி எப்பவும் போல்தான் இருக்க்ப் போகிறோம் என்பதுதான்

7/19/2005 1:25 PM  
Blogger ROSAVASANTH said...

http://aruls.blogspot.com/2005/07/blog-post_18.html#comments


//The references to IIlayaraaja's cast are sticking out in the write up. //

ஆனந்த் மீது (அதுவும் அசோகமித்திரன் விவகாரம் மற்றும் அதே அவுட்லொக் இதழில் வந்த 'dalits reversed' கட்டுரைக்கு பிறகு) எந்த மரியாதையும் கிடையாது. ஆனால் அவர் சம்பந்தமில்லாமல் ஜாதி பற்றி எதுவும் எழுதியதாக படவில்லை(நான் சரியாக வாசித்திருக்கும் படசத்தில்).

இளயராஜா ஒரு தலித் என்ற தகவலை கண்டுகொள்ளவே கூடாது என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் திருவாசகத்துக்கு ஒரு தலித் சிம்பனி இசையமைப்பதும், அதை அவரால் மட்டுமே தர இயன்றிருப்பது, இயலக்கூடியதாய் இருப்பதும் நிச்சயமாய் வறலாற்றில் பேசப்பட வேண்டியவையாகவே படுகிறது. ஆனால் ஆனந்த் அதை கூட பேசவில்லை என்றுதான் தோன்றுகிறது. 'இளையராஜா இந்த குப்பைகளுக்கு அப்பாற்பட்டவர்' என்ற மேற்கோளை கடைசியில் வைத்து, அதை முன்வைத்தே குணசேகரன் சொன்னது உட்பட(இன்னும் பாவலர் வரதாராஜன், கதார், பாப்மார்லேயையும் தொட்டு) சொல்லியிருப்பதாக படுகிறது. 'தலித்' என்ற வார்த்தை எங்காவது அகப்பாட்டாலே பலருக்கு obsessesionஆக இருக்கிறது. அந்த வார்த்தையை முன்வைத்து என்ன பேசப்படுகிறது என்பது கூட கணக்கில் இல்லை. இளையராஜா 'தலித் என்ற அடையாளத்திற்கு அப்பாற்பட்டவர்' என்று ஒருவர் சொன்னால் கூட, ஜாதி பேசுவதாக சிலருக்கு தோன்றுவதன் உளவியலை எப்படி புரிந்து கொள்வது என்று புரியவில்லை.

(நான் ஆனந்தின் கருத்துக்களை ஏற்றுகொள்ளவில்லை. ஒரு விஷயம் எப்படி பார்க்கபடுகிறது என்பது குறித்து மட்டுமே..)

7/19/2005 6:45 PM  
Blogger ROSAVASANTH said...

http://www.domesticatedonion.net/blog/?item=563&comment=2981#comment2981

இளயராஜா குரல் குறித்து நானும் கருத்து சொன்னதால் இந்த விளக்கம்.

" இசையைக் கேட்காமலேயே மொழியப்பட்ட தீர்ப்புகள் " என்று வெங்கட் யாரை சொல்கிறார் என்று தெரியாவிட்டாலும் நான் முழுவதும் கேட்காமல், கேட்காததை பற்றி எதையும் சொல்லவில்லை. தூள்.காமில் (மீண்டும் மீண்டும் பலமுறை)கேட்ட பாடலை வைத்து, அந்த பாடலை பற்றி மட்டுமே நான் கருத்து சொன்னேன். சுரேஷ் கண்ணன் 'நல்ல சாப்பாட்டில் எதையோ வைத்தாற்போல' என்று உவமை சொன்னதால், அதற்கு மாற்று கருத்தாய் 'புற்றில் வாழ்..'' பாடலுக்கு வேறு குரல் எனக்கு பொருத்தமாய் படவில்லை என்று மட்டும் சொன்னேன். (மற்றபாட்ல்களை கேட்காததால் அது குறித்து கருத்து இல்லை.) 'ராஜாவின் வெறியர்கள் மன்னிக்கவும்' என்று சொன்னது, அவர் கருத்தை மறுப்பவர்களை பற்றி சொல்வதாக நினைத்து எழுதினேன். ஆனால் பிறகுதான் அவர் தன் கருத்தை 'கேனத்தனம்' என்று கோயிந்த்சாமி சொன்னதற்கு பதிலாய் அதை சொல்லியிருப்பதை வாசித்து அறிந்தேன். மற்றபடி இளயராஜா குரல் பொருத்தமாய் இருப்பது என்று நினைப்பது ஒரு கருத்து, அதை மறுப்பது இன்னோரு கருத்து. இதில் ஒருவரை புத்திசாலியாகவும் மற்றவரை முட்டாளாகவும் நான் எண்ணவில்லை.

இளையராஜா தான் பாடி பல பாடல்களை கெடுத்து விட்டதாக ஒரு பரவலான கருத்து இருக்கிறது. 80களின் பாட்ல்களை முன்வைத்து அதை ஓரளவுக்கு நான் ஒப்புகொண்டாலும், 90களின் இறுதியில் அவர் குரலில் ஒரு மாற்றம் வந்திருப்பதாக தோன்றுகிறது. அதன் உதாரணமாக 'தென்றல் வந்து தீண்டும் போது..' பாடலை வேறு யாரும் அத்தனை சிறப்பாக பாடமுடியாது(என்று வெங்கட்டும் ஒப்புகொள்ளும்) கருத்தை முன்வைத்து மட்டுமே எழுதினேன். இது மட்டுமே நான் சொல்ல விரும்பியது. மற்றபடி சண்டை போடும் தகுதியோ, எதிர்கொள்ள இதற்கான ஒரு தர்க்கமோ இருப்பதாகவோ இந்த விஷயத்தில் தெரியவில்லை.

நாளை நீங்கள் எழுத போவதற்கு பெரிதாய் கருத்து சொல்ல எனக்கு விஷயம் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் வெளியே பயணப்பட போவதால் (இந்த முறை இதை இகாரஸ் கிண்டலடிக்க முடியாது, ஏனேனில் அவருக்கு எங்கே என்று தெரியும்) அதை எழுத முடியாது. பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

7/21/2005 4:51 PM  
Blogger ROSAVASANTH said...

http://dystocia.weblogs.us/archives/148
மாண்டிரீ, அருளின் பதிவின் மூலம் இப்போதுதான் இதை படிக்கிறேன். உங்கள் முடிவு எனக்கு சரியாக படவில்லை என்று பலரும் சொன்னதையே சொல்ல வேண்டியுள்ளது என்றாலும் முடிவு உங்க்லளுடையது. ஆனால் நீங்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகிபோனது. நான் நினைத்தே பார்த்ததில்லை.

//அடுத்து ரோசாவசந்த் பதிவுல என்னடா ஏதோ கீழே பொடியா நம்பர் தெரியுதேன்னு அதையும் தட்டுனா அதுவும் ஒரு ஐப்பி உளவாளி. .//

எல்லோரும் ஹிட்கவுண்டர் போடுவதை பார்த்து, ஒரு வலைப்பதிவில் சுட்டி என் பதிவிலும் ஒரு முறை எடுத்து போட்டேன். அது ஐபி சேகரிக்கும் என்ற விவரம் கூட எனக்கு முதலில் தெரியாது. (பிறகு அறிந்துகொண்டேன்.) என்றாலும் ஒருமுறை கூட யார் என் பதிவில் மேய்கிறார்கள் என்று துப்பறிய முயன்றதில்லை. அதற்கான ஆர்வம் நேரம் பொறுமை, எல்லாம்விட அறிவு எனக்கு இல்லை. நண்பர்கள் விருப்பம் தெரிவித்தால் அதை நீக்க கூட முடியும். ஒவ்வொரு நாளும் இத்தனை பேர்கள் பார்த்தார்கள் என்று ஒரு எண்ணை தருகிறதே என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அதை வைத்திருக்கிறேன். வருத்தமாய் இருக்கிறது.

7/21/2005 7:08 PM  
Blogger ROSAVASANTH said...

http://thoughtsintamil.blogspot.com/2005/07/blog-post_22.html#comments

http://www.hindu.com/2005/07/22/stories/2005072207771300.htm

சுட்டிக்கு நன்றி. கட்டுரையை இன்னும் படிக்கவில்லை, போகிறேன்(இன்று அல்லது நாளை).

// 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான சிந்தனாவாதியாக இருக்கப்போகிறவர் கார்ல் மார்க்ஸ்தான் என்று எழுதியிருக்கிறார்.//

21ஆம் நூற்றாண்டில் வாழாமல் 21 நூற்றாண்டின் சிந்தனாவாதியாக இருக்க வாய்பில்லை.

மார்கஸிற்கும் அவர் சிந்தனைகளும் அப்படியே நேரடியான முக்கியத்துவம் இந்த நூற்றாண்டில் இருக்க முடியாது. ஆனால் இந்த நூற்றாண்டில் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்யப்பட போகிறவராகவும், மறு கண்டுபிடிப்புக்கு உள்ளாக போகிறவராகவும், மார்க்ஸும் அவர் எழுதுக்களுமே மிக முக்கியமாக இருக்க போகிறது. முதளாளித்துவத்தினுள்(அதன் உள்முரண்பாட்டின் விளைவாய்) மார்க்ஸ் தீர்க்கதரிசித்த உள்வெடிப்பு உண்டாகாமல் தவறிவிட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அது வேறு வடிவத்தில் வெடிக்கத்தான் போகிறது. மேலும் புதிய சந்தை விஸ்தரிப்புகள் முடிவுக்கு வரும் போதும், அதன் விளைவாய் சுரண்டல் என்பது (நமது அரசர்கள், ஜமீந்தார்கள் காலத்தை விடவும்) கட்டுபடுத்த வியலாத ஒரு bruttal இயல்பை அடையும் போதும் அதன் எதிர்வினையாய் பலவை வெடிக்கும் போதும் எல்லோவற்றையும் புரிந்துகொள்ள பேராசான் மார்கஸை விட வேறு துணை இருக்க முடியாது.

7/22/2005 1:29 PM  
Blogger ROSAVASANTH said...

http://bhaarathi.net/sundara/?p=229

புஷ்பராஜாவிற்கு நிச்சயம் தனது அரசியல் மற்றும் அனுபவம் சார்ந்த சார்புகள் இருக்கும் என்றாலும் அவர் எந்த படுகொலையைம் நியாயப்படுத்தியதாய் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் சுந்தரவடிவேலின் சார்பும், (இதுவரை ஈழப்பிரச்சனை பற்றி பேசும்போது இது குறித்து மௌனம் சாதிப்பது, தவிர்ப்பது என்பதிலிருந்து மாறி இந்த முறை)என்னவாவது சொல்லி புலிகளையும் அவர்களின் படுகொலைகளையும், பாசிசத்தையும் நியாயபடுத்துவதே அடிப்படை நோக்கு என்பது இந்த ஒருவரியில் விளங்கிவிடுகிறது.

//இதன் விளைவாகவே இந்தியாவினால் பயன்படுத்தப் படக் கூடும் என்று கருதுவோர்களைப் புலிகள் இயக்கம் அழித்திருக்கக் கூடும். சுதந்திரப் போராட்டம் இத்தனை மாமாங்கங்களாக கருவறுக்கப் பயன்படுத்தப் பட்ட அதே வழிமுறையை எந்த வளர்ந்த இயக்கந்தான் அனுமதிக்கும்? //

புஷ்பராஜாவின் வாதங்களுக்கு போராட்டத்தில் அவருடய நேரடி பங்கேற்ப்பு சார்ந்த நியாயங்கள் இருக்கும். சுவ செய்வது பாசிசத்தையும், படுகொலைகளையும் ஒரு வெளிப்பார்வையாளனாய் நியாயப்படுத்தும் அரசியல் அடிப்படைவாதம் மட்டுமே. வன்மையாய் கண்டிப்பதால் பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் அதை மட்டுமே இதற்கு பதிலாய் செய்ய முடியும்.

8/09/2005 5:26 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Vasanth,
Hope you had a good trip, it was unfortunate that we could not meet, though !!!

8/09/2005 6:56 PM  
Blogger ROSAVASANTH said...

http://bhaarathi.net/sundara/?p=229

சுவவின் பதில் எதிர்பார்த்த மாதிரி எதுவும் புரியவில்லை. ‘அரசியல் அடிப்படைவாதம்’ என்று நான் சொன்னது என்னால் முடிந்த அளவு அவரை பற்றி நல்லவிதமாய் சொன்ன வார்த்தை. அதாவது அவர் எழுதியதை ‘திட்டமிட்ட கயமைத்தனம்’ என்றெல்லாம் எடுத்துகொள்ளாமல், தான் நம்பும் கருத்து கொள்கை, அரசியல் இதன் மீதான விமர்சனமில்லாத ஒற்றை பார்வையையும், அதன் விளைவாய் பாசிசத்தை நியாயப்படுத்துவதையும் குறிக்கவே அப்படி குறிப்பிட்டேன்.

அவருடய வரி போகிற போக்கில் மாபெரும் படுகொலைகளை நியாயபடுத்தி மொட்டையாய் ஒரு தர்க்கத்தை வைக்கும் ஒரு வரி. பொதுவாய் அதன் விஷம் கண்டுகொள்ளவும் படாது. மேலும் அது பச்சை பொய். நிச்சயம் இந்திய தலையீட்டுக்கு முன்னமேயே புலிகள் நிகழ்த்திய அராஜகங்களை அவர் கேள்விபடாமல் இருக்க முடியாது. முஸ்லீம்களின் வெளியேற்றம் மற்றும் படுகொலைகளுக்கு இந்த சால்ஜாப்பு செல்லுபடியாகாது என்றும் தெரியும். தெரிந்தே தனது அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப புளுகுகிறார்.

யாராலும் இது கண்டுகொள்ளப்படாத காரணத்தால் எழுத நேர்ந்தது. மற்றபடி புலிகளின் பாசிசத்தைவிட மற்ற பாசிசங்களை இன்னும் அதிகமாய் நான் எதிர்த்து வருவது வெளிப்படை.

சுவ பதிலின் பெரும்பாலான வரிகள் தன் அரசியலை தர்க்கப்படுத்துதல் என்பதிலிருந்து, விமரசனமான அணுகுமுறையை கொண்டிருப்பதை என்னால் காண முடியாததாலும், கிட்டத்தட்ட ஒரு வருடமாய் கவனித்து விவாதிப்பதில் இப்போது நம்பிக்கை இல்லாததாலும், வெறும் கண்டனத்தை மட்டுமே, ஒரு குரலாய் முன்வைப்பதை தவிர வேறு எதையும் செய்ய தோன்றவில்லை. உதரணமாய் ” அதே கருணாவின் பெயரால் இன்றைக்கும் நிகழ்ந்திருக்கும் கொலைகளை ஒரு போராளிக் குழு எப்படி எதிர்கொள்ள வேண்டுமென நாம் எதிர்பார்ப்பது? ” என்று நியாயம் கேட்பவர் மாற்று கருத்துகளுக்கும், அரசியலுக்கும் எத்தகைய வெளியை, செயல்படும் சுதந்திரத்திற்கான இடத்தை புலிகள் விட்டு வைத்திருக்கின்றனர் என்று சின்னதாகவாவது யோசித்திருந்தால் பேசியிருக்க கூடும். உதாரணமாய் மயூரன் அவர்கள் விமர்சனபூர்வமாய் எடுக்கும் புலி ஆதரவு போல இருந்தால் கூட பேசுவதில் பயன் இருப்பதாக கருத முடியும்.

8/10/2005 8:07 AM  
Blogger ROSAVASANTH said...

Bala, thanks. Whole trip was nice, will write again later.

8/10/2005 8:07 AM  
Blogger ROSAVASANTH said...

http://bhaarathi.net/sundara/?p=229

என் முதல் பின்னூட்டத்திற்கு பதிலாய் சுவ எழுதியது "//அவர் எந்த படுகொலையைம் நியாயப்படுத்தியதாய் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.//
அவரது புத்தகத்தில் அவரே தான் எந்தப் படுகொலையையும் ஆதரிப்பதாய் வெளிப்படையாகச் சொல்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தனக்கு விருப்பமில்லாத ஒருவர் கொல்லப் பட்டதையோ (உதாரணமாக பஸ்தியாம்பிள்ளை என்கிற காவல் துறை ஆய்வாளர், செட்டி என்ற தனபால சிங்கம், மற்றும் பலர்), தான் நாயகப் போராளிகளாய் நினைத்தவர்கள் செய்த கொலை/முயற்சிகளையோ (உதாரணமாய் சிவகுமாரன்) ஒரு வித சிலிர்ப்புடனும், பூசி மெழுகப் பட்ட விருப்புடனுமே எழுதியிருக்கிறார் என்பதாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். அவர் அகிம்சாவாதியென்பதாக நீங்கள் சொல்ல மாட்டீர்களென நம்புகிறேன்.

//சுவ செய்வது பாசிசத்தையும், படுகொலைகளையும் ஒரு வெளிப்பார்வையாளனாய் நியாயப்படுத்தும் அரசியல் அடிப்படைவாதம் மட்டுமே.//
உள் நாட்டு மற்றும் வெளி நாட்டுப் பேரினவாதிகளின் பாசிசமும், அடிப்படைவாதமும் இத்தனைக் காலமாய் ஈழத்தவர்களைத் தொடர்ந்து தாக்கி வந்திருக்கிறதே அதைக் கண்டு நாம் என்ன செய்திருக்கிறோம்? இப்போது அம்மக்களே தமக்குரிய வழியினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களின் இத்தேர்வின் மீது எனக்கு விமர்சனங்கள் இல்லாமலில்லை. நேற்றைய டிசேயின் கவிதையைத் தொடர்ந்த அவரது முன்னுகையில் குறிப்பிட்டது மாதிரி, புலிகள் நாளை ஒரு நாட்டினை அமைத்துவிட்டால் அவர்களுக்கு நினைவுறுத்தவென என்னிடம் தனிமனிதருக்கான முறைப்பாடுகள் இருக்கும். கருணாவின் வெளியேற்றத்தின் போதே யாழ்ப்பாணத்து வேளாள அதிகாரத்தினைக் கண்டித்திருக்கிறேன். அதே கருணாவின் பெயரால் இன்றைக்கும் நிகழ்ந்திருக்கும் கொலைகளை ஒரு போராளிக் குழு எப்படி எதிர்கொள்ள வேண்டுமென நாம் எதிர்பார்ப்பது? அரசின் ஆசியோடு நிகழும் இக்கொலைகளின் மூலமாகவும், ஆளும் அமைச்சர் முதற்கொண்டு ஒரு நாட்டின் சிறுபான்மையினரை (தமிழர்களை) இழிவு படுத்திப் பேசுவதன் மூலமும், அமைதி உடன்படிக்கையை ரத்து செய்ய ஜேவிபி பேரினவாதிகள் கூறுவதன் மூலமும், மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒரு போர் தமிழர்களின் மீது வலிந்து திணிக்கப் படுவதை எவ்வழியில் எதிர்ப்பது? இதனாலெல்லாம் நான் அடிப்படைவாதி, காசு கொடுத்துவிட்டு போர்ச்சினிமா பார்க்கும் ‘ரசிகன்’ என்றெல்லாம் அர்த்தமில்லை என்பது என்னைப் பற்றி நான் அறிந்தது. எந்தவுயிரும் (இந்திய, தமிழ், சிங்கள, ஜேவிபி, எல்டிடியி, ஈபிடிபி, குபிமாபி, தபிதுபி…) துன்பப் படாமல் விடுதலை கிடைத்தால் அதைவிட வேறென்ன வேண்டும்? தங்கள் கருத்துக்கு நன்றி. "

தங்கமணி என் இரண்டாவது பின்னூட்டத்தை தொடர்ந்து எழுதியது, "//அவர் எழுதியதை ‘திட்டமிட்ட கயமைத்தனம்’ என்றெல்லாம் எடுத்துகொள்ளாமல், தான் நம்பும் கருத்து கொள்கை, அரசியல் இதன் மீதான விமர்சனமில்லாத ஒற்றை பார்வையையும், அதன் விளைவாய் பாசிசத்தை நியாயப்படுத்துவதையும் குறிக்கவே அப்படி குறிப்பிட்டேன்.//

ஈழ அரசியலில் ஒரு காலத்தில் தீவிரமாய் பாங்காற்றியவர்; ஸ்ரீலங்கா, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவங்களை எதிர்த்தும், கலந்து பணியாற்றியவர். பாசிச அரசியலின் முகங்களை, இலங்கை, இந்திய, தமிழ் (அவரது இயக்க்ம் உட்பட) படைகளின் செயல்பாடுகளின் மூலம் அறிந்தவர். சிலவற்றினால் பாதிக்கப்பட்டு, சிலவற்றை தானே கைக்கொண்டு அல்லது உடனிருந்து நிகழ்த்தியவர் ஒரு புத்த்கம் எழுதத் தொடங்கும் போது எப்படி திட்டமிடாமல் இருந்திருப்பார் என எனக்குத்தெரியவில்லை வசந்த். நான் அவ்வளவு வெள்ளையாய் புஸ்பராஜ் அண்ட் கோவை நினைக்கவில்லை. சுந்தரவடிவேலுக்கு இருப்பதை விட புஸ்பராஜுக்கு பாசிசத்தை ஆதரிக்க வேண்டிய தேவையும், அதனால் அடையும் பலன்களும் அதிகம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. சுவ எந்த பயனையும் யாரிடமும் இருந்து இதற்காக பெறவில்லை என்று எனக்குத் தெரியும்; புஸ்பராஜைப் பற்றி (அவரது இந்திய சார்பு, தீராநதி பேட்டி மூலமெல்லாம்) அறியவரும் போது எனக்கு அப்படி நினைக்கமுடியவில்லை.

இன்னொரு விசயம் நான் குறிப்பிட விரும்பியது உள்ளது வசந்த்.

//ஒரு வெளிப்பார்வையாளனாய் நியாயப்படுத்தும் அரசியல் அடிப்படைவாதம் //
எனக்கு பாலஸ்தீன அரசியலை, யூதர்கள் செய்யும் ஒடுக்குமுறையை விமர்சிக்க, ஆணாதிக்க அரசியலை பெண்ணிலை வாதம் வழியாக பார்க்கமுடிவதுபோல, தலித்துகளின் போராட்ட நியாயத்தை உணர்ந்துகொள்வது போல ஈழப் போராட்டத்தைப் பற்றிய அணுகுமுறைக்கும் விமர்சனத்துக்கும் முகம் கொடுக்க முடியும் என்று எண்ணுகிறென். நான் மேற்க்கூறிய விசயங்களில் வெளிப்பார்வையாளன் தான், ஒரு வகையில். அதே போல பாலஸ்தீன போராட்டத்தில் இருக்கும் சில பொதுமக்கள் விரோத அணுகுமுறையையும்; பெண் விடுதலையை, தலித் உரிமைகளை தவறாக பயன்படுத்தும் சில தனிப்பட்ட போக்குகளையும் அறிந்தே இவைகளை ஆதரிக்கச் செய்கிறேன். ஏனெனில் இவைகளை நோக்கி நான் இந்த காரணங்களை பலவீனப்படுத்தமுடியாது என்பதை முன்னிட்டே அவ்வாறு செய்கிறேன். அப்படியே ஈழபோராட்டத்திலும்.
நீங்கள் பாலஸ்தீனப்போராட்டத்திலும் மற்ற அண்டை விவகாரங்களில் ஈடுபடும், நிலையெடுக்கும் இந்திய /ஊடகங்கள், அரசு சார்ந்த/ சாராத அமைப்புகளின் நிலை ஈழப்பிரச்சனையில் இருந்து தமிழ் நாட்டு மக்களை அன்னியப்படுத்தும் விதமாக இருப்பதைப்போல இங்கு சொல்லியிருப்பதாக எனக்குப்படுகிறது. "

அதற்கு பதிலாய் நான் எழுதியது

"அன்புள்ள தங்கமணி,

சுந்தரவடிவேலின்/உங்களின் பல கருத்துக்களுடன் ஒத்து போகும், வேறுபட்டாலும் அதை பெரிது படுத்தாத நான் தொடர்ந்து ஈழநிலைபாட்டில் உங்கள் இருவரையும் எதிர்த்து வருகிறேன். இப்போதைக்கு இந்த விஷயம் தொடர்பாக சில.

1. ‘’திட்டமிட்ட கயமைத்தனம்’ என்றெல்லாம் எடுத்துகொள்ளாமல்…, அரசியல் அடைப்படைவாதம் மட்டுமே’ என்று நான் குறிப்பிட்டது புஷ்பராஜை அல்ல, சுந்தரவடிவேலை. நீங்கள் சொன்னது போல் சுயலாபத்துக்காக அன்றி, தான் நம்புவதை அழுத்தவே சுவ பொய் தர்க்கம் செய்கிறார் என்று சொல்லி, அதை ஒருவகை அடிப்படைவாதம் என்றேன். புஷ்பராஜ் பற்றி கருத்து சொல்லவில்லை. இப்போது புஷ்பாராஜை பற்றி சொல்லவேண்டுமானால், தனக்கு உயிராபத்து இருக்கக் கூடிய சாத்தியதை அறிந்தும், இன்னும் இந்த பதிவு உட்பட பல வகைகளில் தான் வசைப்பாடக்கூடும் என்று நன்கு அறிந்தும் தான் நம்புவதை நேர்மையாக முன்வைத்த அவர் குறித்து மிகுந்த மரியாதை மட்டுமே உண்டு-அவர் பார்வைகளை பலவற்றில் ஏற்றுக்கொள்ளாத போதும்.

ஆனால் நீங்கள் புஷ்பராஜ் எழுதியதை ‘திட்டமிட்ட கயமைத்தனம்’ என்று சொல்ல வருவதாக தெரிகிறது. தீவிரமாய் நேரடி போராட்டத்தில் பங்காற்றி, இன்றும் ஏதோவகையில் செயல்பட்டு வரும் ஒருவரை, தன் சொந்த நாட்டில் வாழமுடியாமல் வேறு நாட்டில் புலம் பெயர்ந்த, நேரடியாய் பாதிக்கப்பட்ட ஒருவரை பற்றி இப்படி பேச உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அவர் மூலமாய் அவர் வாயிலிருந்தும், எழுத்திலிருந்தும் நேர்மையாய் வந்த தகவல்களை வைத்து அவரை இந்தியக்கைக்கூலியாய் காட்ட முனைவதில் உள்ள நேர்மையை கொஞ்சமாவது பரிசீலிக்க முடியுமா? உண்மையிலேயே இந்தியக் கூலியாய் அவர் இதை எழுதியிருந்தால், பல தகவல்களை அவர் தன் வாயாலேயே சொல்லியிருக்க மாட்டார்.

எல்லாவற்றையும் சதி என்றும், தனக்கு ஒத்து வராததை எல்லாம் துரோகம் என்றும் பார்பதையே அடிப்படைவாதம் என்று சொல்கிறேனே ஒழிய, இங்கே யாருக்கு என்ன லாபம் என்பது குறித்து நான் பேசவில்லை. பாசிசத்தை ஆதரிப்பதால் சுவவிற்கு லாபமில்லை என்று அவருடய நண்Bபர் என்ற முறையில் சொல்லும் உங்களால், மற்ற இயக்கங்களையும், குரல்களையும் இடமில்லாமல் கொன்றழித்த பாசிசத்தை ஒரு ஒற்றை வரியில், நியாய்படுத்துவதையும், அதை ‘பச்சை பொய்’ என்று நான் சொன்னதையும் மறுக்க சிறிது கூட முனையவில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. அதையேத்தான் நீங்களும் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். புலிகளின் அத்தனை கொலைகளுக்கும் ஒரு மத அடிப்படைவாதியை விட மோசமாக எதாவது காரணம் சொல்லி தர்க்கபடுத்தி வரும் நீங்களும் சுந்தரவடிவேலும், தாராக்கி கொலையுண்ட போது மட்டும் குரல் கொடுத்தால், அது எத்தனை போலியாய் தோற்றமளிக்கும், அதன் தார்மீகம் எந்த அளவிற்கு எள்ளி நகையாடப்படும், அந்த கொலைக்கு சில உள்ளங்களுக்கு நியாயமாய் ஏற்பட வேண்டிய அனுதாபம் கூட திசைதிருப்பப்படும் என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

புஷ்பராஜ் எந்த அரசு இயந்திரங்ளுடனும் தொடர்பு இல்லாமல், பாரீஸ் வெளியே வாழ்ந்து, கிடைத்த வேலையை பார்த்தபடி, இலக்கிய கூட்டம் என்றும், நண்பர்கள் வட்டம் என்றும் இருப்பவர். மிக வெகுளியான மனிதர். அவரை கைக்கூலி என்று ‘கேள்விப்பட்ட தகவலை’ வைத்து சித்தரிக்க முடியுமானால், அதைவிட மிக எளிதாக உங்களையும் சுவவையும் சித்தரிக்க முடியும். அல்லது நீங்கள் சுவவிற்கு அளிப்பது போல் ஒரு சர்ட்டிஃபிகேட்டை புஷ்பராஜிற்கு என்னால் அளிக்க முடியும். இதில் வேறு என்ன பேச இருக்கிறது?

2. கடைசி பத்தியில் நீளமாய் எழுதியிருப்பதற்கும் நான் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? எங்கேயாவது இதுவரை ஈழ அரசியல் பற்றி பேசுவதை எதிர்த்தோ, அல்லது இந்திய மற்றும் இலங்கை அரசு சார்பாக நான் பேசுவதை கண்டிருக்கிறீர்களா? அல்லது வெளிப்பார்வையாலனாய் ஒரு விஷயம் குறித்து பேசக்கூடாது என்றா நான் சொன்னேன்? இங்கே நான் எழுதியது எதை பற்றி?

ஒரு வரி அதுவும் பச்சையான ஒரு புளுகு, புலிகளின் அத்தனை கொலைகளையும் நியாயப்படுத்தும் தர்க்கத்தை அளிக்க பயன்படுத்த படுகிறது. அதை ஈழத்தவர் செய்தால் கூட பொறுக்க முடியும். சுவ செய்வதற்கான கண்டனத்தை வைத்தால், நான் சொன்னதை மறுக்காமல் சம்ப்ந்தமில்லாமல் பேசுகிறீர்கள். இதைத்தானே இணையம் முழுக்க எல்லாவித அடிப்படைவாதிகளும் செய்து வருகிறார்கள்.

மேலும் பாலஸ்தீன விடுதலை போராட்டத்திற்கும் ஈழத்திற்கு அடிப்படை வேறுபாடுகள் உண்டு. அன்று சிதறலாக போராடிக்கொண்டிருந்த அத்தனை போராட்டக்குழுக்களையும் இணைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கம் உருவானது. இங்கே புலிகள் இயக்கம் இருந்த அத்தனை குழுக்களையும் காலி செய்து தன்னைதானே பிரதிநிதியாக்கி கொண்டது. (இதில் இந்திய சதி ஒரு பங்கு வகித்தாலும், அழித்தொழிப்பு அதற்கு வெகு காலம் முன்னமே தொடங்கிவிட்டது. இன்றும் தொடர்கிறது.) பாலஸ்தீனில் முரண்பாடு இருந்தாலும் முக்கிய எதிரி இஸ்ரேல் என்பதில் யாருக்குமே குழப்பம் இருந்ததில்லை. இங்கே மாற்று குரல்களுக்கு இயங்கக் கூடிய அரசியல் வெளியை மறுத்து, இலங்கை அரசு சார்பாய் இயங்குவதை தவிர வேறு சாத்தியங்களை மறுத்து தன் இருப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறது புலிகள் இயக்கம். சிங்கள அரசை விட மாற்று குரல்களையே முக்கிய எதிரியாய் புலிகள் இயக்கம் பார்த்து வருகிறது. எல்லாவற்ரையும் விட துரோகிகள் என்று உங்களால் சித்தரிக்க படுபவர்கள் மட்டுமின்றி, புலிகளும் கூட தன் இருப்பிற்கு ஆபத்து என்றால் சிங்கள அரசுடன்/இராணுவத்துடன் இணைந்து செயல்பட (இணைந்து மற்றவர்களை தாக்க) தயங்காத, செய்திருக்கிறது.

கடைசியாக நீங்கள் கடைசி பத்தியில் சொன்ன வாதத்தை, குறிப்பாய் பாள்ஸ்தீனம் ஈழத்தை வைத்து, இந்தியாவில் இருந்துகொண்டு பாலஸ்தீனப்பரச்சனை குறித்து பேசும் அததனை பேரையும் குறிப்பிட்டு நான் வெகு காலமாய் சொல்லிவருகிறேன். உங்களிடமும் சொல்லியிருக்கிறேன்.

3. தங்கமணி/சுவவின் இந்த நிபந்தனையற்ற புலியாதரவை பெரிதாய் விமர்சிக்க தேவையில்லை என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் இது (வலைப்பதிவு சூழலில்) ஒரு பெரிய பாதகத்தை ஏற்படுத்துவதாய் நான் நினைக்கிறேன். டீஜே நேரடியாக தன்னை புலிகள் ஆதரவாளராய் சொல்லி கொள்பவர். ஆனாலும் கூட அவர் எழுத்துக்களில் பலமுறை புலிகள் பற்றி விமர்சனமாய் பேசியுள்ளதை படித்திருக்கிறேன். ரமணி விமர்சித்து நான் படிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து தான் ‘புலிகள் ஆதரவாளன் இல்லை’ என்று சொல்வதையாவது படித்து வருகிறேன். மயூரனின் சமீபகாலத்து விமர்சனம் கலந்த எழுத்து மிகுந்த நம்பிக்கையை தருகிறது. இந்த சூழலில் இருக்கும் விமர்சனங்களையும் கொன்றழிக்கும் விதமாய், எதையாவது சொல்லி பாசிசத்தை நியாயப்படுத்தும் வேலையை தொடர்ந்து தங்கமணியும், சுந்தரவடிவேலும் செய்துவருகிறார்கள். அதன் மூலம் பழைய ஸ்டீரியோடைப் சொல்லாடல்களிலேயே குளிர்ந்து போய் இங்கே விவாதமே செத்து வருகிறது. அதன் காரணமாகவே இத்தனை கடுமையாய் எனக்கு தங்கமணியையும், சுவவையும்(இந்த விஷயத்தில்) எதிர்க்க வேண்டியுள்ளது"

8/10/2005 1:16 PM  
Blogger ROSAVASANTH said...

http://bhaarathi.net/sundara/?p=229

ஈழநாதன் எழுதியது, "அன்பின் ரோசாவசந் உங்கள் பதில் தொடர்பில் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.நான் ஆரம்பத்தில் புலிகளை நியாயப்படுத்துவதாகவும் கண்மூடிய ஆதரவாகவும்தான் எழுதினேன் அதை ஒப்புக்கொள்வதில் தயக்கமில்லை.ஆனால் இப்போது அந்தப் பார்வையில் மாற்றமேற்பட்டிருக்கிறது.பல்வேறு விதமான விமர்சனங்களை பல்வேறு தரப்புகளிடம் நேரடியாகத் தெரிவித்தபோதும் அவற்றை இணையத்தில் வெளிப்படையாக எழுதுவதில் தயக்கமிருக்கின்றது.
உள்ளகக் கட்டமைப்பு நிர்வாகம் அவர்களின் செயற்பாடு போன்றவற்றை இங்கே விமர்சிக்கும்போது அது அவர்களை வழிப்படுத்தவன்றி புலிகளைத் திட்டுபவர்களுக்கு அவலாக மாறிப்போகும் சூழ்நிலை இங்கு நிகழ்வதால் அதனைத் தவிர்க்கிறேன் அதனையே ரமணியும் செய்கிறார் என நினைக்கிறேன்.

ஆனாலும் சில கருத்தாடல்களில் ஒட்டுமொத்தமாக புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழும்போது பதிலளிக்கையில் அது புலிகளை நியாயப்படுத்துவதாக முடிந்துவிடுகின்றது.

இப்போதுகூட நீங்கள் புஸ்பராசா பற்றிக் கூறியவற்றில் எதிர்க்கருத்து உண்டு இதை நான் புலிகளை நியாயப்படுத்துகிறேன் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளாவிட்டால் சொகிறேன்.

நீங்கள் கூறியபடி புலிகள் மற்றைய இயக்கங்களில் கை வைத்தமைதான் அவர்களை அரசுடன் சேரத் தூண்டியது என்பது ஓரளவுக்கு உண்மை ஆனால் புலிகள் மற்றைய இயக்கங்களின் மீது கைவைக்க முன்னரே நானா நீயா என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டது அதில் ஒருத்த்ரை மற்றவர் வெல்வதற்கு றோவிடம் தான் கையேந்தினார்கள் அதில் முதன்மையானது புஸ்பராசா பின்னாளில் அங்கம் வகித்த ஈ.பி.ஆர்.எல்.எவ்.றோவின் வேண்டுஓளுக்கு ஏற்ப புலிகளின் மீது தாக்குதல் நடத்துவதை முதலில் ஆரம்பித்தவர்களும் இவர்களே.அதே போன்றுதான் ரெலோவும் புலிகளை தாக்கியழிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்தபோது அதுவே புலிகளுக்கு வசதியாகி ஒன்று சேர மாற்று இயக்கங்களை தடை செய்ய வசதியாகியது.

மாற்றுக் கருத்து மாற்றுக்கருத்து என்றும் சகோதரப்படுகொலை என்றும் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் புஸ்பராசா இயக்கங்களின் உட்கொலைகள் தங்கள் இயக்கத்துக்குள்தான் முதலில் ஆரம்பித்தது என்பதை ஏன் விரிவாகச் சொல்லவில்லை.பட்டும் படாமலும் ஈ.பி.ஆர்.எல்.எப்பும் செய்ததுதான் என்று இழுத்து புலியைச் சாடுவதிலே குறியாக இருக்கிறார்.

முஸ்லிம் மக்களிடம் வேலை செய்தது தங்கள் இயக்கம்தான் என்று மார்தட்டும் புஸ்பராசா முஸ்லிம் இளைஞர்களை உளவாளிகள் என்று பிடித்துச் சித்திரவதை செய்து கொண்ரு சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தது ஈ.பி.ஆர்.எல்.எப்தான் என்று சொல்லவில்லை ஏன்.அவர்களின் வதைமுகாம்களில் எத்தனை முஸ்லிம் இளைஞர்கள் இருந்தார்கள் என்று அவரால் கூறமுடியுமா?

நீங்கள் சோபாசக்தி,சுகன்,புஸ்பராசா நண்பர் வட்டத்திற்குள் இருந்தவர் அந்த அனுபவத்தை வைத்து.புஸ்பராசா அரசாங்கச் சார்பற்றவர் வெகுளி தானுண்டு தன்பாடுண்டு என்றிருக்கிறார் என்ற கருத்தை உன்வைக்கிறீர்கள் ஆனால் அவரது மற்றைய நண்பர்களோ புஸ்பராசா சாதித்தடிப்புப் பிடித்தவர் தன்னை திட்டிய காரணத்துக்காக சுகனை(என்றுதான் நினைக்கிறேன்) சுடுவதற்காக பாரிசில் துப்பாக்கியுடன் அலைந்தவர் என்று தேனியில் எழுதுகிறார்கள் எது உண்மை எது பொய்.

இன்று நான் இந்தியாவுக்குப் போகவேண்டியிருந்தாலே வீசா எடுப்பதற்கு பலவிதமான கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருக்க புஸ்பராசா மட்டும் ஆண்டுக்குப் பலதடவை இந்தியா போய் வர முடிகிறது.இந்தியப்படை இலங்கையில் இருந்த காலத்தில் அவர்கள் துணையுடன் இலங்கை வந்து போகமுடிந்த புஸ்பராசா தன்னுடைய நூலில் இந்தியப்படைகள் இலங்கையில் புரிந்த செயல்கள் பற்றி துரும்பைக் கூடக் காட்டவில்லை இது சார்பில்லாத அல்லது மறைமுகமாக ஆதரவில்லாத செயல் என்கிறீர்களா?

ஈ.பி.ஆர்.எல்.எப் முதல் புலிகள்,ரெலோ,புளொட் என்று சகலரும் பாசிசவாதிகள் தான் இவர்களில் யாருமே மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்ததில்லை.எதிர்த்தவரைப் படுகொலை செய்யத் தயங்கியதில்லை.தங்கள் நலனுக்காக எந்த அரசுகளை எதிர்க்கிறார்களோ அவர்களுடன் கூட்டுச் சேரக் கூடத் தயங்கியதில்லை.

அவர்களுடன் இருந்து செய்வதையும் செய்துவிட்டு விலகி வந்த பின்னர் நான் கறைபடியாத கரங்களை உடையவன் இந்த இயக்கமொன்றுதான் பாசிவாதிகள் மற்றவர்கள் எல்லோரும் மாற்றுக் கருத்தாளன் என்று அறிக்கைவிடும் ஒருவரை சு.வவுக்கு எதிர்க்குரலாகத் தன்னும் நீங்கள் நியாயப்படுத்தக் கூடாது என்பதே எனது விருப்பம்.

மற்றும்படி மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்வதில் புலிகள் நிறைய மாறிவிட்டார்கள் அவர்களை எதிர்ப்பவர்கள் தான் இன்னமும் மாறவில்லை "

என் பதில், " அன்பின் ஈழநாதன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

புஷ்பராஜை பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஒரே ஒரு முறை விரிவாய் சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். அதை வைத்து எந்த சான்றிதழும் முழுமையாக அளிக்க ஏலாது. அவர் எழுதியதிலும் நீங்கள் எழுதியது படி பல விமர்சனங்கள் இருக்கலாம். ஒரு மாற்று குரலாய் அவரை பற்றி சொல்வதற்கான சாத்தியமாகவே, இப்படியும் சொல்ல முடியும் என்றே கூறினேன்.

மற்றபடி நீங்கள் குறிப்பிடும் சில தகவல்களை சரி பார்க்க என்னிடம் இப்போது வழியில்லை.( …நண்பர்களோ புஸ்பராசா சாதித்தடிப்புப் பிடித்தவர் தன்னை திட்டிய காரணத்துக்காக சுகனை(என்றுதான் நினைக்கிறேன்) சுடுவதற்காக பாரிசில் துப்பாக்கியுடன் அலைந்தவர் “) பிறகு வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் இப்படி ஒரு புத்தகம் எழுதினால் நிச்சயம் எதிர்ப்பும், பல அவதூறுகளும் (அதில் சில நியாயமானதாகவும், நியாயமற்றதாகவும் இருக்கும்) வரும். கேள்விப்பட்டதை வைத்து பேசுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.

“ஈ.பி.ஆர்.எல்.எப் முதல் புலிகள்,ரெலோ,புளொட் என்று சகலரும் பாசிசவாதிகள் தான் இவர்களில் யாருமே மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்ததில்லை.எதிர்த்தவரைப் படுகொலை செய்யத் தயங்கியதில்லை.தங்கள் நலனுக்காக எந்த அரசுகளை எதிர்க்கிறார்களோ அவர்களுடன் கூட்டுச் சேரக் கூடத் தயங்கியதில்லை.” என்று நீங்கள் சொல்வது எல்லோருக்கும் பொருந்தும்(ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் இருந்தாலும்) என்று ஒப்புகொள்கிறேன். ஆனால் இதை எல்லாம் ஈபிதான் தொடங்கியது என்று நீங்கள் சொல்வது குறித்து பலத்த சந்தேகங்கள் உள்ளது. அது எப்படியிருப்பினும், நான் இங்கே ஆட்சேபித்தது சுவவின் வரி நியாயத்தை, அதன் பின்னுள்ளதை மட்டுமே. அதன் நோக்கம் இந்த புத்தகத்தின் மீதான விமர்சனங்களை தடுப்பது அல்ல.

முன்பு புலிகளை எல்லாவிதத்திலும் நியாயப்படுத்துவதை மட்டுமே ஒரு கடமையாய் செய்து வந்த் நீங்கள் இப்போது விமர்சன பூர்வமான அணுகுமுறையை கொண்டிருப்பது மிகவும் ஆரோக்கியமானது. அது மழுங்கடிக்கப்பட கூடாது என்பதுதான் என் கவலை. நீங்கள் எழுதுவதை தொடர்ந்து படித்து வருகிறேன். தொடருங்கள்.

இந்த பின்னூட்டத்துடன் பல காரணக்களுக்காய் இப்போது நான் தொடருவதாய் இல்லை. நன்றி. "

8/10/2005 4:43 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter