ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, June 30, 2005

வடிவங்கள்!



நாரா எனும் இடத்தில் உள்ள ஒரு அடுக்கு கோபுரம்.



நாராவில் உள்ள கனோனின்(அதாவது அன்பின் காளியாகி(அதாவது பெண்பால் கடவுளாகி)ப்போன புத்தரின்) ஆலயம்.






க்யோத்தோ ஹேயியான் (heian) ஷிண்டோ ஆலயம்.





கின்காகுஜி(ginkakuji) எனப்படும் ஜென் வனம். ஜப்பானிய மொழியில் gin என்றால் வெள்ளி. ஆனால் இந்த கோவில் வெள்ளியால் ஆனது அல்ல. பெயர் காரணம் எனக்கு தெரியாது. Kin என்றால் தங்கம். க்யோத்தோவில் kinkakuji எனப்படும் தங்கத்தாலேயே முழுவதுமான கோவிலை கொண்ட ஜென் வனமும் உள்ளது. அதன் புகைப்படம் விரைவில் வரும்.



க்யோத்தொ டவர்.

எல்லா மதத்தையும் 'ஒப்புகொள்ளும்' சகிப்பு தன்மையை ஜப்பானில் பார்க்க முடியும். (இந்துமதத்திலும் இது உண்டு என்றாலும், அதில் உள்ள பிரச்சனைகள், அதற்கு நேரெதிரான சாதியம், இவற்றை கணக்கில் கொள்ளாமல், முன்னதை மட்டும் முன்வைத்து விடப்படும் பீலாக்கள், புளுகுகள், மிகைப்படுத்தல்கள், கட்டமைத்தல்கள், இவற்றிற்கு நேரெதிராக இவற்றையெல்லாம் எதிர்த்து இந்த தன்மையையே நிராகரிக்கும் இந்துத்வ எதிர்பாளகள், இதையெல்லாம் கடந்து சார்புநிலையின்றி பார்க்கும் வேலையை இப்போது செய்யாமல், ஜப்பானிய் வாழ்க்கை குறித்து நான் சொல்வது வேறு என்று மட்டும் சொல்லிகொள்கிறேன்.) பல ஜப்பானிய திருமணங்கள் பகலில் கிருஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிகொண்டும், இரவு போய் ஷிண்டோ ஆலயத்திலும் நடப்பதை பார்க்க முடியும். ஷிண்டோ மதம் ஜப்பானின் தொன்மையான மதம். புத்த மதத்தின் வரவு அதை அழிக்கவில்லை. ஒவ்வொரு ஜப்பானியனும் 'ஷிண்டோவாய் பிறந்து, புத்தமதத்தவனாய்' இறப்பதாய் சொல்வதுண்டு. அதே நேரம் கிருஸ்தவ மதமும் வாழ்வில் கலந்திருப்பதையும் காணமுடியும். (ஜப்பானிய மதவாழ்க்கை எப்போதும் சகிப்பு தன்மையுடன் இருந்ததாக சொல்ல முடியாது. ஒரு காலகட்டத்தில் கிருஸ்தவர்களாய் மாறியவர்களை சிலுவையில் அறைந்த வரலாறும் உண்டு) ஆனால் கொள்கையளவில் இன்று அனைவரும் ஏற்றுகொண்டிருக்கும் மதம் கேபிடலிஸம்.

தீ மிகவும் பயனுள்ளது.அதன் பயன்கள் சொல்லி மாளாது. தீ அழகானது. அதை சாமர்த்தியமாய் பயன்படுத்த வேண்டும். அதனை வழிப்படலாம், விளையாடக்கூடாது. காட்டில் ஒரு பொந்தில் வைத்தாலும் கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பாய் அழகு பார்க்க வேண்டும். காடு வெந்து தணியும் வரை வேடிக்கை பார்க்க கூடாது. எல்லாம் சுபிட்சமாய் இருக்கும்.

Post a Comment

27 Comments:

Blogger Shankar said...

அண்ணாச்சீ, ஜென் வனம்னா என்ன? அங்க என்ன செய்வாங்க?

6/30/2005 5:18 PM  
Blogger ROSAVASANTH said...

garden என்பதையே பூங்கா என்று சொல்லாமல் வனம் என்கிறேன் (குறிப்பாய் இந்த இடத்தில்). ஜென் கருத்தாக்கம் அல்லது அழகியல் அல்லது தத்துவ அடிப்படையில் (செயற்கையாய்)அமைக்கப்பட்ட வனம் ஜென் வனம். கணக்கற்ற ஜென் வனங்கள் ஜப்பானிய மரபு அளித்திருக்கிறது. அங்கே அதை பார்த்து ரசிக்கவும், அதன் வரம்பிலா அறிவை பருகவும் செய்யலாம்.போட்டோ எடுக்கலாம். பதிவில் போடலாம். வேறு எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. நன்றி.

6/30/2005 5:23 PM  
Blogger Maravandu - Ganesh said...

>>> கலகிய பின் எண்ணுதலும் <<<
>>> சில நல்லிணக்க முயற்சிகளை அவ்யப்போதாவது முன் வைப்பதுவும் <<<

அண்ணாச்சி சில எழுத்துப் பிழைகள் , நீங்க திருத்துவிங்க திருத்துவிங்கன்னு ரொம்ப நாளாப் பாத்துட்டு இருந்தேன் , அப்படியே தான் இருக்கு

>> கல(க்)கிய பின் எண்ணுதலும் -
அவ்யப்போதாவது - இந்த வார்த்தை அவ்வப்போது - வா ?

6/30/2005 5:35 PM  
Blogger ROSAVASANTH said...

அதை என்னால் திருத்த முடியவில்லை. திருத்த முயன்ற போது தலைப்பும், விவரிப்பும் அளவில் பெரிதாய் இருப்பதாய் சொல்லி ஆட்சேபிக்கிறது. பிறகு ஏன் தொடக்கத்தில் ஒப்புகொண்டது என்று தெரியவில்லை. நன்றி.(திருத்தும் வழி சொன்னால் மீண்டும் நன்றி.)

6/30/2005 5:39 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

6/30/2005 5:39 PM  
Blogger Ganesh Gopalasubramanian said...

நல்ல தகவல்கள் நன்றி ரோசா

6/30/2005 5:40 PM  
Blogger ROSAVASANTH said...

நாளை யாரும் (யாருன்னு தெரியாதா?) கெட்டவார்த்தை காரணமாய் நீக்கியதாய் கூடாது. இரண்டு முறை வந்துவிட்டதால் ஒரு பின்னூட்டத்தை நீக்கியிருக்கிறேன்.

6/30/2005 5:41 PM  
Blogger -/பெயரிலி. said...

நல்லபடங்கள்

6/30/2005 8:57 PM  
Blogger வீ. எம் said...

நல்ல படங்கள் , நல்ல பதிவு ரோசா வசந்த்
வீ எம்

6/30/2005 9:12 PM  
Blogger SnackDragon said...

/காடு வெந்து தணியும் வரை வேடிக்கை பார்க்க கூடாது./
முக்கியமானது.
படங்களுக்கு நன்றி. நிறைய போடுங்கள்.

6/30/2005 10:10 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

வசந்த்
படங்கள் நன்று உள்ளன. ஜப்பானில் சாப்பாடு எல்லாம் எப்படி? நல்ல சுவையாக இருக்குமா?
ஒய்வாக உள்ள பொழுது ஜப்பானைப் பற்றி நிறைய எழுதுங்களேன்.
நன்றி.
மயிலாடுதுறை சிவா...

6/30/2005 10:37 PM  
Blogger கறுப்பி said...

நல்லபடங்கள்! ரோசா வசந்த்.

6/30/2005 11:20 PM  
Blogger Balaji-Paari said...

நல்ல படங்கள். புத்த தலங்களின் கட்டமைப்பு ஏனோ என்னை எப்போதும் வசீகரிக்கின்றது. இதற்கு இணையாக என் கவனத்தை கவர்வது கேரள கோயில்கள்.
நன்றி ரோசா.

6/30/2005 11:24 PM  
Blogger Vijayakumar said...

ரோசா அண்ணாச்சி, படமெல்லாம் யாரு எடுத்தது நீங்களா? கலக்குறீயள. உங்ககிட்ட இந்த படத்தோட ஒரிஜினல் jpeg வாங்கனுமுன்னு நினைக்கேன். செல்வராஜ் கிட்ட இப்படி தான் படங்களை கேட்டு வாங்கி சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.

6/30/2005 11:52 PM  
Blogger arulselvan said...

படங்கள் நன்றாக இருக்கின்றன வசந்த். தொடர்ந்து போடுங்கள்.
அருள்

7/01/2005 1:59 AM  
Blogger aazhiyaal said...

ரோசாவசந்த்
இந்த நாராவின் sister city தான் கன்பெரா என்று இங்கே கன்பெராவில் சொல்வார்கள்.வீதிகளில் பல இடங்களில் இதை விளம்பரப்படுத்தியிருக்கிறது இந்த அரசு.

7/01/2005 9:34 AM  
Blogger ROSAVASANTH said...

கணேச்க், புலிக்குட்டி, பெயரிலி, வீ. எம், சிவா, பாலாஜி-பாரி, கறுப்பி, அருள் நன்றி.

கார்திக், தீயை முன்வைத்து நான் சொன்னது நேரடியான என் சொந்தக் கருத்து அல்ல. கேபிடலிஸம், ஜப்பானிய வாழ்க்கை மற்றும் பார்வையை முன்வைத்து சொன்னது. நன்றி.

விஜய், jpeg என்றால் என்ன? என் தளத்திலிருந்து இறக்க்கி கொளவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? நன்றி.

ஆழியாள், கன்பேரா பற்றிய தகவலுக்கு நன்றி.

7/01/2005 12:53 PM  
Blogger Vijayakumar said...

//விஜய், jpeg என்றால் என்ன? என் தளத்திலிருந்து இறக்க்கி கொளவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? நன்றி.//

அண்ணாச்சி உங்க பதிவுல படங்கள் துக்ளியூண்டு சைஸ்ல இருக்கு. அதை என்னோட டெக்ஸ்டாப்புல வால் பேப்பர்ல கூட போட முடியாதே. அப்படியே நான் அந்த படங்களை போட்டோ பிரிண்ட் பண்ணவும் முடியாது. கேமிராவில் எடுத்த ஒரிஜினல் பைல் கேட்டு வாங்கி அதன் மொத்த உருவத்திலேயே தரிசனம் பண்ணுவது இன்னும் மிக அழகாக இருக்கும் படங்கள்.

7/01/2005 1:17 PM  
Blogger ROSAVASANTH said...

விஜய், படத்தில் சுட்டினால் பெரிய வடிவில் வரு்கிறது. அதை 'save as wall paper'என்று சொன்னால் என் கணணி திரை முழுவதும் படர்ந்துள்ளது.(கின்காகுஜியை ஒட்டியுள்ளேன்.) படத்தை எப்படி பெரிதாக்குவது என்று எனக்கு தெரியவில்லை. தங்கமணி கதார் படத்தை பெரிதாக்கும்படி கேட்டிருந்தார்.

உங்களுக்கு படம் வேண்டுமெனில் பின்னர் அனுப்பி வைக்கவும் முடியும். துரதிர்ஷ்டவசமாக என் பல படங்கள் அனலாக் கேமராவிலேயே உள்ளது. டிஜிட்டல் கேமரா பின்னர் வாங்கியதாலும், வாங்கிய பின்னும் பல காலம் அது துணைவியுடன் இந்தியாவில் இருந்ததாலும்.

7/01/2005 1:24 PM  
Blogger ROSAVASANTH said...

//அண்ணாச்சி சில எழுத்துப் பிழைகள் , நீங்க திருத்துவிங்க திருத்துவிங்கன்னு ரொம்ப நாளாப் பாத்துட்டு இருந்தேன் , அப்படியே தான் இருக்கு

>> கல(க்)கிய பின் எண்ணுதலும் -
அவ்யப்போதாவது - இந்த வார்த்தை அவ்வப்போது - வா ? //

மரவண்டு, அதில் 'அவ்யப்போது' என்பது மட்டுமே பிழை. அதை மாற்ற பௌடியவில்லை. 'கலகிய பின்..' என்பதுதான் நான் எழுத நினைத்தது.

7/01/2005 2:37 PM  
Blogger ROSAVASANTH said...

http://rajniramki.blogspot.com/2005/07/blog-post.html

//சிவன் கோயிலில் சாயரட்சை நேரத்தில் பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் வந்தால் எப்படியிருக்கும்? இளையராஜாவின் திருவாசகத்தில் அந்த ப்யூஷன்தான்.//

வன்மையாய் மறுக்கிறேன். ராம்கி ராஜாவின் இசை மற்றும் ஃபியூஷன் இரண்டு குறித்தும் மட்டையடித்திருக்கிறார். அதில் தவறில்லை. ஆனால் ராஜா குறுக்கப்படுவதால் சொல்கிறேன்.

வழக்கமாய் ஃபியூஷன் என்ற வார்த்தையால் சொல்லப்படுபவை'பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் ' என்று ஒருவேளை சொல்லலாம். அப்படி சில உண்டு. ஆனால் பல ஃபியூஷன் இதை தாண்டியவை. ராஜாவின் இசையை பியூஷன் என்று, இது போன்ற வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. மேற்கத்திய இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, நாட்டுபுரம் இவையெல்லாம் பிரித்தெடுக்க இயலாமல் கலந்திருக்கும். தனி தனி யூனிட்களாய் பிரித்து பார்க்கவே முடியாது. உதாரணம் how to name it? அந்த தலைப்பில் வரும் இசைதுண்டையே எடுத்துகொள்ளலாம். எங்கே அது கர்நாடகத்தனமை கொண்டது, எங்கே மேற்கத்திய தன்மை கொண்டது என்று பிரிக்கவே முடியாது. 'தென்றல் வந்து தீண்டும் போது..' பாடலை எடுத்துகொள்ளலாம். இன்னும் எததனையோ உதாரணம்('ராக்கம்மா கையத்தட்டு' கூட),அதுதான் ராஜாவின் தனித்தனமை. இதனுடன் யாரையும் ஒப்பிடவும் முடியாது. இது போன்ற எளிமையான வாக்கியங்களால் விளக்கவும் முடியாது. 'திருவாசகம்; கேட்ட பின்பு மீதி.

மற்றபடி விரிவான பதிவிற்கு நன்றி.

7/01/2005 3:02 PM  
Blogger Vijayakumar said...

//விஜய், படத்தில் சுட்டினால் பெரிய வடிவில் வரு்கிறது. அதை 'save as wall paper'என்று சொன்னால் என் கணணி திரை முழுவதும் படர்ந்துள்ளது.(கின்காகுஜியை ஒட்டியுள்ளேன்.) //

அட ஆமா அண்ணாச்சி, க்ளிக்கு பண்ணுனேன். ரொம்ப சோக்கா இருக்கு. அதையே எடுத்துக்கிறேன். ரொம்ப டேங்க்ஸ்ப்பா...

7/01/2005 3:07 PM  
Blogger ROSAVASANTH said...

//படங்கள் நன்று உள்ளன. ஜப்பானில் சாப்பாடு எல்லாம் எப்படி? நல்ல சுவையாக இருக்குமா?//

மயிலாடுதுறை சிவா, ஜப்பானின் மீன் வகைகளை பற்றி அறிந்திருப்பீர்கள். பச்சையாகவே உண்ணப்படும் ஜப்பானின் ஸஷீமே மீன் உணவை, தான் அறிந்ததிலேயே சுவையானதாய் நினைத்திருந்தாய் சாரு ஒரு முறை சொல்லியிருப்பார். அப்படி என்னால் சொல்ல முடியாது எனினும், சஷீமே மிக மிக சுவையானது. அதை சோற்றுடன் கட்டி உண்பதன் பெயர் சூஷி. அதற்கு வாசாபி என்று ஒரு காட்டமான சாஸ் தருவார்கள். சேர்த்து உண்ணுதல் அனுபவம். இன்னும் பல பல உண்டு, அனைத்தும் சுவையானது, அதைவிட முக்கியமாய அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை முன்வைத்தே உருவானவை. ஆனால் மீன் சுவைக்காக இவர்கள் எதையும் செய்வார்கள். ஒருவகை மீன் இருக்கிறது. (பெயர் நினைவிலில்லை.)அதன் ஈரல் நச்சுதன்மை கொண்டது. மிக மிக கவனமாய் தயாரிக்க வேண்டிய உணவு. (ஈரலில் சின்ன பஞ்ஞர் ஆனாலும் நஞ்சு கலந்துவிடும்.)ஒவ்வொரு வருடமும் அதனால் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை இருக்கும். ஆனால் அதை உண்ண தவறுவதில்லை. நான் அதை இன்னும் சுவைத்து பார்க்காததற்கு ஒரே காரணம் அதன் மிக மிக அதிகமான விலை.

7/01/2005 4:04 PM  
Blogger Vijayakumar said...

அட ஏங்க பசி நேரத்துல சூசியை பத்தியெல்லாம் ஞாபகப்படுத்துறீங்க. நமக்கு சூசியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். முதன் முதலில் வசாபியின் காட்டம் தெரியாமல் மொத்தமாக வாயில் போட்டுக் கொண்ட போது முக்தி அடையும் நிலையை அடைந்தேன். வசாபி பத்தியும் மற்றும் சிலவற்றையும் லைட்டை இங்கேயும் தொட்டு சாப்பிட்டுருக்கேன். லிங்கை பாருங்க

http://halwacity.blogspot.com/2005/06/hawker.html

இன்னமும் சிங்கப்பூர்ல வசாபி கோட்டட் பச்சை பட்டாணியை விடுறது இல்ல. அதை கஞ்சான்னு நம்ம பிரண்ட்ஸ்ங்க கிண்டல் பண்ணுவாங்க.

7/01/2005 4:30 PM  
Blogger புதுவை பித்தன் said...

நன்றி ரோஸாவஸந்த் !
lovable scenes!! i hope u give us glimpse of lots of contemporary architecture too...japanese architects are the most respected masters in the field today - Tadao Ando, Arata Isozaki, Shigeru Ban etc. are examples...
புதுவை பித்தன்

7/04/2005 2:53 AM  
Blogger ROSAVASANTH said...

புதுவைபித்தன், சந்தர்ப்பத்தை பொறுத்து இன்னும் வரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் என்னிடம் பல புகைப்படங்கள் டிஜிட்டலாய் இல்லை.

தாஸ், save செய்ய ஒப்புகொண்டால்தானே பப்லிஷ் செய்ய. அளவில் பெரிதாய் இருப்பதாய் சொல்லி saveசெய்ய ஒப்புகொள்ள மறுக்கிறது. (முதலில் ஏன் ஒப்புகொண்டது என்று புரியவில்லை.)

விஜய், பட்டாணியில் கூட வாசாபி தடவ முடியும் என்று இப்போதுதான் அறிகிறேன். தமிழரின் கண்டுபிடிப்போ?

7/04/2005 2:38 PM  
Blogger ROSAVASANTH said...

தாஸ் இங்கே ஒரு பின்னூட்டம் எழுதி அதற்கு நானும் பதில் அளித்திருந்தேன். அதை முழுவதும் காணவில்லை. நான் நிச்சயமாய் நீக்கவில்லை. அவர் நீக்கியிருந்தால் 'deleted by auther' என்று இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி முழுவதும் காணாமல் போனது என்று புரியவில்லை.

7/04/2005 2:43 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter