ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, July 05, 2005

வட்டம்!

(சில வருடங்கள் முன்பு சுப்பிரமணி ரமேஷ் திண்ணையில் எழுதிய ஒரு கவிதையும், அதற்கு பதிலாய் நான் திண்ணை விவாதகளத்தில் எழுதியதும் கீழே. இன்று எதேச்சையாய் கணணியில் கண்ணில் பட, இன்றும் அது பொருந்தி வருமென தோன்றியதால் இங்கே பதிகிறேன்.)

வட்டத்தின் வெளி
--எஸ் ரமேஷ்

தீர்மானமான எல்லைகள்
வகுத்துக் கொண்டு
"எல்லையற்றவை" குறித்து
தர்க்கிப்போம்!-ஒரே வட்டத்தின்
எதிரெதிர் புள்ளிகளில் நின்று...

வட்டத்தை உணர்ந்தபின்
பதறி போய் நகர்ந்து
"வெளி"-
வட்டத்திற்குள்ளா வெளியிலா? என
தர்க்கத்தை தொடர்வோம்

தானே வேறொரு வட்டம்
உருபெற்றதை அறிந்து
மறுபடி தள்ளிப் போய்
வெளி-குறித்து பேசுவதென்றும்
பேசமாட்டேன் என்றும்
முடிவெடுப்போம்...

இரு புள்ளிகளில்
வளையத்தின் விளையாட்டு
எப்போதும் தொடர்ந்திருக்க

******************************************************


(ரமேஷுக்கு)
--ரோஸாவசந்த்.

வட்டத்தை தவிர்த்த வெளியும்
எல்லையற்ற தொலைவை
சுற்றியதொரு பெருவட்டத்தினுள்தான்.
வட்டத்தை அறுத்தாலோ
தொடக்கமும், முடிவுமற்ற
எல்லைகளற்ற ஒரு கோடு.
கோட்டின் இரு பக்கங்களென்பதும்,
வட்டத்தின் உள்வெளி, புறவெளி
என்பதும்
வேறு வேறல்ல.
வட்டத்தின்
உள்ளிருக்கும் உள்வட்டமும்
வட்டத்தின் உள்சென்று
வெளிவரும் வளையமும்
ஒன்றல்ல.
இருக்கும்
எல்லாவற்றிற்கும்
எல்லை இறக்காமல்
வட்டத்தை துறப்பதெங்கே!


வட்டத்தை துறக்க
மறுக்கும் திட்டத்திடம்
வட்டத்தினுள் மறுப்பது
மட்டுமே தொடர்ந்திருக்கும்.

(இப்போது வெகு நாட்களாய் இணையத்தில் காணாத, சிவம் கந்தராஜா என்ற ஜெயமோகனின் தீவிர ரசிகர் ஒருவர் இது குறித்து எழுதியது(என் நினைவிலிருந்து), "..அப்பறம் அது என்ன கவிதையா? அதுவும் இரண்டு வருடங்கள் தமிழ் கவிதைகளை தீவிரமாய் வாசித்த பின் எழுதியதா? அய்யோ!"

Post a Comment

17 Comments:

Blogger Vijayakumar said...

ரோசா, ஆக மொத்தம் இதை படித்து என் தலையும் வட்டமடிக்க, நினைவுகள் மங்கி கண்ணில் இருள் கவிழ்ந்தது.

அது சரி கற்பூரவாசனை அறியாமல் இருக்க இன்னொரு ஜீவனாய் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லையே.

7/05/2005 5:43 PM  
Blogger எம்.கே.குமார் said...

சரி, சிவம் கந்தராஜாவின் பதில் இருக்கட்டும். நீர் சொல்லும்.

இப்போதும் 'உமது கவிதை' உமக்கு கவிதைதானா? அதை கவிதை என்றுதான் சொல்வீரா?

சுப்பிரமணியன் ரமேஷின்(மானஸாஜென்) கவிதை மிக அழகு!

எம்.கே.குமார்.

7/05/2005 7:25 PM  
Blogger ROSAVASANTH said...

விஜய், கருத்துக்கு நன்றி.

எம்.கே.குமார், உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.

7/05/2005 8:55 PM  
Blogger SnackDragon said...

வட்டத்துக்கே இந்த கதி என்றால்
கோளத்துக்கு? ;-)

முன்னது கவிதை என்றால் பின்னதும் கவிதைதான். கணிதத்தை தமிழில் சொல்வதிலும் அதி எழுதி பின் வாசிக்கும் போது ஏற்படும் சிக்கல்களையும் ஆராய இவை உதவும்.

----
வட்டமாவட்டமா?
வட்டம்வரைந்தவன் திட்டமா?
எல்லைகளா? எல்லைகள் என்று
சொன்னவனின் எல்லைகளா?
என் தீர்மானம்
எப்போதும் மையமிலாத
வட்டங்களை அழிப்பதுவும்,
வரைந்துவிட்ட வட்டத்தின்
மையத்துக்கு உன்னைத் தள்ளுவதுதான்.
விட்டத்தைச்சொல்லி வட்டத்தை மறுப்பாய்
வட்டத்தை சொல்லி விட்டத்தை மறுப்பாய்.
நான் விட்டதை பேசுகின்றேன்.
விடு உன்மொழி.
மையத்தையும் மறு.

கோளமே பிரச்சினை
அதிலும் அதிவேக அசைகோளம்
வட்டங்களை விழுங்கி
சட்டங்களை குலுக்கி...
நிமிர்த்து;நில்.
நிமிர்.

7/05/2005 11:15 PM  
Blogger -/பெயரிலி. said...

/முன்னது கவிதை என்றால் பின்னதும் கவிதைதான்./
இருக்கமுடியாதென நினைக்கிறேன்; முதலாவது, சிங்கப்பூரிலே இருந்து எழுதியது; இரண்டாவதும் அங்கிருந்தே எழுதப்பட்டிருந்தால் கவிதையாகியிருக்கலாம். (அல்லது, முதலாவது ஜப்பானிலே இருந்து எழுதப்பட்டிருந்தால், கவிதையில்லாமலும் இருந்திருக்கலாம்) மொத்தத்தில்,

/தீர்மானமான எல்லைகள்
வகுத்துக் கொண்டு
"எல்லையற்றவை" குறித்து
தர்க்கிப்போம்!-ஒரே வட்டத்தின்
எதிரெதிர் புள்ளிகளில் நின்று.../
என்றும் சொல்லலாம்;

/வட்டத்தை துறக்க
மறுக்கும் திட்டத்திடம்
வட்டத்தினுள் மறுப்பது
மட்டுமே தொடர்ந்திருக்கும்./
என்றும் சொல்லலாம்.

கார்த்திக், உமக்கு மட்டுந்தானா கடிக்கத்தெரியும்?

7/05/2005 11:19 PM  
Blogger SnackDragon said...

பெயரிலி grrrrrrrrr :-)

7/06/2005 12:28 AM  
Blogger ROSAVASANTH said...

பெயரிலி, அதை நான் எழுதியபோது பெங்களூரில் இருந்தேன். அதனால் அதன் கவிதைக்கான தகுதி இன்னும் கவலைக்கிடமாகிறது.

இருவருக்கும் நன்றி.

7/06/2005 2:29 PM  
Blogger ROSAVASANTH said...

சிவம் கந்தராஜாவின் 'கருத்தை' நான் இங்கே பதிய காரணம் உண்டு. ஒருவனை பற்றி ஏற்படுத்திகொள்ளும், முன்முடிவுகளை வைத்தே, அவனை பற்றி தன் சட்டகத்தினுள் புரிந்துகொண்டதை வைத்தே அவனின் மற்ற வெளிப்பாடுகளை எல்லாம் அளக்கும் அளவுகோல்கள் உருவாகின்றன. சிவம் கந்தராஜாவிற்கு என் கவிதையின் ஒரு வரி கூட புரிந்திருக்க(அதாவது ஒரு வாசிப்பு கிட்டியிருக்க) வாய்ப்பேயில்லை. ஆனால் தனது முட்டாள்தனத்தை மிக பெருமையுடன் அவரால் சொல்ல முடிந்தது. அதற்கான ஒரே காரணம் அன்று ரோஸாவசந்தை பற்றி ஏற்பட்டிருந்த பிம்பம். அதற்கு முன் ரோஸாவசந்து வெளிப்படுத்தியிருந்த அரசியல் கருத்துக்கள் மற்றும் எதிர்வினைகள். இன்றும் அதே பிம்பமும், சிவத்தின் கருத்து மட்டுமே ஒரு எம்கே குமாரை (அதே பெருமையுடன்) கருத்து சொல்ல வைக்கிறது. தனக்கு பிடிபடாத விஷயம் குறித்து தைரியமாய் பெருமையுடன் சொல்லிகொள்ள முடிகிறது. வட்டத்தில் அடைப்பது, வட்டத்தின் வெளியே இருப்பதையும் வட்டத்தினுள் வைத்து பார்பதுமே இவர்களுகான வட்டமாயிருக்கிறது. இதில் சிக்கல் என்னவெனில் இதன் எதிர்வினையாய் உருவாகும் வட்டத்திலிருந்து நாம் வெளிவர மறப்பது. அதுதான் சுழல்.

7/06/2005 2:58 PM  
Blogger ROSAVASANTH said...

http://kanchifilms.blogspot.com/2005/07/blog-post.html

ravisrinivas: கண்ணை உறுத்துகிறது உங்கள் வலைப்பதிவு. லாலுவையும், அன்று வி.ராமசாமி என்ற நீதிபதியையும் ஆதரித்த,ஆதரிக்கும் உண்மை,தி.க வினரும் அன்னியனை விமர்சிக்கட்டும். எத்தனை ஊழ்ல் பேர்வழிகளை பார்ப்பனரல்லோதோர் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரித்தோம் என்பதைச் சொல்லட்டும், தைரியமிருந்தால். எனக்கு தி.க மீதும், சங்கர்- சுஜாதா மீதும் விமர்சனம் உண்டு.இங்கு ஒன்றைச் சொல்லி இன்னொற்றை நான் ஆதரிக்க மாட்டேன்.

ரோஸாவசந்த்: உண்மை விமரசனத்தை கொண்டாட எனக்கு காரணமில்லை. ஆனால் இங்கே ரவி(?) கேட்பதுபோல்(?) பிரச்சனை ஊழல் பற்றியதா? உண்மை கட்டுரை ஊழலை பற்றியா பேசுகிறது? லாலுவின் ஊழலை சகித்துகொள்வதற்கும்(அல்லது பெரிது படுத்தாமல் இருப்பதற்கும்), அன்னியனை விமர்சிப்பதற்கும் என்ன தொடர்பு? இங்கே உள்ள மற்ற மட்டையடிகளுக்கும் இந்த அறிவுஜீவி மட்டையடிக்கும் என்ன வித்தியாசமோ?

7/11/2005 1:32 PM  
Blogger ROSAVASANTH said...

ஏற்கனவே பலமுறை சொல்லி அலுத்துபோய் ஒரு கிண்டல் பொருளானாலும், ஒரு தகவலுக்காக இங்கே குறிப்பிடுகிறேன். இன்னும் இரண்டு மாதங்களுக்கு(ஒரு வேளை மேலும்) இங்கே பெரிதாய் எதுவும் எழுதப்பட மாட்டாது. பல நேரங்களில் வாசிப்பது எதிர்வினை வைக்க தூண்டுவதால் அதையும் குறைத்து ண்டுள்ளேன் என்றாலும், முழுவதும் வாசிக்காமல் இருக்க முடிவதில்லை.

7/11/2005 1:39 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

//இருக்கமுடியாதென நினைக்கிறேன்; முதலாவது, சிங்கப்பூரிலே இருந்து எழுதியது; இரண்டாவதும் அங்கிருந்தே எழுதப்பட்டிருந்தால் கவிதையாகியிருக்கலாம்//.

ரோசாவசந்தை சிங்கப்பூர் வராமலிருக்கச் செய்ய பெயரிலி செய்யும் சதியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ரோசா கவிதையின் உள்ளடக்கத்திலும் தர்க்கத்திலும் ரமேஷின் கவிதைக்கு எந்தளவிலும் குறைவற்றது உங்கள் கவிதை ஆனால் கவிதை என்றால் குறியீடு படிமம் வசன அமைப்பு இன்னின்னவாறு இந்தச் சட்டகத்தினுள்ளே தான் இருந்தாகவேண்டும் என்ற ரீதியில் குமாரின் பார்வை அமைந்திருப்பதாகத் தெரிகிறது.அவர் அழகியலை/உருவத்தைப் பார்க்கிறார்.உள்ளடக்கத்தைத் தவறவிட்டுவிட்டார்.

ரமேசுக்கு கவிதையிலேயே பதிலளிக்க விரும்பியிருந்தால் நீங்கள் கவிதையின் உருவத்திலும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது எனது கருத்து

7/11/2005 1:51 PM  
Blogger arulselvan said...

வசந்த்,
இந்த வட்டக் கவிதையை ஸிங்கர் + தோர்ப் படித்துக் கொண்டே எழுதினீர்களா?
:-).
அருள்

7/11/2005 2:07 PM  
Blogger ROSAVASANTH said...

அருள், நேரடியாக சொன்னால் இல்லை(படிக்கவும் இல்லை, படித்துகொண்டு எழுதவும் இல்லை) என்றுதான் சொல்லவேண்டும் என்றாலும் நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரிவதால் பதில் 'ஆமாம்'. நன்றி.

ஈழநாதன் கருத்துக்கு நன்றி.

7/11/2005 3:56 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி, நிழல்மனிதன்!

7/12/2005 1:57 PM  
Blogger ROSAVASANTH said...

சில பின்னூட்டங்கள்.

http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_12.html

//இந்த செய்திகளை மேம்பாக்காக பார்க்கிறவர்களுக்காக கூட இந்த செய்தியின் அர்த்தமும் உள்நோக்கமும் எளிதில் விளங்கிவிடும். பத்திரிகையில் வெளியாகிற அனைத்திற்கும் ஆசிரியரே பொறுப்பு என்கிற வகையில் மாலனே இதற்குப் பொறுப்பாகிறார். //

பாரதியின் வரி எதையும் மாலன் திரித்ததாகவோ தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டதாகவோ இதிலிருந்து மாலனின் பரம எதிரியால் கூட முடிவுக்கு வரமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை ஏதாவது மெடாரீடிங் செய்ய வேண்டுமோ தெரியவில்லை. அப்படி செய்தாலும் கூட ஜெயகாந்தனின் பச்சையான ஒரு வாக்கியத்தை எதிர்க்க பாரதியே தேவையில்லை.ஒரு வேளை அதையும் நேரடியாய் வாசித்தால் திரித்தல் என்பதாகிவிடுமோ என்று புரியவில்லை

புதிய இலக்கிய வடிவம் எப்படி உருவாகும் என்று இப்போது புரிகிறது

http://kanchifilms.blogspot.com/2005/07/blog-post_09.html


அய்யா காஞ்சி ஃபிலிம்ஸாரே, நான் எழுதியது வெறும் கிண்டல் என்பதை புரிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறேன்.

பெரியாருக்கு சமாதி வைப்பதில் என்ன காட்டுமிராண்டிதனம் இருக்கிறது என்று நீங்கள் விளக்கினால் இதையும் சொல்ல முடியும். வீரமணி மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. ஆனால் இந்த விஷயத்தில் அவர் அப்படி என்ன தவறாய் சொல்லிவிட்டார்?

ஒரு அலுவலகத்தில் சரஸ்வதி, ராமன் படங்கள் இருந்தால், அங்கே ஒரு பெரியார் படத்தை ஒருவர் வைத்தால்(வைக்க முனைந்தால்) அதற்கான பொருள் வேறு. அது ஒரு கலக செயல்பாடாக அமைகிறது. அது வேறு ஒரு காரியதை சாதிக்கிறது. அப்படி செய்வது ஒரு அரசியல் செயல்பாடாய் இருக்கும். அதே போலவே பெரியார் சிலையை வைப்பதும். இடத்தையும் சூழலையும் பொறுத்தே இந்த மாதிரி செய்கைகளுக்கு அர்த்தம் வரமுடியும். அதனாலேயே பெரியார் தனது கடைசி காலத்தில் தன் சிலையை தானே திறந்து வைத்து பேசினார். அங்கே பெரியாரின் சிலை என்பது நாத்திகத்தையும், பார்பனிய எதிர்ப்பையும் நினைவுபடுத்துமே(அல்லது அப்படி ஒன்று இருந்ததை மறக்கடிக்காமல் இருக்குமே) ஒழிய, பெரியார் சிலையே கடவுளாகிவிடாது.

எல்லாவற்றிற்கும் நேரெதிர் விளைவு இருக்கும். ஆனால் ஒற்றை பார்வையில் பார்த்து சிலை வைப்பதே காட்டுமிராண்டிதனம் என்றால் படம் போடுவதும் காட்டுமிராண்டிதனம்தானே. பெரியார் இப்படி ஒரு மூர்க்கமான ஒற்றை பார்வையை மட்டுமே தந்தார் எனபதுதான் ஜெயமோகன் போன்றவர்களின் குற்ரச்சாட்டு. ஒருவகையில் பெரியாரின் 'சீடர்களை' பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ஆனால் பெரியாரை நேரடியாய் அணுகும்போதுதான் அவர் எந்த சட்டகத்தினுள்ளும் அடங்காமல் இருப்பதை அறியமுடியும். இப்போதைக்கு இவ்வளவுதான் எழுத முடியும். (உங்கள் பார்வை நேர்மையானது என்பதுதான் என் கருத்து. எல்லாவற்றையும் ஒற்றை பார்வையில் நேர்கோட்டில் மட்டும் பார்த்து பெரியாரும் குறுகுவதால் மட்டுமே எழுதவேண்டி வந்தது.)

7/13/2005 3:08 PM  
Blogger ROSAVASANTH said...

http://idlyvadai.blogspot.com/2005/07/10.html

நாட்டில் வெடிகுண்டு வெடிக்கும் போதெல்லாம், அதை உண்மையிலேயே தடுப்பதிலும், குறைந்த பட்சம் இது போன்ற நிகழ்வுகளை தடுப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், பத்ரி போல, வெங்கட் போல, சாம்ஸ்கி போல (ரோஸா எழுதாத ஆனால் எழுதியிருக்கக் கூடியது போல) பதிவுகள் எழுதுவார்கள். அதை பயங்கரவாதத்தை நியாயபடுத்துவதாய் நடுத்தரவர்க்க வன்முறை முன்மொழியும். அது பொதுமனத்துக்கு உவப்பானதாகவும் இருக்கும். அது ஒரு பொதுமனத்தின் தர்க்கத்தில் அடங்குவதாகவும் இருப்பதால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. மன்னிக்கவும் முடியும். ஆனால் ஒரு பயங்கரவாத அரசாங்கம் மற்றும் அதன் தரகர்கள் வியாபாரிகள் இந்த வெடிகுண்டு நிகழ்வை எப்படி தனக்கு சாதகமாய் பயன்படுத்தலாம், இதை முன்வைத்து இன்னும் தன் ஆக்ரமிப்பையும் அராஜகத்தையும் நியாயப்படுத்தலாம் என்று யோசிக்கும். அந்த வெடிகுண்டு நிகழ்வே தனது செயல்களின் பக்கவிளைவு என்பதை மறைத்து, அந்த வெடிகுண்டு நிகழ்வையே தனது மற்ற செயல்களுக்கு மூலதனமாக்கும். இட்லி வடை செய்வதும், எழுதியதையும் எல்லோருக்குமே அவரவர் பார்வையில் நிச்சயமாய் புரிந்துகொள்ள முடியும்.

7/13/2005 9:13 PM  
Blogger SnackDragon said...

இந்த நிகழ்வும்(குண்டு வெடித்தல்) அது சம்பந்தமான தர்க்கங்களும் சுவாரசியமாக உள்ளது. ஒன்று தீமைகளை அழிக்க வந்த அவதாரமாக, தேவைக்கேற்ப உருவெடுத்துக் கொள்வது, இரண்டாவது இந்த சமயத்தில் நடுநிலை என்று பேச வாயெடுத்தீர்கள் எனில்
புலிபாய்ச்சல் பாய்ந்து நீ தீவிரவாதியேதான் என்று பிராண்டுவது. :-)
ஈழத்துக்கு விஷய்த்தில் நடப்பதையும் இதையும் ஓரளவுக்கு ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடிகிறது.
தன்னை அறியாமலே மனிதன் மீடியாவாகி போகிறானோ என்ற சந்தேகம் வருகிறது.

7/13/2005 10:49 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter