ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, August 19, 2005

தொலைவு!

மதிவண்ணணின் கவிதைகள் குறித்து திண்ணையில் லதா ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். அவர் விமர்சித்துள்ள 'நெரிந்து' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்த சில கவிதைகளை என் பழைய பதிவொன்றில் தந்திருந்தேன். இப்போது லதாவின் கட்டுரை மூலம் மதிவண்ணணின் அடுத்த தொகுப்பு வெளிவந்துள்ள செய்தியை அறிகிறேன். இந்தியா அடுத்தமுறை போகும்போதுதான் படிக்க முடியும். லதாவின் கட்டுரை தயவில் அவர் தனது இரண்டாம் நூலை பெரியாருக்கு சமர்ப்பணம் செய்திருப்பதை அறிய முடிகிறது. அதை சொல்லவே இந்த பதிவு.

தலித்களுக்கு பெரியாரே முக்கிய எதிரி என்பது போன்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தர்க்கம் ஜெயமோகனில் தொடங்கி, ரவிகுமாரால் தார்மீகப்படுத்தப் பட்டு, இன்று சரளமாய் ஆங்காங்கே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வேண்டுமென்றே அதற்கு எதிர்வினையாகவே, மற்ற தலித் அறிவுஜீவிகளை விட இன்னும் வலியும், கோபமும் கொண்ட குரலை ஒலிக்கும் மதிவண்ணன், வலிந்து பெரியாருக்கு நூலை சமர்ப்பித்திருப்பதாய் ஊகிக்கிறேன். 'அயோத்திதாசரை' விமர்சனத்திற்கு அப்பால் வைக்கும், அவரை பெரியாருக்கு எதிரியாக சித்தரிக்கும் அரசியலை தொடர்ந்து மதிவண்ணன் கட்டவிழ்த்து வருகிறார். ''வார்த்தைகளுக்குள் கொடுக்குகளை ஒளித்து வைக்கும் வித்தையை படிப்பித்த என் குடியின் முதல் சுயமரியாதைக்காரன் ஈ.வே.ரா'வுக்கு ' என்று பெரியாருக்கு நூலை சமர்பித்த வரிகளே என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது.

பூணூலின் வெண்மை நிறத்தை கூட இழக்கத் தயாராயில்லாதவனெல்லாம் தார்மீக கூச்சலிடும் சூழலலிருந்து,

'எப்படி ஒன்றாய்
வளர்க்கப் போகிறோம்
இந்த முற்றத்தில்
சோறு போடும் பன்றிகளையும்
நீ கொண்டு வரும்
முல்லைச் செடியையும்?'

என்ற கேள்விக்கான பதிலை திரிபுநோக்கமின்றி அடைய முயற்சி செய்யத் தொடங்கவே இன்னும் வெகு தொலைவு போகவேண்டியுள்ளது.

Post a Comment

24 Comments:

Blogger Thangamani said...

மதிவண்ணனின் கவிதை மொழி குறித்தே அதிகம் பேசியிருக்கிறார் லதா ராமகிருஷ்ணன். இருப்பினும் நீங்கள் குறிப்பிட்ட தகவல் தற்போதைய திட்டமிட்ட பெரியாருக்கேதிரான பரப்புரை நிகழும் காலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சுட்டிக்கு நன்றி!

8/19/2005 5:18 PM  
Blogger -/பெயரிலி. said...

/தலித்களுக்கு பெரியாரே முக்கிய எதிரி என்பது போன்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தர்க்கம் ஜெயமோகனில் தொடங்கி, ரவிகுமாரால் தார்மீகப்படுத்தப் பட்டு, இன்று சரளமாய் ஆங்காங்கே பயன்படுத்தப்படுகிறது/

முற்றிலும் மெய்

8/19/2005 10:18 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி, பெயரிலி நன்றி

8/19/2005 11:25 PM  
Blogger KARTHIKRAMAS said...

திண்ணை சுட்டிக்கு நன்றி. மதிவண்ணன் விமர்சனம் பற்றி இணைத்தில் படிக்கக் கிடைக்குமா?

8/19/2005 11:29 PM  
Blogger டிசே தமிழன் said...

//அவரை பெரியாருக்கு எதிரியாக சித்தரிக்கும் அரசியலை தொடர்ந்து மதிவண்ணன் கட்டவிழ்த்து வருகிறார்.//
நல்ல விடயம். பெரியார் 'திட்டமிட்டு' அயோத்திதாசரை மறைத்தார் என்று எழும்பும் குரல்களைத் தொடர்ந்து வாசித்தபடி இருக்கின்றேன். தனிப்பட்ட விவாதம் ஒன்றிலும் நண்பரொருவ்ருடன் இது குறித்து விவாதித்திருக்கின்றேன். இந்த காழ்ப்பான விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாய் அ.மார்க்ஸ் (கவிதாசரணில் என்று நினைக்கின்றேன்) ஒரு நல்லதொரு கட்டுரை எழுதியிருந்ததைப் படித்தது நினைவு.
பதிவுக்கு நன்றி ரோசாவசந்த்.

8/19/2005 11:44 PM  
Blogger ROSAVASANTH said...

karthik, DJ, thanks!

I will reply, after few days.

8/21/2005 9:23 PM  
Blogger Narain said...

பல முறை தனிமடல்களிலும், பொது பதிவுகளிலும் நான் வலியுறுத்திய விதயம் தான். சிவகாமி, ரவிக்குமார், காலச்சுவடு & கம்பெனி தொடர்ச்சியாக பெரியாரின் பங்களிப்பினை கேள்விக்குறியாக்கி வரும் வேளையில் இத்தகைய ஒரு காட்டடி தேவைப் படுகிறது. ரவிக்குமார் ப்ராமனைஸ் செய்யப்படுகிறார் அல்லது ஆதிக்கசக்திகளின் அணிகலனாக இருக்க ஆசைப்படுகிறார் என்பது நிறைய சங்கதிகளிலிருந்து தெரிய வருகிறது.

வசந்தின் நெரிந்து பற்றிய முந்தைய பதிவில் வசந்த் முன்னிறுத்திய எதிர் அழகியல் பற்றிய கேள்வியை எழுப்பாமல், லதா ராமகிருஷ்ணன் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. எது அவலட்சணமாக, அசிங்கமாக, அவமானமாக தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறதோ, அதை மொத்தமாய் நடுவீதியில் போட்டு உடைத்து மதிவாணன் கொண்டாடி இருக்கிறார். இது தலித்தின் குரலைத் தாண்டி, சமூகத்தின் குறைப்பார்வையினை குத்தும்விதமாக அமைந்திருக்கிறது என்பது இன்னொரு சிறப்பாகத் தெரிகிறது.

என் கேள்வி, ரவிக்குமாருக்கு என்ன ஆயிற்று? டிஜே, கவிதாசரணில் ரவிக்குமார் & கோவின் கேள்விகளுக்கு பொ.வேல்சாம ஆதாரங்களுடன் பதிலளித்து இருக்கிறார். மார்க்ஸ் கட்டுரை படிக்கவில்லை.

8/23/2005 4:22 AM  
Blogger ROSAVASANTH said...

நாரயணன் நன்றி. சில நாட்களில் சில விடயங்கள் குறித்து எழுதுகிறேன்.

http://www.livejournal.com/users/arulselvan/1286.html

conjecture என்பதற்கு பொருத்தமான தமிழ் சொல் இராம.கி ஐயாவிடம் ஒரு முறை வினவியிருந்தேன். அவர் நீண்ட விளக்கத்திற்கு பின் 'சேர்ந்தேற்று' என்று ஒரு சொல்லை அளித்தார். இது குறித்த அவரது பதிவு தேடினால் கிடைக்க கூடும். உங்கள் மனதிற்கு பொருத்தமென பட்டால் பயன்படுத்தவும். நல்ல தொடக்கம், தொடரவும்.

அரவிந்தன் நீலகண்டன், கணித்தத்தின் ஆதர பிரச்சனைகள் குறித்தெல்லாம் கரைத்து குடித்து, தீர்ப்புகளும் சொல்லி, மற்றவனையும் முட்டளாக்கிவிட்டு, இப்போது 'ஹில்பர்ட் வெளி'குறித்து அப்பாவியாய் கேட்கிறீர்களா, நியாயமா? 'ஹில்பர்ட் வெளிக்கும், நாம் புலனுணரும் வெளிக்கும் வித்தியாசம் கூட தெரியாமல் எப்படி, 'குவாண்டம் இயற்பியல் கணிதத்திற்கு உருவாக்கிய பிரச்சனைகள்' குறித்தெல்லாம் எழுதினீர்கள் என்று விளக்க முடியுமா?

8/23/2005 10:55 PM  
Blogger ROSAVASANTH said...

http://idlyvadai.blogspot.com/2005/08/blog-post_24.html

இட்லி வடையின் விஷமத்தனமான பதிவு எனக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை. அதை சீரியஸாக எடுத்துகொண்டு, பிரச்சனைகளை கொச்சை படுத்துபவருக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், இங்கே தீவிரமான விஷயங்களை எழுதியதுதான் எரிச்சலை வரவழைக்கிறது. உங்களுக்கெல்லாம் விவஸ்தையே கிடையாதா?

8/24/2005 11:07 PM  
Blogger ROSAVASANTH said...

http://yemkaykumar.blogspot.com/2005/08/blog-post_30.html#comments

/'ஸ்வீட் ஸ்டாலில் ஸ்வீட் விற்பதாக' சொன்னதற்கு ஒரு படைப்பாளிக்கு நேர்ந்த கொடுமை!//

எம்.கே. குமார், அதே ஸ்வீட்தான் உன் அம்மாவிடமும் விற்கபடுகிறது, குறைந்த படசம் உன் அப்பாவிடம் விற்றதால்தான் நீ பிறந்தாய் என்று என்று தெரியுமா? இந்த அளவிற்கு வக்கிர புத்தியுள்ள நீயெல்லாம் இலக்கியம் வேறு பேசுகிறாய்? தூ..!

8/30/2005 3:11 PM  
Blogger ROSAVASANTH said...

http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_30.html

குழலி,

தங்கர் பச்சான் வன்னியராய் பிறக்காவிட்டால் உங்கள் பதிவு எப்படியிருந்திருக்கும் என்று நினைக்க சிரிப்பு வருகிறது.

8/30/2005 6:19 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ரோசா,
தங்கர் வன்னியர் என்றால் இன்னும் 3 அல்லது 4 தொடர் பதிவுகளை கட்டாயம் எதிர்பார்க்கலாம் ;-)

8/31/2005 12:03 AM  
Blogger ROSAVASANTH said...

http://mugamoodi.blogspot.com/2005/08/blog-post_112541792303756908.html#comments

//// அந்த பதிவில் முதலில் பின்னூட்டமிட்டவர் பயன்படுத்திய வார்த்தைகள் நியாயம் என்கிறீர்களா? //

இல்லை...

நீங்கள் அந்த பதிவு எழுதப்பட்ட விதம் நியாயமில்லை என்று நினைக்கிறீர்கள்தானே?//

முகமுடி,

அதில் எதை நியாயமில்லை என்று நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? சும்மா தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். உதாரணமாய் பதிவு எழுதிய மற்றும் இது வரை மிக கேவலமாக பேசிய நாய்களின் தாயை விட, பாலியல் தொழிலாளர்கள் எந்த விதத்தில் கேவலமானவர்கள் என்பது என் கேள்வி. கவனிக்கவும் யாருடைய தாயையும் நான் கேவலமாய் சொல்லவில்லை. இவனுங்களின் ஆத்தாளைவிட மற்றவர்கள் எந்தவிதத்தில் கேவல்ம் என்றுதான் கேட்கிறேன். இதில் என்ன நியாயமின்மை உள்ளது என்று உங்கள் தர்க்க திறன் கொண்டு, நான் சொன்னதை புரிந்துகொண்டு விளக்க முடியுமா? நன்றி!

8/31/2005 3:33 PM  
Blogger எம்.கே.குமார் said...

'ரோசா வசந்த்' என்றொரு மனம் பிறழ்ந்தவர் (ஒரே ஒருவர் இருப்பதாக எவரய்யா சொன்னது, இதோ இந்த வயதிலும் மனம் பிறழ்ந்தவர் கூட்டத்தில் இன்னொருவர் இருக்கிறாரே!)என் வீட்டில் ஏற்படுத்திய அழுக்கை நீக்கிவிட்டேன். அவரது வீட்டில், மனிதக்கழிவையும் சாப்பாட்டையும் மாறிமாறியோ இல்லை சேர்த்தோ சாப்பிடுபவர் அவராய் இருக்கட்டும்; என் வீட்டில் அந்த அசிங்கங்கள் இருக்கவேண்டாம்.

எந்தவித கருத்துமோதல்கள் இருந்தாலும் அரசியலில் கூட நாகரிகம் தேடும் மனிதர்களாகிய நம்மிடையே இப்படியொரு அழுக்கானவ்ர் இருப்பது, "கோபம் வந்தாலும் மேன்மையுடையவர்கள் பிறர் மனம் புண்படும்படி பேச மாட்டார்கள்" என்ற வள்ளுவன் கண்ட தமிழுக்கு எதிரிகளும் அவமானத்துக்குரியவர்களும் ஆகிவிடுவர்.

இந்த பதிவை எழுதும்போது மிக சாதாரணமாகவே (ஜவுளிக்கடையில் துணிகள் விற்பனை என்பது போல) அவ்வாக்கியத்தை எழுதினேன் என்பதை என் மனம் அறிந்திருந்தபோது, இப்படியானதொரு வக்கிரங்களின் 'உச்சங்கள்' 'இமயங்கள்' (பின்னே, அவர்களுக்குத்தானே இதெல்லாம் தெரியும். வக்கிர தாத்தாக்களுக்குத்தானே வக்கிரமிகை இருக்கும். நம்மைப்போன்றவர்களுக்கெல்லாம் அதில் பாதி கூட தேறாதல்லவா?!) அதை வக்கிரப்பார்வையினூடாக கண்டு அதற்கும் தாய்த்தமிழைக் கற்றுக்கொடுத்த தாய்க்கும் தந்தைக்கும் ஆசிரியருக்கும் இறைவனுக்கும் அவமானம் தரும் வகையில் அவர்களை மிகவும் கேவலப்படுத்தும் வகையில் தாய்த்தமிழை கையாண்டு மனப்பிறழ்ந்தமையை காட்டிக்கொண்டது கண்டு முதலில் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

எவ்வளவு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் வலைப்பதிவு ஆரம்பித்து இன்றோடு இரு வருடங்கள் காணும் நிலையில், நான் எங்கும் இத்தகைய இழிமொழிகளைப் பயன்படுத்தியது கிடையாது.

அடிப்படைஅறிவு கொஞ்சம் கூட இல்லாதவர், அதிர்ச்சி வார்த்தைகள் மற்றும் கருத்துகள் மூலம் இணையத்தமிழில் பன்றிகளுக்கும் நாய்களுக்கும் இணையானதொரு நிலையைக்கொண்டு எழுதிவரும் அந்த மாமனிதர் எழுதிய அந்த மறுமொழிதான் (யாருடைய மனமும் புண்படக்கூடாது என்ற)(இரு ஆண்டுகள் வலைப்பூவில் எழுதிவரும்) எனக்கு வந்த முதல் கழிவுமொழி.

இவரது அம்மாவையோ, சகோதரிகளையோ மனைவியையோ இப்படி இனம் பிரித்து புணரும் சுகங்களை விலாவாரியாக எழுதி இவரைப்போல இன்புற எனக்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்?

அதை என் பதிவுகள் மட்டுமின்றி எல்லாபதிவுகளிலும் அனானிமஸ் என்று போட்டு விட்டு வர எனக்குத் தெரியாது போனது என்று நினைத்துக்கொண்டாரா?

பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை கேவலப்படுத்தினேன் என்று இவருக்கு கோபம் வந்ததால், 'இவரும் ஒரு பாலியல் தொழிலாளி என்றோ அங்கிருந்து பிறந்து வந்தவரென்றோ' (இயற்கையின் மறுபதிவான அவரின் அன்னையே என்னை மன்னித்துவிடுங்கள், அடுத்த பிறப்பிலாவது ரோசா வ்சந்த் என்ற தங்கள் மகனுக்கு அன்பையும் எதிரிகளிடம் கூட புண்படாமல் நடந்துகொள்ளும் சகிப்புத்தன்மையையும் எடுத்துச் சொல்லுங்கள்; உங்களைப்போன்ற ஒரு தாய்க்கு இவர் மகனாகப்பிறந்து உங்களது பத்து மாத தவத்தையும் அதன் புனிதத்தையும் மனிதக்கழிவிலே பிறந்து வந்த வண்டு போல கேவலப்படுத்திவிட்டார்!)எழுதிவிட்டுப்போவதற்கு எவ்வளவு நேரமாகும் எனக்கு?

வாழ்க்கையின் அபிமானங்களையும் இசைவுகளையும் கூடி நின்று ரசிப்பதற்கும் எதிரில் நின்று விவாதிப்பதற்கும் முதலில் வேண்டிய அடக்கம் மற்றும் ரசிப்புத்தன்மை இல்லாதவராய் இந்த வயதிலும் இவர் இருப்பதை நினைத்து மனம் மிக வருந்துகிறேன்.

"இயற்கையே நல்ல மனத்தை இவருக்குக் கொடு" என்று இறையை வேண்டுவதை விட எத்தகைய மறுமொழி எழுதினாலும் இவரெல்லாம் திருந்தவா போகிறார்?

http://yemkaykumar.blogspot.com/2005/08/blog-post_30.html#comments

அன்புடன்,
எம்.கே.குமார்.

9/01/2005 1:06 PM  
Blogger ROSAVASANTH said...

எம். கே. குமாரின் இந்த ஆபாசப் பின்னூட்டம் நீக்கப்படாது. இந்த வாரம் எதுவும் முடியாது. என் பதில் அடுத்த வாரம் வரும். 'இப்படி சொல்ல எவ்வளவு நேரம் ஆகும' என்று சொல்லியே ,தான் சொல்ல நினைத்ததை சொல்லி, தன் ஆத்திரத்தை குறைந்து கொள்ளும் அவரின் ஹிப்பாக்கரசி, மற்றும் என் மீதான வசவுகளை நீக்காமல், என்னுடய நியாயமான கேள்வியை மட்டும் நீக்கியதன் ஹிபாக்கரசியை மட்டும் இப்போதைக்கு மற்றவர்கள் பார்வைக்கு அறிய தருகிறேன். நிச்சயமாய் எம். கே. குமாரின் அம்மாவை கேவலப்படுத்தி பதிவு போடும் எண்ணம் இல்லை என்றாலும், (இப்போது அவர் பதிவில் எழுதியதும் அப்படபட்ட நோக்கத்துடன் எழுதப்பவில்லை என்றாலும்), எனது அடுத்த வாரப் பதிவு அவர் தூக்கத்தை கெடுக்கும் என்று மட்டும் எனக்கு புரிகிறது. நன்றி.

9/01/2005 2:45 PM  
Blogger ஜோ / Joe said...

குமார்,
விளக்கமா சொன்னா எந்த பக்கத்துல இருந்து மொத்து வருமுண்ணு தெரியல்ல..ஆனா ஒரே ஒரு கருத்தை மட்டும் நண்பர் என்ற முறையில் சொல்லுகிறேன்.

என்னுடைய புரிதல் சரியாக இருக்குமானால் , நீங்கள் உடலைப் பயன் படுத்தி பணம் சம்பாதிப்பது கேவலம் என்று நினைக்கிறீர்கள்.'விபச்சாரிகளை' வெறுக்கிறீர்கள் .ஆனால் ரோசாவசந்த் அவர்கள் அவ்வாறு நினைக்கவில்லை . அவரைப் பொறுத்தவரை விபச்சாரம் செய்வது தவறாக படவில்லை .அவர்களை சமுதாயம் கேவலமாக பார்ப்பது அவருக்கு கோபத்தை தருகிறது (ரோசா அவர்களே !என்னுடைய புரிதல் தவறாக இருந்தால் திட்டாமல் சொல்லவும்.திருத்திக்கொள்கிறேன்).இது ஒன்று தான் உங்கள் இருவருக்குமுள்ள அடிப்படை வேறுபாடு .அதனாலேயே ஒருவர் சொல்வது மற்றவர்க்கு ஆபாசமா தெரியுது .

எதுக்குங்க இந்த சண்டை? கொஞ்சம் ஆறபோடுவோமே?

நட்புடன்,
ஜோ

9/01/2005 4:00 PM  
Blogger ROSAVASANTH said...

ஏன் கருத்தை புரிந்த கொண்டவிதம் ஓரளவு சரிதான். ஆனால் என் கருத்தை யாராவது தவறாய் புரிந்துகொண்டால் நான் திட்டுவேன் என்று நினைதது தவறு. இன்றுவரை யாரையும் இப்படிப்பட்ட காரனத்திற்காக திட்டியதில்லை.

ஆறப்போட்டுகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் விடமுடியாது.

9/01/2005 4:04 PM  
Blogger முகமூடி said...

இங்கும் பின்னூட்டங்கள் செல்வதை இப்போதுதான் பார்த்தேன்... எனக்கு எழுதப்பட்ட விஷயங்களும் இதில் உள்ளதால், இது தொடர்பான மற்ற பிற::

------------------

1) ROSAVASANTH :-

//// அந்த பதிவில் முதலில் பின்னூட்டமிட்டவர் பயன்படுத்திய வார்த்தைகள் நியாயம் என்கிறீர்களா? //
இல்லை... நீங்கள் அந்த பதிவு எழுதப்பட்ட விதம் நியாயமில்லை என்று நினைக்கிறீர்கள்தானே?//

முகமுடி,

அதில் எதை நியாயமில்லை என்று நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? சும்மா தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். உதாரணமாய் பதிவு எழுதிய மற்றும் இது வரை மிக கேவலமாக பேசிய நாய்களின் தாயை விட, பாலியல் தொழிலாளர்கள் எந்த விதத்தில் கேவலமானவர்கள் என்பது என் கேள்வி. கவனிக்கவும் யாருடைய தாயையும் நான் கேவலமாய் சொல்லவில்லை. இவனுங்களின் ஆத்தாளைவிட மற்றவர்கள் எந்தவிதத்தில் கேவல்ம் என்றுதான் கேட்கிறேன். இதில் என்ன நியாயமின்மை உள்ளது என்று உங்கள் தர்க்க திறன் கொண்டு, நான் சொன்னதை புரிந்துகொண்டு விளக்க முடியுமா? நன்றி!

---------------------------

2) முகமூடி :-

ரோசா,

எழுதியவருக்கு உரைக்க வேண்டும் என்ற அளவில் நீங்கள் எழுதிய அப்பட்டமான வார்த்தைகள் அப்படி ஒரு தோற்றத்தை முதல் பார்வையில் ஏற்படுத்தியிருந்தாலும், நீங்கள் கேட்டது நியாயமே. ஸ்வீட் ஸ்டால் வரிகள் நீக்கப்படாமல் உங்களின் பின்னூட்டம் மட்டும் நீக்கப்பட்டிருப்பது பதிவு எழுதியவரின் மனநிலையை மீண்டும் ஒரு முறை தெளிவாகவே காட்டுகிறது.

----------------------------

3) எம்.கே.குமார் :-

முகமூடி என்றொரு அறிவிலி, அன்னாருடைய மொழிக்கு ஆதரவு தெரிவித்து என்னை மூளை வளர்ச்சி குன்றியவர் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து இவருடைய தரமும் தமிழார்வமும் தெரிகிறது, வாழ்க நீர்.

-------------------------

4) முகமூடி said...

குமார், எனது நகைச்சுவை உணர்வை குறித்தும் எனது மூளை வளர்ச்சி குறித்ததுமான உங்கள் புரிதலுக்கு நன்றி...

இங்கே இடம் பெற வேண்டிய பின்னூட்டம் ஒன்றினை இங்கே இட்டிருக்கிறேன். நேரமிருந்தால் வாசிக்கவும்.

9/01/2005 4:38 PM  
Blogger ஜோ / Joe said...

பதிலுக்கு நன்றி ரோசாவசந்த் அவர்களே!
//ஆனால் என் கருத்தை யாராவது தவறாய் புரிந்துகொண்டால் நான் திட்டுவேன் என்று நினைதது தவறு.//
உண்மையிலேயே அப்படி நினைக்கவில்லை .சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்க கிண்டலாக எழுதியது .தவறாக நினைக்க வேண்டாம்.

ஆனாலும் உங்களிடம் இது குறித்து ஒரு விளக்கம் கேட்க வேண்டும் .நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கமான பதிவு வந்தபிறகு படித்து விட்டு கேட்கிறேன்.

9/01/2005 5:08 PM  
Blogger ROSAVASANTH said...

ஜோ நன்றி.

முகமுடி,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. என் பெயரில் போலி பின்னூட்டம் ஒரு முறை வந்ததாலும், இன்ன பிற என் வசதி கருதியும், எங்கே பின்னூட்டம் இட்டாலும் அதை இங்கேயும் இடுவது வழக்கம்.

உங்களின் (மற்ற) பல கருத்துக்களை நான் ஏற்கவில்லை. சிலவற்றை நான் தீவிரமாய் எதிர்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் நெகிழச்செய்து விட்டது. நீங்கள் இது குறித்து பேச முன் வந்தததையும் நான் பாராட்டுகிறேன். ஏதோ எனக்கு ஆதரவாய் பேசியதால் இப்படி எழுதவில்லை என்று (மற்றவ்ர்களுக்கு புரியாவிட்டாலும்) உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.

9/01/2005 5:21 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

குமார்,

ரோசா உங்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாக எழுதி விட்டார் என்று வைத்துக் கொண்டாலும், நீங்கள்
"எவ்வளவு நேரமாகும் எனக்கு" என்று சொல்லிக் கொண்டே, அதை விட பல மடங்கு ஆபாசமான அவதூறுகளை இப்படி அள்ளி வீசி உங்கள் 'சாமர்த்தியத்தை'யும் இன்ன பிறவற்றையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

//நான் எங்கும் இத்தகைய இழிமொழிகளைப் பயன்படுத்தியது கிடையாது.// என்று அறிவித்தபடி

"அடிப்படைஅறிவு கொஞ்சம் கூட இல்லாதவர், அதிர்ச்சி வார்த்தைகள் மற்றும் கருத்துகள் மூலம் இணையத்தமிழில் பன்றிகளுக்கும் நாய்களுக்கும் இணையானதொரு நிலையைக்கொண்டு எழுதிவரும் அந்த மாமனிதர் எழுதிய அந்த மறுமொழி தான் (யாருடைய மனமும் புண்படக்கூடாது என்ற)(இரு ஆண்டுகள் வலைப்பூவில் எழுதிவரும்) எனக்கு வந்த முதல் கழிவுமொழி.

இவரது அம்மாவையோ, சகோதரிகளையோ மனைவியையோ இப்படி இனம் பிரித்து புணரும் சுகங்களை விலாவாரியாக எழுதி இவரைப்போல இன்புற எனக்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்?"

(இன்னொருவரை கீழ்த்தரம் என்று கூறும்!!!) நீங்கள் தான் இப்படி நிதானம் இழந்து வசை பாடியிருக்கிறீர்கள்.

9/01/2005 9:37 PM  
Blogger ROSAVASANTH said...

பாலா, கருத்துக்கு நன்றி. குமார் எழுதியதும் சரி, அதற்கு முன்பு 'குஷ்புக்கு பிறந்தவன்', 'மனைவிக்கு விளக்கு பிடித்தவன்' என்ற போதும் என்னை அது காயப்படுத்தவில்லை. ஆனால் இந்த குழலி என்ற போலி எழுதுவதை பாருங்கள். மனிதன் கூசாமல், இங்கே உள்ள எந்த வசையையும் கண்டிக்காமல், குமாரை காயப்பட்டவராய் திரிப்பதை பாருங்கள். எனக்கு எதையோ திங்கும் மனிதர்கள் செய்யும் நேர்மை போன்ற பாவனை மட்டுமே குமட்டலை தருகிறது.

9/01/2005 11:48 PM  
Blogger ROSAVASANTH said...

http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_30.html

குழலி தான் ஏதோ தங்கர் சொன்னதை கண்டித்தது போல் ஆடும் நாடகத்தை போன்ற ஒரு புளுகு இருக்க முடியாது. சும்மா வெற்று வார்த்தையாய் 'தப்பு' என்று ஒப்புக்கு சொன்னவர், எம்.கே.குமாரின் பதிவில் அத்தனை முறை அத்தனை அற்பபுழுக்கள் மீண்டும் மீண்டும் சொன்னபோது எங்காவது கண்டித்தாரா? ஏன் அவருடய பதிவிலேயே எழுதியதை கண்டித்தாரா?

கவனிக்கவும், நான் தங்கரை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. நான் எதிர்ப்பது இவரகளின் வார்த்தை பிரயோகங்களைத்தான். தன் பதிவில் 'கெட்ட வார்த்தை எழுதினால் திருப்பி தாக்குவேன்' என்று எச்சரிக்கை விட்டவர் அதை எனக்கு மட்டும்தானே பொருத்தினாரே தவிர, எங்காவது அவர் பதிவிலேயே நடிகைகளை பற்றி கேவலமாக வந்த பின்னூட்டம் பற்றி பேசியுள்ளாரா? அதற்கு ஏதாவது முனகலாவது வெளிப்பட்டதா? இப்போது பலர் சுட்டியவுடன் நடிக்கிறார்.

இப்போது பாருங்கள் என்னுடய இந்த பின்னூட்டத்திற்கு அவர் எழுதப்போகும் சப்பைகட்டை. அது சரி, சோறு தின்றால் அல்லவா...

9/02/2005 3:18 PM  
Blogger ROSAVASANTH said...

http://ramwatch.blogspot.com/2005/08/31-august-2005-u.html#comments

ராம் வோச்சர்,

நீங்கள் தமிழை விட முக்கியமாக ஆங்கிலத்தில், இந்த விஷயங்களை இன்னும் விரிவாக, இதன் அரசியல்களை விவரித்து எழுத வேண்டும் என்பது என் கருத்து. இந்து , ஃபரண்ட் லைன் மட்டுமில்லாமல், மற்ற (இந்திய) ஆங்கில பத்திரிகைகளும் ஒரு தலை பட்சமாகவே இருகின்றது. ஓரளவு திறந்த மனப்பான்மையுடன் இருக்கும் இடது சாரி சிந்தனையாளர்களின் கருத்தும் ஒருதலை பட்சமாகவே இருக்கிறது. அதனால்...

9/02/2005 10:18 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter