ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Monday, October 10, 2005பாசிஸ்டுகளின் தாக்குதல்!வீட்டையும் நாட்டையும் காலி செய்து வேறு இடத்தில் நிலைகொள்ளும் சிக்கல்களிலும், பாதி நேரம் இணைய இணைப்பு இல்லாததாலும், இருந்த நேரத்திலும் விண்டோஸ் கிடைக்காமல் மேகின்டோஷில் தமிழெழுத்துக்கள் குண்டக்க மண்டக்க தெரிந்ததாலும், மிக முக்கிய்மான மிக அசிங்கமான நிகழ்வுகள் நடந்தேறிய கட்டத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல கூட முடியவில்லை. குரலை ஒலிக்க ஒரு இடம் இருந்தும், ஒரு பெண்ணை தமிழகத்து பாசிஸ்டுகள், அதுவும் தலித் விடுதலை தத்துவத்தை பற்றி நிற்பதாய் பறைசாற்றிக் கொண்டவர்கள் வெறித்தனமாய் ஒரு தாக்குதல் நடத்தும் போது மௌனமாய் இருப்பதை போன்ற போலித்தனம் வேறு இல்லை என்று நினைப்பதால், காலம் கடந்தாலும் குறைந்த பட்சம் என் கண்டனத்தை பதிவு செய்யவாவது இந்த பதிவு. இதில் 'அலுத்து போவது' என்று சொல்லிகொள்வது போன்ற சந்தர்ப்பவாதத்திற்கு இடமேயில்லை. குஜராத் இன அழிப்பு கிட்டதட்ட மூன்றுமாதமாய் தொடர்ந்தது, அது குறித்து ஆயிரம் கட்டுரையாவது வந்திருக்கும். நானே ஒரு ஐம்பதை படித்திருப்பேன். இதனால் அலுத்து போய்விட்டதாக சொல்ல முடியுமா? அதே போலவே வலைப்பதிவில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு நைந்து போய்விட்டாலும் குஷ்பு மீதான பாசிஸ்டுகளின் தாக்குதலில் அலுப்பு என்பது ஒரு பிரச்சனை இல்லை. திருமாவளவனையும் அவர் பின் நிற்கும் கூட்டத்தையும் எந்த சமயத்தில் 'சிவசேனாவிடமிருந்து வேறுபடாதவர்கள் என்று சொன்னேனோ'? உண்மையில் மனதார அப்படி நினைக்கக் கூட இல்லை. 'கற்பு' பற்றி முன்பு திருமா திருவாய் மலர்ந்தருளிய வரிகளை மனதில் வைத்து கொஞ்சம் ஓவராய் சொல்லிவிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் நான் சொன்னதை இத்தனை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லைதான். ஒழுங்கான இணய இணைப்பு வந்ததும் இது குறித்து விரிவாய் என் கருத்தை எழுத உத்தேசித்துள்ளேன். இப்போதைக்கு மொட்டையாய் திருமாவளவன் ராமதாஸ் தலைமையில் உள்ள பாசிச கூட்டத்தையும், அதை நியாயப்படுத்தும் மற்றவர்களையும், அந்த நியாயப்படுத்துதலை தார்மீகப்படுத்தும் ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற நட்டு கழண்டவர்களையும் வன்மையாய் கண்டிக்கிறேன். இங்கே பிரசாரப்படுத்துவது போல் குஷ்புவிற்கு ஆதரவாக பெரிய அளவில் குரல் எழும்பியதாய் தெரியவில்லை. உதாரணமாய் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று 'மும்பை எக்ஸ்பிரசிற்கு' எதிராக நடந்த போராட்டத்திலும், தார் போட்டு ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்திலும் வெகுவாக கிண்டலடிக்கப்பட்டும், வன்முறை கும்ப்லாகவும் சித்தரிக்கப் பட்டது போல், குஷ்புமீதான தாக்குதலை பெரிது படுத்தாததை கவனிக்க வேண்டும். ஞாநியின் கட்டுரையை படித்தேன். அதே போல மாற்று குரல்கள் என்ற (அ. மார்க்ஸ் தொடர்புள்ள) அமைப்பின் துண்டு பிரச்சுரம் ஒன்றை கீழே தருகிறேன். கலாச்சார போலீஸ்களை கண்டிக்கிறோம். தமிழ் நடிகை குஷ்புவை பிரதான எதிரியாக நிறுத்தி இங்கே ஒரு கலாச்சார வன்முறை அரங்கேறுகிறது. அடித்தள பெண்களை திரட்டி விளக்குமாறு, செருப்பு சகிதம் ஊர்தோறும் போராட்டங்கள் நடத்தப் படுகின்றன. சென்னையில், மதுரையில், திருச்சியில் என அவர் மீது வ்ழக்குகள் போடப்படுகின்றன. பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தல் நடத்த இயலாமை, தனியார் துறையில் இட ஒதுகீடு, சுயநிதி கல்லூரி, நிலத்தடி நீரை கொக்கோ கோலாக்காரனுக்கு விற்கும் அநீதிகள் என அடித்தள மக்களை பாதிக்கும் எத்தனையோ பிரccஅனைகள் இருக்க குஷ்புவை எதிர்த்து இவர்கள் களமிறங்கி இருப்பதேன்? வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் ஒழுங்கங்கெட்டவர்கள் என்ற் சங்கராச்சாரி சொன்னபோது இன்று தொடப்ப கட்டைகளுடன் புறப்பட்டுள்ள படைகள் அன்று எங்கு போயின? அப்படி என்ன சொல்லிவிட்டார் குஷ்பு? மாறிவரும் சமூக சூழலில் பெண்களின் பாலியல் நிலையும் மாறிவருவது குறித்து தொடர்ச்சியாக பல சமூகவியல் ஆய்வுகள் வந்து கொண்டுள்ளன. cஅமூகவியலாளர்களும் மனோதத்துவவியலாளர்களும் இது குறித்து கருத்துக்கள் சொல்லியுள்ளனர். சென்ற மாதத்தில் மட்டும் இரண்டு பத்திரிகைகளில் (அவுட்லுக், இந்தியா டுடே) இது குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. சீஃபோர் என்கிற ஆய்வு நிறுவனம் உரிய முறையியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி நமது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள திருமணமான பெண்களில் 42 சதவிகிதம் பேர் கணவனை தவிர வேறு ஆடவர்களுடன் உறவு வைத்து கொள்வதற்கு விரும்புவது வெளியாகி உள்ளது. புதிய சூழலில் பெBகளின் திருமண வயது மிகவும் தள்ளி போகிறது. கால் சென்டர் கணணி தொழில் நுட்பம் போன்ற வேலைகள், ஆடவர்களுடன் பழகும் வாய்ப்பு முதலியவை அதிகரிக்கின்றன. விவாகரத்துக்கள் அதிகமாகின்றன. தனியாக வாழும் பெண்களும் எண்ணிக்கையும் ஏறுமுகமாக உள்ளது. இத்தகைய சூழநிலை பெண்களின் பாலியல் நிலைகளிலும், பாலியல் தேர்வுகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தன்மை தவிர வேறு பல அம்சங்களிலும் பெண்களின் சமூக பாத்திரங்கள் மாறியுள்ளன. தொழில் நிறுவனர்களாகவும், ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் 'எக்ஸிகியூடிவ்'களாகவும் அவர்கள் மாறி வருகின்றனர். பெண்களின் சமூக ஆளுமைகளும் தனித்துவங்களும் பெரிதும் வளர்ந்துள்ளன. இந்த பிண்ணணியில் அவர்களின் பாலியல் விருப்பத்தில் ஏற்படுள்ள மாற்றங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சர்சைக்குள்ளான குஷ்புவின் கட்டுரையை முழுமையாய் வெளியிட்டுள்ளோம். ஒரு தேர்ந்த சமூகவியலாளரை போன்று மிகுந்த பொறுப்புடன் அவர் ஒவ்வொரு வரியையும் கூறியுள்ளார். அவரது கருத்துகளுடன் நாங்கள் நூறு சதவிகிதம் உடன்படுகிறோம். பாலியல் கல்வி, பாதுகாப்பான உடலுறவு, தாம்பத்ய ஜனநாயகம் பாலுறவு ஜனநாயகம் என்று பல தளங்களில் அவரது கருத்துக்களை பதிவு செய்துள்லார். இதில் தமிழ் பெண்களை இழிவு படுத்தும் எந்த கருத்தும் கிடையாது. தவிரவும் அதே இதழில் கவிஞர் சுகிர்த ராணியும் இதே போன்ற கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் குஷ்பு மட்டும் தனிமை படுத்தப் பட்டு தாக்கப்படுவதேன்? தங்கர் பச்சான் பெண்களை இழிவு செய்து பேசியதற்கு எதிராக சக நடிகைகள் நடத்திய போராட்டத்தின் எதிர்வினையாகவே இது அமைகிறது. 'ஒரு ஆம்பிளைய மன்னிப்பு கேட்க வச்சீங்களா?' என்ற ஆணாதிக்க திமிரே இந்த போராட்டத்தில் வெளிப்படுகிறது. இது பெரியார் பிறந்த மண். 'திருமணமான பெண்கள் கனவரை தவிர வேறு ஆடவருடன் உறவு வைத்துகொள்ளுதல் தவறால கருதக் கூடாது' என்று சட்டமியற்ற வேண்டுமென பொது மநாட்டில் தீர்மானம் போட்டவர் அவர். ' ஆண்கள் இரண்டு மனைவியரை வைத்துகொண்டால் பெண்கள் நான்கு ஆசை நாயகர்களை வைத்துகொள்ள வேண்டும்' என மேடைகளில் முழங்கியவர் அவர். இந்த சூழலில் இங்கே ஒரு சிவசேனை கலாசாரம் உருவாவது வருந்தத் தக்கது. பாலதாக்கரேயின் இடத்திற்கு நமது தலைவர்கள் போட்டியிடுவது வேதனைக்குரியது. குஷ்புவை மும்பைக்கு போ எனc சொல்லும் இவர்கள் இந்த கலாச்சார வன்முறை செயல்பாடுகளை மும்பையிலிருந்து இறக்குமதி செய்திருப்பது வேடிக்கையானது. முஸ்லீம் நடிகைகர்களை ஆதரிக்க வேண்டாம் என்று இந்துத்வவாதிகள் முதன் முதலில் குரல் கொடுத்தனர். அடுத்தபடியாக நமது உள்ளூர் கலாச்சார போலீஸ்கள் இன்று தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டு நடிகைகளை வெளியேற்றுவோம் என முழக்கம் வைக்கின்றனர். தமிழர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வாழும் குஷ்புவை 'அந்நியர்' என் சொல்வதற்கும், சோனியா காந்தியை ஆர். எஸ். எஸ் காரர்கள் 'அந்நியர்' என சொல்வதற்கும் என்ன வித்தியாசம்? கலாச்சார போலீஸ்கள் பொதுவாக சொல்வது கருத்து சுதந்திரத்திற்கு ஒரு அளவு உ8ண்டு என்பதுதான். இதே போலிஸ் மொழி இன்று குஷ்புவிற்கு எதிராக பயன்படுத்துவதையும் கவனிக்க வேண்டும். பொடாவையும் தடாவையும் கொண்டுவரும்போது இந்திய உள்துறை அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் பேசிய மொழியில் நமது அடித்தள் இயக்க தலைவர்கள் இன்று மீடியாவில் பேசுவதை கவனியுங்கள். மீடியா சாம்ராஜ்ஜியங்களுக்கிடையில் நடக்கும் போட்டியில் இன்று குஷ்பு பலியிடபடுவதையும் கவனிக்க வேண்டும். சன்டீவி தமிழ் முரசு தினகரன் முதலியவை இப்பிரச்சனையில் காட்டும் அக்கறை வணிக நோக்கமும் கொண்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். இன்று குஷ்பு தனிமை படுத்தப் பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நடிகர் சங்கம் கூட விலகியே நிற்கிறது. இந்நிலையில் ஒரு பெண்னை அழ அழ மன்னிப்பு கேட்க செய்தது நமது கலாச்சார போலிஸ்களுக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் கருத்துரிமை போராளிகளுக்கும், பெண்ணியவாதிகளுக்கும் இது மிகப் பெரிய தோல்வி. இச்சூழலில் குஷ்பூவிற்கு ஆதரவாக கருத்துக்களை மீடியாக்களில் முன்வைத்துள்ள பெண்ணுரிமையாளர்களாகிய பேரா. சரஸ்வதி, உ.வாசுகி ஆகியோரை பாரட்டுகிறோம். நமது சூழலில் கருத்துரிமை ஆதரவாளர்களும், பாசிச எதிர்பாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த பச்சை கலாச்சார வன்முறையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். கருத்துரிமை காப்போம்! கலாச்சார போலிஸ்களின் முயற்ச்சியை முறியடிப்போம்! குஷ்புவிற்கு தார்மீக ஆதரவை வழங்குவோம்! (மாற்று குரல்கள்- என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு துண்டு பிரச்சாரத்திலிருந்து மேலே தட்டியுள்ளேன். யாரிடமும் அனுமதி கேட்கவில்லை.) |
43 Comments:
இந்தத் து.பி. -ஐ இங்கே தந்ததற்கு நன்றி
மாற்றுக்குரல்களின் துண்டுப்பிரசுரத்துக்கு நன்றி, ரோசாவசந்த்.
வருக. இது குஷ்புவின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்த சமூகத்தின் மீது புறையோடியுள்ள புண்ணின் சீழின் நாற்றம். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் மறைப்பார்களோ?
வஸந்த் - தனித்து ஒலிக்கும் இந்த நியாயத்தின் குரலைக் கேட்பதற்கு நிம்மதியாக இருக்கிறது. உங்கள் நேரமின்மைக்கு இடையில் இதனை எங்களுக்கு அறியத்தருவதற்கு நன்றிகள்.
//மாற்றுக்குரல்களின் துண்டுப்பிரசுரத்துக்கு நன்றி/
Same here.
ஞாநியின் கட்டுரையும் இந்தத் துண்டுப் பிரசுரமும் நம்பிக்கை அளிக்கின்றன. நன்றி. குஷ்புவின் பேட்டியைப் பிரசுரித்ததற்கும் நன்றி.
தலித்துகளுக்காக விடாமல், தொடர்ந்து குரல் கொடுத்துச் செயல்படுபவர் என்ற விதத்தில் திருமா மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. ஆயினும் இந்த விஷயத்தில் அவரது கருத்துக்கள் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளன.
வருக ரோச வசந்த்
தங்களது துண்டு பிரச்சாரம் மிக நன்றாகவும், சிந்தனைகளை தூண்டும் படி அமைந்துள்ளது. இந்த பதிவிற்கு நன்றி.
இந்த பிரச்சாரம் நல்ல தரமான முண்ணனி நாளிதழில் வந்தால் நன்றாக இருக்கும்.
மயிலாடுதுறை சிவா...
ரோசா திருமாவளவனும் ராமதாசும் மிகவும் மோசமாக குஷ்புவின் இந்த செவ்வி குறித்த விடயத்திலே நடந்து கொண்டிருக்கின்றார்கள். நண்பர் ஒருவர் அனுப்பி, சுகிர்தராணி, குஷ்பு, கனிமொழி ஆகியோரின் செவ்விகளை வாசித்தேன். நீங்கள் சொல்வதுபோலவே வேண்டுமென்றே குஷ்புவின் செவ்வியைத் திரித்து (குழலிகூட இணையத்திலே ஆரம்பத்திலே தந்த வரிகள் அப்படியாகத்தான் இருந்தன என்பது மனவருத்தத்துக்குரியது) அவரை அழுத்தியிருக்கின்றார்கள். பிறகு பிபிஸி தமிழோசையிலே இது குறித்த நிகழ்ச்சியிலே திருமாவின் இரட்டைநிலை நேர்காணல் வெறுப்பை மட்டுமே தந்தது.
தங்கர்பச்சானுக்கு குஷ்பு தங்கர்பச்சானின் அம்மா குறித்து கேட்ட கேள்வி பெரிய நியாயமானதில்லை. ஆனால், இது தங்கர்பச்சான் என்ற தனிமனிதருக்கு ஆதரவாக பெண், மொழி, பண்பாடு, மாநிலம் போன்றவற்றினை அநாவசியத்துக்கு முலாமிட்டு நடத்தப்படும்போது வெட்கக்கேடு. ஒரு சம்பவத்தினை முழுக்க ஆராயாமல் கண்மூடிய கட்சி, மொழி, பால் ஆதரவு வெறுக்கத்தக்கது. (சில பெண்கள் இயக்கங்கள் இதைத்தான் தங்கர்பச்சானின் மீதான நடிகர்சங்கக்கூத்திலே செய்திருந்தன)
இன்னொரு பரிமாணம். விஜயகாந்தும் அவரது நடிகர்சங்கமும் இங்கே நழுவிக்கொண்ட கேவலம்.
என்னைப் பொறுத்தமட்டிலே (யதார்த்தம் எப்படியாகவிருந்தபோதிலுங்கூட) குஷ்பு மன்னிப்பு கேட்டிருக்கக்கூடாது. அப்படியாகக் கேட்கும்விதத்திலே அவரொன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லை. அவர் சொன்னதிலும்விட சுகிர்தராணி சொன்னதுதான் இன்னும் உசாரை எழுப்பியிருக்கவேண்டும். (சுகிர்தராணி ஏற்கனவே பண்பாட்டுக்காவலர்களாலும் கலாசாரபுஷ்கர்கள் போஷகர்களாலும் அடிபட்டு நொந்திருக்கையிலே, இன்னோர் அடிவேண்டாம்). ஆனால், ராமதாஸ் திருமாவளவன்கூட்டத்தினரும் கூடவே தங்கர்பச்சானின் இப்போதைய தமிழ்ப்பெண்காவலர்தனமும் வெறும் காவாலித்தனமான வெட்கக்கேடான செயற்பாடுகள். இதற்கு இந்துத்துவா, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சாமரைவீச்சுவேறு.
எல்லாவற்றிலும்விட மோசமான விடயம் - வலையிலும் பதிப்பிலும் - ஒரு நிகழ்ச்சியினை தொடராக நிகழ்வன குறித்து முழுதாக நிதானமாகக் கூட்டிப் பார்த்துக் முடிவுக்கு வராமல், ஒரு செய்தியினைமட்டும் வைத்துக்கொண்டு கோஷமும் கூக்குரலும் எழுப்புவது.
ரவி ஸ்ரீனிவாஸினை நீங்கள் இதிலே தாக்குவது ஏனென்று மெய்யாகவே புரியவில்லை. ரவி ஸ்ரீனிவாஸ் குஷ்புவினைத் தாக்குவதைச் சரியென்றுசொன்னதாக எந்தப்பதிவினதும் முன்னோட்டத்திலோ பின்னூட்டத்திலோ எனக்குத் தென்படவில்லை.
//ரவி ஸ்ரீனிவாஸினை நீங்கள் இதிலே தாக்குவது ஏனென்று மெய்யாகவே புரியவில்லை. //
எனக்கும். இதை பூதாகரமாக்கிப் போராட்டம் நடத்துபவர்கள் பாமக, தசி என்ற ஒரே காரணத்துக்காக பச்சை மத, ஜாதி வெறியர்கள் போடும் முற்போக்கு வேஷத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் ரவியைத் தாக்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்புகிறேன்.
பெயரிலி: குஷ்புவின் வாக்குமூலம் விகடனில் படித்தேன். இன்னும் ஒரு பெண் என்று தோன்றியது. பல சமயம் பெண்கள் பலவகை அழுத்தங்களால் குடும்பம், கணவன், அதனால் வாழ்க்கை என்ன ஆகுமோ, குழந்தைகள் இன்னபிற காரணங்காளால் பின்வாங்கிவிடுகிறார்கள். இதனால் தங்களை (மனத்தை)தானே கொலை செய்து கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது.ஒரு பரிதாபமான பெண் தன் கணவனின் அல்லது தன் தொழிலுக்கு எந்த வித ஏமாற்றமும் வரக்கூடாது, குழந்தைகள் வாழ்க்கை அழிய கூடாது என்பதற்காக நெற்றி நிறைய பொட்டும் கணவனும் குழந்தைகளுமாய் பேட்டி கொடுப்பது ஏமாற்றம். இதனால் வியாபார வாழ்க்கை பழைய நிலைக்கு வரலாம். கொள்கையை விட எல்லோருக்குமே தனி மனித ஆதாயங்கள் பெரிதாகி இருக்கின்றன. இதனாலேயே பெண் எழுத்தாளர்கள் பெரிய அளவில் ஆதரித்து எதுவும் எழுதிவிடவில்லை.பலவகைகளிலும் ஒருவரை பயமுறுத்தி மன்னிப்பு கேட்கவைப்பதில் எதனை சாதித்திருக்கிறர்கள்? கனிமொழியின் செவ்வியை நானும் படித்தேன்.பலருக்கு விமரிசனம் செய்யாமல் தன் உறவு, தன் இனம் என்ற ரீதியில் ஆதரவு செலுத்தவே முடிகிறது. இது போலவே காந்தியை குறித்த விமரிசங்களையும் சிலரால் தாங்கி கொள்ள முடியாமல் போனதை பார்த்தேன்.
நன்றி ரோசாவசந்த் மறு பதிவிற்கு.
//குழலிகூட இணையத்திலே ஆரம்பத்திலே தந்த வரிகள் அப்படியாகத்தான் இருந்தன என்பது மனவருத்தத்துக்குரியது
//
இந்தியாடுடே வை படிக்காமல் மற்றொரு பதிவரின் பதிவிலிருந்தும், தமிழ்முரசுவின் இணையதளத்திலிருந்தும் எடுத்து போட்டுவிட்டேன், அந்த பதிவிலேயே பின்னூட்டத்திலும் இதை கூறிப்பிட்டுள்ளேன், பிறகு இந்தியாடுடே படித்தபோது 'சகஜம்' என்ற வார்த்தையில்லையே தவிர மற்றதெல்லாம் நான் பதிவில் குறிப்பிட்டதே வேறு வார்த்தைகளில் இருந்தது. எப்படியிருந்தாலும் மூலப்பேட்டி வந்த இந்தியாடுடேவை படிக்காமல் மற்ற பத்திரிக்கையை படித்துவிட்டு எழுதியது என்னுடைய தவறு, இனி தவிர்க்கின்றேன்.
ஞாநியின் கட்டுரையை முழுவதுமாக அளித்த களைப்பில் மார்க்ஸ் பிரசுரத்தை பதிவில் போடவில்லை. நீங்கள் பார்த்திருப்பீர்களா தெரியவில்லை.
http://theruththondan.blogspot.com/2005/09/blog-post_25.html
http://theruththondan.blogspot.com/2005/10/blog-post_07.html
http://theruththondan.blogspot.com/2005/10/blog-post_02.html
பொருளடக்கம் என்ன சொல்கிறது என்பதில் இருந்து எந்த நிலையில் இருக்கிறோம் என்பது தெரியும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் கடுமையாகக் கண்டிக்கிறேன் என்று சொன்னால்தான் கண்டனம் என்று நினைக்கிறீர்களா என்ன?
நமது சக வலைப்பதிவாளர் (ஸ்டேஷன் பெஞ்ச்) ராம்கி பெயரிலி குறிப்பிடும் தமிழோசையில் கண்டித்து குரல் கொடுத்திருக்கிறார்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/10/051003_kushboo.shtml
http://www.bbc.co.uk/tamil/
highlights/story/2005/10/
051003_kushboo.shtml
Kanimozhi's interview disappointed me. This part was not very clearly mention in my comment. May be I had a different view.
தேன் துளி: கனிமொழி இருக்கும் இடம் அப்படி. அவர் இவ்வளவு பேசியதே அதிகம் என்பாரும் உண்டு. குஷ்பூவை விட்டு விட்டு கனிமொழியைப் பிடித்துக் கொள்வார்கள் நம் அரசியல் தலைவர்கள். என்ன, திருமா- ராமதாசுக்கு பதிலாக வேறு தலைவர்கள் இருக்கப் போகிறார்கள்.
nantri. will write on this, tomorrow.
thanks to everyone who commented here. Unforunately I am not able to read anything(sitting again in a net cafe, but with only windows 98). Will reply tommorow. Thanks!
பின்னூட்டமளித்த அனைவருக்கும் நன்றி. மற்றவை குறித்து பிறகு எழுதுகிறேன்.
பெயரிலி, சுமு,
எனக்கு ரவி குறித்து நீங்கள் சொல்வதுதான் தலை கால் புரியவில்லை. ஒரு பெண் தாக்கப்படுவதை குறைந்த பட்ச்மாய் கூட கண்டிக்காமல் திருமா ராம்தஸிற்கு அவர் வக்காலத்து வாங்கி வருகிறார். தங்கருக்கு கருத்து சொல்ல உரிமையில்லையா என்கிறார். குஷ்பூவிற்கு இதை சொல்ல உரிமை உண்டுஇ என்றால் தாங்கருக்கும் உண்டு என்கிறார். (குஷ்பு சொன்னதை படிக்காமலேயே அவர் சொன்னது மீது கடும் விமர்ச்னம் உண்டு என்று எழுதிய ஜோக்கை கவனியுங்கள். என்ன விம்ர்ச்னம் என்று சொல்லிதொலைக்கலாம் அல்லவா?)
தங்கர் சொன்னதும் குஷ்பு சொன்னதும் ஒன்றா? பாலியல் குரித்த ஒருவரின் கருத்திற்கும், நடிகைகள் பற்றிய வசைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒளருபவரை(அதுவும் அறிவிஜீவி வேடத்தில்) வேறு என்ன சொல்லலாம் என்று சொல்லுங்கள். குஷ்பு தாலி செண்டிமெண்டில் படங்களில் நடித்தால் அவருக்கு இதை சொல்ல உரிமை இல்லாமல் போய்விடுமா? பெரியாரும், அம்பேதகாரும், அருந்ததியும் போல உறுதியாக இல்லாவிட்டால், குஷ்பூவை ஆதரிக்க கூடாதா? தங்கருக்கு வந்த எதிர்ப்பு நியாயமென்றால், குஷ்புவிற்கு வரும் எதிர்ப்பும் நியாயம் என்று ஒரு பாசிச தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளார். நான் சொல்வது தவறென்றால் அவர் சொன்னதை மேற்கோள் காட்டி மறுங்கள். அல்லது உங்களுக்கு அவர் சொன்னதில் எது ஒப்புதல் என்று எழுதுங்கள். நிச்சயம் இன்னும் விரிவாய் இது குறிஉத்து எழுதுவேன் . நன்றி.
(bear with spelling mistakes, same problems persists.)
இதற்கு பதிலாய் எழுதியது மிக நீண்டு விட்டதால், 'பொதுவாக' எழுதி பதிவாக இங்கே.
உங்கட இந்த பதிவுடன், துண்டுபிரசுரத்துடன் உடன்படமுடிகிறது.
இவை தொடர்பாய் மேலும் விபரமாக எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
சுட்டி
some quotes from Ravi's post. Sumu and Perili can say what they agree with, and what I have twisted.
//குஷ்பு கூறியது குறித்து நான் எழுதும் முன் அந்தப் பேட்டியை படிக்க வேண்டும். யாரேனும் அதைவலைப்பதிவுகளில் இட்டால் பயனுள்ளதாக இருக்கும். ...//
Few lines later.
//குஷ்பு கூறிய கருத்து சில நம்பிக்கைகளை, விழுமியங்களை கேள்விக்குள்ளாகுவது போல் தோன்றினாலும் பலருக்கு அதிர்ச்சி தருபவை என்பதைத் தவிர அவற்றில் வேறு என்ன இருக்கிறது. .....
...இந்த சர்ச்சையில் குஷ்புவின் கருத்துக்கள் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு.///
//அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும். ஏதோ குஷ்பு முற்போக்கானவர்கள், அவரை எதிர்ப்பவர்கள் பிற்போக்கனாவர்கள் என்று இதை குறுக்க முடியாது. //
//குஷ்பு என்ன நான் நடிக்கும் படங்களில் முற்போக்கான கருத்துக்களை மட்டுமே முன்னிறுத்தி நடிப்பேன் என்று லட்சியம் கொண்ட நடிகையா, இல்லையே.இப்போது ஏதோ சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். இவை விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள்தானெ. இப்படி இருக்கும் போது குஷ்புவை விமர்சன பூர்வமாக அணுகுவதே சரியானதாக இருக்க முடியும், இதே அணுகு முறையைத்தான் திருமாவளவன், ராமதாஸ் கூறும் கருத்துக்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்//
//ஆனால் *சிறு எதிர்ப்பு* எழுந்த உடன் மன்னிப்புக் கேட்ட குஷ்பு வேறொரு சந்தர்ப்பத்தில் கற்பு நெறியே தமிழ்ப் பண்பாட்டின் ஆதாரம் என்று கூறினால் வியப்படைய ஒன்றுமில்லை. //
//Why *his views were not treated as his personal views* and why was he so much harassed even after he apologised. Are actresses more equal than others in India. //
Beyond this pl show where he has condemnd the attack on Kushpu? Atleast explain whether he is not justifying the attack? I have more to say on this later.
ரவி பற்றி நான் சொன்ன விஷயம் எளிமையானது. குஷ்பு மீதான தாக்குதலை நியாயப்படுத்துபவர்களுக்கு ஒரு தார்மீகத்தை தருகிறார். ஒரு உதாரணம், வீரவன்னியன் ரவி சொன்ன வாதங்களை போட்டு எழுதிய பதிவு. அவர் கூடுதலாய் சொன்ன ஒரே விஷயம் 'பத்ரி ஒரு பார்ப்னர்' என்பது. மற்றபடி ரவியின் வாதங்கள் சிரிபாய் சிரிக்க படும் அளவிற்கு லாஜிக்கற்றது. அப்படியில்லை என்று தோன்றினால் சொல்லுங்கள், என் விளக்கத்தை நிச்ச்யம் தருகிறேன். ஆனால் தயவு செய்து இந்த விவகாரத்தை பயன்படுத்தும் மற்ற பார்பனிய நபர்களை முன்வைத்து விளக்கம் தராதீர்கள். அவர்கள் குறித்து நானும் குறிப்பிட முடியும், நீங்களும் அதை மீறியே எதோ சொல்கிறீர்கள். அதை கூட செய்யாமல் இந்த தாக்குதலை அவர் நியாயப்படுத்தியுள்ளதை எங்கே ஒப்புகொள்கிறீர்கள் என்று எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
இங்கயும் "வச்சா குடுமி,அடிச்சா மொட்டை" கதை தானா?.விடு ஜூட்!
கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி. தெருத்தொண்டன் நான் எழுதியதை தவறாக புரிந்துகொண்டது போல தோன்றுகிறது. நான் (ரவி தவிர) வேரு யாரையும் குஷ்பு மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை என்று புகார் சொல்லவில்லை. தெருதொண்டனின் பதிவுகளை முன்னமே பார்த்திருந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் ஒப்புதலாகவும், உற்சாகமளிக்க கூடியதாகவும் இருந்தது. அது தவிர சிறகில் ஒலி (voice on wings) எழுதியதையும் படித்தேன். அதுவும் பிடித்திருந்தது. நான் குஷ்புவிற்கு ஆதரவு இல்லை என்று சொன்னது வலைப்பதிவுகளை முன்வைத்து அல்ல, தமிழ் ஊடகங்களை முன்வைத்து. மீண்டும் எப்போது இங்கே வர இயலும் என்று தெரியாது. என் வீட்டில் சீரான இணைய இணைப்பு வந்வுடன் நிச்சயமாய் என் கருத்துக்க்ளை விரிவாய் எழுதுவேன்.
My views are at
http://pksivakumar.blogspot.com/2005/10/blog-post.html
Thanks and regards, PK Sivakumar
The comment I wrote in PKS's post,
http://pksivakumar.blogspot.com/2005/10/blog-post.html
அன்புள்ள சிவக்குமார்,
பல இடங்களில் புத்திசாலியாக பேசும் நீங்கள் கிண்டலடிக்கும் போது மட்டும் சிறிது அசட்டுத்தனமாய் செய்வது மெய்யாலுமே புரியவில்லை. இத்தனை விஷயங்களை படித்த பின்பும் என்னை பற்றிய உங்கள் ஆரூடம் பொய்க்கும்(குறைந்த பட்சம் நீங்கள் இப்படி சொன்ன காரணத்திற்காகவாது) என்பது கூட தெரியாத அளவிலா இருக்கிறீர்கள்! அது எப்படியிருப்பினும், நீங்கள் பாராட்டிய காரணத்தினால் மட்டும் எனக்கு குமட்டல் நேர வாய்பில்லை. உங்கள் எழுத்துக்களில் எனக்கு எது குமட்டுகிறது என்று மிக தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி கூறும் போது கூட நீங்கள் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையாய் இருக்க கூடும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் என்னை பாராட்டினால் அது குறித்த ஒரு ஜாக்கிரதை உணர்வு எனக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் நீங்கள் மட்டுமில்லாது அரவிந்தன் நீலகண்டன் முதல் டோண்டுவரை யாருடன் எனக்கு பகிர்ந்து கொள்ள எது இருந்தாலும் அதை வெளிப்படையாய் செய்வதில் பிரச்சனையில்லை, செய்திருக்கிறேன். என்கருத்தை இந்த குறிப்பிட்ட விவகாரத்க்தில் நிறைவான ஒரு பதிவாய் எழுதும் போது அப்படி செய்வதாகவும் இருந்தேன். அது மட்டுமில்லாது உங்களை வேறு காரனக்களுக்காக எதிர்த்தாலும் ஒரு ஆணதிக்கவாதியாக இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் தநான் நினைத்திருக்க காரணம் எதுவும் இல்லை.
cஅரி, இந்த பதிவை நான் வாசித்தவரையில் எதிர்க்கவோ முரண்படவோ பெரிதாய் இல்லை. பெரியார் வெறும் அதிர்சிக்காக பேசினார் என்பதையோ, ஜீவாவை முன்வைத்து அதே போல முன்வைக்கும் விமர்சன்மோ நிச்ச்யமாய் ஏற்ககூடியது அல்ல. அந்த விஷ்யம்தான் (மற்ற தர்க்க தகறாறுகளை மரந்துவிட்டு மேலோட்டமாய் அரசியல் பார்வையை நிர்ணயிப்பதாய் இருக்கும்) அடிப்படை வேறுபாடு. ரவியை நான் மறுக்கும் விதமும் முற்றிலும் வேறாக இருக்கும்.
மீண்டும் அவை எப்படி இருந்தாலும், ரவி விதண்டாவாதமாய் முன்வைக்கும் தர்க்கமும் அதன் அடிப்படையும், எத்தனை முட்டாள்தனமானது என்பது சிந்திக்க தெரிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை சொல்லாமலிருக்க வேறு காரணக்கள் இருக்கலாம். அவரை (அவரது முந்தய கருத்துக்களை அறிந்ததனால்) இதை மட்டும் முன்வைது ஒரு ஆணாதிக்க வாதி என்று முடிவு கட்ட முடியாத காரணத்தால், வெறும் 'நட்டு கழண்டவர் ' என்கிறேன். அவரை பற்றி இதைவிட நல்ல விதமாய் என்னால் சொல்ல முடியாது. அதையே உங்கள் பாணியில் 'ஏதோ பிர்ச்ச்னை' என்று டீஸன்டாய் சொல்கிறீர்கள். நீச்சயமாய் ஒப்புகொள்கிறேன். நான் வசவு வைத்ததாய் (மற்றவர்களைப் போல) திரிக்காமல் என் நியாயத்தை புரிந்துகொண்டு சொன்னதற்கு மிகவும் நன்றி. மேலும் பெரியார் பற்றி நான் அறியாத சம்பவத்தை தந்ததற்கும் நன்றி. இன்னொருமுறை உங்கள் பதிவை நிதானமாய் படிக்க வேண்டும். விரிவாக மீண்டும் எழுதுவேன். thanks!
ரோசா வசந்த்ஜி, என் பங்கிற்கு, பார்க்க
http://nunippul.blogspot.com/2005/10/blog-post_12.html
உஷாஜி, பார்தேன். உங்கள் கருத்தை உங்கள் நிலையிலிருந்து சொல்லியிருக்கிறீர்கள். அதே போல குஷ்பு 'அவர் நிலையிலிருந்து சொல்லியதை', அவ்வாறு சொல்ல அவருக்கு இருக்கும் உரிமையை அங்கீகரிக்கும் அளவிற்கு (நேரெதிரான நிலையிலிருந்த்கொண்டு) உங்களுக்கு இருக்கும் பரந்த மனம்தான் எந்த விவாதத்திற்கும் அடிப்படையான தேவை.
ரோசா,
குஷ்பூ என்ன பேசினார் எனபதைப் பார்க்காமல் ரவி எழுதியது தவறுதான். ஆனால் ஒருவர் கேள்விபடுவதை வைத்து எழுத நிச்சயம் அவருக்கு உரிமையுள்ளது. நான் குஷ்பூவை அவரது கருத்துக்களுக்காக "பாராட்டுகிறேன் " என்று மட்டும் ஒரு வலைப்பதிவில் எழுதினேன். ஆனால் பின்னால் நடந்த அரசியல் கூத்துகளில் சற்றும் எழுதும் ஆர்வம் வரவில்லை. திருமாவைப் பற்றிய என் எண்ணமும் சற்றே மாறியுள்ளது.
முக்கியமாக இங்கு சொல்லவந்தது, பிகேஎஸ் -இன் கேள்விகள் சரியாக இருந்தபோதும்,
ரவி "பெரியாரை உடைப்பதற்கும்" , பிகேஎஸ் போன்ற இந்துத்துவாக்கள் "பெரியாரை உடைப்பதற்கும்" ஒரே காரணம் இருப்பதில்லை, இருக்கவேண்டும் என்றும் அவசியமில்லை. பிகேஎஸ்ஸின் சந்தர்ப்பவாதத்துக்கு இன்னொரு உதாரணம் இது எனப்து என் கருத்து.
கார்த்திக்,
எனக்கும் பிகேஎஸ் ஸ¤க்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும் ஒரு கோஷ்டி எல்லா இடத்திலும் ஒரே பல்லவியை பாடுவதை பார்த்தவன் என்ற முறையிலும் அந்த கோஷ்டி கானத்தை நீங்களும் இசைக்கிறீர்கள் என்ற் காரணத்தாலும் இதை இங்கு கேட்கிறேன்.
"பிகேஎஸ் -இன் கேள்விகள் சரியாக இருந்தபோதும்" என்று சொல்கிறீர். அதே நேரத்தில் "பிகேஎஸ்ஸின் சந்தர்ப்பவாதத்துக்கு இன்னொரு உதாரணம் இது" என்றும் சொல்கிறீர் உங்களை போன்றவர்கள் கருத்து சொல்பவரின் பிண்ணனியை வைத்து சொல்பவரின் எல்லா கருத்துக்களையும் சந்தர்ப்பவாதம் என்று சொன்னால் அப்போது அவர்கள் "சரியாக இருந்தபோதும்" போன்ற கருத்துக்களை எப்போதுதான் சொல்வது. அல்லது இந்துத்துவவாதி என்று நீங்கள் முத்திரை குத்துபவர்கள் கருத்தே சொல்லக்கூடாதா. அல்லது பிகேஎஸ் வேறு பெயரில் உ.ம். சுந்தர மூர்த்தி/ தங்கமணி/ ரவி ஸ்ரீனிவாஸ் /அனானிமஸ் என்ற பெயரில் கருத்தை சொல்லியிருந்தாலும் இதே மாதிரிதான் பேசியிருப்பீர்களா? நீங்கள் மற்றும் இங்கே குறிப்பிடப்பட்டவர்கள் ஜாதி வெறியர்கள் (பிராமண எதிர்ப்பாளர்கள் என்ற category) என்பதை ஒத்துக்கொள்வீர்களா? ஜாதி பற்றி குறிப்பிட்ட டோண்டுவை ஜாதி சொன்ன காரணத்துக்காக திட்டி தீர்த்தவர்கள் இன்று படையாச்சி என்று பெருமை பொங்க பேசும் வீர வன்னியனுக்கு கண்டனம் தெரிவிக்காததற்கு எதுவும் காரணம் உண்டா?
மாற்றுக்குரல்களின் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டதற்கு நன்றி. இணையங்களில் சூடாவதுடன் முடிந்துவிடாமல், தெருக்களுக்கும் கொண்டுவரப்பட்டிருப்பது தெம்பூட்டுகிறது. இது போன்ற உங்களுக்கு கிடைக்கும் விடயங்களை எங்களுக்காகவும் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன்.
கார்திக், ரவி குஷ்பு சொன்னதை 'கேள்வி பட்டு' எழுதியது அல்ல முக்கிய பிரச்சனை. குஷ்பு மீதான தாக்குதலை அவர் நியாயப்படுத்துகிறார். அதற்கு ஒரு தார்மீக நியாயத்தை தர முயற்ச்சிக்கிறார். அது தவிர குண்டக்க மண்டக்க கேள்விகளை முட்டாள்தனமாய் எழுப்பி, தனது 'நிறய படித்த' பிம்பத்தை வைத்து மற்றவர்களை பற்றி எழுப்பும் கேள்விகளை தனக்கு சற்றும் பொறுத்தி பார்க்கும் நேர்மையை காட்ட்டவில்லை. அத்ற்கு எல்லாம் மேலாக இந்த சந்தர்ப்பத்தில் *பெரியாரை காட்டிகொடுக்கவும், கொச்சை படுத்தவும் கூட தயங்கவில்லை*(அதை பற்றிசிவக்குமார் கேள்வி எழுப்புவதும் நியாயமானதே. அந்த ஒரே காரணத்திற்காக என் கருத்தை மாற்றிகொள்ள முடியாது)
மேலும் நீங்கள் எல்லாம்(அதாவது நீங்கள் + பெயரிலி+ சுமு) எல்லாம் நினைத்துகொண்டு இருப்பது போல் அவர் திருமா மீதான அபிமானத்தினால் இதை செய்யவில்லை. அவரை விட ஆயிரம் மடங்கு அபிமானம் எனக்கு உண்டு. உண்மையிலேயே அவர் குஷ்பு சொன்னதற்கு எதிரானவர், அவர் கருத்துக்கள் மிக சனாதனமானவை. இந்த விஷயம் மட்டுமில்லாமல் இதற்கு முந்தய தருணங்களிலும் இதற்கான உதாரணக்களை என்னால் தரமுடியும்.
நிலமை இப்படியிரிக்க என்னால் பிகேஎஸ் சந்தர்ப்பவாதமாய் வேடம் போடுகிறாரா என்று பார்ப்பதில் எந்த நியாயமும் கிடையாது.அவர் வாதங்களில் எனக்கு பெரிய பிரச்சனை இல்லாத போது அப்படி என்னால் பார்த்துகொண்டிருக்கவும் முடியாது. மேலும் இப்படி ஒற்றை பார்வையாய் ஒரேவிதமாய் ஒரு சதிதிட்ட அணுகுமுறையோடு பார்பதும் எனக்கு ஒப்புதல் கிடையாது. பல விடுதலை பார்வைகள் பாசிசமாய் பரிணமிப்பது இப்படித்தான் எனப்து என் தனிப்பட்ட கருத்து. இதை ஏற்றுகொண்டு செயல்படும்படி யாரையும் நான் வற்புறுத்தவில்லை. ஆனால் வேறுபடுவதை குறிப்பிடவேண்டிய அவசியம் எனக்கு உன்டு.
பொறுக்கி உங்கள் கருத்துக்கு நன்றி, இந்த துண்டு பிரசுரத்தை தவிர குஷ்புவிற்கு பரிந்து, பாசிசத்தைஉ கண்டித்து எந்த குரலும் ஒலிக்க வில்லை என்றுதான் கேள்விபடுகிறேன். இந்த துண்டு பிரசுரத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், சரஸ்வதி, வாசுகி பேசியுள்ளார்கள். அது தவிர்த்து வழக்கறிஞர் ரஜினி அவர்களும் பேசியுள்ளதாய் அறிகிறேன். பத்திரிகைகளில் இந்தியா டுடே கட்டுரை வெளியிட்ட காரனத்தினாலாவது பரிந்து எழுதியுள்ளது. வாசந்தியின் ஒரு கட்டுரையும் வந்துள்ளது. தீம்தரிகிடவில் ஞாநி எழுதியுள்ளார். மற்றபடி ஊடகங்களில் வேறு ஆதரவோ கண்டனமோ இருப்பதாக தெரியவில்லை. நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிகைகள் எத்தனை கேவலமாய் கருத்து சொல்லியிருக்கும் என்பதை விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.
http://urpudathathu.blogspot.com/2005/10/blog-post.html
// வசந்த் திருமாவினை பா.ஜ.கவினை விட மோசமான கலாச்சார கும்பல் என்று சொன்னால், ..//
நாரயணன், உங்கள் பதிவுடன் முழுமையாய் ஒத்து போகிறேன்.
ஆனால் நான் திருமாவை 'பாஜகவை விட மோசமான கலாச்சார கும்பல் 'என்று சொல்லவில்லை. அப்படி ஒரு கருத்தும் எனக்கு கிடையாது. இன்னமும் திருமாவிடம் வெளிப்படும் பாசிசத்திற்கும் இந்துத்வ பாசிசத்திற்கும் மிக பெரிய வித்தியாசம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் பாஜக/ சிவசேனாவுடன் வேறுபடாத வகையில் திருமா ஆட்டம் ஆடும் போது இந்த வித்தியாசத்தை பேசுவதும் அதை முன்வைத்து திருமாவிற்கு பரிந்து பேசிவதோ நியாயமான செயல்பாடாக இந்த சந்தர்ப்பத்தில் தெரியவில்லை.
//திருமாவிடம் வெளிப்படும் பாசிசத்திற்கும் இந்துத்வ பாசிசத்திற்கும் மிக பெரிய வித்தியாசம் இருப்பதாகவே நினைக்கிறேன். //
உண்மை. ஒத்துக் கொள்கிறேன். அது "பாஜகவினைப் போல" என எழுத நினைத்து சொதப்பியது. செட்டில் ஆயாச்சா? இருந்தால் ஒரு போன் அடியுங்கள் சந்திக்கலாம்.
பார்வையாளான்,
பிகேஎஸ் சனாதனியாக இருந்தால் கூட எனக்குப் பிரச்சினை இல்லை. அல்லது நீங்கள் சொன்ன "கோஷ்டி" போல பெரியாரியாக இருந்தாலும் பிரச்சினை இல்லை, நான் இதுவரை பிகேஎஸின் விவாதங்களை வாசித்தவரையில், எப்போது தனக்கு சாதகமாக ஒன்று நடக்கிறதோ தை தனக்கு சாதகமாக ,தனது கொள்கைகளுக்கு சாதகமாக , அந்த சமயத்தில் மட்டும் கை கோர்த்துக்கொள்வதைதான் சந்தர்ப்பவாதம் என்கிறேன்.
"சரியாக இருந்த போதும்" என்று சொன்னது, ரவியைக் குறித்து அவர் கேட்ட கேள்விகளைச் சொன்னேன், அதற்கு ரவிதான் பதில் சொல்லமுடியும். ஆனால், இந்த நேரத்தில் ரவியைக் கேள்விக்கேட்பது போல், பெரியாரை உடைப்பதையும், தனது கருத்துக்களும் எப்போது நியானமானவைதான் என்பது போல் எழுதுவதைத்தான்,
/பெரியாரைப் பற்றிய சரியான விவாதத்துக்குத் தயாரா என்றெல்லாம் சண்டமாருதம் செய்த ரவி ஸ்ரீனிவாஸ் இன்றைக்கு "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்பது போல, பெரியார் பெண்ணியம் குறித்த கருத்துகளைச் சொல்லிய அளவுக்கு முன்னெடுத்துச் செல்லவில்லை என்றும்/
+
/
பெரியாரிடம் கடுமையாகக் கருத்து முரண்படுகிற போதும் எனக்கு அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு. ஒருமுறை ரவியிடமே இதை நான் சொல்லியிருக்கிறேன். பெரியாரைப் பற்றிய என் கருத்துகளை எதிர்த்து நான் பெரியாரை எல்லாவிதங்களிலும் எதிர்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டு என் வலைப்பதிவின் கமெண்ட்டுகளில் ரவி எழுதியபோது,/
"சந்தர்ப்பவாதம்" என்கிறேன். நிச்சயமாக பிகேஎஸ் இதில் குளிர் காய்கிறார், ரவியுடன் தனது பழைய கணக்கை தீர்த்துக்கொள்ள பயன் படுத்துகிறார், இதைத்தான் பாசிசம் என்பேன்.
ரோசா அதுதவிர, உங்கள் வாதங்கள் புரிகிறது. நீங்கள் விளக்கமாக எழுதும்போது மறுப்பிருந்தால் சொல்வேன். நன்றி.
கீற்று வில் வந்த கோவி.லெனினின் கட்டுரையின் சுட்டிகள் இங்கே அவசியமாகின்றது
வெள்ளத்தனைய மலர் நீட்டம்!
பெரியாரைப் பிழையாமை
நன்றி http://karuppupaiyan.blogspot.com/2005/10/blog-post.html
குழலி,
சுட்டிகளுக்கு மிக்க நன்றி..
லெனினின் கட்டுரைக்கு ரோசாவசந்தின் கருத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....
குறிப்பாக கீழ்க்கண்ட வரிகள்..
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துக்கணிப்பு நடத்திய இதழின் தரத்துக்குரிய கருத்துகளை வாரி வழங்கியதோடு அவர் நின்றிருந்தால் துடைப்பக்கட்டை போராட்டங்கள் பெரிதாகியிருக்காது. தனது கருத்து வன்முறையை அடுத்த கட்டத்திற்கு அவர் நகர்ந்த்திச் சென்றதுதான் மிக மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கியது. ஊடகங்களின் வணிகப் போட்டிக்கு குஷ்புவின் ‘கற்பு’ ஆராய்ச்சி கைகொடுத்து சர்ச்சையான நேரத்தில், ‘தினத்தந்தி’ இது பற்றி அவரிடம் கேள்வி எழுப்புகிறது. மறுபடியும் தனது ஆய்வு அறிவை வெளிப்படுத்துகிறார் பாலியல் வல்லுநர் குஷ்பு. “தமிழ்நாட்டில் செக்ஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்கிறார்களா? திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று எதிர்க்கேள்விகள் தொடுத்தார்.
குஷ்பு பொதுவாகத்தானே கருத்து தெரிவித்தார், தமிழ்நாட்டுப் பெண்களைக் குறிப்பிட்டா கருத்து தெரிவித்தார் என்று அவருக்காக வரிந்துகட்டுகிறவர்கள், குஷ்பு கேட்ட எதிர்க்கேள்விகளை வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஏனென்றால், இந்த பேட்டி வெளியான நாளேட்டை தாங்கள் படித்ததாக சொன்னால், தங்களின் அறிவு மேதைமை தொடர்பான பிம்பம் உடைந்து கண்ணாடி சில்லுகள் போல ஆகிவிடுமே என்ற தயக்கம்தான். கருத்துக் கணிப்பு நடத்திய இதழில் வெளியான குஷ்புவின் கற்பு ஆராய்ச்சியை மட்டுமே முன்வைத்து அவர்கள் விவாதம் நடத்துகிறார்கள். அவர் தெரிவித்த இந்த அப்பட்டமான கருத்தைப் பற்றி வாய் திறக்க முன்வருவதில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------
நாம் இதைப்பற்றி கேள்வி கேட்டாலே ,உடனே 'கற்பு' என்றால் அது ஒரு பெண்ணுறுப்பு சம்பந்தப்பட்டது என்று நினைக்கும் அறிவிலிகள் கூட்டம் என்று முத்திரை குத்தி , இவர்கள் மட்டும் தான் கற்பின் அர்த்தம் புரிந்த மேதாவிகள் என்று அவர்களே முடிவு பண்ணிக்கொண்டு ,.தங்கள் எழுத்து வாதத்திறமையினால் தாறு மாறாக ஒரு உயர்தர வாக்கிய அமைப்பில் நம்மை பின்னி பிடலெடுத்து விடுவார்கள். அதனால் இந்த பக்கம் வருவதற்கே பயமாயிருக்கிறது.
பொழுது மேதாவி அவர்களே!
நான் அறிந்தவர்களில் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் தான் அதிகம் (என்னையும் சேர்த்து) .குஷ்புவும் நீரும் அறிந்தவர்களில் வேண்டுமானால் வைத்துக்கொள்பவர்கள் அதிகம் இருக்கலாம்.
தினகரனில் தினமும் தான் கொலை செய்பவரைப் பற்றி செய்தி வருகிறது .அதற்காக தமிழ்நாட்டில் கொலை செய்யாதவர் எத்தனை பேர் என்று கேட்பீரோ? நீரும் உம்ம லாஜிக்-கும்
'பொழுது' போகாம என்ன கேக்குறோமுன்னு தெரியாம சம்பந்தம் இல்லாம உளறுபுவனுகெல்லாம் பதில் சொன்னது தப்பு தான்.
‘இந்தியாடுடே’யில்
தமிழச்சி மார்புகள்
கண்ணீரால் போர்த்தினேன்.
-பாவலர் அறிவுமதி, கடைசி மழைத்துளி நூலில்.
குஷ்பு: ரசிகனின் கோயிலும், சிந்தனையாளனின் கும்பாபிஷேகமும்.
India Today's Article on this issue
http://www.tamil.cinesouth.com/specials/specials/kushboo.shtml
நண்றி ரோசா வசந்த்! புரிந்து கொண்டேன். தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடலில் இன்று ஒரு பத்தி படித்தேன். முடிந்தால் நாளை பதிவிடுகிறேன்.
Post a Comment
<< Home