ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, February 22, 2006

கண்மணி பப்பா!

உயிர்மை இதழை படித்து விட்டு ஒரு சிறு பதிவாய் இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் படிக்க கிடைக்கவில்லை யாகையால் கேள்விப்பட்டதை மட்டும் வைத்து.

எல்லோரும் எதிர்பார்த்தது போல், நீட்டி முழக்கி தன் பக்க நியாயத்தை, மாறி மாறி மனுஷ்யபுத்திரன் தர்க்க சுயமைதுனம் செய்திருப்பார் என்று கேள்விபட்டதிலும் படித்ததிலும் தெரிகிறது. சுரேஷ் கண்ணன் போன்றவர்களை கூட அது குமட்டியிருப்பதிலிருந்து அதன் 'வீர்யத்தை' புரிந்து கொள்ள முடிகிறது. வலைப்பதிவிலிருந்து தேடி எடுத்து ரஜினி ராம்கி மற்றும் தேசிகனின் பதிவுகளை உயிர்மையில் மறு பதிப்பு செய்துள்ளாராம். மனுஷ்யபுத்திரனிடம் அவர் இதுவரை வாசித்துள்ள, எழுதியுள்ள, பதிப்பித்துள்ள இலக்கிய அறிவுலக சமாச்சாரங்கள் அளித்திருக்கக் கூடிய அறிவு நேர்மையும் ஜனநாயக உணர்வும் கொஞ்சமாவது இருந்திருந்தால், ஒரு (நிதானமான, 'நாகரிகமான') எதிர்கருத்தாக நாரயணணின் பதிவையும் பதிப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் நடத்துவது சன் ஜெயா டீவிக்களிடமிருந்து, நேர்மையில் ஜனநாயகத் தன்மையில் எந்த விதத்திலும் வேறு படாத ஒரு ஊடகம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தனக்கு ஜால்ரா சத்தமெழுப்பும் இரண்டு பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறார். சன் ஜெயா டீவிக்கள் உயிர்மையிலிருந்து வேறுபடும் இடம் என்னவெனில், அவை ஒரு போதும் மனுஷ்யபுத்திரனைப் போல 'சன் டீவியின் உளவியல் வன்முறை' என்ற தலைப்பில் ஒரு தார்மீக குரல் எழுப்பாது.

முழுக்க எதிர் தரப்பிலிருந்து வெளிவரும் நாரயணனின் கட்டுரையை வெளியிடுவதில் ஏதாவது சஞ்சலம் இருக்கலாம். ஒரு விலகிய தாளமாய், ஒருவகையில் மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவான என் பதிவை வெளியிடும் ஜனநாயக தன்மை கூட இல்லை. (அவர் வெளியிடாத வருத்தத்தில் நான் எழுதுவதாக நினைப்பவர்களுக்கு எல்லா நன்மையும் உண்டாக கடவது. ஆனால் வெளியிடாததற்கு நான் முழுக்க நன்றியுடையவனாக இருக்கிறேன் என்பதுடன், ஒருவேளை வெளியிட என்னை அணுகியிருந்தால், என் கருத்து பயன்படப்போகும் தளம் கருதி அதை நான் மறுத்திருப்பேன் என்பதை சும்மாவேனும் இங்கே பதிவு செய்கிறேன் என்பது வேறு விஷயம்.) என்னை பொறுத்தவரை மனுஷ்யபத்திரன் என் பதிவை வெளியிடாதது எதேச்சையானது அல்ல. (அதை அவர் நிச்சயம் படித்திருப்பார் என்று எனக்கு தெரியும்.)

சுந்தர்மூர்த்தி 'பொடி வைக்கவில்லை' என்று பின்னால் நழுவினாலும், குறிப்பிட்ட அரசியலுக்கு சாதகமாக என் பதிவு இருக்கும் என்பதுதான் 'பாராட்டி வரப் போகும் பின்னூட்டங்களை கவனியுங்கள்' என்று அவர் சொன்னதன் பொருள் என்று வாசிக்க தெரிந்த அனைவருக்கும் தெரியும். என் பதிவை ஒழுங்காக படிக்கும் எவருக்கும், அதன் அரசியல் நிலைபாடு புரியாமல் போகாது என்பதாகவே என் நினைப்பு. அந்த அரசியல் நிலைபாட்டின் காரணமாகவே, சுந்தரமூர்த்தியால் குறிப்பிடப் பட்டவர்களுக்கு என் பதிவு முழுக்க உவப்பாய் இருக்கும் சாத்தியம் இல்லை என்று நினைத்திருந்தேன் (அப்படி இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு எழுதும் நேர்த்தி கடன் எதுவும் இல்லையெனினும்). அதே காரணத்தினாலேயே மனுஷ்யபுத்திரன் நடத்தும் மக்கள் குரலில் அது வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை (தான் தீர்க்க தரிசித்த பின்னூட்டங்கள் வராததற்கு காரணமாய் நினைத்து கொண்டிருப்பது போல்) தான் முன்னமே ஆரூடம் சொன்னதால் தான் மனுஷும் பதிப்பிக்கவில்லை என்று சுமு நினைத்தால், அப்படிப்பட்ட ஒரு பார்வையையும் அங்கீகரிப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

Post a Comment

10 Comments:

Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்,
மனுஷ்யபுத்திரன் எழுதிய தலையங்கத்தின் தலைப்பு: 'எதிர்ப்பின் ரகசியங்கள், வழிமுறைகள், பொய்கள்'. கூடவே தனக்கு சாதகமான தேசிகன் (சீரியசான காமெடி), ரஜனி ராம்கி(பொல்லாத சொல்) பதிவுகள், பி.கே. சிவகுமார் எழுதியிருந்த பின்னூட்டம், நீங்கள் சிலாகித்திருந்த கோ. ராஜாராமின் 'அன்புள்ள குட்டி ரேவதி' திறந்த மடல், அ. ராமசாமி தினமலரில் எழுதியதென்ற குறிப்புடன் 'பெண் கவிஞர்களின் எதிரி யார்'. இப்பிரச்சினையைப் பற்றி வலைப்பதிவுகளில் நான் படித்திருந்த இன்னும் சிலவற்றைப் (நாராயணன், மாலன், தெருத்தொண்டன் போன்றோர் எழுதிவை)பற்றி குறிப்பெதுவும் இல்லை. அடுத்தமாத வாசகர் கடிதத்தில் எதிர்ப்பக்கமிருந்து ஏதேனும் வரலாம்.

2/22/2006 8:50 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு, உயிர்மையை படித்த நம் நண்பர்களிடம் (நாராயணன் அதில் ஒருவர்) தொலைபேசியில் உரையாடி கேள்விப்பட்டதை முன்வைத்தே எழுதியிருக்கிறேன். உங்கள் தகவல்களுக்கு நன்றி.

2/22/2006 9:04 PM  
Blogger இளங்கோ-டிசே said...

வசந்த், இந்தப் பதிவுக்கு அவ்வளவு தொடர்பில்லாதுவிட்டாலும், இந்த விடயம் குறித்து தெளிவாக எழுதப்பட்ட (என்னளவில்) கனிமொழியின் கட்டுரை இங்கே:
http://www.thozhi.com/issue9/kanimozhi.php

2/22/2006 11:12 PM  
Blogger ROSAVASANTH said...

http://urpudathathu.blogspot.com/2006/02/blog-post_26.html

// போலிஸினால் வெறித்தனமாக தாக்கப்பட்ட கேரள வனவாசிகளாகவோ//

அன்புள்ள தங்கமணி, உங்கள் கருத்தை நான் சிறிதும் முரண்படாமல் ஏற்றுகொள்கிறேன் என்பதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஆனால் வனவாசி என்ற சொற்பிரயோகம் ஆர்.எஸ்.எஸினுடையது. இந்தியாவின் பூர்வீக குடிமக்கள் என்கிற பார்வையுடன், ஆதிவாசிகள் என்று அழைக்கப்படும் சொல்லாடலை மறுக்கும் முகமாக, இங்கு ஆரிய குடியேற்றம் முதலாக வந்தேரிகள் என்று யாரும் இல்லை என்பதை மருக்கும் சமஸ்கிருத மைய வறலாற்று கருத்தாக்கத்தின் சார்பில் வரும் வார்த்தை இது. அதை நீங்களும் (கவனக் குறைவின் காரணமாக கூட) பாவிப்பது குறித்த அரசியல் பிரச்ச்னையை சுட்டி காட்ட மட்டுமே இந்த பின்னூட்டம்.

உண்மையில் யார் இங்கே பூர்வீகம், யார் வந்தேறினார்கள், அதனால் இபோது என்ன என்பதெல்லாம் வேறு விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் 'அரசியல ரீதியாக சரியான' வார்த்தைகளை பாவிக்கும் முகமாக (மேல்ஜாதி என்பதற்கு பதில் ஆதிக்க ஜாதி என்பது, தாழ்த்தப்படவர்கள் என்பதற்கு பதில் தலித் என்ப்துபோல) ஆதிவாசி என்ற வார்த்தையே பொருத்தமானதாக இப்போதைகு தெரிகிறது. மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.

2/27/2006 4:37 PM  
Blogger ROSAVASANTH said...

http://kurangu.blogspot.com/2006/02/3.html

ஹமாஸ் பேட்டி நான் (எதிர்பார்த்ததை விட) மிகுந்த முதிர்ச்சியுடன் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது(வாசிக்கத் தந்ததற்கு நன்றி.) பேட்டி எடுத்தவர் 'இஸ்ரேலை பற்றி கேட்கவில்லை' என்று சொல்வதை அவர் சார்பை வெளிப்படுத்துவதாகத்தான் தெரிகிறது. அதற்கு 'How do you want me not to pay attention or care about what Israel says? ' என்பது மிகுந்த நியாயமானதாகவே தெரிகிறது. முக்கியமாக அப்படி என்ன முதிர்ச்சியுடன் சமாதானத்திற்காக இஸ்ரேல் தன் நிலையிலிருந்து கீழிறங்கியுள்ளது? மேலும்

Oslo stated that a Palestinian state would be established by 1999. Where is this Palestinian state? Has Oslo given the right to Israel to reoccupy the West Bank, to build the wall and expand the settlements, and to Judaize Jerusalem and make it totally Jewish?

Has Israel been given the right to disrupt the work on the port and airport in Gaza? Has Oslo given them the right to besiege Gaza and to stop all tax refunds from the Palestinian Authority?

2/27/2006 5:59 PM  
Blogger ROSAVASANTH said...

http://seythi.net/2006/02/21/53

அருந்ததி பரிசை நிராகரித்தது பற்றி எனக்கும் சில கருத்துக்கள் இருக்கின்றன என்றாலும், ரவி ராய் பற்றி கூறுவது கண்டு ரொம்பவே (எரிச்ச்லையும் மீறி) சிரிப்பு வருகிறது. வலைபதிவின் பின்னூtடங்களிலும் (தன் பதிவுகளிலும்) வெறும் காக்காய் எச்சம் மட்டும் தொடர்ந்து போட்டு வருபவர், இதுவரை ஆழமான முறையில் ஒரு பதிவு கூட எழுதாதவர், தன்னை ஏதோ தமிழின் ஏகபோக அறிவுஜீவியாய் எண்ணிக்கொண்டு எல்லாவற்றை ப்ற்றியும் வெற்று தீர்புகளை அளிக்கும் ஆபாசத்தை எப்போஒது நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை.

ராயின் புத்தகம் இலக்கியமில்லை என்பதில் பிரச்ச்னையில்லை, அதை போலெமிக்ஸ் என்கிறார். ராயின் கட்டுரைகளில் அரசு என்ற நிறுவனத்தின் அதிகாரம் குறித்த பல கட்டமைப்புகளை,அதன் அர்தங்களை கற்பிதங்களை தொடர்ந்து கட்டவிழ்த்து வருவதை காணலாம். நர்மதா போராட்டத்தை முன்வைத்ததும், வழக்கமான கம்யூனிஸ பாணியிலிருந்து விடுபட்டௌ ஏகாதிபத்தியம் பற்றி அவர் எழுதி வருவதும் உதாரணத்திற்கு. ரவி போன்றவர்கள் விரும்பும் ஆதாரம் வேண்டுமெனில் சாம்ஸ்கி அருந்ததி பற்றி சொன்னதை குறிப்பிடலாம். இன்னும் பல உதாரணங்கள் இணையத்தில் தேடுபவருக்கே கிடைக்கும். ராயின் எழுத்தை பற்றி மொட்டையாய் குறிப்பிடுள்ளது ரவியின் சின்னததன்ம் அன்றி வேறு எதுவும் இல்லை. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது திடீரென்று இஸ்லாம் பற்றி விமர்சனமாய் (அவ்வாறு எழுதியவர்களை ஒருகாலத்தில் திட்டிவிட்டு) எழுதிவருவது கூட ரவியின் ஈகோ சம்பந்த பட்ட, வலைப்பதிவில் ஏற்பட்ட சில சில்லரி சண்டைகளே காரணம். (அங்கேயும் காக்காய் எச்சம் மட்டுமே விழுகிறது என்பது வேறு விஷயம்.)

அருந்ததியின் எழுத்துக்கள் உலகமெங்கும் அதிர்வுகளை ஏர்படுத்தியிருக்கிறது. குட்டி பூர்ஷ்வா சமூகத்தின் பிரஞ்ஞையை, மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. அதை மிகவும் அறிவுரீதியாய் தேவையான உணர்ச்சி கலந்து செய்திருக்கிறது. கண்டதையும் படித்து செரிக்காமல் ஏப்பம் மட்டும் விடும் ரவி போன்றவர்கள் அணுகமுடியாத தளத்திலே அருந்ததி இயங்கி வருகிறார்.

அருந்ததி பரிசை நிராகரித்தது குறித்து வழக்கமான அற்ப வாதங்களை (மற்றதை ஏன் ஏற்றுகொண்டார், அப்போது ஏன் ஒப்புகொண்டார் என்பதை) மீறி எதுவும் வரவில்லை. அருந்ததி உலகின் எல்லா அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கு எல்லாம் சரியான விகிதத்தில், ஒரே மாதிரியான வகையில், எதிர்வினை செய்வதாக தன்னை சொல்லிகொள்ளவில்லை. வாழ்தலின் சமரசங்கள் அதில் நாம் தேர்ந்தெடுத்து செய்யும் சில எதிர்வினைகள் எதிர்ப்புகள் இது குறித்த மிகுந்த சுய நினைவுடனேயே அவருடய எல்லா எழுத்துக்களும் திகழ்கின்றன. அது குறித்த (இதற்கு முன் பெரியார் போன்ரவர்களிடம் கண்ட) ஒரு சுய பிரஞ்ஞையை அவரிடம் காணமுடியும். அந்த வகையில் (இந்திய அரசிடம் கூட) செய்துகொண்ட எத்தனையோ வாழ்வின் சமரசங்களுக்கு நடுவில், இந்த சந்தர்ப்பத்தில் தனக்கௌ அளிக்கப்பட்ட பரிசை ஏற்றுகொள்ள இயலாததை கூறி(அதே நேரம் பரிசளித்தவர்கள் மீதான தன் மரியாதையை சொல்லி) நிராகருத்துள்ளார். இது எத்தனி தூரம் விவேகமான முடிவு என்பது விவாததுக்கு உரியது. ஆனால் அருந்ததியின் அக்கறை தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரானது. அது குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் (அப்படி இருப்பதான சாயத்துடன்) சில மட்டையடி கேள்விகளை மீறி அது குறித்து பேச இயலாத ரவி போன்ரவர்கள், ஒரு அறிவுஜீவி பாவனையுடன் அருந்ததி குறித்து தீர்பளிப்பது அற்பமானது. இங்கே பின்னூட்டமிட்டுள்ள ஒரு சமுத்ராவின் தளத்தில்தான் ரவியின் சிந்தனையும் உள்ளது. இதில் எனக்கு அச்சரியம் இல்லை. தெரிந்த விஷகயம்தன். இன்னமும் மற்ற நண்பர்கள் இவரை சீரியசாய் எடுத்துகொள்வதுதான் வேடிக்கையாய் உள்லது.

(சுரதாவில் தட்டியதில் வரும் எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.)

3/02/2006 5:40 PM  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

3/02/2006 6:11 PM  
Blogger ROSAVASANTH said...

ரவி முன்வைப்பது போல் அவுட்லுக் கட்டுரி அருந்ததி பற்றி குறை கூறியதாக தெரியவில்லை. அருந்ததி ப்ற்றி மிக மரியாதையுடன் நேர்மறையாகவே எழுதியுள்ளது. ரவி அற்பத்தனமாய் தீர்பளித்துள்ளது போல், அருந்ததி பரிசை நிராகரித்தை ‘ஸ்டண்ட்’ என்றூம் சொல்லவில்லை. அது தவிர ” Mahasweta devi has spent years in fighting for rights of tribals. Her views cannot be brushed aside lights……. Mahaswta Devi’s arguments make more sense. ” என்று சொல்வதை பார்த்தால் மகாஸ்வேதா தேவி ஏதோ கருத்து சொன்னது போல் தோன்றும், ஆனால் கட்டுரையில் மகாஸ்வேதா தேவியின் கருத்தாக ஒரு வரி மட்டுமே உள்ளது. அதுவும் பரிசு குறித்து அல்ல, நமக்கு இருக்கும் ப்ரிவிலேஜ் ஆதிவாசிகளுக்கு இல்லாதது பற்றி. ரவி கட்டுரையை படித்தாரா அல்லது வழக்கம் போல் லிங்க் மட்டும் கொடுத்தாரா என்று தெரியவில்லை.

3/02/2006 6:12 PM  
Blogger ROSAVASANTH said...

The following comment was posted by முத்து(தமிழினி). I clicked on 'Reject' instead of 'publish' by mistake. It is purely a slip. I am very sorry about that. The comment follows.

திருப்பி திருப்பி அடிக்கிறான்யா மனுசன்.....ரவி ஏதாவது ஒரு பதிவாவது ஆழமா எழுதுங்க..அவர் சொல்றது மாதிரி அங்கங்க சில பின்னூட்டங்களை போட்டுட்டு போயிடறீங்க..

இப்ப பாருங்க சமுத்ரா கூட கம்பேர் பண்ணிட்டாரு..சமுத்ரா பாஞ்சு வரபோறாரு....

புஷ் வருகையில் பிஸியா இருக்கிற சமுத்ரா இங்க வந்தார்னா என்ன ஆகுமோ?
பயமா இருக்கு :))))))))

3/02/2006 6:45 PM  
Blogger ROSAVASANTH said...

Arundhati said

"I thank the jury of the Sahitya Akademi for giving me this year's Sahitya Akademi Award for my book `The Algebra of Infinite Justice.' I am proud that the jury felt that a collection of political essays deserved to be given India's most prestigious literary prize.

These essays, written between 1998 and 2001, are deeply critical of some of the major policies of the Indian State — on big dams, nuclear weapons, increasing militarisation and on economic neo-liberalism. However, even today this incumbent government shows a continuing commitment to these policies and is clearly prepared to implement them ruthlessly and violently, whatever the cost.

In the last few months, apart from the growing numbers of farmers' suicides [now running into tens of thousands] and the forcible eviction of people from their lands and livelihoods [in the hundreds of thousands], we have witnessed the police brutalisation of industrial workers in Gurgaon, the killing of a dozen people protesting against a dam in Manipur, and the killing of another dozen people protesting their displacement by a steel plant in Orissa. Even as we call ourselves a democracy, Indian security forces control and administer Kashmir, Manipur and Nagaland — and the numbers of the dead and disappeared continue to mount.

The `Algebra of Infinite Justice' is also critical of U. S. foreign policy, particularly in the aftermath of the September 11, 2001 attacks in New York and Washington. This present Indian government too has seen it fit to declare itself an ally of the U. S. Government, thereby condoning the American invasion of Afghanistan and its illegal occupation of Iraq, which, under the Nuremburg principles, constitutes the supreme crime of a war of aggression.
I have a great deal of respect for the Sahitya Akademi, for the members of this year's Jury and for many of the writers who have received these awards in the past. But to register my protest and re-affirm my disagreement — indeed my absolute disgust — with these policies of the Indian Government, I must refuse to accept the 2005 Sahitya Akademi Award."

It is sick to describe this "She is publicity hungry and this is just an antic."

3/02/2006 7:56 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter