ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, March 14, 2006

நாறும் பாரதம்!

'India Stinking' என்பதை 'நாற்றமடிக்கும் இந்தியா' என்றுதான் மொழிபெயர்க்க வேண்டுமெனினும், பாரதம் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கீதா ராமஸ்வாமி எழுதிய 'India Stinking: Manual scavengers in Andhra Paradesh and their work' என்ற புத்தகத்தின் விலை ரூ 100. புத்தகக் கடைகளில் எளிதாய் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சென்னையில் இருக்கும் யாருக்காவது (ஒன்றுக்கு மேற்பட்டதாயினும்)பிரதி வேண்டுமெனில் என்னை அணுகலாம். தபாலில் அனுப்பும் வேலைகளை (குறைந்த பட்சம் உடனடியாய்) என்னால் செய்யமுடியும் என்று தோன்றவில்லை. இருப்பினும் வேண்டுவோர் தொடர்பு கொண்டால் ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறேன். தன்வீட்டு கக்கூஸை ஹார்பிக் போட்டு கழுவி சாதிய சமுதாயத்தை தகர்த்துவிட்டதாக நினைப்பவர்களுக்கும், அதை வடிவான தர்க்கமாய் முன்வைத்தால் ஆடிபோய் கள்ளருந்திய போதை கண்டு, போதிஞானம் கண்டது போல் பாவனை செய்பவர்களுக்கும் இது உகந்தது அல்ல என்பது ஒரு தாழ்மையான தனிப்பட்ட கருத்து மட்டுமே. மற்றபடி பீயைவிட நாற்றமடிப்பதாக நான் கருதும் கருத்துக்களை சொல்பவர்களுக்கும், பிரதி அனுப்புவதில் மனத்தடை எதுவுமில்லை.

என்னை பொறுத்தவரை வாழ்தலும் இருத்தலுமே இந்த சமுதாயத்தில் மாபெரும் குற்றமாகிறது. எனது நாற்றமற்ற வாழ்க்கை, ஒரு பெரும்திரளான மக்களின் கைகளில் பீயை திணிப்பதன் மூலமே சாத்தியமாகியுள்ளது. ஆனால் அதை மட்டும் சொல்லிகொண்டு இருக்காமல், பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் துவக்க புள்ளியாக, இந்த புத்தகம், மற்றும் வெங்கட்டின் பதிவை முன்வைத்து என் கருத்துக்களை விரைவில் பதிகிறேன். இது குறித்த எழுதப்பட்டுள்ளவைகள்.

இந்துவில் வெளிவந்த மதிப்புரை.

அதை முன்வைத்து வெங்கட் எழுதியது.

தொடர்ந்து எழுதியது.

நியூ இண்டியன் எக்ஸ்பிரசில் வந்த மதிப்புரை.

அவுட்லுக்கில் லாகின் பாஸ்வேர்ட் பிரச்சனை இருப்பதால் காஞ்சா இலையா எழுதியதை நேரடியாய் தருகிறேன்.
Soiled Tracks
Brings out the ideological hang-ups that encourage manual scavenging and needs to be read by every civilised citizen of India.

KANCHA ILAIAH


Instead of creating a technology to remove human excreta from houses, the pandits took the easy way out by condemning a particular caste to do the job. Even when the technology was available, our Brahminical bureaucracy was unwilling to abolish manual scavenging. How the combination of caste and urbanisation has contributed to the persistence of the most inhuman of jobs is revealed in this small but significant book.
Gita Ramaswamy’s book evolved out of her work in the campaign to demolish the infamous


dry latrine system that still prevails in Andhra Pradesh, home to over two lakh dry latrines. Despite being banned in ’93, manual scavenging persists even in the 21st century.
The book brings out the ideological hang-ups that encourage manual scavenging. It points out the limits of Communist ideology, so long as it remains caste-blind. It shows how this abominable system was allowed by every successive ruling party because of the Gandhian understanding that the Bhangis were born to do this work—just like a mother cleans her child’s nappies. It cites Ambedkar’s argument that if this work was/is so sacred, why don’t the upper castes take it up? This book needs to be read by every civilised citizen of India.

Post a Comment

11 Comments:

Blogger ROSAVASANTH said...

விடுபட்டது http://www.countercurrents.org/dalit-viswanathan150206.htm

3/14/2006 6:16 PM  
Blogger Sarah said...

Thank you vasanth. I should see whether i have enough courage to read such books. mm..sarah

3/14/2006 9:07 PM  
Blogger Sarah said...

//எனது நாற்றமற்ற வாழ்க்கை, ஒரு பெரும்திரளான மக்களின் கைகளில் பீயை திணிப்பதன் மூலமே சாத்தியமாகியுள்ளது. ஆனால் அதை மட்டும் சொல்லிகொண்டு இருக்காமல், பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் துவக்க புள்ளியாக, இந்த புத்தகம், மற்றும் வெங்கட்டின் பதிவை முன்வைத்து என் கருத்துக்களை விரைவில் பதிகிறேன்//

yes , it is correct. And please write.

sarah

3/14/2006 9:09 PM  
Blogger Thangamani said...

வசந்த்:

கீற்றில் கட்டுரை இரண்டு வந்தது. அப்போது எனது பதிவில் அதை சுட்டினேன். சுட்டிகள் அங்கே.

http://bhaarathi.net/ntmani/?p=190

3/14/2006 11:17 PM  
Blogger Venkat said...

>இந்த புத்தகம், மற்றும் வெங்கட்டின் பதிவை முன்வைத்து என் கருத்துக்களை விரைவில் பதிகிறேன

காத்திருக்கிறேன்.

3/15/2006 5:00 AM  
Blogger ROSAVASANTH said...

சாரா நன்றி.

தங்கமணி உங்கள் பதிவை அப்போது படித்தேன். வேறு ஊரில் இருந்ததால் கருத்து சொல்லவில்லை. உங்கள் பதிவின் சுட்டிக்கும் நன்றி.

வெங்கட், இது உடனடியாய் நடக்கும் செயல்பாடாக தெரியவில்லை. புத்தகத்தின் சில பகுதிகளை இங்கே தமிழில் வெளியிட முதலில் இடுகிறேன். பிறகு அது குறித்த கருத்துக்கள். இது குறித்து தொடர்ந்து பேச வேண்டியதும், இதை கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சனையாய் மாற்றுவதும் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அதே நேரம் தனிப்பட்ட முறையில் இது குறித்து அக்கரையுள்ள சிலருடன் தொடர்பு கொள்ள முயல்கிறேன். நேரடியாய் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் விவாதிக்கலாம். தேவையென்றால் இதற்காக ஒரு தனிப்பதிவு கூட தொடங்கலாம். குஜராத் குறித்தும் ஆந்திரா குறித்தும் பல தரவுகள் இருப்பதை நானே படித்திருக்கிறேன். தமிழகம் குறித்து எந்த அளவிற்கு விவரங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. தமிழகத்தில் சில இடங்களில் இந்த வழக்கம் இருப்பது தெரியும் என்றாலும், பெரிய அளவில் குறைந்துவிட்டதாக தோன்றுகிறது.

யாருக்கும் புத்தகம் தேவையில்லையா?

3/15/2006 7:07 PM  
Blogger டண்டணக்கா said...

RV, Is there an online shop selling this book or any suggestions how to get it in usa?

Thanks.

3/17/2006 3:44 AM  
Blogger ROSAVASANTH said...

tantanakka< please go to this URL and click on the very first book.

http://www.navayana.org/content/catalog.htm#

It is published by Navayana.

3/17/2006 7:02 PM  
Blogger டண்டணக்கா said...

Thanks RV, that's the first link I got out of google, but it seems they don't take online orders and ship international. First I tried the other shop firstandsecond.com who ship international, but they don't have it yet. I requested them in iWish option they have. If they bring it on their inventory list soon, I will let know the availability here. Otherwise, personally I have to wait couple more months for my friend's arrival from chennai to get it. Not to mention, Thanks for introducing this book.

3/18/2006 12:35 AM  
Blogger டண்டணக்கா said...

Thanks RV, that's the first link I got out of google, but it seems they don't take online orders and ship international. First I tried the other shop firstandsecond.com who ship international, but they don't have it yet. I requested them in iWish option they have. If they bring it on their inventory list soon, I will let know the availability here. Otherwise, personally I have to wait couple more months for my friend's arrival from chennai to get it. Not to mention, Thanks for introducing this book.

3/18/2006 11:23 PM  
Blogger ROSAVASANTH said...

டண்டணக்கா, நன்றி. இணையத்தில் வாங்க முடிந்தால் அது குறித்த முழுத்தகவலை இங்கே அளித்தால் நல்லது.

இந்த புத்தகத்திலிருந்து இரண்டு கட்டுரைகளை கீற்றின் வழியே தலித் முரசு முதலில் அளித்தது. தங்கமணி அதை வலைபதிந்தார். பிறகு இந்து பத்திரிகையில் வந்த மதிப்புரையை முன்வைத்து வெங்கட் எழுதினார். பிறகு நான் வலைபதிந்தேன்.

3/20/2006 3:55 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter