ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, March 13, 2006

Sakya Sanga

ட்சுனாமி பேரழிவு நடந்து ஓராண்டுக்கு மேலாகியும், இன்னமும் அதன் பாதிப்புகளில் இருந்து பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கை மீளவில்லை. பாதிக்கப் பட்ட மக்கள், பாதிக்கப் பட்ட இடம் இவற்றுடன் எந்த தொடர்பும் இல்லாமல், காதில் எதேச்சையாக வந்து விழும் சில விஷயங்களே தாங்கவியலாததாக இருக்கிறது. பயணத்தில் வந்து மறையும் இந்த தவிர்க்க முடியாத, காட்சிகளினூடே, ஸாக்ய சங்காவில் பணியாற்றும் (அல்லது நெருங்கிய தொடர்புடைய) ஒருவரின் நட்பு கிடைத்தது.அதன் மூலம் ஸாக்யா சங்கம் குறித்த அறிமுகமும், தொடர்பும், மேல் விவரங்களும் கிடைத்தன. ட்சுனாமியில் எல்லாவற்றையும் இழந்த தலித் குழந்தைகளுக்காக நிறுவப்பட்ட விடுதிகள் பள்ளியை பார்த்துவிட்டு அது தொடர்பான என் அனுபவங்களை இங்கே பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு ஸாக்ய சங்கத்தின் உதவிக்கான வேண்டுகோளை இங்கே தருகிறேன். அதற்கு முன்..

ஸாக்ய சங்கம் புத்தமத சார்புடையது. தலித் மக்களை பூர்வ பவுத்தர்கள் என்று கருதுகிறது. புத்தமதம் உட்பட எந்த மதத்துடனும் என்னை நான் அடையாளம் காணவில்லை, குறிப்பாக புத்தமதம் சார்ந்த சடங்குகளிலும் எனக்கு ஒப்புதல் இல்லை எனினும், இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மனத்தடை எதுவும் கிடையாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடுதிகள், பல வகைப்பட்ட ட்சுனாமி நிவாரணப் பணிகளால் தீண்டப்படாத தலித் மக்களுக்கானது. இங்கே நீங்கள் அளிக்கும் உதவிகள் தலித் மக்களை, தலித் குழந்தைகளை மட்டுமே சென்றடையும்.

இது குறித்து நேரடியாக என்னை மின்னஞ்சலில் அணுகலாம். உதவிகளை என்னிடமே அல்லது நான் மேலே குறிப்பிட்ட நண்பரிடமும் அளிக்கலாம். அல்லது கீழே தரப்பட்டுள்ள முகவரி மற்றும் இணைய தளத்தை அணுகலாம். நன்றி.


WHAT YOU CAN DO FOR THE CHILDREN?

The 2006 state of the World's Children Report provides an assessment of the world's most vulnerable children, whose rights to a safe and healthy childhood are exceptionally difficult to protect.

People Revival Centre(PRC) is committed for the protection of child rights and well being of the children, especially from Dalit and other deprived communities. PRC has been involved in various social development activities since 1993, for example organising personality development camps for poor children in summer holidays.

PRC has intiated two hostels for Tsunami hit children in July 2005, a boys hostel and girls hostel with a capacity of 31 and 24 children respectivly. Children are provided with free shelter, food clothing and books. Apart from formal education, the children are trained in English language skills, personality development, art, sports, photography and human rights etc.

The hostel envision to providing a good environment for educational developement and growing the children as responsible global citizens based on universal ethics and values.

We encourage contributions of any amount small or large. We also welcome rice and cooking meterials, books and other educational meterials, cloths, toiletries and any other supplies.

You may visit the hostels and celebrate your special days with children. You may come to the hostel as valunteers and support the children by teaching, playing, making friendship and sharing your love.

We extend your hands with deep gratitute, inviting your love and compassion to support the noble cause of helping the children.

Sponsorship for a child:

Monthly Rs 1250
Quaterly: Rs 3750
Half Yearly : Rs 7500
Annual : Rs 15000


You may send the Demand Draft/Cheque in favour of 'Sakya Sangha' payable at Chennai.

May all beings be happy!

Sakya vihar
A home for Tsunami hit children


Sakya Sangha
People Revival Centre(PRC)
Plot No: 59, Door No: 12/95, Subramani Nagar,
Manali New town, Vichoor, Chennai-600 103.
Tel +91 44 25930383
Cell: 09841686892 & 09841255342

Branch office:
Flat No. 360, DDA SFS Flats, Pocket -I,
Sector -9, Dawaraka, New Delhi-110 075.
sakyagroup@yahoo.com www.sakyasangha.org

(ஒரு துண்டு விளம்பரம்/விண்ணப்பதிலிருந்து அப்படியே தட்டச்சிட்டிருக்கிறேன்.)

Post a Comment

13 Comments:

Blogger ROSAVASANTH said...

தொடர்புள்ள சுட்டி http://www.sakyasangha.org/sakya/sakya/help

3/13/2006 8:09 PM  
Blogger ஜெ. ராம்கி said...

I feel uneasy to bring these type of dalit & non-dalit differentiation among tsunami affected people.

I don't know whether it's right or not. Anyway, I just like to register my condemn for this project.

3/13/2006 8:46 PM  
Blogger P.V.Sri Rangan said...

//நமக்கு தொழில் முடிந்தவரை கலகம். கலகிய பின் எண்ணுதலும், பரிசீலித்தலும். அதற்கு பின்னும் சூழல் சாதகமாயிருந்தால் சில நல்லிணக்க முயற்சிகளை அவ்யப்போதாவது முன் வைப்பதுவும்.//


ரோசா வசந் இந்தப் பந்தியை மீளவும் படித்துப்பார்க்கவும்!

கலகம்:"கலகிய"பின் இது வாக்கியப்பிழை.கலகம்:"கலகத்தின்" பின் இது சரியானதாக இருக்கும்.அது போலவே:"அவ்யப்போதாவது"இதுவும் அதே பிழை!"அவ்வப்போதாவது" இது சரியானதாகவும் இருக்கும்.

3/14/2006 4:08 AM  
Blogger ROSAVASANTH said...

இந்த பதிவிலேயே 'பலவகைப்பட்ட நிவாரணப்பணிகளால் தீண்டப்படாத தலித் மக்களை' என்று சொல்லியிருக்கிறேன். இந்த ட்சுனாமி நிவாரணம் மட்டுமில்லாமல், ஒரிசா புயல், குஜராத் பூகம்பத்தில் கூட தலித்துக்கள் ஒதுக்கப்பட்டு பல நிவாரணங்கள் அவர்களை அடையவில்லை என்பது ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது.(ஒரு ஆங்கில வலைப்பதிவில் ட்சுனாமி நிவாரணப்பணிகள் தலித்களை புறக்கணிப்ப்பது பற்றி விரிவாய் எழுதியிருக்கிறது). இப்படி அப்பட்டமான சாதிய சமூகத்தில், எல்லாவற்றைலும் தலித் ஒதுக்கப்படும் ஒரு யதார்தத்தில், நாட்டின் எல்லா ஜாதிய யதார்த்ததையும் விமர்சனமின்றி ஏற்றுகொள்ளும் ஒருவன்(உதாரணமாய் கோவிலில்), தலித்களுக்காக தனிப்பட்ட முறையில் (இதென்ன உங்கப்பன் வீட்டு சொத்தா, அரசாங்க பணமா) செய்யப்படும் நிவாரணத்தை கண்டிக்கும் மனம் எத்தனை அழுக்கானது என்பது விளக்கினால் கூட புரியாது. இது அறியாமையினால் விளைந்ததாயினும், சாதிவெறியால் விளைந்ததாயினும் கண்டித்து வைக்கிறேன். வேறு என்னத்தை செய்ய!

3/14/2006 3:41 PM  
Blogger ROSAVASANTH said...

கருணா, கலகிய என்பது என்னை பொறுத்தவரை சரிதான். 'அவ்யப்போது' என்பது 'அவ்வப்போதாக' இருக்க வேண்டும். இந்த பிழையை இதற்கு முன்பே சிலர் சுட்டிகாட்டியும், என்னால் ஸெட்டிங்க்ஸில் மாற்றம் செய்ய முடியவில்லை. வாக்கியம் நீளமாய் இருப்பதால் ஏற்றுகொள்ள மறுக்கிறது. (முதலில் ஏன் ஏற்றுக்கொண்டது என்பது தெரியவில்லை.) கருத்துக்கு நன்றி.

3/14/2006 4:25 PM  
Blogger குழலி / Kuzhali said...

தங்கமணியின் பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டு அதன் வழியாக வந்து சேர்ந்தேன், தகவலுக்கு நன்றி ரோசா...

3/21/2006 9:21 PM  
Blogger நியோ / neo said...

ரோசா அவர்களே

உங்கள் கருத்தை முழுதுமாக ஆதரிக்கிறேன்.

சில சுனாமி மறுவாழ்வு மையங்களில் தலித்துகளைத் 'தனியாக' வைக்கச் சொன்ன மீனவர்கள் பற்றிய செய்தியொன்றை 9அந்தச் சமயத்தில்) படித்துவிட்டு இரண்டு மூன்று நாட்கள் அதிர்ச்சியில் இருந்தேன்.

இந்த அயோக்கியத்தனமான "வர்ண அடுக்கு முறை"யின் கோரப் பிடி அப்படியே நம் 'இருத்தலையே' இறுக்கி நசுக்குவது போல சில சமயம் மூச்சடைக்கிறது.

3/22/2006 3:44 AM  
Blogger ROSAVASANTH said...

நியோ, குழலி, சாரா நன்றி.

அன்புள்ள நேசக்குமாருக்கு,

முதலில் சாக்ய சங்கம் என்பது ட்சுனாமியை முன்வைத்து தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு அல்ல. தலித்களை பூர்வ பௌத்தர்கள் என்று நம்பும், புத்தமதம் சார்ந்த ஒரு அமைப்பு. வெகு நாட்களாக தலித்களுடன் பணியாற்றி வருகிறது. இது குறித்த மேலதிக தகவல்களை நாண் அளித்த அவர்களின் இணையதளத்திற்கான சுட்டியில் காணலாம். என்னுடய தொடர்பினால் கிடைக்கக் கூடிய மேலதிக தகவல்களை நான் பிறகு அளிக்கிறேன்.

தற்சமயம் எனக்கு பெரிய தொடர்பு கிடையாது. ஆனால் தீவிர தொடர்புள்ளதாய் நான் குறிப்பிட்ட நண்பர் அது குறித்து சொல்லியே எனக்கு பல விஷயங்கள் தெரியும். அவரை எனக்கு பல காலமாய் தெரியும் என்றாலும், தற்போதே நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் சமூகத்தில் மிக 'மதிக்கக் கூடிய' பதிவியில் இருக்கும், மிக எளிமையான மனிதர்.

கடந்த வாரம் (மேலே குறிப்பிட்டுள்ள) விடுதிகளை நேரில் சென்று பார்க்க திட்டமிட்டு எதிர்பாராதவிதமாய் முடியவில்லை. இந்த வார இறுதியில் அதை செய்வதாய் (மீண்டும்) இருக்கிறேன். தொடர்ந்து இவர்களுடன் தொடர்பு வைத்திருக்கவும், குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது போன்றவகைகளின் இணைந்து பணியாற்றவும் எண்ணம் உள்ளது. அதனால் எனக்கு நன்றாகவே இன்னும் சில மாதங்களின் பரிச்சயம் ஆகும்.

மற்றபடி உதவி செய்ய விரும்புபவர்கள் என்னை அணுகினால், மேலதிக தகவல்கள், நான் குறிப்பிட்ட நண்பர் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும். மேலும் யாரும் உடனடியாய் எதுவும் செய்யவும் தேவையில்லை. நேரடியாய் விடுதிகளுக்கு வருகை தந்து, குழந்தைகளை பார்த்தபின், சில காலம் தொடர்பு வைத்த பின் பல தகவல்களை கேட்டு தெரிந்துகொண்ட பிறகு உதவிகளை தொடங்கலாம்.

ஆகையால் நான் அறிந்த வகையிலும், மற்றவர்களும் சோதிக்கக் கூடிய வகையிலும், நம்பகதன்மை, உதவி போய் சேருவதில் பிரச்சனை என்று எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மேலதிக தகவல்கள் சந்தேகங்களை இங்கேயோ, எனக்கு தனிப்பட்ட முறையிலோ கேட்கலாம். நன்றி.

3/22/2006 4:40 PM  
Blogger Thangamani said...

வசந்த்:

உங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன். மாடரேசன் சுத்தமாக வேலை செய்யவில்லை. சாக்கிய சங்கத்தைப் பற்றி அறியவும், உங்களது அனுபவத்தை அறியவும் ஆவல். பதிவிட முடியாவிட்டால் மின்னஞ்சல் கொடுக்கவும். என்னால் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன்.

எல்லா இயற்கைச் சீர்கேட்டின் போதும் தலித்துகள் இயற்கையாலும், சமூகத்தாலும் வஞ்சிக்கப்படும் போது அதை நோக்கிய அணுகுமுறை கண்டனத்துக்கு உள்ளாவது குறித்து ஆச்சர்யமும் வேதனையும்.
இது தொடர்பாக கீற்றில் வந்த ஒரு கட்டுரை:
http://www.keetru.com/dalithmurasu/feb06/poovizhiyan.html

3/22/2006 5:37 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி உங்கள் ஆதரவு உற்சாகமூட்டுகிறது. ட்சுனாமி நிவாரணப் பணிகள் முழுவதும் மீனவர்களை முன்வைத்தே நிகழ்ந்ததையும், தலித்கள் முற்றிலும் ஒதுக்கப் பட்டதையும் கருத்தில்கொண்டே சாக்ய சங்கம் தலித்களுக்கான தனிப்பட்ட விடுதிகளை கட்ட முடிவெடுத்ததாக நண்பர் சொன்னார். என் அனுபவங்களை எழுதுகிறேன். சில நேரடி தகவல்களை மட்டும் தனிப்பட்ட முறையில் அணுகுபவர்களுக்கு தர தயாராயிருக்கிறேன். நன்றி.

3/22/2006 5:55 PM  
Blogger ROSAVASANTH said...

நேசக்குமார், உங்கள் கருத்துக்கும் தகவல்களுக்கும் நன்றி. ட்சுனாமி மீட்பு பணிகளை முன்வைத்த உங்கள் அனுபவங்களை, அதன் பல கோணங்களை, நீங்கள் விரிவாக எழுதவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

3/23/2006 5:36 PM  
Blogger வலைஞன் said...

//ட்சுனாமி நிவாரணப் பணிகள் முழுவதும் மீனவர்களை முன்வைத்தே நிகழ்ந்ததையும், //

மீனவர்கள் அது தங்களுக்கான தனி உரிமை எனக்கருதியதையும் நிவாரண உதவிகளை பிற இனத்தவருடன் பங்கிட்டுக்கொள்ள மறுத்ததையும் நானே நேரில் கண்டிருக்கிறேன்.

வியப்புக்கும் வேதனைக்கும் உரிய சாதீய கொடுமை இது.

4/14/2006 4:14 AM  
Blogger ROSAVASANTH said...

Valaignan, Thanks for the comment. I am yet to reply your comment of Medha. Will try to write soon.

4/15/2006 2:18 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter