ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 07, 2006

மேதா பட்கர்.

நர்மதா அணைக்கு எதிரான போராட்டத்தில் தன் வாழ்க்கையை அர்பணித்திருக்கும் மேதா பட்கர் இன்று ஒன்பதாவது நாளாக தனது உண்ணவிரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வலைப்பதிவில் யாராவது இது குறித்து எழுதினார்களா என்று தெரியாது.

நர்மதா அணைக்கட்டின் உயரத்தை இன்னும் அதிக படுத்துவதையும் (அதனால் இன்னும் சில கிராமங்கள் தண்ணீரின் மூழ்குவதை), புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு இன்னமும் மிக பெரிய ஏமாற்று வேலையாக இருப்பதையும் எதிர்த்து தனது உண்ணாவிரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். நேற்று இரவில் போலிஸ் புகுந்து மேதா பட்கரை கைது செய்து கிட்டதட்ட முரட்டுத் தனமாக இழுத்து சென்றதாக செய்திகள் வந்துள்ளன. அரசு பலவந்தமாக மேதாவை உயிர்பிழைக்க செய்வதை தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை.

மேதா மேற்கொண்டது கிட்டத்தட்ட ஒரு தற்கொலை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஒருக்காலும் அரசு அணைக்கட்டு தொடர்பான தன் நிலையை தளர்த்தப் போவதில்லை. மிஞ்சி போனால் புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு பற்றி மீண்டும் வாக்குறுதி அளிக்கலாம். அது நடைமுறையில் காலப்போக்கில் என்னவாகும் என்பதை மீண்டும் மீண்டும் வறலாறு சொல்கிறது. இந்நிலையில் உண்ணா விரதம் என்று இறங்கி விட்ட பிறகு, முடிவை மாற்றி உண்ணாவிரததை முடித்து கொள்ளும் வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை மேதா இறந்து போனால் (அரசு பலவ்ந்தமாக காப்பாற்றிவிடும் என்றாலும்) அது எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. நிச்சயமாய் அது அரசின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்பில்லை. போராட்ட வடிவத்தில் எந்த வகை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே கேள்வி. ஒரு வேளை பலவந்தமாக மேதாவின் உயிர் காப்பாற்றப் பட்டாலும், அது போராட்டத்தில் எந்த வித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் கேள்விக்குரியது. உலகின் மிக பெரிய வன்முறையற்ற, காந்திய வழியிலான போராட்டம், வன்முறையை கையிலெடுக்க வழிவகுத்து விடுமோ என்ற கவலையாக இருக்கிறது. வன்முறை தீண்டதகாதது என்பதல்ல பிரச்சனை. வன்முறை என்று வந்துவிட்டால் அரசிடமிருந்து, அதை சாதமாக்கி கொண்டு வரும் பதில் வன்முறையின் அடக்குமுறையின் பரிமாணம் தாங்கவியலாததாக இருக்கும் என்பதனால் மட்டுமே அது கவலைக்குரியது.

Post a Comment

7 Comments:

Blogger CrazyTennisParent said...

ரோசா,

அணை கட்டுதலையோ அதை மேம்படுத்துவதையோ அரசாங்கம் நிறுத்த போவதில்லை..

மெயின் பிரச்சினை இடமாற்றப்படும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள்தான்.

குஜராத் அரசாங்கம் இதை முழுவதுமாக செய்துவிட்டதாகவும் மத்திய பிரதேசத்தில் மட்டும் "சில" பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைப்பற்றி ரஜினி ராம்கியும், தமிழ் சசியும் சந்திப்பும் எழுதி உள்ளனர்

4/07/2006 6:44 PM  
Blogger ROSAVASANTH said...

முத்து நன்றி. இப்போதுதான் நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளையும் படித்தேன்.

4/07/2006 7:29 PM  
Blogger சந்திப்பு said...

ரோசா மேதாவின் போராட்டம் வெல்ல வேண்டும். அதே சமயம் அவர் கையில் எடுத்துள்ள காந்திய வழியிலான போராட்டம் வழக்கொழிந்துபோன ஒன்று அல்ல. அதற்கு இன்றைக்கும் மகத்தான சக்தியிருக்கிறது. மேதா இப்படியொரு முடிவு எடுத்திராமல், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா என எடுத்திருந்தால் ஒரு சின்ன தடியடி - கைது என கதை முடிந்திருக்கும். எனவே எந்த சூழலில் எந்தப் போராட்டம் நடத்தினாலும் அது முற்போக்கானது. மேலும் வன்முறையை கையிலெடுக்க வழிவகுத்து விடுமோ என்று கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். எந்தவொரு போராட்டத்திலும் வன்முறை பயன்தருமா? என்பதும் தெரியவில்லை. இன்றைக்கு பிரான்சில் நடைபெறும் போராட்டம்தான் மக்களின் எழுச்சிக்கு கட்டியம் கூறுவதாக இருக்கிறது. எனவே நான்கு லட்சம் மக்கள் இந்த அணைக்கட்டு விஷயத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதில் குறைந்தது 25,000ம் பேரையாவது இந்தப் போராட்டங்களில் ஈடுபடுத்தவில்லை என்றால் அது எப்படி சரியான வழிமுறையாக இருக்கும் எனத் தெரியவில்லை.
மேதாவின் போராட்டம் வலுப்பெறட்டும், இதில் லட்சக்கணக்கான மக்கள் இணையட்டும்.

4/07/2006 8:06 PM  
Blogger ROSAVASANTH said...

சந்திப்பு, உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். வன்முறை பயன் தரும் என்று நானும் நம்பவில்லை. ஆனால் இத்தகைய அற்புதமான ஒரு போராட்டம், தப்பி தவறி வன்முறை பக்கம் சென்றுவிட்டால் என்னவாகும் என்பதுதான்! ஆனால் என்ன நடந்தாலும் தன் அணுகுமுறையை மாற்றிகொள்ளாத ஒரு அரசு, அதன் பிரயோகிக்கப் பட்ட அளவுகடந்த வன்முறை, அதை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தும் சமூகம் இவை ஒரு இயக்கதை வன்முறை நோக்கி போக வைத்துவிடுமோ என்ற கவலைதான்.

ஒரு பக்கம் யோசித்தால் அரசு அதைத்தான் விரும்பும். வன்முறையை எதிர்கொள்வது அதற்கு எளிதானது, மேதாவை எதிர்கொள்வதில்தான் சிக்கல் உள்ளது. பார்க்கலாம்.!

4/07/2006 8:15 PM  
Blogger வழவழா_கொழகொழா said...

ஓ இதைத்தான் ரசினி ராம்கி "ஜல சமாதியாயிடும்னு " ஜோக் அடிக்கிறாரா? அவருக்கு என்ன சமூக விளிப்புணர்ச்சி..

4/08/2006 4:48 AM  
Blogger வலைஞன் said...

அன்பின் வசந்த்

மேதாவின் நோக்கம் மிக உயர்ந்தது. அதற்காக அவர் மேற்கொண்டிருக்கும் தியாகம் மிகப்பெரியது. ஆனால் அணைக்கட்டின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என்பதில் காட்டும் உறுதி, அணைக்கட்டுகளை எதிர்ப்பதில் அவரது நிலைப்பாடுகள் போன்றவை அளவுக்கு அதிகமானவையாக உள்ளன. உலக சமூகத்தின் கவனத்தைக் கவர்ந்து அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.

கேரள அரசு சுற்றுச்சூழல் மற்றும் தங்கள் மாநில மக்களின் நலன்பற்றிக் கூறித் தான் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்க மறுக்கிறது. அதற்கு கேரள மக்களின் முழு ஆதரவும், கட்சி சார்பின்றி அரசியல்கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. இந்நிலையில் நாம் தமிழக விவசாயிகளின் நலன் பற்றி பேசிக்கொண்டு எப்படி செல்லமுடியும்.

நம்மிடம் உள்ளதோ காகிதச் சட்டங்களின் பிரதிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களின் மொழிகளும். அவர்களோ உணர்வுப்பூர்வமாக ஒன்று பட்டிருக்கிறார்கள்.

நர்மதா விவகாரத்திலும் அரசின் நிலைப்பாடும் விவசாயிகளின் நலனை முன்வைத்து தான் பேசப்படுகிறது. அதைவிட அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதும் நிவாரணம் சரியாக கிடைக்கப்பெறாததும் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளும் இதில் உள்ளன.

என் கேள்வி இதுதான்.
நர்மதா விவகாரத்தில் மேதாவின் நிலையை ஆதரித்தால் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவளிக்க முடியுமா?

4/08/2006 10:40 AM  
Blogger வஜ்ரா said...

குஜராத் உயர் நீதி மன்றம், மேதா பட்கர் நடத்தும் " நர்மதா பச்சாவ் ஆந்தோலன்" அமைப்பை தேச விரோத அமைப்பு என அறிவித்து மத்திய அரசுக்கு 2001 லேயே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதே...

பார்க்க பக்கம்

மேலும் மேதா பட்கர் வெளி நாட்டு நிருவனங்களிடமிருந்து பணம் வாங்கியதர்க்கான ஆதாரத்துடன் நிறூபிக்கப் பட்ட அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

ஷங்கர்.

4/29/2006 12:45 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter