ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Friday, March 31, 2006செய்தியல்ல!டெகான் கொரோனிகிளில் இந்த செய்தி பின்னிணைப்பில், பல நடிகர் நடிகைகள் சார்ந்த செய்திகளுக்கு நடுவில், நான் தவற விடக்கூடிய எல்லா வாய்புகளுடன் வெளிவந்திருந்தது. மிக எதேச்சையாய் பார்க்க நேர்ந்தது. பின் இந்துவிலும் பார்க்க நேர்ந்தது. பெரியசாமி, மூர்த்தி என்ற இரண்டு துப்புரவு தொழிலாளர்கள். இருவரும் சென்னையில் நடைபாதைகளில் வசிப்பவர்கள். மூர்த்தி சேலம் மாவட்டத்திலிருந்தும், பெரியசாமி விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள். தினக்கூலிக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்துவிட்டு, வார இறுதியில் சொந்த ஊருக்கு திரும்பி விடுபவர்களாக செய்தியில் சொல்லப் படுகிறது. இந்துவில் முகபேரு மேற்கு என்றும், டெகான் க்ரோனிகிளில் நோலாம்பூர் என்றும் குறிக்க பட்டிருக்கும் இடத்தில், ஒரு பாதாள சாக்கடையில் குழாயை சுத்தம் செய்ய, மேன்ஹோல் வழியாக மூர்த்தி முதலில் இறங்கினார். அவருடய உதவிக்கான கூச்சலை கேட்டு, உதவி செய்யும் நோக்கத்துடன் பெரியசாமியும் உள்ளே சென்று மாட்டிக் கொண்டார். இருவரும் உள்ளே சென்று வெளியே வர இயலாததை பார்த்து மற்றவர்கள் போலிசை அழைத்திருக்கிறார்கள். போலிஸ் தீயணைப்பு படையுடன் போய் சேர்ந்து, அவர்களுடைய இறந்த உடல்களை மட்டும் வெளியே எடுக்க முடிந்தது. இது வெறும் சென்னை நகரில், நடந்த ஒரு விபத்தில், இருவர் இறந்து போனது பற்றிய சாதாரண செய்தி மட்டுமல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். |
4 Comments:
பெரும்பாலான சமயங்களில் உள்ளிருக்கும் நச்சு வாயுவினால்தன் இம்மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கின்றன..குறைந்த பட்சம் சிறிய அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற ஒன்றையாவது பழகிக்கொள்ளவும், கட்டுக்கொண்டு உள்ளே போகவும் அரசு பயிற்சியும்,உபகரணங்களும் அளிக்கவேண்டும். :-(
//இது வெறும் சென்னை நகரில், நடந்த ஒரு விபத்தில், இருவர் இறந்து போனது பற்றிய சாதாரண செய்தி மட்டுமல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.//
நான் உடனடித் தேவை/பிரச்சினையை குறைப்பதைச் சொன்னேன். நீங்கள் ஊர்கூடி தேர் இழுப்பதைச் சுட்டுகிறீர்கள். மதுரையிலோ (அருகிலோ )எங்கோ கையால் மலம் சுமப்பதை தடுத்தாயிற்று என்று செய்தி(செய்தியல்ல?) ஒன்று வாசித்தேன். ஆனால், சென்னை போன்ற பெருநகர பாதள கழிவடைப்புகளில் மனிதனைத் தவிர்க்க வேறு மாற்று என்ன என்று நிஜமாகவே (இப்பொழுதுள்ள சமூக சூழலில்) தெரியவில்லை? என்ன மாற்று?
வேலையின் காரணமாக பல நாட்களாக இணையத்தின் பக்கம் வரவில்லையாதலால் உங்களின் இந்தப் பதிவை நான் இப்போதுதான் வாசித்தேன். இது போன்ற ஆதங்கத்தை, கேள்வியை, வருத்தத்தை நானும் பலமுறை எழுப்பியே வந்துள்ளேன்.
இந்திய அரசு இந்தப்பிரச்சனையை கையாளும் முறை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. உங்களது இந்தப்பதிவு அப்படியான கேள்விகளை உரக்க எழுப்பியது குறித்து என் நன்றி.
Post a Comment
<< Home