ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, May 10, 2006

ஐஐடி தேர்தல்.

இட ஒதுக்கீட்டை முன்வைத்து ஐஐடி கான்பூரில், படித்து முடித்த 'பதிவு செய்த அலும்னி'களிடம் ஒரு கருத்து தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை கீழே தருகிறேன். சுவாரசியத்திற்கும், அறிந்துகொள்ளவும் எதுவும் இல்லாவிட்டாலும், எதிர்பார்ப்பிற்கு மாறாக எதுவும் இல்லை என்று உறுதி படுத்திக் கொள்ள மட்டும்.

என்னிடம் அனுமதி கேட்ட பின்பு மின்னஞ்சலில் எனக்கு இது வரவில்லை என்பதுபோல், இதை வெளியிட யாரிடமும் நான் அனுமதி கேட்க வில்லை. அனுமதியில்லாமால் வெளியிடவேண்டாம் என்று எனக்கு வந்த மின்னஞ்சலில் சொல்லப்படவும் இல்லை. இறுதியில் இருந்த ஒரு பேராசிரியரின் பெயரை மட்டும் நீக்கியுள்ளேன்.

Dear Members,

The Hon'ble Minister, Human Resources Development, Government of India (GOI), had recently indicated that GOI intends to introduce reservations for OBCs in admissions to IITs, IIMs and other similar institutions. The Board of Directors of AA considered this issue and sought the views of members of AA through a web poll. The voting was done only among registered members of the IIT Kanpur Alumni Association through the Alumni Association web-site. This web poll was open from 24 April 2006 to 8 May 2006.

We tabulate, here below, the views of the members of AA that have emerged from the web poll:

1 Do you think reservations, as they are planned to be implemented in higher education, will harm the brand of IITK?

Agree: 95 % Don't Agree: 4 % Don't Know: 1 %

2. Do you think reservations, as they are planned to be implemented in higher education, will harm India's competitiveness in the global knowledge economy?

Agree: 94 % Don't Agree: 5 % Don't Know: 2 %

3. Do you support IITK AA taking an active stand against the implementation of reservations as planned?

Agree: 95 % Don't Agree: 4 % Don't Know: 2 %

4. Do you support the Govt. making significant investments in primary and secondary education to enhance opportunities for OBC as an alternative measure than additional reservations in IIT's and IIM's and institutes of higher learning?

Agree: 92 % Don't Agree: 6 % Don't Know: 2 %

The total number of votes polled was 1851.

Post a Comment

17 Comments:

Blogger Unknown said...

IIT ல் படித்த தலைகள் (தகுதியின் மூலம் வந்த புத்திசாலிகள்) இந்த நாட்டுக்கு செய்த அரும்பணிகள் கணக்கில் அடங்காதவை. இந்த புத்திசாலிகள் தகுதி என்று நினைப்பது எது என்று தெரியவில்லை. இட ஒதுக்கீடு வந்துவிட்டால் இவர்கள் செய்து வரும் அரிய பணிகளில் தொய்வு ஏற்படும்.

சொல்லிக் கொடுத்ததைத் தாண்டி சிந்திக்கத் தெரியாதவர்கள்.

http://www.tehelka.com/story_main18.asp?filename=Ne051306beyond_caste.asp

....The hue and cry about “sacrificing merit” is untenable simply because merit is after all a social construct ...

5/10/2006 5:13 PM  
Blogger பூனைக்குட்டி said...

are you expecting anything other than this Rosa? from those IITians.

5/10/2006 6:25 PM  
Blogger Muthu said...

வெட்டி வீரர்களை ஏன் பொருட்படுத்துகிறீர்கள் ரோசா?

ப்ரோ ரிசர்வேஷன் ஃப்ரண்ட் என்று எதோ வந்திருக்கிறதாம்.அதைப்பற்றி எழுதுங்கள்.

5/10/2006 8:19 PM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டிய நண்பர்களுக்கு நன்றி.

வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை மோகன். எதிர்பார்த்தபடி இருப்பதை உறுதிப்படுத்த மட்டுமே.

முத்து, ப்ரோ ரிசர்வேஷன் ஃப்ரண்ட் என்று ஒன்று ஐஐடிக்குள் இருக்கிறதா? நீங்கள் சொல்லித்தான்(?) கேள்விபடுகிறேன்.

5/10/2006 8:46 PM  
Blogger Muthu said...

//ப்ரோ ரிசர்வேஷன் ஃப்ரண்ட் என்று ஒன்று ஐஐடிக்குள் இருக்கிறதா//

ஐ.ஐ.டிக்குள் இருக்க வாய்ப்பு இல்லை... அறிவுஜீவிக்கள் அனைவரும் எதிர்ப்பதாக சொல்லும் இதை ஆதரிக்க ஒரு அமைப்பு வந்துள்ளதாக அறிகிறேன்.

5/10/2006 8:54 PM  
Blogger SnackDragon said...

அன்பின் ரோசா,
கேள்விகளின் ரீதியே சம்பந்தப்பட்டவர்களின் நோக்கங்கங்களை பறைசாற்றுவதாய் உள்ளது. பதிவாக்கியதற்கு நன்றி.

5/11/2006 3:36 AM  
Blogger Balaji-Paari said...

இதுல எழுப்பப்பட்ட கேள்விகளே, அவர்களது முன் முடிவை வெளிப்படுத்துகிறது. ஜெயா டிவி ல ரபி பெர்னாட் கேக்கற மாதிரி இருக்கு.

இது கொடுமை.

Do you support IITK AA taking an active stand against the implementation of reservations as planned?

Agree: 95 % Don't Agree: 4 % Don't Know: 2 %

எவ்வளவு திறம்பட ஒரு கேள்வியை உருவாக்கி ஒரு நிறுவனம தன்னாலான எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறது.

5/11/2006 9:18 PM  
Blogger ROSAVASANTH said...

//ஜெயா டிவி ல ரபி பெர்னாட் கேக்கற மாதிரி இருக்கு//

ஹவ்து!

கருத்தளித்த அனைவருக்கும் நன்றி!

5/12/2006 3:42 PM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீநிதி, பல அரிய தகவல்களுக்கு மிகவும் நன்றி!

5/12/2006 3:56 PM  
Blogger Thangamani said...

அன்பின் வசந்த்,
கேள்விகளின் ரீதியே சம்பந்தப்பட்டவர்களின் நோக்கங்கங்களை பறைசாற்றுவதாய் உள்ளது. பதிவாக்கியதற்கு நன்றி.

இது முன்னாள் அய் அய் டி மாணவர்களின் அமைப்பா? அல்லது சாதிச் சங்கமா? அல்லது இரண்டும் ஒன்றா?

5/14/2006 4:19 AM  
Blogger வஜ்ரா said...

ஏங்க கோட்டா வால் தான் obc எல்லாம் முன்னேர முடியும் நினைக்கிறீர்களா...? உண்மையாகச் சொல்லுங்கள்,

மதுரை, நெல்லை பகுதிகளில் நாடார் சமூகம் முன்னேறியது கோட்டாவினாலா? இன்று IT ல் சாதிக்கவில்லையா அவர்கள்?

சும்மா, கோட்டாவுக்கு கோஷம் போடுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள். நீங்கள் மட்டும் சீறழியாமல் கூடவே நல்லா இருப்பவர்களையும் சீறாழிக்கும் அந்தச் செயல்.

//
வெட்டி வீரர்களை ஏன் பொருட்படுத்துகிறீர்கள் ரோசா?
//

IIT ல் படித்தவர்களெல்லாம் வெட்டி வீரர்கள், நீங்கள் யார்? இதுவரை என்ன சாதித்திருக்கிறீர்கள்?

//
ெளிநாட்டுக்கு சேவகம் செய்யும் ஐஐடியை மூடிவிட்டு அந்த பணாத்தை இவர்களின்
முன்னேற்றத்திற்கு செலவு செய்யலாமா?
//

நல்லதுயா! தேவைஇல்லாமல் எதற்காக பல்கலைக் கழகங்கள், அதையும் மூடிவிட்டு, விவசாயம் பார்ப்போம், இல்லை இல்லை நாடோடி ஆகி விடுவோம்!! இப்படியே போய், நமீபியா, சூடான் போல் ஆப்பிரிக்காவில் காணாமல் போன நாடுகள் லிஸ்டில் சேர்ந்து விடலாம்...

இவர்களுக்கெல்லாம் "Progressive" "liberal " என்று லேபிள் வேறு, வெட்கமாக இல்லை!?


//
இது முன்னாள் அய் அய் டி மாணவர்களின் அமைப்பா? அல்லது சாதிச் சங்கமா? அல்லது இரண்டும் ஒன்றா?
//

வந்துட்டாங்கய்யா...ஜாதி லேபிள் ஒட்டிட்டீங்களா!! வேலை முடிஞ்சிருச்சு நிம்மதியாப் போய் தூங்குங்க...

வஜ்ரா ஷங்கர்.

5/14/2006 7:28 AM  
Blogger வஜ்ரா said...

//
முத்து ( தமிழினி) said...
வெட்டி வீரர்களை ஏன் பொருட்படுத்துகிறீர்கள் ரோசா?

//

Rajat Gupta, Arjun Malhotra, Purnendu Chatterjee, Vinod Gupta, Narayan Murthy.

இவர்களெல்லாம் வெட்டி வீரர்கள்...!! (குப்தா என்பது பிராமணர் பெயர் அல்ல! ஜாதி லேபிள் ஒட்டுபவர்கள் கவனிக்க.).
IITians

வஜ்ரா ஷங்கர்

5/14/2006 2:44 PM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீநிதி, உயர்ந்த பல கருத்துக்களுக்கு நன்றி.

ஷங்கர், லேபிள் எல்லாம் கிடையாது. நீங்கள் எழுதுவதை (இந்த பின்னூட்டத்தில் மட்டும் அல்ல)எல்லாம் கடைந்தெடுத்த பச்சை பாப்பார புத்தியாக நேரடியாக பார்க்கிறேன். உங்களுடன் விவாதிக்கும் தவறை என் நண்பர்கள் செய்யலாம். என் அணூகுமுறை உங்களை போன்றவர்கள் எழுதுவதை முன்வைத்து வேறு விஷயங்களை பேசுவதாக இருக்கும். பாப்பார புத்தி என்பது இப்படியாகத்தான் இயங்கும் எனும்போது, அதற்கு எதிர்வினை வெறுப்பான தளத்தில் இயங்குவதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதாக என் பார்வை இருக்கும். நன்றி.

5/15/2006 1:03 AM  
Blogger Muthu said...

நான் வலைப்பதிவுகளுக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. எது உருப்படியான விவாதம் என்றும் யாருடன் விவாதம் செய்வது என்பதையும் ஓரளவு புரிந்துக்கொண்டேன்.

வஜ்ரா அண்ணாச்சி,

நான் சொன்னது வேறு.நீங்கள் இழுக்கறது வேறு.நான் சொன்னதை சரியாக புரிந்து எழுதினீர்கள் என்றால் ஏதாவது பதில் சொல்ல பார்க்கிறேன்.அதுவரை இதுதான் என் பதில்.மற்றபடி ரோசா உங்களுக்கு கொடுத்த பதிலே என் பதிலாக கொள்ளவும்.

(கிரிக்கெட் டீமில் இடஒதுக்கீடு கேட்கலாமே என்று வழக்கமாக பாடும் பல்லவியை பாடவில்லையா நீங்கள்?)

5/15/2006 1:41 AM  
Blogger aathirai said...

srinidhi
//இங்கு நானும் பெண் என்ற முறையில் பயன் பெற முடியும், ஆசிய-அமெரிக்கர் என்ற பிரிவிலும் நான் அடங்குவேன்.My gender and
ethinicity matters.

Your comments are contradicting. Are you for reservation for women and backwards .? If so how do you support 'Merit only' stand?

5/15/2006 1:42 AM  
Blogger வஜ்ரா said...

//
ேபிள் எல்லாம் கிடையாது. நீங்கள் எழுதுவதை (இந்த பின்னூட்டத்தில் மட்டும் அல்ல)எல்லாம் கடைந்தெடுத்த பச்சை பாப்பார புத்தியாக நேரடியாக பார்க்கிறேன். உங்களுடன் விவாதிக்கும் தவறை என் நண்பர்கள் செய்யலாம். என் அணூகுமுறை உங்களை போன்றவர்கள் எழுதுவதை முன்வைத்து வேறு விஷயங்களை பேசுவதாக இருக்கும். பாப்பார புத்தி என்பது இப்படியாகத்தான் இயங்கும் எனும்போது, அதற்கு எதிர்வினை வெறுப்பான தளத்தில் இயங்குவதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதாக என் பார்வை இருக்கும். நன்றி.
//

IIT ல் படித்தவர்களெல்லாம் வெட்டி வீரர்கள்.

IIT K alumnus association ஜாதிச்சங்கம்.

இதெல்லாம் லேபிள் ஒட்டும் செயல் என்றால், நான் கடைந்தெடுத்த பார்பான புத்தி உள்ளவன்.

இப்படி உங்களிடம் Pre-concieved notions எக்கச்செக்கம்.

இத்தகய கண்ணோட்டத்தினால் ஏற்படும் பார்வைக் கோளாறு காரணமாக நன்றாக எழுதுப்படும் உங்கள் பதிவுகள் strange combinatipon of logical thinking and outright poppycock ஆகி விடுகிறது துரதிர்ஷ்டவசமானது.

ஒன்று மட்டும் நான் தெளிவுபடச் சொல்லிக் கொள்கிறேன், நான் பார்பானன் அல்ல. Proof வேண்டுமா?. நான் என் ஜாதியை காட்டிக் கொள்வதாக இல்லை.

வஜ்ரா ஷங்கர்.

5/15/2006 4:58 AM  
Blogger ROSAVASANTH said...

ரவி ஸ்ரீனிவாஸ் எக்குதப்பாக கடந்த சில காலமாய் உளறிவருகிறார். அதையெல்லாம் நான் 'பாப்பார புத்தியாக பார்க்கவில்லை. அவர் கண்டதையும் படிக்கிறார். படிக்கிற விஷயங்கள் அவருக்கு சரியாய் செரிப்பதில்லை. கண்டதையும் படித்துவிட்டதாக தான் நினைத்துகொண்ட காரணத்தினாலேயே, தான் வெளியிடும் எச்சங்களுக்கு, ஆழம் வந்துவிடுவதாக கற்பனை செய்துகொள்கிறார். ஆனால் அவை வலைப்பதிவில், ரவியை போல அறிவுஜீவி பாவனை செய்யாத, பல அம்பிகளின் தரத்தில், சரியாக சொன்னால் அவர்கள் கருத்துக்களில் இருக்கும் ஆழம் கூட இல்லாமல், மிக மேலோட்டமான ஜல்லியாக இருக்கிறது. எந்த புதிய கருத்தும் அவரிடமிருந்து வெளிப்படவும் இல்லை, அவர் (தரும் சுட்டிகளை கூட) படித்த விஷயங்களுக்கான ஆதாரம் எதுவும் அவர் எழுத்தில் இல்லை. இதையெல்லாம் எதற்கு இங்கே பொதுவாய் சொல்கிறேன் என்றால், ரவி எழுதுவது எவ்வளவு எரிச்சல் தந்தாலும், அதை பார்பனியம் போன்ற லேபிள்களினுள் நான் அடக்க முயலுவதில்லை. குஷ்பு பிரச்சனையின் போது மிக அநியாயமாய் அவர் எழுதியதை கூட, 'நட்டு கழண்டுவிட்டது' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது வரைக்கும் அவர் எழுதியதை உளரல் என்பதாக மட்டுமே பார்த்து வருகிறேன். அவ்வாறு உளரும்போது கூட அவருக்கு இருக்கக் கூடிய சமூக அக்கறை, பரந்த மனப்பான்மையை நான் மறுக்கவில்லை.


ஆனால் இந்த வஜ்ரா சொல்வது என்னவெனில், ஐஐடியின் அலும்னி சங்கம் அப்பட்டமான சார்புடன் தானே கேள்விகளை கேட்டு, அதே சார்புடன் அமோகமாய் வந்த வாக்களிப்புகளை பெருமையாய் அறிவியலாளர்களிடம் பரப்பி தன் ஜாதிய சார்பு நிலையை லெஜிடிமைஸ் செய்யும். அதை விமர்சிக்க கூடாது. அதை தங்கமணி. 'இது என்ன சாதி சங்கமா?' என்று குறைந்த பட்சமாய் கேட்டால் அது லேபிள். ராஜிவ் ஸ்ரீனிவாசன் என்ற ஆசாமி காலம்காலமாக ஆர்எஸ்எஸ் கட்டுரைகளை எழுதிவருவார். அவர் இந்துத்வா என்றால் அது லேபிள். ஆனால் இந்த ஆசாமி (வஜ்ரா) மட்டும் மேதா பட்கரை பற்றி கண்டதையும் எடுத்து போட்டு, இந்தியாவில் மிக பெரிய வன்முறையற்ற போராட்டத்தை கொச்சை படுத்தி மகா அயோக்கியத்தனமாய் பதிவு போடுவார். என்ன லேபிளையும் குத்துவார். அதில் preconceived notion எதுவும் இல்லை என்பதாக நினைத்து கொள்வார். இந்த அயோக்கியதனத்தை பாப்பார புத்தி என்று சொல்லாமால் வேறு எப்படி சொல்வது? (அவர் உண்மையில் என்ன ஜாதி என்ற சான்றிதழ் எனக்கு பொருட்டு அல்ல, அது எப்படி என்று கேட்பவர்கள், முதலில் அவர் பின்னூட்டத்தில் உள்ள மிகுந்த பாரபட்சத்தை புரிந்துகொண்டால் சொல்கிறேன்.) நான் வஜ்ராவின் பதிவுகளில் இஸ்ரேல் பற்றி எழுதிய எதையும் இன்னும் படிக்கவில்லை, ஆனால் உள்ளே என்ன இருக்கிறது என்று அடித்து சொல்ல முடியும். ஒருவேளை என் கணிப்பில் குறிப்பிட்ட அளவு தவறு இருந்தால், எனது preconceived notion பற்றி ஏற்றுகொண்டு பரிசீலிக்க முடியும்.



இந்த பின்னூட்டம் என் பதிவை வாசிக்கும் மற்றவர்களின் தெளிவிற்காக மட்டும் எழுதப்படுகிறது.

5/15/2006 4:41 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter