ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, January 27, 2006

தென்றலே நீ பேசு!

தமிழ்மண நிரல்களை சேர்த்த பின், முகப்பு பக்கமும், ஆர்கைவ் பக்கங்களும் வெற்று பக்கங்களாய் வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும், சும்மா ஒரு சோதனை இடுகைக்கு பின், ஒருவேளை எல்லாம் சரியாகி, குதிரை வழக்கம் போல் பறக்க தொடங்கிவிட கூடலாம் என்று நப்பாசையில் இந்த சோதனை பதிவு.(பிரச்சனை தொடர்ந்தால் அறிவுரைக்கும் நண்பர்களுக்கு முன்னமே நன்றி.)

இங்கே வந்த புண்ணியத்திற்கு இந்த அரிதான அற்புதமான பாடலை கேட்டு விட்டு செல்லலாம். சந்தேகமில்லாமல் இசை இளயராஜா. பல ஏற்ற இறக்கங்களூடன் சிக்கலான இசையை கொண்டது. இந்துஸ்தானி அடைப்படையில் இருந்தாலும் ராஜாவின் கைவண்ணத்தின் தனித்தன்மை, பாடலின் தொடக்க இசை முதலே இருப்பதை அறியலாம். சிலோன் தமிழ்சேவையில் கேட்டு, பல காலம் நினைவின் ஆழத்தில் மட்டும் இருந்து, இந்த MP3/இணைய யுகத்தில் நினைத்தபோது விருப்பமான தடவைகள் கேட்டு, இப்போது மிகவும் பழகிவிட்ட பாடல். பாடலை இங்கே கேட்டு சிலிர்ப்பவர்கள் நன்றி சொல்லவேண்டிய இடம், தூள்.

தென்றலே நீ பேசு
உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம்..ம்...ம்ம்...
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு
உன் கண்களால் நீ பேசு

வாய்மொழி ஏதுமின்றி வெண்ணிலா பேசாதோ
வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும்
வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட
கற்பனை ஊறும் நேரமே
உனக்காக நானும் ஏங்க

(தென்றலே..)

பூங்கரம் மீட்டுகின்ற பஞ்சணை வாராயோ
பஞ்சணை பாடல் வகை கொஞ்சமோ தொடங்கும் தொடரும்
நீயும் என் கூட வந்து மித்தமும் கேளாயோ
நெஞ்சமே காம தேவனால்
நெருப்பாய் மாறும் நேரம்

(தென்றலே..)

Post a Comment

7 Comments:

Blogger ROSAVASANTH said...

பிரச்சனை இன்னமும் தொடற்கிறது. செட்டிங்க்ஸில் நான் அறிந்த அளவு துழாவியும் பிரச்சனை என்னவென்று புரியவில்லை. ஆலோசனை யார் தந்தாலும் பெற்றுகொண்டு நன்றி கூறப்படும்.

தமிழ்மணத்தின் அறிவுறுத்தலின்படி, பின்னூட்ட மட்டுறுத்துதலை செயல்படுத்தியிருக்கிறேன். தமிழ்மணம் இவ்வாறு கேட்பதன் காரணங்களை புரிந்துகொண்டாலும், எனக்கு இதில் விருப்பம் இல்லை. மலப்புழுக்களின் பிரச்சனை சமாளிக்க கூடியதாய் இருக்கும் பட்சத்தில், அனைவரும் பிரச்சனையில்லாமல் நேரடியாய் பின்னூட்டமிடுவதையே விரும்பிகிறேன். என்றாலும் பின்னூட்டங்கள் வந்தவுடன், தமிழ்மணத்தில் நிலவரம் அப்டேட் ஆகும் வசதியை தக்கவைக்க கருதியே இதை செயல்படுத்தியிருக்கிறேன். வாசிப்பவர்கள் மட்டுறுத்துதலுக்கு மன்னிக்கவும். போலிபின்னூட்டங்கள், மற்றும் என்னை தவிர மற்றவர்களை நேரடியாய் வசை வார்த்தைகளால் திட்டும் பின்னூட்டங்கள் தவிர மற்ற எதுவும் நீக்கப்படாமல் இடம்பெறும் என்று உறுதிகூறுகிறேன். நான் இணையம் பக்கம் இருக்கும்வரை உடனுக்குடன் பின்னூட்டங்கள் இடம்பெற முயற்சி செய்கிறேன். நன்றி.

1/27/2006 7:42 PM  
Blogger Kasi Arumugam said...

எனக்கு இந்த இடுகைப் பக்கத்தில் பட்டை தெரிகிறது. முகப்பில் தெரியாதவாறு இருக்குமாறுதான் அமைக்கப்பட்டுள்ளது. (நுட்பக்காரணங்களாலும், பக்க வடிவு பாதிக்காமல் இருக்கவும்)

1/27/2006 8:04 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள காசி, பட்டை தெரிகிறது. அது குறித்து நீங்கள் சொல்வதும் புரிகிறது. ஆனால் முகப்பு பக்கமே வெற்றாய் (எந்த இடுகையும் இல்லாமல்) தெரிகிறதே! ஆர்கைவ் பக்கங்களும் வெற்றாய் உள்ளது. அது ஏன் என்பது இன்னமும் விளங்காமலே இந்த பதிவு. உங்கள் கருத்துக்கு நன்றி.

1/27/2006 8:24 PM  
Blogger ROSAVASANTH said...

இப்போது சரியாகிவிட்டது.

1/27/2006 9:39 PM  
Blogger SnackDragon said...

வசந்த், சம்பந்தமில்லாமல் ஒன்று,
சுந்தரவடிவேலின் பதிவில் இருக்கும் திருமாவின் உரையைக் கேட்டீர்களா? இல்லையெனில் அவசியம் கேளுங்கள்.

1/27/2006 11:31 PM  
Blogger SHIVAS said...

இசையால் நம்மை ஆட வைக்க பல இருந்தாலும், அழ வைக்க இளயராஜாவால் தான் முடியும்.

நன்றி வசந்த் அவர்களே.

1/28/2006 4:59 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், காஞ்சி பிலிம்ஸ் நன்றி.

சுவவின் பதிவைப் பார்த்தேன். வேலையிடத்தில் என்னால் கேட்க்க முடியவில்லை. வீட்டில் இணைய இணைப்பு இல்லை. வசதி வர்ம்போது நிச்சயமாய் கேட்பேன். நன்றி!

1/30/2006 8:18 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter