ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, May 16, 2006

லோக் பரித்ரன் உடைகிறது!

நாட்டை சீர்திருத்த ஐஐடி சான்றோர்களால் உருவாக்கப் பட்ட லோக் பரித்ரன் கட்சி உடைந்து விட்டது. நாட்டில் ஊழலை ஒழித்து, தூய்மையான வெளிப்படையான நிர்வாகத்தை தரும் உயர்ந்த நோக்கத்துடன் துவங்கப்பட்ட கட்சி, காசு விஷயத்தில் தேசியத் தலைமை புரட்டுத்தனமாக் நடந்து கொள்வதாகவும், வெளிப்படைதன்மை அற்று இருப்பதாகவும் அதிலிருந்து வெளியேறிய ஒரு சாராரால் குற்றம் சாட்டப்பட்டு, உடைந்தது. ஒரு கட்சி உடைந்தால் அதன் சட்டசபை உறுப்பினர்கள் எத்தனை பேர்கள் உடைந்த தரப்பினுடன் சென்றார்கள் என்று பார்பது வழக்கம். லோக் பரித்ரனுக்கு சட்டசபை உறுப்பினர்கள் இல்லாததால், சட்டசபைக்கு போட்டியிட்ட ஏழு பேரில் நான்கு பேர் வெளியேறி கட்சியை உடைக்க வேண்டியதாயிற்று.

லோக் பரித்திரனின் அண்ண நகர் வேட்பாளர் ராஜாமணி கூறுகையில், " We left Lok paritran on Sunday in disgust after witnessing the favouritism shown to the Mylapore candidate Santhanagopalan, who was given all the financial support and workforce for the campaign. We got nothing by the way of support. On the other hand, we were humiliated and even threatened by our national leadership." அவர் மேலும் தான் பொருளாளராய் நியமிக்க பட்டதாகவும், கணக்கு கேட்ட காரணத்தினால் பதிவி நீக்கம் செய்யப் பட்டதாகவும் கூறுகிறார். (எம்ஜியார் நினைவுக்கு வருகிறார்!) ராஜாமணி 11,665 வாக்குகள் பெற்றிருந்தும், வெறும் 9436 வாக்குகள் மட்டும் பெற்ற சந்தானகோபாலனை தங்கள் நட்சத்திர வேட்பாளராய் கட்சி தூக்கி பிடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

சேப்பாக்கத்தில் கருணாநிதியை எதிர்த்து நின்ற இன்னொரு வேட்பாளரான இளந்திருமாறன் சொல்வது கொஞ்சம் சுவாரசியமானது, " அரசியல்ரீதியாய் உணர்ச்சிகள் விளையாடும் சேப்பாக்கத்தில் நான் தாக்கப்பட்டால், சந்தான கோபாலன் பொது மக்களின் அனுதாபத்தை பெற்று வெற்றி பெறுவார் என்று கட்சியின் தலைவரும் மாநில பொதுசெயலாளரும் கூறினார்கள்." அவர் மேலும் ராஜ்புரோஹிட் (தலலவர்) தன்னை மாநில தலைவராக நியமித்ததாகவும், ஆனால் சந்தானகோபாலன் பத்திரிகைகளிடம் தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டதாகவும் சொன்னார்.

ஆயிரம் விளக்கில் போட்டியிட்ட இஷ்ரயேல் மஹேஷ்வர், தேர்தல் குறித்த தன் கருத்துக்களை வெறுமே சொன்னதால், ராஜ்புரோஹிட் தன்னிடம் கூச்சலிட்டு கத்தி, பின் வெளியேற்றிவிட்டதாக சொன்னார். 700 உறுப்பினர்கள் வெளியேறி போட்டி தரப்பில் சேரப்போவதாகவும் அவர் சொன்னார்.

(ஆதாரம் Deccan Chronicle, Tuesday, 16, 05, 06.)

இன்னும் ஒரு கொத்து குற்றச்சாட்டுக்கள் உண்டு. எனக்கு தட்ட போரடிக்கிறது.

இது தவிர்த்து தேர்தலுக்கு பல நாட்கள் முன்னர் டெகான் கொரோனிகிளில் லோக் பரித்ரனுக்கு ஓட்டுப் போட போவதாக சொன்ன சிலரின் கருத்துக்களை போட்டிருந்தார்கள். அதில் சில பெண்கள் சந்தானகோபாலன் 'பார்க்க ஸ்மார்டாக' இருப்பதால் ஒட்டு போடப்பாவதாக சொன்னார்கள். (இதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் எம்ஜியாருக்கும், கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் முட்டாள்தனமான பிம்ப வழிபாடு காரணமாய் ஒட்டு போடுவதாகவும், லோக்பரித்த்ரனுக்கு அறிவுபூர்வமாய் ஓட்டுபோடுவதாகவும் யாராவது சொன்னால் அதற்கு பதிலாக மட்டும் இந்த தகவல்.)

Post a Comment

34 Comments:

Blogger ரவி said...

Its a Real Comedy Sir.

5/16/2006 5:08 PM  
Blogger மணியன் said...

வருகிறார்கள் இளைஞர்கள், வருங்காலம் வளப்படும் என்று நம்பிக்கை துளிர்விட்டது. அதுவும் கிள்ளப்பட்டுவிட்டதா ?
'அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா' - இதை மாற்ற முடியாது :))

5/16/2006 5:30 PM  
Blogger Ravindran Ganapathi said...

I tried to search for the news clip in deccan chronicle online but couldn't find it.

5/16/2006 5:36 PM  
Blogger Ravindran Ganapathi said...

Yup found out.

http://www.deccan.com/chennaichronicle/City/CityNews.asp#‘Reformist’%20Lok%20Paritran%20party%20splits

Padithavargalal urvakka patta katchi. ungal parvai unmai aagi vitathu...

5/16/2006 5:41 PM  
Blogger அருண்மொழி said...

Rosavasanth,

//நாட்டை சீர்திருத்த ஐஐடி சான்றோர்களால் உருவாக்கப் பட்ட லோக் பரித்ரன் கட்சி உடைந்து விட்டது. நாட்டில் ஊழலை ஒழித்து, தூய்மையான வெளிப்படையான நிர்வாகத்தை தரும் உயர்ந்த நோக்கத்துடன் துவங்கப்பட்ட கட்சி, காசு விஷயத்தில் தேசியத் தலைமை புரட்டுத்தனமாக் நடந்து கொள்வதாகவும், வெளிப்படைதன்மை அற்று இருப்பதாகவும் அதிலிருந்து வெளியேறிய ஒரு சாராரால் குற்றம் சாட்டப்பட்டு, உடைந்தது.//

ஆனாலும் உங்களுக்கு இந்த அளவு குறும்பு கூடாது!!!

5/16/2006 6:21 PM  
Blogger ROSAVASANTH said...

டெகான் க்ரோனிகிளில் செய்தி வெளிவந்த பக்கம் 5. இணையத்தில் ஆர்வமுள்ளவர்கள் தேடலாம்.

5/16/2006 6:39 PM  
Blogger நியோ / neo said...

Rosa! vAzga! vAzga! vAzga! :)

5/16/2006 6:49 PM  
Blogger நியோ / neo said...

Link to the Deccan chronicle post :

http://www.deccan.com/chennaichronicle/City/CityNews.asp

The actual news :

‘Reformist’ Lok Paritran party splits


Chennai, May 15: Lok Paritran, a party launched by some IITians and other educated youth vowing to usher in a clean administration, has split with four of its seven candidates, who contested in the recent elections, quitting the outfit.
The faction accused the “national leadership” with financial bungling and lack of transparency.

“We left Lok Paritran on Sunday in disgust after witnessing the favouritism shown to the Mylapore candidate Santhanagopalan, who was given all the financial support and workforce for the campaign. We got nothing by way of support. On the other hand, we were abused, humiliated and even threatened by our national leadership,” said K. Rajamany, the Anna Nagar candidate and an engineering consultant.

He alleged that he was first appointed treasurer of the party but was sacked when he asked for accounts. Though he got 11,665 votes, the party leadership chose to project Santhanagopalan as the star candidate despite his getting a mere 9,436 votes, he alleged. “The national president Tanmay Rajpurohit did not even thank the public who cast about 35,000 votes and there was not a single word of appreciation for the candidates,” said the second rebel member Mr. Elanthirumaran, who had unsuccessfully contested against DMK president M. Karunanidhi in Chepauk.

“In fact, the party president and state general secretary had said that Mr. Santhanagopalan would get huge public sympathy and win in Mylapore if I got beaten up contesting in the politically sensitive Chepauk,” he claimed.

He alleged that Mr. Rajpurohit had appointed him as the state president but Mr. Santhanagopalan later declared before the media that he held the post. To top it all, the national president “surprised all by simultaneously appointing Arvind Seshagiri as state president,” said the software professional. He said in the absence of any support from the party leadership, he was “forced to risk my life campaigning with just four friends in the tough Chepauk constituency.”

Mr. Ishrayel Maheshwar, the Thousand Lights candidate, alleged that Mr. Rajpurohit yelled at him and sacked him from the party just because he wanted to express his views about the party’s performance in the elections. He claimed that about half of the 700-odd members of Lok Paritran would quit and join the rebel group.

5/16/2006 6:53 PM  
Blogger Gopalan Ramasubbu said...

Here is the link for the article.

http://www.deccan.com/chennaichronicle/City/CityNews.asp#

5/16/2006 6:56 PM  
Blogger ப்ரியன் said...

இப்போதுதான் நிசமான கட்சியாகியிருக்கிறார்கள்...வேதனை...

5/16/2006 7:05 PM  
Blogger ROSAVASANTH said...

ஏனோ பல பின்னூட்டங்கள் என் மின்னஞ்சலுக்கு வரவில்லை, அல்லது வர தாமதமாகிறது. என் ப்ளாகர் கணக்கினுள் மட்டுறுத்தல் பக்கத்தில் பார்க்க நேர்ந்த போது ஏகப்பட்ட பின்னூட்டம். தாமதத்திற்கு மன்னிக்கவும்! சுட்டியை தேடி அளித்தவர்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

5/16/2006 7:17 PM  
Blogger Badri Seshadri said...

I had predicted that "ideologically-bereft" DMDK will have a longer life than "superior-ideology" based LP. But even I didn't expect that it will be so short lived - just a week after the elctions? Amazing.

5/16/2006 7:44 PM  
Blogger Kasi Arumugam said...

வருத்தப்படுவதா, சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை. என்ன, கொஞ்ச காலம் தாக்குப்பிடிக்கும் என்று நினைத்தேன், அந்த வகையில் ஏமாற்றம். வேறு எந்த வகையிலும் இவர்கள் ஏமாற்றவில்லை.

5/16/2006 7:53 PM  
Blogger நன்மனம் said...

//வேறு எந்த வகையிலும் இவர்கள் ஏமாற்றவில்லை.//

தற்போதய தமிழனின் மனோநிலை.

வருத்த படுவதை தவிர வேறு வழி இல்லை.

:-(

5/16/2006 8:08 PM  
Blogger வினையூக்கி said...

"டைம்ஸ் நௌ" என்ற டெலிவிஷனில் நடந்த கலந்துரையாடலில் லோக்பரித்ரன் பிரதிநிதி நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைத்தது. அரசியலைப் பொருத்தபட்டில் "கார்பொரேட்" லீடர்ஷிப் எடுபடாது. 96 தேர்தலில் மக்கள் சக்தி இயக்கம் போட்டிப் போட்டது.. அவர்கள் இவர்களை விட உண்மையில் அதிகம் பேசப் பட்டார்கள். ஆனால் ஜெ- எதிர்ப்பு அலையில் அவர்கள் காணாமல் போனார்கள். லோக்பரித்ரனை பொருத்தமட்டில் பாமர வேண்டிய வாக்காளானுக்கு நேட்டிவிடி இல்லை.

(We have to remember மாணவர்களால் துவக்கப் பட்ட அசாம் கனபரிஷத் ஊழலின் முழு வடிவம் எனத்தூக்கி எறியப்பட்டது.)

5/16/2006 8:12 PM  
Blogger Doctor Bruno said...

What about this site started by a guy from Coimbatore

http://purohitexposed.blogspot.com/

5/16/2006 9:19 PM  
Blogger Srikanth Meenakshi said...

ம்ஹூம்...பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு செய்ய ஒன்றுமில்லை. எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் நாட்டைக் காப்பாற்றப் போவதில்லை. இருப்பினும், அரசாங்கத்தை, சமுதாயத்தை நல்வழிக்கு திசை திருப்புவதில் வெற்றி பெறப் போகும் சக்திகளில் ஒன்றாக ஒரு மாணவ/இளைஞர் சக்தியும் கண்டிப்பாக இருக்கும். அது இவர்கள் இல்லை என்று ஆகி விட்டது, அவ்வளவு தான்.

5/16/2006 9:34 PM  
Blogger Unknown said...

//நாட்டை சீர்திருத்த ஐஐடி சான்றோர்களால் உருவாக்கப் பட்ட//

:-))))))

5/16/2006 10:09 PM  
Blogger நற்கீரன் said...

I thought this might be a refreshing break for TN politics. But there seems to be no grass roots base for this emergence. Still, they are very young, and I hope they play some role in TN politics; they could provide a technocrat twist to issues.

Why do IITs or highly educated people do NOT support affirmative action for denial of equal opportunity of over 2000 years?

I can understand if some of them oppose, but there seem to little or no voice in support of affirmative action?

5/16/2006 10:22 PM  
Blogger aathirai said...

ஏனோ சோவின் முகமது பின் துக்ளக் நினைவுக்கு வருகிறது.

5/16/2006 10:48 PM  
Blogger arulselvan said...

இவர்கள் தளத்திலிருந்த 'ஐடியாலஜி,'ஸ்ட்ரேடஜி' போன்ற திட்டங்களைப் படித்து மண்டைகாய்ந்து விட்டது. அய்யா இப்ப என்ன சொல்ல வாரீங்க என்று கதற வைத்து விட்டார்கள்.
"மொச புடிக்கிற நாயி மூஞ்சியப் பாத்தா தெரியாதா " என்று எங்க ஊரில் சொல்வார்கள். யாருக்கும் தொந்தரவு இல்லாம சில வருடங்கள் ஏதாவது பந்தா விட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். இது ... சான்ஸே இல்லை.

நெசமாவே வீட்டு நாய் வேட்டையில் பிடித்த மொசலை சின்ன வயசில் சாப்பிட்ட,
அருள்

5/17/2006 12:45 AM  
Blogger arulselvan said...

இவர்கள் தளத்திலிருந்த 'ஐடியாலஜி,'ஸ்ட்ரேடஜி' போன்ற திட்டங்களைப் படித்து மண்டைகாய்ந்து விட்டது. அய்யா இப்ப என்ன சொல்ல வாரீங்க என்று கதற வைத்து விட்டார்கள்.
"மொச புடிக்கிற நாயி மூஞ்சியப் பாத்தா தெரியாதா " என்று எங்க ஊரில் சொல்வார்கள். யாருக்கும் தொந்தரவு இல்லாம சில வருடங்கள் ஏதாவது பந்தா விட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். இது ... சான்ஸே இல்லை.

நெசமாவே வீட்டு நாய் வேட்டையில் பிடித்த மொசலை சின்ன வயசில் சாப்பிட்ட,
அருள்

5/17/2006 12:45 AM  
Blogger கூத்தாடி said...

லோக்பரிதான் மையிலாப்பூர் வேட்வாளடின் பேட்டியைப் படித்த போது எனக்கு எரிச்சல்தான் ஏற்பட்டது.இந்தியாவை உயர்சாதி / இந்து நாடாகத்தான் அவர் பார்ப்பதாகப் பட்டது.இவர்கள் அறிவுஜீவி பார்டி எனச் சொல்லுவது முட்டாள்த் தனம் ..படித்த முட்டாள்கள் என வேண்டும் எனச் சொல்லலாம்.

5/17/2006 6:53 AM  
Blogger Unknown said...

It is not possible for someone to come all the way from IIT or even say MIT and start winning elections and rule. First point is be with people. Know them and understand their pain. If not, this would be the case. One should look life as service to the humanity as Mahatama said,these power and people would come all along if GOD wants to.

Though not a good news, thanks for sharing it...

Anbudan,
Natarajan

5/17/2006 11:17 AM  
Blogger Muthu said...

கார்பரேட் கம்பெனி நடத்துவதை போல் கட்சி நடத்தமுடியாது என்பது உண்மைதான்.

தகவலுக்கு நன்றி ரோசா

5/17/2006 2:03 PM  
Blogger ROSAVASANTH said...

சைட்மீட்டர் மின்னஞ்சலில் அளித்த தகவலின்படி, நேற்று என் தளத்திற்கு 700ஹிட்கள் கிடைத்திருக்கிறது. இதுவரை எனது எந்த பதிவிற்கும் இத்தனை ஹிட்கள் கிடைத்ததாய் நானறிந்து தெரியவில்லை. இதற்கு முன் நான் அறிந்து அதிகப்படியாய் 'அந்நியன் பற்றி' ரவிக்குமாரின் கட்டுரையை முன்வைத்து, பகடி செய்து எழுதிய பதிவிற்கு 400வரை கிடைத்ததாக ஞாபகம். அதை புரிந்துகொள்ள முடிகிறது. (ரெலோட் செய்வது, ஒருவரே 'உடனடியாய்' மீண்டும் வருகை தருவது போன்றவைகளை சைட்மீட்டர் கணக்கில் கொள்வதில்லை.)

ஒரு சாதாரண செய்திக்கு இத்தனை பிரபலம் கிடைத்தது, மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. காலையில் செய்தியில் பார்த்து, அவசரகதியில் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அடித்தேன். இத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கும் என்று தெரிந்திருந்தால் அதிகப்படியாய் என் கருத்தை எழுதியிருக்கலாம்.

நான் லோக் பரித்ரனின் 'அரசியல் அறிக்கை' மற்ற விஷயங்கள் எதையும் ஆழமாய் படிக்க முயலவில்லை. அவர்கள் குறித்து பெரிய இணய தேடல் செய்து, படிக்கவும் இல்லை. அதற்கான தேவையோ முக்கியத்துவமோ இரு(ந்த)ப்பதாக தோன்றவில்லை. அப்படி படிக்காமலேயே 'ஐஐடிகாரர்கள் அரசியலுக்கு வருவதன் அரோக்கியம்' பற்றி பேசுவதன் பிண்ணணி உளவியல் பற்றியே என் பதிவில் பேசியிருந்தேன். இப்போது டாக்டர் ப்ருனோ அளித்த சுட்டி மூலம் செல்லதுரையின் ஆராய்சியை படிக்க நேர்ந்தது ( http://purohitexposed.blogspot.com/ ). செல்லதுரை எழுதியுள்ளதில் எவ்வளவு தூரம் ஏற்றுகொள்வது (அல்லது அதையும் தாண்டி மேலே சொல்வது) என்பதை இப்போது தீர்மானிக்க இயலவில்லை. ஆனால் இவர்களின் பிண்ணணியில் இந்துத்வ இன்ஸ்பிரேஷன் மற்றும் ஒரு பார்பனிய அரசியல் இருப்பது குறித்து யாருமே பேசாமல், மேலோட்டமாய் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனைக்கும் நேரடியாய் ரிக்வேத மேற்கோள்கள் என்றும், இந்திய பழைமை குறித்த பெருமை அவர்களின் உதிர்ப்புகளில் இழையோடுவது தெளிவு. இப்போதும் சந்தான கோபாலனை தூக்கி பிடிக்கும் குற்றச்சாட்டும் இருக்கிறது.

பொதுவாக இந்துத்வ அரசியல் பற்றி பேசுவதில் உள்ள (நாம் பேசுவது ஸ்டீரியோ டைப் ஆகிவிடுமோ, பெயிண்ட் அடிக்க படுமோ என்ற அச்சம் கலந்த) தயக்கம், அதற்கு பின்னே உள்ள (மற்றவர்களின்)உளவியல் வொயிட்மெயில்கள் காரணமாய் இருக்கிறது. அந்த வகையில் செல்லதுரை எழுதியுள்ளது கவனமான வாசிப்பிற்குரியது.

இவர்களை அதிகம் பொருட்படுத்த தேவையில்லை என்ற நிலைபாட்டிலேயே இதுவரை பார்த்து வருகிறேன். ஆழாமாய் படித்து மேலே எதுவும் சொல்ல இருந்தால் பிறகு எழுதுகிறேன்.

கருத்தளித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.

5/17/2006 4:33 PM  
Blogger Unknown said...

Thanks RosaVasanth.

Its a pity that this outfit was symbolised as the representative group of the much awaited participation of the Highly educated into politics.

Its all about brand. The tag IIT mite have helped them to register a few impressions on the hyped educated minds.

For all those who hyped and Yapped about Lokparitran
This post should help them understand the ground realities of Indian Politics.

And from all ye dudes and dudettes in Lok Paritran
A BIG WELCOME TO INDIAN POLITICS

5/17/2006 5:20 PM  
Blogger நியோ / neo said...

இந்த 'ட்ரோஜன்' குதிரைகள் - 'கோடாரி' தூக்கி வருவது எதற்கு என்பது புலப்படுகிறது!

"ட்ரொஜன்", "குதிரைகள்", "கோடாரி" - என்பதெல்லாம் பல "வாசிப்புகளைக்" கொடுப்பதில் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா?!! ;)

5/17/2006 10:57 PM  
Blogger thiru said...

நன்றி ரோசாவசந்த். லோக்பரித்ரன் பற்றி அருணாஸ்ரீனிவாசன் அவர்கள் தேர்தலுக்கு முன்னர் சிலாகித்து பதிவு போட்டிருந்தார். அப்போது லோக்பரித்ரன் கொள்கை மற்றும் அவர்கள் தலைமை பற்றிய தேட வேண்டியதாயிற்று. இந்த மேட்டுக்குடி அரசியல் நகைப்பிற்குரியது மட்டுமல்ல, சினிமா கதை போன்ற அரசியல் புரட்சி இது. ஐ.ஐ.டி சிந்தனையிலிருந்து தான் ஊழலை அகற்ற அரசியல் பிறக்குமென்றால் இனி அரசியல்வாதிகளுக்கு என தனி ஐஐடி திறக்கலாம்.

5/18/2006 7:17 AM  
Blogger அருண்மொழி said...

இன்று வந்துள்ள Hindu செய்தியின்படி அங்கே பிராமனர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

http://www.hindu.com/2006/05/18/stories/2006051819940300.htm

5/18/2006 3:30 PM  
Blogger அருண்மொழி said...

// லோக்பரித்ரன் பற்றி அருணாஸ்ரீனிவாசன் அவர்கள் தேர்தலுக்கு முன்னர் சிலாகித்து பதிவு போட்டிருந்தார். //

அவர் மட்டும் அல்ல, அவதாரம் எடுத்த அம்பியும் "பொருளாதார நிபுணர்" என்று இவாளைப் பற்றி பதிவு போட்டிருந்தார்.

5/18/2006 3:35 PM  
Blogger ROSAVASANTH said...

காசி பெயரில் எழுதப்பட்ட ஒரு போலி பின்னூட்டம் நிரந்தரமாய் அழிக்கப்பட்டுள்ளது.

5/18/2006 4:35 PM  
Blogger Aruna Srinivasan said...

// லோக்பரித்ரன் பற்றி அருணாஸ்ரீனிவாசன் அவர்கள் தேர்தலுக்கு முன்னர் சிலாகித்து பதிவு போட்டிருந்தார். //


பயணம் செய்து கொண்டு இருந்ததால் உடனே இதற்கு என் கருத்தை வெளியிடமுடியவில்லை.

இவர்களை சிலாகித்து எழுதியதன் காரணம் இவர்களுடைய " ஐ.ஐ.டி" பின்புலம் அல்லது வேறு எந்த ஒரு "மேட்டுக்குடி" காரணத்தினாலும் இல்லை. என் பதிவில் நான் இதை விளக்கி, "பின்னர் சேர்த்தது" என்று எழுதியதை இங்கே மீண்டும் தருகிறேன்.

// // லோக் பரித்ரன் பற்றி நான் எழுதியிருந்தது அப்படி ஒன்றும் அது சிலாகிக்க வேண்டிய நிகழ்வு அல்ல என்று சில விமரிசனங்களும் வந்தன. விமரிசகர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டம் என்கிற ஒரு பொதுத் தாகம் இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு இழுத்தது. சுதந்திரம் பெற்றோம்; உன்னதமான அரசியல் தலைவர்களைப் பெற்றோம். பின்னர் சுதந்திர இந்தியாவில் எமர்ஜென்ஸி, மொழிப் பிரச்சனை, என்று பல விதங்களில் பொதுத் தாகங்கள் இளைஞர்களை பொது வாழ்விற்கு இழுத்தன. இன்று அப்படிப்பட்ட நாடு தழுவிய இன்னல் / crisis - குறிப்பாக சொல்லும்படி இல்லாவிட்டாலும், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், மத/ஜாதி வேறுபாடுகள், என்று கண்ணுக்குத் தெரிந்தும் / தெரியாத ஆயிரமாயிரம் பிரச்சனைகள் ஊடுருவி நிற்கும் சமயத்தில் வருங்காலத் தலைவர்கள் என்ற கேள்வி நிரப்படாமலேயே வெற்றிடமாக இருக்கிறது.

இந்த நிலையில் குடும்பம் மற்றும் இதர பின்வாசல்கள் வழியே தலைவர்களாக உருவாவதை நாம் எதிர்க்கிறோம். சினிமா போன்ற அடித்தள மக்களிடம் சென்றடையும் "தலைவர்களை" நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இன மற்றும் ஜாதியின் பேரால் தலைவர்கள் உருவாகும் கலாசாரத்தை, இன்னும் ஜாதி பாகுபாடுகள் அதிகரிக்க காரணம் என்ற ஒரே காரணத்தினாலேயே தவிர்க்க நினைக்கிறோம்.

ஆக, தலைவர்கள் உருவாக இன்று பெரிதான / வலுவான ஒரு தூண்டுகோல் - சுதந்திரப்போராட்டம் அல்லது எமர்ஜென்ஸி போன்று - தூண்டுகோல் என்ன? குவியமாக ஒன்று இல்லை. ஆனால் பன்முனைத் தாக்குதல் நடத்த ஆயிரம் காரணங்கள் உள்ளன. பசி, ஏழ்மை, என்று ஒரு பக்கமும் அதீத செல்வம் என்று இன்னொரு புறமும் சமூக இடைவெளி விரிந்து கொண்டே போகிறது. ஊழல் நிர்வாகச் சீர்கேடுகளினால் இன்னொரு பக்கம் நாம் தினசரி வாழ்க்கையில் அல்லல்கள் பல சந்திக்க நேருகிறது. மக்களின் நடைமுறை வாழ்விற்கான அடிப்படை பிரச்சனைகளான நீர், சுகாதாரம், கல்வி என்று ஓட்டைகள் பல நிரப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் எந்த வாசலையாவது திறந்துவிட வேண்டாமா? ஆரோக்கியமான இளம் சக்திகள் பொது வாழ்வில் நுழைய?

இந்த எதிர்பார்ப்புதான் நான் இவர்களை ஆதரிப்பதற்கு காரணம்.// //


ஆனால் இவர்கள் எந்த விதத்திலும் வித்தியாசமில்லை; இந்திய அரசியலின் தாக்கம் இங்கும் உள்ளது என்பது இப்போது புரிகிறது. மற்றபடி இளைஞர்களின் வரவை அரசியலில் ஆதரிக்கும் என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண் என்பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.

ஆனால் இவர்கள் எந்த விதத்திலும் வித்தியாசமில்லை; இந்திய அரசியலின் தாக்கம் இங்கும் உள்ளது என்பது இப்போது புரிகிறது. மற்றபடி இளைஞர்களின் வரவை அரசியலில் ஆதரிக்கும் என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண் என்பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.

இந்த ஏமாற்றத்தை "மீண்டும் பின்னர் சேர்த்தது" என்று என் பதிவிலும் வெளியிடுகிறேன்

5/22/2006 4:12 PM  
Blogger ROSAVASANTH said...

ரவி ஸ்ரீனிவாஸ் பாணியிலேயே, இட ஒதுக்கீடு பற்றி கருத்து சொல்லி, அவர் சொன்னதை அவர் பாணியிலேயே மறுத்தால் எப்படியிருக்கும் என்று ஒரு பதிவு எழுத முயன்றேன்.(வேறென்ன, 'நான் என் கருத்துக்களை தெளிவாய் சொல்லிவிட்டேன். யாரும் அதை நேர்மையாய் எதிர்கொள்ள வில்லை. அறிவு பூர்வமான விவாதம் சாத்தியமில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். நான் இனி ஆங்கிலத்தில் எழுதப்போகிறேன்..' இப்படி).

எழுதும்போதே மிகவும் எரிச்சலாகி விட்டதால், அந்த யோசனையை கிடப்பில் போடவேண்டியதாகி விட்டது.

5/23/2006 5:02 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter