ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Thursday, July 14, 2005எல்லை!கருகித்தான் விறகு தீயாகும். அதிராத தந்தி இசைக்குமா? ஆனால் அதிர்கிற தந்தியில் தூசி குந்தாது. கொசு நெருப்பில் மொய்க்காது. (செங்கள்ளு சித்தரின் பதிவில் மேற்படி பிரமீளின் கவிதையை கண்டு, சற்று அதிகமாகவே உணர்சி மற்றும் பழைய ஞாபகத்தின் வசம் சென்று விட்டதால் இங்கே இடுகிறேன்.) Tuesday, July 05, 2005வட்டம்!(சில வருடங்கள் முன்பு சுப்பிரமணி ரமேஷ் திண்ணையில் எழுதிய ஒரு கவிதையும், அதற்கு பதிலாய் நான் திண்ணை விவாதகளத்தில் எழுதியதும் கீழே. இன்று எதேச்சையாய் கணணியில் கண்ணில் பட, இன்றும் அது பொருந்தி வருமென தோன்றியதால் இங்கே பதிகிறேன்.) வட்டத்தின் வெளி --எஸ் ரமேஷ் தீர்மானமான எல்லைகள் வகுத்துக் கொண்டு "எல்லையற்றவை" குறித்து தர்க்கிப்போம்!-ஒரே வட்டத்தின் எதிரெதிர் புள்ளிகளில் நின்று... வட்டத்தை உணர்ந்தபின் பதறி போய் நகர்ந்து "வெளி"- வட்டத்திற்குள்ளா வெளியிலா? என தர்க்கத்தை தொடர்வோம் தானே வேறொரு வட்டம் உருபெற்றதை அறிந்து மறுபடி தள்ளிப் போய் வெளி-குறித்து பேசுவதென்றும் பேசமாட்டேன் என்றும் முடிவெடுப்போம்... இரு புள்ளிகளில் வளையத்தின் விளையாட்டு எப்போதும் தொடர்ந்திருக்க ****************************************************** (ரமேஷுக்கு) --ரோஸாவசந்த். வட்டத்தை தவிர்த்த வெளியும் எல்லையற்ற தொலைவை சுற்றியதொரு பெருவட்டத்தினுள்தான். வட்டத்தை அறுத்தாலோ தொடக்கமும், முடிவுமற்ற எல்லைகளற்ற ஒரு கோடு. கோட்டின் இரு பக்கங்களென்பதும், வட்டத்தின் உள்வெளி, புறவெளி என்பதும் வேறு வேறல்ல. வட்டத்தின் உள்ளிருக்கும் உள்வட்டமும் வட்டத்தின் உள்சென்று வெளிவரும் வளையமும் ஒன்றல்ல. இருக்கும் எல்லாவற்றிற்கும் எல்லை இறக்காமல் வட்டத்தை துறப்பதெங்கே! வட்டத்தை துறக்க மறுக்கும் திட்டத்திடம் வட்டத்தினுள் மறுப்பது மட்டுமே தொடர்ந்திருக்கும். (இப்போது வெகு நாட்களாய் இணையத்தில் காணாத, சிவம் கந்தராஜா என்ற ஜெயமோகனின் தீவிர ரசிகர் ஒருவர் இது குறித்து எழுதியது(என் நினைவிலிருந்து), "..அப்பறம் அது என்ன கவிதையா? அதுவும் இரண்டு வருடங்கள் தமிழ் கவிதைகளை தீவிரமாய் வாசித்த பின் எழுதியதா? அய்யோ!" |