ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Sunday, April 26, 2009

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் தோற்கும் என்றுதான் தோன்றுகிறது என்றாலும், 40திலும் படுதோல்வி அடைய வேண்டும் என்ற அளவில் ஈழப்பிரச்சனை சார்ந்த கரிசனம் கொண்ட பலரும் ஆத்திரமாக இருக்கிறார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவை ஆதரிக்க அவர்களில் பலருக்கு இன்னும் மனம் வரவில்லை; பலர் மொட்டையாக திமுக- காங்கிரஸ் தோற்கவேண்டும் என்றும், சிலர் 49ஓ எதிர்ப்பு ஒட்டு போடலாம் என்றும் கூறுகிறார்கள். எனக்கும் இடையில் -எவ்வளவு கேவலமாக இருந்தாலும்- விஜயகாந்தை முன்மொழிய வேண்டும் என்று கூட தோன்றியது. இவை அனைத்தும் வேலைக்காவாதது என்று இப்போது தெளிவாக தோன்றுகிறது.

திமுக-காங்கிரஸ் தோற்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே வழி அதிமுக கூட்டணியை ஆதரிப்பது. தேர்தல் ஜனநாயகம் நமக்கு அளிக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். பிரச்சனை என்னவென்றால் தர்க்க பூர்வமாக சிந்தித்தால் இப்போதும் ஜெயலலிதாவே பெரிய எதிரியாக தோன்றும். அது உண்மையாகவே கூட இருந்தாலும், தேர்தல் ஜனநாயகம் என்பது நமக்கு அளிக்கும் குறிப்பிட்ட உரிமை மற்றும் வாய்ப்பு குறித்த தெளிவில்லாததால் இந்த குழப்பம் என்று நினைக்கிறேன்.

தேர்தலில் வாக்கு மூலமாக நாம் பிரதிநிதிக்கும் கருத்து என்பது நம் முன்னிருக்கும் சாய்ஸ்களில் யார் பரவாயில்லாதவர் என்று நம் அரசியல்/ சமூக மற்றும் சுயநல பார்வையின் மூலம் முடிவுக்கு வந்து தெரிவிப்பது அல்ல; அப்படி முடிவெடுத்தால் ஒரே ஒரு முடிவைத்தான் காலாகாலத்துக்கும் நாம் எடுக்க முடியும்; இந்த பலவீனத்தை வைத்தே கருணாநிதி தன் அரசியலை உயிருடன் வைத்திருக்கிறார். அப்போதய நமது கோபத்தை, அதிருப்தியை தெரிவிப்பது, குறிப்பாக அண்மைய கோபத்தில் தண்டிப்பதுதான் தேர்தல் மூலம் முன்வைப்பது; அந்த வகையில் ஜெயலலிதா எவ்வளவு மோசமாக இருந்தாலும், திமுகவை தோற்கடிக்க நாம் அதிமுக கூட்டணியைத்தான் முழுவதுமாய் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதா தான் ̀ஈழம் பெற்று தெருவேன்' என்பது வெத்து சவடால் நாடகம் என்றாலும், அந்த சவடாலுக்காகவாவது நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதுதுதான் தேர்தல் சார்ந்த அரசிலாக இருக்கும்.

ஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு அதிமுகவை வெற்றி பெற வைப்பதை தவிர வேறு சாத்தியம் இல்லை. . கவலையே வேண்டாம், இதன் விளைவாக இந்த ஆட்சியே கவிழும்! அந்த தேர்தலில் அன்றய சூழலுக்கு ஏற்றாற் போல யோசிக்க வேண்டியதுதான்!

Post a Comment

61 Comments:

Blogger தமிழ் சசி | Tamil SASI said...

தமிழர்களின் முதல் எதிரி காங்கிரஸ் கூட்டணியே. அதை தோற்கடிப்பது தான் முக்கிய குறிக்கோள். விஜயகாந்த் அதை சாத்தியப்படுத்துவார் என்றால் அவருக்கு வாக்களிக்கலாம். அவ்வாறான சக்தி அவருக்கு இல்லை.

49ஓ என்பதை செலுத்தும் வசதி பல தேர்தல் மையங்களில் இல்லை என்பதே எனக்கு தெரிந்த தகவல். அதனால் எந்த பலனும் இல்லை.

எனவே வாக்குகளை வீணாக்காமல் அதிமுக கூட்டணிக்கு அளிப்பதே சரியானது. மொத்த வாக்கும் அதிமுக கூட்டணிக்கு மாறினால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்கும். அதைத் தான் நாம் செய்ய வேண்டும்.

தர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் சிந்திப்பதை விடுத்தால் தற்போதைய சூழ்நிலையில் இதுவே சரியாக தெரிகிறது.

எனக்கு தனிப்பட்ட வகையில் வைகோ, திருமா போன்றோர் வெற்றி பெற வேண்டும். ப.சிதம்பரம், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, தங்கபாலு, இளங்கோவன் போன்றோர் அதிக வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும்

நன்றி...

4/26/2009 4:50 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

உங்களுடைய விருப்பத்துடன் முழுக்க உடன்படுகிறேன். நேற்று வரை (புலிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல்) ஈழத்தமிழர்களுக்கெதிராக மமதையுடன் அறிக்கைகள் விட்டு வந்த ஜெயலலிதா இப்பொழுது தனி ஈழத்துக்கு ஆதரவாக உழைக்கப் போவதாக தெளிவாக அறிக்கை விட்டிருப்பது முழுக்க தேர்தல் நாடகமே என்றாலும், அவருடைய இந்த அறிக்கைக்காக அதிமுக கூட்டணி வெற்றி பெறப் போவதன் மூலம் தமிழக மக்கள் தனி ஈழத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது உறுதி படுத்தப் படவேண்டும்.

மேலும் தம்மை இத்தனை ஆண்டுகள் தமிழர்கள் அனைவரையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்த கலைஞர் குடும்பக் கொள்ளைக் கும்பலுக்கு இது பாடமாக அமைய வேண்டும். அவர்கள் இதுவரை தமிழகத்தைக் கொள்ளையடித்து வந்தது கூட ”கலைஞர் எப்பொழுதும் தமிழர் பக்கம் நிற்பார்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் பேரால்தான் தமிழர்களால் சகிக்கப் பட்டு வந்தது.

இருந்தாலும், திமுக கூட்டணியில் இரண்டு இடங்களை வெல்ல முடியாவிட்டாலும், திருமாவளவன் மட்டுமாவது வெல்ல வேண்டும். ஏனெனில் அவர் இராமதாசு, வைக்கோ போன்றவர்களிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் தனியாகக் கூட்டணியமைத்துப் போட்டியிட அவர்கள் மறுத்து விட்டனர். திருமாவளவனை கடந்த முறை ஜெயலலிதா மிக மோசமாக நடத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் அதிமுகவுடன் கூட்டணியமைக்க இசையவில்லை. அவருடைய நிலை மிகுந்த வருத்தத்துக்குரியது. ஆனாலும் அவர் காங்கிரசுக்காரன்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆதரித்துப் பேசக் கூடாது. காங்கிரசு நாய்களுக்கு மட்டும் எந்தக் காலத்திலும் நன்றி என்பதே கிடையாது. நேரு குடும்ப அடிவருடிகளின் வரலாறே துரோக வரலாறுதான்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

4/26/2009 6:46 AM  
Blogger G.Ragavan said...

சரியான கருத்தாகத்தான் தோன்றுகிறது. மக்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் போகின்றவர்களுக்குத் தோல்விதான் பாடம். அந்தப் பாடம் இப்பொழுதைக்கு திமுகவிற்கும் காங்கிரசுக்கும் தேவைப்படுகிறது.

குறிப்பாக தங்கபாலு, தயாநிதி மாறன், ப.சிதம்பரம், அழகிரி ஆகியோர் தோல்வியடைய வேண்டும்.

ஜெயலலிதா தேர்தலுக்காகத்தான் ஈழம் பற்றிப் பேசுகிறார். தாமரை சொன்னது போல ஜெயலலிதா அம்மாவாசை. கருணாநிதி அம்மாவாசைக்கு அடுத்த நாள்.

4/26/2009 6:53 AM  
Blogger -L-L-D-a-s-u said...

காங்கிரசு நிற்கும் 16 தொகுதிகளில் அவர்களை தோற்கடித்துவிட்டு , மற்ற தொகுதிகளில் திமுக மற்றும் வி.சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கவேண்டும் . இந்த தேர்தல் வாக்குகள் , தமிழினப்படுகொலைகளுக்கு எதிரானது என அழுத்தி புரியவைக்கமுடியும் . அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் , ஜெ என்பவரது 'கூட்டணி உத்தி' என்ற அளவில் பார்க்கப்படும் ஆபத்தும் இருக்கிறது

4/26/2009 10:15 AM  
Blogger Pot"tea" kadai said...

முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கோரிக்கை. காங்-திமுக படுதோல்வியடைய வேண்டும் அதற்காக அதிமுக கூட்டணியை மட்டுமே ஆதரிக்க முடியும். அதற்கான பரப்புரை தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

//̀ஈழம் பெற்று தெருவேன்' என்பது வெத்து சவடால் நாடகம் என்றாலும்//

வெத்துச்சவடால் தான். ஆனால் மிக தைரியமாக இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதை வரவேற்கிறேன். ஆமாம், தனித் தமிழீழக் கோரிக்கை கூட இந்திய புடுக்கறுந்த இறையாண்மைக்கு எதிரானதாம். தற்போதைய தேர்தல் அடக்குமுறை ஜிம்பாப்வேய முகாபே அரசின் காட்டுமிராண்டித்தனத்தை விட இந்திய சனநாயகம் சந்தி சிரிக்கிறது. ஈழவிவகாரம் தமிழகத்தை விட்டு வெளியே சிறிதளவும் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் தமிழக வாக்காளர்களுக்கு உணர்வை வெளிப்படுத்தும் நிலையில் இத்தேர்தல் உள்ளது.

முக்கியமாக பல்லெடுத்தப் பாம்பாக, புடுக்கறுந்த காளையாக இருக்கும் கருனாநிதி கூட்டணிக்கு பாடம் கற்பித்தல் அவசியமாக உள்ளது.

4/26/2009 10:53 AM  
Blogger ஸ்ரீ said...

தர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் சிந்திப்பதை விடுத்தால்//

தர்க்க ரீதியாக சிந்திக்கவில்லையென்றால் சிந்தனையே தேவையில்லையே!

4/26/2009 11:01 AM  
Blogger உண்மைத்தமிழன் said...

அண்ணே..

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு குட்டிக் கலகமா..?

இந்தக் கலகம் நல்லாத்தான் இருக்கு..

நானும் இதே கருத்துடன்தான் இருக்கிறேன்..

காங்கிரஸும், அதனுடன் கூட்டணி வைத்து தமிழர்களின் மரணத்திற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் தி.மு.க.வும் இத்தேர்தலில் தோல்வியடைத்தான் வேண்டும். வேறு வழியில்லை அ.இ.அ.தி.மு.க.வுக்குத்தான் ஓட்டுப் போட்டாக வேண்டும். இல்லையேல் விஜயகாந்திற்கு ஓட்டைக் குத்திவிடலாம்.. தப்பில்லை.

இதனாலாவது காங்கிரஸும், தி.மு.க.வும் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்..

4/26/2009 11:45 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

"Regarding Tamilnadu election I want to talk to you. This week end we will talk" என்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நான் பதிலுக்கு எழுதியது:

Are you still interested in Tamil Nadu elections? I have lost interest after the high dramas all the party leaders played. I don't follow the news and predictions seriously.

First, I wish all the congress clowns lose. Second, as many DMK cadidates as possible, especially the bigwigs such as Azhagiri, Dayanidhi, Baalu, and Raja should also lose. Third, PMK should not win more than 2. Thiruma can win one. MDMK can win 2. CPI/CPM together can win 2. Amma's slaves and Vijaykanth's fans can win the rest. These are not my predictions, only wishes.

All the winners should be first time contestants so that they can make some money next 5 years. Otherwise it is not going to make any differece for Tamils and Tamil Nadu.

4/26/2009 12:18 PM  
Blogger இராம.கி said...

பேராயமும், தி.மு.க.வும் அவை போட்டியிடும் எல்லா இடங்களிலும் தோற்றுப் போகவேண்டும்.

பேராயக் கட்சி தமிழகத்தில் இருந்து பூண்டோடு ஒழிய வேண்டும். கழகத் தலைவருக்கு இது பேரடியாய் இருக்க வேண்டும். அதன் விளைவால் அவர் எதிர்காலத்தில் திருந்த வேண்டும்.

அந்தக் கூட்டணியில் உள்ள ஒரே விதிவிலக்கான விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் இரு இடங்களிலும் வெல்ல வேண்டும். எதிர்காலம் கருதி திருமாவை இப்பொழுதும் ஆதரிக்கத்தான் வேண்டும்.

இது நடக்க வேண்டுமானால், நம்மால் முடிந்தவரை நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் எல்லோரும் விடாது சொல்லிப் பரப்புரை செய்ய வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

4/26/2009 12:34 PM  
Blogger Raj Chandra said...

இப்படித்தான் பிரபாகரன் ராஜபக்சே-வை மறைமுகமாக ஆதரித்து(ரணில் ஒன்றும் புனிதர் அல்ல), அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். அதே போல தமிழ்நாட்டில் ஜெ பிழைக்க வழி சொல்கிறீர்கள்.

ஆதரவுப் பின்னூட்டங்கள் உணர்ச்சி வசப் பேத்தல்கள் (சக பின்னூட்டர்கள், Nothing Personal). யோசித்தால் ஜெ-வின் வெற்றி ஈழத்தில் இப்போதைய அழித்தொழிப்பை ஆதரிக்கவே செய்யும்.

தேர்தல் ஓட்டுப் பொறுக்குவதற்காக ஜெ ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்தப் பின்னரும் நீங்கள் அந்தக் கூட்டணியை ஆதரிப்பது, மன்னிக்கவும், மற்ற பிரச்சினைகளில் நீங்கள் காட்டும் முதிர்ச்சியைக் கேள்விக்குறியதாக்குகிறது.

But reading other responses to your post makes me think how much people are furious with the ruling party.

பி.கு. நான் கருணாநிதி மற்றும் திமுக ஆதரவாளன் அல்ல. எனக்குத் தேவை ஜெ. மூலம் ஈழப் போராட்டம் கொச்சைப் படுத்தப் படக்கூடாது.

4/26/2009 1:01 PM  
Blogger கறுப்பி said...

Hi Rosa

How are you

4/26/2009 2:14 PM  
Blogger Jayaprakash Sampath said...

முழுமையாக உடன்படுகிறேன்.

இன்றைக்கு அரசியல் செய்யும் பெருந்தலைகள் யாருமே சொல்லத் தயங்கும் ஒரு விஷயத்தை , அதுவும் தேர்தல் நேரத்தில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஜெ சொன்னதற்காக பாராட்ட வேண்டும். ஜெயலலிதா, தனி ஈழத்துக்காகப் போராடி வாங்கிக் தருகிறாரா என்பது வேறு விஷயம். ஆனால், அப்படிச் சொல்வதனால் கிடைக்கும் ஓட்டுக்கள், அவருக்கு தமிழக மக்களின் உண்மை நிலையைப் புரிய வைக்கும்.

நேற்று கூட, கலைஞர், ' சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும்' ஈழத்தமிழ் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்பட பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்று கலைஞர் செய்திகளிலே சொல்கிறார். ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு.

வாழ்க்கையிலே முதன் முறையாக அதிமுகவுக்கு ஓட்டுப் போடப் போறேன்.

4/26/2009 2:33 PM  
Blogger Jayaprakash Sampath said...

//அதே போல தமிழ்நாட்டில் ஜெ பிழைக்க வழி சொல்கிறீர்கள்.//

Raj Chandra : இத்தனை நாள் கலைஞருக்கு கிடைத்த ஆதரவுக்குக் காரணமே, அவர் தமிழர்களின் பக்கம் இருப்பவர் என்பதற்காகத்தான். அது இல்லை என்றாகிவிட்ட போது, இனி அவர் எதற்கு? அவர் தமிழகத்துக்கு செய்த நல்ல காரியங்களுக்காக, அவரை வேண்டிய மட்டும் ஆட்சியில் அமரவைத்து, தமிழகத்தைச் சுரண்ட வாய்ப்பு கொடுத்தாகிவிட்டது.

//ஆதரவுப் பின்னூட்டங்கள் உணர்ச்சி வசப் பேத்தல்கள் (சக பின்னூட்டர்கள், Nothing Personal). யோசித்தால் ஜெ-வின் வெற்றி ஈழத்தில் இப்போதைய அழித்தொழிப்பை ஆதரிக்கவே செய்யும்.//
ஜெயலிதா டிராமா போடுகிறார் என்பதாகவே இருக்கட்டும். தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதிக்காக, விழும் ஒவ்வொரு ஓட்டும், ஈழம் எத்தனை சீரீயஸான் விவகாரம் என்பதைப் அவருக்குப் புரிய வைக்கும். அமெரிக்கா உள்ளிட்டவர்கள் எல்லாம் போர்நிறுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிருக்கும் தேசியக்கட்சிகளில் யாராவது வாயைத் திறந்தார்களா? காங்கிரஸ்காரகள் மற்றும் தோழமைக் கட்சியை விடுங்கள்? காங்கிரஸுக்கு எதிரான கட்சிகள் எத்தனை இருக்கின்றன? அவர்களில் யாராவது ஏதாவது வாயைத் திறந்தார்களா? இளிச்சவாப் பயலாக இருப்பதற்கும் ஒரு அளவில்லையா? ஜெயலிதாவின் பேச்சு, தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இது நன்மைக்கே.

// எனக்குத் தேவை ஜெ. மூலம் ஈழப் போராட்டம் கொச்சைப் படுத்தப் படக்கூடாது.//

குடியே முழுகிவிட்டது. நீங்கள் கொச்சைப் படுவது பற்றிப் பேசுகிறீர்கள். ஜெயலிதா ஏதாச்சும் வேலை காட்டினால், பார்த்துக் கொள்ளலாம். வாக்குச் சீட்டு நம்ம கையிலதானே இருக்கு?

4/26/2009 2:57 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

ராஜ், கருணாநிதி இப்போது செய்துவரும் மோசடிகளைவிட இன்னும் மோசடியாக எதுவும் நடக்க, இன்னும் அவலமான நிலைக்கு ஈழப்பிரச்சனையை கொண்டு செல்ல யதார்தத்தில் வாய்ப்பிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. திமுக தோற்காமல் போவது இந்த மோசடிகளுக்கான மக்களின் அங்கீகாரமாக இருக்கும். திமுக தோற்றால் அதை மக்கள் திமுகவிற்கு அளித்த தண்டனையாக பார்க்க இயலுமே ஒழிய ஜேக்கான அங்கீகாரமாக பார்க்க இயலாது. வெற்றி பெற்றால் ஜே என்ன செய்வார் என்பது பற்றி எதுவும் கூற முடியாது. ஆனால்

தமிழ்நாட்டில் விற்கும் ஆங்கில பத்திரிகைகளிலிருந்து, எல்லாவகை அரசியல்வியாதிகள்வரை தமிழ்நாட்டின் பொதுகருத்தியலில் ஈழத்துக்கான இடம் என்று எதுவும் இல்லை என்ற பார்வையில் திமுக/காங்கிரஸின் தோல்வி மாற்றத்தை கொண்டு வரும். இப்போதைக்கு அதை மட்டுமே செய்யும் சக்தி நம்மிடம் உள்ளது.

4/26/2009 2:58 PM  
Blogger ROSAVASANTH said...

கறுப்பி, டோரண்டோவில் உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி கூற தொலைபேச வேண்டும் என்று நினைத்து, தள்ளிப்போட்டு, இன்று வரை செய்யவில்லை. மிகவும் மன்னிக்கவும்.

ஈழம் தொடர்பான செய்திகளை, கருத்துக்களை வாசித்து, சிந்தித்து நேரும் பெரும் துன்பத்தை தவிர வாழ்க்கை மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை வரும் திட்டம் உண்டா?

4/26/2009 3:29 PM  
Blogger Thangamani said...

ஜெயலலிதாவின் ஈரோட்டு பேச்சை வெறும் தேர்தல் நேர கோஷமாக மட்டும் கருத வேண்டியதில்லை.

1. ஜே தனது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்கக்கூடியவர்; அது அரசியல், பணரீதியான லாபங்களைத் தாண்டியும் இருக்கக் கூடும். அப்படியான முடிவுகளை மு.க செய்யத்திராணியற்றவர். ஈழப்பிரச்சனை ஜெயின் அப்படியான ஒரு முடிவா என்பதை இப்போது சொல்ல முடியாது எனினும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதே.

2. இதனால் விளையும் உடனடி பெரும்பலன் என்பது இது வரை ஊடகங்கள் மூலம் இந்திய ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வாய்ப்பூட்டை உடைத்திருப்பதுதான். அதாவது ஈழப்பிரச்சனையை குறிப்பாக தனி ஈழத்தைப் பற்றி பேச முயலும் போதெல்லாம் அது இந்திய இறையாண்மைக்கும் இலங்கை இறையாண்மைக்கும் எதிரானது என்ற உம்மாச்சி கண்ணைக் குத்தும் என்கிற தோரணையில் ஆன பயத்தை மெல்ல விதைத்து (அதில் ஜெக்கும் பங்கிருக்கிறது) அதை இன்று கண்டபடி வளர்த்து அதன் நிழலில் அடக்குமுறையை ஏவிவிட்டு எல்லா தனி ஈழம் குறித்த எல்லா விவாதங்களையும் இந்த ஒற்றை கெட்ட வார்த்தையில் (இறையாண்மை) கண்டனம் செய்யும் போக்குக்கு இது நிச்சயம் எதிரான குரல். இதன் மூலம் தனி ஈழம் என்ற கருத்தாக்கத்தை இந்த தேர்தல் காலத்திலாவது விவாதிக்க மற்றவர்களுக்கும் இடம் உண்டாகி இருக்கிறது. அடக்குமுறையை அரசு பயன்படுத்த யோசிக்க வேண்டி இருக்கும்.

3. ஜெயின் இந்த மாற்றத்தை ராமதாஸ் மற்றும் வைகோ பயன்படுத்தி அவருடன் ஒரு குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் உண்மையாக ஒன்றுபட வாய்ப்பிருக்கிறது. எல்லா தமிழின ஆதரவாளர்களும் நேரடியாக இதன் அடிப்படையில் ஒன்றுபட்டு இதை ஜேயின் இந்த முடிவை மாற்றமுடியாத பார்வையாக, நிலைப்பாடாகச் செய்யலாம். இன்றைய இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் தமிழர் நலன் பேணப்படும் என்ற காங்கிரஸ் தயாரிப்பு (திமுக முகவராக செயல்படும்) விளக்கெண்ணை லேகியத்துக்கு எதிரான ஒரு வலுவான மாற்றுக்கருத்தை உருவாக்க எதிர்காலத்தில் பயன்படும்.

4. இங்கு குறிப்பிட்ட படி மு.க அடையாளம் காணப்பட்டது அவரது (சொல்லிக்கொண்ட) தமிழின நலன் என்ற அடிப்படையில் தான். இனி மெல் அப்படியான ஒரு நிலை இல்லாத போது, வெளிப்படையாக யார் தமிழ்/ தமிழர் நலனை முன்னிலைப்படுத்துகிறார்களோ அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டியதுதான்.

நன்றி வசந்த் பதிவுக்கு.

4/26/2009 3:35 PM  
Blogger Kasi Arumugam said...

Half-baked and emotional post.

4/26/2009 4:12 PM  
Blogger தருமி said...

கடவுளே!

அதிமுக மம்மிக்கு ஓட்டுப் போடும்படியான நிலைமையை எனக்கு ஒரு போதும் கொடுத்து விடாதே!

4/26/2009 4:20 PM  
Blogger viduthalaikuyil said...

WELL SAID SIR!...THANK YOU..!

4/26/2009 5:20 PM  
Blogger vanathy said...

FOR TAMIL NADU PEOPLE VOTE IS THE ONLY WEAPON LEFT FOR THEM
AFTER NEARLY TWENTY YEARS CONGRESS HAS COMMITED AN OTHER BIG BLUNDER IN EELAM ISSUE BY COLLUDING WITH SRILANKAN GOVT AND ASSISTING IN SRILANKAN ARMYS ATROCIOUS CRIMES
CONGRESS SHOULD BE DEFEATED IN PLACES NOT JUST DEFEATED BUT DEFEATED BADLY IT MAY BE NICE IF THEY LOSE DEPOSITS IN SOME PLACES
TRUE IT MIGHT BENEFIT JAYALALITHA
SHE HAS LOT OF FAULTS BUT SHE IS STRAIGHT FORWARD AND BOLD SHE IS NOT CUNNING LIKE OLD FOX MR KARUNANITHY
IT IS NO POINT IN USING FORTY NINE O OR VOTING VIJAYAKANTH IT MIGHT SPLIT THE VOTES AND BENEFIT CONGRESS
TAMIL NADU PEOPLE SHOW YOUR SOLIDARITY WITH EELAM TAMILS AT THE BALLOT BOX BY DEFEATING CONGRESS AND ITS PARTNER DMK
_VANATHY
SORRY THERE IS SOMETHING WRONG WITH THE TYPING I AM UNABLE TO ACCESS TAMIL FONT

4/26/2009 5:22 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

தொடர்புடைய என் இடுகை:

http://balaji_ammu.blogspot.com/2009/04/541.html

4/26/2009 5:28 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

இடுகைத் தலைப்பில் பிழை உள்ளது, திருத்தவும்.

கூடணி = கூட்டணி !

4/26/2009 5:30 PM  
Blogger Pot"tea" kadai said...

//Half-baked and emotional post.//

Ofcourse it had to be!

So, when do you get cooked and emotional?

4/26/2009 5:58 PM  
Blogger முத்துகுமரன் said...

மிக மோசமான இனப்படுகொலையை இலங்கை அரசோடு சேர்த்து நடத்தி வரும் காங்கிரசும், சிங்கள அரசின் புதுத் தோழர் கருணாநிதியையும் இந்தத் தேர்தலில் துடைத்தெறிவதே முழு முதல் கடமை. துரோகத்திற்கான பரிசை அவர்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும்.

தேர்தல் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஜெயலலிதா தனி ஈழத்திற்கு ஆதரவாக முழங்கியிருப்பது வரவேற்கபட வேண்டியது. அவரின் பேச்சு அங்கு நிலவும் பேரவலத்தை ஊடக, இறையாண்மை கட்டுகளை உடைத்து மக்களிடம் கொண்டு செல்ல பெரும் உதவியாக இருக்கும். தமிழகத்தின் மிகப்பெரிய இரு கட்சிகளில் ஒன்றான அதிமுக தனி ஈழம் நிலைப்பாட்டை எடுத்திருப்பதை முக்கியமான திருப்புமுனையாகவே கருத வேண்டும்(உண்மையான எண்ணமாகவே கருதி). அந்த நிலைப்பாட்டிற்குள்ளேயே அவரை நிற்க வைக்க நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்.

காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

4/26/2009 5:58 PM  
Blogger ROSAVASANTH said...

பாலா நன்றி, திருத்திவிட்டேன்.

4/26/2009 6:00 PM  
Blogger ஜோ/Joe said...

//LLDASU: காங்கிரசு நிற்கும் 16 தொகுதிகளில் அவர்களை தோற்கடித்துவிட்டு , மற்ற தொகுதிகளில் திமுக மற்றும் வி.சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கவேண்டும் . இந்த தேர்தல் வாக்குகள் , தமிழினப்படுகொலைகளுக்கு எதிரானது என அழுத்தி புரியவைக்கமுடியும் . அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் , ஜெ என்பவரது 'கூட்டணி உத்தி' என்ற அளவில் பார்க்கப்படும் ஆபத்தும் இருக்கிறது//

இப்போதைக்கு இதுவே என் கருத்தும் .

4/26/2009 6:01 PM  
Blogger கொழுவி said...

தனித் தமிழீழக் கோரிக்கை கூட இந்திய புடுக்கறுந்த இறையாண்மைக்கு எதிரானதாம் //

அதுவேறயா..

ஏனுங்க.. நானொரு ஈழத்தை சேர்ந்தவன். இப்போ கக்கூசுக்கு போகணும். அது இந்திய இறையாண்மையை பாதிக்கிறதா என விசாரித்து சொல்ல முடியுமா..

4/26/2009 6:08 PM  
Blogger அ.பிரபாகரன் said...

எனக்கு தோன்றுவதெல்லாம், தேர்தல் முடியும் வரையுமாவது ஜெயலலிதா தமிழீழம் வேண்டும் என்று பேசினால்கூட போதும். இந்த தேர்தல் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையிலான தேர்தல் என்ற நிலையில் இருந்து தாண்டி, தமிழீழத்திற்கு ஆதரவு X எதிர்ப்பு என்ற நிலைக்கு போகவேண்டும். மக்கள் யார் பக்கம் என்று பார்ப்போம்.

4/26/2009 6:31 PM  
Blogger மணி said...

ஜெயல்லிதா இப்போதும் ஈழத்திற்கு எதிரானவர்தான். 23 சீட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பேசும் பேச்சை ஒரு விசயமாக எடுத்துப் பேசுவதும் அந்த அம்மாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பெரியார் சிந்னைவாதிகளுக்கும் அவமானமாகப் படவில்லையா..

ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 13 அன்று தமிழனுக்குப் பிறந்தவன் எவனும் அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பவன் எவனும் வாக்குச்சாவடிக்கு போக்க் கூடாது... இதனை மற்றவனுக்கும் சொல்ல வேண்டும்...

இதைச் செய்யாதவன் ஏழேழு ஜென்மத்திற்கும் பாசிஸ்டுகளின் பாதந்தாங்கும் பேடிகளாகவே இருப்பர்


மற்றபடி காங் வந்தாலும் பிஜேபி வந்தாலும் இந்தியாவின் முதலாளிகளுக்கு நல்லது என்றால் மாத்திரம்தான் ஈழம் வருவதைக் கூட ஆதரிப்பார்கள்... மற்றபடி மூன்று லட்சம் என்ன முன்னூறு லட்சம் செத்தால் கூட அது அவர்களுக்உ ஒரு பொருட்டல்ல•..

பசி ஓ அல்லது தங்கபாலுவோ தோற்றால் நமக்கு சந்தோசம்தான்... ஆனால் இதுவே ஈழத்தைப் பெற்றுத் தந்து விடாதே... உணர்ச்சிவசப்பட்டு பிஜேபி ஐ ஓ அல்லது அதிமுக மதிமுக பாமக சிபிஎம் சிபிஐ செட்களை தேர்ந்தெடுத்து விடாதீர்கள்... மே 13 அன்று 0% ஒட்டுதான் பதிவு தமிழகத்தில் எனக் காட்டுங்கள்.... உலகம் மீடியா திரும்பிப் பார்க்கும்... இதுதான ஃநமக்கு ஜனநாயகத்தை கற்றும் தரும்

4/26/2009 7:29 PM  
Blogger வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

தமிழ்நாட்டு தமிழர்களே!
கடந்த 30 வருடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள்: கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, பன்னீர்செல்வம். இவர்கள் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக செயல்பட்டதாகத் தெரியவில்லை.விஜயகாந்த் இப்பொழுதே உருப்படாதவர் போல் தெரிகிறார். ஈழமக்களை கொடுமைப்படுத்தியதால், காங்கிரஸ் இன்னும் நூறாண்டுக்கு ஆட்சிக்கு வராது. நீங்கள் இந்த தேர்தலைப்போல் எப்போதும் இவ்வளவு குழப்பத்துக்கு
உட்படவில்லை. கர்நாடக தமிழர்கள் உங்களுக்காக வருந்துகிறோம்.

4/26/2009 8:24 PM  
Blogger ராஜ நடராஜன் said...

தமிழர்களின் நினைவு மறதி பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொண்டே ஜெயலலிதா தனி ஈழ ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார்.

கலைஞரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

49ஓ மக்களிடையே பிரபலமாகவில்லை.

இருதலைக் கொள்ளி எறும்பு நிலைதான் தமிழனுக்கு.

ஜெயலலிதா கழுத்தறுப்பார் என்ற நம்பிக்கை இப்போதே இருக்கிறது.

தி.மு.க,காங்கிரஸ் நினைத்தாலே பத்திகிட்டு வருகிறது.

ஓட்டுப் போடாமல் வீட்ல உட்கார்ந்துகிட்டாலும் கள்ள ஓட்டு விழுந்துடும்.

ஐயோ!தமிழகமே.

4/26/2009 8:54 PM  
Blogger ? said...

கள்ள ஒட்டு போடுவாங்க ங்குறது உண்மைதான்...

அதுனாலதான் சொல்றன்.. வீட்ல இருக்காதீங்க•.. தெருத் தெருவா பொறந்த்துல இருந்து பாத்து பழகுன அத்தன பேருட்டயும் ஓட்டுப் போட்டா தீராது பிரச்சனைன்னும், புறக்கணிக்கணும்னு பேசுங்க•.. கரை வேட்டி கட்ட கட்சிக்காரன் கூட பயப்படுற அளவுக்கு உழைக்கணும்... இந்த தியாகமெல்லாம் செய்ய மாட்டோம்னு கரவேட்டிகளுக்கு தெரியும்... அதான் பன்னி மாதிரி தின்னுட்டு திரியுறானுக•.. சாணியக் கரச்சு வைங்க ..

எலக்சன் அன்னிக்கு முதல்ல ஓட்டுப் போடப் போறவனுக்கு பத்து பேருக்கு சாணிக்கரைசல் ஊற்றப்படும்னு இப்பவே தட்டி எழுதி முச்சந்தில வைங்க•.. கட்டாயம் இதுக்கு ஒரு அமைப்பு இருக்கணிம்னு அவசியம் அல்ல• எவன் எவனுக்கு ஈழ மக்கள பாத்த இரக்கம் வருதோ அவன் எல்லாம் தன் பேரு போன் நம்பர் போட்டு
பகுதிக்கு நூறுபேராவது கூடிப் பேசி தட்டி போர்டு எழுதி வைங்க•..

எவன் ஓட்டுப் போடுறானு பாத்துறலாம்... ஆனா இதெல்லாம் நடக்காது... ஆமா நமக்கு ஈழத்துல நடக்குறது சினிமா வோட சோக்க் காட்சி மாதிரி வில்லி ஜெயா அல்லாங்காட்டி வில்லன் கருணா ன்னு நமக்கு ரசிக்கது க்கு ஒரு ரேப் சீன் தேவப்படுது... ஆனா வில்லிய பத்திரமா வச்சுட்டு சாதாரண ஈழத்த ரேப் பண்ண எல்லாரும் கைதட்டி சினிமா முடிஞ்சு... சே கேவலமா இருக்கு மானங்கெட்ட நெலமல நம்மள நெனச்சா

4/26/2009 9:28 PM  
Blogger Raj Chandra said...

வசந்த், பிரகாஷ், நன்றி.

ஜெ-வின் சேலம் பேச்சிற்க்கு முன்னால் பின்னூட்டமிட்டேன். என்றாலும் அதே முடிவுதான். ஜெ இப்போது அணிந்திருக்கும் முகமூடி ஈழம். அதை கருணாநிதியே அவருக்கு அணிவித்ததுதான் சோகம்.

சக பின்னூட்டர் சொன்னது போல, தி.மு.க. அணி, அ.தி.மு.க தவிர்த்து பா.ம.க, மற்றும் வைகோ கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் கொஞ்சமாவது உருப்படியாக இருக்கும்.

At the least this will give Vaiko and Ramadoss an impetus to start fighting for this cause and forming an alternate group. TamilNadu is so sick of DMK and ADMK.

இதைப் எழுதிக் கொண்டிருக்கும்போது விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த
அறிக்கை.

நன்றி.

4/26/2009 11:08 PM  
Blogger தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நாளைக்கப்புறம்,

நன்றி...

4/26/2009 11:51 PM  
Blogger பதி said...

கொலைகார காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கபட வேண்டிய ஒன்று.

//கருணாநிதி இப்போது செய்துவரும் மோசடிகளைவிட இன்னும் மோசடியாக எதுவும் நடக்க, இன்னும் அவலமான நிலைக்கு ஈழப்பிரச்சனையை கொண்டு செல்ல யதார்தத்தில் வாய்ப்பிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. திமுக தோற்காமல் போவது இந்த மோசடிகளுக்கான மக்களின் அங்கீகாரமாக இருக்கும். திமுக தோற்றால் அதை மக்கள் திமுகவிற்கு அளித்த தண்டனையாக பார்க்க இயலுமே ஒழிய ஜேக்கான அங்கீகாரமாக பார்க்க இயலாது. வெற்றி பெற்றால் ஜே என்ன செய்வார் என்பது பற்றி எதுவும் கூற முடியாது.//

வேறு ஒரு பக்கத்திலிட்ட பின்னூட்டத்தையே இங்கும் இடுகின்றேன்..

ஜெ வை நம்ப வேண்டிய தேவையெல்லாம் ஒன்றும் இல்லை....

ஏனெனில், யார் மத்தியில் வென்றாலும் இப்பொழுது இருக்கும் நிலையை விட பாதிக்கப்பட்ட மக்கள் மோசமான நிலைக்கு போக முடியாது..

அதே சமயம், கொலைகார காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது அவர்கள் இப்பொழுது ஈழத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனத்திற்குத் தான்...

ஆகையால், இன்றைய தேவை

தமிழ் ஆதரவு கட்சிகள் வெல்லவேண்டும் என்பதற்கும் முன்னால் கொலைகார காங்கிரசும் அதன் கூட்டணி யோக்கியஸ்தர்களும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது தான் முதல் தேவை.

அவ்வளவே !!!!!!!

அதைவிடுத்து, கலைஞர் ஆட்சி இருக்கிற காரணத்தால்தான் ஈழத்தமிழர் படும் அவதிபற்றி பொதுக்கூட்டம் போட்டுப் பேச முடிகிறது - பேரணி நடத்த முடிகிறது - போராட்டம் நடத்த முடிகிறது - பேட்டி கொடுக்க முடிகிறது. ஏடுகளிலும் வெளியிட முடிகிறது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புண்டா? எனப் பேசித் திரியும் அல்லக்கைகளுக்கு சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில், அடைக்கப்பட்டது தெரியவில்லை போலும்...

4/27/2009 12:44 AM  
Blogger பதி said...

//கொழுவி said...

ஏனுங்க.. நானொரு ஈழத்தை சேர்ந்தவன். இப்போ கக்கூசுக்கு போகணும். அது இந்திய இறையாண்மையை பாதிக்கிறதா என விசாரித்து சொல்ல முடியுமா..//

இப்படி பொதுவிவாதத்தில் கேட்டால் உடனே கொலைஞர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டு விடுவார்... :)

4/27/2009 12:49 AM  
Blogger ROSAVASANTH said...

கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.

இந்த பதிவிற்கு என்று அல்லாது ஜெ-ஆதரவு பார்வைக்கு எதிராக- ஶ்ரீரங்கன், மற்றும் வாய்ஸ் ஆன் விங்ஸின் பதிவுகளை பார்த்தேன். ஶ்ரீரங்கனை பொறுத்த வரையில் அவர் பன்றி தொழுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்தலில் நம்பிக்கையற்றவர்; ஓட்டு போடாமல் வேறு ஏதோ காரியத்திற்கு (̀புரட்சி' என்று நினைக்கிறேன்) அழைப்பு விடுக்கிறார். எனது பதிவு தேர்தல் முடிவில் அக்கறை உள்ளவர்களை முன்வைத்தது என்பதால் அவரின் சட்டகத்தினுள் வராது, அவர் எழுதியதுடன் தொடர்பு இல்லாதது. வாய்ஸ் முன்வைத்த வாதம் எதையும் நான் மறுக்கவோ, கணக்கில் கொள்ளாமலோ இல்லை என்பதை இந்த பதிவின் எளிய வாசிப்பு புரியவைக்கும். ஜெயை ஆதரிப்பதன், ஜெ வெற்றி பெறுவதன் மூலமாக புதிய ஆபத்து எதுவும் வரப்போவதாக அவர் குறிப்பிட்டதாக தெரியவில்லை என்பதால் எனக்கு மேலே சொல்ல எதுவும் இல்லை.

இந்த் சின்ன பதிவு ஈழப்பிரச்சனை தொடர்பான என் கருத்துக்கள் எதையும் கொண்டது அல்ல; ஈழப்பிரச்சனை குறித்து ஒரு 10 முறையாவது எழுதத் துவங்கி தொடர இயலவில்லை. நான் எழுதி அது எந்த விளைவையும் இந்த தருணத்தில் ஏற்படுத்தப் போவதும் இல்லை. எழுதாதால் பாதகமாகப் போவதும் இல்லை. இப்போதைக்கு இந்த மரணவலியை பகிர்ந்து கொள்ள முடியாமல் தனியே மனத்ில் அனுபவிப்பதை தவிர செய்ய வேறு எதுவும் இல்லை.

ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்ற என் கருத்தை சொன்ன போது என் நண்பர்கள் சிலருக்கு அது விழுங்கவியலாததாக இருந்தது. அதன் காரணமாக இதை பதிவது முக்கியம் என்று தோன்றியதால் இந்த பதிவு. சில மனத்தடைகளை இது விலக்கியிருப்பதை அறிய முடிகிறது. அதை மட்டுமே நான் நோக்கமாக கொண்டது. நன்றி!

4/27/2009 2:39 AM  
Blogger sugan said...

இனிய வசந்த்!
எம்.ஜி.ஆர் தேர்தலில் வாக்குச்சேகரிக்க-பிரச்சாரம் செய்ய மக்களிடம் செல்லும்போது அந்த மக்கள் கூறினார்களாம்:
தலைவரே! எங்கள் வோட்டு எல்லாம் உங்களுக்குத்தான்,ஆனா நீங்க நம்பியார் கிட்ட அவதானமா நடந்துக்கோ! என்று.
பாவம் தமிழக மக்கள்.
நீங்கள் தேர்தல் என்று சொல்லும்போது இலங்கையில் தமிழ்பிரதேசத்தில் சுதந்திரமான தேர்தல் நடந்து 30 வருடமாகிறது.
உங்களுக்கென்ன!
இலங்கைப்பிரச்சனை தேர்தலுக்கான எப்பிஸ்.

ஜெயா வந்தால் தற்காலிக ஆறுதல்,ஆசுவாசம் உங்களூக்குக்கிடைக்கலாம்.

சுகன்

4/27/2009 3:07 AM  
Blogger sugan said...

அதிமுக தமிழீழத்தை ஏற்படுத்தியே தீரும் என அறிவித்திருப்பது எவ்வளவு திமிர்த்தனமானது.

4/27/2009 3:17 AM  
Blogger ROSAVASANTH said...

அன்பின் சுகன் நலம்தானே! பின்னூட்டத்திற்கு நன்றி! எப்பிஸ் என்றால் என்ன?

4/27/2009 3:20 AM  
Blogger ROSAVASANTH said...

//அதிமுக தமிழீழத்தை ஏற்படுத்தியே தீரும் என அறிவித்திருப்பது எவ்வளவு திமிர்த்தனமானது.//

நீங்கள் சொல்வது சரிதான்! ஏற்படுத்த உதவுவோம் என்று பணிவாக சொல்லியிருக்க வேண்டும்.

4/27/2009 3:25 AM  
Blogger sugan said...

எப்பிஸ் எனில் சமையலிற்கான வாசனைத்திரவியங்கள் இன்னபிற!
தமிழக காரியவாத அரசியல்தலைவர்களை விடுவோம்.
பணிவாகவோ திமிர்த்தனமாவோ நீங்கள் இதில் மூக்கை நுளைக்கும்போது
இங்கு ஏற்படும் சிக்கல்களை உங்களால் புரிந்துகொள்ளவும்முடியாது.
தேர்தல் உங்களுக்கு ஒரு கொண்டாட்டம்.

4/27/2009 3:49 AM  
Blogger ROSAVASANTH said...

பதிலுக்கு நன்றி சுகன்!

4/27/2009 4:16 AM  
Blogger sugan said...

தாகம், பசிக்களை, கிழிந்த அழுக்கான ஆடைகளுடன் எலும்புக் கூடுகளாக காணப்படும் இடம்பெயர்ந்தவர்கள்

பயங்கரமான திரைப்படத்தை பார்ப்பது போன்றது; நிவாரணப் பணியாளர் தெரிவிப்பு

மோதல் பகுதிகளிலிருந்து தமிழ் பெண்களும் பிள்ளைகளும் வெளியேறி கஷ்டப்பட்டு நடந்து வருவதைப் பார்த்தபோது பயங்கரமான திகிலூட்டும் திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டதாக நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அவர்களில் சிலர் மெலிந்து காணப்பட்டதுடன் எலும்புகள் வெளியே தெரிந்ததாகவும் இரத்தம் தோய்ந்த நிலையில் அழுக்கான கிழிந்த உடைகளுடன் காணப்பட்டதாகவும் ஐ.ஏ.என்.எஸ். செய்தி சேவை தெரிவித்தது.

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் பல வாரங்கள் தோய்க்கப்படாமல் இருந்தது. பலரின் காயங்களுக்கு மருந்து கட்டப்பட்டிருக்கவில்லை பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். நிற்கமுடியாமல் பலர் காணப்பட்டனர் தமக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் வெற்றுத்தரையில் அமர்ந்தனர்.

ஒருசிலரே கதைக்க விரும்பினர் பலர் பலவீனமாக இருந்ததால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. தண்ணீர் குடிப்பதே ஒரே விருப்பமாக இருந்தது.

நீண்ட காலமாக அவர்களுக்கு ஒழுங்கான சாப்பாடு கிடைத்திருக்கவில்லை அவர்கள் கண்கள் உணவுக்காக மன்றாடின.

கடந்த ஜனவரி முதல் மோதலுக்கு இடையில் சிக்கி இவர்கள் அல்லல் பட்டவர்கள். ஷெல், மோட்டார் மழைகளுக்கு மத்தியில் சிதறியோடியவர்கள் இவர்கள்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் கதைத்தவர்கள், அவர்கள் கூறியதை தெரிவித்துள்ளனர். பலர் இலையான்கள் போல இறந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

தம்மை இனங்காட்ட வேண்டாமென்ற நிபந்தனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திசேவை குறிப்பிட்டதாக ?இந்துஸ்தான் டைம்ஸ்? தெரிவித்தது.

புலிகளும் மக்கள் மத்தியிலிருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மக்கள் வெடித்து சிதறியதையும் கை, கால்களை இழந்ததையும் கண்டதாக உயிர்தப்பிய ஒருவர் தான் நேரில் கண்ட பயங்கரமான காட்சியை விபரித்திருக்கிறார். குடும்பங்கள் பிரிந்து சின்னாபின்னமாகிவிட்டன.

புலிகளின் பகுதிகளிலிருந்த இரு வைத்தியசாலைகளில் உயிர்காக்க மருந்துகள் இல்லை தப்பியோட முயன்றபோது புலிகளால் சுடப்பட்டவர்களும் காயமடைந்தவர்களில் உள்ளடங்கியிருந்தனர்.

உணவு விநியோகம் இல்லை. கிடைக்கும் சிறிதளவு உணவும் தடை செய்யப்பட்டதாகவே இருந்தது உயிரைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனையுடன் பதுங்கு குழிகளுக்குள் அவர்கள் இருந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தமது உடைகளை கிழித்தே கட்டுப் போட்டுள்ளனர் இரத்தம் ஓடுவது கட்டுப்படாத போது மண்ணை எடுத்து அப்பிவிட்டு துணியால் சுற்றிக்கட்டியுள்ளனர். காயங்கள் சிதழ் பிடித்துள்ளன. மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டபோது சிலர் இறந்து விட்டனர்.

2009 இன் பின்னர் எத்தனை பொதுமக்கள் இறந்துள்ளனர் என்பது ஒருவருக்கும் தெரியாத நிலை காணப்படுவதாக தோன்றுகிறது.

சில ஆயிரங்கள் என்று கொழும்பு தெரிவித்துள்ளது. இராஜதந்திரிகள் அதிக புள்ளி விபரங்களை கூறுகின்றனர்.

ஆஸ்பத்திரியில் கட்டிலொன்றில் தமிழ் பெண் ஒருவர் கட்டப்பட்டிருந்தார். மேலாடையின்றி வார்ட்டில் ஓடித்திரிந்ததால் கட்டிவைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மனிதாபிமான நெருக்கடியை அடுத்து சர்வதேசத்தின் உதவிநாடப்பட்டுள்ளது.

வவுனியாவில் 70 ஆயிரம் பேர் வரைபாடசாலைகள். முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரிகளில் உணவு வழங்க முடியாமல் இருப்பதால் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் உதவியளிக்க முன்வந்துள்ளன. வவுனியாவில் போத்தல் நீர், பிஸ்கட், குளுக்கோஸ் பற்றாக்குறையாக உள்ளது ஆயிரக்கணக்கானோர் தற்போதும் ஓமந்தையில் உள்ளனர் ஒரு ஆயிரம் பேரை உள்ளீர்க்க தயாரென மன்னார் மாவட்ட அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஆனால் மன்னாருக்கு சென்றால் தமிழர்கள் படகுகளில் இந்தியாவுக்கு சென்றுவிடுவார்களொன சில அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

4/27/2009 4:37 AM  
Blogger சுந்தரவடிவேல் said...

If everyone watches the following video in full, they will understand that defeating Congress-DMK alliance is the least one can do for the Eelam Tamils.

http://www.tamilsforobama.com/Final_War.html

Thank you Rosa.

4/27/2009 7:48 AM  
Blogger லக்கிலுக் said...

//Half-baked and emotional post.//

கண்ணை மூடிக்கொண்டு வழிமொழிகிறேன்!

4/27/2009 8:51 PM  
Blogger K.R.அதியமான் said...

some important links related to Eelam issue :

Sri Lankan crisis: how India can help find a way out
http://www.hindu.com/2009/04/27/stories/2009042755500900.htm

Lost opportunities for the Tamils
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363

http://www.youtube.com/watch?v=-yWUA-_xjzk
NO FIRE ZONE VIEDEO : (SL AIRFORCE DRONE CLPG)
Srilankan Civilians held hostage by LTTE

4/27/2009 8:59 PM  
Blogger K.R.அதியமான் said...

ஒரு மறத்தமிழச்சியின் பேட்டி :
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8013016.stm
'I thought, I won't survive'

4/27/2009 9:06 PM  
Blogger ROSAVASANTH said...

லக்கி, நான் பொதுவாக கண்ணையும் காதையும் திறந்து வைத்திருப்பவர்களுடன்தான் பேசுவதுவழக்கம்.

அதியமான், என் பதிவில் (மற்றவர்களை ஆபாசமாய் திட்டிவரும் மற்றும் போலி பின்னூட்டங்கள் தவிர்த்து) எதையும் நிராகரிப்பதில்லை. அதனால் உங்களிடம் வேண்டுகோள் மட்டும்.

தயவு செய்து இணையத்தில் எதையாவது பார்த்து இங்கே இணைப்பு தராதீர்கள்; என் பதிவில் பின்னூட்டம் எழுதாதீர்கள்; முடிந்தால் இந்த பக்கமே வராதீர்கள். மேலும் எந்த மின்னஞ்சலும் எனக்கு அனுப்பாதீர்கள். இது என் தனிப்பட்ட உணர்வு சார்ந்த வேண்டுகோள். உங்களுக்கு எழுத என்று பல இடங்கள் இருக்கிறது. நான் உங்களிடன் தனிமடலில் கேட்டு கொண்ட பிறகும் ஏன் அநாகரிகமாய் இங்கே பின்னூட்டம் இடும் வேலையில் ஈடுபடுகிறீர்கள்?! என் உணர்வை மதித்து, என் பதிவில் வருவதை வாசிக்காமல் என்னால் இருக்க முடியாது என்ற கட்டயத்தை புரிந்து கொண்டு, பரஸ்பர நாகரீகம் கருதி இங்கே எதையும் எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மீறி எழுதினால் நான் தடைசெய்ய மாட்டேன். இது ஒரு (தீவிரமான) வேண்டுகோள் மட்டும்.

4/27/2009 9:14 PM  
Blogger K.R.அதியமான் said...

//என் பதிவில் பின்னூட்டம் எழுதாதீர்கள்; முடிந்தால் இந்த பக்கமே வராதீர்கள். //

you mean even comments relevant to this post ?

Why Roasa ? do you mean you don;t want to continue our contacts or freindship (sketchy, if that one) ?

if so, pls say openly.

4/27/2009 9:17 PM  
Blogger K.R.அதியமான் said...

//நான் உங்களிடன் தனிமடலில் கேட்டு கொண்ட பிறகும் ஏன் அநாகரிகமாய் இங்கே பின்னூட்டம் இடும் வேலையில் ஈடுபடுகிறீர்கள்?! என் //

what annaahareeham ?

this post is related to Eelam issue and TN politics and hence my links about the past history of SL issues.

what do think about me ?
a chauvinsit and a indecent fellow with no other work. sorry for including you in my mailing list. (which was a very large one) and i sent all my posts of my blog for those whom i considered as my freinds and collegues in this internet world.
but i will delete you id from my list hereafter.

Adieu

4/27/2009 9:20 PM  
Blogger ROSAVASANTH said...

See, it is not my intention to hurt you. I don't think you will understand the mental torture many people like me are going through. Usually I would like to engage every one in a dialogue, but at this stage, in this eelam issue, it is not possible. SO please respect my feelings, even if you don't understand it. Yes, also please remove me from your mailing list. thanks!

(By the way this post is not on Eelam issue, I have not written any of my opinions yet).

4/27/2009 9:26 PM  
Blogger வெண்காட்டான் said...

DMK.congress made tamils fool. so 1st to make them out of politics. ahtavi vida eaan veeen vaatham. Few days b4 one indian officer in SL(so u must all know who he is) said LTTE needs a change. then only we will accept Tamileelam. So he want Praba out of LTTE. this is waht RAW wants for years. Then we will solve your problme.I said ahve u solved fisherman porblem. ok. leave it it comes under eelam prolem. Have u solved kaveri and other 3 water problems. u ahvent solve taht for your own tamils? how u will solve our problem? I trained LTTE in india, where was Sri Lanka's Iraiyanmai at that time? how sri lanka got irayanmai now? I said u wont solve the problem ever.

4/28/2009 2:27 AM  
Blogger வாசகன் said...

கருணாநிதியைத் தோற்கடிக்கத்தான் வேண்டும். ஆனால், ஜெயாவை வெற்றிபெறவைக்கவேண்டுமாயிருக்குமே என்ற குழப்பம் இருக்கிறது.


மூன்றாவது அணியாக,
திருமா, மதிமுக, பாமக என்று தமிழ் நியாய உணர்வுள்ளவர்களின் நல்ல ஒரு களம் அமைவதற்கான வாய்ப்பைக் கெடுத்த வாரிசு அரசியலை, சுயநலனை நினைத்து வெட்குகிறேன்.

4/28/2009 4:42 AM  
Blogger K.R.அதியமான் said...

நண்பர் வசந்த,

////By the way this post is not on Eelam issue, I have not written any of my opinions yet).
////

பின் எதற்காக காங்கிரஸ் / தி.மு.காவை தோற்கடிக்கவேண்டும் ?

மத்தியில் எந்த கட்சி / கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், இந்தியா,
இலங்கை அரசிற்க்கு மறைமுகமாக, ரகசியமாக ராணுவ உதவிகளை
செய்யும் தான். அது geo politcal strategy என்று ஒரு இழவு.

காஸ்மீர் / இல‌ங்கை போன்ற‌ விசிய‌ங்க‌ளில் இந்தியாவின் நிலைபாடு, ஏந்த‌ கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஒரே மாதுரிதான் இருக்கும். அமெரிக்கா போல் ஆட்சி மாறினால் dramaticஆன‌ மாற்ற‌ங்க‌ல் வெளியுற‌வு கொள்கைக‌ளில் வ‌ராது. இது நித‌ர்ச‌ன‌ம். ஆக‌வே க‌ங்கிர‌ஸ் /
பி.ஜெ.பி எல்லாம் இதில் ஒரே நிலைதான்.

ஆனால் 80கள் இறுதி வரை இந்தியா ஈழப்போராளிகளை ஆதரித்து,
பல பயிற்சி முகாம்களை இங்கு அனுமதித்து, ஊக்குவித்தது.
உதவியது. அத்தனையையும் புலிகள் கெடுத்துக்கொண்டார்கள்.
(எம் குடும்ப‌மும் ப‌ல‌ உத‌விக‌ளை புரிந்த‌ன‌ர். முகாம் ந‌ட‌த்த‌
உத‌வின‌ர். ப‌ல‌ரையும் ச‌ந்தித்துள்ளேன். 1983 முத‌ல் ஈழ‌ப் பிர‌ச்ச‌னைக‌ளை அவ‌தானித்துக்கொண்டுதான் உள்ளேன். கொடூரம் கண்ட உங்க‌ள் உண‌ர்வுக‌ள், எம‌க்கும் உள்ள‌ன.)

Sri Lankan crisis: how India can help find a way out
http://www.hindu.com/2009/04/27/stories/2009042755500900.htm

சில‌ சுட்டிக‌ளை இங்கு அளித்த‌து, ப‌ல‌ரும் அதை அறிந்து கொள்ள‌த்தான்.
அவை இணைய‌த்தில் மேய்ந்தால் கிடைத்த‌ல்ல‌. மிக‌ முக்கிய‌ சுட்டிக‌ள்
என்று அனுமானித்தால்தான் இங்கு த‌ந்தேன்.

அந்த‌ யூடுயூப் விடீயோ ப‌ற்றிய‌ எதிர்வினைக‌ளுக்கு நான் எழுதிய‌
ம‌றுமொழி இது :

///ராஜபக்சேவின் அரசும், சிங்கள் ராணுவமும் கொலை வெறியர்கள். ஈவிரக்கமில்லாமல் அப்பவிகள் மீதும் குண்டு வீசித்தயங்காதவர்கள். இதில் மாற்று கருத்து இல்லை. அவ‌ர்க‌ள் "எதிரிக‌ள் " ; அவ‌ர்க‌ளின் இய‌ல்புக‌ள் அப்ப‌டித்தான்.அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்ப்ப்ர்க முடியாது. ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌வே அவ‌ர்க‌ளின் ந‌ட‌வ‌ட‌க்கிகைக‌ள் அதைதான் உறுதி செய்கின்ற‌ன‌.
ப‌ல‌ ஆயிர‌ம் ப‌திவுக‌ள், சுட்டுக‌ள் அதை ப‌ற்றி உள்ள‌ன‌.

ஆனால் இந்த‌ இழை அதை ப‌ற்றி அல்ல‌. எதிரிக‌ளிட‌ம் இருந்து த‌மிழ‌ர்க‌ளை காப்பாற்றுவ‌தாக‌ கூறிக்கொள்ளும் புலிக‌ள், அப்பாவி ம‌க்க‌ளை த‌ங்க‌ள் ப‌குதியில் இருந்து வெளியேர அனும‌திக்காம‌ல் த‌டுப்ப‌து ப‌ற்றி தான். சுமார் 1.1 ல்ச்ச‌ம் ம‌க்க‌ள் க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌ட்டும் வெளியேறி உள்ள‌ன‌ர். ஏனைய‌ ம‌க்க‌ளுக்கு அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைக்க‌வில்லை.த‌டுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.
அவ‌ர்க‌ளின் விருப்ப‌ம் தான் இங்கு முக்கிய‌ம். அதை ப‌ற்றித்தான் எம் இழை.

1.1 ல‌ச்ச‌ம் ம‌க‌க்ள் வேறு, மீது உள்ள‌ ஆயிர‌க்க‌ணக்கானோர் வேறு அல்ல‌.
அவ‌ர்க‌ளும் வெளியேற‌த்தான் முய‌ல்வ‌ர். போரின் கொடுமையில் இருந்து த‌ப்பிக்க‌ ம‌னித‌ர் முய‌ல‌வே செய்வ‌ர். அவ‌ர்க‌ளை த‌டுப்ப‌து, சிங்க‌ள‌ர்க‌ளின் கொடூர‌ங்க‌ளை விட‌ மிக‌ மிக‌ மிக‌ மிக‌ கொடுமையான‌ வ‌ன் செய‌ல்.

பி.பி.சி ம‌ற்றும் அல் ஜ‌சீரா பேட்டிக‌ள் : அவ‌ர்க‌ள் பொய் சொல்ல‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. போரின் இறுதி க‌ட்ட‌த்தில் இதெல்லாம் தேவையும் இல்லை. மொத்த‌ உல‌க‌ நாடுக‌ள் சொல்வ‌தை சிங்க‌ள‌ அர‌சு கேட்க்க‌போவ‌தில்லை.

இதை பொய் என்று இன்று நீங்க‌ள் க‌ருத‌லாம். ஆனால் கால‌ம் உண்மைக‌ளை உணர்த்தும்.

க‌ருணாதியின் சுய‌ரூப‌ம் ச‌மீப‌ கால‌த்தில் தானே உங்க‌ளில் ப‌ல‌ருக்கும்
புரிந்த‌து. அதே போல‌த்தால் புலிக‌ளின் சுய‌ரூப‌ம் வ‌ரும் கால‌ங்க‌ளில் தெளிவாகும். ல‌ச்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாக்குமுல்ம் தெளிவு ப‌டுத்தும்.

அதுவ‌ரை எம்மை பைத்திய‌ம், துரோகி, சிங்க‌ள் ஆத‌ர‌வாள‌ன், என்றுதான் நினைப்பீர்க‌ள். ப‌ர‌வாயில்லை. உண்மை வெல்லும் / வெல்லட்டும்.////

4/28/2009 1:08 PM  
Blogger நியோ / neo said...

உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html

5/06/2009 4:15 AM  
Blogger நியோ / neo said...

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html

5/06/2009 4:39 AM  
Blogger யுவகிருஷ்ணா said...

அன்பின் ரோசா!

இந்தப் பதிவு மற்றும் இதைத் தொடர்ந்து வந்தப் பின்னூட்டங்களைப் பற்றிய தங்களது இப்பொதைய எண்ணங்கள் என்னவென்று அறிய விரும்புகிறேன்.

அன்புடன்
லக்கி

8/13/2009 7:12 PM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள லக்கி,

இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் இரண்டரை வருட விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் எழுத துவங்கும் திட்டத்தில் இருக்கிறேன். குறிப்பாக ஈழப்பிரச்சனை தொடர்பாக எழுதத் தேவை இருப்பதாக நினைக்கும் விஷயங்களை, அது தொடர்பான எனது கருத்துக்களை, அவசரம் காட்டாமல் நிதானமாக எழுத இருக்கிறேன். சிலவற்றை வாசித்து கொண்டிருக்கிறேன். அப்போது இது தொடர்பான எனது கருத்துக்களையும் எழுதுவேன். உங்கள் விசாரிப்பிற்கு மிகவும் நன்றி!

8/14/2009 1:19 AM  
Blogger Raj Chandra said...

>>இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் இரண்டரை வருட விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் எழுத துவங்கும் திட்டத்தில் இருக்கிறேன்.

- While going through this post for nostalgic reasons (remember, I criticized you for supporting J? ) I read the above mentioned comments.

Welcome back to write again and waiting for you to start.

9/24/2009 10:29 AM  
Blogger ROSAVASANTH said...

Thanks! I am unsure where to start. Hopefully soon!

9/24/2009 11:56 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter