ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, June 23, 2006

அருந்ததிக்காக! -1.

பாஸ்டன் பாலாஜி 'china is democratic' என்று அருந்ததி ராய் சொன்னதாக தலைப்பிட்டு எழுதிய பதிவின் ஊடாக, அருந்ததி அமி குட்மேனுக்கு அளித்த பேட்டி, மற்றும் சில துணுக்கு செய்திகள், வஜ்ரா சங்கர் எழுதிய ஒரு வழக்கமான வெகுளி முகம் காட்டும் அயோக்கிய பதிவு ஆகியவற்றை பார்த்தேன். வஜ்ரா என்ன எழுதுகிறார் என்பது பற்றி எனக்கு எந்த பொருட்டும் கிடையாது. அவரை ஒரு மனிதனாகவே நான் மதிப்பதில்லை. பாஸ்டன் பாலாஜியின் (அரசியல்) கருத்துக்களையும் கூட ரொம்ப சீரியசாய் எடுத்துக் கொள்வதில்லைதான் என்றாலும், அவரை நிச்சயம் ஒரு நல்ல மனிதராய் மதிக்கிறேன்; அண்மைக் காலமாய் நல்ல நண்பராகவும் கருதுகிறேன். அந்த வகையில் அவர் எழுதியதற்கு எதிர்வினை வைக்க என் தனிப்பட்ட பார்வையிலான தகுதியை தருவதாலும், நான் மதிக்கும் இன்னொரு நண்பர் ஸ்ரீகாந்தும் ஏதோ எழுதியிருப்பதாலும், எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் மதிக்கும் அன்பு வைத்திருக்கும் தோழி அருந்ததிக்காக இந்த பதிவை எழுத வந்தேன்.


இவ்வாறாக தொடங்கி கிட்டத்தட்ட பாதி பதிவை நேற்றே எழுதிவிட்டு, என் பின்னூட்டத்திற்கு பாஸ்டன் பதில் தருவதற்காக காத்திருந்து, பதிவை ஊர வைத்திருந்தேன். பாஸ்டன் தலைப்பிட்டு, பதிவினுள்ளே 'மொழி பெயர்த்து தமிழில் மேற்கோள் காட்டியுள்ள' சீனா குறித்த வரிகளை அவர் அளித்துள்ள சுட்டிகள் எதிலும் படிக்க முடியவில்லை. குறிப்பாக பேட்டியில் படிக்கவில்லை. மிக மிக நிச்சயமாக அருந்ததியின் எந்த எழுத்துக்களிலும் அதை படிக்க முடியாது. அப்படி எதையுமே அவர் எழுதியதில்லை என்பதை, அந்த வரிகள் அவருடைய பாணியில் இல்லை என்பதை அருந்ததியின் ஒரே ஒரு கட்டுரையை படித்தவர் கூட உணர முடியும். அதனால் அது குறித்து விளக்கம் கேட்டிருந்தேன். பாஸ்டன் பாலாஜி ஏதோ கூட்டத்தில் கலந்து கொண்டு, ஒரு 'தமிழ் வலைப்பதிவராய்' கேள்வி கேட்டு, தனக்கு கிடைத்த பதிலை, தான் புரிந்துகொண்ட விதத்தில் மனதில் வாங்கி, தன் வார்த்தைகளில் பதிவில் போட்டது என்பதாக அதை எடுத்து கொண்டிருந்தேன். இந்த நிச்சயமின்மை காரணமாக இதை எப்படி வாசிப்பது என்று எனக்கு குழப்பம் இருந்தது. மற்ற யாருக்கும் அப்படி ஒரு குழப்பமே வரவில்லை; அப்படி ஒரு குழப்பத்தின் தேவையே இருக்கவில்லை. முட்டாள்தனத்தை பெருமையாய் அறிவிக்கும் கூட்டு உளவியலின் போக்கில், எல்லோரும் பாலாஜி எழுதியதை உண்மை என எடுத்துக் கொண்டு (அதை முட்டாள்தனம் என்று சொல்லவில்லை) அருந்ததியை திட்டி கொண்டிருக்கும் போதும், தான் எழுதியது ஒரு பகடிதான் என்று அறிவிக்கும் அவசியம் பாலாஜிக்கு தோன்றவில்லை. (பின்னர் சொல்லலாம் என்று நினைத்திருக்கலாம், ஆனால் அப்படி நினைத்தாரா என்பதும் தெளிவாய் தெரியவில்லை.) இப்போது பலாஜி தெளிவாக்கிய பின்பு ஏற்கனவே (அருந்ததி அப்படி சொன்னதாக எடுத்துக் கொண்டு, அவர் பேச்சில் வெளிபட்ட Wit புரியாமல் மற்றவர் பேசுவதாக) எழுதிய பத்திகளை நீக்கியிருக்கிறேன்.

அருந்ததியின் முதல் எழுத்துக்களில் இருந்து அவர் எல்லாவகை அரசு அதிகாரம் பற்றியும் பேசி வருகிறார். அவர் சீனா பற்றி அத்தனை இடங்களில் பேசியிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்டுகளை பற்றி முதல் நாவலிலிருந்து பேசி, கம்யூனிஸ்டுகளிடம் இருந்து திட்டு வாங்கி வருகிறார். மார்க்சியத்தையும் ஒரு மதமாக பார்பதாக தன் பேட்டிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பேசியிருக்கிறார். இந்த நேர்காணலிலேயே நதிகளை இணைக்கும் திட்டத்தை ஒரு Stalinist scheme என்கிறார். புத்திசாலித்தனம் கொஞ்சம் உள்ள எவருக்கும் இப்படி சொல்லும்போது Stalinist scheme என்பதை எதிர்மறையாக குறிப்பிடுகிறார், (சீனா உட்பட) எல்லா ஸ்டாலினிச அமைப்பின் மீதும் அவருக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது எதையுமே ஒழுங்காய் படிக்காத, அல்லது படித்தாலும் அதை கண்டு கொளாமல், வழக்கமாய் கம்யூனிஸ்டுகளை கிண்டலடிக்கும் அல்ப அணுகுமுறையில், சீனாவை பற்றி அவர் எப்படி பேசக்கூடும் என்று கற்பனை செய்து பாலாஜி ஒரு பதிவு எழுதுகிறார். படித்து விட்டு ஸ்ரீகாந்த் சீனாவின் three gorges dam பற்றி அவர் என்ன கூறக்கூடும் என்று புத்திசாலித்தனமாக வியக்கிறார். எதற்காக வியக்க வேண்டும்? அந்த பின்னூட்டம் எழுத, மீண்டும் வந்து வந்து மற்ற பின்னூட்டங்களை படிக்க என்று இந்த பதிவு தொடர்பாக செலவழிக்கும் நேரத்தில், பத்தில் ஒரு பங்கை செலவிட்டு கூகுளில் தேடினால், அருந்ததி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்துவிடும். அருந்ததி அணைகள் பற்றிய தனது முதல் கட்டுரையிலேயே சைனாவை பற்றி பேசியதாக எனக்கு ஞாபகம். இப்போது அதை மீண்டும் படிக்கவில்லை. இது தவிர உண்மையிலேயே ஆர்வமிருந்தால், ஸ்ரீகாந்தும் மற்றவர்களும் இணையத்தில் தேடிகொள்ள வேண்டும். நிச்சயமாய் கிடைக்கும் என்று தேடாமலே நான் சொல்கிறேன்.

அருந்ததி இந்திய ஜனநாயம் பற்றி பேசிய விஷயத்துக்கு வருவோம். அதற்கான ஆதாரமாக இவர்கள் தருவது எக்ஸ்பிரஸின் செய்தி. எக்ஸ்பிரஸ் செய்திகளை எப்படி தருகிறது என்பதை, நேர்காணலில் தனது பிரபலம் என்ற நிலையை முன்வைத்து அருந்ததி பேசிய வரிகள் கீழே.

I was at a meeting in Delhi a few months ago, the Association of Parents for Disappeared People. Now, women had come down from Kashmir. There are 10,000 or so disappeared people in Kashmir, which nobody talks about in the mainstream media at all. Here were these women whose mothers or brothers or sons or husbands had -- I'm sorry, not mothers, but whatever -- all these people who were speaking of their personal experiences, and there were other speakers, and there was me.

And the next day in this more-or-less rightwing paper called Indian Express, there was a big picture of me, really close so that you couldn't see the context. You couldn't see who had organized the meeting or what it was about, nothing. And underneath it said, "Arundhati Roy at the International Day of the Disappeared." So, you have the news, but it says nothing, you know?

இந்த செய்தியும் அப்படிபட்டதுதான் எனினும், அதில் உள்ளதையே அப்படியே மட்டும் எடுத்துக் கொள்வோம். அருந்ததி சொன்னது இந்திய ஜனநாயகம் பற்றி தனித்து சொன்ன ஒரு கருத்து அல்ல. 'இந்திய ஜனநாயகத்தையும்', இந்தியா ஓட்டு போடுவதை பற்றியும் தாமஸ் ஃப்ரீட்மேன் என்பவர் ஒரு அமேரிக்க வியத்தலுடன், அமேரிக்க உள்நோக்கங்களுடன் எழுதியதை முன்வைத்த அருந்ததி ராயின் எதிர்வினை. அருந்ததி ஏதோ தாமஸ் சொன்னது மறுத்து, இந்தியாவில் ஓட்டெடுப்பு நிகழாமல் ஆயுதம் மூலம் ஆட்சி மாறியதாகவும், சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாகவும் சொல்லவில்லை. அப்படி சொன்னது போல கிண்டல் செய்வதன் மூலம் தங்கள் முட்டாள்தனத்தை வழக்கம் போல வரிசையாய் எல்லோரும் வெளிபடுத்தியுள்ளனர். ஜனநாயகம் என்ற வார்தைக்கு இன்று நிலவும் இந்திய யதார்தம்தான் பொருளா என்பதை முன்வைத்து தான் பேசியுள்ளார் என்பது குறைந்த பட்ச புத்தியுள்ள எவருக்கும் புரியும்.

இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்ப அருந்ததி முன்வைக்கும் வாதங்கள் சில; 80000 மக்கள் (தீவிரவாதிகள் அல்ல) காஷ்மீரில் அரச வன்முறை மூலம் மட்டும் (போராளி பயங்கரவாதத்தால் அல்ல) கொல்லப்பட்டுள்ளதை நாம் ஜனநாயகம் என்று சொல்லமுடியுமா? 700000 இராணுவ வீரர்களால் ஆக்ரமித்துள்ள ஒரு மானிலம் இருக்கும் போது அதை ஜனநாயகம் என்று சொல்ல முடியுமா? (அமைதி காக்கப் போவதாக நடுநிலைதன்மையுடன் போன இலங்கையில் நம் ராணுவம் நடத்திய வெறியாட்டம் இன்று ஈழத்தமிழர்களால் ஆவணப்படுத்தப் பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகாலமாய் ஒரு நடைமுறை போரில் இருக்கும் மானிலத்தில் என்னவென்ன நடந்திருக்கும் என்பதை ஊடக செய்திகளை முன்வைத்து மட்டும் பேசமுடியாது. ஆமாம், சமுத்ரா சொன்ன மாதிரி குறைந்தது அங்குள்ள மக்களிடம் பேசவாவது வேண்டும். காஷ்மீருக்கு போயிருக்காவிட்டாலும் என்னளவில் சிலருடன் பேசியுள்ளேன்.அருந்ததி என்னை விட பல மடங்கு அதிகமாய் பேசியுள்ளார். கருத்தரங்குகளில் பங்கு கொண்டுள்ளார். ஆதாரம் காட்டி இதற்கு முன்னரே பல கட்டுரைகளில் எழுதியுள்ளார். மொட்டையாய் இந்துத்வவாதிகளும், மற்ற இந்திய தேசியவாதிகளும் மறுப்பார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்! இரண்டு மாத காலமாய் உலகிற்கு அறிவித்துவிட்டு, ஊடகங்கள் முன்பு குடுமிவிரித்தாடிய குஜாராத் இன அழிப்பையே மறுக்கின்றனர். உதாரணமாய் கர்பிணி பெண்களை வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுக்கவில்லை என்று அப்பாவியாய் மூஞ்சியை வைத்துக் கொண்டு ஆஃபிஸ் உடகார்ந்து கொண்டு ஒருவர் வலைப்பதிவில் எழுதுகிறார். )

இது தவிர (பேட்டியில்) இந்த நாட்டில் எல்லாவற்றையும் இறுதியாய் தீர்மானிக்கும் அதிகாரம் என்பது நீதிமன்றத்திடம் இருப்பதை முன்வைத்து பேசியிருக்கிறார். நான்கு லட்சம் எண்ணிக்கை கொண்ட ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை வெளியேற்றுவது என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படுவதும், தனது தீர்ப்புகளையே வெட்டி வெட்டி மாற்றி மாற்றி ஒரு நீதிமன்றம் கடைசியாக (தான் முன்னர் சொன்ன மறுவாழ்வு உள்ளடகத்தை தொடாமல்) 'அணை கட்டலாம்' என்று மொட்டையாக தீர்பளிப்பதை முன்வைத்து கேட்கிறார். இன்னொரு பரிமாணத்தில், ஒரிசாவில் பாக்சைட்டை முன்வைத்த கார்பரேட் கொள்ளைக்காக, இந்த நாட்டின் ஆதி மக்கள் மீது நடக்கும் சட்டபூர்வமாய் அங்கீகரிக்கக் பட்டு, அரசால் அவிழ்த்து விடப்படும் விசாரணைக்கு உடபடாத வன்முறையை முன்வைத்து கேட்கிறார். ஒரு பக்கம் கிராமங்களை மலைப்பகுதிகளை விட்டு, காலங்காலாமாய் அங்கு வாழ்ந்து வந்த, அந்த நிலத்தின் ஆதி மக்களை விரட்டுவதை பற்றியும், இன்னொரு புறம் கிராமத்திலிருந்து சேரிகளில் குடியேறியுள்ள அதே மக்களை ஆக்ரமிப்பாளர்களாகவும், பிக்பாக்கெட்களாகவும், கிரிமினல்களாகவும் காட்டும் நீதிமன்ற சட்டபூர்வமான அணுகுமுறை பற்றி பேசுகிறார்.

அருந்ததியை முட்டாளாய் கிண்டலடிப்பவர்கள் கீழே உள்ள எதையாவது செய்திருக்க வேண்டும். அவர் சொல்லும் செய்திகள் பொய், உண்மைக்கு முரணானது என்று துணிந்து வாதிட்டு இருக்க வேண்டும். இந்துத்வவாதிகளுக்கு அப்படிபட்ட துணிவும் கயமையும் நிச்சயம் உண்டு. மற்றவர்கள் இந்த செய்திகள் உண்மையாய் இருந்தாலும், 'ஜனநாயகத்தில இதெல்லாம் சகஜம்பா!' என்று ஒரு வாதத்தையாவது முன்வைத்து பேசியிருக்க வேண்டும். மாறாக கேனத்தனமான கிண்டல் மட்டுமே ஒலித்தது. ( சமுத்ரா என்பவர் மட்டும் 'ராணுவ அதிகாரிகளிடம் பேசி தான் தெரிந்து கொண்ட செய்திகளை' தந்திருக்கிறார். அது குறித்தெல்லாம் என்னை மாதிரி ஆட்கள் என்னய்யா பேசமுடியும்?!)

வஜ்ரா மாதிரி ஆசாமிகள் அருந்ததி யாசின் மாலிக்குடன் கைகுலூக்கும் படத்தை போட்டு எதிர்கொள்வது போலத்தான், இந்துத்வவாதிகள் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பாஸ்டன், ஸ்ரீகாந்த் போன்ற மற்றவர்கள் செய்வதும் கூட கிட்டதட்ட அதுதான். சொல்லப் போனால் பாஸ்டன் செய்வது அதைவிட மொட்டையாய் சௌவுதியை, சீனாவை காட்டி மட்டையடி கேள்விகள் எழுப்பும் வேலையைத்தான் செய்கிறார். இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்து, பாகிஸ்தான் எல்லையில் இராணுவம் குவிக்கப் பட்டு, போரின் தீவிரம் ஊசலாடிகொண்டிருந்த போது, அருந்ததியிடம் (ஒரு அணு ஆயுத தாக்குதலின் சாத்தியம் காரணமாய்) 'இந்தியாவை விட்டு வெளியேறிவீர்களா?' என்று கேட்டபோது, 'இதை விட சுதந்திரமாக என்னை போன்ற ரவுடியை வேறு எந்த நாடு இப்படியே இருக்க அனுமதிக்கும்?' என்று கேட்டிருப்பார். (இணையத்தில் பேட்டியை மேலோட்டமாய் தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை.) இந்த பேட்டி மட்டுமில்லாது இந்திய நாட்டில் தனக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய எல்லா சுய உணர்வும் அவருக்கு இருப்பதை அவரது எழுதுக்களில் உணர முடியும். அவர் பேசுவது இந்த நாட்டின் அதிகாரமற்ற மக்களின் மீது அரசும் சமூகம் பெய்து வரும் விசாரணைக்கு உட்படாத அங்கீகரிக்கப் படும் வன்முறை பற்றி. அதை பேசினால் 'டிக்கெட் எடுத்து தருகிறேன். கொரியா போகிறாயா, சவுதி போகிறாயா?' என்று மெண்டல்கள் (வேறு வழிவகையின்றி) கேட்பதை போலவே, கொஞ்ச நஞ்ச புத்தியும் சமூக அக்கறை உள்ளவர்களும் கூட கேட்கிறார்கள். செப்டம்பர் 11ற்கு பிறகு, அதை முன்வைத்தும் அதற்கான காரணங்களை பற்றியும் விமர்சனமாய் பேசும் எல்லோரையும் 'ஆஃப்கானிஸ்தானுக்கு போ!' என்ற அயோக்கியத்தனமான, அதேநேரம் முட்டாள்தனமான ஒற்றை வசையில் எதிர்கொள்வதை போலத்தான் இதுவும். இந்திய அணுகுண்டு சோதனை பற்றி விமரசனமாய் பேசியவர்களையும் 'பாகிஸ்தானுக்கு போ!' என்று பாராளுமன்றத்திலேயே பேசியதன் தொடர்ச்சி மட்டுமே.

அமேரிக்க சிவில் சமூகம் பற்றியும், அதன் லிபரல் தன்மை பற்றியும் அருந்ததியே (ஈராக் போரை முன்வைத்த கட்டுரைகளில்) பேசியிருக்கிறார். மீண்டும் மீண்டும் (ஒரு கட்டத்தில் அமேரிக்க வெறுப்பு என்பதின் ஆபத்தான பரிமாணம் பற்றி சொல்லும் போது) அமேரிக்க அரசிற்கும் அமேரிக்க சமூகத்திற்கும் உள்ள வேறுப்பாட்டை மனதில் வைக்க வேண்டிய அவசியம் பற்றி பேசி வருகிறார். அமேரிக்கா என்ற நாட்டின் அரசு, உலகின் மற்ற நாடுகள் மீது அவிழ்த்து விட்டு பயங்கரவாதம் பற்றி பேசினால், அங்கிருக்கும் அதன் மக்களுக்கான சமூக உரிமைகள் பற்றி பேசுவதாகாது.
அரபு நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றி அருந்ததியும் ஒப்புக்கொண்டே பேசியிருக்கிறார். (மீண்டும் ஒரு பழைய கட்டுரையில், அது ராயர் காப்பி கிளப்பில் கூட விவாதிக்கப் பட்டதாய் ஞாபகம்). சவுதியில் இருப்பது மிக மூர்க்கமான சர்வாதிகாரம் மிகுந்த மத அடிப்படைவாத அரசு என்பதைத்தான் சாம்ஸ்கியிலிருந்து அருந்ததி வரை சொல்லி வருகிறார்கள். சவுதியுடன் தோழமை பாராட்டும் அமேரிக்கா, ஈராக்கில் 'ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும் கொண்டுவருவதையும்', தாலிபான்களை அழிக்கும் அமேரிக்கா அதைவிட அடிப்படைவாதத்தை நடைமுறை படுத்தும் சவுதியை அங்கீகரிப்பதையும் முன்வைத்து பேசுகிறார்கள். ஜனநாயகம் மத சார்பின்மை அடைப்படையில் போராடியதற்கு பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு அமேரிக்கா, இஸ்ரேல் மற்றும் வரலாறு தந்த பரிசை முன்வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். இப்படி பிரச்சனைகளை பேசுவதை திரித்து குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்பதும் அவதூறு செய்வதும்தான் எல்லா வகை தீவிர தேசியவாதிகள் தொடர்ந்து உலகம் முழுவதும் செய்து வரும் வேலை.

இந்த லட்சணத்தில் அவர் sweeping statements and arrogant judgement வைத்து கவன ஈர்ப்பு செய்வதாக பாஸ்டன் பாலாஜியின் தீர்ப்பு வேறு. அவர் பதிவிலேயே அருந்ததியை முட்டாளாக வர்ணித்து மகா மட்டமான ஸ்வீப்பிங் கம்ண்டுகளை நண்டு சிண்டுகள் எல்லாம் எழுதியிருக்கின்றன. ஒருவர் தாலிபானை அருந்ததி ஆதரித்ததாக அபாண்டமாய் புளுகுகிரார். சைனாவின் அணை பற்றி ஏற்கனவே பேசியுள்ள அருந்ததியை, அது குறித்து என்ன சொல்லுவார் என்று வழக்கமான மட்டையடி கேள்வியை ஸ்ரீகாந்த் கேட்கிறார். தனது ஒவ்வொரு நிலைபாடுகளுக்கும் அவதானிப்புகளுக்கு பின்னாலும் ஏராளமான தகவல்கள், வாதங்கள், ஆதாரங்கள் தரும் அருந்ததி எழுதிவது ஸ்வீப்பிங்காக தெரிகிறது, மட்டையாய் பல ஸ்வீப்பிங் வாக்கியங்கள் எழுதியவர்களுக்கு, அருந்ததி எழுதியதை திரித்தவர்களுக்கு, புளுகியவர்களுக்கு நன்றி சொல்லி பாராட்டு வேறு. தனிநபர் முட்டாள்தனமாய் இருப்பதோ, அதையே அறிவு என்று நம்பி பெருமையாய் வெளிப்படுத்துவதோ பிரச்சனையல்ல. சமூகத்திற்கு அத்யாவசியமான இயல்பு அது என்று நினைக்கிறேன். அதையே மொத்த சமூகமும் வியந்து கொண்டாடுவதுதான் சாக்ரடீசை கொல்வது போன்ற அழிவு. அதை பார்த்துதான் இந்த பதிவை எழுத வேண்டி வந்தது. கொஞ்சம் உருப்படியாய் அடுத்த பதிவில் எழுத உத்தேசம்.

முடிக்கும் முன் கடைசியாக, ரவி ஸ்ரீனிவாசின் பதிவை படித்து கொஞ்சம் ஆச்சரியமாக இருந்ததை சொல்லத்தான் வேண்டும். கடந்த சில மாதமாய் அவர் பதிவுகளை படித்து அடைந்து வரும் nauseaவிற்கிடையில் இப்படி எதையாவது நிதானமாய் ஒரு விமர்சனத்தன்மையுடன் அவரால் எழுத முடியும் என்று பார்க்க ஆறுதாலாய்தான் இருக்கிறது.

ரவி வழக்கம் போல மொட்டையாய் சொல்லும் தீர்ப்புகளை (இரண்டாவது பத்தி), மற்றும் தனது எழுத்தில் வெளிபடும் மொண்ணையான அறிவுபூர்வத்திற்கு மேலாக அலட்டிக்கொள்வதை (உதாரணமாய் ' But globalization is a more complicated issue than both would like us believe.') எல்லாம் தவிர்த்து (வேறு என்ன அதை செய்வதாம்!) கொஞ்சமாவது விஷயபூர்வமாய் சொல்லிய விஷயத்தை எடுத்துக் கொண்டால், அவை ஏற்கனவே பலராய் வேறு சந்தர்பங்களில் விவாதிக்கப்பட்ட விஷயம். நீதி மன்றம் வர்க்க சார்புடையதா என்பது பற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதப்பட்டு, பதிலாக இது போன்ற மொட்டை வாதங்கள் எல்லாம் காலகாலமாய் வந்தாகி விட்டது.

ஆனால் ரவிக்கு அருந்ததி என்ன சொன்னார் என்றே புரியவில்லை என்பதுதான் அடிப்படை பிரச்சனை. அருந்ததி ஜனநாயகத்தில் அறுதியாய் தீர்மானிக்கும் உரிமை நீதிமன்றத்திடம் இருக்கும் சிக்கல் பற்றியும், அந்த அதிகாரம் சின்ன விமர்சனம் என்பதற்கு கூட அப்பாற்பட்டு இருப்பதையும் பற்றி பேசியிருக்கிறார். வழக்கமாய் எதையும் வாசித்து உள்வாங்கும் திறனும் பொறுமையும் இல்லாத ரவி, நீதிமன்றம் ஏழைகள் சார்புடையதா இல்லையா என்று z-axisஇல் ஜல்லியடிக்கிறார். நீதிமன்ற தீர்ப்புகள் சூழலியல் சார்பாக இருப்பதையும் சொல்கிறார். அவர் செய்திருக்க வேண்டியது தீர்மானிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தளம் இருக்கிறதா என்பதை பற்றி இருந்திருக்க வேண்டும். நீதி மன்ற அவமதிப்பு என்ற அஸ்திரம் பற்றி பேசியிருக்க வேண்டும். இப்படி தொடர்பில்லாத ஒன்றை பற்றி பேசியே அறிவு பாவனை செய்வது பலரின் திட்டமிட்ட அணுகுமுறைதான். ஆனால் ரவி பாவனை செய்யவில்லை. அவர் சீரியசாகவே அருந்ததி சொன்னதை புரிந்து கொள்ளாமல் எழுதியுள்ளார்.

தனது அதே மொண்ணையான வாசிப்பில், நக்சலைட்டுகளை அருந்ததி ரொமாண்டிசைஸ் செய்வதாக சொல்கிறார். இந்துத்வவாதிகளும் மற்றவர்களும் அப்படி திரிப்பார்கள். ரவி திரிக்கவில்லை; மாறாக தனது மொண்ணையான பார்வையாலும் அவசரபுத்தியாலும் அப்படி புரிந்து கொள்கிறார். "In any case the origins of the Naxal movement could be traced to the late 1960s. The Maoists by and large still swear by Stalin and Mao. They still have faith in proletarian dictatorship." என்ன ஒரு அரிய தகவல்கள்! 'நக்சலைட்டுகள் வன்முறை பாதையில் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள், அவர்கள் அகிம்சை போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை' என்றெல்லாம் ஏனோ சொல்லவில்லை. இதெல்லாம் தெரியாமல்தானே அருந்தி போன்றவர்கள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்! ஒரிசாவிலும் ஜார்கண்டிலும் என்ன நடக்கிறது, அதன் பரிமாணக்கள் என்ன என்று ஒரு மண்ணங்கட்டி புரிதலும் இல்லாமல் தகவல்களையும், ஐடியாக்களையும் முன்வைத்து பதிவு முழுக்க மட்டையடிகள்.

அருந்ததி பேசியிருப்பது வன்முறையின் பரிமாணம், போராட்ட வழிமுறைகள் அரசு எதிர்கொள்ளும் விதம் பற்றியது. நட்சத்திர வாரத்தில் நான் நர்மதாவை முன்வைத்து எழுதிய பதிவு பேசும் விஷயங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. அவர் நக்சலைட்டுக்களை ரொமாண்டிசைஸ் செய்யவில்லை. ஒரு வேளை எதையாவது அவர் அப்படி ரொமாண்டிசசஸ் செய்திருந்தால், அது நர்மதாவின் வன்முறையற்ற போராட்டம் பற்றி இருந்திருக்கும். இந்த விஷயம் எதுவும் புரியாமல் மொட்டையாய் ' It is one thing to oppose state repression in the name of containing naxals, it is another thing to romanticize the Naxal/Maoist movement' என்று மேதவித்தனமான பாவனையில் ஒளருவது ரவிக்கே உரிய தனித்தன்மை. ரவிக்கு பிரச்சனை வயிற்றில் பசி மட்டுமல்ல ("the calls from the stomach are becoming louder"), வயிற்றின் கீழே நடப்பதுடன் தொடர்புடையது.

இன்னொரு பதிவு எழுத உத்தேசம் உள்ளது. இரவு கால்பந்தாட்டம் அனுமதித்தால்!

Post a Comment

11 Comments:

Blogger ROSAVASANTH said...

ரவியின் பதிவிற்கான சுட்டி பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது.

6/23/2006 6:31 PM  
Blogger அசுரன் said...

//அருந்ததி எழுதியதை திரித்தவர்களுக்கு, புளுகியவர்களுக்கு நன்றி சொல்லி பாராட்டு வேறு. தனிநபர் முட்டாள்தனமாய் இருப்பதோ, அதையே அறிவு என்று நம்பி பெருமையாய் வெளிப்படுத்துவதோ பிரச்சனையல்ல. சமூகத்திற்கு அத்யாவசியமான இயல்பு அது என்று நினைக்கிறேன். அதையே மொத்த சமூகமும் வியந்து கொண்டாடுவதுதான் சாக்ரடீசை கொல்வது போன்ற அழிவு. அதை பார்த்துதான் இந்த பதிவை எழுத வேண்டி வந்தது. கொஞ்சம் உருப்படியாய் அடுத்த பதிவில் எழுத உத்தேசம்//

//ஆனால் ரவிக்கு அருந்ததி என்ன சொன்னார் என்றே புரியவில்லை என்பதுதான் அடிப்படை பிரச்சனை.//

//நீதிமன்றம் ஏழைகள் சார்புடையதா இல்லையா என்று z-axisஇல் ஜல்லியடிக்கிறார்//

//இப்படி தொடர்பில்லாத ஒன்றை பற்றி பேசியே அறிவு பாவனை செய்வது பலரின் திட்டமிட்ட அணுகுமுறைதான். //

//ஒரிசாவிலும் ஜார்கண்டிலும் என்ன நடக்கிறது, அதன் பரிமாணக்கள் என்ன என்று ஒரு மண்ணங்கட்டி புரிதலும் இல்லாமல் தகவல்களையும், ஐடியாக்களையும் முன்வைத்து பதிவு முழுக்க மட்டையடிகள்.//

ரோசாவசந்த் தங்களது பதிவுகளுடன் அதிகம் என்க்கு பரிச்சயம் இல்லை. இது ரோசா வசந்த் எழுதியது என்ற கான்சியஸுடன் இரண்டு பதிவுகள் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்(ஒன்று இது மற்றொன்று வஜ்ராவை அம்பலப்படுத்தியது).

அருந்ததிராய் பற்றிய சமீபத்திய வலதுசாரி, politically incorrect கோஸ்டிகளின் பல்வேறு மட்டையடி, ஜல்லியடிப்புகளை எதிர்கொள்வதா அல்லது கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு செல்வதா என்ற குழப்பத்தில் இருந்த பொழுது, தங்களது பதிவு பார்வைக்கு கிடைத்தது.

விசயத்தின் அனைத்து தரப்பையும் சிறப்பாக, தெளிவாக அணுகியுள்ளேர்கள்.

எதிர் வினைகள் எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.

வாழ்த்துக்கள்.

6/23/2006 8:51 PM  
Blogger Srikanth Meenakshi said...

1. அருந்ததி ராய் சைனா அணையைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள உண்மையில் எனக்கு ஆர்வமில்லை. பாலாஜியின் பதிவின் முதல் பத்திகளை உண்மை என்று நம்பி, ராய் சைனாவைப் போற்றியதாக நினைத்து ஒரு சவால் கேள்வியாகவே அதைக் கேட்டேன். நான் அப்படி நம்பி எழுதியதாகப் பின்னூட்டமும் இட்டேன். பாலாஜி எழுதியிருந்தது உண்மையாகயிருந்திருந்தால், நான் கேட்ட கேள்வி நியாயமானதாக இருந்திருக்கும். இப்பொழுது it is irrelevant.

2. ராய் 9/11 தாக்குதலுக்குப் பிறகு எழுதிய algebra of infinite justice மற்றும், சுப்ரீம் கோர்ட் நீதிமன்ற அவமதிப்புத் தீர்ப்பை எதிர்த்து அவர் சுணங்கிக் கொண்டது ஆகியவற்றிற்குப் பிறகு அவரது எழுத்துக்களைப் படிப்பதை விட்டு விட்டேன். வைராக்கியமெல்லாம் இல்லை, தேடிப் போய் படிப்பது கிடையாது, அவ்வளவுதான். நீங்கள் சொல்லும் sweeping statement, மொட்டை, மொண்ணை, ஜல்லியடி போன்ற பல குதர்க்க சமாச்சாரங்கள் அவர் எழுத்துக்களில் இருப்பதாகக் கருதுகிறேன்.

3. ஈராக், நர்மதா, குஜராத், காஷ்மீர், பழங்குடி மக்கள், சைனா, சவுதி, ரஷியா - எல்லா விஷயத்திலும் ராய் என்ன சொல்கிறார் என்று படித்துத் தெளிந்த பின்புதான் சரியான நிலைப்பாடு எடுக்க முடியும் என்று தோன்றவில்லை. ராய் எழுதும் விதம் பிடிக்கவில்லை என்பதால், அவர் எடுக்கும் நிலைப்பாடுகளையெல்லாம் நான் எதிர்ப்பதாகக் கற்பிதம் செய்து கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி,

ஸ்ரீகாந்த்

6/23/2006 10:03 PM  
Blogger Boston Bala said...

ரோசா... தெளிவாக 'இது நிஜ மனிதர்களைக் குறிப்பது போல் தோன்றினாலும் முற்றிலும் புனைவே' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். குழப்பத்த்ற்கு வருந்துகிறேன்!

6/23/2006 10:16 PM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீகாந், சிக்ஸர், சிக்ஸராய் சாத்திக் கொண்டிருக்கும் ஒருவரிடம் 'சிக்ஸர் அடித்துக் காட்ட முடியுமா?' என்று, அவர் என்ன செய்திருக்கிறார் என்றூ அறிந்துகொள்ளாமல் சவால் விடுவது கொஞ்சம் நகைச்சுவைதான் இல்லையா? ஆனாலும் அப்படி சவால்விட ஒருவருக்கு உரிமை நிச்சயம் உண்டு. அந்த சமயத்தில் அன்னார் அடித்த சிக்ஸர்களை பற்றி குறிப்பிடுவது விஷயம் அறிந்தோரின் கடமை அல்லவா! அதைத்தான் நான் செய்தேன். கருத்துக்கு நன்றி.

பாஸ்டன், ஆமாம், நையாண்டி பதிவு எழுதலாம், ஆனால் பேட்டி கற்பனையானது என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும், குறைந்த பட்சம் அதன் காரணமாய் அருந்ததி திட்டு வாங்கி கொண்டிருக்கும் போது. மற்றபடி பொருந்தி வராமல் எவ்வளவு அபத்தமாக வேண்டுமானாலும் கிண்டலடிக்க உங்களுக்கு உரிமை உள்ளது - அதன் அபத்த உள்ளடக்கம் பற்றி விளக்கம் தர எனக்கு இருப்பது போல். புரிதலுக்கு நன்றி.

போனப்பார்ட் மிக்க நன்றி.

6/24/2006 2:17 AM  
Blogger நாகை சிவா said...

ஐயா! தாங்கள் குறிப்பிட்ட மெண்டல்களில் நானும் ஒருவன்.

இந்த பதிவை படித்து உங்கள் பதிலை கொஞ்சம் சொல்லவும்.
http://holyox.blogspot.com/2006/06/114.html

6/24/2006 2:34 AM  
Blogger ROSAVASANTH said...

Siva, I tried to read your post. Read half of it, horrible couldn't continue, after you list out the reasons Arundati gave for opposing the nuclear test. It is not my job to insist how you should read an article, I can only suggest.

http://www.wagingpeace.org/articles/1998/08/00_roy_end-imagination.htm

6/24/2006 2:42 AM  
Blogger ROSAVASANTH said...

ok, I have to leave, remaining comments (if any) will appear tommorow. Thanks!

I may not write the second part, as mentioned in this post. Of course there will be many more occasions to do that.

6/24/2006 2:45 AM  
Blogger Muthu said...

http://muthuvintamil.blogspot.com/2006/06/blog-post_24.html

மேல்கண்ட சுட்டியில் நானும் இதைப்பற்றி சில வார்த்தைகள் எழுதி உள்ளென்.

ரோசா உங்களின் இந்த பதிவு அருமை.

6/24/2006 8:48 PM  
Blogger ROSAVASANTH said...

முத்து, இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். ரொம்ப கொடுமையா இருக்கு!

செல்வன்தான், அருந்ததி என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவில்லை, அல்லது புரிந்து கொள்ளவில்லை. அவர் எதிர்க்கிறார், எதிர்ப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எதிராளி சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற வலைப்பதிவு விவாத வழக்கப்படி அவருக்கு அப்படி ஒரு கட்டாயம் கிடையாது. அருந்ததிக்கு ஆதரவாய் பேசும் நீங்களாவது அதை செய்ய வேண்டாமா?

http://www.wagingpeace.org/articles/1998/08/00_roy_end-imagination.htm

அருந்ததி எங்கே செல்வன் சொன்ன வகையில் தனது வாதத்தை வைத்திருக்கிறார்? deterrence என்று இவர்கள் சொல்லும் வாதங்களுக்கும் அவர் பதில் சொல்லியிருப்பதை காணலாம். எந்த கருத்தையும் எதிர்க்கவும், விமரசனமும் நிச்சயமாய் செய்யலாம். அதற்கு முன் அதை உள்வாங்கவாவது வேண்டாமா?

மற்றபடி இந்த பிரச்சனை குறித்து விவாதம் என்ற பெயரில் நடந்த கோராமைக்கு பற்றி வேறு என்ன சொல்ல முடியும்! ஏற்கனவே என் பதிவில் சொன்னதுதான்.

சும்மா கோராமை என்று வெத்தாய் சொல்வதாய் நினைக்க கூடாது என்பதற்காக...

ஏற்கனவே அருந்ததி தாலிபானை ஆதரித்தததாக செல்வன் அப்பட்டமாக புளுகினார். இங்கே நக்சலைட்டை முன்வைத்து ஜல்லியடிப்பது பெரிய விஷயமா?

அருந்ததி என்ன சொல்கிறார் என்பது இது போன்ற மட்டையடி பார்வைக்கு அவ்வளவு எளிதாக புரிவது சாத்தியமில்லை. (ரவிஸ்ரீனிவாசையும் சேர்த்துதான் சொகிறேன்.)

But the longer you stay, the more you're enforcing these tribal differences and creating a resistance, which obviously, on the one hand, someone like me does support; on the other hand, you support the resistance, but you may not support the vision that they are fighting for. And I keep saying, you know, I'm doomed to fight on the side of people that have no space for me in their social imagination, and I would probably be the first person that was strung up if they won. But the point is that they are the ones that are resisting on the ground, and they have to be supported, because what is happening is unbelievable.

6/26/2006 5:56 PM  
Blogger ROSAVASANTH said...

வழவழா கொழகொழா, எதிர்வினை வைப்பதை முக்கியமாய் கருத்தும் அளவிற்கு, ஒப்புதல் உள்ள விஷயங்கள் பற்றி பேசத்தோன்றுவது கிடையாது. அதனால் உங்களை நான் குறிப்பிடவில்லை. கூட்டமாய் ஹிஸ்டீரியா குரல் ஒலித்த இடத்தில் நீங்களும் சன்னாசியும் எழுதியிருப்பது முக்கியமானது. நன்றி.

6/26/2006 6:00 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter