ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Sunday, June 04, 2006சாக்ய சங்கம் -3.இதை பற்றி எழுத அலுப்பாகவும் வெட்கமாகவும்தான் இருக்கிறது. சாக்ய சங்கம் பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி நிரந்தரமாய் என் பதிவின் பக்கவாட்டிலும் இருக்கிறது. இது குறித்த கடந்த பதிவில் சொன்னது போல், மொத்தமாய் இரண்டு நண்பர்கள் தமிழ் வலைப்பதிவு உலகத்திலிருந்து உதவியிருக்கிறார்கள். வலைப்பதிவில் அறிமுகமாகாத இன்னொரு நண்பரும் உதவியிருக்கிறார். ஆக மொத்தம் மூன்று. இவ்வாறு நூற்றுக்கணக்கில் மக்கள் வாசிப்பதாக சைட் மீட்டர் தகவல் தரும் என் பதிவின் வாசிப்பவர்களில் மூன்று பேர்தான், இயற்கை அழிவால் நிராதரவாக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவுவது என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தில் பங்கு பெறுவார்கள் என்பதில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. ஏன் எனக்கு வெக்கமாய் இருக்கிறது என்றால், ரோஸாவசந்த் என்ற ஒருவன் விண்ணப்பித்த காரணத்தினால் மட்டுமே ரெஸ்பான்ஸ் இப்படி இருக்கக் கூடும் என்று நினைப்பதால். ஆனால் அதற்கு செய்யக் கூடியது எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நான் மாறமுடியாது என்பது மட்டுமல்ல, நான் பங்குகொள்ளும், எனக்கு தெரிந்த ஒரு விஷயம் தொடர்பாக நான் மட்டும்தானே விண்ணப்பிக்க முடியும்! உதவி செய்த மூன்று நபர்களும் அவர்கள் பெயரை நான் வெளியிடுவதை விரும்பவில்லை. குறிப்பாக வலைப்பதிவில் இருப்பவர்கள், தங்கள் பெயர் குறிப்பிடப்பட்டால், அது சாக்ய சங்கம் தொடர்பான ஒரு முன் அனுமானம் ஏற்பட்டு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அப்படி ஒரு எதிர்விளைவு இருக்கக் கூடுமெனில், அது விண்ணப்பம் என்னிடமிருந்து வந்தபோதே நிகழ்ந்திருக்கும். எனினும் நட்சத்திர வாரம் என்பது ஏற்படுத்தி தந்த வாய்ப்பை கருதி, இதை எழுதுவதை கடமையாக எண்ணி இந்த பதிவை எழுதுகிறேன். ஏற்கனவே விவரங்கள் விரிவாய் எழுதப்பட்டுள்ளது. இது வரை படிக்காதவர்கள் கீழே சுட்டலாம். நன்றி! முதல் பதிவு: Sakya Sanga இரண்டாம் பதிவு : சாக்ய சங்கம் -2. |
2 Comments:
வசந்த்,
வலைப்பூக்களை நான் வாசித்த வரையில், இங்கு பல பேர் தங்களால் ஆன உதவியை நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ செய்து கொண்டு தானிருக்கிறார்கள்.
ஆனாலும் உங்களைப் போன்றோரின் நேரடிக் குரல்கள் இந்த விதயத்தில் மிக முக்கியமானவை. இதனால் மேலும் சிலர் உந்தப்படலாம்
எனவே இதில் நீங்கள் அலுப்படையவோ இல்லை வெக்கப்படவோ தேவையில்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இந்தப் பதிவிற்கும் நட்சத்திர வாரத்தின் ஏனைய பதிவிற்கும் நன்றிகள்.
பாலு, நேசக்குமார் நன்றி. விஷயம் என்னவெனில் அந்த நண்பர்கள், தேவையின் தீவிரத்தை அறிந்து, மிக பெரிய தொகையை அளித்துள்ளனர். அமேரிக்காவில் இருக்கும் 20 பேர் வெறும் 100டாலர் அளித்தால் ஒரு கிட்டதட்ட ஒரு லட்சம் கிடைக்கும். அதே ஒரே நபர் அளிப்பது(யாரும் முன்வராத காரணத்தால்) எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதன் காரணமாக எழுதினேன்.
Post a Comment
<< Home