Saturday, June 03, 2006
ஸ்ரீ ரங்க ரங்க..!
மேலே வெள்ளை கோபுரம், கீழே ராஜகோபுரம். ராஜ கோபுரம் அண்மையில் கட்டபட்ட கதை நமக்கு தெரியும். இளயராஜா கூட ஏதோ ஒரு அடுக்கிற்கு உபயம் செய்தார். வெள்ளை கோபுரம் பற்றிய கதை கீழ்கண்டவாறு கேள்விப்பட்டேன். வரலாற்று பூர்வமான தகவல் அல்ல, கேள்விப்பட்டது மட்டுமே. மாலிக் காஃபூர் ஸ்ரீரங்க கோவிலை கொள்ளையிடும் நோக்கில் படையெடுத்து வந்த போது, சில காரணங்களால் படைகள் வந்து சேருவதை தாமதப்படுத்த வேண்டியிருந்தது. வழக்கம் போல அதற்கு ஒரு தேவதாசி தன் வழக்கமான திறமையால் தாமதப்படுத்தினார் என்று கேள்வி.(பெயர் நினைவிலில்லை, நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். ) அவர் நினைவாக வெள்ளை கோபுரம் கட்டபட்டது. பொதுவாக கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.
Post a Comment
---------------------------------------
8 Comments:
வெள்ளை வண்ணத்துக்கு இது தான் காரணமோ? என்னடா சுண்ணாம்பு பூசிவிட்டு, கோபுரத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைத்ததுண்டு.
//பொதுவாக கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.
// எல்லாம் கருங்கல்லால் கட்டினதால் இருக்குமோ?
இருங்க.... திருப்பதியில் சில கோபுரங்கள் வெள்ளை வண்ணம் கொண்டவை.
வெள்ளை வண்ணத்தில் தான் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் இருக்கும் கோயில்களின் கோபுரங்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். தமிழகத்தில் வண்ணங்களுடன் தான் கோபுரங்களைப் பார்த்திருக்கிறேன். மிகப்பழைய கோபுரங்களில் வண்ணங்களே இல்லாமலும் பார்த்திருக்கிறேன்.
வெள்ளை மட்டும் கொண்ட கோபுரங்கள் நான் பார்த்த ஞாபகம் இல்லை. ஸ்ரீரங்கத்தில்தான் பார்த்து அது உடனே கவர்ந்தது. திருப்பதி பற்றி விசாரிக்கிறேன். நன்றி.
பொதுவாக கோபுரங்களுக்கு வண்ணம் அடிப்பது தமிழ்நாட்டில் மட்டுமே!
கோபுரங்கள் இந்தியா முழுதும் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு வகையில் இருக்கும்.
இதில், கேரளக் கோபுரங்கள் மற்ற மூன்று மாநிலங்களில் இருந்தும் தனிப்பட்டு இருக்கும்.
ஆந்திரா, கர்நாடக கோபுரங்கள் அதிக வண்ணப்பூச்சுக் கொண்டதாக இருக்காது.
இங்கு ஒருவர் சொன்னது போல, கோபுரங்கள் கருங்கற்களால் கட்டபட்டவை அன்று.
செங்கல், சுண்ணாம்பு சுதை வேலைகளால் ஆனதுதான் கோபுரம்.
இதில் ஸ்ரீரங்க வெள்ளைக் கோபுரம் ரங்க மன்னார் என்னும் பெண்ணினால் பெயர் பெற்றது என ஒரு நினைவு.
ரோ.வ. கூறியது போல ஒரு தாசியின் நினவாகக் கட்டப்பட்டது அந்தக் கோபுரம்.
கோபுரங்களுக்கு வண்ணப்பூச்சு என்பது கூட சமீப கால நிகழ்வுதான்.
This title reminds an excellent song from Mahanathi by IsaiGnani
தமிழின் முதல் காவியமான சிலப்பதிகாரத்தில் திருவரங்கம் பற்றிய குறிப்புக்கள் இருப்பதால் அது சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்க வேண்டும்.ஸ்ரீரங்கத்தில் காணப்படும் கல்வெட்டுக்களில் மிகப் பழையது பராந்தக சோழன் காலத்தியது.(924)
என்றாலும் இன்று நாம் காணும் இதே அமைப்பில் அன்றும் திருவரங்கன் கோயில் இருந்ததா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.
ஏனெனில், தில்லிப் படையெடுப்பின் போது, 60 ஆண்டுகள், 1313 வரை அந்தக் கோயில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. ஹொய்சாளர்களது ராணுவத் தளம் கோயிலின் அருகில் அமைந்திருந்ததால் இந்தக் கோயிலும் தாக்குதலுக்குள்ளாகியது.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு விஜயநகர ஆட்சியின் போது இது புதுப்பிக்கப்பட்டது. அப்போது இந்த வெள்ளை கோபுரம், ஆந்திரப் பாணியில் கட்டப்பட்டிருக்கலாம். (மொத்தம் 21 கோபுரங்கள் கொண்டது அரங்கன் கோவில்)
ஸ்ரீரங்கம் கோயில் ஒன்றுள் ஒன்று அடங்கிய 7 செவ்வகங்கள் கொண்டது.(concentric quardangles)அவற்றுள் ஒவ்வொன்றும் பல்வேறு அரசுகளின் கட்டிட அமைப்புக்களைக் காட்டுகின்றன. 3ம் சுற்றில் உள்ள கருட மண்டபத்துத் தூண்கள் நாயக்கர் காலத்தியவை (17ம் நூற்றாண்டு). ஆயிரங்கால் மண்டபம் சோழர் காலத்தியவை (13ம் நூற்றாண்டு)
அன்புடன்
மாலன்
எஸ்கே, மாலன் தகவல்களுக்கு நன்றி.
ஜோ, அந்த பாடலை மனதில் வைத்துத்தான் தலைப்பு வைத்தேன்.
//பொதுவாக கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்//
நான் சொன்னது தவறு என்றே உணருகிறேன். ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தை பார்த்து, வித்தியாசமாய் இருந்ததால் அப்படி தோன்றிவிட்டது. இன்று வேலைக்கு செல்லும் வழியிலேயே சில (சின்ன கோவில்களின் சின்ன) கோபுரங்கள் வெள்ளை நிறத்திலேயே இருக்கின்றன. அடையார் மத்ய கைலாசம் கூட வெள்ளை என்று நினைக்கிறேன்.
Post a Comment
<< Home