ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Monday, July 03, 2006வயறு எரிகிறது!30 மணி நேரமாகிவிட்டது; இரண்டு முறை தூங்கி எழுந்தாகிவிட்டது; இன்னும் தாங்க முடியவில்லை. ஏற்கனவே டீஜே எழுதிவிட்டாலும், செய்தி தாள்களில் பலர் ஒப்பாரி வைத்துவிட்டாலும், ஒரு வடிகாலாக இங்கே எழுதினாலும் கூட வயிற்றில் எரிச்சல் அடங்கும் போல தோன்றவில்லை. ஜெர்மனியின் மூர்க்கத்தனமான அழுகுணி ஆட்டத்திடம் அர்ஜண்டைனா தோற்றதென்பது உதை பந்தாட்ட நடைமுறை மேலான கோபமாக மட்டும் இருந்தது. அர்ஜண்டைனா தன் அற்புத ஆட்டத்தை வெளிபடுத்தவாவது செய்தது. ஜெர்மனி வென்றது பெனால்டியில் என்பதும், அதுவும் மூர்க்கமான ஆட்டத்தின் போக்கில் கோலி ராபர்த்தோ மீது மோதி காயப்படுத்தி வெளியே அனுப்பிய காரணமாவது இருந்தது. பிரேஜில் ஆடியது மோசமான ஆட்டம். தன்னம்பிக்கையின் அளவுக்கு மீறிய அரகன்ஸாக இருக்கலாம்! முதல் பாதியில் முனைப்பே எடுக்காமல், கடைசி நிமிடங்களில் உச்ச பரபரப்பில் முயன்று ... என்னத்த சொல்ல! நினைக்க நினைக்க மனசு ஆறமாட்டேனென்கிறது. காசு கீசு வாங்கிவிட்டார்களா என்று கூட (உண்மையில் அப்படி நினைக்கவில்லை) சந்தேகம் வந்து போய் கொண்டிருக்கிறது. அர்ஜண்டைனாவும் பிரசிலும் இறுதியில் மோதும், யார் வென்றாலும் சந்தோஷமே என்ற கலாபூர்வமான மனநிலையுடன் பார்க்கலாம் என்று இருந்த நப்பாசை தவிடு பொடியாகிவிட்டது. டீஜேயை போலவே இனி தொடர்ந்து பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பிரான்ஸ், குறைந்த பட்சம் ஜெர்மனியை தவிர யாராவது ஜெயித்தால் வயிற்றெரிச்சல் குறையலாம். அளவுக்கு மீறி தூக்கி வைத்த ரொனால்டினோ மொத்த ஆட்டத்திலும் கூட பெரிதாய் எதையும் செய்து காட்டாதது இன்னொரு விஷயம். இந்த தோல்வி மிக முக்கியமான பாடங்களை எல்லோருக்கும் கற்று கொடுக்கும் என்று நம்பலாம். வேறு என்ன சொல்ல, இதற்கு மேல் தத்துவ விசாரமாய் புலம்பி என்ன நடக்க போகிறது! |
36 Comments:
//அர்ஜண்டைனாவும் பிரசிலும் இறுதியில் மோதும், யார் வென்றாலும் சந்தோஷமே என்ற கலாபூர்வமான மனநிலையுடன் பார்க்கலாம் என்று இருந்த நப்பாசை தவிடு பொடியாகிவிட்டது.//
நானும் இதே வரிசையில் பிரேசில் ,அர்ஜெண்டீனா என்றிருந்து இப்போது நொந்து போயிருக்கிறேன்.
ரோசா,
சாருவின் கட்டுரையை படித்தீர்களா?
கலை நுட்பத்தை விட தொழில் நுட்பம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருப்பதாக தோன்றுகிறதா
:(
//அளவுக்கு மீறி தூக்கி வைத்த ரொனால்டினோ மொத்த ஆட்டத்திலும் கூட பெரிதாய் எதையும் செய்து காட்டாதது //
எனக்கு றொனால்டோ மீதுதான் அதிக ஏமாற்றம். றொனால்டினோ நடுவரிசை ஆட்டக்காரர். சில நீண்டதூர உதைகளை (குறிப்பாக பிரான்சுடனான ஆட்டத்தில் கடைசிநேரத்தில் கிடைத்த நேரடி உதையை) அவரிடமிருந்து எதிர்பார்த்தேன். நடக்கவில்லை. ஆனால் றொனால்டோ சுத்த மோசம். பல நேரங்களில் ஒரு கெளரவ விளையாட்டு வீரரைப் போல் மைதானத்தில் நிற்பார். அடுத்த உலகக் கிண்ணத்துக்கு விளையாடுவாரா என்று தெரியவில்லை. அனேகமாக இப்போதே பிரியாவிடை கொடுக்க வேண்டி வரும்போலத் தோன்றுகிறது. பிரேசில் அணியில் சிலருக்கு இதுதான் இறுதி உலகக்கிண்ணம்.
அடுத்தமுறை பிரேசில் நிச்சயம் புதிய உலக நட்சத்திரங்களோடு களமிறங்கும்.
ஆர்ஜென்டீனா தோற்றதும் பரிதாபம்தான். அதுசரி, அது தோற்ற ஆட்டத்துக்கு ஏன் மரடோனா வரவில்லையென்று தெரியுமா? அல்லது வந்திருந்தும் தொலைக்காட்சியில் காட்டாமல் விட்டார்களா?
//கலை நுட்பத்தை விட தொழில் நுட்பம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருப்பதாக தோன்றுகிறதா//
எனக்கு அப்படித் தோன்றவில்லை. பிரேசில் சரியாக எதையும் செய்யவில்லையென்பதே உண்மை.
அழகியல், கலை என்று பார்த்தால் இலத்தீன் அமெரிக்க நாடுகள் மேல்போலவே தோன்றுகின்றன.
தனிமனிதத் திறமையை எடுத்துக்கொண்டால் பந்தைக் கையாளும், கட்டுப்படுத்தும் மற்றும் Ball drill கலையில் மரடோனாவுக்கு அடுத்தது றொனால்டினோ என்றுதான் என் பட்டியல் இருக்கும். (pele போட்டியிலேயே இல்லை. அவரைத்தான் கடவுளாக்கியாச்சே.)
முத்து,
சாருவின் கட்டுரையை படித்தேன். அதில் ஒரே ஒரு பிரச்சனைதான் இருக்கிறது. எதோ தான் லத்தீன் அமேரிக்காவை ஆதரிப்பதை பலர் கேள்வி கேட்டது போலவும், முன்வைத்த காரணங்களை தான் மட்டுமே சொல்வது போலவும் பாவனை செய்வது. லத்தீன் அமேரிக்காவின் கால்பந்தாட்டம் கலாபூர்வமானது, ஐரோப்பாவின் ஆட்டம் தொழில்நுட்பத்தனமானது என்று ஏற்கனவே பலருக்கு உலக அளவில் உள்ள கருத்துதான். சாருவின் பல நண்பர்கள் அந்த கருத்தை விண்டு வைத்து விளக்கக் கூடியவர்கள். ப்ரேசில் அர்ஜண்டைனா ஆட்டத்தில் காட்டும் கற்பனை என்பது இல்லாமல் இயந்திரதனமாய் மற்றவர்கள் ஆடுவது பற்றி பலர் சொல்லியிருக்கிறார்கள்.
வசந்தன், நீங்கள் சொல்வது போல் ரொனால்டோ இந்த ஆட்டத்தில் மோசமாக செயல்பட்டார் என்பது உண்மையே. ஆனால் நான் மொத்தமான performance பற்றியே சொல்லுகிறேன். ரொனல்டோ மற்ற ஆட்டத்திலாவ்து ஏதாவது காண்பித்தார். ரொனால்டினோ தனக்கிருக்கும் புகழுக்கேற்ப எதுவுமே செய்யவில்லை என்பதைத்தான் சொன்னேன்.
பிரேசில் எதையும் சரியாக செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஃப்ரான்ஸ் கடினமான எதிர்ப்பை அளித்தாலும், அதுவும் இயந்திரதனமாகத்தானே இருந்தது. சரி, இதை விடுவோம். ஜெர்மனி வென்றதை எப்படி பார்பது? அங்கே தொழில்நுட்பம் கூட வெல்லவில்லையே, அழுகுணி ஆட்டம் அல்லவா வென்றது?
//அது தோற்ற ஆட்டத்துக்கு ஏன் மரடோனா வரவில்லையென்று தெரியுமா?//
நானும் யோசித்து கொண்டிருந்தேன்.
//அர்ஜண்டைனாவும் பிரசிலும் இறுதியில் மோதும்//இப்படி ஆசைப்பட்டிருந்தேன். இப்பொழுது எஞ்சியுள்ளவர்களில் யார் வென்றாலும் களிப்படையப்போவதில்லை, சும்மா பார்ப்பதைத் தவிர.
ரொனால்டினோவிடமிருந்து எதிரணியினர் பலமுறை பந்தை எளிதில் பறித்துச்செல்ல முடிந்தது. ரொனால்டோ, ஹென்றி (பிரான்ஸ்) ஆகியோரை tactical players என்று யாரோ சொல்லக் கேட்டேன்; ரசிக்க முடியவில்லை.
மாரடோனா அந்த ஆட்டத்திற்கு வந்தபோது கூட யாரையோ அழைத்து வந்ததாகவும் அதனால் போலீஸ் அவரை உள்ளெ விட வில்லை என்றும் எங்கோ படித்தேன்.(உறுதிப்படு்த்தமுடியவில்லை.தேடினால் சுட்டி கிடைக்கலாம்)
ரொனால்டோ சப்பானுக்கு எதிராக போட்ட ஒரு கோல் சூப்பருங்க..யாராவது கவனித்தீர்களா?
//ரொனால்டோ சப்பானுக்கு எதிராக போட்ட ஒரு கோல் சூப்பருங்க..யாராவது கவனித்தீர்களா? //
க்காமல்?!
ஜோ, சொல்ல என்ன இருக்கிறது? எதையாவது சொல்லி நீங்களே தேற்றிக்கொள்ளுங்கள்.
இராதாகிருஷ்ணன், வெகு நாட்களுக்கு பிறகு அளித்த பின்னூட்டத்திற்கு நன்றி.
//பிரேசில் எதையும் சரியாக செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஃப்ரான்ஸ் கடினமான எதிர்ப்பை அளித்தாலும், அதுவும் இயந்திரதனமாகத்தானே இருந்தது. சரி, இதை விடுவோம். ஜெர்மனி வென்றதை எப்படி பார்பது? //
எதற்கு என்னை நோக்கிக் கேட்டீர்கள் என்று விளங்கவில்லை.
"கலை நுட்பத்தை விட தொழில் நுட்பம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருப்பதாக தோன்றுகிறதா"
என்று முத்து கேட்டதற்கு மறுத்துத்தான் நான் எழுதியுள்ளேன். பிரான்ஸ் வென்றதால் தொழில்நுட்பம் வென்றதாகவோ பிறேசில் தோற்றதால் கலைநுட்பம் தோற்றதாகவோ அர்த்தமில்லை என்பதுதான் என் விளக்கமும். அதாவது பிறேசில கலைநுட்பத்தைக்கூடச் சரியாக வெளிப்படுத்தவில்லை, ஆதலால் தோற்றது. பிரான்ஸ் இயந்திரத்தனமாகத்தான் விளையாடியது என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. (உங்கள் "அழுகுணி ஆட்டம்" பற்றிய விவரிப்பிலும் பெருமளவு உடன்பாடே.)
றொனால்டினோ பற்றி நீங்கள் சொன்னது, கோல் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு என்று தவறாகப் புரிந்துகொண்டேன்.
1. நானும் ஆட்டத்தைப் பார்க்கும் போது அர்ஜெண்டைனாவைத்தான் ஆதரித்துக் கொண்டிருந்தேன் (அந்த மெஸ்ஸி பயல் என்ன ஆனான்? ஆட்டத்திலேயே இல்லை...). இருப்பினும், ஜெர்மனி போட்ட அந்த ஒரு கோல் (ஒரு தலை தட்ட, இன்னொரு தலை முட்ட) பிரமாதமாக இருந்தது.
2. நடந்த நான்கு காலிறுதி ஆட்டங்களில் மூன்று ஒரு ஐரோப்பிய யூனியன் நாடு vs. ஒரு வெளி நாடு. மற்றதில் (England v Portugal) இரண்டுமே யூனியன் நாடுகள். ஆக வென்றது எல்லாமே ஐரோப்பிய யூனியன் நாடுகள். Consipracy, anyone? :-)
//அர்ஜண்டைனாவும் பிரசிலும் இறுதியில் மோதும், யார் வென்றாலும் சந்தோஷமே என்ற கலாபூர்வமான மனநிலையுடன் பார்க்கலாம் என்று இருந்த நப்பாசை தவிடு பொடியாகிவிட்டது. டீஜேயை போலவே இனி தொடர்ந்து பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பிரான்ஸ், குறைந்த பட்சம் ஜெர்மனியை தவிர யாராவது ஜெயித்தால் வயிற்றெரிச்சல் குறையலாம்.
//
Ditto !!! Germany should not win. They look so monotonous :(
I believe France with Zidane looking terrific, played exceptionally well against Brazil thus never allowing Brazil's star players to play their usual game !!! I am a big supporter of Zidane and France :)
//அளவுக்கு மீறி தூக்கி வைத்த ரொனால்டினோ மொத்த ஆட்டத்திலும் கூட பெரிதாய் எதையும் செய்து காட்டாதது இன்னொரு விஷயம்.
//
அவரை அவரது இயற்கையான ஆட்டத்தை ஆட விடாமல் பிரான்ஸ் செய்ததும் ஒரு காரணம். முக்கியமாக Zidane அற்புதமாக நடுக்களத்தை உபயோகப்படுத்தி விளையாடினார் என்பது என் கருத்து !
//றெ?னால்டினே? நடுவரிசை ஆட்டக்காரர்//
வசந்தன், "நடுக்கள" ஆட்டக்காரர் என்பது சரி என்று நினைக்கிறேன் :)
//தனிமனிதத் திறமையை எடுத்துக்கெ?ண்டால் பந்தைக் கையாளும், கட்டுப்படுத்தும் மற்றும் Ball drill கலையில் மரடே?னாவுக்கு அடுத்தது றெ?னால்டினே? என்றுதான் என் பட்டியல் இருக்கும்
//
இது உண்மையே ! Zidane-னும் ரோனால்டினோக்கு நிகரானவர் தான். மேலும், இலத்தீன் அமெரிக்கர்கள் பொதுவாக short pass ஆட்டத்தை அமர்க்களமாக ஆடி, எதிரணியை குழப்பி, அழகாக கோல் போட்டு விடுவார்கள். இந்த வகை ஆட்டம் (தனி மனிதத் திறமையையும் சேர்த்துப் பார்க்கும்போது) கலாபூர்வமாக காட்சியளிக்கிறது !
//ஆனால் ·ப்ரான்ஸ் கடினமான எதிர்ப்பை அளித்தாலும், அதுவும் இயந்திரதனமாகத்தானே இருந்தது
//
ரோசா, இதை ஒப்புக்கொள்ளவே முடியாது. பிரேசிலை விட பிரான்ஸ் அன்று அழகாகவே (அவர்கள் ஆடிய மற்ற எல்லா ஆட்டங்களை விட பல மடங்கு) விளையாடினர், குறிப்பாக இரண்டாவது பாதியில் zidane-இன் ஆட்டமும், அவர் தந்த ஊக்கத்தால் பிறரின் ஆட்டமும் பிரேசிலை டம்மியாக்கி விட்டது என்பது என் கருத்து. ஹென்றி அன்று புயல் போல ஆடினார் !!!
எ.அ. பாலா
எல்லோருக்கும் நன்றி! பாலா, எண்ணமெனது,
நான் ரொம்ப ரொம்ப சார்பு நிலையுடன், பிரேஜில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற பதைபதைப்புடன் பார்த்து கொண்டிருந்தேன். பிரான்ஸ் அற்புதமாய் ஆடியது, ஜிதானே கலக்கினார் என்பதெல்லாம் நன்றாகவே புரிந்தாலும் அவை மனதில் பதியவில்லை. இன்னொரு முறை பார்க்க நேர்ந்தால்தான் சமநிலையுடன் எதையாவது சொல்ல முடியும். நன்றி!
ஃziடேன்,ஆன்றி, ரிபேரி, இந்த 3 பெரின் ஆட்டமும் படு சூப்பர் அன்றைக்கு!
தகுதியான டீம் வெற்றி பெற்றது!
பிரேசிலிடம் ஒரு ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் காணப்படவில்லை!
fரான்ஸ்... ஆல் தி வே!!
//ரொனால்டோ சப்பானுக்கு எதிராக போட்ட ஒரு கோல் சூப்பருங்க..யாராவது கவனித்தீர்களா
கவனித்தேன். ஜப்பான், சப்பான் ஆகியிருக்கிறது. (ஆனால் சூப்பர்.. சூப்பர்தான்.) உங்களுடைய தமிழ்ப்பற்றை நினைத்து தலையில் அடித்துக்கொண்டேன்.
வசந்த், நீங்கள் உட்பட (வசந்தன் தவிர்த்த) அனைவரும் ஜெர்மனியை எதிர்ப்பதில், அவர்களுடைய முறை தவறிய ஆட்டத்தை விடவும் ஏதோவொன்று இருப்பதாகவே எனக்கு படுகிறது. இதை நான் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து வெல்லவேக்கூடாதென்று நினைக்கும் என் சில நண்பர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறேன்.
இதை சாருவும் மொழிந்தது வருத்தத்திற்குரியது.
இதற்கு(ஜெர்மனியை வெறுப்பதற்கு) வேறு எதுவும் காரணங்கள்(ஹிட்லர்???) இருந்தால் விளக்கவும். நடுநிலை ஜல்லி உங்களிடம் இருந்து வராதென்று நம்பிக்கையில்.
/ இதற்கு மேல் தத்துவ விசாரமாய் புலம்பி என்ன நடக்க போகிறது!/
அதேதான் வசந்த் :-((((.
எல்லோருக்கும் நன்றி. மோகன்தாஸ், உங்களுக்கு பிறகு வந்து பதிலளிக்கிறேன். நன்றி.
// ஜப்பான், சப்பான் ஆகியிருக்கிறது. (ஆனால் சூப்பர்.. சூப்பர்தான்.) உங்களுடைய தமிழ்ப்பற்றை நினைத்து தலையில் அடித்துக்கொண்டேன்.
By Balamurugan, at 7/04/2006 2:37 AM
//
நாசமாப் போச்சு..என் கீ போர்டுக்குமா தமிழ் பற்று..
( தலையில் மெல்ல அடிச்சுக்குங்க..தலைவலி வந்துற போகுது :))
என்னை போன்றே பலரும் பிரேசிலும், அர்ஜென்டைனாவும் போட்டியிலிருந்து துரதிருஷ்டவசமாக வெளியேறியது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நம்மைப் போன்ற ஒரு மூன்றாம் உலக நாடு கோப்பையை வெல்லமுடியாமல் போகிவிட்டதே என்ற உளவியலே அவைகளின் வெளியேற்றம் குறித்த அதிர்ச்சிக்குக் காரணம் என நான் நினைக்கிறேன்.
//நாசமாப் போச்சு..என் கீ போர்டுக்குமா தமிழ் பற்று..
( தலையில் மெல்ல அடிச்சுக்குங்க..தலைவலி வந்துற போகுது :))//
இந்த ரேஞ்சுல தான் முன்பு சிலர் ..தமிழ் பற்று பற்றி பேசும் நீ உன் பெயரை ஏன் 'சோ' என்று மாற்றவில்லை என்று கேட்டிருந்தார்கள்.
நமக்கு பிரேசிலையும், அர்ஜெந்டினாவையும் அறிந்தது கால்பந்து மூலமாக மட்டுமே. அதனால் தான் எனக்கு இந்த இரு அணிகளும் கோப்பையை வெல்லவேண்டும் என்பது. ப்ச்...இடி மேல் இடியாக இரண்டும் தோற்றது எனக்கு அதிர்ச்சி + வேதனை. பிரான்சு கோல் அடித்தபின்பும், பிராசில் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், எல்லாம் கை மீறி போஇவிட்டது. :(
//லத்தீன் அமேரிக்காவின் கால்பந்தாட்டம் கலாபூர்வமானது, ஐரோப்பாவின் ஆட்டம் தொழில்நுட்பத்தனமானது//
இது உண்மை. அதனால் தான் எனக்கு இந்த இரு அணிகளும் கோப்பையை வெல்லவேண்டும் என்பது.
மோகன்தாஸ்,
தாமதத்திற்கு மன்னிக்கவும். நடுநிலமை என்று ஜல்லி எதுவும் அடிக்காமல் ஜெர்மனி பற்றி ஒரு முன்னபிப்ராயம் இருக்கிறது என்று ஒப்புகொள்கிறேன்.
இத்தாலியில் இருந்த போது மொத்தமாய் நான்கு வாரங்கள் -இடையில் ஒருவார இடைவெளியுடன் -ஜெர்மனியில் இருக்க நேர்ந்தது. எப்படா இத்தாலிக்கு திரும்புவோம் என்று இருந்தது. வறலாற்றில் ஒரு ஹிட்லர் இருந்தது மட்டும் ஜெர்மனி மீதான கற்பிதத்திற்கு காரணம் என்று தோன்றவில்லை. இத்தாலியிலும் ஒரு முசோலினி, பிரான்ஸில் ஒரு லூபானும் நிச்சயம் உண்டு. (அதேநேரம் ஹிட்லரை ஒரு வறலாற்றின் விபத்தாக பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஹிட்லருக்கான எல்லாவித வெளியையும், துவக்க ஆதரவையும், பின்னர் மாஸ் ஹிஸ்டீரியாவையும் அங்கிருந்த வெகு மக்கள் உணர்வே ஏற்படுத்தி கொடுத்ததாக கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும் ஹிட்லர் மட்டுமல்ல, ரோஸா (லக்சம்பர்க்) பிறந்து இறந்ததும் கூட ஜெர்மனிதான். நீட்ஷே காண்ட் உடபட பல தத்துவ மேதைகள் பிறந்ததும் ஜெர்மனிதான்.)
இனவாதம் குறைவாக இருப்பதாக நான் கருதும் பிரான்ஸிலேயும் எதிர்பாராமல் அவமதிக்கப் படும் வாய்ப்பு உண்டு. ஜெர்மனியிலும் மிக நல்ல மனிதர்களை சந்திக்க முடியும். அதனால் எதையும் பொதுமை படுத்தி சொல்வதில் அர்த்தமில்லைதான். ஆனால் ஜெர்மனியின் சமூக வாழ்வில், அவர்களின் நகைச்சுவை தொடங்கி எல்லாவற்றிலும் ஏதோ பிரச்சனை இருப்பதாக தோன்றுகிறது. இது தவறாகவும், கற்பிக்க பட்டதாகவும் இருக்கலாம், தெரியவில்லை. ஆனால் பிரன்ஸில் காணும் சுதந்திரத்தை, களியாட்டத்தை அங்கே காணமுடியவில்லை என்றே தோன்றுகிறது.
ஊருக்கு வெளியே ஒரு நெடுஞ்சாலையில் பிரான்ஸில் நீங்கள் ரோட்டை கடந்தால், அதி வேகத்தில் காரில் வருபவர் தூரத்திலேயே உங்களை கண்டு, வேகத்தை குறைத்து, பொறுமையாய் நீங்கள் ரோட்டை கடக்க காத்திருந்து புன்முறுவல் மாறாமல் 'bonjour' சொல்லிவிட்டு கடந்து செல்வார். ஜெர்மனியில் நீச்சயமாய் நீங்கள் சாலையை கடந்திருக்க மாட்டீர்கள். இப்படித்தான் நான் கேள்விப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. குறைந்த கால சொந்த அனுபவமும் இதையே உறுதி செய்கிறது.
(இதே போன்ற கருத்தை சாருவும் தனது கோணல் பக்கங்களில் எழுதியிருப்பார்.)
பிரேசில் ஆரம்பம் முதலே சரியாக ஆடவில்லை என்பது தான் அவர்களின் தோல்விக்கு காரணம். மேலும் பிரான்சுடனான போட்டியில் அவர்கள் முக்கிய வீரரான அட்ரியானோவை கடைசி நிமிடத்தில் உள்ளே கொண்டுவந்தார்கள். அதுவரை ரொனால்டோ மட்டும் தான் பார்வேர்டில் இருந்தார். ரொனால்டினோவொவும் தான் எப்போதும் ஆடும் இடத்திலிருந்து மாற்றப்பட்டிருந்தார். அது போலவே கார்லோஸ்சும். தங்களின் வரிசையை அவர்கள் மாற்றியது தோல்விக்கு முக்கிய காரணமாகும். பிரான்ஸ் வெற்றிக்கு ஜிதேனின் ஆட்டம் முக்கிய காரணம் என்றாலும், அதற்கு முந்தைய ஆட்டங்களில் அவர் சரியாக சோபிக்க வில்லை என்பதே உண்மை. மேலும் கடைசி லீக் ஆட்டத்தில் மிக முக்கியமான கட்டத்தில் வெளியேறியது ஒரு தலைவனுக்கு அழகல்ல. ரொனால்டினோ சில சமயம் தனது திறமையை காட்ட முயற்சித்தாலும் இட மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டார். கடைசி 15 நிமிடங்களில் அட்ரியானோ வந்தப் பிறகு தான் அவர்கள் தங்களது உண்மையான ஆட்டத்தை ஆட தொடங்கினர். ஆனால் அது ரொம்ப தாமதமாகிவிட்டது.
அர்ஜெண்டினாவை எடுத்துக்கொண்டால் ஆரம்பத்திலேயே இளம் வீரர் மெஸ்ஸியை களத்தில் இறக்கியிருக்கலாம். மரடோனாவாலெயே பாராட்டப்பட்ட இளம் வீரர் மெஸ்ஸியை அனுப்பியிருந்தால் நிச்சயம் அர்ஜெண்டினா ஜெயித்திருக்கும் என்பது என் கணிப்பு. மேலும் கடைசி நேரத்தில் பல மாற்றங்கள் செய்ததும் அவர்களின் தோல்விக்கு காரணம்.
தற்போதைய நிலையில் பார்வேர்டில் கொஞ்சம் திறமையை காட்டினால் போர்ச்சுகல் வெற்றிப் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஜெர்மனிக்கு சொந்த நாட்டில் ஆடுவதால் கொஞ்சம் கூடுதல் வாய்ப்புகள்.
ம்ம்ம். பார்ப்போம்.
நன்றி தோழர்களே.
தங்கள் அலசலை முன்வைத்த நம்பி, மஞ்சூர் ராசாவுக்கு நன்றி. கருத்தளித்த மற்றவர்களுக்கும் நன்றி.
என்ன செய்வது ஜெர்மனியை எல்லோரும் இங்கே teamgeist Mannschaft என்று அழைப்பார்கள். உதிரிப்போட்டிகளில் ஜெர்மனி இந்திய உதைபந்தாட்ட கழகத்திடம் தோற்றாலும் ஆச்சரியமில்லை.(சும்மா :-)) ஆனால் இப்படி ஒரு போட்டி என்று வரும்போது ஜெர்மனி நிதானமாக ஆடி வெற்றியை நோக்கி முன்னேறும். அத்துடன் அதிஸ்டமும் சேர்ந்து வரும்.
//அத்துடன் அதிஸ்டமும் சேர்ந்து வரும். //
அதிஸ்டம் சேர்ந்தாலும், நேற்று அரை மணி அதிக நேரத்தின் கடைசி 3 நிமிடங்களில் இத்தாலி போட்ட இரண்டு கோல் அற்புதம். பிராண்ஸ் ஜெயிக்கும் என்று நம்புகிறேன்.
ரோசா சார்,
அர்ஜண்டீனா ,பிரேசில் அணிகள் ஆடிய ஆட்டங்களை பார்த்த போது கிரிக்கெட் மாட்ச் பிக்ஸிங் இங்கேயும் வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றியது .அதிலும் பிரேசில் தோற்பதற்காகவே ஆடியது போல இருந்தது .இதிலே 'ஐரோப்பிய சதி' இருக்கிறதோ என எண்ணுமளவுக்கு .பல நண்பர்கள் இதே கருத்தை தெரிவித்தார்கள் .
அர்ஜெண்டீனா கோச் ஏதாவது நல்ல வருமானம் வரும் ஐரோப்பிய கிளப்பில் ஐக்கியமாகி விடுவார் என்று யூகங்கள் கிளம்பியிருக்கின்றன .பல வீரர்கள் ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடுவது தான் தனிப்பட்ட லாபமாக இருக்கும்.
இவையெல்லாம் கூட்டிக்களித்து பார்த்தால் ,சில வீரர்கள் நிர்பந்தங்களுக்கு பணிந்திருப்பார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.
பதிவில் சொன்னபடி, அன்று ஆடிய நம்பவே முடியாத மோசமான ஆட்டத்தை பார்த்து 'காசு கீசு வாங்கிரிப்பாய்ங்களோன்னு' எனக்கும் சந்தேகம் வரத்தான் செய்தது. ஜெயித்தால் வரக்கூடிய வருமானமும், பல வருடங்களுக்கான புகழும், வறலற்றில் பெயரில், அதைவிட உயிருக்கு உயிரான கால்பந்தாட்டத்தில் இப்படி செய்வார்களா என்ற நம்பிக்கையும் வைத்து பார்க்கும் போது இருக்காது என்றும் தோன்றுகிறது. ஆனால் இந்த மாதிரி பேச்சுக்கள் இப்போது உலாவத்தான் செய்யும்.
எனக்கு அப்படி ஒண்ணும் பெரிசா வயசாகலை, இந்த 'ஸார்' எல்லாம் எதுக்கு?
டெண்டுல்கர் ஏன் ஆடவில்லை என்று கேள்வி கேட்கும் ரேஞ்சில்தான் என்னுடைய கால்பந்தாட்ட அறிவு இருக்கிறது.
As Robert Benchely once said, I have a remarkable lack of interest in football.
ஆகவே நான் இங்கு ஏன் பின்னூட்டமிடுகிறேன் என்று யாரும் கோபிப்பதற்கு முன்னால் அதை கூறிவிட்டு ஜூட் விடுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் மோகன் பகானுக்கும் ஈஸ்ட் பெங்காலுக்கும் இடையில் நடந்த மேட்ச் வவசவென்று இருந்ததாக நிருபர் ஒருவர் ஹிந்துவில் புலம்பியிருந்தார். போடப்பட்ட சில கோல்களும் அந்த நிமிடத்துக்குரிய ஒரு தோல்வியாகத்தான் கருத வேண்டும் என்று சொல்ல வந்தவர் (momentary lapses) கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.
The match was quite boring and lacklustre. Even the one or two goals scored therein were due to monetary lapses.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு, பகிர்ந்தத்ற்கு நன்றி.
குண்டக்க மண்டக்க, குண்டக்க மண்டக்க எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். தயவு செய்து அதை தமிழில் எழுதுங்கள். எதையும் வாசிக்க முடியவில்லை.
Sorry, I have to leave now. I will try to reply tommorow. thanks!
குண்டக்க மண்டக்க,
நானும் அந்த பின்னூட்டத்தை கவனித்தேன். அது மறைந்து போனதையும் கவனித்தேன். பலர் கவனித்திருப்பார்கள். இதெல்லாம் ஒரு விஷயமா என்று பலர் பேசமால் இருந்திருக்கலாம், அல்லது முன்னமேயே தெரிந்திருக்கலாம். அவை எப்படியிருந்தாலும் யார் யார் என்ன என்ன பெயர்களில் எழுதுகிறார்கள் என்பது பற்றி எனக்கு பெரிய கவலை எப்போதுமே கிடையாது. ஏற்கனவே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன்.
ஆனால் வஞ்சகமில்லாமல் பலரை திட்ட ஒரு பெயர், யோக்கியமாய் அறிவுபூர்வமாய் பதிவு போடுவதாய் பாவ்லா காட்ட இன்னொரு பெயர் என்று இருப்பதுதான் கயமைத்தனம்.
வந்தியத்தேவன் எழுத்தில் தெரியும் ஒரு கருத்தியல்ரீதியான அடிப்படைவாத வெறி பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வெறியின் அடைப்படையிலேயே அவரது மற்ற திரித்தல், தர்க்கப்படுத்துதல் போன்ற மற்றவற்றையும் பார்கிறேன். அவைகளுக்கிடையில் அவரிடம் அவரது நிலைபாடு சார்ந்த ஒருவகை கருத்தியல் நேர்மையும், அறிவுபூர்வமாய் அணுகும் பார்வையும் வெளிபடுவதாகத்ததன் நினைத்து வந்தேன். அதை சொல்லவும் செய்திருக்கிறேன். இப்போது குசும்பன் என்ற மலப்புழு வடிவிலும் அவர்தான் எழுதுகிறார் என்று அறிந்ததும் அந்த அபிப்ராயம் மாறத்தானே செய்யும். (ஆனாலும் கூட குசும்பனை தமிழ்மணம் தடை செய்து வெளியேற்றிய போது, அதை எதிர்த்து கருத்து தெரிவித்ததுடன், அவர் வலைப்பதிவிற்கும் சென்று என் ஆதரவை தெரிவித்து வந்தேன்.)
குசும்பன் எழுதுவதை படிக்காமலேயே எப்படி அவர் எழுத்து பற்றி கருத்து சொல்ல முடியும் என்று அறிவுக் கொழுந்துகள் கேட்கலாம். தொடர்ந்து படிப்பதில்லை. அப்படி இப்படி சிலமுறை படித்திருக்கிறேன். மேலும் மலத்தின் சுவை எப்படி இருக்கும் என்பதை, தூரத்திலிருந்து ஒரு முறை பார்த்தாலே அனுமானிக்க முடியும் என்றாலும், சிலருக்கு அதை தின்று பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும் என்று நினைத்து கேள்விகள் எழுப்பலாம். நன்றி!
லேனா எழுதியதற்கு பதில் எழுத இன்னும் சிறிது நேரத்தில் உட்கார உத்தேசம்.
லேனாவின் பின்னூட்டத்திற்கான பதிலை 'கூத்து' பதிவில் எழுதியுள்ளேன். சுட்டி http://vivathakooththu.blogspot.com/2006/07/blog-post.html
சிறப்பாக ஆடிய்வர்கள் வென்றார்கள் என்பதை ஏற்று கொள்ளுங்களேன். உண்மையில் எந்த விளையாட்டிலும் மிக பெரிய டோர்னமெண்ட்கள் , போட்டி தொடர்களின் நன்கு ஆடுபவர்களையே நான் தலை சிறந்த ஆட்டகாரர்கள் என்று கூறுவேன். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் மிகுந்த திறமைசாலிகள். ஆனால் தலைசிறந்த ஆட்டகாரர் என்ற பெயரினை எட்ட முடியாது. டெண்டுல்கர் மிகுந்த திறமைசாலி. ஆனால் ஸ்டீவ் வாக், பான்டிங்க், வார்னே போன்றவர்கள் தலை சிறந்த ஆட்டகாரர்கள்.
Post a Comment
<< Home